நம் போல்வாரைப் புருஷகாரமாய் இருந்து காப்பதற்குத் தேவையான குணங்கள் யாவும்
திரு வரங்கத்திலேயே சிறப்புறுகின்றன -என்கிறார் —
ஔதார்ய காருணிகதா ஆஸ்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதார முகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–ஸ்லோகம் —57 —
ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்ஸலத்வ பூர்வேஷூ சர்வம் அதிசாயிதம் அத்ர மாத –
தாயே -வள்ளன்மை- கருணை -அடியாரிடம் வாத்சல்யம்- இவற்றை முன்னிட்ட நற் குணங்களுள்
புருஷகாரம் ஆவதற்குத் தேவையான குணங்கள் யாவும் –
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி ஸீதா அவதார முகம் ஏதத் அமுஷ்ய யோக்யா —
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில்
அத்ர-ஸ்ரீ ரங்க நாச்சியாராய் இருக்கும் இந்த நிலையில்
அதிசாயிதம் -சிறப்பிறுத்தப் பட்டுள்ளன –
மேலும் –அன்யத் -இவ் வர்ச்சை நிலையின் நின்றும் வேறுபட்ட யாதொரு சீதாவதாரம் முதலியவற்றை
உதா ஹரந்தி -கீழ்ச் சொன்ன குணங்கள் விளங்கும் இடமாக இதிஹாச புராணம் வல்லோர் எடுத்து இயம்புகின்றனரோ
இந்த சீதாவதாரங்கள் முதலியதும் –அமுஷ்ய -இவ் வர்ச்சை நிலைக்கு –யோக்யா -பயிற்சி செய்வதேயாம் –
ஔதார்யம் -தனது நலப் பற்று இன்றி பிறர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தல் –
சித்த உபாயமான தன்னையே கொடுத்தல் என்றுமாம் –
உலகை உய்விக்கக் கருதி பிராட்டி பல கால் திருவவதரித்து பயின்றனள்-
இறைவனும் அர்ச்ச்சை நிலையில் கோயில் முதலிய ஸ்தலங்களில் பயின்றதாக பூதத் தாழ்வார் –
பயின்றது அரங்கம் -பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப் படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள்
ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திரு அவதாரம் செய்த போதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.
அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ள வேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திரு அவதாரங்களில்
இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத் தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?
வண்மையும் கருணையும் வாத்சலம் முதலன
உண்மையில் அரங்குறை யுனக்கொர் ஒப்பிலையனாய்
பெண்மணி சானகி போலுந பிறவிகள்
எண்ணிடல் இந்நிலைக்கு என்ற நற் பயிறலே –57-
அனாய் -தாயே
பாரதந்த்ர்யம் தலை சிறந்து விளங்க நின்றமையின் பெண் மணி சானகி என்று அடை மொழி கொடுக்கப் பட்டது-
அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்ஸலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –
வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்
—————–
அக் குணங்களுள் ஔதார்யம் அளவு கடந்த அதிசயம் உடையது -என்கிறார் —
ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதார பாவ:–ஸ்லோகம் —58 —
ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஞ்ஜலி பரம் -தொழுகைச் சுமையை -சுமக்கின்ற
கஸ்மைசித் -யாரானும் ஒருவனுக்கு -அவன் அதிகாரத்திற்கு ஏற்ப
ஐஸ்வர் யத்தை யாவது
கைவல்யம் என்னும் பயன் யாவது
மோஷத்தை யாவது
விதீர்ய -கொடுத்து
இன்னமும் –
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதார பாவ: —
இவனுக்கு சுமைக்குத் தகுந்தது –உசிதம் –
ஒன்றும் செய்யப்பட வில்லையே என்று வெட்க்கப் படுகின்றாய்
இந்த வண்மைக் குணம் –க கத்ய– எத் தகைத்து சொல்லு-
நேர்வதோர் எளியதோர் அஞ்சலி மாத்ரம்-பெறுவதோ பெரும் பயன்கள் –
ஸ்ரேயோ ந்ஹ் யரவிந்த லோசந மந காந்தா பிரசா தாத்ருதே சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்வ ச
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஆளவந்தார்
தேஹாத்மாபிமானிக்கு பயன் ஐஸ்வர்யம்
ஸ்வதந்த்ராபிமானிக்கு பயன் கைவல்யம்
அடிமையாய் அநந்ய பிரயோஜனனுக்கு பயன் பரமபதம் –
ஒரு மலையைச் சுமத்து போலே நாம் அஞ்சலி பண்ணுவதை பிராட்டி கருதுகிறாள் –
அதற்க்கு ஏற்ப சுமையாக அஞ்சலியைக் கூறினார் –
தே பூயிஷ்டாம் நம உக்திம் -என்றும் –
அது சுமந்தார்கட்கே -என்றும் ஸ்ருதிகள் ஓதுமே –
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கஸ்மைசித் -என்கிறார் –
உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ என்றபடி
தான் கொடுக்கும் மோஷமும் அற்பமாய்த் தோற்றுவதால் நாணி இருப்பதால் இது என்ன ஔதார்யமோ என்று வியக்கின்றார் –
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் உதாராம் -ஸ்ருதி உதாரா சப்தம்
உதார சப்தத்துக்கு மோஷ ப்ரதத்வ ரூபமான உபாயத்வமும் பிராட்டிக்கு உண்டு என்பர் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் ஆதலின்
இறைவன் வாயிலாக மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது என்பர் மற்றைய ஆசார்யர்கள் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி
வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும்,
அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும்,
உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58-
அம் சிறப்பு -அழகிய மோஷம்
அக்கரம் -கைவல்யம் -அஷர கதி
ஆக்கம் -ஐஸ்வர்யம்-
அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –
இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———-
மேல் இரண்டு ஸ்லோகங்களினால் தம் நைச்யத்தை யனுசந்திக்கிறார் —
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ் ஸஹாநி
பத்த்நாமி மூர்க்க சரித: தவ துர் பர: அஸ்மி–ஸ்லோகம் —59 —
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம் இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
பயன் பெற வேண்டும் என்ற ஆசையையும்
அப் பயனுக்காக விதித்த வற்றைச் செய்யுமாறு ஏவப் படுகிற யோக்யதையையும்
சகந -செய்வதற்கு சக்தியையும்
அநு சயா -விதித்ததை இது காறும் செய்யாது இருந்தோமே என்ற அனுதாபத்தையும்
அநபிஜ்ஞ -அறியாதவனும் -ஆதலின் –
ஞான யோகம் என்ன
கர்ம யோகம் என்ன
பஜந -பக்தி யோகம் என்ன
இவைகள் ஆகிற செல்வத்தினால்
அகிஞ்சனனான நான்
யுவயோ அபி -இறைவனும் இலக்குமியுமான உங்களுக்கும் கூட
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி —
பொறுக்க ஒண்ணாத –ஆகாம்சி -பிழைகளை
பத்தநாமி -சேர்க்கின்றேன்
கெட்ட நடத்தை யுடைய நான் உனக்கு தாங்க இயலாதவனாக இருக்கின்றேன் –
முற்கூற்றால் ஆநு கூல்யம் இல்லாமையும் பிற்கூற்றால் ப்ராதிகூல்யம் உடைமையும் கூறப் பட்டன –
இச்சை -மோஷ ருசி -முமுஷூத்வம்
அதிகாரம் -அனலை யோம்பும் அந்தண்மை முதலியன
சகநம் -விதித்தவற்றை அறிந்து அனுஷ்டிக்கும் திறம் –
இவை எனக்கு இல்லை என்பது மட்டும் இல்லை -இங்கனம் சில உண்டு என்ற அறிவும் இல்லை
மேலும் தீமைகள் எல்லாவற்றையும் சேர்த்த வண்ணமாய் உள்ளேன்
குற்றத்தை நற்றமாக கொள்ளும் இயல்பு கருதி யுவரோபி -என்கிறார் –
ஷாந்தி ஸ்தவா கஸ்மிகீ -எனச் சிறப்பித்துக் கூறப் படும் உனக்கும் நான் பரிகரிக்க முடியாதவன் ஆனேன்
அஹமசம் யபராதா நாமாலய -குற்றங்களுக்கு கொள் கலம்
துர்ப ரோஸ்மி-எங்கனம் ஆயினும் நீ என்னைக் காத்து அருள வேணும் –
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும்,
அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
சற்றமே யறிவு கன்மம் பத்தி யாம் சம்பத்தில்லை
கற்றிலே னிச்சை பெற்றி கவுசல மிரங்கல் தேவி
குற்றமே புரியா நிற்பன் கொதிக்க நும் மிருவீ ருள்ளும்
முற்றுமே மூர்க்கனேனை முடியுமோ தாங்க நீ தான் –59-
பெற்றி -அதிகாரம் –
கவுசலம் -சாமர்த்தியம்
இச்சை -பெற்றி -கவுசலம் -இரங்கல் -கற்றிலேன் -இவற்றைப் படித்தும் அறியேன்
முற்றும் மூர்கனேனை நீ தான் தாங்க முடியுமோ –
ஹே தேவி -ஞான க்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் – அதிகாரம் சமதமாதிகள் -சகநம் -அத்யாவசிய திருடத்வம் -அநு சயம் -அநு தாபம் -இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்க வில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
இந்த ஸ்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.
பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபய ஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .
————
இங்கனம் நைச்ய அநு சந்தானம் செய்வதும் மனப் பூர்வமாய் அன்று –
முன்னோர்களைப் பேச்சளவிலே பின்பற்றின மாத்திரமே –
ஆதலின் நினது இயல்பான கருணையினால் என்னைக் காத்தருள்க -என்கிறார்-
இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–ஸ்லோகம் —60 —
இத் யுக்தி கைதவ சதேந விடம்பயாமி தாநம்ப சத்ய வசச புருஷான் புராணான்-
அம்பா -தாயே
இதி -கீழ்ச் சொன்ன முறையிலே-
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைச்ய அநு சந்தானங்களால்-
தான் -பிரசித்தர்களும்
சத்ய வசச -உண்மையையே உரைப்பவர்களுமான
பழம் காலத்து ஆசார்யர்களை
விடம்பியாமி -அநு கரிக்கின்றேன் –
யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–
யத்வா -அல்லது
நினது திருவடித் தாமரைகளைப் பெறுவதில் எனக்கு
புஜ பலம் -கைம் முதல் சாதனம் இல்லை
விதித -கருணையால் த்வ மேவ -நீயே
சரணம் க்ருதா அஸி-தஞ்சமாக செய்யப் பட்டு இருக்கிறாய் –
பொய்யே யாயினும் முன்னோர்களை பின் பற்றினமையாலும் இழக்க வேண்டும் படியோ உமது நிலை
நிர் ஹேதுக கிருபை ஒன்றே தஞ்சம் –
விதி –விதி வாய்க்கின்றது காப்பாரார்-கரை புரண்ட கருணையை –
பிராட்டி சரணம் ஆவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதே -அதாவது புருஷகாரம் ஆதலே யாம் –
சரணமாகச் செய்யப் பட்டாய் -என்று -சரணம் ஆனாய் என்று சொல்லாமல் –
நிர்ஹேதுக கிருபையை விதி என்றதால் -விதியை யாரால் வெல்ல முடியும் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத் தனம் நிறைந்து, நூற்றுக் கணக்கான தவறுகள்
உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய
ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதை விட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
தொல்லவர் மெய்யே சொல்லும் தூ நெறி தொடருவேன் போல்
எல்லை யிலாமல் இங்கன் இயம்பினான் சலங்கள் அந்தோ
அல்லது தாயே உன் தன அடி மலர்ப் பெற என் கையில்
வல்லமை இலையதற்கு வல்லை நீ விதியினானாய் –60-
ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம் முதலும் இல்லாதவன் –
அத் தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.
ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
————-
நிகமத்தில் பலன்களை ஆஸாசித்து இவ் வருமந்த ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார்-
ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
நிர் துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–ஸ்லோகம் —61 —
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
திருவரங்கத்தில் நூறு வருஷங்கள் நண்பர்களோடு கூட இடையூறு இன்றியும்
நிர்துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம் –
துன்பம் இன்றியும் -மிகவும் ஸூகமாகவும்
அடிமை இன்பம் கொண்ட சிறந்த வளத்தை துய்த்து -ப்ருஷ ஆயுஸ் நூறு -என்பர்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவுடன் இசைந்து இருந்து நுகர்ந்து –
ஸ்ரீரங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய -என்றதாயிற்று
யுஷ்மத் பாத சரோருஹ அந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா –
உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
நீயே அன்னை அப்பன் -இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் —
நீயே எனது எல்லா தர்மமுமாக ஆக வேண்டும் -மறுமை பயன் தருவதற்கு ஹேது-
கர்ம யோகாதி உபாய அனுஷ்டானம் எம்மிடத்து இல்லை யாயினும்
அவற்றின் ஸ்தானத்தில் புருஷகாரமாக நீயே இருந்து இறைவனால் எமது விருப்பத்தை நிறைவேற்றி அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையை -அங்கனம் அருள்வதும் நிர்ஹேதுக கிருபை அடியாக –
எனது யோக்யதையைப் பார்த்து அருளினால் உன் கிருபைக்கு ஏற்றம் இராதே என்பதால்
ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் -என்கிறார் –
சர்வஞ்ச த்வமஸி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் –என்றும் பாடம்
எல்லா உறவும் நீயே ஆகிறாய்
எமக்கு நீயே உபாயம் உபேயம் ஆகுக –
முன் ஸ்லோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளையும்
இது உத்தர கண்டத்தின் பொருளையும் கூறும் என்பர்
நித்ய முக்தரும் இங்கே வந்து கைங்கர்யம் செய்வதாலும்
இது பிரத்யஷமான பரமபதம் ஆதலாலும்
பரம பதத்தையும் முறித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லும்படி போக்யமாக தமக்கு இருத்தலாலும்
இம்மையோடு மறுமையும் இங்கேயே வேண்டிக் கொண்டு தலைக் கட்டி அருளுகிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ள போது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று,
தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார்-
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண் கொள்ளாக் காட்சி
திருவரங்க நகர் தனிலே நண்பரோடே சேர்ந்து இடையூர் உறு துயரமின்றி நூறு
வருடங்கள் சுகமாக வடிமை இன்பம் வாய்ந்த பெரு வளம் துய்த்து வாழ்ந்த பின்னர்
இரு வருமா முமதுபத மலர்த் தூளாவோம் ஈன்றோயும் எந்தையும் நீ செய்யும் எல்லாத்
தருமும் நீ எம் தமக்குத் தானே யாகிச் சாதனம் அற்று இயல்பான தயை செய்வாயே –61–
தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்ய தம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண் கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
————————————————————————
திருவினை நவிலும் பட்டர் தே மொழி தம்மில் காணும்
திருவினை யமைத்து நன்னர்த் திருமலை நல்லான் யாத்த
திருவினை இதனை யோர்ந்தே யின்ற தமிழ் வல்லீர் உள்ளத்
திருவினை நீங்கும் வண்ணம் எண்ணி நீர் இயம்புவீரே —
சீர் பராசர பட்டர் செகத்துக் கீந்த ஸ்ரீ குண ரத்ன கோசம் திறப்பதற்குப்
பார் புகழும் திருமலை நல்லான் உரைத்துப் பண்ணின விப் பொற்றிறவு கோலைப் பாரீர்
சீர் மேவு மரதனங்கள் செழிக்கப் பெற்றுச் சிதறாமல் அணிந்து உய்வீர் செப்புகின்றேன்
கார் மேகக் கண்ணன் அருள் கமலச் செல்வி கண்ணின் அருள் கரை புரளும் காண்மின் நீரே —
————-——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–ஸ்லோகம் —58 —
ஐஸ்வர்யம் அஷரகதிம் பரமம் பதம் வா கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஞ்ஜலி பரம் -தொழுகைச் சுமையை -சுமக்கின்ற
கச்மைசித் -யாரானும் ஒருவனுக்கு -அவன் அதிகாரத்திற்கு ஏற்ப
ஐஸ்வர் யத்தை யாவது
கைவல்யம் என்னும் பயணியாவது
மோஷத்தை யாவது
விதீர்ய -கொடுத்து
இன்னமும் –
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ: —
இவனுக்கு சுமைக்குத் தகுந்தது -உசிதம் –
ஒன்றும் செய்யப்பட வில்லையே என்று வெட்க்கப் படுகின்றாய்
இந்த வண்மைக் குணம் -க கத்ய- எத்தகைத்து சொல்லு-
நேர்வதோர் எளியதோர் அஞ்சலி மாத்ரம்-பெறுவதோ பெரும் பயன்கள் –
ஸ்ரேயோ ந்ஹ்யரவிந்த லோசநமந காந்தா பிரசா தாத்ருதே சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்வச
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஆளவந்தார்
தேஹாத்மாபிமானிக்கு பயன் ஐஸ்வர்யம்
ஸ்வதந்த்ராபிமானிக்கு பயன் கைவல்யம்
அடிமையாய் அநந்ய பிரயோஜனனுக்கு பயன் பரமபதம் –
ஒரு மலையைச் சுமத்து போலே நாம் அஞ்சலி பண்ணுவதை பிராட்டி கருதுகிறாள் –
அதற்க்கு ஏற்ப சுமையாக அஞ்சலியைக் கூறினார் –
தே பூயிஷ்டாம் நம உக்திம் -என்றும் –
அது சுமந்தார்கட்கே -என்றும் ஸ்ருதிகள் ஓதுமே –
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –
உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ என்றபடி
தான் கொடுக்கும் மோஷமும் அற்பமாய்த் தோற்றுவதால் நாணி இருப்பதால் இது என்ன ஔதார்யமோ என்று வியக்கின்றார் –
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் உதாராம் -சுருதி உதாரா சப்தம்
உதாரா சப்தத்துக்கு மோஷ ப்ரதத்வ ரூபமான உபாயத்வமும் பிராட்டிக்கு உண்டு என்பர் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் ஆதலின்
இறைவன் வாயிலாக மோஷ பரதத்வம் சொல்லுகிறது என்பர் மற்றைய ஆசார்யர்கள் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி
வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும்,
அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும்,
உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58-
அம் சிறப்பு -அழகிய மோஷம்
அக்கரம் -கைவல்யம் -அஷர கதி
ஆக்கம் -ஐஸ்வர்யம்-
அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———-
மேல் இரண்டு ஸ்லோகங்களினால் தம் நைச்யத்தை யனுசந்திக்கிறார் —
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–ஸ்லோகம் —59 —
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம் இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
பயன் பெற வேண்டும் என்ற ஆசையையும்
அப் பயனுக்காக விதித்த வற்றைச் செய்யுமாறு ஏவப் படுகிற யோக்யதையையும்
சகந -செய்வதற்கு சக்தியையும்
அநு சயா -விதித்ததை இது காறும் செய்யாது இருந்தோமே என்ற அனுதாபத்தையும்
அநபிஜ்ஞ -அறியாதவனும் -ஆதலின் –
ஞான யோகம் என்ன
கர்ம யோகம் என்ன
பஜந -பக்தி யோகம் என்ன
இவைகள் ஆகிற செல்வத்தினால்
அகிஞ்சனனான நான்
யுவயோ அபி -இறைவனும் இலக்குமியுமான உங்களுக்கும் கூட
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி —
பொறுக்க ஒண்ணாத -ஆகாம்சி -பிழைகளை
பத்த்நாமி -சேர்க்கின்றேன்
கெட்ட நடத்தை யுடைய நான் உனக்கு தாங்க இயலாதவனாக இருக்கின்றேன் –
முற்கூற்றால் ஆநு கூல்யம் இல்லாமையும் பிற்கூற்றால் ப்ராதிகூல்யம் உடைமையும் கூறப் பட்டன –
இச்சை -மோஷ ருசி -முமுஷூத்வம்
அதிகாரம் -அனலை யோம்பும் அந்தண்மை முதலியன
சகநம் -விதித்தவற்றை அறிந்து அனுஷ்டிக்கும் திறம் –
இவை எனக்கு இல்லை என்பது மட்டும் இல்லை -இங்கனம் சில உண்டு என்ற அறிவும் இல்லை
மேலும் தீமைகள் எல்லாவற்றையும் சேர்த்த வண்ணமாய் உள்ளேன்
குற்றத்தை நற்றமாக கொள்ளும் இயல்பு கருதி யுவரோபி -என்கிறார் –
ஷாந்தி ஸ்தவா கஸ்மிகீ -எனச் சிறப்பித்துக் கூறப் படும் உனக்கும் நான் பரிகரிக்க முடியாதவன் ஆனேன்
அஹமசம் யபராதா நாமாலய -குற்றங்களுக்கு கொள் கலம்
துர்ப ரோஸ்மி-எங்கனம் ஆயினும் நீ என்னைக் காத்து அருள வேணும் –
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும்,
அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
சற்றமே யறிவு கன்மம் பத்தி யாம் சம்பத்தில்லை
கற்றிலே னிச்சை பெற்றி கவுசல மிரங்கல் தேவி
குற்றமே புரியா நிற்பன் கொதிக்க நும் மிருவீ ருள்ளும்
முற்றுமே மூர்க்கனேனை முடியுமோ தாங்க நீ தான் –59-
பெற்றி -அதிகாரம் –
கவுசலம் -சாமர்த்தியம்
இச்சை -பெற்றி -கவுசலம் -இரங்கல் -கற்றிலேன் -இவற்றைப் படித்தும் அறியேன்
முற்றும் மூர்கனேனை நீ தான் தாங்க முடியுமோ –
ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –.
இந்த ஸ்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.
பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .
————
இங்கனம் நைச்ய அநு சந்தானம் செய்வதும் மனப் பூர்வமாய் அன்று –
முன்னோர்களைப் பேச்சளவிலே பின்பற்றின மாத்திரமே –
ஆதலின் நினது இயல்பான கருணையினால் என்னைக் காத்தருள்க -என்கிறார்-
இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–ஸ்லோகம் —60 —
இத் யுக்தி கைதவசதேந விடம்பயாமி தாநம்ப சத்ய வசச புருஷான் புராணான்-
அம்பா -தாயே
இதி -கீழ்ச் சொன்ன முறையிலே-
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைச்ய அநு சந்தானங்களால்-
தான் -பிரசித்தர்களும்
சத்ய வசச புருஷான் -உண்மையையே உரைப்பவர்க்களுமான
புராணான்-பழம் காலத்து ஆசார்யர்களை
விடம்பியாமி -அநு கரிக்கின்றேன் –
யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–
யத்வா -அல்லது
நினது திருவடித் தாமரைகளைப் பெறுவதில் எனக்கு
புஜ பலம் -கைம் முதல் சாதனம் இல்லை
விதித -கருணையால் த்வ மேவ -நீயே
சரணம் க்ருதா அஸி-தஞ்சமாக செய்யப் பட்டு இருக்கிறாய் –
பொய்யே யாயினும் முன்னோர்களை பின் பற்றினமையாலும் இழக்க வேண்டும் படியோ உமது நிலை
நிர் ஹேதுக கிருபை ஒன்றே தஞ்சம் –
விதி -விதி வாய்க்கின்றது காப்பாரார்-கரை புரண்ட கருணையை –
பிராட்டி சரணம் ஆவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதே -அதாவது புருஷகாரம் ஆதலே யாம் –
சரணமாகச் செய்யப் பட்டாய் -என்று -சரணம் ஆனாய் என்று சொல்லாமல் –
நிர்ஹேதுக கிருபையை விதி என்றதால் -விதியை யாரால் வெல்ல முடியும் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத் தனம் நிறைந்து, நூற்றுக்கணக்கான தவறுகள்
உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய
ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
தொல்லவர் மெய்யே சொல்லும் தூ நெறி தொடருவேன் போல்
எல்லை யிலாமல் இங்கன் இயம்பினான் சலங்கள் அந்தோ
அல்லது தாயே உன் தன அடி மலர்ப் பெற என் கையில்
வல்லமை இலையதற்கு வல்லை நீ விதியினானாய் –60-
ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம் முதலும் இல்லாதவன் –
அத் தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –
இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.
ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசர பட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
————-
முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால்-5-6- ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால் பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –சேஷி தம்பதி மிதுனத்தில் கைங்கர்யம் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை -இளமை- சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ஸ்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்-ஸர்வ அலங்கார பூஷிதை –
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திரு வவதரித்து மனிசர்க்காக படாதன பட்டு கருணையையும் ஸ்வாதந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும் படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –
—–
நிகமத்தில் பலன்களை ஆஸாசித்து இவ் வருமந்த ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார்-
ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
நிர் துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–ஸ்லோகம் —61 —
ஸ்ரீ ரங்கே சரதஸ் சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
திருவரங்கத்தில் நூறு வருஷங்கள் நண்பர்களோடு கூட இடையூறு இன்றியும்
நிர் துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம் –
துன்பம் இன்றியும் -மிகவும் ஸூகமாகவும்
அடிமை இன்பம் கொண்ட சிறந்த வளத்தை துய்த்து -ப்ருஷ ஆயுஸ் நூறு -என்பர்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவுடன் இசைந்து இருந்து நுகர்ந்து –
ஸ்ரீரங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய -என்றதாயிற்று
யுஷ்மத் பாத சரோருஹ அந்தர ரஜஸ் ஸ்யாம த்வ மாம்பா பிதா –
உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் –யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
நீயே அன்னை அப்பன் -இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் —
நீயே எனது எல்லா தர்மமுமாக ஆக வேண்டும் -மறுமை பயன் தருவதற்கு ஹேது-
கர்ம யோகாதி உபாய அனுஷ்டானம் எம்மிடத்து இல்லை யாயினும்
அவற்றின் ஸ்தானத்தில் புருஷகாரமாக நீயே இருந்து இறைவனால் எமது விருப்பத்தை நிறைவேற்றி அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையை -அங்கனம் அருள்வதும் நிர்ஹேதுக கிருபை அடியாக –
எனது யோக்யதையைப் பார்த்து அருளினால் உன் கிருபைக்கு ஏற்றம் இராதே என்பதால்
ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் -என்கிறார் –
சர்வஞ்ச த்வமஸி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர்வகஸ் மாத க்ருபாம் -என்றும் பாடம்
எல்லா உறவும் நீயே ஆகிறாய்
எமக்கு நீயே உபாயம் உபேயம் ஆகுக –
முன் ஸ்லோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளையும்
இது உத்தர கண்டத்தின் பொருளையும் கூறும் என்பர்
நித்ய முக்தரும் இங்கே வந்து கைங்கர்யம் செய்வதாலும்
இது பிரத்யஷமான பரமபதம் ஆதலாலும்
பரம பதத்தையும் முறித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லும்படி போக்யமாக தமக்கு இருத்தலாலும்
இம்மையோடு மறுமையும் இங்கேயே வேண்டிக் கொண்டு தலைக் கட்டி அருளுகிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ள போது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக் கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று,
தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார்-
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளாக் காட்சி
திருவரங்க நகர் தனிலே நண்பரோடே சேர்ந்து இடையூர் உறு துயரமின்றி நூறு
வருடங்கள் சுகமாக வடிமை இன்பம் வாய்ந்த பெரு வளம் துய்த்து வாழ்ந்த பின்னர்
இரு வருமா முமதுபத மலர்த் தூளாவோம் ஈன்றோயும் எந்தையும் நீ செய்யும் எல்லாத்
தருமும் நீ எம் தமக்குத் தானே யாகிச் சாதனம் அற்று இயல்பான தயை செய்வாயே –61–
தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரதஸ் சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ் கண்டகம் நிர் துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதி யோகி ப்ரதி ஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –
இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்ய தம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

Leave a Reply