ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்:-ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி”ஸ்ரீ திருவரங்கத்தில் ஸ்ரீஜயந்தி கொண்டாட்டங்கள்

1. ஸ்ரீ நம்பெருமாள் பொங்கல் அமுது செய்து புறப்பட்டு ஸ்ரீபண்டார மண்டபம் எழுந்தருளுவார்.
2. இந்த மண்டபத்தைக் கட்டி வைத்து உத்ஸவத்தையும் நடத்தி வைத்த ஸ்ரீ உத்தமநம்பி அய்யங்காருக்கு ஸேவை மரியாதை அனுக்ரஹிப்பார்.
3. பிறகு திருமஞ்சனம். ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார நிமித்தம் திருவாரா தனத்தில் ஸ்ரீ பெருமாளுக்கு
கண்டருளப் பண்ணும் எண்ணெய் அரையரால் கோஷ்டிக்கு விநியோகம் செய்யப்படும்.
4. ஸ்ரீ ஜயந்தி உத்ஸவத்தில் திருமஞ்சன காலத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலா விஷயமான
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி அரையரால் தாளத்தோடு கானம் செய்யப்படும்.
5. திருமஞ்சனம் முதலியவை நடந்து மாலை ஸ்ரீ நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் ஸ்ரீ நம்பிள்ளை கோஷ்டியிலிருக்கும்
(கீழை ராஜமகேந்திரன் திருச்சுற்றிற்கு நம்பிள்ளை கோஷ்டி என்று பெயர்.)
6. ஸ்ரீ கிருஷ்ணனுக்கு இரவு திருமஞ்சனம் முதலியவையும், உள்ளே ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு திருவாராதனமும் நடந்து
பலவகை திருப்பணியாரங்களும் அமுது செய்விக்கப் படும்.
இந்த நிகழ்ச்சி ‘சங்குப்பால்’ என்று அழைக்கப் படுகிறது.
7. இவரே உறியடிக்கு எழுந்தருளுகிறார். மூல விக்ரஹங்களாக ஸ்ரீநந்தகோபன், ஸ்ரீ யசோதை, ஸ்ரீ ரோஹிணி ஆகியோர் எழுந்தருளி யுள்ளனர்.
8. தற்போது ஸ்ரீ கிருஷ்ணனுடைய உத்ஸவ விக்ரஹம் மட்டும் நந்தகோபருக்கு முன்பு அமைந்துள்ளது.
ஆயினும் குறிப்புகளின்படி கிருஷ்ணனுடைய மூல விக்ரஹம் அந்த ஸந்நிதியில் இருந்ததாக அறியப்படுகிறது.
9. உத்ஸவருடைய வலது திருப்பாதம் பத்மபீடத்தில் காலை சிறிது வளைத்து நிலைகொண்டுள்ளது.
இடது திருப்பாதம் தூக்கிய நிலையில் வலது முழங்காலுக்கு சமநிலையில் உள்ளது.
10. தலையில் கிரீடம் அணிந்த நிலையில் கையில் வெண்ணெயுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீநந்தகோபருடைய வலது கையில் பால் சொம்பும், இடது கையில் சங்கும் உள்ளன.
11. ஸ்ரீஜயந்தியன்று இந்தத்திருக்கோயிலில் அமைந்துள்ள மற்றைய ஸ்ரீகிருஷ்ணன் ஸந்நிதிகளிலும் ஸ்ரீஜயந்தி கொண்டாடப்படும்.
12. அவையாவன: அகளங்கன் திருச்சுற்றில் உள்ள
1. ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி,
2.ஸ்ரீ விட்டல கிருஷ்ணன் ஸந்நிதி,
3 ஸ்ரீ .தொண்டரடிப்பொடியாழ்வார் ஸந்நிதியில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ கோபால கிருஷ்ணன் (ஸ்ரீ மதன கோபாலன்),
4.ஸ்ரீ நாதமுனிகள் ஸந்நிதியில் உள்ள ஸ்ரீ பலராமரோடு கூடிய ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்,
5.வேணுகோபாலன் ஸந்நிதியில் உள்ள நான்கு திருக்கரங்களோடு கூடிய கிருஷ்ணன்,
6.கார்த்திகை கோபுர வாசலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மிணி, ஸ்ரீ சத்யபாமா வோடும்
நான்கு திருக்கரங்களோடும் கூடிய ஸ்ரீவேணு கோபாலன்,
7.சந்திர புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபாலன் (ஸ்ரீ ராதா ஆலிங்கன ஸ்ரீ கிருஷ்ணன்).
13. ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஆர்யபட்டாள் வாசலுக்குக் கிழக்குப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
ஹொய்சாள மன்னனான இரண்டாம் வீர நரசிம்மனது கி.பி.1232ஆம் (அ.கீ.Nணி. 69 ணிஞூ 1936/37) ஆண்டு
கல்வெட்டின்படி துவாரசமுத்திர மன்னனான வீரவல்லப தேவனுடைய பட்டமகிஷியான உமாதேவியால் ‘
ஸ்ரீ திருக்குழலூதும் பிள்ளை’ ஸந்நிதி நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
14. இந்த ஸந்நிதிதான் ஸ்ரீ ரங்கவிலாஸ மண்டபத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணன் ஸந்நிதி.
15. தயிர்வார்த்து உழக்கு நெய்யமுதும் சிறப்பமுதும் படைப்பதற்கான நிவந்தங்கள் விடப்பட்டதை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
16. மறுநாள் காலை உறியடியன்று ஸ்ரீ பெரியபெருமாள் சீக்கிரமாகப் பொங்கல் அமுது செய்து,
மேளதாளத்துடன் வரும் எண்ணெய் அலங்காரம் கண்டருளியதும், ஸ்ரீ கிருஷ்ணன் பொங்கல் அமுது செய்து புறப்பட்டு
எண்ணெய் விளையாட்டுடன் திருவீதி எழுந்தருளுளி, வீதியில் எண்ணெய்க் காப்பும் மொச்சைச் சுண்டலும்,
விநியோகம் செய்து கொண்டே ஸந்நிதிக்குள் எழுந்தருளுவார்.
17. பெரிய அவசரம் அமுது செய்த பிறகு மதியத்திற்கு மேல் ஸ்ரீ நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் புறப்பட்டு
ஸ்ரீ கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு திருமஞ்சனக் காவேரிக் கரையிலுள்ள உறியடி மண்டபம் எழுந்தருளி,
திருவாராதனம் முதலியவை ஆனதும் வீதியில் எழுந்தருளுவார்.
18. தெற்கு வீதி மேல்புறத்தில் வழுக்குமரம் நாட்டி ஸ்ரீ கிருஷ்ணன் வழுக்குமரம் ஏறுவதாகத் திருச்சுற்றுக்காரர் வழுக்குமரம் ஏறுவார்.
(தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. மாறாக கீழே நின்றுகொண்டு பானைகளை உடைப்பார்.)
19. ஸ்ரீ நம்பெருமாள் அவ்விடத்தில் பானகம், விடாய்ப் பருப்பு அமுது செய்து புறப்பட்டு சித்திரை திருவீதியைச் சுற்றி வருகையில்
தெற்குவாசலில் கீழ்ப்புறம் முதலியார் கோஷ் டிக்கு கோடைத் திருநாளில் போல சந்தனம், அறுவாணம் ஆகியவை விநியோகிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் தற்போது இடிக்கப்பட்ட வாணிவிலாஸ் கட்டிடத்தில் தான்
ஸ்ரீ திருவரங்கத்தில் சில ஆண்டுகள் வசித்து வந்த விஜயநகர மன்னனான அச்சுததேவராயர் அரண்மனை வாசம் கொண்டிருந்தார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading