விது³ர உவாச
ப⁴வே ஶீலவதாம்ʼ ஶ்ரேஷ்டே² த³க்ஷோ து³ஹித்ருʼவத்ஸல꞉ .
வித்³வேஷமகரோத்கஸ்மாத³நாத்³ருʼத்யாத்மஜாம்ʼ ஸதீம் .. 1..
கஸ்தம்ʼ சராசரகு³ரும்ʼ நிர்வைரம்ʼ ஶாந்தவிக்³ரஹம் .
ஆத்மாராமம்ʼ கத²ம்ʼ த்³வேஷ்டி ஜக³தோ தை³வதம்ʼ மஹத் .. 2..
ஏததா³க்²யாஹி மே ப்³ரஹ்மன் ஜாமாது꞉ ஶ்வஶுரஸ்ய ச .
வித்³வேஷஸ்து யத꞉ ப்ராணாம்ʼஸ்தத்யஜே து³ஸ்த்யஜான் ஸதீ .. 3..
மைத்ரேய உவாச
புரா விஶ்வஸ்ருʼஜாம்ʼ ஸத்ரே ஸமேதா꞉ பரமர்ஷய꞉ .
ததா²மரக³ணா꞉ ஸர்வே ஸானுகா³ முனயோ(அ)க்³னய꞉ .. 4..
தத்ர ப்ரவிஷ்டம்ருʼஷயோ த்³ருʼஷ்ட்வார்கமிவ ரோசிஷா .
ப்⁴ராஜமானம்ʼ விதிமிரம்ʼ குர்வந்தம்ʼ தன்மஹத்ஸத³꞉ .. 5..
உத³திஷ்ட²ன்ஸத³ஸ்யாஸ்தே ஸ்வதி⁴ஷ்ண்யேப்⁴ய꞉ ஸஹாக்³னய꞉ .
ருʼதே விரிஞ்சம்ʼ ஶர்வம்ʼ ச தத்³பா⁴ஸாக்ஷிப்தசேதஸ꞉ .. 6..
ஸத³ஸஸ்பதிபி⁴ர்த³க்ஷோ ப⁴க³வான் ஸாது⁴ ஸத்க்ருʼத꞉ .
அஜம்ʼ லோககு³ரும்ʼ நத்வா நிஷஸாத³ ததா³ஜ்ஞயா .. 7..
ப்ராங்நிஷண்ணம்ʼ ம்ருʼட³ம்ʼ த்³ருʼஷ்ட்வா நாம்ருʼஷ்யத்தத³நாத்³ருʼத꞉ .
உவாச வாமம்ʼ சக்ஷுர்ப்⁴யாமபி⁴வீக்ஷ்ய த³ஹன்னிவ .. 8..
ஶ்ரூயதாம்ʼ ப்³ரஹ்மர்ஷயோ மே ஸஹ தே³வா꞉ ஸஹாக்³னய꞉ .
ஸாதூ⁴னாம்ʼ ப்³ருவதோ வ்ருʼத்தம்ʼ நாஜ்ஞானான்ன ச மத்ஸராத் .. 9..
அயம்ʼ து லோகபாலானாம்ʼ யஶோக்⁴னோ நிரபத்ரப꞉ .
ஸத்³பி⁴ராசரித꞉ பந்தா² யேன ஸ்தப்³தே⁴ன தூ³ஷித꞉ .. 10..
ஏஷ மே ஶிஷ்யதாம்ʼ ப்ராப்தோ யன்மே து³ஹிதுரக்³ரஹீத் .
பாணிம்ʼ விப்ராக்³னிமுக²த꞉ ஸாவித்ர்யா இவ ஸாது⁴வத் .. 11..
க்³ருʼஹீத்வா ம்ருʼக³ஶாவாக்ஷ்யா꞉ பாணிம்ʼ மர்கடலோசன꞉ .
ப்ரத்யுத்தா²நாபி⁴வாதா³ர்ஹே வாசாப்யக்ருʼத நோசிதம் .. 12..
லுப்தக்ரியாயாஶுசயே மானினே பி⁴ன்னஸேதவே .
அனிச்ச²ன்னப்யதா³ம்ʼ பா³லாம்ʼ ஶூத்³ராயேவோஶதீம்ʼ கி³ரம் .. 13..
ப்ரேதாவாஸேஷு கோ⁴ரேஷு ப்ரேதைர்பூ⁴தக³ணைர்வ்ருʼத꞉ .
அடத்யுன்மத்தவந்நக்³னோ வ்யுப்தகேஶோ ஹஸன் ருத³ன் .. 14..
சிதாப⁴ஸ்மக்ருʼதஸ்னான꞉ ப்ரேதஸ்ரங் ந்ரஸ்தி²பூ⁴ஷண꞉ .
ஶிவாபதே³ஶோ ஹ்யஶிவோ மத்தோ மத்தஜனப்ரிய꞉ .
பதி꞉ ப்ரமத²பூ⁴தானாம்ʼ தமோமாத்ராத்மகாத்மனாம் .. 15..
தஸ்மா உன்மாத³நாதா²ய நஷ்டஶௌசாய து³ர்ஹ்ருʼதே³ .
த³த்தா ப³த மயா ஸாத்⁴வீ சோதி³தே பரமேஷ்டி²னா .. 16..
மைத்ரேய உவாச
வினிந்த்³யைவம்ʼ ஸ கி³ரிஶமப்ரதீபமவஸ்தி²தம் .
த³க்ஷோ(அ)தா²ப உபஸ்ப்ருʼஶ்ய க்ருத்³த⁴꞉ ஶப்தும்ʼ ப்ரசக்ரமே .. 17..
அயம்ʼ து தே³வயஜன இந்த்³ரோபேந்த்³ராதி³பி⁴ர்ப⁴வ꞉ .
ஸஹ பா⁴க³ம்ʼ ந லப⁴தாம்ʼ தே³வைர்தே³வக³ணாத⁴ம꞉ .. 18..
நிஷித்⁴யமான꞉ ஸ ஸத³ஸ்யமுக்²யைர்த³க்ஷோ
கி³ரித்ராய விஸ்ருʼஜ்ய ஶாபம் .
தஸ்மாத்³விநிஷ்க்ரம்ய விவ்ருʼத்³த⁴மன்யுர்ஜகா³ம
கௌரவ்ய நிஜம்ʼ நிகேதனம் .. 19..
விஜ்ஞாய ஶாபம்ʼ கி³ரிஶானுகா³க்³ரணீ꞉
நந்தீ³ஶ்வரோ ரோஷகஷாயதூ³ஷித꞉ .
த³க்ஷாய ஶாபம்ʼ விஸஸர்ஜ தா³ருணம்ʼ
யே சான்வமோத³ம்ʼஸ்தத³வாச்யதாம்ʼ த்³விஜா꞉ .. 20..
ய ஏதன்மர்த்யமுத்³தி³ஶ்ய ப⁴க³வத்யப்ரதித்³ருஹி .
த்³ருஹ்யத்யஜ்ஞ꞉ ப்ருʼத²க்³த்³ருʼஷ்டிஸ்தத்த்வதோ விமுகோ² ப⁴வேத் .. 21..
க்³ருʼஹேஷு கூடத⁴ர்மேஷு ஸக்தோ க்³ராம்யஸுகே²ச்ச²யா .
கர்மதந்த்ரம்ʼ விதனுதே வேத³வாத³விபன்னதீ⁴꞉ .. 22..
பு³த்³த்⁴யா பராபி⁴த்⁴யாயின்யா விஸ்ம்ருʼதாத்மக³தி꞉ பஶு꞉ .
ஸ்த்ரீகாம꞉ ஸோ(அ)ஸ்த்வதிதராம்ʼ த³க்ஷோ ப³ஸ்தமுகோ²(அ)சிராத் .. 23..
வித்³யாபு³த்³தி⁴ரவித்³யாயாம்ʼ கர்மமய்யாமஸௌ ஜட³꞉ .
ஸம்ʼஸரந்த்விஹ யே சாமுமனு ஶர்வாவமானினம் .. 24..
கி³ர꞉ ஶ்ருதாயா꞉ புஷ்பிண்யா மது⁴க³ந்தே⁴ன பூ⁴ரிணா .
மத்²னா சோன்மதி²தாத்மான꞉ ஸம்முஹ்யந்து ஹரத்³விஷ꞉ .. 25..
ஸர்வப⁴க்ஷா த்³விஜா வ்ருʼத்த்யை த்⁴ருʼதவித்³யா தபோவ்ரதா꞉ .
வித்ததே³ஹேந்த்³ரியாராமா யாசகா விசரந்த்விஹ .. 26..
தஸ்யைவம்ʼ த³த³த꞉ ஶாபம்ʼ ஶ்ருத்வா த்³விஜகுலாய வை .
ப்⁴ருʼகு³꞉ ப்ரத்யஸ்ருʼஜச்சா²பம்ʼ ப்³ரஹ்மத³ண்ட³ம்ʼ து³ரத்யயம் .. 27..
ப⁴வவ்ரதத⁴ரா யே ச யே ச தான் ஸமனுவ்ரதா꞉
பாக²ண்டி³னஸ்தே ப⁴வந்து ஸச்சா²ஸ்த்ரபரிபந்தி²ன꞉ .. 28..
நஷ்டஶௌசா மூட⁴தி⁴யோ ஜடாப⁴ஸ்மாஸ்தி²தா⁴ரிண꞉ .
விஶந்து ஶிவதீ³க்ஷாயாம்ʼ யத்ர தை³வம்ʼ ஸுராஸவம் .. 29..
ப்³ரஹ்ம ச ப்³ராஹ்மணாம்ʼஶ்சைவ யத்³யூயம்ʼ பரினிந்த³த² .
ஸேதும்ʼ விதா⁴ரணம்ʼ பும்ʼஸாமத꞉ பாக²ண்ட³மாஶ்ரிதா꞉ .. 30..
ஏஷ ஏவ ஹி லோகானாம்ʼ ஶிவ꞉ பந்தா²꞉ ஸனாதன꞉ .
யம்ʼ பூர்வே சானுஸந்தஸ்து²ர்யத்ப்ரமாணம்ʼ ஜனார்த³ன꞉ .. 31..
தத்³ப்³ரஹ்ம பரமம்ʼ ஶுத்³த⁴ம்ʼ ஸதாம்ʼ வர்த்ம ஸனாதனம் .
விக³ர்ஹ்ய யாத பாக²ண்ட³ம்ʼ தை³வம்ʼ வோ யத்ர பூ⁴தராட் .. 32..
மைத்ரேய உவாச
தஸ்யைவம்ʼ வத³த꞉ ஶாபம்ʼ ப்⁴ருʼகோ³꞉ ஸ ப⁴க³வான் ப⁴வ꞉ .
நிஶ்சக்ராம தத꞉ கிஞ்சித்³விமனா இவ ஸானுக³꞉ .. 33..
தே(அ)பி விஶ்வஸ்ருʼஜ꞉ ஸத்ரம்ʼ ஸஹஸ்ரபரிவத்ஸரான் .
ஸம்ʼவிதா⁴ய மஹேஷ்வாஸ யத்ரேஜ்ய ருʼஷபோ⁴ ஹரி꞉ .. 34..
ஆப்லுத்யாவப்⁴ருʼத²ம்ʼ யத்ர க³ங்கா³ யமுனயான்விதா .
விரஜேனாத்மனா ஸர்வே ஸ்வம்ʼ ஸ்வம்ʼ தா⁴ம யயுஸ்தத꞉ .. 35..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ த³க்ஷஶாபோ நாம த்³விதீயோத்⁴யாய꞉ .. 2..
———————
ஸ்ரீ விதுரர் கூறினார்.
பெண்ணிடம் அன்பு கொண்டவரான தக்ஷன் ஏன் தன் பெண்ணான ஸதி தேவியை அலட்சியம் செய்தார்?
உலகம் போற்றும் தெய்வமான மகாதேவனிடம் ஏன் பகைமை கொண்டார்?
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்.
முன்னொரு காலத்தில் தேவர்களும் முனிவர்களும் பிரஜாபதிகளும் சேர்ந்து செய்த ஸத்ர யாகத்தில் தக்ஷ பிரஜாபதி
பிரவேசித்த போது அவருடைய் ப்ரகாசத்தால் கவரப்பட்டு அனைவரும் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்தனர்.
பிரம்மாவும் மகாதேவனும் மட்டும் எழுந்திருக்க வில்லை.
தக்ஷ பிரஜாபதி பிரம்ம தேவரை ( அவர் பிதாவானதால்)வணங்கி தன் ஆசனத்தில் உட்கார்ந்து அங்கு முன்னே இருந்த
மகாதேவனைக் கண்டு அவர் தனக்கு மரியாதை செலுத்தாததைக் கண்டு கோபம் கொண்டு நிந்தித்தார்.
“என் பெண்ணை மணம் செய்து கொண்டதனால் இவன் என் சிஷ்யனாகிறான்.
ஆனால் எனக்கு வாய் வார்த்தையால் கூட மரியாதை காட்ட வில்லை.
இவனுக்கு பிரம்ம தேவர் தூண்டுதலினால் தான் பெண்ணைக் கொடுத்தேன் “ என்று கூறி,
சிவனை சுடு காட்டில் திரிபவன், தமோ குணம் மிக்கவன் பூத கணங்களுக்கு பதியானவன்.
சிவன் என்ற மங்கள நாமத்திற்கு பொருத்தமில்லாதவன் என்று கூறிப் பலவாறு நிந்தித்தான்.
ஆனால் மகாதேவன் அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக வீற்றிருந்தார். அதைக் கண்டு மேலும் கோபம் கொண்ட தக்ஷன்
யாகங்களில் சிவனுக்கு ஹவிர்பாகம் இல்லாமல் போகக்கடவது என்று சாபமிட்டான்.,
இவ்வாறு அங்கிருந்த பெரியோர்கள் தடுத்தும் காரணமின்றி சிவனை நிந்தித்து விட்டு சாபம் கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டகன்றான்.
அதைக் கண்ட சிவனடியார்களுக்குள் சிறந்தவரான நந்தி தேவர் தக்ஷனுக்கும் அவனைச் சேர்ந்த அந்தணர்களுக்கும் பிரதி சாபம் இட்டார்.
மூடனும் அகந்தை கொண்டவனுமான் தக்ஷன் தத்துவ மார்கத்தை அறியாமல் கர்ம மார்கத்திலேயே உழன்று நாசம் அடையட்டும் என்றும் ,
விரைவிலேயே அறிவற்ற அவன் ஆட்டுத்தலை பெறுவான் என்றும் அவனுக்கு சாதகமாக இருந்த அந்தணர்களும் தவம் கெட்டு
விஷய சுகத்தில் உழலட்டும் என்றும் சாபம் கொடுத்தார்.
அதைக் கண்ட அந்த யாகத்தின் தலைமை புரோகிதரான ப்ருகு , சிவனை பின் பற்றுவோர் பாஷாண்டிகளாகத் திரியட்டும்
என்று சாபமிட்டார். இதையெல்லாம் பார்த்த மகாதேவன் வருத்தத்துடன் அந்த இடம் விட்டகன்றார்.
பிறகு ஹரியைக் குறித்து செய்யப்பட அந்த யாகத்தை ப்ரஜாபதிகள் அனைவரும் சேர்ந்து பூர்த்தி செய்து சுத்த மனத்தினராய்
கங்கை யமுனை இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் அவப்ருத ஸ்நானம் செய்தனர்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply