மைத்ரேய உவாச
இத்யஜேனானுனீதேன ப⁴வேன பரிதுஷ்யதா .
அப்⁴யதா⁴யி மஹாபா³ஹோ ப்ரஹஸ்ய ஶ்ரூயதாமிதி .. 1..
மஹாதே³வ உவாச
நாக⁴ம்ʼ ப்ரஜேஶ பா³லானாம்ʼ வர்ணயே நானுசிந்தயே .
தே³வமாயாபி⁴பூ⁴தானாம்ʼ த³ண்ட³ஸ்தத்ர த்⁴ருʼதோ மயா .. 2..
ப்ரஜாபதேர்த³க்³த⁴ஶீர்ஷ்ணோ ப⁴வத்வஜமுக²ம்ʼ ஶிர꞉ .
மித்ரஸ்ய சக்ஷுஷேக்ஷேத பா⁴க³ம்ʼ ஸ்வம்ʼ ப³ர்ஹிஷோ ப⁴க³꞉ .. 3..
பூஷா து யஜமானஸ்ய த³த்³பி⁴ர்ஜக்ஷது பிஷ்டபு⁴க் .
தே³வா꞉ ப்ரக்ருʼதஸர்வாங்கா³ யே ம உச்சே²ஷணம்ʼ த³து³꞉ .. 4..
பா³ஹுப்⁴யாமஶ்வினோ꞉ பூஷ்ணோ ஹஸ்தாப்⁴யாம்ʼ க்ருʼதபா³ஹவ꞉ .
ப⁴வந்த்வத்⁴வர்யவஶ்சான்யே ப³ஸ்தஶ்மஶ்ருர்ப்⁴ருʼகு³ர்ப⁴வேத் .. 5..
மைத்ரேய உவாச
ததா³ ஸர்வாணி பூ⁴தானி ஶ்ருத்வா மீடு⁴ஷ்டமோதி³தம் .
பரிதுஷ்டாத்மபி⁴ஸ்தாத ஸாது⁴ ஸாத்⁴வித்யதா²ப்³ருவன் .. 6..
ததோ மீட்⁴வாம்ʼஸமாமந்த்ர்ய ஶுனாஸீரா꞉ ஸஹர்ஷிபி⁴꞉ .
பூ⁴யஸ்தத்³தே³வயஜனம்ʼ ஸமீட்⁴வத்³வேத⁴ஸோ யயு꞉ .. 7..
விதா⁴ய கார்த்ஸ்ன்யேன ச தத்³யதா³ஹ ப⁴க³வான் ப⁴வ꞉ .
ஸந்த³து⁴꞉ கஸ்ய காயேன ஸவனீயபஶோ꞉ ஶிர꞉ .. 8..
ஸந்தீ⁴யமானே ஶிரஸி த³க்ஷோ ருத்³ராபி⁴வீக்ஷித꞉ .
ஸத்³ய꞉ ஸுப்த இவோத்தஸ்தௌ² த³த்³ருʼஶே சாக்³ரதோ ம்ருʼட³ம் .. 9..
ததா³ வ்ருʼஷத்⁴வஜத்³வேஷகலிலாத்மா ப்ரஜாபதி꞉ .
ஶிவாவலோகாத³ப⁴வச்ச²ரத்³த்⁴ரத³ இவாமல꞉ .. 10..
ப⁴வஸ்தவாய க்ருʼததீ⁴ர்நாஶக்னோத³னுராக³த꞉ .
ஔத்கண்ட்²யாத்³பா³ஷ்பகலயா ஸம்பரேதாம்ʼ ஸுதாம்ʼ ஸ்மரன் .. 11..
க்ருʼச்ச்²ராத்ஸம்ʼஸ்தப்⁴ய ச மன꞉ ப்ரேமவிஹ்வலித꞉ ஸுதீ⁴꞉ .
ஶஶம்ʼஸ நிர்வ்யலீகேன பா⁴வேனேஶம்ʼ ப்ரஜாபதி꞉ .. 12..
த³க்ஷ உவாச
பூ⁴யானனுக்³ரஹ அஹோ ப⁴வதா க்ருʼதோ மே
த³ண்ட³ஸ்த்வயா மயி ப்⁴ருʼதோ யத³பி ப்ரலப்³த⁴꞉ .
ந ப்³ரஹ்மப³ந்து⁴ஷு ச வாம்ʼ ப⁴க³வன்னவஜ்ஞா
துப்⁴யம்ʼ ஹரேஶ்ச குத ஏவ த்⁴ருʼதவ்ரதேஷு .. 13..
வித்³யாதபோவ்ரதத⁴ரான் முக²த꞉ ஸ்ம விப்ரான்
ப்³ரஹ்மாத்மதத்த்வமவிதும்ʼ ப்ரத²மம்ʼ த்வமஸ்ராக் .
தத்³ப்³ராஹ்மணான் பரம ஸர்வவிபத்ஸு பாஸி
பால꞉ பஶூனிவ விபோ⁴ ப்ரக்³ருʼஹீதத³ண்ட³꞉ .. 14..
யோ(அ)ஸௌ மயாவிதி³ததத்த்வத்³ருʼஶா ஸபா⁴யாம்ʼ
க்ஷிப்தோ து³ருக்திவிஶிகை²ர்விக³ணய்ய தன்மாம் .
அர்வாக்பதந்தமர்ஹத்தம நிந்த³யாபாத்³த்³ருʼஷ்ட்யா(ஆ)ர்த்³ரயா
ஸ ப⁴க³வான் ஸ்வக்ருʼதேன துஷ்யேத் .. 15..
மைத்ரேய உவாச
க்ஷமாப்யைவம்ʼ ஸ மீட்⁴வாம்ʼஸம்ʼ ப்³ரஹ்மணா சானுமந்த்ரித꞉ .
கர்ம ஸந்தானயாமாஸ ஸோபாத்⁴யாயர்த்விகா³தி³பி⁴꞉ .. 16..
வைஷ்ணவம்ʼ யஜ்ஞஸந்தத்யை த்ரிகபாலம்ʼ த்³விஜோத்தமா꞉ .
புரோடா³ஶம்ʼ நிரவபன் வீரஸம்ʼஸர்க³ஶுத்³த⁴யே .. 17..
அத்⁴வர்யுணா(ஆ)த்தஹவிஷா யஜமானோ விஶாம்பதே .
தி⁴யா விஶுத்³த⁴யா த³த்⁴யௌ ததா² ப்ராது³ரபூ⁴த்³த⁴ரி꞉ .. 18..
ததா³ ஸ்வப்ரப⁴யா தேஷாம்ʼ த்³யோதயந்த்யா தி³ஶோ த³ஶ .
முஷ்ணம்ʼஸ்தேஜ உபானீதஸ்தார்க்ஷ்யேண ஸ்தோத்ரவாஜினா .. 19..
ஶ்யாமோ ஹிரண்யரஶனோ(அ)ர்ககிரீடஜுஷ்டோ
நீலாலகப்⁴ரமரமண்டி³தகுண்ட³லாஸ்ய꞉ .
கம்ப்³வப்³ஜசக்ரஶரசாபக³தா³ஸிசர்ம-
வ்யக்³ரைர்ஹிரண்மயபு⁴ஜைரிவ கர்ணிகார꞉ .. 20..
வக்ஷஸ்யதி⁴ஶ்ரிதவதூ⁴ர்வனமால்யுதா³ர-
ஹாஸாவலோககலயா ரமயம்ʼஶ்ச விஶ்வம் .
பார்ஶ்வப்⁴ரமத்³வ்யஜனசாமரராஜஹம்ʼஸ꞉
ஶ்வேதாதபத்ரஶஶினோபரி ரஜ்யமான꞉ .. 21..
தமுபாக³தமாலக்ஷ்ய ஸர்வே ஸுரக³ணாத³ய꞉ .
ப்ரணேமு꞉ ஸஹஸோத்தா²ய ப்³ரஹ்மேந்த்³ரத்ர்யக்ஷநாயகா꞉ .. 22..
தத்தேஜஸா ஹதருச꞉ ஸன்னஜிஹ்வா꞉ ஸஸாத்⁴வஸா꞉ .
மூர்த்⁴னா த்⁴ருʼதாஞ்ஜலிபுடா உபதஸ்து²ரதோ⁴க்ஷஜம் .. 23..
அப்யர்வாக்³வ்ருʼத்தயோ யஸ்ய மஹி த்வாத்மபு⁴வாத³ய꞉ .
யதா²மதி க்³ருʼணந்தி ஸ்ம க்ருʼதானுக்³ரஹவிக்³ரஹம் .. 24..
த³க்ஷோ க்³ருʼஹீதார்ஹணஸாத³னோத்தமம்ʼ
யஜ்ஞேஶ்வரம்ʼ விஶ்வஸ்ருʼஜாம்ʼ பரம்ʼ கு³ரும் .
ஸுநந்த³னந்தா³த்³யனுகை³ர்வ்ருʼதம்ʼ முதா³
க்³ருʼணன் ப்ரபேதே³ ப்ரயத꞉ க்ருʼதாஞ்ஜலி꞉ .. 25..
த³க்ஷ உவாச
ஶுத்³த⁴ம்ʼ ஸ்வதா⁴ம்ன்யுபரதாகி²லபு³த்³த்⁴யவஸ்த²ம்ʼ
சின்மாத்ரமேகமப⁴யம்ʼ ப்ரதிஷித்⁴ய மாயாம் .
திஷ்ட²ம்ʼஸ்தயைவ புருஷத்வமுபேத்ய தஸ்யாமாஸ்தே
ப⁴வானபரிஶுத்³த⁴ இவாத்மதந்த்ர꞉ .. 26..
ருʼத்விஜ ஊசு꞉
தத்த்வம்ʼ ந தே வயமனஞ்ஜன ருத்³ரஶாபாத்
கர்மண்யவக்³ரஹதி⁴யோ ப⁴க³வன் விதா³ம꞉ .
த⁴ர்மோபலக்ஷணமித³ம்ʼ த்ரிவ்ருʼத³த்⁴வராக்²யம்ʼ
ஜ்ஞாதம்ʼ யத³ர்த²மதி⁴தை³வமதோ³ வ்யவஸ்தா²꞉ .. 27..
ஸத³ஸ்யா ஊசு꞉
உத்பத்த்யத்⁴வன்யஶரண உருக்லேஶது³ர்கே³(அ)ந்தகோக்³ர-
வ்யாலான்விஷ்டே விஷயம்ருʼக³த்ருʼஷ்ணா(ஆ)த்மகே³ஹோருபா⁴ர꞉ .
த்³வந்த்³வஶ்வப்⁴ரே க²லம்ருʼக³ப⁴யே ஶோகதா³வே(அ)ஜ்ஞஸார்த²꞉
பாதௌ³கஸ்தே ஶரணத³ கதா³ யாதி காமோபஸ்ருʼஷ்ட꞉ .. 28..
ருத்³ர உவாச
தவ வரத³ வராங்க்⁴ராவாஶிஷேஹாகி²லார்தே²
ஹ்யபி முனிபி⁴ரஸக்தைராத³ரேணார்ஹணீயே .
யதி³ ரசிததி⁴யம்ʼ மாவித்³யலோகோ(அ)பவித்³த⁴ம்ʼ
ஜபதி ந க³ணயே தத்த்வத்பரானுக்³ரஹேண .. 29..
ப்⁴ருʼகு³ருவாச
யன்மாயயா க³ஹனயாபஹ்ருʼதாத்மபோ³தா⁴
ப்³ரஹ்மாத³யஸ்தனுப்⁴ருʼதஸ்தமஸி ஸ்வபந்த꞉ .
நாத்மன் ஶ்ரிதம்ʼ தவ வித³ந்த்யது⁴னாபி தத்த்வம்ʼ
ஸோ(அ)யம்ʼ ப்ரஸீத³து ப⁴வான் ப்ரணதாத்மப³ந்து⁴꞉ .. 30..
ப்³ரஹ்மோவாச
நைதத்ஸ்வரூபம்ʼ ப⁴வதோ(அ)ஸௌ பதா³ர்த²-
பே⁴த³க்³ரஹை꞉ புருஷோ யாவதீ³க்ஷேத் .
ஜ்ஞானஸ்ய சார்த²ஸ்ய கு³ணஸ்ய சாஶ்ரயோ
மாயாமயாத்³வ்யதிரிக்தோ யதஸ்த்வம் .. 31..
இந்த்³ர உவாச
இத³மப்யச்யுத விஶ்வபா⁴வனம்ʼ வபுரானந்த³கரம்ʼ மனோத்³ருʼஶாம் .
ஸுரவித்³விட்க்ஷபணைருதா³யுதை⁴ர்பு⁴ஜத³ண்டை³ருபபன்னமஷ்டபி⁴꞉ .. 32..
பத்ன்ய ஊசு꞉
யஜ்ஞோ(அ)யம்ʼ தவ யஜனாய கேன ஸ்ருʼஷ்டோ
வித்⁴வஸ்த꞉ பஶுபதிநாத்³ய த³க்ஷகோபாத் .
தம்ʼ நஸ்த்வம்ʼ ஶவஶயநாப⁴ஶாந்தமேத⁴ம்ʼ
யஜ்ஞாத்மன் நலினருசா த்³ருʼஶா புனீஹி .. 33..
ருʼஷய ஊசு꞉
அனன்விதம்ʼ தே ப⁴க³வன் விசேஷ்டிதம்ʼ
யதா³த்மனா சரஸி ஹி கர்ம நாஜ்யஸே .
விபூ⁴தயே யத உபஸேது³ரீஶ்வரீம்ʼ
ந மன்யதே ஸ்வயமனுவர்ததீம்ʼ ப⁴வான் .. 34..
ஸித்³தா⁴ ஊசு꞉
அயம்ʼ த்வத்கதா²ம்ருʼஷ்டபீயூஷனத்³யாம்ʼ
மனோவாரண꞉ க்லேஶதா³வாக்³னித³க்³த⁴꞉ .
த்ருʼஷார்தோ(அ)வகா³டோ⁴ ந ஸஸ்மார தா³வம்ʼ
ந நிஷ்க்ராமதி ப்³ரஹ்மஸம்பன்னவன்ன꞉ .. 35..
யஜமான்யுவாச
ஸ்வாக³தம்ʼ தே ப்ரஸீதே³ஶ துப்⁴யம்ʼ நம꞉
ஶ்ரீநிவாஸ ஶ்ரியா காந்தயா த்ராஹி ந꞉ .
த்வாம்ருʼதே(அ)தீ⁴ஶ நாங்கை³ர்மக²꞉ ஶோப⁴தே
ஶீர்ஷஹீன꞉ கப³ந்தோ⁴ யதா² பூருஷ꞉ .. 36..
லோகபாலா ஊசு꞉
த்³ருʼஷ்ட꞉ கிம்ʼ நோ த்³ருʼக்³பி⁴ரஸத்³க்³ரஹைஸ்த்வம்ʼ
ப்ரத்யக்³த்³ரஷ்டா த்³ருʼஶ்யதே யேன த்³ருʼஶ்யம் .
மாயா ஹ்யேஷா ப⁴வதீ³யா ஹி பூ⁴மன்
யஸ்த்வம்ʼ ஷஷ்ட²꞉ பஞ்சபி⁴ர்பா⁴ஸி பூ⁴தை꞉ .. 37..
யோகே³ஶ்வரா ஊசு꞉
ப்ரேயான்ன தே(அ)ன்யோ(அ)ஸ்த்யமுதஸ்த்வயி ப்ரபோ⁴
விஶ்வாத்மனீக்ஷேன்ன ப்ருʼத²க்³ய ஆத்மன꞉ .
அதா²பி ப⁴க்த்யேஶ தயோபதா⁴வதா-
மனன்யவ்ருʼத்த்யானுக்³ருʼஹாண வத்ஸல .. 38..
ஜக³து³த்³ப⁴வஸ்தி²திலயேஷு தை³வதோ
ப³ஹுபி⁴த்³யமான கு³ணயா(ஆ)த்மமாயயா .
ரசிதாத்மபே⁴த³மதயே ஸ்வஸம்ʼஸ்த²யா
விநிவர்திதப்⁴ரமகு³ணாத்மனே நம꞉ .. 39..
ப்³ரஹ்மோவாச
நமஸ்தே ஶ்ரிதஸத்த்வாய த⁴ர்மாதீ³னாம்ʼ ச ஸூதயே .
நிர்கு³ணாய ச யத்காஷ்டா²ம்ʼ நாஹம்ʼ வேதா³பரே(அ)பி ச .. 40..
அக்³நிருவாச
யத்தேஜஸாஹம்ʼ ஸுஸமித்³த⁴தேஜா
ஹவ்யம்ʼ வஹே ஸ்வத்⁴வர ஆஜ்யஸிக்தம் .
தம்ʼ யஜ்ஞியம்ʼ பஞ்சவித⁴ம்ʼ ச பஞ்சபி⁴꞉
ஸ்விஷ்டம்ʼ யஜுர்பி⁴꞉ ப்ரணதோ(அ)ஸ்மி யஜ்ஞம் .. 41..
தே³வா ஊசு꞉
புரா கல்பாபாயே ஸ்வக்ருʼதமுத³ரீக்ருʼத்ய விக்ருʼதம்ʼ
த்வமேவாத்³யஸ்தஸ்மின் ஸலில உரகே³ந்த்³ராதி⁴ஶயனே .
புமான் ஶேஷே ஸித்³தை⁴ர்ஹ்ருʼதி³ விம்ருʼஶிதாத்⁴யாத்மபத³வி꞉
ஸ ஏவாத்³யாக்ஷ்ணோர்ய꞉ பதி² சரஸி ப்⁴ருʼத்யானவஸி ந꞉ .. 42..
க³ந்த⁴ர்வா ஊசு꞉
அம்ʼஶாம்ʼஶாஸ்தே தே³வ மரீச்யாத³ய ஏதே
ப்³ரஹ்மேந்த்³ராத்³யா தே³வக³ணா ருத்³ரபுரோகா³꞉ .
க்ரீடா³பா⁴ண்ட³ம்ʼ விஶ்வமித³ம்ʼ யஸ்ய விபூ⁴மன்
தஸ்மை நித்யம்ʼ நாத² நமஸ்தே கரவாம .. 43..
வித்³யாத⁴ரா ஊசு꞉
த்வன்மாயயார்த²மபி⁴பத்³ய கலேவரே(அ)ஸ்மின்
க்ருʼத்வா மமாஹமிதி து³ர்மதிருத்பதை²꞉ ஸ்வை꞉ .
க்ஷிப்தோ(அ)ப்யஸத்³விஷயலாலஸ ஆத்மமோஹம்ʼ
யுஷ்மத்கதா²ம்ருʼதநிஷேவக உத்³வ்யுத³ஸ்யேத் .. 44..
ப்³ராஹ்மணா ஊசு꞉
த்வம்ʼ க்ரதுஸ்த்வம்ʼ ஹவிஸ்த்வம்ʼ ஹுதாஶ꞉ ஸ்வயம்ʼ
த்வம்ʼ ஹி மந்த்ர꞉ ஸமித்³த³ர்ப⁴ பாத்ராணி ச .
த்வம்ʼ ஸத³ஸ்யர்த்விஜோ த³ம்பதீ தே³வதா
அக்³னிஹோத்ரம்ʼ ஸ்வதா⁴ ஸோம ஆஜ்யம்ʼ பஶு꞉ .. 45..
த்வம்ʼ புரா கா³ம்ʼ ரஸாயா மஹாஸூகரோ
த³ம்ʼஷ்ட்ரயா பத்³மினீம்ʼ வாரணேந்த்³ரோ யதா² .
ஸ்தூயமானோ நத³ம்ˮல்லீலயா யோகி³பி⁴-
ர்வ்யுஜ்ஜஹர்த² த்ரயீகா³த்ர யஜ்ஞக்ரது꞉ .. 46..
ஸ ப்ரஸீத³ த்வமஸ்மாகமாகாங்க்ஷதாம்ʼ
த³ர்ஶனம்ʼ தே பரிப்⁴ரஷ்டஸத்கர்மணாம் .
கீர்த்யமானே ந்ருʼபி⁴ர்நாம்னி யஜ்ஞேஶ தே
யஜ்ஞவிக்⁴னா꞉ க்ஷயம்ʼ யாந்தி தஸ்மை நம꞉ .. 47..
மைத்ரேய உவாச
இதி த³க்ஷ꞉ கவிர்யஜ்ஞம்ʼ ப⁴த்³ர ருத்³ராபி⁴மர்ஶிதம் .
கீர்த்யமானே ஹ்ருʼஷீகேஶே ஸன்னின்யே யஜ்ஞபா⁴வனே .. 48..
ப⁴க³வான் ஸ்வேன பா⁴கே³ன ஸர்வாத்மா ஸர்வபா⁴க³பு⁴க் .
த³க்ஷம்ʼ ப³பா⁴ஷ ஆபா⁴ஷ்ய ப்ரீயமாண இவானக⁴ .. 49..
ஶ்ரீப⁴க³வானுவாச
அஹம்ʼ ப்³ரஹ்மா ச ஶர்வஶ்ச ஜக³த꞉ காரணம்ʼ பரம் .
ஆத்மேஶ்வர உபத்³ரஷ்டா ஸ்வயந்த்³ருʼக³விஶேஷண꞉ .. 50..
ஆத்மமாயாம்ʼ ஸமாவிஶ்ய ஸோ(அ)ஹம்ʼ கு³ணமயீம்ʼ த்³விஜ .
ஸ்ருʼஜன் ரக்ஷன் ஹரன் விஶ்வம்ʼ த³த்⁴ரே ஸஞ்ஜ்ஞாம்ʼ க்ரியோசிதாம் .. 51..
தஸ்மின் ப்³ரஹ்மண்யத்³விதீயே கேவலே பரமாத்மனி .
ப்³ரஹ்மருத்³ரௌ ச பூ⁴தானி பே⁴தே³னாஜ்ஞோ(அ)னுபஶ்யதி .. 52..
யதா² புமான் ந ஸ்வாங்கே³ஷு ஶிர꞉ பாண்யாதி³ஷு க்வசித் .
பாரக்யபு³த்³தி⁴ம்ʼ குருதே ஏவம்ʼ பூ⁴தேஷு மத்பர꞉ .. 53..
த்ரயாணாமேகபா⁴வானாம்ʼ யோ ந பஶ்யதி வை பி⁴தா³ம் .
ஸர்வபூ⁴தாத்மனாம்ʼ ப்³ரஹ்மன் ஸ ஶாந்திமதி⁴க³ச்ச²தி .. 54..
மைத்ரேய உவாச
ஏவம்ʼ ப⁴க³வதா(ஆ)தி³ஷ்ட꞉ ப்ரஜாபதிபதிர்ஹரிம் .
அர்சித்வா க்ரதுனா ஸ்வேன தே³வானுப⁴யதோ(அ)யஜத் .. 55..
ருத்³ரம்ʼ ச ஸ்வேன பா⁴கே³ன ஹ்யுபாதா⁴வத்ஸமாஹித꞉ .
கர்மணோத³வஸானேன ஸோமபாநிதரானபி .
உத³வஸ்ய ஸஹர்த்விக்³பி⁴꞉ ஸஸ்னாவவப்⁴ருʼத²ம்ʼ தத꞉ .. 56..
தஸ்மா அப்யனுபா⁴வேன ஸ்வேனைவாவாப்தராத⁴ஸே .
த⁴ர்ம ஏவ மதிம்ʼ த³த்த்வா த்ரித³ஶாஸ்தே தி³வம்ʼ யயு꞉ .. 57..
ஏவம்ʼ தா³க்ஷாயணீ ஹித்வா ஸதீ பூர்வகலேவரம் .
ஜஜ்ஞே ஹிமவத꞉ க்ஷேத்ரே மேனாயாமிதி ஶுஶ்ரும .. 58..
தமேவ த³யிதம்ʼ பூ⁴ய ஆவ்ருʼங்க்தே பதிமம்பி³கா .
அனன்யபா⁴வைகக³திம்ʼ ஶக்தி꞉ ஸுப்தேவ பூருஷம் .. 59..
ஏதத்³ப⁴க³வத꞉ ஶம்போ⁴꞉ கர்ம த³க்ஷாத்⁴வரத்³ருஹ꞉ .
ஶ்ருதம்ʼ பா⁴க³வதாச்சி²ஷ்யாது³த்³த⁴வான்மே ப்³ருʼஹஸ்பதே꞉ .. 60..
இத³ம்ʼ பவித்ரம்ʼ பரமீஶசேஷ்டிதம்ʼ
யஶஸ்யமாயுஷ்யமகௌ⁴க⁴மர்ஷணம் .
யோ நித்யதா³(ஆ)கர்ண்ய நரோ(அ)னுகீர்தயே-
த்³து⁴னோத்யக⁴ம்ʼ கௌரவ ப⁴க்திபா⁴வத꞉ .. 61..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ த³க்ஷயஜ்ஞஸந்தா⁴னம்ʼ நாம ஸப்தமோ(அ)த்⁴யாய꞉ .. 7..
——————————————
ஸ்ரீ பிரம்ம தேவர் கூறியதைக்கேட்ட ஸ்ரீ ருத்ரர் “ நான் மாயை வசத்தால் தவறிழைப்பவர்களைப் பற்றி எண்ணுவதில்லை.
தக்ஷனுக்கு அவன் அறிவு மயக்கத்தை நீக்கி நல் வழிப்படுத்தவே இந்த தண்டனை என்னால் கொடுக்கப்பட்டது..
இதனால் துன்பப்பட்ட அனைவரும் நலம் பெறுவர்.” என்றார்.
தேவர்கள் பரமசிவனை உடன் வந்து யாகத்தை நடத்தித்தருமாறு பிரார்த்தித்தார்கள்.
பிறகு எல்லோரும் யாக சாலையை அடைந்தனர். ருத்ரரின் ஆக்ஞைப்படி அங்கு ஓர் ஆட்டின் தலையை தக்ஷன் உடலில் பொறுத்தினர்.
தக்ஷன் சிவனுடைய கடாக்ஷத்தால் மீண்டும் உயிர் பெற்றான். தூங்கி எழுந்தவன் போல் தன் பழைய உருவைப் பெற்று
எதிரில் மங்கள ரூபியான மகாதேவனைக் கண்டான்.
அவர் அருளால் தக்ஷனுடைய மனம் தூய்மை அடைந்து சிவனைத் துதிக்கலானான்.
ஸ்ரீ தக்ஷன் கூறியது,
உங்களை நான் அவமதித்த போதும் என்னிடம் கருணை காட்டி நல் வழிப்படுத்தினீர்கள்.
தாங்களும் ஸ்ரீஹரியும் கடையாய மனிதனைக்கூட வெறுப்பதில்லை அப்படியிருக்க வேத மார்க்கத்தில் செல்லும் என்னை வெறுப்பீர்களா?
ஒரு இடையன் தன் கையில் உள்ள கோலினால் மாடுகள் சரியான வழி செல்லுமாறு செய்வதைப்போல் ஜீவர்களை வழி நடத்துகிறீர்கள்.
பூஜைக்குரியவரை நிந்தித்ததால் கொடும் நரகத்தில் விழுகின்ற என்னை தன் குளிர்ந்த பார்வையால் காப்பாற்றின பகவான் திருப்தி அடைவாராக”
இவ்வாறு ஸ்ரீ மகாதேவனிடம் மன்னிப்புக் கேட்டபின் தக்ஷப்ரஜாபதி பிரம்மாவின் உத்தரவு பெற்று
ருத்விக்குகளுடன் யாகத்தைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்.
அப்போது கையில் ஹவிஸ்ஸுடனும் பரிசுத்த பாவனையுடனும் தக்ஷன் ஸ்ரீ ஹரியை த்யானிக்க பகவான் ஹரியும்
எவ்விதமாக த்யானிக்கப்பட்டாரோ அதேபோல் அவர் முன் தோன்றினார்.
அவருடைய பிரகாசத்தால் அங்கு இருந்த எல்லா தேவர்களின் ஒளியும் மங்கியதாகக் காணப்பட்டது.
வேதமே இறக்கைகளான கருடன் மேல் நீல மேனியில் பீதாம்பரம், ஜ்வலிக்கும் ஆபரணங்கள், கிரீட குண்டலம் இவற்றுடன்
பஞ்சாயுதங்கள் தரித்து , திருமகள் மார்பனாய் வனமாலை தவழும் மார்புடன் மனதைக்கவரும் புன்னகை பூத்து தரிசனம் தந்த
ஸ்ரீமான் நாராயணனைப் பார்த்து பிரம்மதேவர் சிவன் உள்பட எல்லோரும் வணங்கினர்.
தஷப்ரஜாபதியாலும் ப்ருகுமுனிவர் மற்ற தேவர்களாலும் துதிக்கப்பட்ட ஸ்ரீ ஹரியானவர் கூறினார்.
ஆத்மா என்றும் , ஈஸ்வரன் என்றும், ஜீவசாக்ஷி என்றும், ஸ்வயம் ப்ரகாசன் என்றும், நிர்குணன் என்றும், கூறப்படும் நானே
பிரம்மாவும் சிவனும் உலகின் முதற் காரணமாகவும் ஆகின்றேன்.
என் குணமயமான மாயையினால் உலகை சிருஷ்டித்தும், காத்தும், அழித்தும் செய்பவனாக அந்ததந்த உருவமும் பெயரும் தரிக்கிறேன்.
அப்படி இருக்கையில் மூடர்கள் ஸ்ரீ பிரம்மாவையும் ஸ்ரீ ருத்திரனையும் இதர ஜீவராசிகளையும் ஸ்ரீ பரமாத்மாவும் எல்லா உயிர்களிலும்
அந்தர்யாமியாகவும் உள்ள என்னிலிருந்து வேறாகக் கருதுகின்றனர்.
உடல் உறுப்புகளை எப்படி மனிதன் தன்னிலிருந்து வேறாகக் காண்பதில்லையோ அவ்வாறே என்னை
பரமாத்மாவாகக் கண்டவர் பிற ஜீவர்களை என்னில் வேறாகக் கருதுவதில்லை.
அனைத்துலகத்திற்கும் ஆத்மாவாகவும் இயற்கையில் ஒன்றாகவும் உள்ள மும்மூர்த்திகளிடை
எவர் வேற்றுமையைக் காண்பதில்லையோ அவரே சாந்தி அடைவர். “
இவ்வாறு பகவானால் கூறப்பட்ட தக்ஷபிரஜாபதி அவரவர் ஹவிர்பாகங்களை முறைப்படி கொடுத்து யாகத்தைப் பூர்த்தி செய்தார்.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்.
இதற்குப் பிறகு தன் உடலை விட்ட தாக்ஷாயணி ஹிமவான் மகளாக அவதரித்து மறுபடி சிவனையே கணவனாக அடைந்தாள்
என்று ரிஷிகள் மூலம் அறிந்தேன், இந்த தக்ஷ யக்ஞம் பற்றிய விவரத்தை உத்தவர் மூலம் அறியப் பெற்றேன்.
இந்த பரம சிவன் லீலையை ஸ்ரத்தையுடனும் பக்தியுடனும் கேட்பவர்கள் புகழுடன் தீர்க்காயுளும் பாவங்களினின்று
விடுதலையும் அடைவார்கள். இதைச்சொல்பவரும் கேட்பவரும் முக்தி அடைவார்கள்.
அடுத்து ஸ்ரீ உத்தானபாத வம்சமும் ஸ்ரீ த்ருவ சரித்திரமும் தொடர்கிறது.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply