ஸ்ரீ பஞ்ச முக திருவடி தியான ஸ்லோகம் –தியான ஸ்லோகங்கள்–

vande vAnaranArasi.nhakhagarATkroDAshvavaktrAnvitaM
divyAla~NkaraNaM tripa~nchanayanaM dedIpyamAnaM ruchA |
hastAbjairasikheTapustakasudhAkumbhA~NkushAdriM halaM
khaTvA~NgaM phaNibhUruhaM dashabhujaM sarvArivIrApaham ||

Salutations to him who has faces of a monkey, Narasimha, king of birds, horse and a boar,

Which are divinely decorated, have fifteen eyes, which shines immensely,

Who has ten hands and holds shield, book , nectar, goad , plough and

Sword and moves with his body all over the earth and is valorous everywhere.

வந்தே வாநரானாராஸி ந்ஹகஹகராத் க்ரோதாஷ் வவக்த்ர் அந்விதம்
திவ்யால ந்கரணாம் த்ரிபந்ச நயனாம் தேதிப்யமானம் ருச
ஹஸ்தாப்ஜை ரஸிகேத புஸ்தக ஸூதா கும்பாந் குஷாத்ரிம் ஹலாம்
கத்வாந் கம் பாணி பூருஹம் தச புஜம் ஸர்வாரி விராபகம்

ஸ்ரீ பஞ்ச முக -தானான ஸ்ரீ திருவடி திவ்ய திரு முகம் -ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய திரு முகம் –
ஸ்ரீ பெரிய திருவடி திவ்ய திரு முகம் -ஸ்ரீ ஹயக்ரீவர் திவ்ய திரு முகம் -ஸ்ரீ வராஹ நாயனார் திவ்ய திரு முகம்
மிளிரும் பதினைந்து திவ்ய திருக் கண்கள் -பத்து திவ்ய கரங்கள் –
கேடயம் -புஸ்தகம் -கலப்பை -அம்ருத கலசம் -கலப்பை -தரித்து -பூமி எங்கும் வியாபித்து
ஜயம் நாட்டி ஸ்வாமியாகத் திகழ்கிறார் –

Every Face of Sri Panchamukha Hanuman has significance —

Sri Hanuman faces east. He grants purity of mind and success.

The Narasimha faces south. He grants victory and fearlessness.

The west facing Garuda removes black magic and poisons.

The north facing Varaha, showers prosperity, wealth.

The Hayagriva mukha faces the Sky. But since we cannot see it, it is usually tilted
and shown above Hanuman’s face. Hayagriva gives Knowledge and good children.”

According to another legend, the five faces depict five forms of prayer –
Naman, Smaran, Keerthanam, Yachanam and Arpanam.

ஸ்ரீ திருவடி -கிழக்கு முகம் -ஸூத்த மனஸ்ஸூ -எதிலும் ஜெயம்
ஸ்ரீ நரஸிம்ஹர் -தெற்கு முகம் -பயம் இன்மை -எங்கும் ஜெயம்
ஸ்ரீ பெரிய திருவடி மேற்கு முகம் -விஷங்களை-கபட வஞ்சனையை முறித்து
ஸ்ரீ வராஹ நாயனார் ஐஸ்வர்யம் அளிப்பார்
ஸ்ரீ ஹயக்ரீவர் மேல் நோக்கி -நாம் சேவிக்க திருவடிக்கு மேலே சேவை சாதிப்பார் –
ஞானம் ஆனந்தம் சந்தான செல்வம் அளிப்பார்
ஐந்தும் திரு நாம சங்கீர்த்தனம் -ஸ்மரணம்-கீர்த்தனம் -யஜனம் -அர்ப்பணம் -இவற்றையும் காட்டி அருளும்

———-

தியான ஸ்லோகங்கள்:

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத துஹே நம: ||

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||

பாராஶார்ய வச: ஸரோஜமமலம் கீதார்த கந்தோத்கடம் |
நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: |
வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: |
த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ |
யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர்மதிர்மம ||

————

1.கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
2.தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
3.மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
4.வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
5.மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.
6 ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை-
ஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார். உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ். சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் என நம்பப்படுகிறது.
காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்
புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.
ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள். அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.
நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப செய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.
விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர். முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.
காலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.
சில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள். சரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதுவதால் கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்கானவை. தூய்மையான ஆன்மீகத்துடனும் கவனத்துடனும் இந்த 40 செய்யுள்களையும் நீங்கள் படித்தால், உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். இந்த மந்திரங்களை தொடர்ந்து படித்து வந்தால், கடவுளின் ஆசியும் அனுகிரஹமும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவு கிடைக்கும். ஆன்மீகத்தில் சரியான பாதையை நோக்கி செல்பவர்களுக்கு ஆஞ்சநேயர் சரியான பாதையை காண்பிப்பார் என நம்பப்படுகிறது. அதே போல் தங்கள் மனதை கட்டுப்படுத்துவும் உதவுவார் என நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் மந்திரங்களை அதிக சத்தத்துடன் படித்தால், நம்மை சுற்றி நேர்மறையான ஆற்றல் திறன்கள் அதிகமான சுற்றும
அதனால் நாள் முழுவதும் நீங்கள் உற்ச்சாகத்துடன் இருக்கலாம். இது சோர்வு மற்றும் தாமதமாக்கலை போக்கி ஒருவரை திறமையானவராக மாற்றும். தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற சிறிய பிரச்சனைகளையும் கூட இது குணமாக்கும்.
கெட்ட சகவாசம் அல்லது ஏதேனும் பழக்கத்திற்கு அடிமையானால், ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அவர்களை சீர்திருத்த அது உதவும். மந்திரங்கள் படிப்பதால் ஏற்படும் ஆற்றல் திறன் பக்தனின் இதயத்தை நேர்மறையான எண்ணம் மற்றும்
உண்மையான பக்தி மற்றும் அர்பணிப்புடன் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் படித்து வந்தால், அனைத்து வித கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் நீங்கி, வாழ்க்கையில் ஒருமித்த கருத்து, மனநிறைவு, சந்தோஷம் மற்றும் அமைதியும் நிலவும். உறவில் நீடிக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும்.
ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர் களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர். வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.
பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார்.
நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’
நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும்
———-

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராம தூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading