ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–8-3—அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்—சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பிரேம அதிகேந விவசய ஸூ குமார மூர்த்தயே க்ஷேமாயா
கின்ன ஹ்ருதய புருஷோத்த மஸ்ய
தத் தர்சித ஆத்மபர நித்ய முமுஷு முக்தைகி
கிஞ்சித் ஸமாஹிதா மன சடஜித் த்ருதீயே

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ பூமி நாயகத்வாத் அரி சுகரத்தயா ஏகாகி கல்ப சிந்து சிசுவத்வாத்
ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் சுரஹித காரணாத் ஸ்ரீ பதோ ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்
விக்ராந்த் விஷ்ட பாதாம் விதி துரதி கமநாத்
ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–

1–ஸ்ரீ பூமி நாயகத்வாத் –அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே

2–அரி சுகரத்தயா –கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–

3–ஏகாகி-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை

4-கல்ப சிந்து சிசுவத்வாத்-ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே

5–ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் —கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–திவ்ய தேசங்களில் –பின்னானார் வணங்கும் ஜோதி

6–சுரஹித காரணாத்–பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்

7–ஸ்ரீ பதோ-ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்–வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்

8–விக்ராந்த் விஷ்ட பாதாம்–குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே

9–விதி துரதி கமநாத்–திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்

10–ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா–மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே

ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல்–

8-3-ஸூ குமார மூர்த்திமத்வம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த சுலபனா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்

——-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

———

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

———

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

——–

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

———-

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5

———–

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

———-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

———–

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

————

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

———-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

———

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -73-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-பரிவர் இல்லை என்று கலங்க-பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

—————————————————-

வியாக்யானம்–

அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது–தேசிகர்கள் -அவர்கள-பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அப்படி -ஸ்ரீ பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க

அவர் நடுவே வாழ் திரு மாற்கு-இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே

பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –

இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்-இப்படி கலக்கத்தாலே அஞ்ச-

எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு-முமுஷூக்களும்-நித்தியரும் -முக்தரும் உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன் மிடுக்கைக் காட்ட –

பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading