பகுதியின் சுருக்கம் : ஸ்வாயம்பூ மனு மற்றும் ஷதரூபை; உத்தானபாதர்; துருவனின் பிறப்பு; வேனனை அழித்த முனிவர்கள்; வேனனிடம் தோன்றிய முதல் க்ஷத்திரியன் பிருது; பூமியைக் கறந்த பிருது; பிராசேதஸ்களின் தவம்; பத்து பேரை மணந்த மாரிஷை; தக்ஷனின் பிறப்பு; பல்வேறு உயிரினங்களைப் படைத்த தக்ஷன்; பாலினக் கலவி மூலம் உயிரினங்கள் உண்டானது–
வைஸ²ம்பாயன உவாச-
ஸ ஸ்ருஷ்டாஸு ப்ரஜாஸ்வேவமாபவோ வை ப்ரஜாபதி꞉ |
லேபே⁴ வை புருஷ꞉ பத்னீம் ஸ²தரூபாமயோனிஜாம் ||1-2-1-
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டர், சந்ததி படைக்கும் தமது தொழில் {மனத்தால்} முடிவடைந்தபோது, எந்தப் பெண்ணில் இருந்தும் பிறக்காத ஷதரூபையைத் தமது மனைவியாக அடைந்தார்.
ஆபவஸ்ய மஹிம்னா து தி³வமாவ்ருத்ய திஷ்ட²த꞉ |
த⁴ர்மேணைவ மஹாராஜ ஸ²தரூபா வ்யஜாயத ||1-2-2-
ஓ! ஏகாதிபதி, புலனுக்கு அப்பாற்பட்ட பகுதியை {உலகத்தை} மறைத்தபடி வசித்து வந்த அவர், தமது மகிமையாலும், யோக சக்தியாலும் ஷதரூபையைப் படைத்தார்.
ஸா து வர்ஷாயுதம் தப்த்வா தப꞉ பரமது³ஸ்²சரம் |
ப⁴ர்தாரம் தீ³ப்ததபஸம் புருஷம் ப்ரத்யபத்³யத ||1-2-3-
ஒரு கோடி {1,00,00,000} வருடங்கள் கடுந்தவம் இருந்த அவள் {ஷதரூபை} தனல் போன்ற தவசக்தி கொண்ட தன் கணவரை அடைந்தாள்.
ஸ வை ஸ்வாயம்பு⁴வஸ்தாத புருஷோ மனுருச்யதே |
தஸ்யைகஸப்ததியுக³ம் மன்வந்தரமிஹோச்யதே ||1-2-4-
ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, அந்தப் புருஷனே ஸ்வாயம்பூ மனு என்றழைக்கப்படுகிறான். இவ்வுலகில் அவனுடைய மன்வந்தரம் எழுபத்தோரு யுகங்களைக் கொண்டதாகும்
வைராஜாத்புருஷாத்³வீரம் ஸ²தரூபா வ்யஜாயத |
ப்ரியவ்ரதோத்தானபாதௌ³ வீராத்காம்யா வ்யஜாயத ||1-2-5-
அந்த அண்டப் புருஷன் {விராட்} ஷதரூபையிடம் வீரன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான், அவன் {வீரன்} காம்யையிடம் பிரிவிரதன் மற்றும் உத்தானபாதன் என்ற பெயர்களைக் கொண்ட இரு மகன்களைப் பெற்றான்-
காம்யா நாம மஹாபா³ஹோ கர்த³மஸ்ய ப்ரஜாபதே꞉ |
காம்யாபுத்ராஸ்து சத்வார꞉ ஸம்ராட்குக்ஷிர்விராட்ப்ரபு⁴꞉ |
ப்ரியவ்ரதம் ஸமாஸாத்³ய பதிம் ஸா ஸுஷுவே ஸுதான் ||1-2-6-
ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயனே}, குடிமுதல்வரான {பிரஜாபதியான} கர்த்தமரின் மகளான {மற்றொரு} காம்யையானவள், ஸாம்ராட், குக்ஷி, விராட், பிரபு என்ற நான்கு மகன்களைப் பெற்றாள். பிரியவிரதனைத் தன் கணவனாக அடைந்து அவள் அவர்களை ஈன்றாள்
உத்தானபாத³ம் ஜக்³ராஹ புத்ரமத்ரி꞉ ப்ரஜாபதி꞉ |
உத்தானபாதா³ச்ச²துர꞉ ஸூன்ருதாஜனயத்ஸுதான் ||1-2-7-
குடிமுதல்வரான {பிரஜாபதியான} அத்ரி, உத்தானபாதரைத் தமது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். ஸூன்ருதை {ஸுனீதை} உத்தானபாதர் மூலம் நான்கு மகன்களைப் பெற்றாள்
த⁴ர்மஸ்ய கன்யா ஸுஸ்²ரோணீ ஸூன்ருதா நாம விஸ்²ருதா |
உத்பன்னா வாஜிமேதே⁴ன த்⁴ருவஸ்ய ஜனநீ ஸு²பா⁴ ||1-2-8-
தர்மனின் இளமை நிறைந்த மகள் ஸூன்ருதை என்று அறியப்பட்டாள். ஒரு குதிரை வேள்வியில் தோன்றிய அந்தத் தூய கன்னிகை {ஸூன்ருதை} துருவனின் அன்னையாவாள்
த்⁴ருவம் ச கீர்திமந்தம் ச ஸி²வம் ஸா²ந்தமயஸ்பதிம் |
உத்தானபாதோ³(அ)ஜனயத்ஸூன்ருதாயாம் ப்ரஜாபதி꞉ ||1-2-9-
குடிமுதல்வரான {பிரஜாபதியான} உத்தானபாதர் ஸூன்ருதையிடம் துருவன், கீர்த்திமான், ஆயுஷ்மான் {சிவன்} மற்றும் வசு {அயஸ்பதி} ஆகிய நான்கு மகன்களைப் பெற்றார்
த்⁴ருவோ வர்ஷஸஹஸ்ராணி த்ரீணி தி³வ்யானி பா⁴ரத |
தபஸ்தேபே மஹாராஜ ப்ரார்த²யன்ஸுமஹத்³யஸ²꞉ ||1-2-10-
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, பெரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் அடையும் நோக்கில், துருவன் மூவாயிரம் தேவ வருடங்கள் கடுந்தவம் இருந்தான்
தஸ்மை ப்³ரஹ்மா த³தௌ³ ப்ரீத꞉ ஸ்தா²னமப்ரதிமம் பு⁴வி |
அசலம் சைவ புரத꞉ ஸப்தர்ஷீணாம் ப்ரஜாபதி꞉ ||1-2-11-
இதனால் நிறைவடைந்த குடிமுதல்வன் {பிரஜாபதியான} பிரம்மன், முனிவரெழுவரின் உலகத்திற்கு {சப்தரிஷி மண்டலத்துக்கு} முன்பு பூமியில் இணையற்ற ஒரு நிரந்தர இடத்தை {துருவ மண்டலத்தை} அவனுக்கு அளித்தான்.
தஸ்யாதிமாத்ராம்ருத்³தி⁴ம் ச மஹிமானம் நிரீக்ஷ்ய ச |
தே³வாஸுராணாமாசார்ய꞉ ஸ்²லோகமப்யுஸ²னா ஜகௌ³ ||1-2-12-
தேவர்கள் மற்றும் அசுரர்களின் குரு (உசானஸ் {சுக்கிரன்}), அவனது {துருவனின்} பெருஞ்செழிப்பையும், மகிமையையும் கண்டு, பின்வரும் பாடலை {ஸ்லோகத்தைப்} பாடினார்
அஹோ(அ)ஸ்ய தபஸோ வீர்யமஹோ ஸ்²ருதமஹோ ப³லம் |
யதே³னம் புரத꞉ க்ருத்வா த்⁴ருவம் ஸப்தர்ஷய꞉ ஸ்தி²தா꞉ ||1-2-13-
“ஓ!, முனிவரெழுவரும் தங்கள் முன்னிலையில் கொண்டு வாழும் இவனது தவச் சக்தியும், சாத்திர அறிவும், ஆற்றலும் அற்புதம் நிறைந்தவையாகும்” {என்று சுக்கிராச்சாரியார் பாடினார்}.
தஸ்மாச்ச்²லிஷ்டிம் ச ப⁴வ்யம் ச த்⁴ருவாச்ச²ம்பு⁴ர்வ்யஜாயத |
ஸ்²லிஷ்டேராத⁴த்த ஸுச்சா²யா பஞ்ச புத்ரானகல்மஷான் ||1-2-14-
துருவனிடம், ஸ்லிஷ்டி, பவ்யன், ஷம்பு {ஷும்பன்} ஆகியோர் பிறந்தனர். பாவமற்ற ஏழு {ஐந்து} மகன்களை ஸ்லிஷ்டி ஸுச்சாயையிடம் பெற்றான்
ரிபும் ரிபுஞ்ஜயம் புண்யம் வ்ருகலம் வ்ருகதேஜஸம் |
ரிபோராத⁴த்த ப்³ருஹதீ சாக்ஷுஷம் ஸர்வதேஜஸம் ||1-2-15-
ரிபு, ரிபுஞ்சயன், புஷ்பன் {புண்யன்/விப்ரன்}, விருகலன், விருகத்தேஜஸ் ஆகியோரே அவர்கள். சக்திகள் அனைத்தையும் கொடையாகக் கொண்டவனும், சாக்ஷுஷன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனை ரிபு பிருஹதியிடம் பெற்றான்
அஜீஜனத்புஷ்கரிண்யாம் வீரண்யாம் சாக்ஷுஷோ மனும் |
ப்ரஜாபதேராத்மஜாயாமரண்யஸ்ய மஹாத்மன꞉ ||1-2-16-
உன்னதனான சாக்ஷுஷன், வீரர்களின் அன்னையும், குடிமுதல்வரான அரண்யரின் {வீரணரின்} மகளுமான புஷ்கரிணியிடம் முனியைப் பெற்றான்
மனோரஜாயந்த த³ஸ² நட்³வலாயாம் மஹௌஜஸ꞉ |
கன்யாயாமப⁴வச்ச்²ரேஷ்டா² வைராஜஸ்ய ப்ரஜாபதே꞉ ||1-2-17-
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, முனி, குடிமுதல்வரான வைராஜனின் மகளான நட்வலையிடம் பெரும் பலமிக்கப் பத்து மகன்களைப் பெற்றான்
ஊரு꞉ புரு꞉ ஸ²தத்³யும்னஸ்தபஸ்வீ ஸத்யவான்கவி꞉ |
அக்³னிஷ்டுத³திராத்ரஸ்²ச ஸுத்³யும்னஸ்²சேதி தே நவ ||1-2-18
ஊரு, புரு, ஷதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், கவி, அக்னிஷ்டூதன், அதிராத்ரன், ஒன்பதாவதாக ஸுத்யும்னன் ஆகியோராவர். அபிமன்யு பத்தாமவனாவான்; இவர்களே நட்வலையின் மகன்களாவர்.
அபி⁴மன்யுஸ்²ச த³ஸ²மோ நட்³வலாயா꞉ ஸுதா꞉ ஸ்ம்ருதா꞉ |
ஊரோரஜனயத்புத்ரான்ஷடா³க்³னேயீ மஹாப்ரபா⁴ன் |
அங்க³ம் ஸுமனஸம் க்²யாதிம் க்ரதுமங்கி³ரஸம் க³யம் ||1-2-19
ஊரு ஆக்னேயியிடம் அங்கன், ஸுமனஸ், ஸ்வாதி {கியாதி}, கிரது, அங்கீரஸ், கயன் உள்ளிட்ட பெரும் பலம் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான்
அங்கா³த்ஸுனீதா²பத்யம் வை வேனமேகமஜாயத |
அபசாராத்து வேனஸ்ய ப்ரகோப꞉ ஸுமஹானபூ⁴த் ||1-2-20
அங்கன், {மிருத்யுவின் மகளான} ஸுனீதையிடம் வேனன் என்ற பெயரைக் கொண்ட ஒரேயொரு மகனைப் பெற்றான். வேனனின் ஒழுக்கக்கேடுகளால் (முனிவர்கள்) பேரெரிச்சல் அடைந்தனர். {அவன் இறந்து போகச் சபித்தனர்}.
ப்ரஜார்த²ம்ருஷயோ யஸ்ய மமந்து²ர்த³க்ஷிணம் கரம் |
வேனஸ்ய பாணௌ மதி²தே ப³பூ⁴வ முனிபி⁴꞉ ப்ருது²꞉ ||1-2-21-
சந்ததியை உண்டாக்குவதற்காக முனிவர்கள் அவனது {வேனனின்} வலது கையைக் கடைந்தனர். வேனனின் வலது கையானது தவசிகளால் கடையப்பட்டபோது, அதிலிருந்து பிருது தோன்றினான்
தம் த்³ருஷ்ட்வா ருஷய꞉ ப்ராஹுரேஷ வை முதி³தா꞉ ப்ரஜா꞉ |
கரிஷ்யதி மஹாதேஜா யஸ²ஸ்²ச ப்ராப்ஸ்யதே மஹத் ||1-2-22-
அவனைக் கண்ட முனிவர்கள் மகிழ்ச்சியில், “பெரும் பலம் மிக்கவனான இவன், தன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து, புகழை அடைவான்” என்றனர்
ஸ த⁴ன்வீ கவசீ க²ட்³கீ³ தேஜஸா நிர்த³ஹன்னிவ |
ப்ருது²ர்வைன்யஸ்ததா³ சேமாம் ரரக்ஷ க்ஷத்ரபூர்வஜ꞉ ||1-2-23
ஏதோ தன் சக்தியால் அனைத்தையும் எரித்துவிடுபவனைப் போலவே அவன் வில்லுடனும், கவசத்துடனும் பிறந்தான். வேனனின் மகனான பிருது, க்ஷத்திரிய குலத்தில் முதல்வனாகப் பிறந்து இந்தப் பூமியைப் பாதுகாத்தான்.
ராஜஸூயாபி⁴ஷிக்தானாமாத்³ய꞉ ஸ வஸுதா⁴தி⁴ப꞉ |
தஸ்மாச்சைவ ஸமுத்பன்னௌ நிபுணௌ ஸூதமாக³தௌ⁴ ||1-2-24-
அந்தப் பூமியின் தலைவனே {பிருதுவே} ராஜசூய வேள்வியில் நீர் தெளிக்கப்பட்டவர்களில் முதலில் பிறந்தவனாவான். மன்னர்களின் மகிமைகளைப் பாடுபவர்களான சூதரும் {சூதர்களும்}, மாகதரும் {மாகதர்களும்{ அவனுக்குப் பிறந்தனர்.
தேனேயம் கௌ³ர்மஹாராஜ து³க்³தா⁴ ஸஸ்யானி பா⁴ரத |
ப்ரஜானாம் வ்ருத்திகாமேன தே³வை꞉ ஸர்ஷிக³ணை꞉ ஸஹ ||1-2-25
பித்ருபி⁴ர்தா³னவைஸ்²சைவ க³ந்த⁴ர்வை꞉ ஸாப்ஸரோக³ணை꞉ |
ஸர்பை꞉ புண்யஜனைஸ்²சைவ வீருத்³பி⁴꞉ பர்வதைஸ்ததா² ||1-2-26-
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தன்னுடைய குடிமக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதற்காக அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பாம்புகள், குஹ்யர்கள் ஆகியோர், கொடிகள் மற்றும் மலைகளின் துணையுடன் பயிர்களை விளைவிப்பதற்காகப் பூமியைக் கறந்தான்.(25,26)
தேஷு தேஷு ச பாத்ரேஷு து³ஹ்யமானா வஸுந்த⁴ரா |
ப்ராதா³த்³யதே²ப்ஸிதம் க்ஷீரம் தேன ப்ராணானதா⁴ரயன் ||1-2-27-
பூமி கறக்கப்பட்ட போது, அவர்கள் விரும்பிய பாலை அவரவர்களுக்குரிய பாத்திரங்களில் அவள் கொடுத்தாள்; அதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வைப் பராமரித்துக் கொண்டனர்
ப்ருது²புத்ரௌ து த⁴ர்மஜ்ஞௌ ஜஜ்ஞாதே(அ)ந்தர்தி⁴பாலிதௌ |
ஸி²க²ண்டி³னீ ஹவிர்தா⁴னமந்தர்தா⁴னாத்³வ்யஜாயத ||1-2-28-
அறம் அறிந்தவர்களான அந்தர்த்தீ மற்றும் பாலிதன் என்ற இரு மகன்கள் பிருதுவுக்குப் பிறந்தனர். அந்தர்த்தீ சிகண்டிணியிடம் ஹவிர்தானனை {ஹவிதானனைப்} பெற்றான்
ஹவிர்தா⁴னாத் ஷடா³க்³னேயீ தி⁴ஷணாஜனயத்ஸுதான் |
ப்ராசீனப³ர்ஹிஷம் ஸு²க்லம் க³யம் க்ருஷ்ணம் வ்ரஜாஜினௌ ||1-2-29-
ஹவிர்தானன், ஆக்னேயிதிஷணையிடம் பிராசீனபர்ஹி, ஷுக்லன் {சுக்ரன்}, கயன், கிருஷ்ணன், விரஜன், அஜினன் ஆகிய ஆறு மகன்களைப் பெற்றான்
ப்ராசீனப³ர்ஹிர்ப⁴க³வான்மஹானாஸீத்ப்ரஜாபதி꞉ |
ஹவிர்தா⁴னான்மஹாராஜ யேன ஸம்வர்தி⁴தா꞉ ப்ரஜா꞉ ||1-2-30-
ஓ! ஏகாதிபதி, பெரும் ஆன்ம சக்தியைக் கொண்ட பிராசீன பர்ஹி ஹவிர்தானனுக்குப் பிறந்தவனாவான். பெரும் குடி முதல்வனான {பிரஜாபதியான} அவன் சந்ததியைப் பெருக்கினான்
ப்ராசீனாக்³ரா꞉ குஸா²ஸ்தஸ்ய ப்ருதி²வ்யாம் ஜனமேஜய |
ப்ராசீனப³ர்ஹிர்ப⁴க³வான்ப்ருதி²வீதலசாரிண꞉ ||1-2-31-
ஓ! ஜனமேஜயா, அவனது {பிராசீன பர்ஹியின்} வேள்வி மண்டபத்திலுள்ள குசப்புற்களின் நுனிகள் கிழக்கு நோக்கி இருந்தன, அவை மொத்த பூமியையும் மறைத்தன. எனவே, அவன் பிராசீனபர்ஹி என்ற பெயரால் கொண்டாடப்பட்டான்.
ஸமுத்³ரதனயாயாம் து க்ருததா³ரோ(அ)ப⁴வத்ப்ரபு⁴꞉ |
மஹதஸ்தபஸ꞉ பாரே ஸவர்ணாயாம் மஹீபதி꞉ ||1-2-32-
ஸவர்ணாத⁴த்த ஸாமுத்³ரீ த³ஸ² ப்ராசீனப³ர்ஹிஷ꞉ |
ஸர்வே ப்ரசேதஸோ நாம த⁴னுர்வேத³ஸ்ய பாரகா³꞉ ||1-2-33-
கடுந்தவமிருந்த அந்த மன்னன் பெருங்கடலின் மகளான ஸாவர்ணியை மணந்தான், அவள் பிராசேதஸ்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், வில்லாண்மை அறிவியலில் நன்கு தேர்ச்சியடைந்தவர்களுமான பத்து மகன்களைப் பிராசீனபர்ஹிக்குப் பெற்றாள்.(32,33)
அப்ருத²க்³த⁴ர்மசரணாஸ்தே(அ)தப்யந்த மஹத்தப꞉ |
த³ஸ²வர்ஷஸஹஸ்ராணி ஸமுத்³ரஸலிலேஸ²யா꞉ ||1-2-34-
அதே அறத்தைக் கடைப்பிடித்த அவர்கள், பெருங்கடலின் நீருக்குள் கிடந்து, பத்தாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தனர்-
தபஸ்²சரத்ஸு ப்ருதி²வீம் ப்ரசேதஸ்ஸு மஹீருஹா꞉ |
அரக்ஷ்யமாணாமாவவ்ருர்ப³பூ⁴வாத² ப்ரஜாக்ஷய꞉ ||1-2-35-
பிராசேதஸ்கள் {பிரசேதர்கள்} தவங்களில் ஈடுபட்டு வந்தபோது, பாதுகாப்பற்றிருந்த பூமியை மரங்கள் மறைத்தன, அதன் மூலம் உயிரினங்கள் அழிந்தன
நாஸ²கன்மாருதோ வாதும் வ்ருதம் க²மப⁴வத்³த்³ருமை꞉ |
த³ஸ²வர்ஷஸஹஸ்ராணி ந ஸே²குஸ்²சேஷ்டிதும் ப்ரஜா꞉ ||1-2-36-
காற்று வீசவில்லை, மேலும், வானம் மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. பத்தாயிரம் வருடங்களுக்கு உயிரினங்களால் எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை {அவை உயிரற்றவையாக இருந்தன}.
தது³பஸ்ருத்ய தபஸா யுக்தா꞉ ஸர்வே ப்ரசேதஸ꞉ |
முகே²ப்⁴யோ வாயுமக்³னிம் ச தே(அ)ஸஸ்ருஜஞ்ஜாதமன்யவ꞉ ||1-2-37-
கடுந்தவங்களைச் செய்து வந்த பிராசேதஸ்கள் அனைவரும், இதைக் கண்டு கோபமடைந்து, தங்கள் வாய்களில் இருந்து காற்றையும், நெருப்பையும் உண்டாக்கினர்
உன்மூலானத² தான்க்ருத்வா வ்ருக்ஷான்வாயுரஸோ²ஷயத் |
தானக்³னிரத³ஹத்³கோ⁴ர ஏவமாஸீத்³த்³ருமக்ஷய꞉ ||1-2-38-
காற்றானது மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்து, அவற்றை உலர்த்தியது, நெருப்பு அவற்றை எரித்தது. இதன் மூலம் மரங்களுக்குப் பயங்கரமான அழிவேற்பட்டது
த்³ருமக்ஷயமதோ² பு³த்³த்⁴வா கிஞ்சிச்சி²ஷ்டேஷு ஸா²கி²ஷு |
உபக³ம்யாப்³ரவீதே³தான்ராஜா ஸோம꞉ ப்ரஜாபதீன் ||1-2-39-
சில செடிகளே இன்னும் நீடித்திருந்தபோது, மரங்களின் அழிவை அறிந்த மன்னன் சோமன், குடிமுதல்வர்களை {பிரஜாபதிகளை / பிராசேதஸ்களை} அணுகி,
கோபம் யச்ச²த ராஜான꞉ ஸர்வே ப்ராசீனப³ர்ஹிஷ꞉ |
வ்ருக்ஷஸூ²ன்யா க்ருதா ப்ருத்²வீ ஸா²ம்யதாமக்³னிமாருதௌ ||1-2-40-
“ஓ! பிராசீனபர்ஹியின் குடும்பத்தை {குலத்தைச்} சேர்ந்த மன்னர்களே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவீராக. பூமி மரங்களற்றுப் போனது, எனவே, நெருப்பையும், காற்றையும் தணிப்பீராக.
ரத்னபூ⁴தா ச கன்யேயம் வ்ருக்ஷாணாம் வரவர்ணினீ |
ப⁴விஷ்யம் ஜானதா தத்த்வம் த்⁴ருதா க³ர்பே⁴ண வை மயா ||1-2-41-
மாரிஷா நாம கன்யேயம் வ்ருக்ஷாணாமிதி நிர்மிதா |
பா⁴ர்யா வோ(அ)ஸ்து மஹாபா⁴கா³꞉ ஸோமவம்ஸ²விவர்தி⁴னீ ||1-2-42-
மரங்களுடைய இந்த அழகிய மகள் {மாரிஷை}, ஒரு ரத்தினத்தைப் போன்றவளாவாள். சோம குலத்தைப் பெருகச் செய்யும் இந்த மகத்தானவள் உங்கள் மனைவியாக இருப்பாளாக
யுஷ்மாகம் தேஜஸோ(அ)ர்தே⁴ன மம சார்தே⁴ன தேஜஸ꞉ |
அஸ்யாமுத்பத்ஸ்யதே புத்ரோ த³க்ஷோ நாம ப்ரஜாபதி꞉ ||1-2-43-
உங்களுடைய பாதிச் சக்தி மற்றும் என்னுடைய பாதிச் சக்தியின் மூலம், அவளிடம் உங்கள் மகனான குடிமுதல்வன் தக்ஷன் பிறக்கட்டும்
ய இமாம் த³க்³த⁴பூ⁴யிஷ்டா²ம் யுஷ்மத்தேஜோமயேன வை |
அக்³னினாக்³னிஸமோ பூ⁴ய꞉ ப்ரஜா꞉ ஸம்வர்த⁴யிஷ்யதி ||1-2-44-
நெருப்பைப் போன்று பிரகாசிப்பவனான அவன், நெருப்பு போன்ற உங்கள் சக்தியால் முற்றாக அழிக்கப்பட்ட படைப்பை பெருகச் செய்வான்” என்றான் {சோமன்}
தத꞉ ஸோமஸ்ய வசனாஜ்ஜக்³ருஹுஸ்தே ப்ரசேதஸ꞉ |
ஸம்ஹ்ருத்ய கோபம் வ்ருக்ஷேப்⁴ய꞉ பத்னீம் த⁴ர்மேண மாரிஷாம் ||1-2-45-
சோமனின் சொற்களுக்கு இணங்க மரங்களின் மீது கொண்ட தங்கள் கோபத்தை விலக்கிக் கொண்ட பிராசேதஸ்கள் முறையாக மாரிஷையை மணந்து கொண்டனர்
மாரிஷாயாம் ததஸ்தே வை மனஸா க³ர்ப⁴மாத³து⁴꞉ |
த³ஸ²ப்⁴யஸ்து ப்ரசேதோப்⁴யோ மாரிஷாயாம் ப்ரஜாபதி꞉ |
த³க்ஷோ ஜஜ்ஞே மஹாதேஜா꞉ ஸோமஸ்யாம்ஸே²ன பா⁴ரத ||1-2-46-
அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாரிஷை கருத்தரிப்பதை மனோரீதியாக நினைத்தார்கள். ஓ! பாரதா, சோமனுடைய சக்தியின் ஒரு பகுதியைக் கொண்டு, பத்து பிராசேதஸ்களின் மூலம் மாரிஷையிடம் தக்ஷன் பிறந்தான்.
புத்ரானுத்பாத³யாமாஸ ஸோமவம்ஸ²விவர்த⁴னான் |
அசராம்ஸ்²ச சராம்ஸ்²சைவ த்³விபதோ³(அ)த² சதுஷ்பத³꞉ |
ஸ த்³ருஷ்ட்வா மனஸா த³க்ஷ꞉ பஸ்²சாத³ப்யஸ்ருஜத்ஸ்த்ரிய꞉ ||1-2-47-
பிறகு சோமனின் குலத்தைப் பெருக்குவதற்காக அவன், அசைவன, அசையாதன, இரு கால்களுள்ள மற்றும் நான்கு கால்களுள்ள மகன்கள் எனப் பல்வேறு சந்ததிகளைப் படைத்தான். தக்ஷன் முதலில் மனோரீதியில் மகன்களைப் படைத்த பிறகு, தன் மகள்களைப் படைத்தான்
த³தௌ³ ஸ த³ஸ² த⁴ர்மாய கஸ்²யபாய த்ரயோத³ஸ² |
ஸி²ஷ்டா꞉ ஸோமாய ராஜ்ஞே(அ)த² நக்ஷத்ராக்²யா த³தௌ³ ப்ரபு⁴꞉ ||1-2-48-
அவர்களில் பத்து பேரை தர்மனும், பதிமூன்று பேரை கசியபரும் மணந்து கொண்டனர். தலைவன் தக்ஷன், நக்ஷத்திரங்கள் அல்லது கோள்கள் என்று அழைக்கப்பட்ட எஞ்சியவர்களை {தனது மற்ற இருபத்தேழு மகள்களை} மன்னன் சோமனுக்கு அளித்தான்
“பிராசேதஸ்கள் மற்றும் மாரிஷையின் இந்த மகன் இரண்டாம் தக்ஷனாவான். இவன் அஸிக்னி என்ற பெயர் கொண்ட தன் மனைவியிடம் அறுபது மகள்களைப் பெற்றான். பின் வரப்போகும் பட்டியலில் உள்ள மகள்களைத் தவிர நான்கு பேரை அரிஷ்நேமிக்கும், இருவரை அங்கீரசுக்கும், இருவரை கிறிஷாஷ்வருக்கும், இருவரை பஹுபுத்ரருக்கும் அளித்தான். அருந்ததி, வசு, யமி, லங்கை / லம்பை, பானு, மருத்வதி, ஸம்கல்பை, முஹூர்த்தை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து மகள்களைத் தர்மனுக்கு அளித்தான். திதி, அதிதி, தனு, அனாயு / அனௌகை, பிராதை, முனி, சுரஸை, இளை, குரோதவாஷை, தாம்ரை, கபிலை / சுரபி, வினதை, கத்ரு ஆகிய பதிமூன்று மகள்களைக் கசியபருக்குக் கொடுத்தான். அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், ஆர்திரை {திருவாதிரை}, புனர்வசு {புனர்பூசம்}, புஷ்யை {பூசம்}, ஆஷ்தேஷை {ஆயில்யம்}, மகம், பூர்வபல்குனி {பூரம்}, உத்தரப் பல்குனி {உத்தரம்}, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விஷாகம், அனுராதா {அனுஷம்}, ஜேஷ்டா {கேட்டை}, மூலம், பூர்வாஷாதம் {பூராடம்}, உத்தராஷாதம் {உத்திராடம்}, ஷ்ரவணம் {திருவோணம்}, தனிஷ்டம் {அவிட்டம்}, ஷதாபிஷம் {சதயம்}, பூர்வபாத்ரம் {பூரட்டாதி}, உத்தரபாத்ரம் {உத்திரட்டாதி}, ரேவதி ஆகிய இருபத்தேழு மகள்களைச் சந்திரனுக்கு அளித்தான்”
தாஸு தே³வா꞉ க²கா³ நாகா³ கா³வோ தி³திஜதா³னவா꞉ |
க³ந்த⁴ர்வாப்ஸரஸஸ்²சைவ ஜஜ்ஞிரே(அ)ன்யாஸ்²ச ஜாதய꞉ ||1-2-49
தேவர்கள், வானுலாவிகள், பசுக்கள், நாகர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களை அவர்கள் பெற்றனர்.
தத꞉ ப்ரப்⁴ருதி ராஜேந்த்³ரா꞉ ப்ரஜா மைது²னஸம்ப⁴வா꞉ |
ஸங்கல்பாத்³த³ர்ஸ²னாத்ஸ்பர்ஸா²த் பூர்வேஷாம் ஸ்ருஷ்டிருச்யதே ||1-2-50-
ஓ! மன்னா, அது முதல் {அப்போதிருந்து} உயிரினங்கள் பாலினக் கலவியின் மூலம் உண்டாகின்றன. அவர்களின் முன்னோடிகள் (வெறுமனே) சிந்தித்தல், பார்த்தல் மற்றும் தீண்டலின் மூலம் படைக்கப்பட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}
ஜனமேஜய உவாச
தே³வானாம் தா³னவானாம் ச க³ந்த⁴ர்வோரக³ரக்ஷஸாம் |
ஸம்ப⁴வ꞉ கதி²த꞉ பூர்வம் த³க்ஷஸ்ய ச மஹாத்மன꞉ ||1-2-51-
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் மற்றும் உயர் ஆன்ம தக்ஷன் ஆகியோரின் பிறப்புகளை முன்பு சொன்னீர்.
அங்கு³ஷ்டா²த்³ப்³ரஹ்மணோ ஜாதோ த³க்ஷ꞉ ப்ரோக்தஸ்த்வயானக⁴ |
வாமாங்கு³ஷ்டா²த்ததா² சைவ தஸ்ய பத்னீ வ்யஜாயத ||1-2-52-
ஓ! பாவமற்றவரே, தக்ஷன் பிரம்மனின் வலது கை கட்டைவிரலிலும், அவனது மனைவி இடது கை கட்டைவிரலிலும் பிறந்தனர் என்று சொன்னீர். பிறகு, அவர்கள் எவ்வாறு மணவுறவுக்குள் நுழைய முடியும்?
கத²ம் ப்ராசேதஸத்வம் ஸ புனர்லேபே⁴ மஹாதபா꞉ |
ஏதன்மே ஸம்ஸ²யம் விப்ர ஸம்யகா³க்²யாதுமர்ஹஸி |
தௌ³ஹித்ரஸ்²சைவ ஸோமஸ்ய கத²ம் ஸ்²வஸு²ரதாம் க³த꞉ ||1-2-53-
பெருந்தவசியான தக்ஷனால் எவ்வாறு பிராசேதஸ்களின் சக்தியை அடைய முடியும்? சோமனின் பேரனாக இருந்து கொண்டு அவனுக்கே மாமனாராக அவனால் எவ்வாறு முடியும்? ஓ! விப்ரரே, எனக்கு இதில் பெரும் ஐயங்கள் ஏற்படுகின்றன, அவற்றைக் களைவதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {ஜனமேஜயன்}
வைஸ²ம்பாயன உவாச
உத்பத்திஸ்²ச நிரோத⁴ஸ்²ச நித்யௌ பூ⁴தேஷு பார்தி²வ |
ருஷயோ(அ)த்ர ந முஹ்யந்தி வித்³வாம்ஸஸ்²சைவ யே ஜனா꞉ ||1-2-54-
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “படைப்பின் அடிப்படையிலேயே தோற்றமும், அழிவும் எப்போதும் இருக்கின்றன. முனிவர்களும், ஞானிகளும் இதில் குழப்பமடைவதில்லை
யுகே³ யுகே³ ப⁴வந்த்யேதே ஸர்வே த³க்ஷாத³யோ ந்ருப |
புனஸ்²சைவ நிருத்⁴யந்தே வித்³வாம்ஸ்தத்ர ந முஹ்யதி ||1-2-55-
ஓ! மன்னா, தக்ஷர்கள் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறார்கள். ஒரு யுகத்தில் ஒரு தக்ஷனும், மற்றொரு யுகத்தில் மற்றொரு தக்ஷனும் இருக்கின்றன
ஜ்யைஷ்ட்²யம் கானிஷ்ட்²யமப்யேஷாம் பூர்வம் நாஸீஜ்ஜனாதி⁴ப |
தப ஏவ க³ரீயோ(அ)பூ⁴த்ப்ரபா⁴வஸ்²சைவ காரணம் ||1-2-56-
ஓ! மன்னா, முன்னர் அவர்களுக்கிடையில் பிறப்பில் முன்னுரிமை கிடையாது; தவத்தாலேயே அவர்கள் மூத்தவர்களாகக் கருதப்பட்டனர், மேலும் அவர்களுடைய ஆற்றலே அதற்குக் காரணமாக அமைந்தது
இமாம் விஸ்ருஷ்டிம் த³க்ஷஸ்ய யோ வித்³யாத்ஸசராசராம் |
ப்ரஜாவானாபது³த்தீர்ண꞉ ஸ்வர்க³லோகே மஹீயதே ||1-2-57-
அசைவன, அசையாதன உள்ளிட்ட தக்ஷனின் படைப்பை அறிந்தவன் எவனோ அவன் சந்ததியை அடைவான், அவன் தன் வாழ்நாள் காலம் தீர்ந்ததும், தேவலோகத்தில் வழிபடப்படுவான்” {என்றார் வைசம்பாயனர்)
தக்ஷன், பிரஜாபதி, பிரம்மன், விஷ்ணு, மஹேஷ்வரன் முதலிய பெயர்கள் எதுவும் ஏதோ மனிதர்களின் பெயர்களல்ல, மாறாகச் சில நிலைகளின் பதவிகளாகும். இந்த நிலைகள் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றி மறைகின்றன.
இதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஸு² ஹரிவம்ஸ²பர்வணி ப்ரஜாஸர்கே³
த³க்ஷோத்பத்திகத²னே த்³விதீயோ(அ)த்⁴யாய꞉
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply