ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–8-8—கண்கள் சிவந்து பெரியவாய்—சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அஷ்டமி அவதன் ஸூவஸ்ய ஸ்வரூபம்
ஆத்மகை சேஷம் ஈஸ்வரணே அவ போதிதம்
ஸ்வ அயோக்யதா மதி நிவர்த்தக லோலுபேண
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம்

ஆ த்ம ஸ்வரூபம் பகவத் பிரகாரம் –அவனுக்கே சேஷம்
ஸ்வ அயோக்யதா மதி -நிழல் ஆடுகிறதே
நிவர்த்தக லோலுபேண -நப்பாசை பெருமாளுக்கு –
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம் –
ஸூ பிரகார பூத ஆத்ம ஸ்வரூப வைபவம் –பிரகாசத்வம் -பரம போக்யம்

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஹரி பிரகடயிந்தி பும்ஸே தாஸ்யம் ப்ராசிஸ்தேன பாணாத் விபூதியா
அலம் ஹிருதிச விபூதியா மஹிம்னா பரத்வாத் மாதுர்யாத்தேவ தேஹ்ய
ஸூ ஸ்வரூப பிரகாசாத் அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத ஸூ பிரம
புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத் ஞானாஞ்ஞானம் நிரசன பிரசாதாயாத் –

1–ஹரி பிரகடயிந்தி–கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்

2-பும்ஸே தாஸ்யம்—ப்ராசிஸ்தேன – — பாணாத்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்

3–விபூதியா அலம் ஹிருதிச–உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே

4-விபூதியா மஹிம்னா பரத்வாத் –யாதும் யவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை

மாதுர்யாத்-தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே

5-6-7-தேவ தேஹ்ய ஸூ ஸ்வரூப பிரகாசாத் –சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–என்றும்
நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-என்றும்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில் அதுவே வீடு என்றும்

8–அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத-மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன் மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே

9–ஸூ பிரம புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத்–கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே வீடைப் பண்ணி யொரு பரிசே

10-ஞானாஞ்ஞானம் நிராசன பிரசாதாயாத் –உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-

——–

கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1-

———

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

——–

உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

——-

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

——–

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

——-

நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

———

அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

—-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

———–

கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

——–

உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

—-

தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -78-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான் காட்டக் கண்டு பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————-

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78-

——————————————

வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

இக் கலவி –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் –

திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி –

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –

ஆய்ந்து உரைத்தான் –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்-முதலாக அருளிச் செய்தவை -என்கை –

அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading