யாதவப் படையின் மகரவியூகம்; தானவர் நகர முற்றுகை; பிரத்யும்னன் செய்த ஏற்பாடு; ஷட்புரத்துக்குள் நுழைதல்; பிரம்மதத்தரைத் தேற்றிய பிரத்யும்னன்–
வைஷ²ம்பாயந உவாச
முஹூர்தாப்⁴யுதி³தே ஸூர்யே ஜநசக்ஷுஷி நிர்மலே |
ப³ல꞉ க்ருஷ்ண꞉ ஸாத்யகிஷ்²ச தார்க்ஷ்யமாருருஹுஸ்ததா³ ||2-84-1
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மக்களின் பார்வைக்குள் தெளிந்த சூரியன் வந்த கணத்திற்குள் பலதேவன், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் தார்க்ஷியனின் {கருடனின்} முதுகில் மகிழ்ச்சியுடன் ஏறினர்.
ப³த்³த⁴கோ³தா⁴ங்கு³லித்ராணா த³ம்ஷி²தா யுத்³த⁴காங்க்ஷிண꞉ |
பி³ல்வோத³கேஷ்²வரம் தே³வம் நமஸ்க்ருத்ய ஸுரோத்தமம் ||2-84-2
போரிடும் விருப்பம் உள்ள அந்த வீரர்கள் {மூவரும்}, உடும்புத் தோலுறைகள், கவசம், விரலுறைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு வில்வ இலைகளுக்கும், நீருக்கும் தலைவனான {வில்வோதகனான} சிவ தேவனை வழிபட்டனர்.
ஆவர்தயா ஜலே ஸ்நாத்வா ருத்³ரேண வரத³த்தயா |
க³ங்கா³யா꞉ குருஷா²ர்தூ³ல ருத்³ரவாக்யேந புண்யயா ||2-84-3
ஓ! குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.
ப்ரத்³யும்நமக்³ரே ஸைந்யஸ்ய வியதி ஸ்த்²பாய மாநத³꞉ |
ரக்ஷார்த²ம் யஜ்ஞவாடஸ்ய பாண்ட³வாந்விநியுஜ்ய ச ||2-84-4
கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி}
ஷே²ஷாம் ஸேநாம் கு³ஹாத்³வாரி ப⁴க³வாந்விநியுஜ்ய ச |
ஜயந்தமத² ஸஸ்மார ப்ரவரம் ச ஸதாம் க³தி꞉ ||2-84-5
எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்
தாவாபேததுரேவாத² ஸ்வயம் சாபஷ்²யதாம் ததா² |
வியத்யேவ நியுக்தௌ தௌ ப்ரத்³யும்ந இவ பா⁴ரத ||2-84-6
ஓ! பரதனின் வழித்தோன்றலே, {அவன் அவ்வாறு} நினைத்த உடனேயே அவர்களும் அங்கே வந்தனர். அந்தத் தலைவனால் {கிருஷ்ணனால்} மட்டுமே அவர்களைக் காண முடிந்தது, அவர்கள் பிரத்யும்னனுக்கு மேல் {ஆகாயத்தில்} நிறுத்தப்பட்டனர்.
தத꞉ க்ருஷ்ணஸ்ய வசநாதா³ஹதோ ரணது³ந்து³பி⁴꞉ |
ஜலஜா முரஜாஷ்²சைவ வாத்³யாந்யேவாபராணி ச ||2-84-7
கிருஷ்ணனின் ஆணையின் பேரில், போருக்கான பேரிகையும், ஜலஜம் {சங்கு}, முரஜம் {முரசு} ஆகியனவும், பிற இசைக் கருவிகளும் முழக்கப்பட்டன.
மகரோ ரசிதோ வ்யூஹ꞉ ஸாம்பே³ந ச க³தே³ந ச |
ஸாரணஷ்²சோத்³த⁴வஷ்²சைவ போ⁴ஜோ வைதரணஸ்ததா² ||2-84-8
ஓ!பரதனின் வழித்தோன்றலே, சாம்பனும், கதனும் படைவீரர்களை மகர வடிவத்தில் {மகர வியூகத்தில்} அணிவகுக்கச் செய்தனர். சாரணன், உத்தவன், போஜ குலத்தைச் சேர்ந்த வைதரணன்,
அநாத்⁴ருஷ்டிஷ்²ச த⁴ர்மாத்மா ப்ருது²ர்விப்ருது²ரேவ ச |
க்ருதவர்மா ச த³ம்ஷ்ட்ரஷ்²ச நிசக்ஷுரரிமர்த³ந꞉ ||2-84-9
அறம்சார்ந்தவனான அனாதிருஷ்டி, விப்ருது, பிருது, கிருதவர்மன், தங்ஷ்டரன், பகைவரைக் கலங்கடிப்பவனான நிசக்ஷு,
ஸநத்குமாரோ த⁴ர்மாத்மா சாருதே³ஷ்ணஷ்²ச பா⁴ரத |
அநிருத்³த⁴ஸஹாயௌ தௌ ப்ருஷ்டா²நீகம் ரரக்ஷது꞉ ||2-84-10
அறம் சார்ந்த சனத்குமாரன், சாருதேஷ்ணன் ஆகியோர் அனிருத்தனுக்கு உதவத் தொடங்கி, படையின் பின் பகுதியைப் பாதுகாத்தனர்.
ஷே²ஷா யாத³வஸேநா து வ்யூஹமத்⁴யே வ்யவஸ்தி²தா |
ரதை²ரஷ்²வைர்நரைர்நாகை³ராகுலா குலவர்த⁴ந ||2-84-11
ஓ! குலத்திற்குப் புகழ் சேர்ப்பவனே {ஜனமேஜயனே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், மனிதர்களையும் உள்ளடக்கிய {ரத கஜ துரகப் பதாதி கலந்த} யாதவப் படையின் எஞ்சிய பகுதி போர் வியூகத்தின் மத்தியில் நின்றிருந்தது.
ஷட்புராத³பி நிஷ்க்ராந்தா தா³நவா யுத்³த⁴து³ர்மதா³꞉ |
ஆருஹ்ய மேக⁴நாதா³ம்ஷ்²ச க³ர்த³பா⁴நபி ஹஸ்திந꞉ ||2-84-12
தானவர்களும், மேகங்களின் இடியொலியைப் போல முழங்கிக் கொண்டு, கழுதைகள், யானைகள் ஆகியவற்றில் ஏறி ஷட்புரத்தைவிட்டு வெளியே வந்தனர்.
மகராஞ்சி²ஷு²மாராம்ஷ்²ச த்³ருதாநபி ச பா⁴ரத |
மஹிஷாநபி க²ட்³கா³ம்ஷ்²ச உஷ்ட்ராநபி ச கச்ச²பாந் ||2-84-13
அவர்களில் சிலர் முதலைகள், முயல்கள், குதிரைகள், எருமைகள், சிங்கங்கள், ஆமைகள் ஆகியவற்றில் வந்தனர்.
ஏதைரேவ ரதை²ர்யுக்தா விவிதா⁴யுத⁴பாணய꞉ |
கிரீடாபீட³முகுடைரங்க³தை³ரபி மண்டி³தா꞉ ||2-84-14
பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களும், கிரீடம், ஆபீடம், மகுடம், அங்கதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பயங்கரர்களுமான அவர்களின் தேர்கள் பலவும் அவ்விலங்குகளாலேயே இழுக்கப்பட்டன.
நாநர்த³மாநைர்விவிதை⁴ஸ்தூர்யைர்நேமிஸ்வநாகுலை꞉ |
ப்ரத்⁴மாயமாநை꞉ ஷ²ங்கை²ஷ்²ச மஹாம்பு³த³ஸமஸ்வநை꞉ ||2-84-15
ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் தேவ படைக்குத் தலைமையேற்று வெளிப்படுவதைப் போலவே, நிகும்பனும் அசுரப் படைக்குத் தலைமையேற்று
தாஸாமஸுரஸேநாநாமுத்³யதாநாம் ஜநேஷ்²வர |
நிகும்போ⁴ நிர்யயாவக்³ரே தே³வாநாமிவ வாஸவ꞉ ||2-84-16
மேகவொலி போன்ற பேரிகை முழக்கத்தையும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பு ஒலிகளையும் உண்டாக்கியவாறு சங்குகளையும் முழக்கிக் கொண்டு வெளிப்பட்டான்
பூ⁴மிம் த்³யாம் ச வவ்ருதி⁴ரே தா³நவாஸ்தே ப³லோத்கடா꞉ |
நத³ந்தோ விவிதா⁴ந்நாதா³ந்க்ஷ்வேட³ந்தஷ்²ச புந꞉ புந꞉ ||2-84-17
அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், பல்வேறு வகைகளில் முழக்கங்களையும், சிங்க முழக்கங்களையும் செய்து, வானத்தையும், பூமியையும் அவ்வொலியால் நிறைத்தனர்.
ராஜஸேநாபி ஸம்யத்தா சேதி³ராஜபுரோக³மா |
அஸுராணாம் ஸஹாயார்த²ம் நிஷ்²சிதா ஜநமேஜய ||2-84-18
ஓ! ஜனமேஜயா, சேதி நாட்டுப் படைவீரர்களும், பிற மன்னர்களின் படைவீரர்களும் பெருங்கவனத்துடன் அசுரர்களுக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தனர்
து³ர்யோத⁴நம் ப்⁴ராத்ருஷ²தம் சேதி³ராஜாநுஜாக்³ரக³ம் |
ஸ்தி²தம் ரதை²ர்நரவ்யாக்⁴ர க³ந்த⁴ர்வநக³ரோபமை꞉ ||2-84-19
ஓ! வீர மன்னா, துரியோதனனால் தலைமை தாங்கப்பட்ட நூறு சகோதரர்களும், பெருஞ்சடசடப்பொலியை உண்டாக்குபவையும், கந்தர்வ நகரத்தைப் போன்றவையும் {போன்று பெரியவையும்}, வேகமாகச் செல்லக்கூடியவையுமான தங்கள் தேர்களில் சேதி மன்னன் சிசுபாலனின் தொண்டர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர்.
கடி²நா நாதி³நோ வீரா த்³ருபத³ஸ்யந்த³நாஸ்ததா² |
ருக்மீ சைவாஹ்வ்ருதிஷ்²சைவ தஸ்த²துர்நிஷ்²சிதௌ ரணே |
தாலவ்ருக்ஷப்ரதீகாஷே² து⁴ந்வாநௌ த⁴நுஷீ ஷு²பே⁴ || 2-84-20
ருக்மியும், ஆஹ்விருதியும் பனை மரங்களைப் போன்றிருந்த தங்கள் அழகிய விற்கள் இரண்டையும் அசைத்துக் கொண்டு தங்கள் மனத்தைப் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்
ஷ²ல்யஷ்²ச ஷ²குநிஷ்²சோபௌ⁴ ப⁴க³த³த்தஷ்²ச பார்தி²வ꞉ |
ஜராஸம்த⁴ஸ்த்ரிக³ர்தஷ்²ச விராடஷ்²ச ஸஹோத்தர꞉ ||2-84-21
யுத்³தா⁴ர்த²முத்³யதா வீரா நிகும்பா⁴த்³யா ஜயைஷிண꞉ |
யுயுத்ஸமாநா யது³பி⁴ர்தே³வைரிவ மஹாஸுரா꞉ ||2-84-22
யாதவர்களுடன் போரிட்டு வெற்றியடையும் நோக்குடன் மன்னன் பகதத்தன், சல்யன், சகுனி, ஜராசந்தன், திரிகர்த்தன், விராடன், உத்தரன் ஆகியோரும், நிகும்பனின் தலைமையிலான அசுரர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.(21,22)
ததோ நிகும்ப⁴꞉ ஸமரே ஷ²ரைராஷீ²விஷோபமை꞉ |
மமர்த³ ஸமரே ஸேநாம் பை⁴மாநாம் பீ⁴மத³ர்ஷ²நாம் ||2-84-23
போரில் நிகும்பன் பாம்புகளைப் போன்ற கணைகளால் பைமர்களின் பயங்கரப் படையைத் தாக்கத் தொடங்கிய போது, யது படையின் தலைவனான ஆனாதிருஷ்டியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
ஸேநாபதிரநாத்⁴ருஷ்டிர்மம்ருஷே தத்ர யாத³வ꞉ |
மமர்த³ கோ⁴ரைர்பா³ணௌகை⁴ஷ்²சித்ரபுங்கை²꞉ ஷி²லாஷி²தை꞉ ||2-84-24
அவனும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளால் பகைவரின் படையினரைக் கொல்லத் தொடங்கினான்
ந ரதோ²(அ)ஸுரமுக்²யஸ்ய த³த்³ருஷே² ந ச வாஜிந꞉ |
ந த்⁴வஜோ ந நிகும்ப⁴ஸ்து ஸர்வே பா³ணாபி⁴ஸம்வ்ருதா꞉ ||2-84-25
கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் நிகும்பனும் புலப்படவில்லை, அவனது தேரும், கொடிமரமும், குதிரைகளும் புலப்படவில்லை.
ஸ பரீத்ய ததோ வீரோ நிகும்போ⁴ மாயிநாம் வர꞉ |
அஸ்தம்ப⁴யத³நாத்⁴ருஷ்டிம் மாயயா பை⁴மஸத்தமம் ||2-84-26
மாய சக்தி படைத்தோரில் முதன்மை வீரனான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அவன் தன் மாய சக்திகளின் மூலம் பைமத் தலைவன் ஆனாதிருஷ்டியைக் கலங்கடித்தான்
ஸ்தம்ப⁴யித்வாநயத்³வீரம் கு³ஹாம் ஷட்புரஸம்ஜ்ஞிதாம் |
ருத்³த்⁴வா சாப்⁴யக³மத்³வீரோ மாயாப³லமுபாஷ்²ரித꞉ ||2-84-27
வீரமிக்க நிகும்பன், தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி ஆனாதிருஷ்டியை மயக்கமடையச் செய்து, ஷட்புரம் என்ற பெயரைக் கொண்ட குகைக்கு அவனைக் கொண்டு சென்று அங்கே அவனைச் சிறையிலடைத்தான். மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பிய அவன்
புநரேவ நிகும்ப⁴ஸ்து க்ருதவர்மாணமாஹவே |
அநயச்சாருதே³ஷ்நம் ச போ⁴ஜம் வைதரணம் ததா² ||2-84-28
ஸநத்குமாரம்ருக்ஷம் ச ததை²வ நிஷ²டோ²ல்குலௌ |
ப³ஹூம்ஷ்²சைவாபராந்போ⁴ஜாந்மாயாப³லஸமாஷ்²ரித꞉ ||2-84-29
தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி, கிருதவர்மன், சாருதேஷ்ணன், போஜகுலத்தின் வைதர்ணன், சனத்குமாரன், ஜாம்பவதியின் மகனான ருக்ஷன், {பலராமனின் மகன்களான} நிசடன், உல்முகன் ஆகியோரையும், இன்னும் எண்ணற்ற யாதவர்கள் பிறரையும் அங்கே {அந்தக் குகைக்குக்} கொண்டு சென்றான்.(28,29)
ந தஸ்ய த³த்³ருஷே² தே³ஹோ மாயாச்ச²ந்நோ ஜநேஷ்²வர |
நயதோ யாத³வாந்கோ⁴ராந்கு³ஹாம் ஷட்புரஸம்ஜ்ஞிதாம் ||2-84-30
ஓ! மன்னா, அவன் ஷட்புரத்தின் பயங்கரக் குகைக்கு யாதவர்களைக் கொண்டு சென்ற போது, தன்னை எவராலும் காண முடியாத படிக்கு மாயாசக்தியால் மறைத்துக் கொண்டான்.
தத்³த்³ருஷ்ட்வா கத³நம் கோ⁴ரம் பை⁴மாநாம் ப⁴யவர்த⁴ந꞉ |
சுகோப ப⁴க³வாந்க்ருஷ்ணோ ப³ல꞉ ஸத்யக ஏவ ச ||2-84-31
பைமர்களின் பயங்கரப் படுகொலையைக் கண்ட தலைவன் கிருஷ்ணன், பலதேவன், சாத்யகி ஆகியோர் கோபமடைந்தனர்,
ஸவிஷே²ஷம் யதா²காம꞉ ஸாம்ப³ஷ்²ச பரவீரஹா |
அநிருத்³த⁴ஷ்²ச து³ர்த⁴ர்ஷோ பை⁴மாஷ்²ச ப³ஹவோ(அ)பரே ||2-84-32
பகை வீரர்களைக் கொல்பவனான சாம்பன், தடுக்கப்பட முடியாதவனான அனிருத்தன் ஆகியோரும், எண்ணற்ற பைமர்கள் பிறரும், குறிப்பாகப் பிரத்யும்னனும் பெருங்கோபத்தில் நிறைந்தனர்.
தத꞉ ஷா²ர்ங்கா³யுத⁴꞉ ஷா²ர்ங்க³ம் க்ருத்வா ஸஜ்யம் நரேஷ்²வர |
தா³நவேஷு ப்ரவ்ருத்தேஷு த்ருணேஷ்விவ ஹுதாஷ²ந꞉ ||2-84-33
அப்போது, ஓ! மன்னா, சாரங்கபாணி (கிருஷ்ணன்), தன் சாரங்க வில்லில் நாண் பூட்டிக் கணைகளை ஏவியவாறே நெருப்பின் தேவன் {அக்னி} புற்களில் திரிவதைப் போல அந்தத் தானவர்களின் மத்தியில் திரிந்தான்.
தம் த்³ரூஷ்ட்வா தா³நவா தே³வமபி⁴து³த்³ருவுரீஷ்²வரம் |
ஷ²லபா⁴꞉ காலபாஷா²ர்தா꞉ ப்ரதீ³ப்தமிவ பாவகம் ||2-84-34
தானவர்கள், எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல யமனின் பாசக்கயிற்றால் இழுக்கப்பட்டவர்களாக அந்தப் பிரகாசமிக்கத் தேவனை நோக்கி ஓடினர்.
ஸமுத்ஸ்ருஜ்ய ஷ²தக்⁴நீஷ்²ச பரிகா⁴ம்ஷ்²ச ஸஹஸ்ரஷ²꞉ |
ஷூ²லாநி சாக்³நிதுல்யாநி ப்ரதீ³ப்தாம்ஷ்²ச பரஷ்²வதா⁴ந் ||2-84-35
பர்வதாக்³ராணி வ்ருக்ஷாம்ஷ்²ச கோ⁴ராஷ்²ச விபுலா꞉ ஷி²லா꞉ |
உத்க்ஷிப்ய ச க³ஜாந்மத்தாந்ரதா²நபி ஹயாநபி ||2-84-36
அவர்கள், ஆயிரக்கணக்கான சதக்னிகள், பரிகங்கள், நெருப்பைக் கக்கும் சூலங்கள், எரியும் கோடரிகள், பயங்கரப் பாறைகள், பெருங்கற்கள் ஆகியவற்றை எடுத்தனர், மதங்கொண்ட யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் தூக்கி வீசினர்[இங்கே கிருஷ்ணன் பயன்படுத்தியது சாரங்க வில்லை மட்டும்தான்.].(35,36)
நாராயணாக்³நிஸ்தாந்ஸர்வாந்த³தா³ஹ ப்ரஹஸந்நிவ |
பா³ணார்சிஷா மஹாதேஜா ஜக³த்³தி⁴தகரோ ஹரி꞉ ||2-84-37
எனினும், ஓ! வீரா, நாராயண நெருப்பில் அனைத்தும் எரிந்தன. பெரும் பிரகாசமிக்கவனும், உலகுக்கு நன்மை செய்பவனுமான அந்த யது குலத் தலைவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே தன் கணைகளின் நெருப்பால் அவர்கள் அனைவரையும் கலங்கடித்தான்.
ஷா²ரத³ம் வர்ஷணம் யத்³வத்ஸேஹே தீ⁴ரோ க³வாம் பதி꞉ |
தத்³வத்³யது³வ்ருஷ꞉ ஸேஹே பா³ணவர்ஷமரிந்த³ம꞉ ||2-84-38
கூதிர் கால மழைப்பொழிவால் துன்புறும் காளையைப் போலவே அவன் அவர்களின் கணைமாரியைப் பொறுத்துக் கொண்டான்.
ந ஸேஹிரே(அ)ஸுரா பா³ணாந்நாராயணத⁴நுஷ்²ச்யுதாந் |
வர்ஷம் பர்ஜந்யவிஹிதம் வாலுகாஸேதவோ யதா² ||2-84-39
இவ்வாறே அந்தப் போர் சிறிது நேரம் தொடர்ந்தபோது மழையைத் தாக்குப்பிடிக்கமுடியாத மண் அணையைப் போல நாராயணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளை அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை
ந ஷே²கு꞉ ப்ரமுகே² ஸ்தா²தும் க்ருஷ்ணஸ்யாஸுரஸத்தமா꞉ |
வ்யாதி³தாஸ்யஸ்ய ஸிம்ஹஸ்ய வ்ருஷபா⁴ இவ பா⁴ரத ||2-84-40
ஓ! பரதனின் வழித்தோன்றலே, அகலத்திறந்த வாயுடன் கூடிய சிங்கத்தின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை[“அகலத்திறந்த ஐந்து வாய்களுடன் கூடிய சிவதேவனின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை”]
தே வத்⁴யமாநா꞉ க்ருSணேந தி³வமாசக்ரமுஸ்ததா³ |
ஜீஇவிதாஷா²ம் வஹந்தஸ்து நாராயணப⁴யார்தி³தா꞉ ||2-84-41
தாநாகாஷ²க³தாநைந்த்³ரிர்ஜயந்த꞉ ப்ரவரஸ்ததா² |
நிஜக்⁴நது꞉ ஷ²ரைர்கோ⁴ரைர்ஜ்வலிதார்சிஸமை꞉ ப்ரபோ⁴ ||2-84-42
ஓ! ஜனமேஜயா, நாராயணனான கிருஷ்ணனால் இவ்வாறு கொல்லப்பட்டபோது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்கள் வானத்தில் உயர எழுந்தனர். ஓ! தலைவா, அவர்கள் வானில் எழுந்தவுடனேயே ஜயந்தனும், பிரவரனும் நெருப்பு போல எரியும் கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(41,42)
நிபேதுரஸுராணாம் து ஷி²ராம்ஸி த⁴ரணீதலே |
த்ருணராஜப²லாநீவ முக்தாநி ஷி²க²ராத்தரோ꞉ ||2-84-43
அந்த நேரத்தில் அசுரர்களின் தலைகள் மரத்தில் இருந்து விழும் பனங்கனிகளைப் போலப் பூமியில் விழுந்தன.
நிபேதுர்பா³ஹவஷ்²சி²ந்நா꞉ தை³த்யாநாம் வஸுதா⁴தலே |
காலேநோபஹதா வீரா꞉ பஞ்சவக்த்ரா இவோரகா³꞉ ||2-84-44
காலனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் கரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.
ரௌக்மிணேயஸ்தத꞉ ஸ்ருஷ்ட்வா கோ⁴ராம் மாயாமயீம் கு³ஹாம் |
அத்³ருஷ்²யநிஷ்க்ரமம் வீர꞉ க்ஷத்ரம் ப்ரக்ஷேப்துமுத்³யத꞉ ||2-84-45
ருக்மிணியின் அறம்சார்ந்த வீரமகன் {பிரத்யும்னன்}, மேலும் க்ஷத்திரியக் கூட்டத்தை வெளிவர விடாமல் அழிப்பதற்காக வாயில் புலப்படாத மற்றுமொரு பயங்கரக் குகையை உண்டாக்கிவிட்டு
க³தே³நா ஸஹ த⁴ர்மாத்மா ஸாரணேந ஸுதேந ச |
ஸாம்பே³ந சபரைஷ்²சாபி பூர்வம் யேந ப்ரவேஷி²த꞉ ||2-84-46
கதன், சாரணன், சுதன் {தன் மகன் அனிருத்தன்}, சாம்பன் ஆகியோருடனும், பிற வீரர்களுடனும் அதே குகையின் வழியிலேயே யாரும் காணாமல் வெளியே வந்தான்
ப்ரமத்²ய தரஸா கர்ணம் யதந்தம் ரணமூர்த⁴நி |
ஜக்³ராஹ ப³லவாந்கார்ஷ்ணி꞉ ப்ரஸ்பு²ரந்தம் ததஸ்தத꞉ ||2-84-47
கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைப் பிடித்து அந்தப் பயங்கரக் குகையில் அடைத்தான்[“கிருஷ்ணன் மகன் பலவான் ப்ரத்யும்னன் பின் போர் முன்னணியில் அங்குமிங்கும் துள்ளும் கர்ணனைப் பிடித்துக் கோரமான மாயக் குகையில் கோஷமிட்டுக் கொண்டு வைத்தான்”].
விநத்³ய ச கு³ஹாம் வீரோ கோ⁴ராம் மாயாமயீம் ந்ருப |
து³ர்யோத⁴நம் ச ராஜாநம் விராடத்³ருபதா³வபி ||2-84-48
அதன்பிறகு அவன், ஓ! மன்னா, தன் சிங்க முழக்கத்தால் குகையை எதிரொலிக்கச் செய்தபடியே மன்னன் துரியோதனன், விராடன், துருபதன்,
ஷ²குநிம் சைவ ஷ²ல்யம் ச நீலம் சாபி நதீ³ஸுதம் |
விந்தா³நுவிந்தௌ³ ராஜாநௌ ஜராஸம்த⁴ம் ச பா⁴ரத ||2-84-49
சகுனி, சல்யன், நீலன், பீஷ்மர், விந்தன், அனுவிந்தன், ஜராசந்தன்,
த்ரிக³ர்தாந்மாலவாம்ஷ்²சைவ வாஸந்த்யாம்ஷ்²ச மஹாப³லாந் |
த்⁴ருஷ்டத்³யும்நாதி³காம்ஷ்²சைவ பாஞ்சாலாநஸ்த்ரகோவிதா³ந் ||2-84-50
திரிகர்த்த, மாளவ மன்னர்கள், பெருஞ்சக்திவாய்ந்த வாசால்யர்கள், திருஷ்டத்யும்னன், ஆயுதப் பயன்பாட்டை அறிந்தவர்களான பாஞ்சால நாட்டின் பிற இளவரசர்கள்,
ததா²(ஆ)ப்⁴ருதிமுவாசேத³ம் மாதுலம் ருக்மிமேவ ச |
ஷி²ஷு²பாலம் ச ராஜாநம் ப⁴க³த³த்தம் ச பா⁴ரத ||2-84-51
ஆஹ்விருதி, தன் மாமனான ருக்மி, பேரரசன் சிசுபாலன், பகதத்தன் ஆகியோரை அழைத்து அவர்களிடம்
ஸம்ப³ந்த⁴ம் ச கு³ருத்வம் ச மாநயாமி நராதி⁴பா꞉ |
கு³ஹாமிமாம் கோ⁴ரரூபாம் யத்ர ப்ரக்ஷேபயாமி வ꞉ ||2-84-52
“ஓ! மன்னர்களே, மேன்மையான உங்கள் நிலையையும், என்னுடன் நீங்கள் கொண்ட உறவுமுறையையும் கருத்தில் கொண்டே நான் உங்களை இந்தப் பயங்கரக் குகைக்குள் தள்ளாமல் இருக்கிறேன்[“உங்களுடன் ஸம்பந்தத்தையும், பெருமையையும் மதிக்கிறேன். இந்தக் கோரரூப குகையில் உங்களை வைக்கிறேன். புத்திமான், சூலந்தரித்த வில்வோத ஈஸ்வரனால் உன்னால் அவ்வரசர்கள் குகையில் வைக்கத்தக்கவர்கள் என்று நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன்”].
பி³ல்வோத³கேஷ்²வரேணாஹமாஜ்ஞப்த꞉ ஷூ²லபாணிநா |
ப்ரக்ஷேப்தவ்யா நரேந்த்³ராஸ்தே கு³ஹாயாமிதி தீ⁴மதா ||2-84-53
நுண்ணறிவுமிக்கவனும், திரிசூலபாணியும், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனான தேவனே {வில்வோதகனே / சிவனே}, உங்கள் அனைவரையும் இந்தக் குகைக்குள் தள்ளுமாறு எனக்கு ஆணையிட்டிருக்கிறான்.
ஆஷ்²ரித்ய ஷா²ம்ப³ரீம் மாயாம் நிகும்பே⁴ந மஹாத்மநா |
ப்ரக்ஷிப்தாந்யாத³வாம்ஷ்²சைவ மோக்ஷயிஷ்யாமி ஸர்வதா² ||2-84-54
பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பனின் சம்பரி மாயை {சம்பர மாயை} மூலம் சிறையிலிடப்பட்டிருக்கும் யாதவர்களை விடுவிக்க என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக நான் முயற்சிப்பேன்” என்றான் {பிரத்யும்னன்}.
இத்யுக்தோ ஷி²ஷு²பாலஸ்து ராஜா ஸேநாபதிஸ்ததா² |
ஷ²ரைஸ்ததர்த³ தாந்பை⁴மாந்ப்ரத்³யும்நம் ச விஷே²ஷத꞉ ||2-84-55
இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னர்களின் படைத்தலைவனான சிசுபாலன், பைமர்களை, குறிப்பாகப் பிரத்யும்னனைக் கணைகளால் தாக்கினான்.
பி³ல்வோத³கேஷ்²வரம் தே³வம் ரௌக்மிணேயோ நமஸ்ய ச |
ஆரப⁴ந்ந்ருபதிம் ப³த்³து⁴ம் ஷி²ஷு²பாலம் மஹாப³லம் ||2-84-56
அப்போது ருக்மிணியின் மகன் சிவனை வணங்கிவிட்டுப் பேரரசன் சிசுபாலனைக் கட்டத் தொடங்கினான்.
தத꞉ பாஷ²ஸஹஸ்ராணி க்³ருஹாய ப்ரவரோத்தம꞉ |
ஷை²லாதி³ரப்³ரவீத்³தீ⁴ரம் ரௌக்மிணேயம் மஹாப³லம் ||2-84-57
அதேவேளையில், சிவகணங்களில் முதன்மையான நந்தி, ஆயிரக்கணக்கான பாசக்கயிறுகளை எடுத்துக் கொண்டு அங்கே வந்து, பெருஞ்சக்திவாய்ந்தவனும், வீரனுமான ருக்மிணியின் மகனிடம் {பிரத்யும்னனிடம்},
பி³ல்வோத³கேஷ்²வரோ தே³வ꞉ ப்ராஹ த்வாம் யது³நந்த³ந |
ஸர்வம் குரு ததா² ராத்ர்யாம் சோக்தஸ்த்வம் போ⁴ யத² மயா ||2-84-58
“ஓ! யதுவின் வழித்தோன்றலே, வில்வோதகேஷ்வரன் (சிவன்) உன்னிடம் இரவில் சொன்னதைச் செய்யுமாறு உனக்கு ஆணையிட்டிருக்கிறார்
கந்யார்த²ம் ரத்நலுப்³தா⁴ம்ஸ்து ப³த்³த்⁴வா சேமாந்நராதி⁴பாந் |
பாஷை²ஸ்த்வமேவ மோக்தும் ச ப்ரமாணம் யது³நந்த³ந ||2-84-59
கன்னியருக்கான கையூட்டாக ரத்தினங்களைப் பெற்றுக் கொண்ட இந்த மன்னர்களைப் பாசக்கயிறுகளில் கட்டுவாயாக. {பின்னர்} அவர்களை விடுவிக்கும் அதிகாரமும் உனக்குண்டு
அஸுராம்ஸ்து மஹாபா³ஹோ நி꞉ஷே²ஷாந்கர்துமர்ஹஸி |
ஏவமேவ ச வக்தவ்யஸ்த்வயா வீர ஜநார்த³ந꞉ ||2-84-60
ஓ! வீரா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, அசுரர்களில் ஒருவரையும் விடாமல் ஒழிப்பாயாக. இந்தச் செய்தியை ஜனார்த்தனனுக்குச் சொல்வாயாக” என்றான்
தத꞉ ஸ ப⁴க³த³த்தம் ச ஷி²ஷு²பாலம் ச பூ⁴மிப |
ஆப்⁴ருதிம் சைவ ருக்மிம் ச ஷே²ஷாம்ஷ்²சாந்யாந்நராதி⁴பாந் ||2-84-61
ப³ப³ந்த⁴ ஹரத³த்தைஸ்தை꞉ பாஷை²ருத்தமவீர்யத்⁴ருக் |
மாயாமயீம் கு³ஹாம் சைவமாநயத்குருநந்த³ந ||2-84-62
அதன்பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, ஓ! குருவின் வழித்தோன்றலே, பாம்புகளைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மன்னன் பகதத்தன், சிசுபாலன், ஆஹ்வதி, ருக்மி ஆகியோரையும், பிற மன்னர்களையும் ஹரனால் கொடுக்கப்பட்ட பாசக்கயிறுகளால் கட்டி அவர்கள் அனைவரையும் மாயக் குகைக்கு அழைத்துச் சென்றான்.(61,62)
ப³த்³த்⁴வா ச ரௌக்மிணேயோ(அ)த² நி꞉ஷ்²வஸந்த இவோரகா³ந் |
அநிருத்³த⁴ம் சகாராத² ரக்ஷிதாரம் ஸ்வமாத்மஜம் ||2-84-63
ஓ! பரதனின் வழித்தோன்றலே, யதுவின் வழித்தோன்றலான பிரத்யும்னன், தன் மகன் அனிருத்தனைக் குகைக்குக் காவலாக நிறுத்திவிட்டு,
தேஷாம் நிரவஷே²ஷேண ப³ப³ந்த⁴ யது³நந்த³ந꞉ |
ஸேநாபதீந்க்ஷத்ரியாம்ஷ்²ச கோஷா²த்⁴யக்ஷாம்ஷ்²ச பா⁴ரத ||2-84-64
ஹஸ்த்யஷ்²வரத²வ்ருந்தா³ம்ஷ்²ச சகார ச ததா²(ஆ)த்மஸாத் |
அவ்யக்³ரஸ்து ததோ ஹந்துமஸுராநுத்³யத꞉ ப்ரபோ⁴ ||2-84-65
அந்த க்ஷத்திரியர்களின் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்த படைத்தலைவர்களையும், கருவூலக் காவலர்களையும் சங்கிலிகளில் கட்டினான்.
ஓ! தலைவா, கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அசுரர்களைக் கொல்லத் தயாரானபோது,(64,65)
ஸந்நத்³த⁴ ஏவ சோவாச ப்³ரஹ்மத³த்தம் த்³விஜோத்தமம் |
விஸ்ரப்³த⁴ம் வர்ததாம் கர்ம மா பை⁴꞉ பஷ்²ய த⁴நஞ்ஜயம் ||2-84-66
கவசங்களுடன் கூடிய அவன் {பிரத்யும்னன்}, இரு பிறப்பாளர்களில் முதன்மையான பிரம்மதத்தரிடம், “{வேள்வியைச் செய்வீராக}. தனஞ்சயர் {அர்ஜுனர்} உமக்கு உதவப் போகிறார் என்பதைக் காண்பீராக
ந தே³வேப்⁴யோ நாஸுரேப்⁴யோ நாகே³ப்⁴யோ த்³விஜஸத்தம |
ப⁴யம் ஹி வித்³யதே தஸ்ய கோ³ப்தாரோ யஸ்ய பாண்ட³வா꞉ ||2-84-67
உமக்கு அச்சமேதுமில்லை. உறுதியான இதயத்துடன் உமது பணியைச் செய்வீராக. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்கள் உங்களைப் பாதுகாப்பதில் ஈடுபடும்போது, தேவர்களிடமோ, அசுரர்களிடமோ, வேறு எந்த உயிரினத்திடமோ நீர் அச்சங்கொள்ள வேண்டியதில்லை.
ந சாஸுரைஸ்தவ ஸுதா꞉ ஸ்ப்ருஷ்டா꞉ க²ல்வபி சேதஸா |
யஜ்ஞவாடே நிரீக்ஷ்யந்தாம் மாயயா நிஹித மயா ||2-84-68
அசுரர்களால் உமது மகள்களை மனத்தாலும் தீண்ட இயலவில்லை; என் மாயா சக்திகளால் நான் அவர்களை வேள்விக்களத்தில் வைத்திருப்பதைப் பாரும்” என்றான் {பிரத்யும்னன்}.”
இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ட்புரவதே⁴ சதுரஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply