ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது-

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது
ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ பிராட்டியின் பெருமைகளை சொல்லும்
நான்கு ஸ்லோகங்களை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்.

தனியன்
ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

ஸ்ரீ சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

———-

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 2-

“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“

“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத்
தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஸ்ரீ ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ
அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி
நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே ஸ்ரீ நாயகியாகவும்
ஒரே நாதனான ஸ்ரீ நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே!
உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்”

—————-

ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

——–

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 4-

“சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே“

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது.
அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் ஸ்ரீ பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள
எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு
அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும்
தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே.
இதனால் ஸ்ரீ பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”

———————–

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும்
தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான ஸ்ரீ வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

ஆக இந்த நான்கு ஸ்லோகங்களால் ஸ்ரீ லக்ஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது
என்றத்தை அருளிச் செய்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading