அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீத்தல் அரிது (குறள் 8).
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே (திருநெடுந்தாண்டகம் 4)
——-
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”–தொல்காப்பியரும்,
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர் (778)-அரசாளும் மன்னனை “இறைவன்” என்ற பதத்தால் விளிக்கிறார். அக்குறள்
திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே”
——-
வால் அறிவன் நற்றாள் தொழா அர் எனின்
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
தனக்குவமை இல்லாதான் தாள்
அற ஆழி அந்தணன் தாள்
எண் குணத்தான் தாள்
இறைவன் அடி
சங்கப் புலவரான பரணர், வள்ளுவனை வாழ்த்தும் போது
“தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர் வெண்பா”என்கிறார்.
ஐயந்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து–என்ற குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர்,
” ஐயமாவது பல தலையாய உணர்வு. அதாவது, மறுபிறப்பும், இருவினையும், கடவுளும் உளவோ? இலவோ?” என
ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல். பேய்த்தேரோ? புனலோ? கயிறோ? பாம்போ? எனத் துணிவு பிறவாது நிற்பதும் அது” என்கிறார்.
இதில் எது மெய் என்று கண்டு தெளிந்தாரே,
“ஐயந்தினீங்கித் தெளிந்தார்” என்பவர். அவர்களுக்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வர, வரப்
பண்டை உலகியலுணர்வு தூர்த்து வரும் என்கிறார் வள்ளுவர்.
அதாவது “தான் தெய்வத்தினிடமிருந்து வந்தேன்” என்ற உணர்வு. நம் உண்மையான பண்டைய உலகு அதுதான்!
அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகம் உரைசான்ற முக்கோலும்
நெறிபடச் சுவல் அசைஇ–கலித்தொகை இத்தகையோரைக் குறிக்குமிடத்து,என்கிறது.
“உரை சார்ந்த் முக்கோல்” என்பதற்கு தத்துவப் பொருள் இருக்க வேண்டும் (சத், அசித், ஈசன்).
நெய்தல் கலியும் முக்கோல் பற்றி பேசுகிறது.
பாகவதர், பகவர் என்ற இரு சொற்களும் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டவர்கள்,
வைணவ சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று பொருள்.
பாகவதர்கள் என்பதற்கு நாராயண சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று திவாகரம் கூறுகிறது.
இத்தனையும் வைத்துப் பார்க்கும் போது வள்ளுவன் சொல்லும் ஆதி (இல்) பகவன் நாரணனே-
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்…. (இங்கு மாணடி என்பது எதைக் குறிக்கிறது?)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (இங்கு அவனது “வைப்பு” எது?)
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும் (இந்த உலகம் எது?)
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (இந்த உலகு எது?)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
முதல் பத்துப் பாடல்களில் 7 பாட்டில் சராணாகதி பேசுகிறது.
—————–
“ஊடற்கட் சென்றேன்மன் தோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் நெஞ்சு!”–வள்ளுவர் சொல்கிறார்:
“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்
கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே!”–அச்சாக இதையே சொல்கிறது, கலித்தொகைப் பாடலொன்று,
சங்கப் பாடல்கள் வரை காதலன்-காதலி பேச்சு உண்மையான காதலன் காதலி பேச்சுத்தான்.
பக்தி இலக்கியம் வந்தபின்பு இம்மானுடக் காதல் ஒரு புது மெருகு பெருகிறது.
அதனால் பக்தி என்பது “காதலீதமாகும்” (காதல்+அதீதம்).
—————-
ஆயர்பாடியிலொரு மன்றத்து மாயவனுடன் றம்முனாடிய
வால சரிதை நாடகங்களில் வேனெடுங்கட் பிஞ்ஞையோ
டாடிய குரவையாடுதும் யாமென்றாள் கறவைகன்று
துயர் நீங்கவே வெனவே (சிலப்பதிகாரம்).
கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்றுநம் னுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி!
கொல்லையம் சாரல் குருந்துஓசித்த மாயவன்
எல்லிநம் னுள் வருமேல் அவன்வாயில்
முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழி!–என்றுதானே சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை அமைகிறது!
மானிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசைகை யாகப் பசங்கதிர் மதியமொடு சுடர் கண்ணக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே!–நற்றிணை
‘கொடிநிலை கந்தழி வள்ளி என்றவடுநீங்கு
சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’–தொல்காப்பியச் செய்யுள்
கொடிநிலை என்பது வான் சிறப்பு. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு.
கொடி என்பது கீழ்த்திசை, குணக்கினின்று வரும் மேகம் மழை தருவதால் அது ‘கொண்டல்’ என்பதாயிற்று.
கந்தழி என்பதில் கந்து-பற்று, அழி-அழித்தல் அதாவது பற்று அறுத்த பெரியவர் (நீத்தார்) பெருமை.
வள்ளி என்பது அறம்.
“பாழ் என, கால் என, பாகு என ஒன்று என இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என–பரிபாடல்
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை
பாழ் என்பது பண்டைய இந்தியர் கண்டு சொன்ன ஒன்று. பூஜ்யத்துக்குள்ளே நின்று இராஜ்ஜியத்தை நடத்துபவன் அவன்.
அதனால்தான் அவனது தொடக்கத்தைப் பற்றிப் பேசும் போது “பாழ் என” என ஆரம்பிக்கிறது பரிபாடல்!
பாழ் என்பதில் சர்வமும் அடக்கம். எனவே பாழ் இல்லாமல் தொடக்கம் இல்லை.
பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பாழ் என்பது பரிபூரணம்.பாழ் என்பது சூன்யமல்ல (அதாவது வெற்று அல்ல).
உயர் நலம் உடையது பாழ்.அது செய்வது அலகில்லா விளையாட்டு!!
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொன்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலினழுந்தி
யறுகாற் குறவனீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட்டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
“புல் ஆகிப் பூடு ஆகிப்
பல் விருகம் ஆகிப்
பறவையாய் பாம்பு ஆகிக்
கல்லாய் மனிதர் ஆய்
பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன்
எம்பெருமானே!”–திருவாத ஊரார்,
————-
“பானிற வுருவிற் பனைக் கொடியோனும் நீனிற வுருவினேமி யோனுமென் றிரு பெருந் தெய்வமுனின் றா அங்கு” (புறம் 58/16)
கண்ணனையும், பலதேவனையும் இரு பெருந்தெய்வங்களாக வழிபட்ட செய்தி புறநானூற்றில்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடல் வழி அறியலாம்.
—————–
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே(தொல். அகத். நூற்பா. 5)
முல்லைத் தெய்வம் கண்ணன் (மாயோன்); குறிஞ்சித் தலைவன் கந்தன் (சேயோன்);
மருதக் கடவுள் இந்திரன் (வேந்தன்); நெய்தற் கடவுள் வருணன் என்று அறியக் கிடைக்கிறது.
“தொல்காப்பியர் பாலைக்கு தெய்வமும் வேண்டிற்றிலர்:
பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்” என்று நக்கீரர் சொல்கிறார்.
ஐந்தினைக் கடவுளரைச் சொல்லும் போது, “சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்” என்னும் முறை பற்றி
“மாயோன் மேய காடுறை உலகம்” எனத் துவங்குகிறார் என்று கொள்ளலாம்.
முல்லைக் கடவுளாக கண்ணன் நிற்பதால் இவனது கோவில்கள் முதலில் காடும் காடு சார்ந்த பகுதிகளிலுமே இருந்திருக்க வேண்டும்.
திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் இவைகளை நோக்குங்கால் அது புரியும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நிலங்களிலும் இவன் கோவில்கள் வந்திருக்க வேண்டும்.
வைணவ திருப்பதிகளின் இரத்தினமான திருவரங்கம் மருத நிலத்தில் நிற்பதே அதன் சான்று.
பக்தி இயக்கத்தின் தோற்றம் பரிபாடலில் தெளிவாய் தெரிகிறது.
தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ
அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ–(பரிபாடல் 3/63-68)
———
சங்க காலத்திலேயும் நான்கு சாதிகள் உண்டெனப் பதிவாகிறது:
“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பாலொருவன் அவன் கட் படுமே”-(புறநானூறு 183).
——————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply