அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு)
பரதனும், லக்ஷ்மணனும் இது வரை கிம்புருஷர்கள் பற்றி இப்பொழுது தான் கேள்விப் பட்டவர்ளாக அப்படியா, என்றனர்.
பிரஜாபதியின் கதையை ராமர் தொடர்ந்தார்.
தவம் செய்து கொண்டிருந்த புதன் அழகிய ரூபமுடைய அந்த பெண்ணைப் பார்த்து,
சோமனுடைய மகன் நான். என்னை ஏற்றுக் கொள், அன்புடன் ஏறிட்டுப் பார் எனவும்,
தன் ஜனங்களும் தன்னை விட்டுப் போய் விட்ட நிலையில், சூன்யமான அரண்யத்தில் இலா, புதனைப் பார்த்துச் சொன்னாள்.
நான் இஷ்டம் போல சஞ்சரிக்கிறவள். தற்சமயம் உன் வசத்தில் இருக்கிறேன்.
நீ விரும்பியபடி செய்து கொள் என்று அனுமதித்தாள். அவள் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.
சந்திரனின் புதல்வன் புதன். மாதவ மாதம் க்ஷண நேரம் போலச் சென்றது.
அவளுடன் இன்பமாக ஒரு மாத காலம் ஓடி விட்டது.
ஒரு மாதம் சென்றபின் சயனத்திலிருந்து எழுந்த ப்ரஜாபதி மகனான இலா,
நீருக்குள் நின்று தவம் செய்யும் புதனைக் கண்டான்.
கைகளை உயரத் தூக்கி எந்த வித பிடிமானமும் இல்லாமல் நின்றபடி தவம் செய்து கொண்டிருந்த புதனைப் பார்த்து,
பகவன், இந்த மலை குகைக்குள், என் காவலர்களுடன் வந்தேன். என் சைன்யம் எங்கு சென்றது தெரியவில்லை,
என்னைச் சார்ந்தவர்களையும் காணவில்லை என்றான்.
தன் நிலை மறந்த அரசன் பேசியதைக் கேட்டு, புதன் சமாதானமாக பேசினான்.
கல் மழை பொழிந்ததில் உன் ஆட்கள் நாசமாயினர். நீயும் மழைக்கு ஒதுங்கியவன் ஆசிரமத்தில் தூங்கி விட்டாய், பயப்படாதே.
இங்கு கிடைக்கும் பழங்கள், காய் கறிகளை சாப்பிட்டபடி நீ விரும்பும் வரை நிம்மதியாக இருக்கலாம் என்றான்.
அரசன் தன் வேலையாட்கள் நாசமானதைக் கேட்டு வருந்தினான். மிக தீனமாக விசாரித்தான்.
ராஜ்யத்தில் வேலையாட்கள் சூழ இருந்தவன், இப்பொழுது அவர்கள் இல்லாமல் நானும் ராஜ்யத்தை தியாகம் செய்கிறேன்.
என் மூத்த மகன் சசபிந்து என்பவன், அவன் ராஜ்யத்தை ஆளட்டும்.
உடன் வந்தவர்கள் காணாமல் போக நான் மட்டும் என் நகரம் எப்படித் திரும்பி போவேன்.
புதன் அவனை சமாதானப் படுத்தி இங்கேயே இருக்கலாம் என்று சொல்லி ஆறுதலாக பேசினான்.
ஒரு வருஷம் இங்கேயே இரு. கர்தம புதல்வனே நான் உனக்கு நன்மையே செய்வேன் என்றான்.
இதைக் கேட்டு இலாவும் சம்மதித்தான். மாத முடிவில் ஸ்திரீயானதும், புதன் அவளை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அடுத்து புருஷனாக ஆனதும் புதனுடன் தவம் சார்ந்த தர்ம காரியங்களை கவனித்துக் கொண்டு பொழுதை செலவழித்தான்.
ஒன்பதாவது மாதத்தில், இலா புதனுடைய மகனை பெற்றெடுத்தாள்.
புரூரவஸன் என்ற பெயர் கொண்ட குழந்தையை பிறந்த உடனேயே தந்தையின் கையில் ஒப்படைத்தாள்.
புதனுக்கு சமமான வர்ணமும், தேஜஸும் உடைய அந்த குழந்தை, மகா பலசாலியாகவும் இருந்தது.
மாத முடிவில் திரும்ப புருஷனாக ஆன இலாவை புதன் இனிமையாக பேசியபடி சந்தோஷமாக வைத்திருந்தான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply