ஸ்ரீ ஹரி வம்சம்
மஹா பாரதம் –19 பர்வம் தனியாக உள்ளது
புராணம் புரா =நவம் -எத்தை பார்த்தால் வேறே கொன்றை பார்க்க வேண்டாமோ -ப்ரஹ்மம்
கிலம் -மஹா பாரத பகுதி -இணைப்பு -நிறைவு இணைப்பு -பஞ்சம வேதம்
ஹரி வம்சம்
விஷ்ணு பர்வம்
பவிஷ்யத் பர்வம் –5111 வருஷங்களில் இப்பொழுது உள்ளோம் -மேலே
பாரிஜாத கிரஹம் -புத்ர பாக்யம் பலம் –
100 பருவங்கள் உள்ளதாக -தர்மம் அர்த்தம் காமம் வீடு நான்கு புருஷார்த்தங்களும் சொல்லும் எல்லா புராணங்களும் –
ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும்.-மஹாபாரதத்தில் காணப்படாத கிருஷ்ணனுடைய குடும்பக் கதையை விரிவாகச் சொல்வதே ஆசிரியரின் நோக்கம்
ஸூர்ய வம்சம் -புத்திரர் யமன் புத்ரி யமுனை -சரித்திர பாவமும் தத்வார்த்தங்களும் உண்டே இதில்
பகவன் முக விலாசத்துக்காகவே -கீதா உபதேசம் -புராண உபதேசம் செய்தவனுக்கு பக்தி யோக நிஷ்டன் பலம் –
ஜெயதி பராசர ஸூனு–வியாசர் வழங்கிய அமுதம் –
நூறு பசு மாட்டுக்குத் தங்கப்பூண் சமைத்து தானம் வழங்கிய பலம் ஹரி வம்சம் படித்து சொல்பவருக்குக் கிட்டும்
ஹரதி பாபாநி
ராக்ஷஸிகள் திருவடி கண்டு ஹரி ஹரி சொல்ல பிழைத்தார்கள்
24 விசேஷணங்கள் -ஹரிக்கு சொல்லி துவக்கம்
ஆத்யம் -புருஷன்-ஹ்ருதய புரம் வாஸம் -புரு சனோதி -புருஷோத்தமன் -ஆண் அல்லன்
ஈஸாநம் -ஸத்யம் -ருதம் -ஏகாக்ஷரம் -ப்ரஹ்மம்-வ்யக்தா வியக்தம் ஸநாதனம் —
மங்களம் விஷ்ணும் அநகம் சுத்திம் -ஹ்ருஷீகேசன் -சராசர குரும்
சித்தம் -மனஸ் -புத்தி அஹங்காரம் அபிமானம்
நினைத்து -சங்கல்பித்து -உறுதி கொண்டு -நானாக கொண்டோமே -வேறே வேறே அவஸ்தை
பிராணன் -பிராண -அபான – உதான – வியான சமான
ஸ்ருஷ்ட்டி க்ரமம் –
சப்த ரிஷிகள் -மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் வசிஷ்டர்
ஸ்வயம்பு மனு சதரூபா -முதல் தம்பதிகள்
பிரியம் வததன் உத்தான பாதன் -முதல் பிள்ளைகள்
————
ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகிய இருபெரும் குலங்களின் கதையைச் சொல்லுமாறு சௌதியிடம், சௌனகர் வைக்கும் வேண்டுகோளுடன் இந்தப் படைப்புத் தொடங்குகிறது. முதல் அத்தியாயம் ஒன்பதாம் ஸ்லோகத்தில், அவர் {சௌனகர்}, “ஓ! லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, குருக்களின் பிறப்பு மற்றும் வரலாற்றை விளக்குகையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றை உரைக்க நீ மறந்துவிட்டாய். அவர்களின் வரலாற்றை உரைப்பதே உனக்குத் தகும்” என்று கேட்கிறார்.
விஷ்ணு புராணத்தில் இருப்பது போலவே ஹரிவம்சத்திலும், படைப்பின் கதை, பூமியின் பரிமாணம், காலப்பிரிவினை, குல வரலாறுகள் மற்றும் அரசவம்ச வரலாறுகள் ஆகியவற்றை நாம் காணலாம். சில வேளைகளில் அவற்றில் ஒன்று மற்றொன்றின் பொழிப்புரை எனக் கொள்ளும் அளவுக்கு அவை ஒன்றையொன்று ஒத்திருப்பதாகத் தெரிகின்றன. கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்க்கை மற்றும் அவன் செய்த சில அற்புதங்கள் ஆகியன விஷ்ணு புராணத்தில் உள்ளவை போன்றே இருக்கின்றன. இந்தப் படைப்பு புராணங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லையெனினும், இவை ஒவ்வொன்றும் ஒரே நோக்கத்திற்காக, ஒரே பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. மஹாபாரதத்தில் விடுபட்ட பெரும் விபரங்களை அளிப்பதால் இது மஹாபாரதத்தின் தொடர்ச்சி {கிலா} என்று அழைக்கப்படுகிறது.
————
ஆதி³ஸர்க³கத²னம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் – 01 –ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ ஆதி³ஸர்க³கத²னம்
நாராயணம்நமஸ்க்ருத்யநரம்சைவநரோத்தமம்|
தே³வீம்ஸரஸ்வதீம்சைவததோஜயமுதீ³ரயேத்||1||
கணேசனை[1] வணங்குவோம். வேத வியாசரை[2] வணங்குவோம். {ஓம்} நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கி வெற்றி {ஜெயம்} என முழங்குவோம்
த்³வைபாயனோஷ்ட²புடனிb ꞉ஸ்ருதமப்ரமேயம்
புண்யம்பவித்ரமத²பாபஹரம்ஸி²வம்ச|
யோபா⁴ரதம்ஸமதி⁴க³ச்ச²திவாச்யமானம்
கிம்தஸ்யபுஷ்கரஜலைரபி⁴ஷேசனேன||2||
துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து சிந்தியதும், அற்புதமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், மங்கலமானதும், உயர்வானதும், புனிதமானதுமான மஹாபாரதம் ஓதப்படுவதைக் கேட்பவனுக்கு, புனிதத்தலமான(ஆஜ்மீர் மாவட்டம் மார்வாரில் {ஜோத்பூரில்} உள்ள ) புஷ்கரையில்[3] நீராடுவதால் என்ன பயன்?
ஜயதிபராஸ²ரஸூனு꞉ஸத்யவதீஹ்ருத³யனந்த³னோவ்யாஸ꞉|
யஸ்யாஸ்யகமலக³லிதம்வாங்மயமம்ருதம்ஜக³த்பிப³தி||3||
பராசரரின் மகனும், சத்யவதியை மகிழ்ச்சியடையச் செய்பவரும், உலகம் பருகும் சொல்லமுதத்தைச் சொன்ன தாமரை வாய் கொண்டவருமான வியாசர் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்
யோகோ³ஸ²தம்கனகஸ்²ருங்க³மயம்த³தா³தி
விப்ராயவேத³விது³ஷேப³ஹுவிஸ்²ருதாய|
புண்யாம்சபா⁴ரதகதா²ம்ஸ்²ருணுயாச்சதத்³வத்
துல்யம்ப²லம்ப⁴வதிதஸ்யசதஸ்யசைவ||4||
வேதங்களையும், ஸ்ருதிகள் பலவற்றையும் அறிந்த ஒரு பிராமணருக்குத் தங்கக் கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கொடையளிப்பதால் உண்டாகும் அதே கனியை {பலனை} புனிதக் கருப்பொருளுடன் கூடிய மஹாபாரதத்தைக் கேட்பவன் அடைகிறான்.
ஸ²தாஸ்²வமேத⁴ஸ்யயத³த்ரபுண்யம்
சது꞉ஸஹஸ்ரஸ்யஸ²தக்ரதோஸ்²ச|
ப⁴வேத³னந்தம்ஹரிவம்ஸ²தா³னாத்
ப்ரகீர்திதம்வ்யாஸமஹர்ஷிணாச||5||
ஹரிவம்சத்தை {பிரதி எடுத்து} கொடையளிப்பதால், நூறு குதிரை வேள்விகளைச் செய்வதாலோ, வற்றாத உணவுக்கொடையை அளிப்பதாலோ, இந்திரனின் கண்ணியத்தைக் காப்பதாலோ உண்டாவதை விட அதிகமான புண்ணியத்தை ஒரு மனிதன் அடைவான்
யத்³வாஜபேயேனதுராஜஸூயாத்³
த்³ருஷ்டம்ப²லம்ஹஸ்திரதே²னசான்யத்|
தல்லப்⁴யதேவ்யாஸவச꞉ப்ரமாணம்
கீ³தம்சவால்மீகிமஹர்ஷிணாச||6||
வாஜ்பேயம் அல்லது ராஜசூய யாகங்களோ, யானைகளுடன் கூடிய தேர்க்கொடையாலோ கிட்டும் அதே கனியை {பலனை} அளிக்கிறது. வியாசரின் சொல்லே இதற்குச் சான்றாகும், மேலும் முனிவர் வால்மீகியாலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.
யோஹரிவம்ஸ²ம்லேக²யதியதா²விதி⁴னாமஹாதபா꞉ஸபதி³|
ஸஜயதிஹரிபத³கமலம்மது⁴போஹியதா²ரஸேனலுப்³த⁴꞉||7||
ஹரிவம்சத்தை எழுதுவதில் முறையாக ஈடுபடும் பெரும் தவசி, தேனின் மணத்தால் ஈர்க்கப்பட்டுத் தாமரையை நோக்கி நகரும் வண்டைப் போலவே ஹரியின் தாமரைப் பாதத்தை விரைவாக அடைவான்
பிதாமஹாத்³யம்ப்ரவத³ந்திஷஷ்ட²ம்
மஹர்ஷிமக்ஷய்யவிபூ⁴தியுக்தம்|
நாராயணஸ்யாம்ஸ²ஜமேகபுத்ரம்
த்³வைபாயனம்வேத³மஹானிதா⁴னம்||8||
பிரம்மனில் இருந்து ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவரும், நித்திய ஆன்ம மகிமை கொண்டவரும், நாராயணனுடைய ஒரு பகுதியாக {அவதாரமாக} தோன்றியவரும், சுகரை மட்டுமே தமது மகனாகக் கொண்டவருமான துவைபாயனரையே {வியாசரையே} அனைத்திற்கும் மேலான காரணராக நான் கருதுகிறேன்
————————
விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றைச் சொல்லும்படி சௌதியிடம் வினவும் சௌனகர்; ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொன்னதை சௌனகரிடம் சொல்லத் தொடங்கிய சௌதி; படைப்புத் தொடங்கி விருஷ்ணிகளின் கதையை ஜனமேஜயனுக்குச் சொல்லத் தொடங்கிய வைசம்பாயனர்…
ஆத்³யம்புருஷமீஸா²னம்புருஹூதம்புருஷ்டுதம்|
ருதமேகாக்ஷரம்ப்³ரஹ்மவ்யக்தாவ்யக்தம்ஸனாதனம்||1-1-1
அஸச்சஸத³ஸ்ச்சைவயத்³விஸ்²வம்ஸத³ஸத்பரம்|
பராவராணாம்ஸ்ரஷ்டாரம்புராணம்பரமவ்யயம்||1-1-2
மங்க³ல்யம்மங்க³லம்விஷ்ணும்வரேண்யமனக⁴ம்ஸு²சிம்|
நமஸ்க்ருத்யஹ்ருஷீகேஸ²ம்சராசரகு³ரும்ஹரிம்||1-1-3
நைமிஷாரண்யேகுலபதி꞉ஸௌ²னகஸ்துமஹாமுனி꞉|
ஸௌதிம்பப்ரச்ச²த⁴ர்மாத்மாஸர்வஸா²ஸ்த்ரவிஸா²ரத³꞉||1-1-4
அற ஆன்மா கொண்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவரும், பெரும் முனிவருமான குலபதி[1] சௌனகர், புலன்களை ஆள்பவனும், அசையும் மற்றும் அசையாதனவற்றின் ஆசானும், முதல் புருஷனான ஈசானனும், வேள்விகளில் பலரால் துதிக்கப்பட்டு, காணிக்கைகளுடன் தணிக்கப்படுபவனும், உண்மையானவனும், பற்றுகளேதுமற்ற பிரம்மனும், வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், உண்மை, பொய்மைக்கு அப்பாற்பட்டவனும், இந்த அண்டத்தைத் தோன்றச் செய்தவனும், புலப்படுபவனும், புலப்படாதவனும், அனைத்தையும் கடந்தவனும், அனைத்தையும் படைத்தவனும், புராதனனும், சிறந்தவனும், சிதைவற்றவனும், இன்பமே ஆனவனும், இன்பத்தை அளிப்பவனும், விஷ்ணுவாக இருப்பவனும், பாவமற்றவர்களும், தூயவர்களுமான அனைவராலும் வழிபடப்படுபவனுமான ஹரியை வணங்கிய பிறகு, நைமிசக் காட்டில் இருந்த சௌதியிடம் பேசினார்.(1-4)
ஸௌ²னகஉவாச
ஸௌதேஸுமஹதா³க்²யானம்ப⁴வதாபரிகீர்திதம்|
பா⁴ரதானாம்சஸர்வேஷாம்பார்தி²வானாம்ததை²வச||1-1-5
தே³வானாம்தா³னவானாம்சக³ந்த⁴ர்வோரக³ரக்ஷஸாம்|
தை³த்யானாமத²ஸித்³தா⁴னாம்கு³ஹ்யகானாம்ததை²வச||1-1-6
சௌனகர், “ஓ! சௌதி, பாரத வழித்தோன்றல்களின் வரலாற்றையும், வேறு மன்னர்கள், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தைத்தியர்கள், சித்தர்கள் மற்றும் குஹ்யர்களின் வரலாறுகளையும் நீ சொன்னாய்.(5,6)
அத்யத்³பு⁴தானிகர்மாணிவிக்ரமாத⁴ர்மனிஸ்²சயா꞉|
விசித்ராஸ்²சகதா²யோகா³ஜன்மசாக்³ர்யமனுத்தமம்||1-1-7
கதி²தம்ப⁴வதாபுண்யம்புராணம்ஸ்²லக்ஷ்ணயாகி³ரா|
மன꞉கர்ணஸுக²ம்ஸௌதேப்ரீணாத்யம்ருதஸம்மிதம்||1-1-8
தத்ரஜன்மகுரூணாம்வைத்வயோக்தம்லௌமஹர்ஷணே|
நதுவ்ருஷ்ண்யந்த⁴கானாம்சதத்³ப⁴வான்வக்துமர்ஹதி||1-1-9
அற்புதம் நிறைந்த அவர்களது செயல்கள், வீர சாதனைகள், அறப் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பிறப்புகளும் அடங்கிய மிகச் சிறந்த, புனித புராணத்தை இனிய சொற்களில் நீ விளக்கினாய். ஓ! சௌதி, மனத்துக்கும், காதுகளுக்கும் இன்பத்தை அளிப்பதும், அமுதம் போன்ற கருப்பொருளைக் கொண்டதுமான இஃது எங்களுக்கு நிறைவை அளிக்கிறது. ஓ! லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, குருக்களின் பிறப்பு மற்றும் அவர்களின் வரலாற்றை விளக்கும்போது நீ விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின்[2] வரலாற்றைச் சொல்ல மறந்து போனாய். அவர்களுடைய வரலாற்றையும் உரைப்பதே உனக்குத் தகும்” என்று கேட்டார்.(7-9)
ஸௌதிருவாச
ஜனமேஜயேனயத்ப்ருஷ்ட꞉ஸி²ஷ்யோவ்யாஸஸ்யத⁴ர்மவித்|
தத்தே(அ)ஹம்ஸம்ப்ரவக்ஷ்யாமிவ்ருஷ்ணீனாம்வம்ஸ²மாதி³த꞉||1-1-10
சௌதி {சௌனகரிடம்}, “ஜனமேஜயன், வியாசரின் அணுக்கச் சீடரான வைசம்பாயனரிடம் எதைக் கேட்டானோ, அந்த விருஷ்ணிகளின் பிறப்பு குறித்த கதையை நான் உமக்குத் தொடக்கம் முதல் சொல்லப் போகிறேன்.(10)
ஸ்²ருத்வேதிஹாஸம்கார்த்ஸ்ன்யேனபா⁴ரதானாம்ஸபா⁴ரத꞉|
ஜனமேஜயோமஹாப்ராஜ்ஞோவைஸ²ம்பாயனமப்³ரவீத்||1-1-11
பாரத வழித்தோன்றல்களின் முழுமையான வரலாற்றைக் கேட்டவனும், அவர்களின் குலத்தில் பிறந்தவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன், வைசம்பாயனரிடம் கேட்டான்.(11)
ஜனமேஜயஉவாச
மஹாபா⁴ரதமாக்²யானம்ப³ஹ்வர்த²ம்ஸ்²ருதிவிஸ்தரம்|
கதி²தம்ப⁴வதாபூர்வம்விஸ்தரேணமயாஸ்²ருதம்||1-1-12
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பல பொருள்களும், வரலாற்றுக் கதைகளும் நிறைந்த மஹாபாரதத்தை நீர் முழுமையாகச் சொன்னீர்; நானும் அதைக் கேட்டேன்.(12)
தத்ரஸூ²ரா꞉ஸமாக்²யாதாப³ஹவ꞉புருஷர்ஷபா⁴꞉|
நாமபி⁴꞉கர்மபி⁴ஸ்²சைவவ்ருஷ்ண்யந்த⁴கமஹாரதா²꞉||1-1-13
அதில் நீர், விருஷ்ணி மற்றும் அந்தகக் குடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் தேர்வீரர்கள் பலரின் பெயர்களையும், அவர்களது செயல்களையும் குறிப்பிட்டீர்.(13)
தேஷாம்கர்மாவதா³தானித்வயோக்தானித்³விஜோத்தம|
தத்ரதத்ரஸமாஸேனவிஸ்தரேணைவமேப்ரபோ⁴||1-1-14
ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, நீர் அவர்களின் சிறந்த செயல்கள் பலவற்றைச் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னீர்.(14)
நசமேத்ருப்திரஸ்தீஹகத்²யமானேபுராதனே|
ஏகஸ்²சைவமதோராஸி²ர்வ்ருஷ்ணய꞉பாண்ட³வாஸ்ததா²||1-1-15
ப⁴வாம்ஸ்²சவம்ஸ²குஸ²லஸ்தேஷாம்ப்ரத்யக்ஷத³ர்ஸி²வான்|
கத²யஸ்வகுலம்தேஷாம்விஸ்தரேணதபோத⁴ன||1-1-16
இந்தப் புராணக் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், எனக்கு இன்னும் அது தெவிட்டவில்லை. பாண்டவர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஒருவருக்கொருவர் உறவினர்களாவர்; அவர்களின் குடும்பங்களை விவரிக்க நீர் போதுமான தகுதியைப் பெற்றவராகவும், அனைத்தையும் உமது கண்களாலேயே கண்டவராகவும் இருக்கிறீர். எனவே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அவர்களின் குடும்பம் குறித்து விரிவாக விளக்குவீராக.(15,16)
யஸ்யயஸ்யான்வயேயேயேதாம்ஸ்தானிச்சா²மிவேதி³தும்|
ஸத்வம்ஸர்வமஸே²ஷேணகத²யஸ்வமஹாமுனே|
தேஷாம்பூர்வவிஸ்ருஷ்டிம்சவிசிந்த்யேமாம்ப்ரஜாபதே꞉||1-1-17
எவரெவர் எந்தெந்தக் குடும்பங்களில் {குலங்களில்} பிறந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! பெருந்தவசியே, குடிமுதல்வன் {பிரஜாபதி} தொடங்கி, அவர்களின் முந்தைய படைப்புகளை {முற்பிறவிகளை} நினைவுகூர்ந்து, அனைத்தையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(17)
ஸௌதிருவாச
ஸத்க்ருத்யபரிப்ருஷ்டஸ்துஸமஹாத்மாமஹாதபா꞉|
விஸ்தரேணானுபூர்வ்யாம்சகத²யாமாஸதாம்கதா²ம்||1-1-18
சௌதி {சௌனகரிடம்}, “அவனால் வரவேற்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டதும், உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களுடன் கூடியவருமான அந்தத் தவசி {வைசம்பாயனர்}, தொடக்கம் முதல் மொத்த கதையையும் முழுமையாக விளக்கினார்.(18)
வைஸ²ம்பாயனஉவாச
ஸ்²ருணுராஜன்கதா²ம்தி³வ்யாம்புண்யாம்பாபப்ரமோசனீம்|
கத்²யமானாம்மயாசித்ராம்ப³ஹ்வர்தா²ம்ஸ்²ருதிஸம்மிதாம்||1-1-19
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, தெய்வீகமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், அற்புதம் நிறைந்ததும், பல்வேறு பொருட்கள் மற்றும் புனிதக் கதைகள் நிறைந்ததுமான அந்தப் புனித கருப்பொருளை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(19)
யஸ்²சேமாம்தா⁴ரயேத்³வாபிஸ்²ருணுயாத்³வாப்யபீ⁴க்ஷ்ணஸ²꞉|
ஸ்வவம்ஸ²தா⁴ரணம்க்ருத்வாஸ்வர்க³லோகேமஹீயதே||1-1-20
இந்தக் கதையைப் பரப்புபவன், அல்லது தொடர்ந்து கேட்பவன், தன் குடும்பத்தைப் பெருக்கிக் கொள்கிறான், மேலும், தேவ லோகத்திலும் அவன் உயர்வாகப் பேசப்படுகிறான்.(20)
அவ்யக்தம்காரணம்யத்தன்னித்யம்ஸத³ஸதா³த்மகம்|
ப்ரதா⁴னம்புருஷம்தஸ்மான்னிர்மமேவிஸ்²வமீஸ்²வரம்||1-1-21
ஈஸ்வரனால் (கடவுளால்) ஊடுருவப்பட்ட இந்த அண்டமானது, வெளிப்படாத காரணமாக இருப்பவனும், நித்தியனும், இருப்பு மற்றும் இல்லாமையாக ஆனவனுமான பிரதான புருஷனிலிருந்தே எழுந்தது.(21)
தம்வைவித்³தி⁴மஹாராஜப்³ரஹ்மாணமமிதௌஜஸம்|
ஸ்ரஷ்டாரம்ஸர்வபூ⁴தானாம்நாராயணபராயணம்||1-1-22
ஓ! ஏகாதிபதி, அவனை ஒப்பற்ற சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்தவனும், நாராயணனிடம் (விஷ்ணுவிடம்) எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான பிரம்மனாக (படைப்பாளனாக) அறிவாயாக.(22)
அஹங்காரஸ்துமஹதஸ்தஸ்மாத்³பூ⁴தானிஜஜ்ஞிரே|
பூ⁴தபே⁴தா³ஸ்²சபூ⁴தேப்⁴யஇதிஸர்க³꞉ஸனாதன꞉||1-1-23
விஸ்தாராவயவம்சைவயதா²ப்ரஜ்ஞம்யதா²ஸ்²ருதி꞉|
கீர்த்யமானம்ஸ்²ருணுமயாபூர்வேஷாம்கீர்திவர்த⁴னம்||1-1-24
மஹத்தில் இருந்து அஹங்காரம் எழுந்தது; அதனில் இருந்து ஐந்து நுட்பமான பூதங்கள் எழுந்தன; அதனிலிருந்து திரள் பூதங்கள் எழுந்தன; இவ்வாறே படைப்பின் நித்திய தொழில் தொடர்ந்தது. நான் கேட்டது போலவும், நான் நினைப்பது போலவும் முன்னோரின் மகிமையை அதிகரிக்கும் நீண்ட குலவரிசைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(23,24)
த⁴ன்யம்யஸ²ஸ்யம்ஸ²த்ருக்⁴னம்ஸ்வர்க்³யமாயு꞉ப்ரவர்த⁴னம்|
கீர்தனம்ஸ்தி²ரகீர்தீனாம்ஸர்வேஷாம்புண்யகர்மணாம்||1-1-25
நீடிக்கும் மகிமை கொண்ட இந்தப் புண்ணியவான்களின் கதைகள் எப்போதும் பலனையே தந்து, குலப் பெருக்கத்திற்கும், சொர்க்கத்தை அடைவதற்கும் வழிவகுக்கின்றன.(25)
தஸ்மாத்கல்பாயதேகல்ப꞉ஸமக்³ரம்ஸு²சயேஸு²சி꞉|
ஆவ்ருஷ்ணிவம்ஸா²த்³வக்ஷ்யாமிபூ⁴தஸர்க³மனுத்தமம்||1-1-26
இந்தக் கருப்பொருள் கனி நிறைந்ததாக இருப்பதாலும் {பலனளிப்பதன் காரணமாகவும்}, நீ கேட்கத் தகுந்த தூயவனாக இருப்பதாலும், படைப்புகளில் மிகச் சிறந்த விருஷ்ணிகளின் குடும்பத்திலிருந்து தொடங்கி நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(26)
தத꞉ஸ்வயம்பூ⁴ர்ப⁴க³வான்ஸிஸ்ருக்ஷுர்விவிதா⁴꞉ப்ரஜா꞉|
அபஏவஸஸர்ஜாதௌ³தாஸுவீர்யமவாஸ்ருஜத்||1-1-27
பல்வேறு உயிரினங்களைப் படைக்க விரும்பிய தெய்வீக சுயம்பு (பிரம்மன்)[5] முதலில் நீரைப் படைத்து, அதன் பிறகு அதில் வித்துகளையும் படைத்தான்.(27)
ஆபோநாராஇதிப்ரோக்தாஆபோவைநரஸூனவ꞉|
அயனம்தஸ்யதா꞉பூர்வம்தேனநாராயண꞉ஸ்ம்ருத꞉||1-1-28
நீர் என்பது நரனில் இருந்து உண்டானதால் நாரம் என்றழைக்கப்படுகிறது. தேவன் முதலில் அதில் ஓய்ந்திருந்ததால் நாராயணன் என்றழைக்கப்படுகிறான்.(28)
ஹிரண்யவர்ணமப⁴வத்தத³ண்ட³முத³கேஸ²யம்|
தத்ரஜஜ்ஞேஸ்வயம்ப்³ரஹ்மாஸ்வயம்பூ⁴ரிதிந꞉ஸ்²ருதம்||1-1-29
நீரில் கிடந்த முட்டை தங்க நிறத்தை ஏற்றது. அதில் இருந்து பிரம்மன் தானாகவே எழுந்ததான், (எனவே) அவன் சுயம்பு என்றழைக்கப்பட்டான்.(29)
ஹிரண்யக³ர்போ⁴ப⁴க³வானுஷித்வாபரிவத்ஸரம்|
தத³ண்ட³மகரோத்³த்³வைத⁴ம்தி³வம்பு⁴வமதா²பிச||1-1-30
பல வருடங்கள் அங்கே வாழ்ந்த தெய்வீக ஹிரண்யகர்ப்பன், அந்த முட்டையை இரண்டாகப் பிரித்தான் {பிரித்து வெளியே வந்தான்}, அவை சொர்க்கம் {வானம்} என்றும், பூமி {நிலம்} என்றும் அழைக்கப்படலாயிற்று.(30)
தயோ꞉ஸ²கலயோர்மத்⁴யேஆகாஸ²மஸ்ருஜத்ப்ரபு⁴꞉|
அப்ஸுபாரிப்லவாம்ப்ருத்²வீம்தி³ஸ²ஸ்²சத³ஸ²தா⁴த³தே⁴||1-1-31
அந்த இரு பகுதிகளுக்கிடையில், ஆகாயம், அல்லது வெளியையும், நீரில் மிதக்கும் பூமியையும், பத்து திசைப்புள்ளிகளையும் படைத்தான்.(31)
தத்ரகாலம்மனோவாசம்காமம்க்ரோத⁴மதோ²ரதிம்|
ஸஸர்ஜஸ்ருஷ்டிம்தத்³ரூபாம்ஸ்ரஷ்டுமிச்ச²ன்ப்ரஜாபதீன்||1-1-32
அதன்பிறகு, குடி முதல்வர்கள் {பிரஜாபதிகள்} அல்லது படைப்புத் தலைவர்களைப் படைக்க விரும்பிய அவன், காலம், மனம், வாக்கு, ஆசை, கோபம் மற்றும் விருப்பத்தைப் படைத்தான்.(32)
மரீசிமத்ர்யங்கி³ரஸம்புலஸ்த்யம்புலஹம்க்ரதும்|
வஸிஷ்ட²ம்சமஹாதேஜா꞉ஸோ(அ)ஸ்ருஜத்ஸப்தமானஸான்||1-1-33
மிகப் பிரகாசமான அந்தத் தேவன் பிறகு மனத்தில் பிறந்தவர்களான மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் வசிஷ்டர் ஆகிய தன்னுடைய ஏழு மகன்களைப் படைத்தான்.(33)
ஸப்தப்³ரஹ்மாணஇத்யேதேபுராணேநிஸ்²சயம்க³தா꞉|
நாராயணாத்மகானாம்வைஸப்தானாம்ப்³ரஹ்மஜன்மனாம்||1-1-34
இந்த எழுவரே புராணங்களில் பிராமணர்கள் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறார்கள். பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த எழுவரும் நாராயணனையே போன்றவர்களாவர்.(34)
ததோ(அ)ஸ்ருஜத்புனர்ப்³ரஹ்மாருத்³ரம்ரோஷாத்மஸம்ப⁴வம்|
ஸனத்குமாரம்சவிபு⁴ம்பூர்வேஷாமபிபூர்வஜம்||1-1-35
அதன் பிறகு பிரம்மன், தன் கோபத்தில் பிறந்த ருத்திரனையும், முன்பிறந்தவர்களின் {மரீசி முதலியவர்களின்} முன்னோடியான சனத்குமாரரையும் படைத்தான்.(35)
ஸப்தைதேஜனயந்திஸ்மப்ரஜாருத்³ரஸ்²சபா⁴ரத|
ஸ்கந்த³꞉ஸனத்குமாரஸ்²சதேஜ꞉ஸங்க்ஷிப்யதிஷ்ட²த꞉||1-1-36
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, இந்த எழுவரும், ருத்திரனும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டனர். ஸ்கந்தனும், சனத்குமாரரும் படைப்பாற்றலைத் தக்க வைத்துக் கொண்டனர்.(36)
தேஷாம்ஸப்தமஹாவம்ஸா²தி³வ்யாதே³வக³ணான்விதா꞉|
க்ரியாவந்த꞉ப்ரஜாவந்தோமஹர்ஷிபி⁴ரலங்க்ருதா꞉||1-1-37
யக்ஷர்கள், பிசாசங்கள், தேவர்கள் மற்றும் பிறர் உள்ளிட்ட அவர்களுடைய ஏழு பெருங்குடும்பங்களில் உள்ள அனைவரும் தெய்வீகச் செயல்களைச் செய்து, சந்ததியைப் படைத்து, கசியபர் மற்றும் பிற முன்னணி தவசிகளால் அலங்கரிக்கப்பட்டனர்.(37)
வித்³யுதோ(அ)ஸ²னிமேகா⁴ம்ஸ்²சரோஹிதேந்த்³ரத⁴னூம்ஷிச|
வயாம்ஸிசஸஸர்ஜாதௌ³பர்ஜன்யம்சஸஸர்ஜஹ||1-1-38
அதன்பிறகு அவன் {பிரம்மன்}, மின்னலையும், இடியையும், நேரான மற்றும் வளைந்த வானவில்களையும், விண்ணதிகாரிகளையும், மேகங்களையும் படைத்தான்.(38)
ருசோயஜூம்ஷிஸாமானிநிர்மமேயஜ்ஞஸித்³த⁴யே|
முகா²த்³தே³வானஜனயத்பித்ரூஸ்²சேஸோ²(அ)பிவக்ஷஸ꞉||1-1-39
அதன்பிறகு அவன், யாகங்களை {வேள்விகளை} வெற்றிகரமாகக் கொண்டாட ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களைப் படைத்தான்; அதன் பிறகு அவன் தேவர்களைத் தன் வாயிலிருந்தும் {முகத்திலிருந்தும்}, பித்ருக்களைத் தன் மார்பில் இருந்தும் படைத்தான்.(39)
ப்ரஜனாச்சமனுஷ்யான்வைஜக⁴னான்னிர்மமே(அ)ஸுரான்|
ஸாத்⁴யானஜனயத்³தே³வானித்யேவமனுஸு²ஸ்²ரும||1-1-40
அதன்பிறகு அவன் தன் பிறப்புறுப்பில் இருந்து மனிதர்களையும், தன் இடையில் இருந்து அசுரர்கள், சாத்யர்கள் மற்றும் தேவர்களில் பிற வகையினரையும் படைத்தான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(40)
உச்சாவசானிபூ⁴தானிகா³த்ரேப்⁴யஸ்தஸ்யஜஜ்ஞிரே|
ஆபவஸ்யப்ரஜாஸர்க³ம்ஸ்ருஜதோஹிப்ரஜாபதே꞉||1-1-41
பிறகு அவன் {பிரம்மன்}, சந்ததியைப் படைக்க விரும்பியபோது, குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டரின் உடலில் இருந்து பல்வேறு வகையான அடிப்படை படைப்புகள் எழுந்தன.(41)
ஸ்ருஜ்யமானா꞉ப்ரஜாநைவவிவர்த⁴ந்தேயதா³ததா³|
த்³விதா⁴க்ருத்வா.ஆத்மனோதே³ஹமர்தே⁴னபுருஷோ(அ)ப⁴வத்||1-1-42
தன் மனத்தால் படைக்கப்பட்ட சந்ததி பெருகாத போது, அவன் {பிரம்மன்} தன்னுடலையே இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைக் கொண்டு ஆணைப் படைத்தான்.(42)
அர்தே⁴னநாரீதஸ்யாம்ஸஸஸ்ருஜேவிவிதா⁴꞉ப்ரஜா꞉|
தி³வம்சப்ருதி²வீம்சைவமஹிம்னாவ்யாப்யதிஷ்ட²த꞉||1-1-43
மற்றொரு பாதியைக் கொண்டு பெண்ணைப் படைத்து, அவளின் மூலம் பல்வேறு வகைச் சந்ததிகளைப் பெருக்கினான். அவன் தன் மகிமையால், சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து அவற்றில் வசிக்கிறான்.(43)
விராஜமஸ்ருஜத்³விஷ்ணு꞉ஸோ(அ)ஸ்ருஜத்புருஷம்விராட்|
புருஷம்தம்மனும்வித்³தி⁴தத்³வைமன்வந்தரம்ஸ்ம்ருதம்||1-1-44
விஷ்ணு ஓர் அண்ட வடிவைப் படைத்தான்; அஃது ஒரு புருஷனைப் படைத்தது; அவன் மனு என்பதை அறிவாயாக. அவனுடைய ஆட்சிக்காலம் மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது.(44)
த்³விதீயமாபவஸ்யைதன்மனோரந்தரமுச்யதே|
ஸவைராஜ꞉ப்ரஜாஸர்க³ம்ஸஸர்ஜபுருஷ꞉ப்ரபு⁴꞉|
நாராயணவிஸர்க³꞉ஸப்ரஜாஸ்தஸ்யாப்யயோனிஜா꞉||1-1-45
வசிஷ்டரின் இரண்டாம் படைப்பு மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது. பெரும் விராட் புருஷன் சந்ததியைப் படைத்தான். அவன் நாராயணனின் படைப்பாவான், அவனது சந்ததி எந்தப் பாலினத்திலும் பிறக்கவில்லை(45)
ஆயுஷ்மான்கீர்திமாந்த⁴ன்ய꞉ப்ரஜாவாஞ்ச்²ருதவாம்ஸ்ததா²|
ஆதி³ஸர்க³ம்விதி³த்வேமம்யதே²ஷ்டாம்க³திமாப்னுயாத்||1-1-46
இந்தத் தொடக்கக் காலப் படைப்பை அறிந்த மனிதன் நீடித்த வாழ்வு, புகழ், சந்ததி மற்றும் தான் விரும்பிய பகுதி {உலகம்} ஆகியவற்றை அடைவான்” என்றார் {வைசம்பாயனர்}
இதிஸ்²ரீமஹாபா⁴ரதேகி²லேஷுஹரிவம்ஸ²பர்வணிஆதி³ஸர்க³கத²னேப்ரத²மோ(அ)த்⁴யாய꞉
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply