ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 4-அத்தியாயம் -21-ஸ்ரீ ப்ருது மஹா ராஜருக்கு உபதேசம்–

மைத்ரேய உவாச
மௌக்திகை꞉ குஸுமஸ்ரக்³பி⁴ர்து³கூலை꞉ ஸ்வர்ணதோரணை꞉ .
மஹாஸுரபி⁴பி⁴ர்தூ⁴பைர்மண்டி³தம்ʼ தத்ர தத்ர வை .. 1..

சந்த³நாகு³ருதோயார்த்³ரரத்²யாசத்வரமார்க³வத் .
புஷ்பாக்ஷதப²லைஸ்தோக்மைர்லாஜைரர்சிர்பி⁴ரர்சிதம் .. 2..

ஸவ்ருʼந்தை³꞉ கத³லீஸ்தம்பை⁴꞉ பூக³போதை꞉ பரிஷ்க்ருʼதம் .
தருபல்லவமாலாபி⁴꞉ ஸர்வத꞉ ஸமலங்க்ருʼதம் .. 3..

ப்ரஜாஸ்தம்ʼ தீ³பப³லிபி⁴꞉ ஸம்ப்⁴ருʼதாஶேஷமங்க³லை꞉ .
அபீ⁴யுர்ம்ருʼஷ்டகன்யாஶ்ச ம்ருʼஷ்டகுண்ட³லமண்டி³தா꞉ .. 4..

ஶங்க²து³ந்து³பி⁴கோ⁴ஷேண ப்³ரஹ்மகோ⁴ஷேண சர்த்விஜாம் .
விவேஶ ப⁴வனம்ʼ வீர꞉ ஸ்தூயமானோ க³தஸ்மய꞉ .. 5..

பூஜித꞉ பூஜயாமாஸ தத்ர தத்ர மஹாயஶா꞉ .
பௌராஞ்ஜானபதா³ம்ʼஸ்தாம்ʼஸ்தான் ப்ரீத꞉ ப்ரியவரப்ரத³꞉ .. 6..

ஸ ஏவமாதீ³ன்யனவத்³யசேஷ்டித꞉
கர்மாணி பூ⁴யாம்ʼஸி மஹான் மஹத்தம꞉ .
குர்வன் ஶஶாஸாவனிமண்ட³லம்ʼ யஶ꞉
ஸ்பீ²தம்ʼ நிதா⁴யாருருஹே பரம்ʼ பத³ம் .. 7..

ஸூத உவாச
ததா³தி³ராஜஸ்ய யஶோ விஜ்ருʼம்பி⁴தம்ʼ
கு³ணைரஶேஷைர்கு³ணவத்ஸபா⁴ஜிதம் .
க்ஷத்தா மஹாபா⁴க³வத꞉ ஸத³ஸ்பதே
கௌஷாரவிம்ʼ ப்ராஹ க்³ருʼணந்தமர்சயன் .. 8..

விது³ர உவாச
ஸோ(அ)பி⁴ஷிக்த꞉ ப்ருʼது²ர்விப்ரைர்லப்³தா⁴ஶேஷஸுரார்ஹண꞉ .
பி³ப்⁴ரத்ஸ வைஷ்ணவம்ʼ தேஜோ பா³ஹ்வோர்யாப்⁴யாம்ʼ து³தோ³ஹ கா³ம் .. 9..

கோ ந்வஸ்ய கீர்திம்ʼ ந ஶ்ருʼணோத்யபி⁴ஜ்ஞோ
யத்³விக்ரமோச்சி²ஷ்டமஶேஷபூ⁴பா꞉ .
லோகா꞉ ஸபாலா உபஜீவந்தி காம-
மத்³யாபி தன்மே வத³ கர்ம ஶுத்³த⁴ம் .. 10..

மைத்ரேய உவாச
க³ங்கா³யமுனயோர்னத்³யோரந்தரா க்ஷேத்ரமாவஸன் .
ஆரப்³தா⁴னேவ பு³பு⁴ஜே போ⁴கா³ன் புண்யஜிஹாஸயா .. 11..

ஸர்வத்ராஸ்க²லிதாதே³ஶ꞉ ஸப்தத்³வீபைகத³ண்ட³த்⁴ருʼக் .
அன்யத்ர ப்³ராஹ்மணகுலாத³ன்யத்ராச்யுதகோ³த்ரத꞉ .. 12..

ஏகதா³(ஆ)ஸீன்மஹாஸத்ரதீ³க்ஷா தத்ர தி³வௌகஸாம் .
ஸமாஜோ ப்³ரஹ்மர்ஷீணாம்ʼ ச ராஜர்ஷீணாம்ʼ ச ஸத்தம .. 13..

தஸ்மின்னர்ஹத்ஸு ஸர்வேஷு ஸ்வர்சிதேஷு யதா²ர்ஹத꞉ .
உத்தி²த꞉ ஸத³ஸோ மத்⁴யே தாராணாமுடு³ராடி³வ .. 14..

ப்ராம்ʼஶு꞉ பீனாயதபு⁴ஜோ கௌ³ர꞉ கஞ்ஜாருணேக்ஷண꞉ .
ஸுனாஸ꞉ ஸுமுக²꞉ ஸௌம்ய꞉ பீனாம்ʼஸ꞉ ஸுத்³விஜஸ்மித꞉ .. 15..

வ்யூட⁴வக்ஷா ப்³ருʼஹச்ச்²ரோணிர்வலிவல்கு³த³லோத³ர꞉ .
ஆவர்தநாபி⁴ரோஜஸ்வீ காஞ்சனோருருத³க்³ரபாத் .. 16..

ஸூக்ஷ்மவக்ராஸிதஸ்னிக்³த⁴மூர்த⁴ஜ꞉ கம்பு³கந்த⁴ர꞉ .
மஹாத⁴னே து³கூலாக்³ர்யே பரிதா⁴யோபவீய ச .. 17..

வ்யஞ்ஜிதாஶேஷகா³த்ரஶ்ரீர்நியமே ந்யஸ்தபூ⁴ஷண꞉ .
க்ருʼஷ்ணாஜினத⁴ர꞉ ஶ்ரீமான் குஶபாணி꞉ க்ருʼதோசித꞉ .. 18..

7
ஶிஶிரஸ்னிக்³த⁴தாராக்ஷ꞉ ஸமைக்ஷத ஸமந்தத꞉ .
ஊசிவானித³முர்வீஶ꞉ ஸத³꞉ ஸம்ʼஹர்ஷயன்னிவ .. 19..

சாருசித்ரபத³ம்ʼ ஶ்லக்ஷ்ணம்ʼ ம்ருʼஷ்டம்ʼ கூ³ட⁴மவிக்லவம் .
ஸர்வேஷாமுபகாரார்த²ம்ʼ ததா³ அனுவத³ன்னிவ .. 20..

ராஜோவாச
ஸப்⁴யா꞉ ஶ்ருʼணுத ப⁴த்³ரம்ʼ வ꞉ ஸாத⁴வோ ய இஹாக³தா꞉ .
ஸத்ஸு ஜிஜ்ஞாஸுபி⁴ர்த⁴ர்மமாவேத்³யம்ʼ ஸ்வமனீஷிதம் .. 21..

அஹம்ʼ த³ண்ட³த⁴ரோ ராஜா ப்ரஜாநாமிஹ யோஜித꞉ .
ரக்ஷிதா வ்ருʼத்தித³꞉ ஸ்வேஷு ஸேதுஷு ஸ்தா²பிதா ப்ருʼத²க் .. 22..

தஸ்ய மே தத³னுஷ்டா²நாத்³யானாஹுர்ப்³ரஹ்மவாதி³ன꞉ .
லோகா꞉ ஸ்யு꞉ காமஸந்தோ³ஹா யஸ்ய துஷ்யதி தி³ஷ்டத்³ருʼக் .. 23..

ய உத்³த⁴ரேத்கரம்ʼ ராஜா ப்ரஜா த⁴ர்மேஷ்வஶிக்ஷயன் .
ப்ரஜானாம்ʼ ஶமலம்ʼ பு⁴ங்க்தே ப⁴க³ம்ʼ ச ஸ்வம்ʼ ஜஹாதி ஸ꞉ .. 24..

தத்ப்ரஜா ப⁴ர்த்ருʼபிண்டா³ர்த²ம்ʼ ஸ்வார்த²மேவானஸூயவ꞉ .
குருதாதோ⁴க்ஷஜதி⁴யஸ்தர்ஹி மே(அ)னுக்³ரஹ꞉ க்ருʼத꞉ .. 25..

யூயம்ʼ தத³னுமோத³த்⁴வம்ʼ பித்ருʼதே³வர்ஷயோ(அ)மலா꞉ .
கர்து꞉ ஶாஸ்துரனுஜ்ஞாதுஸ்துல்யம்ʼ யத்ப்ரேத்ய தத்ப²லம் .. 26..

அஸ்தி யஜ்ஞபதிர்நாம கேஷாஞ்சித³ர்ஹஸத்தமா꞉ .
இஹாமுத்ர ச லக்ஷ்யந்தே ஜ்யோத்ஸ்னாவத்ய꞉ க்வசித்³பு⁴வ꞉ .. 27..

மனோருத்தானபாத³ஸ்ய த்⁴ருவஸ்யாபி மஹீபதே꞉ .
ப்ரியவ்ரதஸ்ய ராஜர்ஷேரங்க³ஸ்யாஸ்மத்பிது꞉ பிது꞉ .. 28..

ஈத்³ருʼஶாநாமதா²ன்யேஷாமஜஸ்ய ச ப⁴வஸ்ய ச .
ப்ரஹ்லாத³ஸ்ய ப³லேஶ்சாபி க்ருʼத்யமஸ்தி க³தா³ப்⁴ருʼதா .. 29..

தௌ³ஹித்ராதீ³ன் ருʼதே ம்ருʼத்யோ꞉ ஶோச்யான் த⁴ர்மவிமோஹிதான் .
வர்க³ஸ்வர்கா³பவர்கா³ணாம்ʼ ப்ராயேணைகாத்ம்யஹேதுனா .. 30..

யத்பாத³ஸேவாபி⁴ருசிஸ்தபஸ்வினா-
மஶேஷஜன்மோபசிதம்ʼ மலம்ʼ தி⁴ய꞉ .
ஸத்³ய꞉ க்ஷிணோத்யன்வஹமேத⁴தீ ஸதீ
யதா² பதா³ங்கு³ஷ்ட²விநி꞉ஸ்ருʼதா ஸரித் .. 31..

விநிர்து⁴தாஶேஷமனோமல꞉ புமா-
நஸங்க³விஜ்ஞானவிஶேஷவீர்யவான் .
யத³ங்க்⁴ரிமூலே க்ருʼதகேதன꞉ புனர்ன
ஸம்ʼஸ்ருʼதிம்ʼ க்லேஶவஹாம்ʼ ப்ரபத்³யதே .. 32..

தமேவ யூயம்ʼ ப⁴ஜதாத்மவ்ருʼத்திபி⁴-
ர்மனோவச꞉காயகு³ணை꞉ ஸ்வகர்மபி⁴꞉ .
அமாயின꞉ காமது³கா⁴ங்க்⁴ரிபங்கஜம்ʼ
யதா²தி⁴காராவஸிதார்த²ஸித்³த⁴ய꞉ .. 33..

அஸாவிஹானேககு³ணோ(அ)கு³ணோ(அ)த்⁴வர꞉
ப்ருʼத²க்³வித⁴த்³ரவ்யகு³ணக்ரியோக்திபி⁴꞉ .
ஸம்பத்³யதே(அ)ர்தா²ஶயலிங்க³நாமபி⁴-
ர்விஶுத்³த⁴விஜ்ஞானக⁴ன꞉ ஸ்வரூபத꞉ .. 34..

ப்ரதா⁴னகாலாஶயத⁴ர்மஸங்க்³ரஹே
ஶரீர ஏஷ ப்ரதிபத்³ய சேதனாம் .
க்ரியாப²லத்வேன விபு⁴ர்விபா⁴வ்யதே
யதா²னலோ தா³ருஷு தத்³கு³ணாத்மக꞉ .. 35..

அஹோ மமாமீ விதரந்த்யனுக்³ரஹம்ʼ
ஹரிம்ʼ கு³ரும்ʼ யஜ்ஞபு⁴ஜாமதீ⁴ஶ்வரம் .
ஸ்வத⁴ர்மயோகே³ன யஜந்தி மாமகா
நிரந்தரம்ʼ க்ஷோணிதலே த்³ருʼட⁴வ்ரதா꞉ .. 36..

மா ஜாது தேஜ꞉ ப்ரப⁴வேன்மஹர்த்³தி⁴பி⁴-
ஸ்திதிக்ஷயா தபஸா வித்³யயா ச .
தே³தீ³ப்யமானே(அ)ஜிததே³வதானாம்ʼ
குலே ஸ்வயம்ʼ ராஜகுலாத்³த்³விஜானாம் .. 37..

ப்³ரஹ்மண்யதே³வ꞉ புருஷ꞉ புராதனோ
நித்யம்ʼ ஹரிர்யச்சரணாபி⁴வந்த³னாத் .
அவாப லக்ஷ்மீமனபாயினீம்ʼ யஶோ
ஜக³த்பவித்ரம்ʼ ச மஹத்தமாக்³ரணீ꞉ .. 38..

யத்ஸேவயாஶேஷகு³ஹாஶய꞉ ஸ்வராட்³
விப்ரப்ரியஸ்துஷ்யதி காமமீஶ்வர꞉ .
ததே³வ தத்³த⁴ர்மபரைர்வினீதை꞉
ஸர்வாத்மனா ப்³ரஹ்மகுலம்ʼ நிஷேவ்யதாம் .. 39..

புமான் லபே⁴தானதிவேலமாத்மன꞉
ப்ரஸீத³தோ(அ)த்யந்தஶமம்ʼ ஸ்வத꞉ ஸ்வயம் .
யந்நித்யஸம்ப³ந்த⁴நிஷேவயா தத꞉
பரம்ʼ கிமத்ராஸ்தி முக²ம்ʼ ஹவிர்பு⁴ஜாம் .. 40..

அஶ்னாத்யனந்த꞉ க²லு தத்த்வகோவிதை³꞉
ஶ்ரத்³தா⁴ஹுதம்ʼ யன்முக² இஜ்யநாமபி⁴꞉ .
ந வை ததா² சேதனயா ப³ஹிஷ்க்ருʼதே
ஹுதாஶனே பாரமஹம்ʼஸ்யபர்யகு³꞉ .. 41..

யத்³ப்³ரஹ்ம நித்யம்ʼ விரஜம்ʼ ஸனாதனம்ʼ
ஶ்ரத்³தா⁴தபோமங்க³லமௌனஸம்ʼயமை꞉ .
ஸமாதி⁴னா பி³ப்⁴ரதி ஹார்த²த்³ருʼஷ்டயே
யத்ரேத³மாத³ர்ஶ இவாவபா⁴ஸதே .. 42..

தேஷாமஹம்ʼ பாத³ஸரோஜரேணு-
மார்யாவஹேயாதி⁴கிரீடமாயு꞉ .
யம்ʼ நித்யதா³ பி³ப்⁴ரத ஆஶு பாபம்ʼ
நஶ்யத்யமும்ʼ ஸர்வகு³ணா ப⁴ஜந்தி .. 43..

கு³ணாயனம்ʼ ஶீலத⁴னம்ʼ க்ருʼதஜ்ஞம்ʼ
வ்ருʼத்³தா⁴ஶ்ரயம்ʼ ஸம்ʼவ்ருʼணதே(அ)னுஸம்பத³꞉ .
ப்ரஸீத³தாம்ʼ ப்³ரஹ்மகுலம்ʼ க³வாம்ʼ ச
ஜனார்த³ன꞉ ஸானுசரஶ்ச மஹ்யம் .. 44..

மைத்ரேய உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ பித்ருʼதே³வத்³விஜாதய꞉ .
துஷ்டுவுர்ஹ்ருʼஷ்டமனஸ꞉ ஸாது⁴வாதே³ன ஸாத⁴வ꞉ .. 46..

புத்ரேண ஜயதே லோகானிதி ஸத்யவதீ ஶ்ருதி꞉ .
ப்³ரஹ்மத³ண்ட³ஹத꞉ பாபோ யத்³வேனோ(அ)த்யதரத்தம꞉ .. 47..

ஹிரண்யகஶிபுஶ்சாபி ப⁴க³வன்னிந்த³யா தம꞉ .
விவிக்ஷுரத்யகா³த்ஸூனோ꞉ ப்ரஹ்லாத³ஸ்யானுபா⁴வத꞉ .. 48..

வீரவர்ய பித꞉ ப்ருʼத்²வ்யா꞉ ஸமா꞉ ஸஞ்ஜீவ ஶாஶ்வதீ꞉ .
யஸ்யேத்³ருʼஶ்யச்யுதே ப⁴க்தி꞉ ஸர்வலோகைகப⁴ர்தரி .. 49..

அஹோ வயம்ʼ ஹ்யத்³ய பவித்ரகீர்தே
த்வயைவ நாதே²ன முகுந்த³நாதா²꞉ .
ய உத்தமஶ்லோகதமஸ்ய விஷ்ணோ-
ர்ப்³ரஹ்மண்யதே³வஸ்ய கதா²ம்ʼ வ்யனக்தி .. 50..

நாத்யத்³பு⁴தமித³ம்ʼ நாத² தவாஜீவ்யானுஶாஸனம் .
ப்ரஜானுராகோ³ மஹதாம்ʼ ப்ரக்ருʼதி꞉ கருணாத்மனாம் .. 51..

அத்³ய நஸ்தமஸ꞉ பாரஸ்த்வயோபாஸாதி³த꞉ ப்ரபோ⁴ .
ப்⁴ராம்யதாம்ʼ நஷ்டத்³ருʼஷ்டீனாம்ʼ கர்மபி⁴ர்தை³வஸஞ்ஜ்ஞிதை꞉ .. 52..

நமோ விவ்ருʼத்³த⁴ஸத்த்வாய புருஷாய மஹீயஸே .
யோ ப்³ரஹ்ம க்ஷத்ரமாவிஶ்ய பி³ப⁴ர்தீத³ம்ʼ ஸ்வதேஜஸா .. 53..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ஏகவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 21..

———————————–

ஸ்ரீ ப்ருது மகாராஜா ராஜ்ஜியத்திற்குத் திரும்பி மக்களால் வரவேற்கப்பட்டு மிகவும் சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் செய்தார்.
மக்களுடைய தேவைகளை எல்லாம் நன்கு பூர்த்தி செய்த அவருடைய புகழ் திக்கெங்கும் பரவிற்று.
அவருடைய ராஜ்யமானது உலகெங்கும் விஸ்தரிக்கப்பட்டு விளங்கியது.

புண்ய வசத்தால் கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் உள்ள க்ஷேத்திரத்தில் பற்றற்று வசித்து வந்த ஒரு சமயம்
சத்ர யாகம் செய்கையில் அங்கு குழுமியுள்ள தேவர்கள் பிரம்மரிஷிகள் ராஜரிஷிகள் அனைவர் முன்னிலையில் கூறியது.

சபையோர்களே கேளுங்கள். இங்கு எழுந்தருளியுள்ள சாதுக்களாகிய உங்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.
தருமத்தை அறிய விரும்புவோர் தமது அபிப்பிராயத்தை சாதுக்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.,
அதனால் பேசத் துணிகிறேன்.

நான் பிரஜைகளை சிக்ஷிப்பதற்கும் ரக்ஷிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் அரசனாக நியமிக்கப்பட்டுள்ளேன்.
எந்த அரசன் மக்களை தருமவழியில் அழைத்துச் செல்லாமல் அவர்களிடம் இருந்து வரியை மட்டும் வசூலிக்கிறானோ
அவன் அவர்களின் பாவத்தை சுமந்து ஐஸ்வர்யத்தை இழக்கிறான்.
ஆகையால் பிரஜைகளே உங்கள் ஸ்வ தர்மத்தை பகவதர்ப்பண புத்தியுடன் அனுஷ்டிப்பீராக.
அதுதான் எனக்கு நீங்கள் அளிக்கும் வெகுமதி யாகும்.

தூய மனதுள்ள பித்ருக்களும் தேவர்களும் ரிஷிகளும் ஆகிய நீங்கள் என்னை ஆமோதிக்க வேண்டும்.
அந்தணர்கள் , அடியார்களுடன் பகவான் ஜனார்தனனும் எனக்கு அருள் புரிய வேண்டும்.
நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனும் நல்லொழுக்கமே செல்வமாக உடையவனும்,
நல்லோரைத் துணையாகக் கொண்டவனுமான மனிதனை சம்பத்துக்கள் நாடி வருகின்றன.”

இவ்வாறு கூறிய அரசனிடம் சாதுக்கள் மகிழ்ச்சி அடைந்து ‘நன்று நன்று’ எனக் கொண்டாடினர் .

அவனுடைய பிரஜைகள்,
“சத் புத்திரனால் பிதா பாவியானாலும் நற்கதி அடைகிறான் என்பது நிரூபணம் ஆயிற்று.
சாபம் பெற்று உயிரிழந்த பாவியான வேனனும் ஹிரண்ய கசிபு ப்ரஹ்லாதனைப் பெற்றது போல்
உம்மைப் புத்திரனாகப் பெற்றதால் நற்கதி அடைந்தான்.
பிராரப்த கர்மத்தால் சம்சாரத்தில் உழலும் எங்களைப் போன்றவர்களும் உம்மால் கரையேற்றப் பட்டோம்.
எந்த பகவான் க்ஷத்ரியர்கள் வேதம் ஓதுவோர் இவர்களுள் புகுந்து உலகை ரக்ஷிக்கிறாரோ அந்த சத்வ குணம் மிகுந்த
பரம புருஷராகிய உங்களுக்கு நமஸ்காரம் ” என்று அவரை வாழ்த்தினர்.

———————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading