அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி –
சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
தத்வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ–6-
தயைக சிந்தோ-கருணை ஒன்றாலே நிறைந்த சமுத்ரமே
ஆர்ய -உத்தம ஆச்சார்யரே
யதிராஜ -யதித்தலை நாதனே
மே -எனக்கு
பவதீய பதாப்ஜ பக்தி-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் பக்தி என்பது
அல்பாபி ந -கொஞ்சம் கூட இல்லை
சப்தாதி போக ருசி -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகிய புலன் விஷய அனுபவங்களில் ஆசை
அந்வஹம் ஏதத்தே -தினம் தோறும் வளர்கிறதே
ஹா-என் செய்கேன் பாவியேன்
அமுஷ்ய-இதற்கு
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் -என் பாபம் தான் மூல காரணம்
நாந்யத்-தத்வாரய -மற்ற ஒரு காரணம் கிடையாது–தேவரீர் தடுத்துத் தகைய வேணும் –
பகவான் என்னும் தேவன் இடத்தில் எல்லை கடந்த உத்க்ருஷ்டமான பக்தி இருந்தது போல்
குரு என்னும் தேவன் இடமும் அப்படியே
எல்லை கடந்த பர பக்தி இருப்பவருக்குத் தான் ஆச்சார்யர் உபதேசிக்கும் தத்வார்த்தங்கள் பிரகாசிக்கும் என்று
தகுந்த சிஷ்யனின் அதிகாரத்தில் ஆச்சார்யர் இடம் பர பக்தியை முக்கியமான அம்சமாகக் கூறி உள்ளது –
பூர்வ மீமாம்ஸையில் -6 வது அதிகாரம்-அதிகார அத்யாயம் என்று பெயர் –
இங்கு தொடக்கத்திலேயே அல்பமேனும் தமக்கு ஆச்சார்யர் திருவடிகளில் பக்தியே கிடையவே கிடையாது
என்று கூறிக் கொண்டு இந்த 6 வைத்து ஸ்லோகத்தில் அந்த அதிகார அத்தியாயத்தை ஸூ சிக்கிறார்
ஆனால் ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் சிஷ்யத்வ அதிகாரத்தில் குறைவுகள் இருந்தாலும்
அவை ஆச்சாயர் கருணையாலும் பிராட்டி பகவான் கருணையாலும் யதேஷ்டமாய் திருத்தல்கள் செய்து
அதிகாரக் குறைகளை நீக்கி பூர்த்தி செய்வைத்து உண்டு
கர்ம காண்டத்தில் அதிகாரம் முதலியவற்றைப் பற்றிய விதிகளும் இந்திரியங்களின் துச்சரணங்களுக்கு
ஏற்பட்ட தண்டனை விதிகளும் தயைக்கு இடம் கொடாமல் மிகவும் கடினமாகவே உள்ளன –
தவறுகளுக்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களும் கடினமாகவே இருக்கும் –
அவற்றைச் செய்யும் பொழுதும் லோபங்கள் வரும் -அவற்றுக்கும் ப்ராயச்சித்தங்கள் –
அவற்றுக்கு லாபங்கள் இப்படி அநவஸ்திதமாய் மீளும்
தயாளியால் ஆச்சார்யர்ப்பிராட்டி பெருமாள் திரு உள்ளம் உகந்து க்ஷமித்து மன்னித்து விடும் ஞான விசேஷம்
தயா சாதகத்தில் -நிஷ் க்ருதி ர் ஆத்யா -செய்ய வேண்டாத ப்ராயச்சித்தமான – ஞான விசேஷம் என்கிறார்
இதையே தயை ஏக ஸிந்தோ -என்று கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியனில் உள்ள
அதே சொல் தொடர் இங்கு அருளிச் செய்கிறார்
அனுக்ரஹமயீம் வந்தே நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம் -என்று தாயாருக்கும் தாய் போன்ற வாத்சல்யம்
உள்ள ஆச்சார்யர்களுக்கும் தயை ஒன்றே சமுத்ரமாக பெருகி உள்ளது
பாபா நாம் வா சுபா நாம் வா வதர்ஹானாம் பிலவங்கம் கார்யம் கருணம் ஆர்யேண –
பிராட்டி உபயோகித்த ஆர்ய பதம் இங்கும்
ந பக்திமான் த்வச் சரணார விந்தே -பகவான் ஆளவந்தார் ஸ்ரீஸூ க்திகளை இங்கு
இவர் எம்பெருமானார் விஷயத்தில் பிரயோகிக்கிறார் –
சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
விஷயாந்தர ப்ராவண்யமே கடலாக பெருகி இங்கே
இப்படி இருக்க தேவரீர் இடம் பக்தி ரஸம் எப்படி உண்டாகும்
பக்தி நிஷ்டைக்கு பகவத் நிஷ்டை போல் சமம் தமம் விஷய ரஸ உபரதி போன்றவை
இருந்தால் தானே அதிகாரம்
ஸத் புத்தி -சாது சேவீ -சமுசித சரித -தத்வ போத அபிலாஷீ -ஸூஸ்ருஷு -த்யக்தமான –
ப்ரணி பதந பர -ப்ரஸ்ன கால ப்ரதீக்ஷ -சாந்தோ தாந்த -திதிஷு -சரணம் உபகத –
ஸாஸ்த்ர விசுவாஸ சாலீ சிஷ்ய -ப்ராப்த பரீஷாம் -க்ருத வித் அபிமதம் –
தத்வத சிக்ஷணீய -ந்யாஸ திலக ஸ்தோத்ரம் -சிஷ்யத்வ லக்ஷணங்கள்
அதிகாரமே இல்லாதவன் உம திருவடித்தாமரைகளில் நிறைந்த நிஷ்டையை எப்படி அடைய முடியும்
ஹா
நைராஸ்யத்தையும் நிர்வேதத்தையும் கூக்குரல் இட்டுக் காட்டுகிறார் –
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
என் ஆத்மாவுக்கு வந்து இருக்கும் விஷயாந்தர ப்ராவண்யத்துக்கு என்ன மருந்து என்று தேட வேண்டும்
அதற்கு முன் நோய்க்கு மூல காரணமான நிதானம் தேட வேண்டும்
நிதானத்தை பராமர்சிக்கையில் என்னுடைய மிகுந்த பாபமே மூல காரணம் என்று தெளிகிறது –
தத்வாரய-
இந்த பாபக்கூட்டத்தை அழிக்க வல்ல எளிய மார்க்கம் தேவரீர் இடமே உள்ளது
அதற்கு வெளியே போக வேண்டியது இல்லை
பாபங்கள் புண்யங்கள் ஈஸ்வர கோபமும் ப்ரீதியுமே
அவன் உமக்கு வசப்பட்டவன்
உம்முடைய கடாக்ஷம் பெற்று உம்முடைய சம்பந்தம் பெற்றதும் அவன் கடாக்ஷமும் கூடவே விழுந்து
பாபங்கள் போகுமே -ஆத்ம ரோகம் தீர்ந்து விடும்
இந்திரியங்கள் -திருடர்கள் கொள்ளை அடிக்காமல் காக்கும் பொறுப்பு ராஜாவுக்கும் அவனைச் சார்ந்த
அதிகாரி புருஷர்களுடைய பரம் அன்றோ
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம்-கீழே முதல் ஸ்லோகத்தில் அருளிச் செய்ததை நினைவூட்டுகிறார்
அகபரி ஹரணாத் -பாபங்களைப் போக்குவது பகவான் என்னும் தேவனுக்கும் ஆச்சார்யர் என்னும் தேவனுக்கும்
பொதுவான அதிகாரம் தானே –
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply