ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் – 20-ஸ்ரீ விஷ்ணு ஆவிர்பாவம் -ஸ்ரீ ப்ருது மஹா ராஜரின் யாகத்தில் –-

மைத்ரேய உவாச
ப⁴க³வானபி வைகுண்ட²꞉ ஸாகம்ʼ மக⁴வதா விபு⁴꞉ .
யஜ்ஞைர்யஜ்ஞபதிஸ்துஷ்டோ யஜ்ஞபு⁴க் தமபா⁴ஷத .. 1..

ஶ்ரீப⁴க³வானுவாச
ஏஷ தே(அ)கார்ஷீத்³ப⁴ங்க³ம்ʼ ஹயமேத⁴ஶதஸ்ய ஹ .
க்ஷமாபயத ஆத்மானமமுஷ்ய க்ஷந்துமர்ஹஸி .. 2..

ஸுதி⁴ய꞉ ஸாத⁴வோ லோகே நரதே³வ நரோத்தமா꞉ .
நாபி⁴த்³ருஹ்யந்தி பூ⁴தேப்⁴யோ யர்ஹி நாத்மா கலேவரம் .. 3..

புருஷா யதி³ முஹ்யந்தி த்வாத்³ருʼஶா தே³வமாயயா .
ஶ்ரம ஏவ பரம்ʼ ஜாதோ தீ³ர்க⁴யா வ்ருʼத்³த⁴ஸேவயா .. 4..

அத꞉ காயமிமம்ʼ வித்³வானவித்³யாகாமகர்மபி⁴꞉ .
ஆரப்³த⁴ இதி நைவாஸ்மின் ப்ரதிபு³த்³தோ⁴(அ)னுஷஜ்ஜதே .. 5..

அஸம்ʼஸக்த꞉ ஶரீரே(அ)ஸ்மின்னமுனோத்பாதி³தே க்³ருʼஹே .
அபத்யே த்³ரவிணே வாபி க꞉ குர்யான்மமதாம்ʼ பு³த⁴꞉ .. 6..

ஏக꞉ ஶுத்³த⁴꞉ ஸ்வயஞ்ஜ்யோதிர்நிர்கு³ணோ(அ)ஸௌ கு³ணாஶ்ரய꞉ .
ஸர்வகோ³(அ)னாவ்ருʼத꞉ ஸாக்ஷீ நிராத்மா(ஆ)த்மா(ஆ)த்மன꞉பர꞉ .. 7..

ய ஏவம்ʼ ஸந்தமாத்மானமாத்மஸ்த²ம்ʼ வேத³ பூருஷ꞉ .
நாஜ்யதே ப்ரக்ருʼதிஸ்தோ²(அ)பி தத்³கு³ணை꞉ ஸ மயி ஸ்தி²த꞉ .. 8..

ய꞉ ஸ்வத⁴ர்மேண மாம்ʼ நித்யம்ʼ நிராஶீ꞉ ஶ்ரத்³த⁴யான்வித꞉ .
ப⁴ஜதே ஶனகைஸ்தஸ்ய மனோ ராஜன் ப்ரஸீத³தி .. 9..

பரித்யக்தகு³ண꞉ ஸம்யக்³த³ர்ஶனோ விஶதா³ஶய꞉ .
ஶாந்திம்ʼ மே ஸமவஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மகைவல்யமஶ்னுதே .. 10..

உதா³ஸீனமிவாத்⁴யக்ஷம்ʼ த்³ரவ்யஜ்ஞானக்ரியாத்மனாம் .
கூடஸ்த²மிமமாத்மானம்ʼ யோ வேதா³ப்னோதி ஶோப⁴னம் .. 11..

பி⁴ன்னஸ்ய லிங்க³ஸ்ய கு³ணப்ரவாஹோ
த்³ரவ்யக்ரியாகாரகசேதனா(ஆ)த்மன꞉ .
த்³ருʼஷ்டாஸு ஸம்பத்ஸு விபத்ஸு ஸூரயோ
ந விக்ரியந்தே மயி ப³த்³த⁴ஸௌஹ்ருʼதா³꞉ .. 12..

ஸம꞉ ஸமானோத்தமமத்⁴யமாத⁴ம꞉
ஸுகே² ச து³꞉கே² ச ஜிதேந்த்³ரியாஶய꞉ .
மயோபக்லுʼப்தாகி²லலோகஸம்ʼயுதோ
வித⁴த்ஸ்வ வீராகி²லலோகரக்ஷணம் .. 13..

ஶ்ரேய꞉ ப்ரஜாபாலனமேவ ராஜ்ஞோ
யத்ஸாம்பராயே ஸுக்ருʼதாத்ஷஷ்ட²மம்ʼஶம் .
ஹர்தான்யதா² ஹ்ருʼதபுண்ய꞉ ப்ரஜானா-
மரக்ஷிதா கரஹாரோ(அ)க⁴மத்தி .. 14..

ஏவம்ʼ த்³விஜாக்³ர்யானுமதானுவ்ருʼத்த-
த⁴ர்மப்ரதா⁴னோ(அ)ன்யதமோ(அ)விதாஸ்யா꞉ .
ஹ்ரஸ்வேன காலேன க்³ருʼஹோபயாதான்
த்³ரஷ்டாஸி ஸித்³தா⁴னனுரக்தலோக꞉ .. 15..

வரம்ʼ ச மத்கஞ்சன மானவேந்த்³ர
வ்ருʼணீஷ்வ தே(அ)ஹம்ʼ கு³ணஶீலயந்த்ரித꞉ .
நாஹம்ʼ மகை²ர்வை ஸுலப⁴ஸ்தபோபி⁴-
ர்யோகே³ன வா யத்ஸமசித்தவர்தீ .. 16..

மைத்ரேய உவாச
ஸ இத்த²ம்ʼ லோககு³ருணா விஷ்வக்ஸேனேன விஶ்வஜித் .
அனுஶாஸித ஆதே³ஶம்ʼ ஶிரஸா ஜக்³ருʼஹே ஹரே꞉ .. 17..

ஸ்ப்ருʼஶந்தம்ʼ பாத³யோ꞉ ப்ரேம்ணா வ்ரீடி³தம்ʼ ஸ்வேன கர்மணா .
ஶதக்ரதும்ʼ பரிஷ்வஜ்ய வித்³வேஷம்ʼ விஸஸர்ஜ ஹ .. 18..

ப⁴க³வானத² விஶ்வாத்மா ப்ருʼது²னோபஹ்ருʼதார்ஹண꞉ .
ஸமுஜ்ஜிஹானயா ப⁴க்த்யா க்³ருʼஹீதசரணாம்பு³ஜ꞉ .. 19..

ப்ரஸ்தா²நாபி⁴முகோ²(அ)ப்யேனமனுக்³ரஹவிலம்பி³த꞉ .
பஶ்யன் பத்³மபலாஶாக்ஷோ ந ப்ரதஸ்தே² ஸுஹ்ருʼத்ஸதாம் .. 20..

ஸ ஆதி³ராஜோ ரசிதாஞ்ஜலிர்ஹரிம்ʼ
விலோகிதும்ʼ நாஶகத³ஶ்ருலோசன꞉ .
ந கிஞ்சனோவாச ஸ பா³ஷ்பவிக்லவோ
ஹ்ருʼதோ³பகு³ஹ்யாமுமதா⁴த³வஸ்தி²த꞉ .. 21..

அதா²வம்ருʼஜ்யாஶ்ருகலா விலோகய-
ந்னத்ருʼப்தத்³ருʼக்³கோ³சரமாஹ பூருஷம் .
பதா³ ஸ்ப்ருʼஶந்தம்ʼ க்ஷிதிமம்ʼஸ உன்னதே
வின்யஸ்தஹஸ்தாக்³ரமுரங்க³வித்³விஷ꞉ .. 22..

ப்ருʼது²ருவாச
வரான்விபோ⁴ த்வத்³வரதே³ஶ்வராத்³பு³த⁴꞉
கத²ம்ʼ வ்ருʼணீதே கு³ணவிக்ரியாத்மனாம் .
யே நாரகாணாமபி ஸந்தி தே³ஹினாம்ʼ
தானீஶ கைவல்யபதே வ்ருʼணே ந ச .. 23..

ந காமயே நாத² தத³ப்யஹம்ʼ க்வசின்ன
யத்ர யுஷ்மச்சரணாம்பு³ஜாஸவ꞉ .
மஹத்தமாந்தர்ஹ்ருʼத³யான்முக²ச்யுதோ
வித⁴த்ஸ்வ கர்ணாயுதமேஷ மே வர꞉ .. 24..

ஸ உத்தமஶ்லோகமஹன்முக²ச்யுதோ
ப⁴வத்பதா³ம்போ⁴ஜஸுதா⁴கணானில꞉ .
ஸ்ம்ருʼதிம்ʼ புனர்விஸ்ம்ருʼததத்த்வவர்த்மனாம்ʼ
குயோகி³னாம்ʼ நோ விதரத்யலம்ʼ வரை꞉ .. 25..

யஶ꞉ ஶிவம்ʼ ஸுஶ்ரவ ஆர்யஸங்க³மே
யத்³ருʼச்ச²யா சோபஶ்ருʼணோதி தே ஸக்ருʼத் .
கத²ம்ʼ கு³ணஜ்ஞோ விரமேத்³வினா பஶும்ʼ
ஶ்ரீர்யத்ப்ரவவ்ரே கு³ணஸங்க்³ரஹேச்ச²யா .. 26..

அதா²ப⁴ஜே த்வாகி²லபூருஷோத்தமம்ʼ
கு³ணாலயம்ʼ பத்³மகரேவ லாலஸ꞉ .
அப்யாவயோரேகபதிஸ்ப்ருʼதோ⁴꞉ கலிர்ன
ஸ்யாத்க்ருʼதத்வச்சரணைகதானயோ꞉ .. 27..

ஜக³ஜ்ஜனன்யாம்ʼ ஜக³தீ³ஶ வைஶஸம்ʼ
ஸ்யாதே³வ யத்கர்மணி ந꞉ ஸமீஹிதம் .
கரோஷி ப²ல்க்³வப்யுரு தீ³னவத்ஸல꞉
ஸ்வ ஏவ தி⁴ஷ்ண்யே(அ)பி⁴ரதஸ்ய கிம்ʼ தயா .. 28..

ப⁴ஜந்த்யத² த்வாமத ஏவ ஸாத⁴வ꞉
வ்யுத³ஸ்தமாயாகு³ணவிப்⁴ரமோத³யம் .
ப⁴வத்பதா³னுஸ்மரணாத்³ருʼதே ஸதாம்ʼ
நிமித்தமன்யத்³ப⁴க³வன் ந வித்³மஹே .. 29..

மன்யே கி³ரம்ʼ தே ஜக³தாம்ʼ விமோஹினீம்ʼ
வரம்ʼ வ்ருʼணீஷ்வேதி ப⁴ஜந்தமாத்த² யத் .
வாசா நு தந்த்யா யதி³ தே ஜனோ(அ)ஸித꞉
கத²ம்ʼ புன꞉ கர்ம கரோதி மோஹித꞉ .. 30..

த்வன்மாயயாத்³தா⁴ ஜன ஈஶ க²ண்டி³தோ
யத³ன்யதா³ஶாஸ்த ருʼதாத்மனோ(அ)பு³த⁴꞉ .
யதா² சரேத்³பா³லஹிதம்ʼ பிதா ஸ்வயம்ʼ
ததா² த்வமேவார்ஹஸி ந꞉ ஸமீஹிதும் .. 31..

மைத்ரேய உவாச
இத்யாதி³ராஜேன நுத꞉ ஸ விஶ்வத்³ருʼக்தமாஹ
ராஜன் மயி ப⁴க்திரஸ்து தே .
தி³ஷ்ட்யேத்³ருʼஶீ தீ⁴ர்மயி தே க்ருʼதா யயா
மாயாம்ʼ மதீ³யாம்ʼ தரதி ஸ்ம து³ஸ்த்யஜாம் .. 32..

தத்த்வம்ʼ குரு மயாதி³ஷ்டமப்ரமத்த꞉ ப்ரஜாபதே .
மதா³தே³ஶகரோ லோக꞉ ஸர்வத்ராப்னோதி ஶோப⁴னம் .. 33..

மைத்ரேய உவாச
இதி வைன்யஸ்ய ராஜர்ஷே꞉ ப்ரதினந்த்³யார்த²வத்³வச꞉ .
பூஜிதோ(அ)னுக்³ருʼஹீத்வைனம்ʼ க³ந்தும்ʼ சக்ரே(அ)ச்யுதோ மதிம் .. 34..

தே³வர்ஷிபித்ருʼக³ந்த⁴ர்வஸித்³த⁴சாரணபன்னகா³꞉ .
கின்னராப்ஸரஸோ மர்த்யா꞉ க²கா³ பூ⁴தான்யனேகஶ꞉ .. 35..

யஜ்ஞேஶ்வரதி⁴யா ராஜ்ஞா வாக்³வித்தாஞ்ஜலிப⁴க்தித꞉ .
ஸபா⁴ஜிதா யயு꞉ ஸர்வே வைகுண்டா²னுக³தாஸ்தத꞉ .. 36..

ப⁴க³வானபி ராஜர்ஷே꞉ ஸோபாத்⁴யாயஸ்ய சாச்யுத꞉ .
ஹரன்னிவ மனோ(அ)முஷ்ய ஸ்வதா⁴ம ப்ரத்யபத்³யத .. 37..

அத்³ருʼஷ்டாய நமஸ்க்ருʼத்ய ந்ருʼப꞉ ஸந்த³ர்ஶிதாத்மனே .
அவ்யக்தாய ச தே³வானாம்ʼ தே³வாய ஸ்வபுரம்ʼ யயௌ .. 38..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 20..

—————————————

யக்ஞ புருஷனான மகா விஷ்ணு ப்ருதுவின் செய்கையால் சந்தோஷித்து இந்திரனுடன் வந்து ப்ருதுவிடம் பின் வருமாறு கூறினார்.

இந்த இந்திரன் தன் செயலுக்காக வருந்துகிறான். ஆகவே அவனை மன்னித்து விடுவதே சிறப்பாகும்.
நான் ஆத்மா சரீரம் அல்ல என்று அறிந்தவன் பிறருக்குத் துன்பம் விளைவிக்க மாட்டான்.
இந்த சரீரம் கர்ம வினையினால் ஏற்பட்டது என்று உணர்ந்தவன் அதனிடம் பற்றுக் கொள்ள மாட்டான்.

பலனைக் கருதாது ஸ்வ தர்மத்தின் மூலம் என்னை வழிபடுபவர் நாளடைவில் தூய உள்ளத்தைப் பெறுவார்.
மனம், புத்தி, குணங்கள், கர்மவினை இவைகளுடன் கூடய சூக்ஷ்ம சரீரமே பல சரீரங்களை உடைய பிறவிகளை எடுக்கிறது.
அதனால் என்னை உபாசிப்பவர்கள் சரீரசம்பந்தம் அற்று சுகதுக்கங்களை பொருட்படுத்துவதில்லை.

ஆகவே வீரனே , சம புத்தியுடன் ராஜ்ஜியத்தை பரிபாலிப்பாயாக. மக்களைக் காப்பதே அரசனுக்கு மேன்மையைத் தரும்.
அப்படிப்பட்ட அரசன் தன் குடிமக்களின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிறான்.
அதற்கு மாறாக மக்களின் நலம் கருதாமல் வரி மட்டும் வசூலிக்கும் அரசன் தன் புண்ணியங்களை இழப்பது
மட்டும் அல்லாமல் மக்களின் பாபங்களையும் ச்வீகரிக்கிறான்.

இந்த பூமியை சில காலம் ஆண்டு தர்ம பரிபாலனம் செய்து எல்லோரிடமும் நல்ல பெயரைப் பெறுவாய்.
விரைவில் சனகாதியர் முதலியோர் உன்னை உன் அரண்மனையில் சந்திப்பார்கள்.
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். “ என்று கூறினார்.

ப்ருது தன் செயலுக்காக வருந்திய இந்திரனை மன்னித்து பகவானின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார்.
பக்திப் பெருக்கால் உணர்ச்சி மேலிட்டு வார்த்தைகளே வராமல் கண்ணீர் பெருக பகவானின் உருவத்தைப் பார்க்க முடியாமல்
தத்தளித்துப் பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்த ப்ருது தன் முன் மானிட உருவத்தில்
ஒரு கை கருடன் மேல் வைத்து நின்ற அவர் திருவுருவத்தை கண்ணாரக் கண்டார். பிறகு அவரைத் துதித்துப் பின்வருமாறு கூறினார்.

“பிரபோ , சரீர இச்சைகளைக் கடந்த எவன் இவ்வுலக சம்பந்தமான வரங்களை தேவாதி தேவனான் உம்மிடம் வேண்டுவான்?
இவ்வுலகம் மட்டும் இன்றி அவ்வுலக சுகங்களும் நான் வேண்டேன்.
உங்களிடம் இருந்து பெறும் பெரும் பேறான மோக்ஷத்தைக் கூட என் மனம் விரும்பவில்லை.

நான் வேண்டும் வரமெல்லாம் மகான்களிடமிருந்து உங்கள் பெருமையை கேட்டுக் கொண்டே இருக்க எனக்கு பதினாயிரம் காதுகள் வேண்டும்.
உங்கள் மகிமையாகிய அம்ருதத்தைத் சுமந்து வரும் மகான்களின் வார்த்தைகள் சரீர இச்சைகளால் யோகத்தை இழந்தவர்க்கும்
நற்கதி அடைவிக்கும்.இதைத் தவிர நான் வேறு எதை வேண்டுவேன்.

உங்கள் சேவையே வாழ்க்கையின் பயன் ஆகும். அப்படி இருக்க உங்களை மறந்து வேதம் கூறும் கர்ம மார்க்கத்தின் வழி சென்று
உலக சுகங்களை நாடுவது என்பதும் உங்கள் மாயையே. “
ப்ருதுவின் சொற்களைக் கேட்டு அவருக்கு அருள் பாலித்து பகவான் அங்கிருந்து மறைந்தார்.

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading