ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -71—-கேசி வதம்–வ்யோமாசூர வதம் –

இந்திர வர்ஜ -உபேந்திர வஜ்ரா உப ஜாதி சந்தஸ்
திருவாயர் பாடியில் நிறைவான லீலை இதுவே
இரண்டு பொருள்களில் அமைந்த ஸ்லோகங்கள்

யத் நேஷு சர்வேஷ் வபி ந அவகேஸீ கேஸீ ச போஜேசி துரிஷ்ட பந்து
த்வாம் சிந்துஜ அவாப்ய இதீவ மத்வா ஸம் ப்ராப்தவான் ஸிந்துஜ வாஜி ரூப –1-

கேஸீ என்பவன் கம்சனுடைய உறவினன் -எந்த முயற்சியி லும் அவன் –ந அவகேஸீ-தோல்வி அடைந்தது இல்லை
ஸிந்து -பாற் கடலில் பிறந்த ஸ்ரீ மஹா லஷ்மியால் விரும்பப் படுவரான தங்களை
ஸிந்து தேசத்தில் பிறந்த குதிரை வடிவில் வந்து அடைந்தான் –

——–

கந்தர்வ தாமேஷ கதோ அபி ரூஷைர் நாதை ஸமுத் வேஜித சர்வ லோக
பவத் விலோக அவதி கோப வாடீம் பிரமர்த்ய பாப புனர ஆபதத்த்வாம் –2-

அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும் அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது –
ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் அவன் துன்புறுத்தினான் -பிறகு தங்கள் இடம் வந்தான் –

———-

தார்ஷ்ய அர்பித அங்க்ரேஸ் தவ தார்ஷ்ய ஏஷ சிஷேப வஷோ புவி நாம பாதம்
ப்ருகோ பதா காத கதாம் நிஸம்ய ஸ்வேநாபி ஸக்யம் ததிதீவ மோஹாத் –3-

பெரிய திருவடி இடம் -தார்ஷ்யர் இடம் -உங்கள் திருவடியை அர்ப்பித்த தங்கள் உடைய
திரு மார்பில் இந்தக் குதிரை -தார்ஷ்ய -எட்டி உதைத்தது –
பிருகு முனிவர் தங்களை திரு மார்பில் உதைத்த கதையைக் கேட்டு தானும்
அவ்வாறு செய்யலாம் என்று நினைத்தானோ –

—————

பிரவஞ்சயன் அஸ்ய குராஞ்சலம் த்ராக் அமுஞ்ச சிஷேபித தூர தூரம்
ஸம் மூர்ச்சிதோ அபி ஹ்யதி மூர்ச்சிதேந க்ரோதோஷமணா காதி து மாத்ருதஸ் த்வாம் -4-

அந்த அசுரனுடைய கால்களின் உதையில் இருந்து விலகி அவனை வெகு தூரத்தில் வீசி எறிந்தீர்கள்
அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும் மயக்கம் தெளிந்த உடன் மீண்டும்
அதிகக் கோபத்துடன் உங்கள் இடம் வந்தான் –

———–

த்வம் வாஹ தண்டே க்ருததீஸ் ச வாஹ தண்டம் ந்யதாஸ் தஸ்ய முகே ததா நீம்
தத் வ்ருத்தி ருத்தஸ் வசநோ கதாஸூ சப்தீ பவன்நப்ய யமைக்யம் ஆகாத் –5-

அந்தக் –வாஹ தண்டே க்ருததீஸ்-குதிரையைக் கொல்லத் தீர்மானித்த நீர் –வாஹ தண்டம் ந்யதாஸ்-பெரிய தடியைப் போன்ற தங்கள் கைகளை
அவன் முகத்தில் வைத்து அழுத்தினீர்கள் –
அதனால் மூச்சுத் திணறி உயிர் இழந்த அந்த குதிரை வடிவு எடுத்த அசுரன்
தங்கள் இடத்திலேயே ஐக்யம் ஆனான் -ஏழு என்றும் குதிரை என்றும் சப்தீ -ஒன்றாக ஐக்யம் முக்தி அடைந்தான்

————–

ஆலம்ப மாத்ரேண பஸோ ஸூராணாம் ப்ரஸாதகே நூத்ந இவ அஸ்வமேதே
க்ருதே த்வயா ஹர்ஷ வஸாத் ஸூரேந்த்ராஸ் த்வாம் துஷ்டுவு கேஸவ நாமதேயம் –6–

அஸ்வமேத யாகத்தில் குதிரையின் அங்கங்களை யாகத் தீயில் இடுவது போல் இந்த
கேசீ என்னும் குதிரை வேறு விதமாகக் கொல்லப் பட்டது என்று தேவர்கள் மகிழ்ந்தனர் –
கேசீ குதிரையைக் கொன்றதால் உமக்கு கேசவன் என்ற திரு நாமம் இட்டு ஸ்துதித்தனர் –

——–

கம்ஸாய தே ஸுவ்ரி ஸூதத்வம் உக்த்வா தம் தத் வதோத்கம் ப்ரதி ருஸ்ய வாசா
ப்ராப்தேந கேஸி ஷபண அவசாநே ஸ்ரீ நாரதேந த்வம் அபிஷ்டுதோ அபூ -7–

நாரதர் கம்சன் இடம் தங்கள் வாஸூ தேவனின் மகன் என்று கூறினார் –
அதைக் கேட்ட கம்சன் வாஸூதேவரைக் கொல்ல முயன்ற போது நாரதர் தடுத்தார்
பின்னர் அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் தங்களை ஸ்துதித்தார் –

————

கதாபி கோபை ஸஹ காந நாந்தே நிலாயந க்ரீடந லோலுபம் த்வாம்
மயாத்மஜ பிராப துரந்த மாயோ வ்யோமாபிதோ வ்யோம சர உபரோதீ –8-

ஒரு நாள் இடையர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் –
அப்போது தேவர்களைத் துன்புறுத்துபவனும் அளவற்ற மந்த்ர சக்திகளைக் கொண்டவனும்
மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன் அங்கு வந்தான் –

——

ச சோர பாலாயித வல்லவேஷு சோராயிதோ கோப சிஸூன் பஸூம்ஸ் ச
குஹாஸூ க்ருத்வா பிததே ஸ்லாபிஸ் த்வயா ச புத்த்வா பரி மர்திதோ அபூத் –9-

திருடர்களும் காப்பாற்றுவார்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய் கலந்து விளையாடினான் –
இடைச் சிறுவர்களையும் பசுக்களையும் திருடி குகையில் அடைத்து வைத்து குகையின் வாசலைப் பெரிய கல்லால்
அடைத்து மூடினான் – இதை அறிந்த நீர் அவனைக் கொன்றீர் –

———

ஏவம் விதைஸ் ச ஸ அத்புத கேலி பேதைர் ஆநந்த மூர்ச்சாம்  அதுலாம் வ்ரஜஸ்ய
பதே பதே நூதநயன்ந ஸீமாம் பரமாத்ம ரூபிந் பவ நேச பாயா –10-

இவ்வாறு அதிசயத் தக்க நிகர் அற்ற பல் சேஷ்டிதங்களால் திரு ஆயர் பாடி மக்களை
ஆனந்தக் கடலில் ஆழ்த்தினீர்கள்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading