ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
விபு ஸம்ப்ராபகன் நிஜ வாஞ்சி தார்த்தம்
பிராப்தி விகாதே இதரேஷூ ஸ பாச லேச
சங்கித மன ஸூவஸ்ய ஸ்வஸ்மின் அபி ஸ்வ
கீதேபி வர்க்கே ப்ராணாவதாம் முமுஷே
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
தார் ஷோத்யுத் வாஹநத்வாத் ஸூப நயன தயா நீல மேகா ஆக்ருத்வாத்
ஆச்சரியோ சேஷ்டிதத்வாத் துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்
ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத் பிரதிஹதி வ்ரஹாத்
துர்ஜன அத்ருச பாவாத் நிஸ் சங்கானாம் இதி பிராஹா
1-தார் ஷோத்யுத் வாஹநத்வாத்–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே
2-ஸூ ப நயன தயா–காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்
3–நீல மேகா ஆக்ருத்வாத்–நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன்
4–ஆச்சர்யோ சேஷ்டிதத்வாத் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை-வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
5–துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்–ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா-
6–ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத்–இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
7–பிரதிஹதி வ்ரஹாத்–மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன்
8-9-துர்ஜன அத்ருச பாவாத் -கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-என்றும்
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு-என்றும்
10-நிஸ் சங்கானாம் –யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-
இதி பிராஹா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்
———
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
——–
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-
———
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-
—–
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-
———
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-
———-
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-
———–
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-
——-
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8-
———
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-
———
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-
———–
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -72-பாசுரம்–
அவதாரிகை –
இதில் -ஸ்ரீ ஆழ்வார் ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற-நங்கள் வரிவளையை-அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி
அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க
நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை —
——————————————–
நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-
———————————————
வியாக்யானம்–
நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய –
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து போரும் மால் அறிய -என்னுதல்
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்னுதல் –
உள்ளத்தே உறையும் மால் -இறே –
இவர் கருத்தையும் வீற்று இருந்தாலும் – இப்படி சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் அறியும் படி
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால் –
இந்த விபூதியிலே – பாசங்கள் நீக்கி -என்னும்படி-பண்டே
ஏறாளிலும்-
மாலுக்கு வையத்திலும் கை கழன்ற இவற்றில் ஆசை –
அவற்றை உபேஷித்து இருக்கிற நமக்கு-நாம் அறியாமல்-தான் அறிந்ததாக
சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் அத்தசையிலே —
அதாவது –
ஹன்யாமஹா மிமாம் பாபாம் –என்று-தாயோடு உறவு அறுத்து
ராஹ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்றும்
நைச்சத் ராஜ்ஜியம் -என்றும்-நசை அற்று
சித்ரகூடத்திலே சென்று-சிரஸா யாசித்து பாதுகைகளைப் பெற்றால் போலே
இவரும்-
வேங்கட வாணனை வேண்டிச் சென்று சங்கம் சரிந்தன சாயிழந்தேன் -என்றும்
கோல்வளையோடு மாமை கொள்வான் –என்றும்
கோல்வளை நெஞ்சத் துடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய விழந்து
வைகல் பல்வளையார் முன் பரிசு அழிந்தேன் -என்றும்
கோலம் பலன் என்றும் காண்பதர்னை யுங்களோடு எங்கள் இடை இல்லையே -என்றும்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி யவனவை காண் கொடானே -என்றும்
நான் கொடுத்தேன் இனி என் கொடுக்கிறேன் -என்றும்
நின்னடையேன் அல்லேன் என்று நீங்கி -என்றும்
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு என்றும் –இப்படி யாயிற்று
அந் நிலையை ஆராய்ந்து உரைத்த படி-
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply