ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
யதேஷ்ட சித்திம் அப்ராப்ய கின்ன மதி
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஸர்வேச்வரத்வம் அபி
சங்கிதவான் சடாரி
ஈஸ்வரத்வ புனரேவ விபோதி தஸ்ய –
——–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத் ரகு யது குலையாத உத்பவாத்
ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத்
சகல சித் அசித் அந்தராத்மா ஸ்வாமித்த்வாத் ஸ்வாதுத்வாத்
ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண தயா ஞானி அபி ஹரீர் பதம் தரிசன சுதிர் –
1-ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத்–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
2-ரகு யது குலையாத உத்பவாத்–காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !பேணுவாரமுதே !
3–4–ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத் –அடுத்த தோர் உருவாய்
இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?-என்றும்
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான இவர் உகந்து அமர்ந்த செய்கை
யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்–என்றும்
5–சகல சித்அசித் அந்தராத்மா–பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த சீருயிரேயோ !
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ ! ஒருயிரேயோ !
6-7-ஸ்வாமித்த்வாத் -ஸ்வாதுத்வாத் -இனிமை –மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-என்றும்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே !
சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–என்றும்
8–ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண-தயா –மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !—
9-10–ஞானி அபி –ஸ்தானே அச்சாத்—-யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–என்றும்
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-என்றும் –
ஹரீர் பதம் தரிசன சுதிர் –பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை
யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த ஸூலபனா
—–
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-
சகல த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் –
தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துக் கொள்கிறான்
———-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-
——-
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-
———
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-
———
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-
———-
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
——
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-
———-
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-
——–
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-
———
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-
———
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-
———–
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-
——
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -71-பாசுரம்–
அவதாரிகை –
இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————-
தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-
——————————————————
வியாக்யானம்–
தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன்
ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி-அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி-ஸ்வரூபத்திலும்-குணத்திலும்-அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –
தெளிந்த
இப்படி-ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்-சர்வ நிர்வாஹகத்வத்திலும் பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-
தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply