raaghavastu rathaM divyamindradattaM shikhiprabham || 6-112-4
anujJNaaya mahaabaahurmaataliM pratyapuujayat |
4. anujJNaaya = taking leave; divyam ratham = of the celestial chariot; indradattam = which had been given by Indra the lord of celestials;shikhiprabham = and which = shone like fire; mahaabaahuH = the mighty armed; raaghavastu = Rama; pratya puujayat = respectfully saluted; maatalim= Matali.
Taking leave of the celestial chariot, which had been given by Indra the lord of celestials and which shone like fire, the mighty armed Rama respectfully saluted Matali.
parShvajya cha sugriivaM lakShmaNenaabhivaaditaH || 6-112-7
puujyamaano harigaNairaajagaama balaalayam |
7. pariShvajya cha = having embraced; sugriivam = Sugreeva; abhivaaditaH = and having been greeted; lakShmaNena = by Lakshmana;puujyamaanaH = and having been honoured; harigaNaiH = by the monkey-troops; aajagaama = (Rama) came; balaalayam = to the camp where the army had been stationed.
Having embraced Sugreeva greeted by Lakshmana and having been honoured by the monkey-troops. Rama came to the camp where the army had been stationed.
eSha me paramaH kaamo yadimaM raavaNaanujam || 6-112-10
laN^kaayaaM saumya pashyeyamabhiShiktaM vibhiiShaNam |
10. saumya = O gentle one! eShaH = this; me = is my; paramaH = paramount; kaamaH = desire; yat = that; pashyeyam = I should see; imam vibhiiShaNam = this Vibhishana; raavaNaanujam = the brother of Ravana; abhiShiktam = being consecrated for throne; laN^kaayaam = in Lanka.
“O gentle one! This s my paramount desire that I should see this Vibhishana, the brother of Ravana being consecrated for throne in Lanka.”
tatastvekaM ghaTaM gR^ihya saMsthaapya paramaasane || 6-112-14
ghaTena tena saumitrirabhyaShiJNchadvibhiiShaNam |
laN^kaayaaM rakShasaaM madhye raajaanaM raamashaasanaat || 6-112-15
vidhinaa mantradR^iShTena suhR^idgaNasamaavR^itaH |
14-15. tataH = thereafter; saumitriH = Lakshmana; suhR^idgaNa samaavR^itaH = together with his friends; gR^ihya = taking; ekam = one;ghaTam = pot; vibhiishaNam samsthaapya = making Vibhishana to sit; paramaasane = on the throne; abhyaShiN^chat = sprinkled (him); tena ghaTena = (with sea-water) from that pot; vidhinaa = in accordance with the rule (in Vedic scriptures); rakShasaam madhye = in the middle of the demons;raajaanaam = to make him the king; laN^kaayaam = for the kingdom of Lanka; raama shaasanaat = as directed by Rama.
Thereupon, Lakshmana together with his friends, taking one pot and making Vibhishana to sit on the throne, sprinkled him with sea-water from that pot in accordance with the rule prescribed in Vedic scriptures, while the demons were witnessing the ceremony, to make him the king for Lanka, as directed by Rama.
raaghavaH pramaaM priitiM jagaama sahalakShmaNaH || 6-112-18
sa tadraajyaM mahatpraapya raamadattaM vibhiiShaNaH |
18. raaghavaH = Rama; saha lakShmaNaH = together with Lakshmana; jagaama = obtained; paramaam = great; priitim = delight; saH = that;vibhiiShaNaH = Vibhishana; praapya = having gained; tat mahat raajyam = that great kingdom; raama dattam = bestowed on him by Rama; (was also greatly delighted).
Rama together with Lakshmana were greatly delighted. That Vibhishana, having gained that great kingdom bestowed on him by Rama, was also greatly delighted.
anujJnaapya mahaaraajamimaM saumya vibhiiShaNam || 6-112-24
pravishya nagariiM laN^kaaM kaushalaM bruuhimaithiliim |
24. saumya = O the benevolent one!; anujJNaapya = taking permission from; imam vibhiiShaNam = this Vibhishana; maahaaraajam = the great king; praveshya = and entering into; laN^kaam nagarim = the City of Lanka; bruuhi = inform; kaushalam = about our welfare; maithiliim = to Seetha.
“O the benevolent one! Taking permission from this Vibhishana, the great king and entering into the City of Lanka, inform about our welfare to Seetha.”
priyametadudaahR^itya vaidehyastvaM hariishvara || 6-112-26
pratigR^ihya cha saMdeshamupaavartitumarhasi |
26. hariishvara = O the master of monkeys!; udaahR^itya = making clear; etat = this; priyam = favourite news; vaidehyaaH = to Seetha; arhasi = you ought; upaavartitum = to return; pratigR^ihya = taking back; samdesham = her message.
“O Hanuma the master of monkeys! Making clear this favourite news to Seetha, you ought to return, taking back her message.”
——————————————————————
அத்தியாயம் 112 (519) விபீ4ஷண விலாப : (விபீஷணன் வருந்தி புலம்புதல்)
ராமனால் வதம் செய்யப் பட்டு பூமியில் கிடந்த சகோதரனைப் பார்த்து விபீஷணன் மனம் வருந்தினான்.
தன் வேதனையை அடக்க மாட்டாமல் புலம்பினான். வீரனே, விக்ரமம் உடையவனே, கீர்த்தி வாய்ந்தவனே,
நியாயம் அறிந்தவனாக, வினயமாகத் தானே இருந்தாய். உயர் தர படுக்கைகளில் சுகமாக உறங்கியவன்,
இப்பொழுது தரையில் விழுந்து கிடக்கிறாயே, ராமனால் ஜயிக்கப் பட்டு, உயிரை இழந்து கிடக்கிறாயே.
அங்கதம் என்ற ஆபரணங்கள் பூட்டப் பெற்று அலங்காரமாக விளங்கும் கைகள் இரண்டும் விரிந்து கிடக்க,
பாஸ்கரனுக்கு சமமான ஓளி பொருந்திய மகுடமும் இல்லாமல் கிடக்கிறாயே.
வீரனே, நான் இந்த நிலை வரக் கூடும் என்று முன்பே எச்சரித்தேன்.
காமமும், மோகமும் உன் கண்களை மறைத்தன. நான் சொன்னதை நீ ஏற்கவில்லை.
கர்வமும், தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக, மார் தட்டி பேசிய ப்ரஹஸ்தனோ, இந்திரஜித்தோ,
மற்ற ஜனங்களோ, கும்பகர்ணனோ, அதி ரதனோ, அதி காயனோ, நராந்தகனோ, யார் யார் உனக்கு
உகந்த முறையில் பேசினார்களோ, நீயும் அவர்கள் பரிந்து சொன்ன சொல்லை மதித்து ஏற்றுக் கொண்டாயோ,
அவர்கள் யாருமே இன்று இல்லை. அவர்களும் இறுதிக் கடன் பெறும் நிலையில் விழுந்து கிடக்கிறார்கள்.
வீரனே, சஸ்திரங்களை ஏந்தியவர்களுள் சிறந்தவனே, நல்ல நீதி முறைகளுக்கு சேதுவாக இருந்தவன்,
தர்மமே உருவாக விளங்கியவன், சத்வ குணங்களுக்கு இருப்பிடமாக திகழ்ந்தவன்,
எந்த விதமான பிரச்னையானாலும் தீர்வு காண்பவன் எவனோ, ஆதித்யன் போன்ற அந்த எங்கள் அரசன் பூமியில் விழுந்தான்.
சந்திர கிரணங்கள் இருட்டில் மூழ்கி விட்டன. சித்ர பானு அடங்கி விட்டது. முயற்சிகள் இன்றியே வேலைகள் தடை படுகின்றன.
இந்த வீரன் தோல்வியுற்று மாண்டதால் உலகில் இயக்கமே (சேஷ்டைகளே), இல்லையென்றாகி விட்டது.
இந்த உலகில் மீதி என்ன தான் இருக்கும்? ராக்ஷஸ சார்தூலனாக வாழ்ந்தவன், ரண பூமியில் புழுதியில் புரளும் பொழுது,
எது தான் இயங்கும் நிலையில் இருக்கக் கூடும். ராகவன் என்ற புயற் காற்று வந்து,
இந்த பெரிய ராக்ஷஸ வ்ருக்ஷத்தை, மரத்தை, தன்னம்பிக்கை என்ற நாற்றுகள் முளைத்து,
தவ வலிமையே பூக்களாக, தன் சௌர்யத்தால் வேரூன்றி நின்று, உயர்ந்து வளர்ந்து நின்ற
ராவண மரத்தை அசைத்து தள்ளி விட்டது. ராவணன் என்ற இந்த பட்டத்து யானை,
இக்ஷ்வாகு குலத்து சிங்கம் பிடித்துக் கொண்ட தேகத்தினனாக, தேஜஸே கொம்பாக, தந்தமாக,
குல வம்சமே வம்சமாக, கோபமும் பிடிவாதமுமே தும்பிக்கையாக, நின்ற பெரிய யானையாக இருந்த
ராவணன் ராகவ சிம்மத்தால் த்வம்சம் செய்யப் பட்டான். ராமன் எனும் மேகத்தால் அதன் மழை பொழிய,
ராக்ஷஸாக்னியாக இருந்த ராவணன் அடக்கப் பட்டான். அணைக்கப் பட்டான்.
ப்ராக்ரமமும், உத்சாகமும் ஜ்வலிக்கும் அக்னி ஜ்வாலையாக பிரகாசிக்க, அவன் மூச்சுக் காற்றே
புகையாக தன் பலமும் பிரதாபமும் ஒளியாக நின்ற ராவணாக்னி இன்று ராமன் என்ற மழை மேகத்தினால் அடங்கி விட்டான்.
வ்யாக்ரம் போல, உயர் ஜாதி புலி போன்று இருந்தவன் இன்று அடிபட்டு விழுந்து கிடக்கிறான்.
இவ்வாறு புலம்பும் விபீஷணனைப் பார்த்து ராகவன் சமாதானப் படுத்தினார்.
விபீஷணா, இவன் அழியவில்லை. செயலற்று கிடக்கிறான். சண்ட ப்ரசண்டமாக யுத்த பூமியில் வளைய வந்த வீரன்,
அதி உன்னதமான மகா உத்சாகம் உடையவன், நிச்சயம் தோற்று விழுந்தான் தான்.
ஆயினும், க்ஷத்திரிய தர்மத்தை அனுசரித்து போரில் மாண்டவர்களைக் கண்டு வருந்துவது இல்லை.
மேலும் மேலும் விருத்தி, மேன்மையடைய வேண்டும், ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் தான் க்ஷத்திரியர்கள் போரில் உயிர் துறப்பதை பெருமையாக எடுத்துக் கொள்கின்றனர்.
எந்த ராவணனால், இந்திரனோடு சேர்த்து மூவுலகமும் பயந்து நடுங்கும்படி வைக்கப் பட்டிருந்ததோ,
புத்திமானான அவன் தானே எப்பொழுது யுத்தத்தை தேர்ந்தெடுத்து, போரிட்டு யுத்த பூமியில் உயிரைத் துறந்தானோ,
அவனுக்காக வருந்தி புலம்புவது அழகல்ல.. அவசியமும் அல்ல. இது வருந்தும் நேரமல்ல.
எப்பொழுதும் விஜயனாக, வெற்றியே தான் என்பது யுத்த களத்தில் இதுவரை கண்டதும் இல்லை.
இனிக் காணப் போவதும் இல்லை. வீரனாக இருப்பவன், தான் மற்றவர்களைக் கொல்லுவான் அல்லது தான்
மற்றவர்களால் கொல்லப் படுவான். இதுதான் இதுவரை நம் முன்னோர்கள் கண்ட வழி.
க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற தர்மம் இது. க்ஷத்திரியனின் மரணம் ரண பூமியில் நிகழுமானால்
அவனுக்காக வருந்தக் கூடாது என்பது தான் மரபு. அதனால் எழுந்திரு. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசி.
ராமர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த விபீஷணன், தன்னை சமாளித்துக் கொண்டு,
சகோதரனின் நல்ல குணங்களை நினைத்து பச்சாதாபப் பட்டான். இதோ இந்த ராவணன்,
எந்த போரிலும், தோல்வியுற்று, தலை குனிந்து திரும்பியதில்லை. தேவர்கள் கூட்டத்தோடு வாஸவன் வந்த பொழுது,
நிமிர்ந்து நின்று போரிட்டு வென்றான், சமுத்திரம் தன் அலைகளால் கரையைத் தொட்டு அடங்குவது போல ,
தாங்கள் வந்து நிற்கவும் உங்கள் முன்னால் உடைந்து விட்டான்.
இவன் தானம் அளித்ததும் கணக்கிலடங்கா. செய்த பூஜைகளும் ஏராளம். அனுபவித்த போகங்களும் கணக்கிலடங்கா.
இவன் கீழ் வேலை செய்த அதிகாரிகளும், அடியாட்களும் நல்ல ஊதியம் பெற்று, நல்ல நிலைமையில் வாழ்ந்தார்கள்.
நண்பர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கினான். நண்பர்கள் அல்லாதவர்களோடு அதே போல த்வேஷமும் பாராட்டினான்.
இவன் வளர்த்த ஆஹிதாக்னியும், மகா தவங்களும், வேதத்தில் சொல்லப்பட்டவையே. அதில் கரை கண்டவன்.
கர்ம மார்கத்தில் சிறந்த நம்பிக்கையுடைய வீரன். இப்படிப் பட்டவனுடைய இறுதி கடன்களைச் செய்ய
எனக்கு அனுமதி தர வேண்டும். இவ்வாறு கேட்ட விபீஷணனைப் பார்த்து கருணையால் இளகிய மனத்தினான ராமன்,
சாது என்று சொல்லி, உரிய இறுதிக் கடன்களை, ஸ்வர்கத்தை அளிக்க வல்ல சிரார்த்த காரியங்களை செய்ய, கட்டளையிட்டான்.
மரணம் வரை தான் வைரம், விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு சம்ஸ்காரங்கள் செய்.
உனக்கு எப்படி சகோதரனோ, அதே போலத் தான் எனக்கும், என்றார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply