ஸ்ரீ விபவ அவதார மஹிமைகள் —

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்|
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே || கீதை:4-8||

ஸாதூநாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்
துஷ்க்ருதாம் விநாஸாய ச = தீயன செய்வோரை அழிக்கவும்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய = அறத்தை நிலை நிறுத்தவும்
யுகே யுகே ஸம்பவாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்

ஸஹஸ்ர யுக பர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது: |
ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ ஜநா: ||கீதை: 8- 17||

ப்ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)
ஸஹஸ்ர யுக பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது
ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று
விது: = அறிகிறார்களோ
தே ஜநா: அஹோராத்ரவித: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்
பிரம்மாவுக்கு ஆயிரம் சதுரயுகம் ஒரு பகல், ஆயிரம் சதுரயுகம் ஒரு இரவு.
இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.

யுகந்தோறும் அவதாரம்
யுகங்கள் நான்கு (கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம்).
கிருத யுகம்:17,28,600(4L) வருடங்கள், திரோதா யுகம்: 12,96,000(3L) வருடங்கள்,
துவாபர யுகம்: 8,64,000(2L) வருடங்கள்,கலியுகம்:4,32,000(L) வருடங்கள்.
இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம்(10L) ஆகும்.

மன்வந்தரம்
ஒரு சதுர் யுகம்- மகா யுகம் (10L) = 14 மன்வந்தரம்(14-மனு)-14 இந்திரன் (1-மன்வந்தரம் 71 சதுர்யுகங்கள்)-
நடப்பு மன்வந்தரம்-7 வது மன்வந்தரத்தில் 28 வது சதுர்யுகம்- வைஸ்வத மன்வந்தரம் (வைஸ்வத மனு);
அடுத்து 8-வது மன்வந்தரத்தில் மனு-சர்வாணி.

————–

சித்திரை தேய்பிரை-திரியோதசி-மத்ஸய ஜெயந்தி
ஓம் சமுத்ரராஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

————————–

மச்ச அவதாரத் திருநாள்
சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:
உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம் அவனேர்ஹரி:
சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார்.

ஊத்துக்கோட்டை: நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை,
ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம்.
இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ
மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே
மூலவர் வேத நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி–பூதேவியுடன் காட்சி தருகிறார்.
திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை.
மூலவர் மீது சூரிய ஒளி: ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் நாராயணன் மீது
சூரிய ஒளிக்கதிர்கள் விழுகிறது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, 25ம் தேதி பாதங்களிலும்,
இரண்டாம் நாள் 26ம் தேதி நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், 27ம் தேதி சுவாமியின் சிரசிலும் (தலை)
சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.

———–

ஆனி கிருஷ்ண பட்ச-துவாதசி-கூர்ம ஜெயந்தி
ஓம் தராதராய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத் (தசாவதார கூர்ம-காயத்திரி)

அவதாரத்திருநாள்
ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:
மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை
பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.

ஓம் லோகாத்யக்ஷõய வித்மஹே
தாராத்யக்ஷõய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத் (கூர்ம காயத்ரி)

ஓம் கச்சபேசாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத் (கூர்ம காயத்ரி)

——————

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

வராஹ அவதாரத் திருநாள்
சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்
புவம் வராஹரூபேண ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்
சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் பன்றி உருவத்தில் பலத்துடன்
பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

———–

வைகாசி வளர்பிரை-சதுர்தசி-நரசிம்ம ஜெயந்தி
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே
உத்பபூவ அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று , சூர்ய அஸ்தமன காலத்தில் அசுரர்களின் எதிரியான
பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.

————-

ஆவணி-திருவோணம்-வாமன ஜெயந்தி
உலகளந்த பெருமாள் (திருவிக்ரமன்)
ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே
சூக்ஷ்மதேஹாய தீமஹி
தன்னோ வாமந ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

அவதாரத் திருநாள்
மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:
அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக
ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

————

சித்திரை-தேய்பிறை -துவாதசி-பரசுராம ஜெயந்தி
ஓம் அக்னி சுதாய வித்மஹே
வித்யாதேஹாய தீமஹி
தன்னோ பரசுராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

அவதாரத் திருநாள்
மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:
துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான
தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.

————–

சித்திரை-வளர்பிரை-நவமி; புனர்பூசம்-ஸ்ரீராம ஜெயந்தி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

இராம அவதாரத்திருநாள்
சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில்
ராவணனை வதை செய்ய சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

சூர்ய குலம்–இக்ஷ்வாகு குலம்–ரகு குலம்

பிரம்மா-மரீசி-காஷ்யப்பர்-விவஸ்வான்(சூரியன்–ரகு)-வைவஸ்வதமனு-இக்ஷ்வாகு(அயோத்தியை நிருவியவர்)
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்|
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநு இக்ஷ்வாகவே ப்ரவீத் || கீதை 4-1||

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச்(சூரியன்) சொன்னேன்.
விவஸ்வான் (வைவஸ்வத) மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகுக்குக் கூறினான்

குக்ஷி-விகுக்ஷி-பான்-அன்ரன்யா-ப்ருது-த்ரிஷங்கு(விஸ்வாமித்ரர் ஸ்வர்கம்)- அரிச்சந்திரன்-ரோஹிதன்-பாகுகன்
துந்துமார்-விகுட்சன்-புரஞ்சயன்-அனநேசு-பிருது-சாவஷ்தி-குவலயாசுவன்-யுவனஷ்வா-மாந்தாதா-சுசந்தி-துவசந்தி-
பரத்-அஸித்-ஸாகரன்-அஸமஞ்சன்-அன்ஷுமான்-திலீபன்-பாகீரதன் (கங்கை-பூலோகம்)
அஸ்தமகன்-மூலகன்-தசரதன்-கட்வாங்கன்-தீர்கபாகு-காகுஸ்தன்-ரகு-ப்ரவ்ருத்-ஷம்கன்- ஸூதர்ஷன்-அக்னிவர்மன்-
சிஹ்ராக்-மேரு-பரஷுக்ஷுக்-அம்பரீஷன்-புருகுச்சன்-நகுஷன்-யயாதி-நபாங்-அஜன்-தஸரதன்–ராமன்–லவன் மற்றும் குசன்.

இராமருக்கு – லவன், குசன்
லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது,
பரதனுக்கு தட்சன், புஷ்கரன்,
சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன்

ஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பலராம அவதாரத்தில், பகவான் கலபபையை தாங்கி இருந்தாலும் போரில் கௌமோதகி என்ற
கதாயுதத்தையே பிரதானமாக கொண்டார். பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத ஆசானாவார்.

பலராம அவதாரத் திருநாள்
வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:
சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன்,
சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்.

—————

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

கிருஷ்ண அவதாரத் திருநாள்

மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே
ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

ஆவணி மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

—————-

ஓம் பரமபுருஷாய வித்மஹே
பாபஹராய தீமஹி
தன்னோ கல்கி ப்ரசோதயாத் (தசாவதார-கல்கி காயத்திரி)

கல்கி அவதாரத் திருநாள்
மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:
ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க
கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

வெள்ளை குதிரை மீதேறி உலகினை சுற்றி வருவார். அக்கிரம செயல்களை எதிர்த்து, அதர்ம செயல்கள்
புரிவோரை அழித்து தருமத்தினை நிலை நாட்டுவார்.அத்துடன் கலியுகம் முடிவுக்கு வரும்.
கல்கி அவதாரத்திற்க்கு, நந்தகம் என்ற வாள் ஆயுதமாக அமையப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது

———–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading