ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –ஐந்தாம் பத்து –
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்-5-1-11-
கார் வண்ணன் –
காள மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்.
கண்ண பிரான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வடிவை என்னை அநுபவிப்பித்தவன்.
கமலத் தடம் கண்ணன் தன்னை –
உத்ப்புல்ல புண்டரீக -மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக் கண்களை யுடையவன்.
அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி.
கீழே “நிறமுடை நால் தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.
ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சின போது, ஸ்ரமஹரமான வடிவைக் காட்டித்
தன்னை முழுக்கக் கொடுத்துத் திருக் கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.
ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-
சம்ருத்தமான -நிறைந்த ஏர்களை யுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி.
வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது.
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் –
சீரியதான பிரகாரத்தை யுடைய அழகிய தமிழ் என்னுதல்;
கவிக்கு உறுப்பான சீரையும் வண்ணத்தை யுமுடைய அழகிய தமிழ் என்னுதல்.
சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை.
ஆர் வண்ணத்தால்-
பூர்ணமாக -நிறைவாக என்னுதல்.
ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,
அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
—————-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்-5-2-11-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-
கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”
எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது”
என்கிறபடியே, கலி தோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.
மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-நிறைதலாய், மிக்க தேஜஸ்ஸாலே -ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள் செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.
மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் சேஷ்டிதங்களையும் -செயல்களையுமுடைய கண்ணனை
ஆயிற்றுக் கவி பாடிற்று.
கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-
கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர்.
இவற்றால், பூ சாரத்தைச் சொல்லுதல்;
நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல்.
இப்படிப்பட்ட வயல்களை யுடைத்தாயிருந்துள்ள திருநகரியில் ஆழ்வார்
——————-
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன–5-3-11-
அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில்
“சாபம் ஆநய ஸௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந் சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து பிலவங்கமா:” –யுத். 21 : 22.
சாபமாநாய ‘வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்ற போது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தால் போலே யாயிற்று,
இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச் செய்தார்.
வண்ணன்-ஸ்வபாவத்தை யுடையவன் என்றபடி.
இரைக்கும் கருங்கடல் வண்ணன் –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவையுடையவன்.
மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி.
வண்ணன் – வடிவை யுடையவன்.
கண்ணபிரான் தன்னை –
அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை.
வடிவழகு இது. ஸ்வாபாம் இது. இங்ஙனம் இருக்க, நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ?
விரைக் கொள் பொழில் குருகூர் –
இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது
உண்டான பரிமளத்தால் நிறைவு பெற்றபடி. -சஞ்சாத பரிமளமான படி –
——————-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-5-4-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –
அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,
அவன் உறங்குகின்றிலன்; நம்மை ரக்ஷண சிந்தை – காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
ஸ்ரீரங்கதாமநி. ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா நித்ராஸி ஜாகர்யயா–ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-75.
நித்ராஸி ஜாகர்யயா– உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத்
திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனை யல்லது,
மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார்.
மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேஸ்வரன், இவ்வளவிலே தன் படிகளை நினைப்பித்தான்.
சிறந்த பொழில் குருகூர் –
சர்வேஸ்வரன் ரக்ஷண சிந்தை செய்து கொண்டு கண் வளர்ந்தருளுகிற படியை அனுசந்தித்து -நினைத்து
இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது, ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது.
பிரிந்த விரஹதாபத்தால் அபி வ்ருஷா -மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான
சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி,மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும்,
ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே அகால பலிநோ வ்ருஷா -வழியில் உள்ள எல்லா மரங்களும்
காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும் தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும்
சொல்லலாம்படி அன்றோ இருப்பது.
விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா: ஸ்புஷ்பாங்குர கோரகா:-அயோத். 59 : 4.
அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத:” யுத். 127 : 19.
அரி இனம் சென்ற சென்ற அடவி களனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி
விரி புனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதே யாகெனப் புகன்றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.
——————
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-5-5-11-
அறிவு அரிய பிரானை-
நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம்,-ஸ்வ யத்ன சாத்யம் – தம் முயற்சியால் சாதித்துக்
கொள்ளப்படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.
வஸ்து தான் உண்டானால் நினைத்தபோது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.
இவர்கள் பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில், ஆக வேணுமே அன்றோ,
மீட்கலாம்’ என்று இருந்த போதே, ‘தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.
ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.
அவனைக் கைவிடாமல் அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.
நறிய நன் மலர் நாடி-
பரிமளத்தை யுடைத்தாய் நன்றாயிருக்கிற மலர்களைத் தேடிக்கொண்டு,
அடிசூட்டலாகும் அந்தாமம்”-திருவாய்.-2. 4 : 11. என்னக் கடவதன்றோ.
பாட்டுகள் மாலையாய்-இருக்கும் என்பதற்கு பிரமாணம் –
நன் குருகூர்ச் சடகோபன்-
இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ் வூரில் பிறப்பாயிற்று.
——————
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து-5-6-11-
சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கும் ஹேது பூதையாய்-காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார்.
அன்றிக்கே,
நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ
யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.
விஷ்ணோ ஸ்ரீ -சர்வேஸ்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே,
சர்வேஸ்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல்.
மண் மடந்தைக்கும் –
அந்தச் செல்வத்திற்கு விளை பூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி.
குல ஆயர் கொழுந்துக்கும் –
அதனுடைய பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி.
கேள்வன் தன்னை –
ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி -உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் ஸ்ரீ லஷ்மியோடு கூடி எழுந்தருளியுள்ளான்”
என்கிறபடியே, இவர்களுக்குப் பதியாயுள்ளவனை.
இதனால், ஓர் அவதார மாத்ரமன்றிக்கே, உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி.
வாய்ந்த –
வாய்க்கையாவது, கிட்டுகை. அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.
குற்றேவல் செய்து-
ஆழ்வார் அவன் திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவை தாம். என்றது,
வாசிகமாக அடிமை செய்தபடி யாயிற்று என்றபடி.
அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்?
கொள்ளுகிறவன் கருத்தாலே. அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம்.
நம்முடைய விஸ்லேஷத்தில் -பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’
என்று திருவுள்ளம் போர உகக்கும்,-அது அடிமையாய்த் தலைக் கட்டுமித்தனை.
—————
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரம் –-5-7-11-
தெய்வநாயகன் –சர்வேஸ்வரன்.
நாரணன் –தன்னுடைமை இழக்கவிடாத வத்சலன்.
திரிவிக்கிரமன் –தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொடுக்குமவன்.
அடி இணை மிசை –திருவடிகளிலே.
கொய் கொள் பூம்பொழில் –நித்ய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை.
குருகூர்ச் சடகோபன் –ஸ்ரீ கீதையில் வ்யாவ்ருத்தி -வேறுபாடு.
செய்த ஆயிரம் – அர்த்தம் வேதார்த்தமே யாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின்
‘செய்த ஆயிரம்’ என்கிறது.
பரத்துவம் போலே வேதம்,
அவதாரம் போலே இதிகாச புராணங்கள்,
அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. செய்த ஆயிரம் இறே
அன்றிக்கே, தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளை யானால் போன்று,
வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல்.
(செய்யா மொழியாகிய வேதத்தைக் காட்டிலும் இது உயர்வுக்குக் காரணமாயிருக்கும்)
—————
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்-5-8-11-
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் –
உழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளை யுடைய பூதனை முலை வழியே அவளுடைய உயிரை உண்டான்.
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் –
விரோதி நிரசன சீலனுடைய -விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தை யுடைய கண்ண பிரானது திருவடிகளையே,
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் -விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும்
உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார்
அவையே’ என அவதாரணம் -ஏகாரம் கொடுத்து அருளிச் செய்கிறார்
கொண்ட-பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்.
—————–
நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்-5-9-11-
நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் –
ஸஹஸ்ரபாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாமஸஹஸ்ரவாந்”- பாரதம்.-
ஸ்வயம் பிரகாசகனான சர்வேஸ்வரன் ஆயிரம் திருப்பெயர்களையுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே,
குணங்களுக்கும் சேஷ்டிதங்களுக்கும் -செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே
சர்வேஸ்வரனாகப் பிரசித்தனானவன்.
நம் -பிரசித்தி / பெருமான் -சர்வேஸ்வரன் /
(நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளைஎன்பர் அவரவர்தம் ஏற்றத்தால்”-உபதேச ரத்தினமாலை.)
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் –
புறம்புள்ள காற்கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளையே தமக்கு ரக்ஷகமாகப் பற்றின ஆழ்வார்.
—————————
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-5-10-11-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று-
திரு வனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு உபாயம் என்று.
அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணமாகையாலே, சர்வாதிகனே சரண்யன் என்கிறது.
இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்திலுள்ளாராகாதே.
படுக்கை கிடப்பது அந்தப்புரத்திலன்றோ.
நம்பிரான்
ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் உபகார சீலனாதலின் ‘நம்பிரான்’ என்கிறது.
சரணே சரண்’
என்ற அவதாரணத்தாலே -ஏகாரத்தாலே, நைரபேஷ்யம் -வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.
அன்றிக்கே,
சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக் கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.
மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.
நாடொறும் ஏக சிந்தையனாய் –
புறம்பு உண்டான சிந்தனை போய், இவ்விஷயத்திலே ஏக ஆகாரமான -ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,
அர்த்த ஆர்ஜனம் பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ்விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.
குருகூர்ச் சடகோபன் மாறன்-
அவையெல்லாவற்றிற்கும் அடியான பிறப்பு இருக்கிறபடி.
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply