ஸ்ரீ ஜீயர் நாயனார் அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ மான் ரெங்க புரீஸ ஆர்ய குதிர்ஷ்டி கஜ கேசரி
ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீநே தந்ய தத்தாம் சதா ஹ்ருதி
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு ஆச்சார்யரும் –
குத்ருஷ்ட்டி கஜங்களை அடக்கிய ஸிம்ஹமான ஸ்வாமி சிந்தனையில் அடியேன்
திரு உள்ளம் எப்பொழுதும் இருக்க வேண்டும்
—————
ஸ்ரீ மான் ஸுவ்ம்யோ பயந்தா ஸடரி புரசித த்ராவிடாம் நாய ப்ருந்தே
ய ப்ராதாத் ப்ரீதி பூர்வம் த்வி தச கமமலம் ராஜ கோபால நாம் நே
ரெங்கா பிக்யாம்ச முக்யாம் ஸமதி சத துலாம் விம்சதிம் ச ஸ்வ கல்ப்தாம்
தம் வந்தே ஷ்டத் விபேந்ராஹ்வய குரு ஸஹிதம் சேஷ மூர்த்திம் யதீந்த்ரம்
ஸ்ரீ மான் ஸுவ்ம்யோ பயந்தா ஸடரி புரசித த்ராவிடாம் நாய -நம்மாழ்வார் சாதித்து அருளிய –
ஆம்னாயம் -வேதம் -தமிழ் செய்த மாறன்
ப்ருந்தே-திருத் துழாய் -வேறாயினும் மண்ணாயினும் கொள்பவன் அன்றோ –
திருவாய் மொழியை திருத்துழாய் போலவே கொள்பவன் அன்றோ –
நவவித பகுதிகள் செய்ய இயலாத நம் போல்வாருக்கு திருத்துழாய் இதழை திருவடியில் சமர்ப்பித்தால் போதுமே
அதே போல் திருத்துழாய் பாசுரத்தில் ஓர் பாதம் ஒன்றே அவனை அடைவிக்குமே –
ய ப்ராதாத் -ஸமர்ப்பிப்பதாலேயே
ப்ரீதி பூர்வம் த்வி தச கமமலம் ராஜ கோபால நாம் நே -ப்ரீதி பூர்வகமாக -சமர்ப்பிக்க –
இரண்டு திருவாய் மொழி சமர்ப்பித்தார் அன்றோ –
ஆயர் குலக் கொழுந்து அன்றோ -செம்பகாரண்யம் -வண்டு வாரா -வண் துவாரா —
மாசறு சோதி -தீர்ப்பாரை யாமினி -இரண்டையும் சமர்ப்பித்தார் அன்றோ
ரெங்கா பிக்யாம்ச முக்யாம் ஸமதி சத துலாம் விம்சதிம் ச ஸ்வ கல்ப்தாம்- -ஆயிரமும் அரங்கனுக்கே –
பள்ளி கொள்ளும் இடம் அன்றோ -ராஜாதி ராஜன் –
ரெங்கனுக்கு உண்டான மங்களாசானம் இவனுக்கும் துல்யமாக உண்டே –
ஸ்வாமி திரு உள்ளத்தில் தானாகவே ஸ்ப்ரித்த இந்த கோபால விம்சதிக்கு சமமாக துல்யமாக எதுவும் இல்லையே
தம் வந்தே ஷ்டத் விபேந்ராஹ்வய குரு ஸஹிதம் சேஷ மூர்த்திம் யதீந்த்ரம் -அஷ்ட திக் கஜங்கள் சூழ்ந்த
சேஷ மூர்த்தியான மா முனிகளை ஆஸ்ரயிப்போம் –
——————————————–
பூர்ணம் ப்ரஹ்ம ஸ்வயமிஹ விகாயாஹி பர்யங்க வார்யம்
கோ ரஷார்த்தம் வர யது குல வாஸூ தேவோ வதீர்ண
வேலாதீத ஸ்வ பல விஜி தாராதி ராஸ் சர்ய சர்யோ
கோப ஸ்த்ரீ ணாம் ப்ரதி க்ருஹ மடந் கோ படிம்போ விபாதி –1-
பூர்ணம் ப்ரஹ்ம ஸ்வயமிஹ விகாயாஹி பர்யங்க வார்யம் -தானே யோக நித்திரைக்கு
ஸ்வயமே வ்யூஹ ஸ்தானம் -கூப்பீடு கேட்டு அருளவே –
பூர்ணம் ப்ரஹ்ம-பரத்வம் வ்யூஹம் இவற்றால் –
கோ பாலனாக சேவை சாதித்தாலும் பூர்ணன் அன்றோ
கோ ரஷார்த்தம் வர யது குல வாஸூ தேவோ வதீர்ண -அவதார ரஹஸ்யம் –
நப்பின்னையை திருமணம் கொள்ளவே ஆய்க்குலம் புக்கான் அன்றோ
வேலாதீத ஸ்வ பல விஜி தாராதி ராஸ் சர்ய சர்யோ -ஆச்சர்ய சேஷ்டிதங்கள்
கோப ஸ்த்ரீ ணாம் ப்ரதி க்ருஹ மடந் கோ படிம்போ விபாதி -கோபிகளுக்காகவே -செய்த லீலைகள் அன்றோ
அட -நகந்து கொண்டே போவது -பஞ்ச லக்ஷம் பெண்களுக்கும் தன்னைக் கொடுத்து இட்டீடு கொள்ளவே அன்றோ அவதாரம் –
இவர்களது ப்ரேமையை பிரகடனம் பண்ணி தேஜஸ் மிக்கு விளங்குகிறான் –
————————–
சோயம் தேவ பிரதித மஹிமா சம்ப காரண்ய ஸீமா
மேத்யா தீவ ப்ரமுதித மநா திவ்ய லாவண்ய சாலீ
குர்வன் ஸ்வேச்சா விஹ்ருதிம் அநிசம் ராஜ கோபால நாம
பக்தவ் காநாம் ஜயதி நிகிலா பீப்ஸி தார்த்த ப்ரதாதா -2-
சோயம் தேவ பிரதித மஹிமா -மஹிமையில் பிரதமர்
சம்ப காரண்ய ஸீமா -சம்ப காரண்யத்தில் ஸீமா -திவ்ய தேச மங்களா சாசனம்
மேத்யா தீவ ப்ரமுதித மநா -ஹ்ருதயம் பேர் ஆனந்தம் அடைந்து
திவ்ய லாவண்ய சாலீ -திவ்யமான லாவண்ய அழகைக் காட்டி அருளி
குர்வன் ஸ்வேச்சா விஹ்ருதிம் அநிசம்-எப்பொழுதும் ஸ்வ இச்சையே செய்து கொண்டு இருக்க வேண்டும்
ராஜ கோபால நாம -அவனது ஆனந்தத்துக்காகவே -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
பக்தவ் காநாம் ஜயதி நிகிலா பீப்ஸி தார்த்த ப்ரதாதா-பக்தர்களுக்கு அபீஷ்டங்கள் எல்லாம்
அருளிச் கொண்டே -வெளிப்படை அர்த்-தம் -உள்ளுறையிலோ
அநந்யார்ஹ அடியார்களுக்காக தன்னையே நல்கும் கற்பகம் -அன்றோ ஜெயதி –
அவர்களுக்கும் ராஜ கோபாலனுக்கும் ஜெய கோஷம்
இத்தால் அர்ச்சாவதாரமம் அந்தர்யாமியும் இங்கு -கீழே பரத்வமும் வ்யூஹமமும் விபவமும் –
——————
ஷீராம் போதா வருண கமலா ப்யந்த ராலா துதீதாம்
யாம்கந்யாம் ஸ்வாம் ப்ருகுரபி ஸூ தாம் மான்ய மாந பு பாஷு
குரவந்தீம் தாம் தப இஹ பரம் ராஜ கோபால ஏஷ
ப்ரேம்நோ த்வாஹ்ய த்ரித சவி நுத பாதுமாம் பங்க ஜாஷ -3-
ஷீராம் போதா வருண கமலா ப்யந்த ராலா துதீதாம் -அம்போதம் நீர் நிலை -திருப்பாற் கடல் –
வருணன் அவதாரம் சமுத்திரம் -நதிகள் பாதியாக வருணனைச் சொல்வர்
அப்யந்த ரால -நன்றாகக் கடைந்து -முதலில் ஸூ ரபி -உச்சரவஸ் ஐராவதம் நவ ரத்தினங்கள் பாரிஜாதம் –
அப்சரஸ் ஸ்த்ரிகள் -பின்பே அவள் -இவர்களைக் கரை ஏற்றிய பின்பே -அவனுக்கு கைங்கர்யத்துக்காகவே –
அவன் அடியார்களுக்கு சதம் மாலா ஹஸ்தா -உண்டே –
பின்பு சாஷாத் மஹா லஷ்மீ ஆவிர்பாவம் -ரமிக்க செய்வதால் ரம்யா -வித்யுத் இவ –
இது வ்யூஹத்தில் இனி அர்ச்சையில் –
யாம்கந்யாம் ஸ்வாம் ப்ருகுரபி ஸூ தாம் மான்ய மாந பு பாஷு -பிருகு மகரிஷி திருக்குமாரியாக
ஆவிர்பாவம் -அவரால் நன்றாகக் போஷிக்கப்பட்டு
குரவந்தீம் தாம் தப இஹ பரம் ராஜ கோபால ஏஷ -தபஸ் -இவனை அடையவே –
இந்த ராஜ கோபாலனையே -நமக்காகவே –
ப்ரேம்நோ த்வாஹ்ய த்ரிதச விநுத பாதுமாம் பங்க ஜாஷ-உத்வாஹ்யம் -திருக்கல்யாணம் –
த்ரிதச-முப்பத்து முக்கோடி தேவர்கள்-விநுத- சூழ
பாதுமாம் பங்க ஜாஷ–பங்க ஜாக்ஷன் நம்மை ரக்ஷித்து அருளட்டும்
——————–
கோ ரஷார்த்தம் கிரி வர தரம் கோபிலஸ் தூய மானம்
காளீ யாஹி ப்ரவர த மனம் ரெளடி நாட் யாங்க்ரி பத்மம்
ஸம்ஸ்லிஷ் யந்தம் ப்ரணய பரிதாம் ருக்மிணிம் ஸத்ய பாமாம்
தேவா தீஸம் ஸ்வயம் இஹ ஜகன் மோஹனம் கிருஷ்ண மீடே -4-
கோ ரஷார்த்தம் கிரி வர தரம் -குன்று எடுத்து ஆ நிரை காத்த குணம் போற்றி –
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -கோபாலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் –
லீலைகளை முதலில் கோ ரக்ஷணத்துடன் உபக்ரமிக்கிறார்
கோபிலஸ் தூய மானம் -கோபிலர் கோ ப்ரளயருக்காகாவே இங்கே சேவை
காளீ யாஹி ப்ரவர த மனம் ரெளடி நாட் யாங்க்ரி பத்மம் -காளியனை அடக்கி நர்த்தனம் செய்து அருளி –
ஆயிரம் தலைகளும் இவன் திருவடி தாமரையின் ஸ்பர்சதுக்கு துடிக்க -தந்து அருளிய வ்ருத்தாந்தம் –
ஸம்ஸ்லிஷ் யந்தம் ப்ரணய பரிதாம் ருக்மிணிம் ஸத்ய பாமாம் -உபய நாச்சியார் உடன் இன்றும் சேவை –
ப்ரணய கலஹத்தையும் காட்டி அருளியதால் அத்தையும் அனுபவிக்கிறார் –
தேவா தீஸம் ஸ்வயம் இஹ ஜகன் மோஹனம் கிருஷ்ண மீடே-தேவாதி தேவன் இவனே -ப்ரஹ்ம பூர்ணன் -அன்றோ
ஜகத்தில் உள்ளார் அனைவரையும் மோஹிக்கப் பண்ணி -கண்டவர் தம் மனம் வழங்கும் படி அன்றோ இவனது ஸுந்தர்யம் –
—————————
வம்சீ நாதம் ஸ்ரவண மதுரம் ஸ்ரோது காமா யதீ யம்
காவஸ் த்யக்த த்ருண கபலநா தத்த கர்ணா பபூவ
தம் கஸ்தூரீ கலித திலக அலோல ப்ருங்காள காளீ
ஸ்ரீ மத் ராஜத் வதன கமலம் ராஜ கோபால மீடே –5-
வம்சீ நாதம் ஸ்ரவண மதுரம் ஸ்ரோது காமா யதீ யம் -நாவலாம் பெரிய தீவில் வேணு கான அனுபவம்
காவஸ் த்யக்த த்ருண கபலநா தத்த கர்ணா பபூவ -புல் மேய்ப்பு மறந்து –செவிகள் ஆட்ட கில்லாவே
தம் கஸ்தூரீ கலித திலக அலோல ப்ருங்காள காளீ -கஸ்தூரி திலகம் ஆட -வண்டுகள் ஆச்சார்யர்கள் கூடித்
திரண்டு இருப்பதையும் காட்டி அருளுகிறார் –வண்டு வராத துவாரகாவாக இருந்தாலும்
ஸ்ரீ மத் ராஜத் வதன கமலம் ராஜ கோபால மீடே -அனைவரும் திருமுகத் தாமரையை
அனுபவிப்பதை நம் ஸ்வாமியும் அனுபவிக்கிறார் -தாமரைக்காடு அன்றோ –
———————-
கோபீ தத் யுன் மதன ஸமயே பவ்ய ஹை யங்க வீநம்
க்ரோஹோத் யுக்த ப்ரசுர நடனம் கோடி காமாபி ராமம்
மாத்ரா ஸோலூ கல நியமிதம் ரிங்கணே நார்ஜூ நத்ரு
ஷேபப் ரௌடம் வர குண பதம் வாரி ஜா ஷம் பஜாமி -6-
கோபீ தத் யுன் மதன ஸமயே பவ்ய ஹை யங்க வீநம் -தத்யம் -தயிர் -கடையும் பொழுது
வரும் வெண்ணெயை தானே விரும்புவான்
பவ்யமாக -இவன் பார்ப்பதாகவும் -அந்த வெண்ணெயும் பவ்யமாக உருகி இவனைக் கண்டதும்
பிரேமை வசப்பட்டு இருக்கும் சேதனமோ அசேதனமோ ப்ரேமம் இரண்டு இடங்களிலும் பெருகி வழியுமே
க்ரோஹோத் யுக்த ப்ரசுர நடனம் கோடி காமாபி ராமம் -க்ரோஹ -கோபிகள் என்றவாறு-ஆடிக்காட்டினால்
வெண்ணெய் தருவதாகச் சொல்ல -கோடி மன்மதனன் அன்றோ இவன் -அவர்களுக்கு இப்படி சுலபம் ஆவதே
மாத்ரா ஸோலூ கல நியமிதம் ரிங்கணே நார்ஜூ நத்ரு-கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயத்தை அனுபவிக்கிறார் –
தன்னைத் தானே நியமித்துக் கொண்டு –
உரலுடனே தவழ்ந்து சென்று இரட்டை மரத்துக்கு நடுவில் -அவர்களுக்கு சாப விமோசனம்
தந்து அருளியதையும் சேர்ந்து அனுபவிக்கிறார்
ஷேபப் ரௌடம் வர குண பதம் வாரி ஜா ஷம் பஜாமி-மேலே தூக்கி எறிந்து -ஆத்மாவை அவன் இடம் சமர்ப்பித்து –
கல்யாண குணங்களுக்கு ஆச்ரயமான திருவடிகளில் கடாஷாத்தாலே அருளி சேர்த்துக் கொள்வானே
அவனை நித்தியமாக பஜித்துக் கொண்டு இருப்போம் –
——————-
வேதாந்தே ஷு பிரதித விபவம் தத்வ தேவ வ்ரஜேபி
க்யாத க்ரீடா சரித மஹிதம் பர்ஹி பர்ஹா வதம்சம்
யோகி த்யேயம் விபுத விநுதம் வல்லபீ பாக தேயம்
வந்தே நித்யம் ஸ்ரித ஜன ஹிதம் ராஜ லீலா விதேயம் -7-
வேதாந்தே ஷு பிரதித விபவம் தத்வ தேவ வ்ரஜேபி -உபநிஷத்தாலே ப்ரதிபாத்யன் -இவனே அன்றோ –
அவன் அன்றோ வ்ரஜ சிசுவாக இங்கே –
க்யாத க்ரீடா சரித மஹிதம் பர்ஹி பர்ஹா வதம்சம் -க்யாத க்ரீடா -புகழ் பெற்ற பால சேஷ்டிதங்கள் –
பர்ஹா பீடம் மயில் தோகை சூடிக் கொண்டு –
யோகி த்யேயம் விபுத விநுதம் வல்லபீ பாக தேயம் -யோகிகளால் -ஹ்ருதயத்தில் –
மஹான்களால் சேவிக்கப்பட்டு -கோபிகளுக்கு வல்லபன் -பிரேமை பிரகடனம் பண்ணவே இங்கும் சேவை
வந்தே நித்யம் ஸ்ரித ஜன ஹிதம் ராஜ லீலா விதேயம் -நித்தியமாக சேவித்துக் கொண்டே இருக்க வேண்டும் –
வேதத்தின் சுவைப்பயனே நந்தனார் களிறு -ஆஸ்ரிதர்களைக் கை விடாமல் -திரௌபதிக்காக அன்றோ
அனைத்தும் செய்து அருளினான் -ராஜ லீலை -பாண்டவர்களை கேவல லீலையாலே ஜயம் அடையச் செய்து அருளினான் –
விதேயமாகவும் பல பல லீலைகள் உண்டே -கோபாலா விளிக்க ஓடி வந்து உதவுபவன் அன்றோ
—————
கோபீ கேஸீ ரசிக மநிசம் தத் பரீசார துர்யம்
வாக் சாதுர்யாத் ப்ரகடி தருஷா தத் குரூன் வஞ்ச யந்தம்
பாணவ் த்ருத்வா ப்ரமத பரிதம் ஸ்வாது ஸஹ் யங்கவீநம்
ராதா சங்கே விர சித ருதுகம் ராஜ கோபால மீடே -8-
கோபீ கேஸீ ரசிக மநிசம் தத் பரீசார துர்யம் -கேளிக்கை விளையாட்டு -அனிசம் -எப்பொழுதும் –
பரீசாரம் -தாஸ வ்ருத்தி -இதுக்காக அன்றோ திரு அவதாரம் -ப்ரேமையில் தட்டு மாறி இருக்கும் அன்றோ –
அன்புக்கு நாம் அடிமை ஆகிறோம்
வாக் சாதுர்யாத் -அதுக்கும் மேல் வாக் சாதுர்யமும் உண்டே -ஸ்ரீ கீதாச்சார்யன் அன்றோ –
அருள் கொண்டு அன்றோ திருவாய் மொழியும் மலர்ந்தது
ப்ரகடி தருஷா தத் குரூன் வஞ்ச யந்தம் -குரு வம்சம் -பாண்டவர்களுக்காக –
இவள் குழல் முடிக்க அன்றோ அனைத்து ஆனைத் தொழில்களும் செய்தானே –
வாக் சாதுர்யத்தால் வெண்ணெய் பெண்கள் களவு க்ருத்யங்கள் செய்து அருளினான் என்றுமாம்
பாணவ் த்ருத்வா ப்ரமத பரிதம் ஸ்வாது ஸஹ் யங்கவீநம் -பிரேமையால் ஆஸ்ரிதர் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யமே தாரகம்-
ப்ரேமையை லோகத்தார் காணாமல் ஒளித்து வைத்தால் அன்றோ இவன் விரும்புவான் –
வெண்ணெய் போல் சுத்தம் உருகி உள்ள மனம் அன்றோ இவர்களுக்கு -அவர்களுக்கு இவனும் உருகுவானே
ராதா சங்கே விர சித ருதுகம் ராஜ கோபால மீடே –நப்பின்னை ஆழ்வார்கள் –ஆயர் மட மகள் -நீளா தேவி –
அஷ்ட சஹி -ராதிகா ரமணன் -ராதா கோஷ்ட்டி -கோலாட்டம் -ராசக்க்ரீடை -வல்லபீ மண்டலே மாதவோ ந்ருத்யதீ –
திவ்ய பீதாம்பரம் வைஜயந்தி நவ கோடி மன்மதன் ப்ரேமையை சொல்ல
வியாசர் ஆழ்வார்கள் ராதா என்று ஸ்பஷ்டமாக சொல்ல மாட்டாமல் இருக்க இங்கே ஸ்பஷ்டமாகக் காட்டி அருளுகிறாரே –
தீபாவளி சமயம் -கோலாட்ட உத்சவம் ஸ்ரீ கிருஷ்ண பிரேமை -மீண்டும் நடத்தி இன்றும் –
ஸ்ரீ ராஜ கோபாலன் கையிலே கிளி உடன் சேவை -கிளியே ராதை
ஸ்ரீ மத் பாகவதம் பிரேமை பெயராலே ராதாவைச் சொல்லும்
அஷ்ட சஹி -என்பதால் ராதா சங்கே என்பதை மட்டும் -எட்டு தடவை பாட வைத்து அருளும் ஸ்ரீ ராஜ கோபாலன்
——————
அஸ்வா நிந்த்ராத்மஜ ரத க தாநாக ஸஞ்சார யந்தம்
பஸ்வா தீனா மவன நிபுணம் வேணு மா பூர யந்தம்
விச்வா சாட்ய ப்ரணத நிக மாந்தார்த்த முத்கோஷ யந்தம்
விச்வா தீஸம் வ்ரஜ சிசு மஹம் வேத சம்பால யந்தம் -9-
அஸ்வா நிந்த்ராத்மஜ ரதக தாநாக ஸஞ்சார யந்தம் -இந்திர குமாரன் அர்ஜுனனுக்காக -தேர் ஒட்டியும் –
பூர்ண ப்ரஹ்மம் -பார்த்த சாரதி என்னும் பெயர் பெறவே ஜகத் ஸ்ரஷ்டா -அவாப்த ஸமஸ்த காமன்
அலாப்ய லாபம் -குதிரை ஒட்டியும் சஞ்சாரம் -தூது சென்று பாண்டவர்களுக்காக தானம் வாங்கவும் சஞ்சாரம் –
பஸ்வா தீனா மவன நிபுணம் வேணு மா பூர யந்தம் -கறவைக் கணங்கள் –
பஸ்வாதி -ஆதி சப்தத்தால் அடியோங்களும் -அவனம் நிபுணன் சம் ரக்ஷணத்தில் வல்லவன் –
வேணு நாதத்தாலே ரக்ஷித்து அருளுவான்-ப்ரேமையை அன்றோ நாதம் வெளியிடுகிறது
விச்வா சாட்ய ப்ரணத நிக மாந்தார்த்த முத்கோஷ யந்தம் -பிரபஞ்சம் ஈர் ஏழு லோகங்கள் -அண்டங்கள் –
அகில அண்டங்களுக்கும் அதிபதி தானே விஸ்வாதீசன்-வேதாந்தங்கள் இவனையே உத்கோஷிக்கும் –
விச்வா தீஸம் வ்ரஜ சிசு மஹம் வேத சம்பால யந்தம்-அதே விச்வா தீசனே வ்ரஜ சிசுவாக -ஆயர் கொழுந்தாய் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே – உமிழ்ந்து மாயையால் புக்கு -உண்டாய் வெண்ணெய் சிறு மனுஷர் –ஆக்கை எய்தி -ஆழ்வார் –
அஹம் வேத சம்பால யந்தம்–அவனை ஸ்வாமி இரண்டு திருவாய் மொழி சமர்ப்பிக்கப் பெற்றேன்
அடியோம் பஜிப்போம் -ஸ்வாமி உடன் சேர்ந்து அவர் நிழலிலே ஒதுங்கி -என்றுமாம் –
————-
கம்ஸ த்வம்ஸே கலித குதுகம் காந்த கல்யாண சேலம்
தாநாதாநாத் தத்த விபவாதிக்ய நந்தத் குசேலம்
தேஹச் சாயா ஹஸித ஜல முக் கும்பஜம் பாரி நீலம்
சாம்பேயாட வ்யாடன நிபுணம் நவ்மி கோபால பாலம் -10-
கம்ஸ த்வம்ஸே கலித குதுகம் -கம்சனைத் தொலைத்து குதுகூலம் -தெய்வ தேவகியைப் பார்க்கப் போவதால்
காந்த கல்யாண சேலம் -பிரியமானவள் -ராதைக்காக கல்யாண குணக்கடல் -பீதாம்பர வஸ்திரம் தரித்து
மங்களம் உண்டாக்கி அருளுபவர்
தாந அதாநாத் தத்த விபவாதிக்ய நந்தத் குசேலம் –அன்புடன் தந்த அவல் –தானம் -அதானம் –
தேஹச் சாயா ஹஸித ஜல முக் கும்பஜம் பாரி நீலம் -நிழல் கூட தெரியாமல் ததி பாண்டத்துக்குள் –
ஒழித்து வைக்க –கும்பஜன் என்ற திரு நாமம் பெற்றான் இதனால் -முகில் வண்ணனாய் இருந்து மோக்ஷம் வாரி வழங்கினான்
சாம்பேயாட வ்யாடன நிபுணம் நவ்மி கோபால பாலம்-அடவி -சம்பகாரண்யம் -நிபுணனாய் அன்றோ இங்கே சேவை –
சாவிக் கொத்து தொங்கும் சேவை -மோக்ஷம் நிச்சயம் இத்தைச் சேவிக்கவே –
—————-
நத்யாஸ் தீரே ஜலமதி வசந் கோபிகா சேல ஜாலம்
ஹ்ருத்வா குந்த த்ரும விட பகம் தாஸூ தத் வ்ரீடி தா ஸூ
யா சந்தீ ஷு ஸ்வத இஹ புநஸ் சாஞ்சலீந் யாச மானம்
தேவா தீம்ச் ஸாத்ய வன சதுரம் நந்த ஸூ நும் நமாமி -11-
நத்யாஸ் தீரே ஜலமதி வசந் கோபிகா சேல ஜாலம் -வஸ்திர அபஹார லீலை அனுபவம் –
குருந்திடை கூறை பணியாய் –
ஹ்ருத்வா குந்த த்ரும விட பகம் தாஸூ தத் வ்ரீடி தா ஸூ -கதம்ப மரம் ஏறி -வஸ்திர ஜாலங்கள் உடன் இருக்க
யா சந்தீ ஷு ஸ்வத இஹ புநஸ் சாஞ்சலீந் யாச மானம் -கெஞ்சி -மீண்டும் -அஞ்சலி -தோழியும் நானும் தொழுதோம் –
துகிலைப் பணித்து அருளாயே –வஸ்திரத்துடனே ஸ்நானம் பண்ண வேண்டுமே -மாதா ஸ்தானமே யமுனை நதி –
அத்தை உணர்த்தும் கடமை இவனுக்குத் தானே கோபி சிறுமியர் களுக்கு –
தேவா தீம்ச் ஸாத்ய வன சதுரம் நந்த ஸூ நும் நமாமி-தேவாதி தேவன் -அத்ய இப்பொழுது –
வனத்தில் வாசம் -நந்தகோபன் குமாரனே இவன் அன்றோ
————-
ஜாதம் சோரம் ஸகல புவநா தார மத்யம் கிசோரம்
ஸா லங்காரம் வ்ரஜ யுவதிபி க்ல்ப்த ஸர்வோ பசாரம்
காரம் காரம் த நுஜ நித நம் தார யந்தம் ந தார்த்திம்
தீரோ தாரம் ப்ரதித ஸூ குணம் நவ்மி ஸாரம் ஸூ ராணாம் -12-
ஜாதம் சோரம் ஸகல புவநா தார மத்யம் கிசோரம் -வெண்ணெயும் நமது சித்தங்களையும் கொள்ளை கொள்பவன் அன்றோ –
அகில புவனங்களையும் ஆள்பவன் -பூர்ணம் ப்ரஹ்மம் -கிசோரம் -ஆல மா மரத்தின் மேல் ஒரு பாலகனாய் –
தனது திருவடி அம்ருதம் பருகிக் கொண்டு
ஸா லங்காரம் வ்ரஜ யுவதிபி க்ல்ப்த ஸர்வோ பசாரம் -ப்ரேமையை பிரகடப்படுத்தி கோபிமார்கள்-க்ல்ப்த- சூழ்ந்து -அலங்கரித்து –
காரம் காரம் த நுஜ நித நம் தார யந்தம் ந தார்த்திம் –கோபிகளுக்கு ராசா லீலை -யார் ஊராருக்கு எது அபிமதமோ அப்படியே –
ஒவ் ஒருவருக்கும் ஒரு கண்ணனாக -யத் பாவம் தத் பவது யசோதைக்குப் பிள்ளை —
பதினாறாயிரம் தேவிமார் பணி செய்ய –
நத -சேவிப்பதும் -நர்த்தனம் பண்ணும் -இரண்டுமே உண்டே -கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணன் அன்றோ
தீரோ தாரம் ப்ரதித ஸூ குணம் நவ்மி ஸாரம் ஸூ ராணாம்-தீரனாயும் உதாரனாயும் -திருவடி ஆஸ்ரயித்து –
பிரகாசமான கல்யாண குணங்கள் –
செண்டும் கையுமாக திவ்ய மங்கள விக்ரஹம் -சேவிக்கவே ஸாம்யா பத்தி அருளுவான் –
தன்னை வணங்கித் தொழுவாரை தம்மாக்கி தம்மையே ஓக்க அருள் செய்வான் –
—————
ஆபீ ராணாம் மஹதி ஸதஸி ப்ராஜ மாநம் ப்ர காமம்
தத் ப்ரதான்ய பிரகடித நிஜா லப்ய ஸுவ்லப்ய பாஜம்
பாஸ்வத் சந்த்ராத்மக நிஜ த்ருசம் யாதவானா மதீஸம்
சேவே யாஹம் சபய விநயம் ராஜ கோபால மேனம் -13-
ஆபீ ராணாம் -ஆ பீர அதி பயங்கர -சரீர பலத்தால்
மஹதி ஸதஸி -மஹான்கள் உள்ள சபை -க்ஷத்ரியர் கூட்டம்
ப்ராஜ மாநம் ப்ர காமம் -பிரகாசமாக -விஸ்வரூபம் -புண்டரீகாக்ஷன் துரியோதனனும் சொல்லும் படி
த்ருதராஷ்டனுக்குக் கூட காட்சி தந்து தன்னை அடைய வைத்து -உன்னைக் கண்ட கண்கள்
வேறே ஒன்றைப் பார்க்க வேண்டாம் மீண்டும் குருடனாக்கி அருள்வாய் என்று வேண்டிக் கொள்ளும் படி அன்றோ பண்ணி அருளினாய்
தத் ப்ரதான்ய பிரகடித நிஜா லப்ய ஸுவ்லப்ய பாஜம் -விதுரர் ப்ராதான்யமாக இவன் திரு உள்ளத்தில் –
பாஸ்வத் சந்த்ராத்மக நிஜ த்ருசம் யாதவானா மதீஸம் -யாதவ கோன் நந்த கோப குமரன் -சந்த்ரன் போல் கடாக்ஷங்கள்
சேவே யாஹம் சபய விநயம் ராஜ கோபால மேனம் -சேவை கைங்கர்யம் செய்து கொண்டே இருக்குமாறு அருள வேண்டும் –
விவித விநித வேஷ தாரி -விபவத்திலும் அர்ச்சையிலும் -உண்டே
ஏனம்-இந்த ஸ்ரீ ராஜ கோபாலன் என்று நமக்குக் காட்டி அருளுகிறார் –
———————
மித்ரைர் ஜூஷ்டோ வ்ரஜ க்ருஹ வரான் ஸம் ப்ரவிஷ்டோதி ஹ்ருஷ்ட
சிக்யே பாண்டாந் யபி நவ பயோ தத் யுபேதாநி ஹ்ருத்வா
பீத்வா கிருஷ்ண ஸ்வயமபி சதான் பாயயன் பாலயேன் மாம்
ஆயாஸ் யத் தத் யுவதி நயன ஷீர பூத் கார காரீ –14-
மித்ரைர் ஜூஷ்டோ வ்ரஜ க்ருஹ வரான் ஸம் ப்ரவிஷ்டோதி ஹ்ருஷ்ட -தன்னேறாயிரம் பிள்ளைகள் உடன் –
கோபிகள் க்ருஹங்கள் தோறும் – பிரவேசம் -அதி ஹ்ருஷ்டராய் –
சிக்யே பாண்டாந் யபி நவ பயோ தத் யுபேதாநி ஹ்ருத்வா –நவ பாண்டத்துக்கும் தயிருக்கு வெண்ணெய்க்கும் –
பானையை உடைப்பானே வெண்ணெய் உண்ட பின்பு -சப்தம் கேட்டு உகக்குமே –
குயவனுக்கு பல நாள் வேலை தடியனுக்கு ஒரு நாள் வேலை –
பீத்வா கிருஷ்ண ஸ்வயமபி சதான் பாயயன் பாலயேன் மாம் -குடித்து -குடிக்கவும் பண்ணி அருளுவானே –
அடியேனையும் பரிபாலனம் பண்ணி அருளட்டும்
ஆயாஸ் யத் தத் யுவதி நயன ஷீர பூத் கார காரீ-பால் வெண்ணெய் மாமா மாட்டுப்பெண் உண்ணுவது போல்
லீலை -ஹாஸ்யமான கதை -தனது வாயில் உள்ளதை அவள் முகத்தில் துப்பி விட்டு ஓடினானாம் –
——————-
மித்ரைஸ் ஸாஹம் மிஹி ரத நயா வாரி பூரே விஹா ரான்
வ்யாதன் வாநா ஸபதி சகலா ஷால யன் தத் பயோபி
பூயஸ் தஸ்யாஸ் தட புவி ச தஸ் சாரயன் ஹ்ருஷ்ட சேதா
சாயம் ஸர்வா க்ருஹ முப நயன் கோப டிம்போவ தாந்ந –15-
மித்ரைஸ் ஸாஹம் மிஹி ரத நயா வாரி பூரே விஹா ரான் -அனைவரும் சேர்ந்து – துள்ளிக் குதித்து ஓடும் கறவைகள் –
இவன் பின்னே வருவதால் வந்த ஹர்ஷம் -செண்டு கையில் கொண்ட சேவை –
லோகத்தை வழி நடத்தும் பர ப்ரஹ்மம் தங்கள் பின்னால் வருவதால் வந்த ஹர்ஷம் -கோ பாலனம் செய்து அருளுவான் –
நீர் நிலைகளில்
வ்யாதன் வாநா ஸபதி சகலா ஷால யன் தத் பயோபி -கன்றுகள் பருகின பின்பு பாலைக் கறந்து –
பூயஸ் தஸ்யாஸ் தட புவி ச தஸ் சாரயன் ஹ்ருஷ்ட சேதா -குளிப்பாட்டி மேலே பூமியில் கொண்டு வந்து –
மீண்டும் புழுதி வர -அவற்றுக்கு ஹர்ஷம் -ஓட-வாலைப் பிடித்துக் கொண்டே இவனும் ஓடி-
கோபாலன் லீலையை கோ மடத்தார் அனுபவம்
சாயம் ஸர்வா க்ருஹ முப நயன் கோப டிம்போவ தாந்ந -சாயங்காலம் -திரும்ப -கோபிகள் விரஹ தாபத்தால்
இவன் வரவையே எதிர் பார்த்துக் கொண்டு இருந்து -திவத்திலும் பசி நிரை மேய்ப்பு உவத்தி –
அடம் பிடிப்பதிலும் ராஜா அன்றோ ராஜ கோபாலன் –
நய -முன்னே கூட்டிப் போவது உப நயனம் -ப்ரஹ்மம் அருகில் கூட்டிச் செல்ல யோக்யதை
டிம்ப -தலைவன் நம்மை ரக்ஷிக்கட்டும் –
—————
ப்ரக்யா தாஷ்ட த்வி குணித ஸஹஸ்ரேண கோபாங்க னானாம்
தோயே க்ரீடாம் ஸஹ விரஸயன் யாம்ஹி குல்யா முபேத்ய
ஹரி த்ராக்யா ஸரிதிதி ச தாம் க்யாபயன் தன் நிஜாங்கை
பூஜா ஜாலை ஜயதி லலிதோ ராஜ கோபால பால -16-
ப்ரக்யா தாஷ்ட த்வி குணித ஸஹஸ்ரேண கோபாங்க னானாம் -பிரக்யா பிரசித்தி பெற்ற –
இன்பப் பூ ஈயாதாள்-பாரிஜாதம் -பதினாறாயிரம் பெண்களையும் மீட்டு -தானே கைக்கொண்டு மஹிஷிகள் ஆக்கி அருளினானே –
அஷ்ட த்வி -16- குணிதம் -பெருக்கி என்றபடி -சஹஸ்ரம் -16000
தோயே க்ரீடாம் ஸஹ விரஸயன் யாம்ஹி குல்யா முபேத்ய -தோயம் -ஜலம்- ஜல க்ரீடை -ஸஹ விரஸயன்-
இவர்கள் உடன் -குல்ய -மறைந்து கண்ணாம் மூச்சி விளையாட்டு
ஹரி த்ராக்யா ஸரிதிதி ச தாம் க்யாபயன் தன் நிஜாங்கை -ஹரித்ரா நதி -ஹரித்ரம் -மஞ்சள்-
கோபிகைகள் உடன் ஜலக்ரீடையும் காட்டிக் கொடுத்தானே -மஞ்சள் நதி போல் ஆனதே –
கொப்பழித்த தூய்மை நீர் -குளம் இருந்தாலும் நதி என்றே பெயர் – தீர்த்தவாரி கண்டு அருளும் –
நிஜ ஸ்வரூபம் காட்டவே கண்டு மங்களா சாசனம் இதில்
பூஜா ஜாலை ஜயதி லலிதோ ராஜ கோபால பால –ஆனந்தம் -ஹர்ஷம் பொங்க வைத்த தர்சனம் –
ஜாலைகள் -பால லீலைகள் -லலித லீலைகள் -ஜெய கோஷம் இட்டு மகிழ்வோம்
————-
தோய க்ரீடா ஸமய மிஷதா பீர யோஷிஜ் ஐநா நாம்
பூஜா ஜாலம் மணி வில சிதம் ஸ்வஸ்ய ச ஸ்தாப யித்வா
தத்தத் பூஷா க்ரஹண ஸமயே ராஜ கோபால டிம்ப
ஸ்தா டங்கம் ச த்யுதி வில சிதம் குண்டலம் சாப்ய தத்த –17-
தோய க்ரீடா ஸமயம் இஷத ஆபீர யோஷிஜ் ஐநா நாம் -இதுவும் ஜல க்ரீடை சமயம் –
இஷ்டத்துடன் -ஆபீர-சூழ்ந்து -கோபிகள் கூட்டம்
பூஜா ஜாலம் மணி வில சிதம் ஸ்வஸ்ய ச ஸ்தாப யித்வா -தத்தத் பூஷா க்ரஹண ஸமயே-ஆனந்தமாக
ஹரித்ரா நதியில் இறங்க -முன்பு ஆபரணங்கள் கழற்றி வைத்ததைப் பார்த்து
மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் -அந்த சமயத்தில் –
ராஜ கோபால டிம்ப -ஸ்தா டங்கம் ச த்யுதி வில சிதம் குண்டலம் சாப்ய தத்த-மகர குண்டல தாரி –
ஒரு காதில் கோபியுடைய தோட்டைப் பூண்டு அந்த கோபியும் வெல்ல முடியாமல் –
அனைவரும் தனக்கு சாம்யம் -வெல்பவர் யாரும் இல்லை என்று காட்டவே இந்த லீலை –
————-
பூத்வா சாந்யை மணி விலஸிதை பூஷணைர் பூஷி தாங்கோ
வேத்ரம் த்ருத்வா த்ரிண திரு சிரம் கோ வ்ரஜ த்ராண யோக்யம்
தேவ ஸ்ரீ மான் த்ரிண தில விதோ தக்ஷிண த்வார காயாம்
ஆஸ்தே நித்யம் மஹித விபவோ தேவதா ஸார்வ பவ்ம-18-
பூத்வா சாந்யை மணி விலஸிதை பூஷணைர் பூஷி தாங்கோ -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும்
பெருமாள் அன்றோ -விலசிதை-பிரகாசிக்கும் படி ஆயினவே –
அசேதனங்களும் ஹர்ஷிக்கும் படி அன்றோ அவன் உடன் உள்ள ஸம்ச்லேஷம் –
வேத்ரம் த்ருத்வா த்ரிண திரு சிரம் கோ வ்ரஜ த்ராண யோக்யம் -வேத்ரம் கோல் சாட்டை –
செண்டு -திருக்கையில் கொண்டு –த்ரிணம் -புல் – கறவைகளும் இவனையே இமை கொட்டாமல் -அநந்யமாக ஆயினவே –
தேவ ஸ்ரீ மான் த்ரிண தில விதோ தக்ஷிண த்வார காயாம் ஆஸ்தே–இவனே தேவ ராஜன் ஸ்ரீ யபதி – –
திவ்ய அவயவ திவ்ய ஆபரண சேவை -தக்ஷிண துவாரகா தீசன் -செங்கமல வல்லித் தாயார் ஸமேதன் –
த்ரி புவனத்தில் உள்ள புல்லையும் எள்ளையும் அறிந்த ஸர்வஞ்ஞன் –
நித்யம் மஹித விபவோ தேவதா ஸார்வ பவ்ம-நித்ய வாஸம் பண்ணி அருளி –
பர வாஸூ தேவன் மூலவர் ராஜ கோபாலன் சந்தான கோபாலன் –திவ்ய மங்கள விக்ரகங்கள் உடன் சேவை
மஹா வைபவம் விளங்கும் படி சேவை சாதித்து அருளுகிறானே –
—————-
பார்ஸ்வ த்வந்த்வே சதத நிவ ஸத் ருக்மிணி ஸத்ய பாமா
ப்ரேமா லோக த்வி குணித தநுஸ் யாம தாமாபி ராம
தேவ ஸ்வா யம்புவ வர விமானாந்தரே ஸன்னிதாய
ப்ரம்ம ஆராத்யோ விலசதி ஸதா ராஜ கோபால நாமா –19-
பார்ஸ்வ த்வந்த்வே சதத நிவ ஸத் ருக்மிணி ஸத்ய பாமா -புருஷகார பூதைகள் அருகிலேயே எப்பொழுதும்
ப்ரேமா லோக த்வி குணித தநுஸ் யாம தாமாபி ராம -ஆலோகம் -கடாக்ஷம் -பிரேமை பொழியும் திருக்கண்கள் —
பலவிதமாகக் காட்டி அருள -பரஸ்பரம் திருக்கண்கள் ஒவ் ஒருவரை பார்த்து ரமிக்க -ரமிக்கச் செய்த –
தேவ ஸ்வா யம்புவ வர விமானாந்தரே ஸன்னிதாய –ஸ்வா யம்புவ விமானத்தின் கீழே -நித்ய ஸந்நிதானம் –
செய்து அருள -ஸ்யாம -நிற வண்ணத்துடன்
ப்ரம்ம ஆராத்யோ விலசதி ஸதா ராஜ கோபால நாமா-நான்முகன் தபஸ்ஸூ பண்ண -அன்றோ இங்கே சேவை –
பிரகாசமாக எப்பொழுதும் சேவை சாதித்து அருளும் –
————–
தப்தஸ் வர்ணாந்தர பரில ஸத் திவ்ய ரத்நாபி ராமை
பூஷா ஜாலை ஸூ ருசிர தரை கோடி ஸூர்ய பிரகாஸை
தீப்யன் முக்தா மணி விலசிதை பூஷி தாங்க ப்ரகாமம்
கோவிந்தோ கோ ப்ரளய விநுத பாது கோபால நேதா –20-
தப்தஸ் வர்ணாந்தர பரில ஸத் திவ்ய ரத்நாபி ராமை -சுட்டு உரைத்த நன் பொன் ஒளி ஒவ்வாதே –
இவன் சூட்டிக் கொண்டதால் திவ்யம் ஆகுமே –
பூஷா ஜாலை ஸூ ருசிர தரை கோடி ஸூர்ய பிரகாஸை -ஹர்ஷ பெருக்கு -அடியார்கள் குழாங்கள் –
ஸர்வ ரஸம் -கோபால நாம சங்கீர்த்தனம் தானே ஆனந்தப் பெருக்கு –
கோடி ஸூர்ய பிரகாசமாக இருந்தும் நமக்கு சேவிக்கும் படி தன்னை ஆக்கிக் கொண்டு அருளும்
தீப்யன் முக்தா மணி விலசிதை பூஷி தாங்க ப்ரகாமம் – முத்துக்களும் -விளக்கு -ஒளி -கொடுக்குமவன் அன்றோ –
அவைகளும் ஹர்ஷம் மிக்கு -அங்கங்கள் தோறும் ஸ்பர்சிக்க இவை பேர் ஆவல் பிரேமை கொண்டு
கோவிந்தோ கோ ப்ரளய விநுத பாது கோபால நேதா-நமது ஹிருதயம் அவனுக்கு ஆபரணம் -ஹ்ருதயத்துக்கு அவன் ஆபரணம் –
கோபலர் கோ ப்ரளயரால் தொழப்பட்ட கோ பாலனே கோவிந்தன்-நமக்கு ஆத்ம பூஷணமான அவன் -நம்மை ரக்ஷிக்கட்டும் –
——————
ஸா தூத்தம் ஸா வதம் ஸாயித நிஜ சரணாம் போஜ யுக்மாபி ராம
ஸ்ரீ மச் சாம்பேய வன்யாந்தர சததநி வஸத் ராஜ கோபால நந்தா
பத்யை ஹ்ருத்யா நவத்யை சமத நு த நுதிம் ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ
ஸேவத்வம் ப்ரேம பக்தா படத நர வராஸ் ஸந்ததம் மங்களம் வ –21-
ஸா தூத்தம் ஸா வதம் ஸாயித நிஜ சரணாம் போஜ யுக்மாபி ராம -ஸாதுக்களால் சூழப்பட்ட –
ஸ்ரீ ராஜ கோபாலன் திருவடிகளில் அபி நிவேசம் கொண்டு -யுகளம் -திருவடி இணைகள் –
ஸ்ரீ மச் சாம்பேய வன்யாந்தர சததநி வஸத் ராஜ கோபால நந்தா -சம்பகாரண்யம் -வனத்துக்குள் -நித்ய வாஸம் –
பல யுகங்கள் -பர வாஸூ தேவனே இங்கு நமக்காக –
பத்யை ஹ்ருத்யா நவத்யை சமத நு த நுதிம் ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -ஹ்ருதயத்தில் பிரவாஹமாக வழிந்த
இந்த ஸ்ரீ மா முனிகளுடைய ஸ்துதியை -பக்தைர் பாகவத ஸஹிதமாக -திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை பண்ணி ஸ்துதிக்க
ஸேவத்வம் ப்ரேம பக்தா படத நர வராஸ் ஸந்ததம் மங்களம் வ -ப்ரேமையுடன் நமக்காக அருளிச் செய்ததை
ப்ரேமையுடன் நாமும் அனுசந்தித்து சேவிக்க மங்களம் -நமக்கும் எங்கும் உண்டாகும் –
————– ———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ ராஜகோபால மன்னார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply