ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்
——————-
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
———-
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-
———
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
————-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-
————–
ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
———————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply