ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 96–(பிரத்யும்ன தைத்ய யுத்தம்)-தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் |–

வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது

வைஷ²ம்பாயன உவாச
ஸத்ராவஸானே ச முனே꞉ கஷ்²யபஸ்யாதிதேஜஸ꞉ |
ஜக்³முர்தே³வாஸுரா꞉ ஸ்வானி ஸ்தா²னான்யமிதவிக்ரமா꞉ ||2-96-1

வஜ்ரநாபோ⁴(அ)பி நிர்வ்ருத்தே ஸத்ரே கஷ்²யபமப்⁴யகா³த் |
த்ரைலோக்யவிஜயாகாங்ஃக்²ஷீ தமுவாசாத² கஷ்²யப꞉ ||2-96-2

வஜ்ரநாப⁴ நிபோ³த⁴ த்வம் ஷ்²ரோதவ்யம் யதி³ சேன்மம |
வஸ வஜ்ரபுரே புத்ர ஸ்வஜனேன ஸமாவ்ருத꞉ ||2-96-3

தபஸாப்⁴யதி⁴க꞉ ஷ²க்ர꞉ ஷ²க்தஷ்²சைவ ஸ்வபா⁴வத꞉ |
ப்³ரஹ்மண்யஷ்²ச க்ருதஜ்ஞஷ்²ச ஜ்யேஷ்ட²꞉ ஷ்²ரேஷ்ட²தமோ கு³ணை꞉ ||2-96-4

ராஜா க்ருத்ஸ்னஸ்ய ஜக³த꞉ பாத்ரபூ⁴அத꞉ ஸதாம் க³தி꞉ |
ஸம்ப்ராப்தோ லோகராஜ்யம் ஸ ஸர்வபூ⁴தஹிதே ரத꞉ ||2-96-5

நைவ ஷ²க்யஸ்த்வயா ஜேதும் வஜ்ரநாப⁴ விஹன்யஸே |
அஹிம் பதா³ வ்யுத்க்ரமன்வை ந சிராத்³வினஷி²ஷ்யஸி ||2-96-6

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) “ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்” என்றார் {கசியபர்}.(6)

வஜ்ரநாப⁴ஷ்²ச தத்³வாக்யம் நாபி⁴னந்த³தி பா⁴ரத |
காலபாஷ²பரீதாங்கோ³ மர்துகாம இவௌஷத⁴ம் ||2-96-7

அபி⁴வாத்³ய ஸ து³ர்பு³த்³தி⁴꞉ கஷ்²யபம் லோகபா⁴வனம் |
த்ரைலோக்யவிஜயாரம்பே⁴ மதிம் சக்ரே து³ராஸத³꞉ ||2-96-8

ஜ்ஞாதியோதா⁴ன்ஸமானீய மித்ராணி ஸுப³ஹூனி ச |
ப்ரதஸ்தே² ஸ்வர்க³மேவாக்³ரே விஜிகீ³ஷன்விஷா²ம்பதே ||2-96-9

ஓ! பாரதா, காலபாசத்தில் கட்டப்பட்ட அங்கங்களைக் கொண்டவன் மரணத்தை விரும்பி மருந்தை உட்கொள்ளாததைப் போலவே வஜ்ரநாபனும் கசியபரின் சொற்களை அங்கீகரித்தானில்லை.(7) மிகத் தீயவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அவன், உலகின் பாதுகாவலரான கசியபரை வணங்கிவிட்டு, மூவுலகங்களையும் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(8) ஓ! மன்னா, அவன் தன்னுடைய உற்றார், உறவினர், போர்வீரர்கள், நண்பர்கள் ஆகியோரைத் திரட்டினான். அவன் முதலில் தேவர்களின் உலகத்தைக் கைப்பற்ற புறப்பட்டுச் சென்றான்.(9)

ஏதஸ்மின்னந்தரே தே³வௌ க்ருஷ்ணேந்த்³ரௌ ச மஹாப³லௌ |
ப்ரேஷயாமாஸதுர்ஹம்ஸான்வஜ்ரனாஹவத⁴ம் ப்ரதி ||2-96-10

ஸமாக³தாஸ்து தச்ச்²ருத்வா யது³முக்²யா மஹாப³லா꞉ |
மந்த்ரயித்வா மஹாத்மானஷ்²சிந்தாமாபேதி³ரே ததா² ||2-96-11

வஜ்ரநாபோ⁴(அ)த்³ய ஹந்தவ்ய꞉ ப்ரத்³யும்னேனேத்யஸம்ஷ²யம் |
தயோர்து³ஹிதரோ பா⁴ர்யா ப⁴க்த்யா தா꞉ ஸர்வபா⁴வனா꞉ ||2-96-12

அந்த நேரத்தில் பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களான இந்திரனும் உபேந்திரனும் வஜ்ரநாபனுக்கு அழிவைக் கொண்டு வருவதற்காக அன்னப்பறவைகளை அங்கே அனுப்பினர்.(10) உயரான்மாக்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான யதுக்கள் அந்த அன்னப்பறவைகளிடமிருந்து செய்தியைக் கேட்டு இவ்வாறு {பின்வருமாறு} ஆலோசித்துச் சிந்தினை செய்தனர்,(11) “இனி நிச்சயம் பிரத்யும்னனால் வஜ்ரநாபன் கொல்லப்படுவான். ஆனால், வஜ்ரநாபனின் மகளும், சுநாபனின் மகள்களும் அவர்களிடம் {பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோரிடம்} அர்ப்பணிப்புக் கொண்ட மனைவியராக இருக்கின்றனர். {அவர்கள் எப்போதும் நம் நலத்தையே நாடுகிறார்கள்}.(12) அவர்கள் அனைவரும் கருவுற்றவர்களாகவும், மகப்பேறுகாலம் நெருங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?” {என்று சிந்தித்தனர்}.(13)

ஸர்வா꞉ ஸக³ர்பா⁴ஸ்தாஷ்²சைவ கிம் நு கார்யமனந்தரம் |
ப்ராப்த꞉ ப்ரஸவகாலஷ்²ச தாஸாம் நாதிசிராதி³வ ||2-96-13

ஸம்மந்த்ரயித்வைதத³ர்த²ம் ஹம்ஸானூசுர்மஹாப³லா꞉ |
ஆக்²யேயமர்த²வத்க்ருத்ஸ்னம் ஷ²க்ரகேஷ²வயோஸ்ததா³ ||2-96-14

ஹம்ஸைர்க³த்வா ததா³க்²யாதம் தே³வயோஸ்தத்³யதா²தத²ம் |
தாப்⁴யாம் ஹம்ஸாஸ்து ஸந்தி³ஷ்டா ந பே⁴தவ்யமிதி ப்ரபோ⁴ ||2-96-15

உத்பத்ஸ்யந்தி கு³ணை꞉ ஷ்²லாக்⁴யா꞉ புத்ரா வ꞉ காமரூபிண꞉ |
க³ர்ப⁴ஸ்தா²꞉ ஸர்வவேதா³ம்ஷ்²ச ஸாங்கா³ன்வேத்ஸ்யந்த்யனிந்தி³தா꞉ ||2-96-16

ததா² சாநாக³தம் ஸர்வமஸ்த்ராணி விவிதா⁴னி ச |
ஸத்³ய ஏவ யுவானஷ்²ச ப⁴விஷ்யந்தி ஸுபண்டி³தா꞉ ||2-96-17

இவ்வாறு சிந்தித்த {தங்களுக்குள் ஆலோசித்த} அவர்கள் {யாதவர்கள்}, சக்ரனிடமும், கேசவனிடமும் அனைத்து உண்மைகளையும் சொல்லுமாறு அன்னப்பறவைகளைக் கேட்டுக் கொண்டனர்,(14) அவையும் அவ்வாற அவ்விரு தேவர்களிடமும் சென்று தெரிவித்தன. அதற்கு அவர்கள் {இந்திரனும், கிருஷ்ணனும்} அந்த அன்னப்பறவைகளிடம், “{யாதவர்களே,} அஞ்சாதீர்;(15) அனைத்துத் திறன்களையும் கொண்ட காமனைப் போன்ற அழகிய மகன்களை நீங்கள் பெறுவீர்கள்; அவர்கள் கருவறையில் இருக்கும்போதே வேதங்கள் அனைத்திலும், அவற்றின் அங்கங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறுவார்கள்.(16) உங்கள் மகன்கள் உடனே இளைஞர்களாகி வருங்காலத்திற்குத் தேவையான பல்வேறு சாத்திரங்களிலும் தேர்ச்சியடைவார்கள்” என்று சொல்லி அனுப்பினர்.(17)

ஏவமுக்த்வா க³தா ஹம்ஸா꞉ புனர்வஜ்ரபுரம் விபோ⁴ |
ஷ²ஷ²ம்ஸுஷ்²சைவ பை⁴மானாம் ஷ²க்ரகேஷ²வபா⁴ஷிதம் ||2-96-18

ப்ரபா⁴வதீ ததா³ புத்ரம் ஸுஷுவே ஸத்³ருஷ²ம் பிது꞉ |
ஸத்³யோ யௌவனஸம்ப்ராப்தம் ஸர்வஜ்ஞத்வம் ச பா⁴ரத ||2-96-19

மாஸமாத்ரேண ஸுஷுவே தே³வீ சந்த்³ரவதீ ந்ருப |
சந்த்³ரப்ரப⁴மிதி க்²யாதம் தனயம் ஸத்³ருஷ²ம் பிது꞉ ||2-96-20

ஸத்³யஷ்²ச யௌவனம் ப்ராப்தம் ஸர்வ்ஜ்ஞத்வம் ச பா⁴ரத |
கு³ணாவத்யபி புத்ரம் ச கு³ணவந்தமனிந்தி³தா ||2-96-21

யுவானாவத² ஸத்³யஸ்தௌ ஸர்வஷா²ஸ்த்ரார்த²கோவிதௌ³ |
இந்த்³ரோபேந்த்³ரப்ரஸாதே³ன ஸம்வ்ருத்தௌ யுத்³த⁴வர்த்³த⁴னௌ ||2-96-22

ஹர்ம்யப்ருஷ்டே² வர்த்³த⁴மானா த்³ருஷ்டாஸ்தே யது³நந்த³னா꞉ |
இந்த்³ரோபேந்த்³ரேச்ச²யா வீர நான்யதே²த்யவதா⁴ர்யதாம் ||2-96-23

நிவேதி³தாஷ்²ச ஸம்ப்⁴ராந்தைர்தை³த்யைராகாஷ²ரக்ஷிபி⁴꞉ |
வஜ்ரநாபா⁴ய வீராய த்ரிவிஷ்டபஜயைஷிணே ||2-96-24

வதா⁴ய ஸர்வே க்³ருஹ்யந்தாம் மமைதே க்³ருஹத⁴ர்ஷகா꞉ |
இத்யுவாசாஸுரபதிர்வஜ்ரநாபோ⁴ மஹாஸுர꞉ ||2-96-25

ஓ! தலைவா, இவ்வாறு அன்னங்களிடம் சொல்லப்பட்டதும் அவை வஜ்ரபுரத்திற்குத் திரும்பி சக்ரனும், கேசவனும் சொன்னதைப் பைமர்களிடம் தெரிவித்தன.(18) அனைத்தையும் அறிந்தவனும், தன் தந்தையைப் போன்றே இளமை நிறைந்தவனுமான ஒரு மகனை பிரபாவதி ஈன்றாள்.(19) ஒரு மாதம் கழிந்ததும் இணையான இளமையையும், அனைத்தையும் அறியும் அறிவையும் கொண்டவனும், கதனை ஒத்திருந்தவனுமான மகன் சந்திரப்ரபனைச் சந்திரவதி ஈன்றாள்.(20) குணவதியும், குணவான் என்ற பெயரில் அதே போல இளமை நிறைந்தவனும், அனைத்தையும் அறிந்தவனுமான அழகிய மகனை ஈன்றெடுத்தாள்.(21) இந்த யதுகுலச் சிறுவர்கள் அனைத்து சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுக் கொண்டே இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் தங்கள் தங்களுக்குரிய மாளிகைகளின் மாடிகளில் திரிந்து நல்ல குணங்களைப் பெற்றவர்களாக வளர்ந்து வந்தனர்.(22) இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பங்களின் பேரிலேயே அவர்களால் (தைத்தியர்களால்) காணவும்பட்டனர்; இதை நிச்சயம் அறிந்து கொள்வாயாக.(23) வானத்தில் இருந்த தைத்தியர்கள் அவர்களைக் கண்டதும், தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பும் வஜ்ரநாபனிடம் மதிப்புடன் இதைத் தெரிவித்தனர்.(24) தடுக்கப்பட முடியாதவனான அசுரமன்னன் வஜ்ரநாபன் இதைக் கேட்டதும், “என் வீட்டிற்குள் வரம்பு கடந்தவர்களைச் சிறை பிடிப்பீராக”என்றான்.(25)

தத꞉ ஸைன்யம் ஸமாஜ்ஞப்தமஸுரேந்த்³ரேண தீ⁴மதா |
ஆவாரயாமாஸ தி³ஷ²꞉ ஸர்வா꞉ குருகுலோத்³வஹ ||2-96-26

க்³ருஹ்யதாமாஷு² வத்⁴யந்தாமிதி வாசஸ்ததஸ்தத꞉ |
உச்சேருரஸுரேந்த்³ரஸ்ய ஷா²ஸநாத³ரிஷா²ஸின꞉ ||2-96-27

ஓ! குருவின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்க அசுர மன்னனால் இவ்வாறு ஆணையிடப்பட்டதும் படைவீரர்கள் திசைகள் அனைத்தையும் காத்தனர்.(26) பகைவரை அழிப்பவனான அசுர மன்னனின் ஆணைப்படி, “அவர்களைப் பிடித்து விரைவாகக் கொல்வீராக” என்ற ஒலிகள் அனைத்துப் பக்கங்களிலும் எழுந்தன.(26,27)

தச்ச்²ருத்வா வ்யதி²தாஸ்தேஷாம் மாதர꞉ புத்ரவத்ஸலா꞉ |
ருருது³ஸ்தா ருத³ந்தீஷ்²ச ப்ரத்³யும்ன꞉ ப்ரஹஸன்ப்³ரவீத் ||2-96-28

மா பை⁴ஷ்ட ஜீவமானேஷு ஸ்தி²தேஷ்வஸ்மாஸு ஸர்வதா² |
கிம் நோ தை³த்யா꞉ கரிஷ்யந்தி ஸர்வதா² ப⁴த்³ரமஸ்து வ꞉ ||2-96-29

இதைக் கேட்டதும் மகன்கள் மேல் அன்பு கொண்ட அன்னையர் அச்சத்தில் அழத் தொடங்கினர். பிரத்யும்னன் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிரித்துக் கொண்டே,(28) “நாங்கள் உயிரோடும், உறுதியோடும் இருக்கும் வரை நீங்கள் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு நன்மை நேரட்டும். தைத்தியர்களால் எங்களை ஏதும் செய்ய முடியாது” என்றான்.(29)

ப்ரபா⁴வதீமதோ²வாச ப்ரத்³யும்னோ விப்லவாம் ஸ்தி²தாம் |
பிதா தவ க³தா³பாணி꞉ பித்ருவ்யாஷ்²ச ஸ்தி²தாஸ்தவ ||2-96-30

ப்⁴ராதரஷ்²சைவ தே தே³வி ஜ்ஞாதயஷ்²ச ததா²பரே |
ஏதே பூஜ்யாஷ்²ச மான்யாஷ்²ச தவார்தே² க²லு ஸர்வதா² ||2-96-31

ப⁴கி³ன்யௌ ப்ருச்ச² ப⁴த்³ரம் தே காலோ(அ)யம் க²லு தா³ருண꞉ |
மரணம் ஸஹமானானாம் யுத்³த்⁴யதாம் விஜயோ த்⁴ருவம் ||2-96-32

தா³னவேந்த்³ராத³யோ ஹ்யேதே யோத்ஸ்யந்தே(அ)ஸ்மத்³வதை⁴ஷிண꞉ |
கிமத்ர கார்யமஸ்மாபி⁴꞉ ஸர்வைஷ்²சக்ராந்தரஸ்தி²தை꞉ ||2-96-33

பிறகு அவன் கலங்கியிருந்த பிரபாவதியிடம், “ஓ! பெண்ணே, உன்னுடைய தந்தை, சிற்றப்பன்மார், சகோதரர்கள், உற்றார், உறவினர் ஆகியோர் தங்கள் கைகளில் கதாயுதங்களுடன் காத்திருக்கின்றனர். உங்களின் நிமித்தமாக எங்களால் மதிக்கப்படவும், கௌரவிக்கப்படவும் தகுந்தவர்கள் அவர்கள்.(30,31) ஆனால் காலமோ படுபயங்கரமாக இருக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டால் நாங்கள் இறந்து போவோம். போரிட்டால் வெற்றியடைவோம்.(32) எங்களைக் கொல்ல விரும்பும் தானவ மன்னன் எங்களுடன் போரிடப் போகிறான். நீ உன் தங்கைமாருடன் கலந்தாலோசித்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்வாயாக. ஏனெனில் இப்போது நாங்கள் உன் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம்” என்றான்.(33)

ப்ரபா⁴வதீ ருத³ந்தீ து ப்ரத்³யும்னமித³மப்³ரவீத் |
ஷி²ரஸ்யஞ்ஜலிமாதா⁴ய ஜானுப்⁴யாம் பதிதா க்ஷிதௌ ||2-96-34

க்³ருஹாண ஷ²ஸ்த்ரமாத்மானம் ரக்ஷ ஷ²த்ருனிப³ர்ஹண |
ஜீவன்புத்ராம்ஷ்²ச தா³ராம்ஷ்²ச த்³ரஷ்டாஸி யது³நந்த³ன ||2-96-35

ஆர்யாம் ந்ருவர வைத³ர்பீ⁴மநிருத்³த⁴ம் ச மானத³ |
ஸ்ம்ருத்வைதன்மோக்ஷயாத்மானம் வ்யஸநாத³ரிமர்த³ன ||2-96-36

து³ர்வாஸஸா வரோ த³த்தோ முனினா மம தீ⁴மதா |
வைத⁴வ்யரஹிதா ஹ்ருஷ்டா ஜீவபுத்ரா ப⁴விஷ்யஸி ||2-96-37

ஏஷ மே ஹ்ருத³யாஷ்²வாஸோ ப⁴விதா ந தத³ன்யதா² |
ஸூர்யாக்³னிதேஜஸோ வாக்யம் முனேரிந்த்³ரானுஜாத்மஜ ||2-96-38

இத்யுக்த்வாதா²ஸிமாதா³ய ஸூபஸ்ப்ருஷ்ட்வா மனஸ்வினீ |
ப்ரத³தௌ³ ரௌக்மிணேயாய ஜயஸ்வேதி வரம் வரா ||2-96-39

ஸ தம் ஜக்³ராஹ த⁴ர்மாத்மா ப்ரஹ்ருஷ்டேனாந்தராத்மனா |
ப்ரணம்ய ஷி²ரஸா த³த்தம் ப்ரியயா ப⁴க்தியுக்தயா ||2-96-40

சந்த்³ரவத்யபி நிஸ்த்ரிம்ஷ²ம் க³தா³ய ப்ரத³தௌ³ முதா³ |
ததா³ கு³ணவதீ சைவ ஸாம்பா³யாஸிம் மஹாத்மனே ||2-96-41

பிரபாவதி தன் நெற்றியில் கை மடித்து, பூமியில் முழங்காலில் விழுந்து அழுதபடியே,(34) “ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! பகைவரைக் கொல்பவரே, உங்கள் ஆயுதங்களை ஏந்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக. பிழைத்திருந்தால் மட்டுமே உங்கள் மனைவியையும், மகன்களையும் நீ காண்பீர்.(35) மதிப்பிமிக்க வைதர்ப்பியையும் {ருக்மிணியையும்}, அநிருத்தனையும் நினைவில் கொண்டு இந்தப் பேராபத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக.(36) ஓ! உபேந்திரரின் மகனே, நான் எப்போதும் களங்கமற்ற வாழ்வை வாழ்வேன், ஒருபோதும் கைம்பெண்ணாகேன் {விதவையாகமாட்டேன்}, என் மகன்களும் எப்போதும் வாழ்வார்கள் என்று நுண்ணறிவுமிக்கவரான பெரும் ரிஷி {துர்வாசர்} எனக்கு வரமளித்திருக்கிறார். சூரியனையும், நெருப்பையும் போன்ற பிரகாசமிக்கவரான அந்த ரிஷியின் சொற்கள் பொய்யாகாது என நான் நம்புகிறேன்” என்றாள்.(37,38) பெண்களில் ரத்தினமும், நுண்ணறிவுமிக்கவளுமான பிரபாவதி இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயைக் கொப்பளித்துவிட்டு {அல்லது வாளைத் தூய்மை செய்து கொண்டு வந்து}, ருக்மிணியின் மகனிடம் ஒரு வாளைக் கொடுத்து, “வெற்றி அடைவீராக” எனும் வரத்தையும் அளித்தாள்.(39) அற ஆன்மா கொண்ட பிரத்யும்னன், தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனைவி கொடுத்த வாளைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டான்.(40) சந்திரவதி கதனிடம் ஒரு நிஷ்திரிங்கத்தையும் {வாளையும்}, குணவதி பெருஞ்சக்திவாய்ந்த சாம்பனிடம் அதே போன்ற மற்றொரு ஆயுதத்தையும் {வாளையும்} மகிழ்ச்சியுடன் கொடுத்தனர்.(41)

ஹம்ஸகேதுமதோ²வாச ப்ரத்³யும்ன꞉ ப்ரணதம் ப்ரபு⁴꞉ |
இஹைவ ஸாம்ப³ஸஹிதோ யுத்³த்⁴யஸ்வ ஸஹ யாத³வை꞉ ||2096-42

ஆகாஷே² தி³க்ஷு ஸர்வாஸு யோத்ஸ்யாம்யஹமரிந்த³ம |
இத்யுக்த்வாத² ரத²ம் சக்ரே மாயயா மாயினாம் வர꞉ ||2-96-43

ஸஹஸ்ரஷி²ரஸம் நாக³ம் க்ருத்வா ஸாரதி²மாத்மவான் |
அனந்தபோ⁴க³ம் கௌரவ்ய ஸர்வநாகோ³த்தமோத்தமம் ||2-96-44

ஸ தேன ரத²முக்²யேன ஹர்ஷயன்வை ப்ரபா⁴வதீம் |
சசாராஸுரஸைன்யேஷு த்ருணேஷ்விவ ஹுதாஷ²ன꞉ ||2-96-45

ஷ²ரைராஷீ²விஷப்ரக்²யைரர்த்³த⁴சந்த்³ரானுகாந்திபி⁴꞉ |
பே⁴த³னைர்கா³த⁴னைஷ்²சைவ தத³ர்த³ தி³திஸம்ப⁴வான் ||2-96-46

அஸுராஷ்²ச ரணே மத்தா꞉ கார்ஷ்ணிம் ஷ²ஸ்த்ரைரிதஸ்தத꞉ |
ஜக்⁴னு꞉ கமலபத்ராக்ஷம் பரம் நிஷ்²சயமாஸ்தி²தா꞉ ||2-96-47

சிச்சே²த³ பா³ஹூன்கேஷாஞ்சித்கேயூரவலயோஜ்ஜ்வலான் |
ஸகுண்ட³லானி கேஷாஞ்சிச்சி²ராம்ஸ்யபி ச சிச்சி²தே³ ||2-96-48

க்ஷுரச்சி²ன்னை꞉ ஷி²ரோபி⁴ஷ்²ச காயைஷ்²ச ஷ²கலைரபி |
அஸுராணாம் மஹீ கீர்ணா ப்ரத்³யும்னேனாதிதேஜஸா ||2-96-49

தே³வேஷ்²வரோ தே³வக³ணை꞉ ஸஹித꞉ ஸமிதிஞ்ஜய꞉ |
த³த³ர்ஷ² முதி³தோ யுத்³த⁴ம் பை⁴மானாம் தி³திஜை꞉ ஸஹ ||2-96-50

யே க³த³ம் சைவ ஸாம்ப³ம் ச தை³த்யா꞉ ஸமபி⁴து³த்³ருவு꞉ |
தே யயுர்நித⁴னம் ஸர்வே யாதா³ம்ஸீவ மஹோத³தௌ⁴ ||2-96-51

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், தன்னை வணங்கிய {தேர் சாரதியான} ஹம்ஸகேதுவிடம், “ஓ! பகைவரைக் கொல்பவனே, சாம்பனுடன் இங்கேயே இருந்து தானவர்களை எதிர்த்துப் போரிடுவாயாக.(42) பகைவரைக் கொல்பவனுடன் சேர்ந்து அனைத்துத் திசைகளையும் பாதுகாத்தபடியே நான் வானத்தில் இருந்து போரிடப் போகிறேன்” என்றான். மாயைகளை அறிந்தோரில் முதன்மையான பிரத்யும்னன் மாயையைப் பயன்படுத்தி ஒரு தேரை உண்டாக்கினான்.(43) நாக வகையில் முதன்மையானவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனுமான நாகனான அனந்தனைத் தன் தேரோட்டியாக்கினான்.(44) அவன் பிரபாவதிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அந்தச் சிறந்த தேரில் ஏறி புல்லில் திரியும் நெருப்பைப் போல அசுரப் படைக்கு மத்தியில் திரியத் தொடங்கினான்.(45) பாம்புகளைப் போன்று பயங்கரமானவையும், பிறை வடிவம் கொண்டவையுமான கணைகளில் {அர்த்தச்சந்திர பாணங்களில்} கூரிய தலைகளைக் கொண்ட சிலவற்றையும், மழுங்கிய தலை கொண்ட சிலவற்றையும் கொண்டு அவன் திதியின் மகன்களைத் தாக்கத் தொடங்கினான்.(46) உறுதிமிக்கவர்களும், போர் வெறி கொண்டவர்களுமான அசுரர்களும் கூட, கமலத்தலைவனின் மகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனுமான அவனை {பிரத்யும்னனைப்} பல்வேறு ஆயுதங்களால் தாக்கினர்.(47) கிருஷ்ணனின் மகன், கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிலரின் கரங்களையும், பலரின் தலைகளையும் கொய்தான்.(48) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனின் வாளால் வெட்டப்பட்ட அசுரர்களின் தலைகளும், உடல்களும் பூமியின் பரப்பில் நிறைந்து கிடந்தன.(49) படைகளை வெல்பவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தைத்தியர்களுக்கும், பைமர்களுக்கும் இடையில் நடக்கும் போரைத் தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கண்டான்.(50) கதனையும், சாம்பனையும் தொடர்ந்து விரைந்த தைத்தியர்கள், பெருங்கடலில் தெப்பம் செல்வது போல அழிவை அடைந்தனர்.(51)

விஷமம் து ததா³ யுத்³த⁴ம் த்³ருஷ்ட்வா தே³வப்திர்ஹரி꞉ |
க³தா³ய ப்ரேஷயாமாஸ ஸ்வம் ரத²ம் ஹரிவாஹன꞉ ||2-96-52

தி³தே³ஷ² மாதலிஸுதம் யந்தாரம் ச ஸுவர்சஸம் |
ஸாம்பா³யைராவணம் நாக³ம் ப்ரேஷயாமாஸ சேஷ்²வர꞉ ||2-96-53

ஜயந்தம் ரௌக்மிணேயஸ்ய ஸஹாயமத³தா³த்³விபு⁴꞉ |
ஐராவணமதி⁴ஷ்டா²தும் ப்ரவரம் ஸ நியுக்தவான் ||2-96-54

தே³வபுத்ரத்³விஜௌ வீராவப்ரமேயபராக்ரமௌ |
அனுஜ்ஞாப்ய ஸுராத்⁴யக்ஷம் ப்³ரஹ்மாணம் லோகபா⁴வனம் ||2-98-55

தம் மாதலிஸுதம் சைவ க³ஜமைராவணம் ததா³ |
தே³வ꞉ ப்ரேஷி²தவாஞ்ச²க்ரோ விதி⁴ஜ்ஞோ வரகர்மஸு ||2-96-56

தேவர்களின் தலைவனான ஹரி அப்போது அந்தப் பயங்கரப் போரைக் கண்டு, தன்னுடைய தேரை கதனிடம் அனுப்பி,(52) மாதலியின் மகனான ஸுவர்ச்சஸை அதன் சாரதியாகும்படி கேட்டுக் கொண்டான். தலைவன் இந்திரன் தன்னுடைய ஐராவதத்தைச் சாம்பனிடம் அனுப்பிப் பிரவரனை அதைச் செலுத்துவதில் ஈடுபடுத்தினான். மேலும் அவன் ருக்மிணியின் மகனுக்குத் துணையாக {தன் மகன்} ஜயந்தனை அனுப்பி வைத்தான்.(53,54) நற்பணிகள் அனைத்தின் வழிமுறைகளையும் நன்கறிந்த சக்ரன் {இந்திரன்}, உலகின் படைப்பாளனும், நற்பணிகள் அனைத்தின் வழிகாட்டியுமான பிரம்மனின் அனுமதியுடன் மாதலியின் மகனால் {ஸுவர்ச்சஸால்} செலுத்தப்படும் தேரையும், ஐராவதத்தையும், தெய்வீக இளைஞனான ஜயந்தனையும், இருபிறப்பாளர்களில் சிறந்த பிரவரனையும் அங்கே அனுப்பி வைத்தான்.(55,56)

க்ஷீணமஸ்ய தபோ வத்⁴யோ யதூ³நாமேஷ து³ர்மதி꞉ |
ப்ரவிஷ²ந்தி து பூ⁴தானி ஸர்வத்ர து யதே²ப்ஸிதம் ||2-96-57

ப்ரத்³யும்னஷ்²ச ஜயந்தஷ்²ச ப்ராப்தௌ ஹர்ம்யம் மஹாப³லௌ |
அஸுராஞ்ச்ச²ரஜாலௌகை⁴ர்விக்ராம்யந்தௌ ப்ரணஷ்²யது꞉ ||2-96-58

“இவனுடைய தவத்தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து விட்டன, இந்தத் தீயவன் யாதவர்களால் கொல்லப்படப் போகிறான்” என்று நினைத்த பூதங்கள் {உயிரினங்கள்} தாங்கள் விரும்பிய வண்ணம் எங்கும் நுழைந்தன.(57) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், ஜயந்தனும் அசுரர்களின் மாளிகைகளுக்குள் படிப்படியாக நுழைந்து கணைவலையால் அவர்களை அழிக்கத் தொடங்கினர்.(58)

க³த³ம் கார்ஷ்ணிஸ்ததோ³வாச து³ர்வார்யரணது³ர்ஜய꞉ |
உபேந்த்³ரானுஜ ஷ²க்ரேண ரதோ²(அ)யம் ப்ரேஷிதஸ்தவ ||2-96-59

ஹரியுங்மாதலிஸுதோ யந்தா சாயம் மஹாப³ல꞉ |
ப்ரவராதி⁴ஷ்டி²தஷ்²சாயம் ஸாம்ப³ஸ்யைராவணோ க³ஜ꞉ ||2-96-60

அத்³யோபஹாரோ ருத்³ரஸ்ய த்³வாரகாயம் மஹாப³ல꞉ |
ஷ்²வ ஏஷ்யதி ஹ்ருஷீகேஷ²ஸ்தஸ்மின்வ்ருத்தே(அ)ச்யுதானுஜ ||2-96-61

தஸ்யாஜ்ஞயா வதி⁴ஷ்யாமோ வஜ்ரநாப⁴ம் ஸபா³ந்த⁴வம் |
அப்⁴யுத்தா²னக்ருதம் பாபம் த்ரிவிஷ்டபஜயம் ப்ரதி ||2-96-62

கரிஷ்யாமி விதா⁴னம் ச நைஷ சக்ரம் ஸுதான்விதம் |
விஜேஷ்யத்யப்ரமாத³ஸ்து கர்தவ்ய இதி மே மதி꞉ ||2-96-63

கலத்ரரக்ஷணம் கார்யம் ஸர்வோபாயைர்னரைர்பு³தை⁴꞉ |
கலத்ரத⁴ர்ஷணம் லோகே மரணாத³திரிச்யதே ||2-96-64

போரில் வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்}, தடுக்கப்பட முடியாத கதனிடம், “ஓ! உபேந்திரரின் தம்பியே, தேவர்களின் மன்னன் {இந்திரன்}, குதிரைகளுடன் கூடிய இந்தத் தேரை உமக்காக அனுப்பியிருக்கிறான்.(59) பெருஞ்சக்திவாய்ந்த மாதலியின் மகன் அதன் சாரதியாக இருக்கிறான். பிரவரனால் செலுத்தப்படும் ஐராவத யானை சாம்பனுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.(60) ஓ! அச்யுதரின் தம்பியே, இன்று துவாரகையில் ருத்ரப் பெரும்பூஜை நடைபெறுகிறது. நாளை அது நிறைவடைந்ததும், பெருஞ்சக்திவாய்ந்த ரிஷிகேசரே இங்கே வருவார்.(61) தேவர்களின் நகரைக் கைப்பற்றுவதாகச் சொல்லி செருக்கில் மிதக்கும் இந்தப் பாவம் நிறைந்த வஜ்ராநாபனை அவரது {கிருஷ்ணரின்} ஆணையின் பேரில் உற்றார் உறவினருடன் சேர்த்துக் கொல்வோம்.(62) நான் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன். அவனால் {வஜ்ரநாபனால்} தனது பகைவனையும் {இந்திரனையும்} பகைவனின் மகனையும் கைப்பற்ற இயலாது. நாம் மிகக் கவனமான இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.(63) நுண்ணறிவுமிக்க மனிதர்கள், காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களை அனைத்து வழிமுறைகளினாலும் காத்துக் கொள்வது முக்கியமாகும். காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களுக்கு {மனைவி / மகன் / இடம் ஆகியவற்றுக்குத்} தீங்கு நேர்வது இவ்வுலகில் மரணத்தைவிடக் கொடியது[உபாயம் செய்வேன். இவன் புத்ரனுடன் கூடிய இந்திரனை ஜயிக்கப் போவதில்லை. ஜாக்ரதை செய்யத்தக்கது என்பது எனது அபிப்ராயம். அறிவாளியான மனிதரால் எல்லா உபாயங்களாலும் ரக்ஷிக்கப்பட வேண்டிய ஸ்தானம் காக்கத்தக்கது. உலகில் தன் க்ஷேத்ரத்தைக் கேவலப்படுத்துவது மரணத்தைக் காட்டிலும் கொடியது”
காலத்ரரக்ஷணம் என்பதற்குக் காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய மனைவி என்றும், மகன் என்றும், இடம் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.]” என்றான்.(64)

ஏவம் ஸந்தி³ஷ்²ய பை⁴ம꞉ ஸ க³த³ஸாம்பௌ³ மஹாப³ல꞉ |
ப்ரத்³யும்னகோட்ய꞉ ஸஸ்ருஜே மாயயா தி³வ்யரூபயா ||2-96-65

தமஷ்²ச நாஷ²யாமாஸ தை³த்யஸ்ருஷ்டம் து³ராஸத³ம் |
ஜஹ்ருஷே தே³வராஜஷ்²ச தம் த்³ருஷ்ட்வா ரிபுமர்த³னம் ||2-96-66

த³த்³ருஷு²꞉ ஸர்வபூ⁴தானி கார்ஷ்ணிம் ஸர்வேஷு ஷ²த்ருஷு |
அந்தராத்மனி வர்தந்தம் க்ஷேத்ரஜ்ஞமிவ தம் விது³꞉ ||2-96-67

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன் இவ்வாறு கதனுக்கும், சாம்பனுக்கும் ஆணையிட்டுவிட்டு, தன் மாய சக்தியைப் பயன்படுத்தித் தன்னைப் போல் கோடி பேரை உண்டாக்கி {தன்னைப் போன்ற கோடி வடிவங்களை மாயையில் காட்டி} தைத்தியர்களால் உண்டாக்கப்பட்ட பயங்கர இருளை அகற்றினான். பகைவரைக் கொல்லும் அவனைக் கண்டு தேவர்களின் மன்னன் {இந்திரன்} பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(65,66) மனித ஆன்மாக்கள் அனைத்திலும் தெய்வீக ஆன்மா வாழ்வதைப் போலவே ஒவ்வொரு பகைவரிலும் கிருஷ்ணனின் மகனை {பிரத்யும்னனை} உயிரினங்கள் கண்டன.(67)

ஏவம் வ்யதீதா ரஜனீ ரௌக்மிணேயஸ்ய யுத்⁴யத꞉ |
அஸுராணாம் த்ரிபா⁴க³ஷ்²ச நிஹதஷ்²சாதிதேஜஸா ||2-96-68

யாவத்³வியோத⁴யாமாஸ கார்ஷ்ணிர்தை³த்யான்ரணாஜிரே |
ஸந்த்⁴யோபாஸ்தா ஜயந்தேன தாவத்³விஷ்ணுபதீ³ஜலே ||2-96-69

அயோத⁴யஜ்ஜயந்தஷ்²ச யாவத்³தை³த்யான்மஹாப³ல꞉ |
தாவதா³காஷ²க³ங்கா³யாம் பை⁴மா꞉ ஸந்த்⁴யாமுபாஸ்தவான் ||2-96-70

பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் இவ்வாறு போரிடுகையில் இரவும் கடந்தது, நான்கில் மூன்று பங்கு அசுரர்களும் கொல்லப்பட்டனர்.(68) ஜயந்தன், விஷ்ணுவின் பாதங்களில் இருந்து வெளிப்படும் கங்கைக்கு {விஷ்ணுபதிக்குத்} தன் மாலைநேர வழிபாட்டுக்காகச் சென்ற நேரத்தில் கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான். அதன்பிறகு பிரத்யும்னன், ஆகாயக் கங்கையில் தன் மாலைநேர வழிபாட்டைச் செய்த போது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான்” என்றார் {வைசம்பாயனர்}.(69,70)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரத்³யும்னதை³த்யயுத்³தே⁴ ஷண்ணவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading