ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–59–புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். )–

அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். )

உசனஸ் என்ற சுக்ராச்சாரியார், மகா கோபத்துடன் இருப்பதை அறிந்த அதே சமயம்,
தன் உடல் முதுமை வந்து தளர்ந்து போவதை யயாதி உணர்ந்தான்.

யதுவிடம் சொன்னான். யதோ, நீ தர்மம் அறிந்தவன் தானே, என் முதுமையை வாங்கிக் கொள்.
நான் இன்னமும் போகங்களை அனுபவிக்கவே ஆசைப் படுகிறேன்.
எனக்கு திருப்தியாகும் வரை விஷய சுகங்களை அனுபவித்து விட்டு, இந்த முதுமையை திரும்ப வாங்கிக் கொள்கிறேன்.

யது பதில் சொன்னான். உன் பிரியமான பிள்ளை புரு தானே.
அவன் வாங்கிக் கொள்ளட்டும் இந்த கிழட்டுத் தன்மையை. அரசனே என்னை உன் அருகிலும் இருக்க விடவில்லை.
பொருள் விஷயத்திலும் தள்ளியே வைத்திருந்தாய்.
உன்னுடன் அமர்ந்து போஜனம் செய்தானே, அவனே இந்த முதுமையை வாங்கிக் கொள்ளட்டும்.

அரசனும் புருவிடம் சொன்னான். மகனே. இந்த முதுமையை வாங்கிக் கொள்.
நான் இன்னமும் உலகில் பல சுகங்களை அனுபவிக்கவேயில்லை எனவும்,
கை கூப்பி தன்யனானேன், நான் பாக்யம் செய்தவனானேன். தங்கள் அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றேன்.
தங்கள் கட்டளைப் படி நடக்க கடமைப் பட்டவன் நான்.

இதைக் கேட்டு மகிழ்ந்து யயாதி தன் முதுமையை புருவுக்கு கொடுத்து விட்டான்.
அந்த அரசன் திரும்ப இளமையைப் பெற்று, பல ஆயிரக் கணக்கான யாகங்கள் செய்து பூமியை ஆண்டான்.

வெகு காலம் சென்ற பின் ராஜா புருவிடம் சொன்னான். மகனே உன்னிடம் அடகு வைத்திருந்த என் முதுமையை திரும்பக் கொடு.
உன் கஷ்டம் தீரட்டும். நரையும், திரையுமான முதுமையை நான் வாங்கிக் கொள்கிறேன்.
என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று நிறைவேற்றியதால், நான் மிகத் திருப்தியடைந்தேன்.
உனக்கே ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றவர்,

தேவயானியின் மகனைப் பார்த்து, ராக்ஷஸன் நீ. புத்ர ரூபத்தில் வந்த சத்ரு.
பிரஜைகளிடம் உனக்கு எந்த செல்வாக்கும் இல்லாமல் போகட்டும். தந்தையான என்னை அவமதித்து விட்டாய்.
யாதுதானர்கள் என்ற பெயருடன் இரவில் சஞ்சரிக்கும் கூட்டத்தை மக்களாக பெறுவாய்.
சோம வம்சத்தில் நீயோ உன் வம்சத்தில் வருபவர்களோ இருக்கப் போவதில்லை.
உன்னைப் போலவே உன் மக்களும் வினயமின்றி இருப்பார்கள்.

ராஜா யயாதி, புருவை ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து விட்டு, தான் வனம் சென்றான்.
காலம் வரவும், உடலைத் தியாகம் செய்து ஸ்வர்க்கம் சென்றான்.

காசி ராஜ்யத்தை புரு நல்ல முறையில் பாலித்து வந்தான்.
யது யாதுதானான் என்ற பெயருடன் இரவில் திரியும் மக்களைப் பெற்றான்.
ராஜ வம்சமே அவனை புறக்கணிக்க க்ரௌஞ்ச வனத்தின் ஒரு குகையில் வசித்தான்.

இது தான், யயாதி சுக்ராச்சாரியாரின் சாபத்திலிருந்து விடு பட்டதும்,
நிமி இமையில் அமர்ந்து சாப விமோசனம் பெற்றதும், ந்ருக ராஜன் தன் தோஷத்திலிருந்து விடு பட்டதுமான கதை.
பேசிக் கொண்டிருக்கையிலேயே, கீழ் வானம் வெளுக்கவும், அருண கிரணங்கள், சிவந்து தெரியவும் ஆரம்பித்தது.
சிவப்பு ஆடை அணிந்தது போல வானம் பிரகாஸமாகத் தெரிந்தது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading