அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்)
இதைக் கேட்டு லக்ஷ்மணன், ராஜ சார்துர்லா, நிமி, வசிஷ்டரின் கதையை இன்று தான் தெரிந்து கொன்டேன்.
நிமி க்ஷத்திரியன். சூரன் தவிர, தீக்ஷையில் இருந்தவன். இதன் பின் இருவரும் எப்படி இருந்தனர்?
பழையபடி நன்பர்களாக ஆனார்களா?
சர்வ சாஸ்திரங்களையும் அறிந்தவன் உனக்குத் தெரியாததா என்பது போல அவனைப் பார்த்த ராமர் தொடர்ந்தார்.
மனிதர்களிடம் பொறுமை எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ரோஷம் பொறுக்க முடியாதது.
அதையும் யயாதி எப்படி பொறுத்தான் என்பதைக் கேள்.
நகுஷனுடைய மகன் யயாதி அரசனானான். தன் ராஜ்யத்தை நன்றாக பரி பாலித்து வந்தான்.
அவனுக்கு இரண்டு மனைவியர். ஓரு மனைவி, நகுஷனே தேர்ந்தெடுத்த வ்ருஷபர்வனின் மகள், ஸர்மிஷ்டா.
மற்றவள், அசுரகுல புரோகிதரான உஸனஸ், என்ற சுக்ராச்சாரியார் மகள் தேவயானை.
தேவயானை யயாதிக்கு அனுசரணையாக இருக்கவில்லை.
அவளிடம் யயாதிக்கு அன்போ, நேசமோ தோன்றவில்லை.
அவளிடம், யது என்ற மகனும், ஸர்மிஷ்டாவிடம், புரு என்ற மகனும் பிறந்தனர்.
தாயைப் போல குணங்களுடைய புரு அரசனுக்கு பிரியமானவனாக வளர்ந்தான்.
இதனால் வருத்தமடைந்த யது தாயிடம் முறையிட்டான்.
அரிய செயல்களைச் செய்த ப்ருகு முனிவரின், பார்க்கவ குலத்தில் வந்தவள் நீ.
மனதினுள் இந்த அவமானத்தை சகித்துக் கொண்டு வேதனையில் வாடுகிறாய்.
நாம் இருவரும் நெருப்பில் குதிப்போம், அந்த தைத்ய (அசுரராஜ) குமாரியுடன், அரசன் வெகு காலம் ரமித்துக் கொண்டு இருக்கட்டும்.
அம்மா, நீ பொறுத்துக் கொண்டு இப்படியே வாழ்வாய். ஆனால் எனக்கு அனுமதி கொடு.
உன் போல் பொறுமையாக இருக்க என்னால் முடியாது.
மகனின் முகம் வாட காண சகியாத தேவயானி தன் தந்தையை மனதில் நினைத்தாள்.
மகள் நினைத்த மாத்திரத்தில், பார்க்கவ வம்சத்தினரான சுக்ராச்சாரியார், வந்து சேர்ந்தார்.
மண வாழ்க்கையில் சந்தோஷமின்றி, தனக்குரிய ஸ்தானத்தை இழந்தவளாக
கோபமும், தாபமுமாக இருந்த தேவயானியை விசாரித்தார்.
என்ன இது? என்ற தந்தையிடம் திரும்பத் திரும்ப முறையிட்டாள்.
அவர் சமாதானம் செய்தது எதுவும் அவள் காதில் விழவேயில்லை.
முனி சத்தமா, சிறந்த முனிவரே, நான் அக்னியில் குதித்தோ, நீரில் மூழ்கியோ உயிரை விடுவேன்.
இனியும் உயிர் வாழ மாட்டேன். தந்தையே, நான் எப்படி உதாசீனப் படுத்தப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.
இதனால் நான் படும் வேதனையும் சொல்லி முடியாது. மரத்தை அலட்சியம் செய்தால்,
அதை அண்டி வாழும் ஜீவன்களும் கஷ்டப்படும். ராஜரிஷி யயாதி என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
பல விதத்திலும் அலட்சியம் செய்கிறார். அவள் சொல்லச் சொல்ல முனிவர் கோபம் எல்லை கடந்தது.
யயாதியைக் காணச் சென்றார். என்னை அலட்சியம் செய்கிறாயா.
முதுமை அடைந்து, உடல் தளர்ந்து சிதிலமாகப் போவாய் என்று சபித்து விட்டார்.
தன் மகளை சமாதானம் செய்து விட்டு, மருமகனுக்கு சாபமும் கொடுத்து விட்டு தன் இருப்பிடம் சென்று விட்டார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply