மைத்ரேய உவாச
ஏதாவது³க்த்வா விரராம ஶங்கர꞉
பத்ன்யங்க³நாஶம்ʼ ஹ்யுப⁴யத்ர சிந்தயன் .
ஸுஹ்ருʼத்³தி³த்³ருʼக்ஷு꞉ பரிஶங்கிதா ப⁴வாந்நிஷ்க்ராமதீ
நிர்விஶதீ த்³விதா⁴(ஆ)ஸ ஸா .. 1..
ஸுஹ்ருʼத்³தி³த்³ருʼக்ஷாப்ரதிகா⁴தது³ர்மனா꞉
ஸ்னேஹாத்³ருத³த்யஶ்ருகலாதிவிஹ்வலா .
ப⁴வம்ʼ ப⁴வான்யப்ரதிபூருஷம்ʼ ருஷா
ப்ரத⁴க்ஷ்யதீவைக்ஷத ஜாதவேபது²꞉ .. 2..
ததோ விநி꞉ஶ்வஸ்ய ஸதீ விஹாய தம்ʼ
ஶோகேன ரோஷேண ச தூ³யதா ஹ்ருʼதா³ .
பித்ரோரகா³த்ஸ்த்ரைணவிமூட⁴தீ⁴ர்க்³ருʼஹான்
ப்ரேம்ணா(ஆ)த்மனோ யோ(அ)ர்த⁴மதா³த்ஸதாம்ʼ ப்ரிய꞉ .. 3..
தாமன்வக³ச்ச²ந்த்³ருதவிக்ரமாம்ʼ ஸதீமேகாம்ʼ
த்ரிநேத்ரானுசரா꞉ ஸஹஸ்ரஶ꞉ .
ஸபார்ஷத³யக்ஷா மணிமன்மதா³த³ய꞉
புரோ வ்ருʼஷேந்த்³ராஸ்தரஸா க³தவ்யதா²꞉ .. 4..
தாம்ʼ ஸாரிகாகந்து³கத³ர்பணாம்பு³ஜ-
ஶ்வேதாதபத்ரவ்யஜனஸ்ரகா³தி³பி⁴꞉ .
கீ³தாயனைர்து³ந்து³பி⁴ஶங்க²வேணுபி⁴-
ர்வ்ருʼஷேந்த்³ரமாரோப்ய விடங்கிதா யயு꞉ .. 5..
ஆப்³ரஹ்மகோ⁴ஷோர்ஜிதயஜ்ஞவைஶஸம்ʼ
விப்ரர்ஷிஜுஷ்டம்ʼ விபு³தை⁴ஶ்ச ஸர்வஶ꞉ .
ம்ருʼத்³தா³ர்வய꞉காஞ்சனத³ர்ப⁴சர்மபி⁴-
ர்நிஸ்ருʼஷ்டபா⁴ண்ட³ம்ʼ யஜனம்ʼ ஸமாவிஶத் .. 6..
தாமாக³தாம்ʼ தத்ர ந கஶ்சநாத்³ரிய-
த்³விமானிதாம்ʼ யஜ்ஞக்ருʼதோ ப⁴யாஜ்ஜன꞉ .
ருʼதே ஸ்வஸ்ரூʼர்வை ஜனனீம்ʼ ச ஸாத³ரா꞉
ப்ரேமாஶ்ருகண்ட்²ய꞉ பரிஷஸ்வஜுர்முதா³ .. 7..
ஸௌத³ர்யஸம்ப்ரஶ்னஸமர்த²வார்தயா
மாத்ரா ச மாத்ருʼஷ்வஸ்ருʼபி⁴ஶ்ச ஸாத³ரம் .
த³த்தாம்ʼ ஸபர்யாம்ʼ வரமாஸனம்ʼ ச ஸா
நாத³த்த பித்ரா(அ)ப்ரதினந்தி³தா ஸதீ .. 8..
அருத்³ரபா⁴க³ம்ʼ தமவேக்ஷ்ய சாத்⁴வரம்ʼ
பித்ரா ச தே³வே க்ருʼதஹேலனம்ʼ விபௌ⁴ .
அநாத்³ருʼதா யஜ்ஞஸத³ஸ்யதீ⁴ஶ்வரீ
சுகோப லோகானிவ த⁴க்ஷ்யதீ ருஷா .. 9..
ஜக³ர்ஹ ஸாமர்ஷவிபன்னயா கி³ரா
ஶிவத்³விஷம்ʼ தூ⁴மபத²ஶ்ரமஸ்மயம் .
ஸ்வதேஜஸா பூ⁴தக³ணான் ஸமுத்தி²தான்
நிக்³ருʼஹ்ய தே³வீ ஜக³தோ(அ)பி⁴ஶ்ருʼண்வத꞉ .. 10..
தே³வ்யுவாச
ந யஸ்ய லோகே(அ)ஸ்த்யதிஶாயன꞉ ப்ரிய꞉
ததா²ப்ரியோ தே³ஹப்⁴ருʼதாம்ʼ ப்ரியாத்மன꞉ .
தஸ்மின் ஸமஸ்தாத்மனி முக்தவைரகே
ருʼதே ப⁴வந்தம்ʼ கதம꞉ ப்ரதீபயேத் .. 11..
தோ³ஷான் பரேஷாம்ʼ ஹி கு³ணேஷு ஸாத⁴வோ
க்³ருʼஹ்ணந்தி கேசின்ன ப⁴வாத்³ருʼஶா த்³விஜ .
கு³ணாம்ʼஶ்ச ப²ல்கூ³ன் ப³ஹுலீகரிஷ்ணவோ
மஹத்தமாஸ்தேஷ்வவித³த்³ப⁴வானக⁴ம் .. 12..
நாஶ்சர்யமேதத்³யத³ஸத்ஸு ஸர்வதா³
மஹத்³விநிந்தா³ குணபாத்மவாதி³ஷு .
ஸேர்ஷ்யம்ʼ மஹாபூருஷபாத³பாம்ʼஸுபி⁴꞉
நிரஸ்ததேஜ꞉ஸு ததே³வ ஶோப⁴னம் .. 13..
யத்³ த்³வ்யக்ஷரம்ʼ நாம கி³ரேரிதம்ʼ ந்ருʼணாம்ʼ
ஸக்ருʼத்ப்ரஸங்கா³த³க⁴மாஶு ஹந்தி தத் .
பவித்ரகீர்திம்ʼ தமலங்க்⁴யஶாஸனம்ʼ
ப⁴வானஹோ த்³வேஷ்டி ஶிவம்ʼ ஶிவேதர꞉ .. 14..
யத்பாத³பத்³மம்ʼ மஹதாம்ʼ மனோ(அ)லிபி⁴꞉
நிஷேவிதம்ʼ ப்³ரஹ்மரஸாஸவார்தி²பி⁴꞉ .
லோகஸ்ய யத்³வர்ஷதி சாஶிஷோ(அ)ர்தி²ன꞉
தஸ்மை ப⁴வான் த்³ருஹ்யதி விஶ்வப³ந்த⁴வே .. 15..
கிம்ʼ வா ஶிவாக்²யமஶிவம்ʼ ந விது³ஸ்த்வத³ன்யே
ப்³ரஹ்மாத³யஸ்தமவகீர்ய ஜடா꞉ ஶ்மஶானே .
தன்மால்யப⁴ஸ்மந்ருʼகபால்யவஸத்பிஶாசைர்யே
மூர்த⁴பி⁴ர்த³த⁴தி தச்சரணாவஸ்ருʼஷ்டம் .. 16..
கர்ணௌ பிதா⁴ய நிரயாத்³யத³கல்ப ஈஶே
த⁴ர்மாவிதர்யஸ்ருʼணிபி⁴ர்ந்ருʼபி⁴ரஸ்யமானே .
சி²ந்த்³யாத்ப்ரஸஹ்ய ருஶதீமஸதீம்ʼ ப்ரபு⁴ஶ்சே-
ஜ்ஜிஹ்வாமஸூனபி ததோ விஸ்ருʼஜேத்ஸ த⁴ர்ம꞉ .. 17..
அதஸ்தவோத்பன்னமித³ம்ʼ கலேவரம்ʼ
ந தா⁴ரயிஷ்யே ஶிதிகண்ட²க³ர்ஹிண꞉ .
ஜக்³த⁴ஸ்ய மோஹாத்³தி⁴ விஶுத்³தி⁴மந்த⁴ஸோ
ஜுகு³ப்ஸிதஸ்யோத்³த⁴ரணம்ʼ ப்ரசக்ஷதே .. 18..
ந வேத³வாதா³னனுவர்ததே மதி꞉
ஸ்வ ஏவ லோகே ரமதோ மஹாமுனே꞉ .
யதா² க³திர்தே³வமனுஷ்யயோ꞉ ப்ருʼத²க்
ஸ்வ ஏவ த⁴ர்மே ந பரம்ʼ க்ஷிபேத்ஸ்தி²த꞉ .. 19..
கர்மப்ரவ்ருʼத்தம்ʼ ச நிவ்ருʼத்தமப்ய்ருʼதம்ʼ
வேதே³ விவிச்யோப⁴யலிங்க³மாஶ்ரிதம் .
விரோதி⁴ தத்³யௌக³பதை³ககர்தரி
த்³வயம்ʼ ததா² ப்³ரஹ்மணி கர்ம நர்ச்ச²தி .. 20..
மா வ꞉ பத³வ்ய꞉ பிதரஸ்மதா³ஸ்தி²தா
யா யஜ்ஞஶாலாஸு ந தூ⁴மவர்த்மபி⁴꞉ .
தத³ன்னத்ருʼப்தைரஸுப்⁴ருʼத்³பி⁴ரீடி³தா
அவ்யக்தலிங்கா³ அவதூ⁴தஸேவிதா꞉ .. 21..
நைதேன தே³ஹேன ஹரே க்ருʼதாக³ஸோ
தே³ஹோத்³ப⁴வேனாலமலம்ʼ குஜன்மனா .
வ்ரீடா³ மமாபூ⁴த்குஜனப்ரஸங்க³த꞉
தஜ்ஜன்ம தி⁴க்³யோ மஹதாமவத்³யக்ருʼத் .. 22..
கோ³த்ரம்ʼ த்வதீ³யம்ʼ ப⁴க³வான் வ்ருʼஷத்⁴வஜோ
தா³க்ஷாயணீத்யாஹ யதா³ ஸுது³ர்மனா꞉ .
வ்யபேதனர்மஸ்மிதமாஶு தத்³த்⁴யஹம்ʼ
வ்யுத்ஸ்ரக்ஷ்ய ஏதத்குணபம்ʼ த்வத³ங்க³ஜம் .. 23..
மைத்ரேய உவாச
இத்யத்⁴வரே த³க்ஷமனூத்³ய ஶத்ருஹன்
க்ஷிதாவுதீ³சீம்ʼ நிஷஸாத³ ஶாந்தவாக் .
ஸ்ப்ருʼஷ்ட்வா ஜலம்ʼ பீதது³கூலஸம்ʼவ்ருʼதா
நிமீல்ய த்³ருʼக்³யோக³பத²ம்ʼ ஸமாவிஶத் .. 24..
க்ருʼத்வா ஸமானாவனிலௌ ஜிதாஸனா
ஸோதா³னமுத்தா²ப்ய ச நாபி⁴சக்ரத꞉ .
ஶனைர்ஹ்ருʼதி³ ஸ்தா²ப்ய தி⁴யோரஸி ஸ்தி²தம்ʼ
கண்டா²த்³ப்⁴ருவோர்மத்⁴யமனிந்தி³தானயத் .. 25..
ஏவம்ʼ ஸ்வதே³ஹம்ʼ மஹதாம்ʼ மஹீயஸா
முஹு꞉ ஸமாரோபிதமங்கமாத³ராத் .
ஜிஹாஸதீ த³க்ஷருஷா மனஸ்வினீ
த³தா⁴ர கா³த்ரேஷ்வனிலாக்³நிதா⁴ரணாம் .. 26..
தத꞉ ஸ்வப⁴ர்துஶ்சரணாம்பு³ஜாஸவம்ʼ
ஜக³த்³கு³ரோஶ்சிந்தயதீ ந சாபரம் .
த³த³ர்ஶ தே³ஹோ ஹதகல்மஷ꞉ ஸதீ
ஸத்³ய꞉ ப்ரஜஜ்வால ஸமாதி⁴ஜாக்³னினா .. 27..
தத்பஶ்யதாம்ʼ கே² பு⁴வி சாத்³பு⁴தம்ʼ மஹத்³-
ஹா ஹேதி வாத³꞉ ஸுமஹானஜாயத .
ஹந்த ப்ரியா தை³வதமஸ்ய தே³வீ
ஜஹாவஸூன் கேன ஸதீ ப்ரகோபிதா .. 28..
அஹோ அனாத்ம்யம்ʼ மஹத³ஸ்ய பஶ்யத
ப்ரஜாபதேர்யஸ்ய சராசரம்ʼ ப்ரஜா꞉ .
ஜஹாவஸூன் யத்³விமதா(ஆ)த்மஜா ஸதீ
மனஸ்வினீ மானமபீ⁴க்ஷ்ணமர்ஹதி .. 29..
ஸோ(அ)யம்ʼ து³ர்மர்ஷஹ்ருʼத³யோ ப்³ரஹ்மத்⁴ருக் ச
லோகே(அ)பகீர்திம்ʼ மஹதீமவாப்ஸ்யதி .
யத³ங்க³ஜாம்ʼ ஸ்வாம்ʼ புருஷத்³விடு³த்³யதாம்ʼ
ந ப்ரத்யஷேத⁴ன்ம்ருʼதயே(அ)பராத⁴த꞉ .. 30..
வத³த்யேவம்ʼ ஜனே ஸத்யா த்³ருʼஷ்ட்வாஸுத்யாக³மத்³பு⁴தம் .
த³க்ஷம்ʼ தத்பார்ஷதா³ ஹந்துமுத³திஷ்ட²ன்னுதா³யுதா⁴꞉ .. 31..
தேஷாமாபததாம்ʼ வேக³ம்ʼ நிஶாம்ய ப⁴க³வான் ப்⁴ருʼகு³꞉ .
யஜ்ஞக்⁴னக்⁴னேன யஜுஷா த³க்ஷிணாக்³னௌ ஜுஹாவ ஹ .. 32..
அத்⁴வர்யுணா ஹூயமானே தே³வா உத்பேதுரோஜஸா .
ருʼப⁴வோ நாம தபஸா ஸோமம்ʼ ப்ராப்தா꞉ ஸஹஸ்ரஶ꞉ .. 33..
தைரலாதாயுதை⁴꞉ ஸர்வே ப்ரமதா²꞉ ஸஹ கு³ஹ்யகா꞉ .
ஹன்யமானா தி³ஶோ பே⁴ஜுருஶத்³பி⁴ர்ப்³ரஹ்மதேஜஸா .. 34..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ஸதீதே³ஹோத்ஸர்கோ³ நாம சதுர்தோ²(அ)த்⁴யாய꞉ .. 4..
———————————
இவ்விதம் கூறி விட்டு வரப் போவதை அறிந்தவராக மகா தேவர் மௌனமானார். இதை கேட்ட ஸதீதேவியும் பந்துக்களைப் பார்க்க
ஆவலும் பதியின் சொற்கள் உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் கொண்டு உள்ளும் புறமும் போவதும் வருவதுமாக இருந்தாள்.
பின்னர் பெண்களுக்கே உரிய பிறந்த வீட்டு பாசத்தால் தூண்டப்பட்டு சாதுக்களுக்கு பிரியமான எவர்
தன் உடலில் பாதியைக் கொடுத்தாரோ அவரை விட்டு நீங்கிப் பிறந்தகம் புறப்பட்டாள்.
யாக சாலையை அடைந்த அவளைத் தாயாரையும் சகோதரிகளையும் தவிற மற்றவர்கள் தக்ஷனுக்கு பயந்து அலட்சியம் செய்தனர்.
யாகத்தில் ருத்ரனுக்கு பாகம் இல்லாததையும், தந்தையால் கணவருக்கு ஏற்பட்ட அவமதிப்பையும் தனக்கு நிகழ்ந்த அனாதரவையும்
கண்டு லோகேச்வரியான அவள் உலகங்களை எரிப்பவள் போல் கோபம் கொண்டாள்.
அவள் தன் தந்தையிடம் கூறியது,
“பரமேஸ்வரனுக்கு மேல் எவரும் இல்லை அவர் எல்லா உயிர்களுக்கும் பிரியமானவர்.
அவருக்கு வேண்டுபவர் வேண்டாதவர் என்பதில்லை. உம்மைத் தவிர வேறு எவர்தன அவர்மேல் விரோதம் பாராட்டுவார்?
சிவ என்ற நாமம் ஒருமுறை கூறினும் பாவத்தைப் போக்கக்கூடியது. பரிசுத்தமான கீர்த்தி யுடையவரும் மீற முடியாத
ஆணை யுள்ளவருமான அவரை மங்கலத்தை இழந்த நீங்கள் த்வேஷிக்கிறீர்கள் .
மயானத்தில் வசிக்கும் இவருடைய நிர்மால்யத்தை பிரம்மாதி தேவர்கள் சிரசில் தரிக்கிறார்கள்.
அவர்களுக்கு இவர் மங்கலமானவர் அல்ல அமங்கலமானவர் என்று தெரியாமற் போனது எப்படி?
பகவத் நிந்தையைக் கேட்டால் காதைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து அகல வேண்டும்.
அல்லது அப்படிச் செய்பவர்கள் நாக்கை அறுத்துவிட வேண்டும்.இது இரண்டும் முடியாமற் போனால் உயிரை விட்டு விட வேண்டும்.
ஆகவே நீங்கள் தந்த இந்த உடலை நான் விட்டு விடுகிறேன். உமது மகள் என்று த்வனிக்கும் தாக்ஷாயணி என்ற பெயரை
அந்த ரிஷபத்வஜர் விளியாட்டாகக் கூப்பிட்டால கூட நான் நொந்து போவேன்,”
மைத்ரேயர் கூறினார்.
இவ்விடம் கூறிவிட்டு மஞ்சள் பட்டணிந்து வடக்கு நோக்கி யோகத்தில் அமர்ந்து தன் பர்த்தாவை தியானம் செய்யும் போது
அவள் உடல் யோகாக்னியினால் எரிந்தது. பார்த்தவர் தக்ஷனை இகழ்ந்து ஸதீ தேவியின் செயலுக்கு பெரும் துயரம் அடைந்தனர்.
அப்போது அவளுக்குத் துணையாக வந்த சிவ கணங்கள் தக்ஷனைக் கொல்ல முயற்சிக்க ப்ருகு தன் மந்திர சக்தியால்
அவர்களை பின்வாங்கி ஓடும்படி செய்தார்.
அடுத்து வரும் அத்தியாயங்கள் தக்ஷனின் அழிவையும் பிறகு அவனை சிவன் தன் கருணையால் உயிர்ப்பித்ததையும்
தன் செயலுக்கு வருந்திய அவன் யக்ஞத்தை நிறைவு செய்வதையும் கூறுகின்றன.
———————————————————-
பல வருடங்கள் இந்த விரோதம் நீடித்தது. பிரம்மா தக்ஷனை தலைமை பிரஜாபதியாக நியமித்த பின்
அவனுடைய அகந்தை இன்னும் பெரிதானது. பிரம்ம ஞானிகளை அவமதித்து அவர்களை அழையாமல்
வாஜபேய யாகம் செய்துப் பின்னர் ப்ருஹ்ஸ்பதிஸவம் என்னும் சிறந்த யாகத்தைச் செய்ய ஆரம்பித்தான்.,
அதற்கு முனிவர்கள் தேவர்கள் முதலிய அனைவரும் தம் தம் பத்னிகளோடு வருகை தந்தனர்,
இதைப்பற்றி அங்கு செல்லும் தேவர்கள் மூலம் கேள்வியுற்று தாக்ஷாயணியாகிய சதி தேவி தன் பதியிடம் கூறினாள்.
“தேவ! உங்கள் மாமனாரான என் பிதா ஒரு மகத்தான யக்ஞம் செய்ய்ப் போகிறார்.
அதற்கு என் சகோதரிகள் அவரவர் பதிகளுடன் வருவார்கள். நானும் அவர்களையும் என் தாய் முதலியோரையும் சந்தித்து
பலகாலம் ஆகிவிட்டதால் அங்கு போக ஆசைப்படுகிறேன். நாம் இருவரும் செல்லலாமே, என்றாள்.
மகா தேவர் கூறினார். “தேவி, உறவினர் வீட்டிற்கு அழைக்காமலே செல்வதில் தவறில்லை தான் .
ஆனால் அவர்கள் நம்மிடம் விரோதமனப்பான்மையுடன் இல்லாவிடில்தான் அது சாத்தியம்.
நான் ஏன் உன் தந்தையை ஸத்ர யாகத்தில் வணங்க வில்லை என்றால் வணங்குதல் என்பது இதயத்தில் உறையும்
பரம புருஷனுக்கே அன்றி தேஹாபிமானம் கொண்டவர்க்கு செய்யத் தகாதது.
அப்படி யிருக்கையில் தவறே செய்யாத என்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்து என்னிடம் த்வேஷம் கொண்டவராதலால்
அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் உன்னால் சென்று பார்க்கத்தகாது.
என் சொல்லைக் கேளாமல் நீ போனால் அங்கு உனக்கு அவமதிப்பு உண்டாகும். அதுவே மரணத்திற்கும் காரணமாகும்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply