ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம்-32-ஸ்ரீ கபில முனிவர் நடவடிக்கை–

கபில உவாச
அத² யோ க்³ருʼஹமேதீ⁴யான் த⁴ர்மானேவாவஸன் க்³ருʼஹே .
காமமர்த²ம்ʼ ச த⁴ர்மான் ஸ்வான் தோ³க்³தி⁴ பூ⁴ய꞉ பிபர்தி தான் .. 1..

ஸ சாபி ப⁴க³வத்³த⁴ர்மாத்காமமூட⁴꞉ பராங்முக²꞉ .
யஜதே க்ரதுபி⁴ர்தே³வான் பித்ரூʼம்ʼஶ்ச ஶ்ரத்³த⁴யான்வித꞉ .. 2..

தச்ச்²ரத்³த⁴யா(ஆ)க்ராந்தமதி꞉ பித்ருʼதே³வவ்ரத꞉ புமான் .
க³த்வா சாந்த்³ரமஸம்ʼ லோகம்ʼ ஸோமபா꞉ புனரேஷ்யதி .. 3..

யதா³ சாஹீந்த்³ரஶய்யாயாம்ʼ ஶேதே(அ)னந்தாஸனோ ஹரி꞉ .
ததா³ லோகா லயம்ʼ யாந்தி த ஏதே க்³ருʼஹமேதி⁴னாம் .. 4..

யே ஸ்வத⁴ர்மான் ந து³ஹ்யந்தி தீ⁴ரா꞉ காமார்த²ஹேதவே .
நி꞉ஸங்கா³ ந்யஸ்தகர்மாண꞉ ப்ரஶாந்தா꞉ ஶுத்³த⁴சேதஸ꞉ .. 5..

நிவ்ருʼத்தித⁴ர்மநிரதா நிர்மமா நிரஹங்க்ருʼதா꞉ .
ஸ்வத⁴ர்மாக்²யேன ஸத்த்வேன பரிஶுத்³தே⁴ன சேதஸா .. 6..

ஸூர்யத்³வாரேண தே யாந்தி புருஷம்ʼ விஶ்வதோமுக²ம் .
பராவரேஶம்ʼ ப்ரக்ருʼதிமஸ்யோத்பத்த்யந்தபா⁴வனம் .. 7..

த்³விபரார்தா⁴வஸானே ய꞉ ப்ரலயோ ப்³ரஹ்மணஸ்து தே .
தாவத³த்⁴யாஸதே லோகம்ʼ பரஸ்ய பரசிந்தகா꞉ .. 8..

க்ஷ்மாம்போ⁴(அ)னலா(அ)னிலவியன்மன இந்த்³ரியார்த²-
பூ⁴தாதி³பி⁴꞉ பரிவ்ருʼதம்ʼ ப்ரதிஸஞ்ஜிஹீர்ஷு꞉ .
அவ்யாக்ருʼதம்ʼ விஶதி யர்ஹி கு³ணத்ரயாத்மா
காலம்ʼ பராக்²யமனுபூ⁴ய பர꞉ ஸ்வயம்பூ⁴꞉ .. 9..

ஏவம்ʼ பரேத்ய ப⁴க³வந்தமனுப்ரவிஷ்டா
யே யோகி³னோ ஜிதமருன்மனஸோ விராகா³꞉ .
தேனைவ ஸாகமம்ருʼதம்ʼ புருஷம்ʼ புராணம்ʼ
ப்³ரஹ்ம ப்ரதா⁴னமுபயாந்த்யக³தாபி⁴மானா꞉ .. 10..

அத² தம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ ஹ்ருʼத்பத்³மேஷு க்ருʼதாலயம் .
ஶ்ருதானுபா⁴வம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ பா⁴வேன பா⁴மினி .. 11..

ஆத்³ய꞉ ஸ்தி²ரசராணாம்ʼ யோ வேத³க³ர்ப⁴꞉ ஸஹர்ஷிபி⁴꞉ .
யோகே³ஶ்வரை꞉ குமாராத்³யை꞉ ஸித்³தை⁴ர்யோக³ப்ரவர்தகை꞉ .. 12..

பே⁴த³த்³ருʼஷ்ட்யாபி⁴மானேன நி꞉ஸங்கே³னாபி கர்மணா .
கர்த்ருʼத்வாத்ஸகு³ணம்ʼ ப்³ரஹ்ம புருஷம்ʼ புருஷர்ஷப⁴ம் .. 13..

ஸ ஸம்ʼஸ்ருʼத்ய புன꞉ காலே காலேனேஶ்வரமூர்தினா .
ஜாதே கு³ணவ்யதிகரே யதா²பூர்வம்ʼ ப்ரஜாயதே .. 14..

ஐஶ்வர்யம்ʼ பாரமேஷ்ட்²யம்ʼ ச தே(அ)பி த⁴ர்மவிநிர்மிதம் .
நிஷேவ்ய புனராயாந்தி கு³ணவ்யதிகரே ஸதி .. 15..

யே த்விஹாஸக்தமனஸ꞉ கர்மஸு ஶ்ரத்³த⁴யான்விதா꞉ .
குர்வந்த்யப்ரதிஷித்³தா⁴னி நித்யான்யபி ச க்ருʼத்ஸ்னஶ꞉ .. 16..

ரஜஸா குண்ட²மனஸ꞉ காமாத்மானோ(அ)ஜிதேந்த்³ரியா꞉ .
பித்ரூʼன் யஜந்த்யனுதி³னம்ʼ க்³ருʼஹேஷ்வபி⁴ரதாஶயா꞉ .. 17..

த்ரைவர்கி³காஸ்தே புருஷா விமுகா² ஹரிமேத⁴ஸ꞉ .
கதா²யாம்ʼ கத²னீயோருவிக்ரமஸ்ய மது⁴த்³விஷ꞉ .. 18..

நூனம்ʼ தை³வேன விஹதா யே சாச்யுதகதா²ஸுதா⁴ம் .
ஹித்வா ஶ்ருʼண்வந்த்யஸத்³கா³தா²꞉ புரீஷமிவ விட்³பு⁴ஜ꞉ .. 19..

த³க்ஷிணேன பதா²ர்யம்ண꞉ பித்ருʼலோகம்ʼ வ்ரஜந்தி தே .
ப்ரஜாமனு ப்ரஜாயந்தே ஶ்மஶானாந்தக்ரியாக்ருʼத꞉ .. 20..

ததஸ்தே க்ஷீணஸுக்ருʼதா꞉ புனர்லோகமிமம்ʼ ஸதி .
பதந்தி விவஶா தே³வை꞉ ஸத்³யோ விப்⁴ரம்ʼஶிதோத³யா꞉ .. 21..

தஸ்மாத்த்வம்ʼ ஸர்வபா⁴வேன ப⁴ஜஸ்வ பரமேஷ்டி²னம் .
தத்³கு³ணாஶ்ரயயா ப⁴க்த்யா ப⁴ஜனீயபதா³பு³ஜம் .. 22..

வாஸுதே³வே ப⁴க³வதி ப⁴க்தியோக³꞉ ப்ரயோஜித꞉ .
ஜனயத்யாஶு வைராக்³யம்ʼ ஜ்ஞானம்ʼ யத்³ப்³ரஹ்மத³ர்ஶனம் .. 23..

யதா³ஸ்ய சித்தமர்தே²ஷு ஸமேஷ்விந்த்³ரியவ்ருʼத்திபி⁴꞉ .
ந விக்³ருʼஹ்ணாதி வைஷம்யம்ʼ ப்ரியமப்ரியமித்யுத .. 24..

ஸ ததை³வாத்மனா(ஆ)த்மானம்ʼ நி꞉ஸங்க³ம்ʼ ஸமத³ர்ஶனம் .
ஹேயோபாதே³யரஹிதமாரூட⁴ம்ʼ பத³மீக்ஷதே .. 25..

ஜ்ஞானமாத்ரம்ʼ பரம்ʼ ப்³ரஹ்ம பரமாத்மேஶ்வர꞉ புமான் .
த்³ருʼஶ்யாதி³பி⁴꞉ ப்ருʼத²க்³பா⁴வைர்ப⁴க³வானேக ஈயதே .. 26..

ஏதாவானேவ யோகே³ன ஸமக்³ரேணேஹ யோகி³ன꞉ .
யுஜ்யதே(அ)பி⁴மதோ ஹ்யர்தோ² யத³ஸங்க³ஸ்து க்ருʼத்ஸ்னஶ꞉ .. 27..

ஜ்ஞானமேகம்ʼ பராசீனைரிந்த்³ரியைர்ப்³ரஹ்ம நிர்கு³ணம் .
அவபா⁴த்யர்த²ரூபேண ப்⁴ராந்த்யா ஶப்³தா³தி³த⁴ர்மிணா .. 28..

யதா² மஹானஹம்ʼ ரூபஸ்த்ரிவ்ருʼத்பஞ்சவித⁴꞉ ஸ்வராட் .
ஏகாத³ஶவித⁴ஸ்தஸ்ய வபுரண்ட³ம்ʼ ஜக³த்³யத꞉ .. 29..

ஏதத்³வை ஶ்ரத்³த⁴யா ப⁴க்த்யா யோகா³ப்⁴யாஸேன நித்யஶ꞉ .
ஸமாஹிதாத்மா நி꞉ஸங்கோ³ விரக்த்யா பரிபஶ்யதி .. 30..

இத்யேதத்கதி²தம்ʼ கு³ர்வி ஜ்ஞானம்ʼ தத்³ப்³ரஹ்மத³ர்ஶனம் .
யேனாவபு³த்³த்⁴யதே தத்த்வம்ʼ ப்ரக்ருʼதே꞉ புருஷஸ்ய ச .. 31..

ஜ்ஞானயோக³ஶ்ச மந்நிஷ்டோ² நைர்கு³ண்யோ ப⁴க்திலக்ஷண꞉ .
த்³வயோரப்யேக ஏவார்தோ² ப⁴க³வச்ச²ப்³த³லக்ஷண꞉ .. 32..

யதே²ந்த்³ரியை꞉ ப்ருʼத²க்³த்³வாரைரர்தோ² ப³ஹுகு³ணாஶ்ரய꞉ .
ஏகோ நானேயதே தத்³வத்³ப⁴க³வான் ஶாஸ்த்ரவர்த்மபி⁴꞉ .. 33..

க்ரியயா க்ரதுபி⁴ர்தா³னைஸ்தப꞉ஸ்வாத்⁴யாயமர்ஶனை꞉ .
ஆத்மேந்த்³ரியஜயேனாபி ஸந்ந்யாஸேன ச கர்மணாம் .. 34..

யோகே³ன விவிதா⁴ங்கே³ன ப⁴க்தியோகே³ன சைவ ஹி .
த⁴ர்மேணோப⁴யசிஹ்னேன ய꞉ ப்ரவ்ருʼத்திநிவ்ருʼத்திமான் .. 35..

ஆத்மதத்த்வாவபோ³தே⁴ன வைராக்³யேண த்³ருʼடே⁴ன ச .
ஈயதே ப⁴க³வானேபி⁴꞉ ஸகு³ணோ நிர்கு³ண꞉ ஸ்வத்³ருʼக் .. 36..

ப்ராவோசம்ʼ ப⁴க்தியோக³ஸ்ய ஸ்வரூபம்ʼ தே சதுர்வித⁴ம் .
காலஸ்ய சாவ்யக்தக³தேர்யோ(அ)ந்தர்தா⁴வதி ஜந்துஷு .. 37..

ஜீவஸ்ய ஸம்ʼஸ்ருʼதீர்ப³ஹ்வீரவித்³யாகர்மநிர்மிதா꞉ .
யாஸ்வங்க³ ப்ரவிஶன்னாத்மா ந வேத³ க³திமாத்மன꞉ .. 38..

நைதத்க²லாயோபதி³ஶேன்னாவினீதாய கர்ஹிசித் .
ந ஸ்தப்³தா⁴ய ந பி⁴ன்னாய நைவ த⁴ர்மத்⁴வஜாய ச .. 39..

ந லோலுபாயோபதி³ஶேன்ன க்³ருʼஹாரூட⁴சேதஸே .
நாப⁴க்தாய ச மே ஜாது ந மத்³ப⁴க்தத்³விஷாமபி .. 40..

ஶ்ரத்³த³தா⁴னாய ப⁴க்தாய வினீதாயானஸூயவே .
பூ⁴தேஷு க்ருʼதமைத்ராய ஶுஶ்ரூஷாபி⁴ரதாய ச .. 41..

ப³ஹிர்ஜாதவிராகா³ய ஶாந்தசித்தாய தீ³யதாம் .
நிர்மத்ஸராய ஶுசயே யஸ்யாஹம்ʼ ப்ரேயஸாம்ʼ ப்ரிய꞉ .. 42..

ய இத³ம்ʼ ஶ்ருʼணுயாத³ம்ப³ ஶ்ரத்³த⁴யா புருஷ꞉ ஸக்ருʼத் .
யோ வாபி⁴த⁴த்தே மச்சித்த꞉ ஸ ஹ்யேதி பத³வீம்ʼ ச மே .. 43..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயே த்³வாத்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 32

———————————————————-

இவ்விதம் ஸ்ரீ கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட ஸ்ரீ தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் ஸ்ரீ கபிலரை ஸ்துதித்தாள்.

தங்கள் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள்
சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டை விரலை
வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமே யில்லை அல்லவா?

துஷ்ட நிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹ ரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக் கொள்கிறீர்களே
அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.
எவருடைய நாம ஸ்மரணம், கதா ஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும்,
ஒரு முறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத் தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம்
ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

நான் வேதங்களின் சாரமானவரும், பர ப்ரஹ்மமும், பரம புருஷனும், ஒருமுகப் பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும்,
ஸ்ரீ கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்.”

ஸ்ரீ கபிலர் கூறினார்.

“தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். “

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்.

இவாறு ஸ்ரீ தேவ ஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு ஸ்ரீ கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார்.
ஸ்ரீ தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து ஸ்ரீ சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.

முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த ஸ்ரீ தேவ ஹூதி புத்திரனும் சென்ற பின் சிலகாலம் வ்யாகுலத்தில்
ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவ பாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள்.
இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து ஸ்ரீ பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.
அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்தி பதம் என்ற பெயருடன் ஒரு புண்ய க்ஷேத்திரமாயிற்று.

ஸ்ரீ கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வட கிழக்கு திசை நோக்கிச் சென்றார்.
சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் ஸ்துதிக்கப்பட்டு சமுத்ர ராஜனால் இடமளிக்கப் பெற்று
மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோக நிஷ்டையில் இருக்கிறார்.

எவன் ஆத்ம யோகமாகிய இந்த ஸ்ரீ கபிலோபதேசத்தை ஸ்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ
அவன் ஸ்ரீ பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ கபிலாவதாரத்தை முடிக்கிறார்.

ஸ்ரீ ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக் குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு ஸ்ரீ கபிலர் அருகில்
அதைக் கண்டு ஸ்ரீ கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள்.
பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.

———————————————————-

ஸ்ரீ கபிலர் கூறினார்.

பெரும்பாலான மக்கள் கிருஹஸ்த தர்மத்தில் ஈடுபட்டு தர்ம, அர்த்த் காமங்களாகிய மூன்று புருஷார்த்தங்களையே விரும்புகின்றனர்.
வேதத்தில் கூறப்பட்ட யாகம் , தானம் முதலிய தர்மங்கள் கூட ஸ்வர்க்கம் முதலிய மேல் உலகங்களை அல்லது
அடுத்த பிறவியில் இவ்வுலக சுகங்களை அடையவே பின்பற்றப்படுகின்றன.

அர்த்தம் அல்லது செல்வம் சேர்ப்பது , காமம் அல்லது சுகத்தில் நாட்டம் இவை இரண்டும் எவ்வளவு அனுபவித்தாலும் தீர்வதில்லை.
இவ்வாறு யாகம் முதலியவைகளும் தானம் முதலிய தர்ம காரியங்களும் பலனை எதிர்பார்த்து செய்வது
கர்ம மார்க்கம் (கர்ம யோகம் பலனை எதிர்பாராது செய்வது) எனப்படும்.
இப்படிப்பட்டவர்களை கீதையில் பகவான் ‘காமாத்மான:ஸ்வர்க பரா:’ என்று குறிப்பிடுகிறார்.

இவர்கள் தேவர்களையும் பித்ருக்களையும் திருப்திப்படுத்தி இந்த உடலை விட்டதும் சந்திர லோகத்திற்கு செல்லுகிறார்கள்.
சுவர்கத்திற்கு சென்றாலும் ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி ‘ என்ற ஸ்ரீ கீதை வாக்கியப்படி அவர்கள் செய்த
புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள். ஆக இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்கின்றது.

ஸ்ரீ பகவான் யோக நித்திரையில் எப்போது ஆழ்கிறாரோ அப்போது சந்திர லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் அழிகின்றன.
மறுபடி சிருஷ்டி ஏற்படும்போது எல்லா உயிர்களும் முன்னிருந்தவாறே மறுபடி தோன்றுகின்றன.

கர்ம மார்க்கத்தில் ஈடுபட்டவர்களினின்றும் வேறானவர்கள் பாகவத தர்மத்தை அனுசரிப்போர்., அவர்கள் ஸ்வ தர்மத்தை
பயன் கருதாது செய்து ஆசைகளற்று எல்லா செய்கைகளையும் பகவதர்ப்பணமாகவே செய்கின்றனர்.
இவர்கள் உடலை விட்ட பின் சூரிய மார்க்கமாகச் சென்று சத்ய லோகத்தை அடைகின்றனர். ஸத்ய லோகம் என்பது ப்ரம்ம லோகம்.,

ஒரு த்விபரார்த்தத்தின் முடிவில் பிரம்மா (அதாவது பிரம்மாவின் ஆயுள் முடிவில்) பிரம்ம ப்ரளயம் ஏற்படும் போது
பிரம்ம பகவானுடன் ஐக்கியம் ஆகிறார். பிரம்மாவுடன் கூட சத்ய லோகத்தில் இருந்து பகவானையே த்யானித்துக்
கொண்டிருந்த இந்த யோகிகள் பிரம்மாவுடனேயே பகவானிடம் ஐக்யமாகின்றனர்.

ஸ்ரீ கபிலர் ஸ்ரீ தேவ ஹூதியிடம் அதனால் பற்றை விட்டு ஸ்ரீ பகவானிடம் சிந்தையை செலுத்துமாறு கூறி,
ஸ்ரீ வாசுதேவரிடம் கொண்ட பக்தியானது சீக்கிரத்தில் வைராக்யத்தையும் ஞானத்தையும் கொடுக்கிறது என்றார்.

ஞான மாத்ரம் பரம் பிரம்ம பரமாத்மா ஈஸ்வர: புமான்
த்ருச்யாதிபி: ப்ருதக்பாவை: பகவான் ஏக: ஈயதே (ஸ்ரீமத். பா. 3.32.26)

ஞான ஸ்வரூபமான ஸ்ரீ பர ப்ரஹ்மம் ஒருவரே பரமாத்மா, ஈஸ்வரன், பகவான் , புருஷன் என்றும்,
காண்பது, காண்பவன், காணப்படுவது என்று பலவாறாக அறியப்படுகிறான்.
நிர்குணமான ப்ரஹ்மம் ஒன்றே வெளிமுகப்பட்ட இந்த்ரியங்களால் பிராந்தியினால் பலவாகத் தோன்றுகிறது.

யதேந்த்ரியை: ப்ருதக்த்வாரை: அர்தோ பஹுகுணாஸ்ரய:
ஏகோ நானேயதே தத்வத் பகவான் சாஸ்த்ரவர்த்மபி: (ஸ்ரீமத். பா. 3.32. 33)

எவ்வாறு ஒரே வஸ்து இந்த்ரியங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறதோ அவ்வாறே
பல சாஸ்திர மார்க்கங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறார்.

உதாரணமாக பால் கண்ணுக்கு வெண்மையாகவும் நாவுக்கு இனிமையாகவும் ஸ்பர்சத்தால் தண்மையாகவும் இருக்கிறது அல்லவா?
ஆனாலும் பால் என்பது ஒரே வஸ்து தானே. அதுபோல பகவான் வெவ்வேறு அறியும் திறனுக்கேற்ப
வெவ் வேறாகத் தோன்றினாலும் அவன் உண்மைஸ் ஸ்வரூபம் ஒன்றுதான். -இதைத்தான் கபிலர் கூறுகிறார்.

இது மட்டும் புரிந்து விட்டால் உலகில் வாதப் பிரதிவாதங்கள் பேதமன பான்மையினால் ஏற்படும் சண்டைகள் எல்லாம் மறைந்து விடும்!.

பக்தி நான்கு வகைப்படும் என்று ஸ்ரீ கபிலர் ஸ்ரீ தேவ ஹூதியிடம் கூறுகிறார்.

1. ஸ காம பக்தி- பகவானிடம் பலன் எதிர்பார்த்து பக்தி செலுத்துவது
(உலகத்தில் பெரும்பான்மையான பக்தி இவ்வகையைச் சேர்ந்தது.)
2. நிஷ் காம பக்தி- கர்மபலனை பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது.
3. ஸ குணபக்தி- பிரஹ்லாதன் கூறிய நவவிதபக்தி, ஸ்ரவணம், கீர்த்தனம் முதலியவை.
4.நிர் குண பக்தி- இதுவே பிரேம பக்தி எனப்படும். பகவானை நினைத்த மாத்திரத்திலேயே கண்ணில் நீர் பெருக அவனில் ஆழ்ந்து போவது.

கடைசியில் இதை யாருக்குக் கூறலாம் யாருக்குக் கூறக் கூடாது என்பதை சொல்கிறார்.

ஒரு சாஸ்திர உபதேசத்திற்கு நான்கு முக்கியமான அங்கங்கள் உண்டு. ( இது ஆரம்பத்திலேயே முதல் ஸ்கந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )
அவையாவன, இது என்ன, எதைப்பற்றி, இதைக் கேட்க தகுதியுடையோர் யார், இதன் பலன் யாது என்பதேயாகும்.

இது ஸ்ரீ கபிலோபதேசம் எனப்படும். சாங்க்ய தத்வத்தைப் பற்றியும் பக்தியோகத்தை பற்றியும் விவரிக்கிறது.
இப்போது இதைக்கேட்க தகுதியுடையோர் யார் என்பதைப் பற்றிச் சொல்கிறார்.

ஸ்ரீ கபிலர் கூறியது.

இதை துஷ்டன், வினயமில்லாதவன், கர்வம் கொண்டவன் , கெட்ட நடத்தை உள்ளவன்,டாம்பீகன்,
விஷய சுகத்திலும் உலக வாழ்க்கையிலும் பற்றுக் கொண்டவன் , பக்தியில்லாதவன், பக்தர்களுக்கு விரோதியானவன்
இவர்களுக்கு இதைச் சொல்லகூடாது.

அப்படியானால் யாருக்குச் சொல்லலாம் ? அதற்கு விடை ,

ஸ்ரத்தையுள்ளவன், பக்தயுள்ளவன், வினயமுள்ளவன், அசூயை இல்லாதவன், பிராணிகளிடத்தில் அன்பு பூண்டவன்,
ஸ்ரீ குரு சுச்ரூஷையில் ஈடுபட்டவன், உலகப் பொருள்களில் நாட்டம் இல்லாதவன், சாந்தமானவன், சுத்தமானவன் ,
ஸ்ரீ பகவானிடம் எதையும் விட அதிகமாக பிரியம் கொண்டவன், இவர்களுக்கு இதைக் கூறவேண்டும் என்கிறார்.

இப்போது நான்காம் அங்கமான பலனைச் சொல்கிறார்.

“ய ஏவம் ஸ்ருணுயாத் அம்ப, ஸ்ரத்தயா புருஷ: ஸக்ருத்
யோவா அபிதத்தே மச்சித்த: ஸ ஹ்யேதி பதவீம் ச மே

எவன் ஒருவன் இதை ஸ்ரத்தையுடன் என்னிடம் மனதை செலுத்தி ஒருதடவை கேட்கின்றானோ அல்லது
உபதேசிக்கின்றானோ அவன் என்னை வந்தடைவான்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading