ஸூத உவாச
அத தத ஸம்பதேதாநாம் ஸ்வாநாம் உதக3ம் இச்சதாம் |
தா3தும் ஸக்ருஷ்ணா க3ங்கா3யாம் புேஸ்க்ருத்ய யயு: ஸ்த்ரிய: || 1
தத நிநீதயாத3கம் ஸர்தவ விலப்ய ச ப்4ருஶம் புந: |
ஆப்லுதா ஹரிபாதா3ப்ஜ ேஜ:பூத ஸரி்ஜதல || 2
தத்ோஸீநம் குருபதிம் த்4ருதோஷ்ட்ேம் ஸஹாநுஜம் |
கா3ந்தா4ரீம் புத்தே ஶாகார்தாம் ப்ருதாம் க்ருஷ்ணாம் ச மாத4வ: || 3
ஸாந்த்வயாம் ஆஸ முநிபி4ர் ஹத ப3ந்தூ4ன் ஶுசார்பிதாந் |
பூ4ததஷு காலஸ்ய க3திம் த3ர்ஶயந் ந ப்ேதிக்ரியாம் || 4
ஸாத4யித்வாஜாத ஶத்தோ: ஸ்வம் ோ்யம் கிதவவர் ஹ்ருதம் |
கா4தயித்வாஸததா ோ்ஞ: கச ஸ்பர்ஶ ஷதாயுஷ: || 5
யாஜயித்வாஶ்வதமவதஸ் தம் த்ரிபி4ர் உத்தம கல்பபவக: |
தத்3யஶ: பாவநம் தி3ஷு ஶத மந்தயார் இவாததநாத் || 6
ஆமந்த்ர்ய பாண்டு3புத்ோம்ஶ் ச வஶதநதயாத்3த3வஸம்யுத: |
த்3வவபாயநாதி3பி4ர் விப்வே: பூஜிவத: ப்ேதிபூஜித: || 7
க3ந்தும் க்ருதமதிர் ப்3ேஹ்மந் த்3வாேகாம் ேதம் ஆஸ்தித: |உபதலதப4
’பி4தா4வந்தீம் உத்தோம் ப4ய விஹ்வலாம் || 8
உத்தல ாவாச
பாஹிபாஹிமஹாதயாகி3ந் தத3வதத3வ ஜக3த்பதத |
நாந்யம் த்வத்3 அப4யம் பஶ்தய யத்ே ம்ருத்யு: பேஸ்பேம் || 9
திரௌபதியையும் பாண்டவர்களையும் தேற்றிவிட்டு த்வாரகை செல்ல கிருஷ்ணன் எத்தனிக்கும் சமயம்
அபிமன்யுவின் மனைவி உத்தரை பயத்துடன் அவரை நோக்கி ஓடிவந்தாள். அவள் கூறினாள்,
பாஹி பாஹி மகாயோகின் தேவ தேவ ஜகத்பதே
நான்யம் த்வதன்யம் பச்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்
“மகாயோகியே தேவதேவா உலக நாயகனே ஒருவருக்கொருவர் யமனாக உள்ள இந்த உலகத்தில் உன்னைத் தவிர
வேறு கதி இல்லை (இது தற்கால உலகத்திற்கும் நன்கு பொருந்தும் )’
“பழுக்கக் காய்ந்த இரும்பு போல் பாணம் என்னை தஹிக்கிறது.
நான் போனாலும் என் கர்ப்பம் அழியாமல் இருக்க வேண்டும் .” என்றாள்.
கிருஷ்ணர் இது அஸ்வத்தாமா விட்ட அஸ்திரம் என்பதறிந்து அவள் கர்பத்துள் புகுந்து சக்ராயுதத்தால்
அந்த அஸ்திரத்தை அழித்து சிசுவைக் காப்பாற்றினார்.
அபி4த்3ேவதி மாம் ஈஶ ஶேஸ் தப்தாயதஸா விதபா4 |
காமம் த3ஹது மாம் நாத மா தம க3ர்தபா4 நிபாத்யதாம் || 10
ஸூத உவாச
உபதா4ர்ய வசஸ் தஸ்யா ப4க3வாந் ப4க்த வத்ஸல: |
அபாண்டவம் இத3ம் கர்தும் த்3ரேௌதணர் அஸ்த்ேம் அபு3த்4யத || 11
தர்ஹ்ய் ஏவாத முநிஶ்தேஷ்ட பாண்ட3வா: பஞ்ச ஸாயகாந் |
ஆத்மதநா ’பி4முகாந் தீ3ப்தாந் ஆலக்ஷ்யாஸ்த்ோண்ய் உபாத3து3 : || 12
வ்யஸநம் வீக்ஷ்ய தத் ததஷாம் அநந்ய விஷயாத்மநாம் |
ஸுத3ர்ஶதநந ஸ்வாஸ்த்தேண ஸ்வாநாம் ேஷாம் வ்யதா4த்3 விபு4 : || 13
அந்த:ஸ்த: ஸர்வ பூ4தாநாம் ஆத்மா தயாதக3ஶ்வதோ ஹரி: |
ஸ்வ மாயயாவ்ருதணாத்3 க3ர்ப4ம் வவோட்யா: குருதந்ததவ || 14
அந்தஸ்த: சர்வபூதானாம் ஆத்மா யோகேச்வரோ ஹரி:
ஸ்வமாயயா ஆவ்ருணோத் கர்ப்பம் வைராட்யா:குருதந்தவே
யோகேச்வரனான் கிருஷ்ணன் எல்லா ப்ராணிகளுடைய ஹ்ருதயத்திலும் பிரகாசிக்கும் ஆத்மாவானவர் உத்தரையினுள்ளும்
இருந்து கொண்டு குரு வம்சத்தை அழியாமல் காக்க தன் மாயாசக்தியால் கருவுக்கு கவசம் அளித்தார்.
உண்மையில் பகவான் கர்பத்தினுள் புகாமலேயே சிசுவைக் காப்பாற்ற இயலும் ஆனால் பரீக்ஷித்திற்கு அருள வேண்டி
சங்க சக்கரத்துடன் அங்குஷ்ட மாத்ரமாக சிசுவின் முன் தோன்றினான். அதனால் பரீக்ஷித் மிகச்சிறந்த பாகவதன் ஆனான்.
அந்த சிசு உயிர் பிழைத்தாலும் ப்ரம்மாஸ்திரத்தின் கடுமையால் கரிக்கட்டை போல் பிறந்தது.
கிருஷ்ணர் தன் பாதத்தால் அதை வருடிய பின் அதற்கு உயிர் வந்தது. பிறந்ததும் அந்த சிசு தன் முன்னால்
கர்பத்தில் தோன்றியவர் யார் எனத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்ததால் பரீக்ஷித் என்ற பெயர் ஏற்பட்டது.
———-
யத்3யப்ய் அஸ்த்ேம் ப்3ேஹ்ம ிேஸ் த்வ் அதமாக4ம் சாப்ேதிக்ரியம் |
வவஷ்ணவம் ததஜ ஆஸாத்3ய ஸமஶாம்யத்3 ப்4ருகூ3த்3வஹ || 15
மா மம்ஸ்தா ஹ்ய் ஏதத்3 ஆஶ்சர்யம் ஸர்வாஶ்சர்யமதய ’ச்யுதத |
ய இத3ம் மாயயா தத3வ்யா ஸ்ருஜத்ய் அவதி ஹந்த்ய் அஜ: || 16
ப்3ேஹ்மதததஜா விநிர்முக்வதர் ஆத்மவஜ: ஸஹ க்ருஷ்ணயா |
ப்ேயாணாபி4முகம் க்ருஷ்ணம் இத3ம் ஆஹ ப்ருதா ஸதீ || 17
குந்த்ய் உவாச
நமஸ்தய புருஷம் த்வாத்3யம் ஈஶ்வேம் ப்ேக்ருதத: பேம் |
அலக்ஷ்யம் ஸர்வ பூ4தாநாம் அந்தர் ப3ஹிர் அவஸ்திதம் || 18
குந்தி ஸ்துதி
நமஸ்யே புருஷம் து ஆத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே:பரம்
அலக்ஷ்யம் ஸர்வ பூதானாம் அந்தர்பஹி: அவஸ்திதம்
ஆத்யம் புருஷம்- ஆதிபுருஷனான
ப்ரக்ருதே: பரம்- ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட
ஈஸ்வரம் – இறைவனான,
சர்வபூதானாம் – எல்லா உயிர்களுக்கும்
அந்தர்பஹி: உள்ளும் புறமும்
அவஸ்திதம்- நிறைந்திருப்பவனாய்
அலக்ஷ்யம் – ஆனால் அவைகளால் அறியப்பப்டாதவனான் உன்னை நமஸ்யே – வணங்குகிறேன்
மாயாஜவநிகாச்சந்நம் அ்ஞாததா4ஷஜம் அவ்யயம் |
ந லக்ஷ்யதஸ மூட4த்3ருஶா நதடா நாட்யத4தோ யதா || 19
மாயாஜவனிகாச்சன்னம் அக்ஞா அதோக்ஷஜம் அவ்யயம்
ந லக்ஷ்யஸே மூடத்ருசா நடோ நாட்யதரோ யதா
அக்ஞா மாயாஜவநிகாச்சன்னம் – அறியாமை என்ற மாயத் திரையினால் மறைக்கப்பட்டு
அதோக்ஷஜம் –இந்த்ரியங்களால் அறியப்படாதவன்
அவ்யயம்- மாறுபாடற்றவன் நீ.
யதா- எவ்வாறு
நாட்ட: – ஒரு நடிகன்
நாட்யதர: நாடகத்தின் வேஷம் போடுகிறானோ அதுபோல் உள்ள நீ
மூடத்ருசா- மூடர்களின் பார்வையில்
ந லக்ஷ்யஸே- காணப்படுவதில்லை
ததா2 பேமஹம்ஸாநாம் முநீநாம் அமலாத்மநாம் |
ப4க்திதயாக3 விதா4நார்தம் கதம் பஶ்தயமஹிஸ்த்ரிய: || 20
ததா பரமஹம்ஸானாம் முநீனாம் அமலாத்மனாம்
பக்தியோகவிதானார்த்தம் கதம் பச்யாமஹே ஸ்த்ரிய:
அமலாத்மனாம் – பரிசுத்த இதயம் உள்ள
முநீனாம் – முனிவர்களுக்கும்
பரமஹம்சானாம் -முற்றும் துறந்தவர்களுக்கும்
பக்தியோகவிதானார்த்தம்- அவர் மனதில் பக்தியை தோற்றுவிப்பதற்காக
ததா- அவ்வாறே நீ மறைந்துள்ளாய் அப்படியிருக்க
கதம் – எவ்வாறு
ஸ்த்ரிய: ஸ்திரீகளாகிய நாங்கள்
பச்யாமஹே– உன்னைக் காண்பது?
பிறகு திரும்பவும் கிருஷ்ணர் த்வாரகை செல்ல ஆயத்தமானபோது குந்தி பாண்டவர்களுடனும் த்ரௌபதியுடனும் வந்து
அவரை துதி செய்தால். அது குந்தி ஸ்துதி என்று கூறப்படும் ஒரு பொருள் நிறைந்த துதியாகும்.
அவள் கூறியதாவது ,
“ நீ ஆதிபுருஷன். ஈஸ்வரன். ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவன். எல்லா ப்ராணிகளுக்கும் உள்ளே அவைகளுக்கே தெரியாமல்
நீ உறைந்துள்ளாய். மாயை என்ற திரைக்குள் ஒரு கை தேர்ந்த நடிகனைப்போல் நீ மறைந்துள்ளாய்.
யோகிகளுக்கும் ஞாநிகளுக்குமே எட்டாத உன்னை எங்ஙநம் என்னைப்போன்ற ஸ்த்ரீகளால் அறிந்து கொள்ள இயலும்? “
க்ருஷ்ணாய வாஸுதத3வாய தத3வகீநந்த3நாய ச |
நந்த3தகா3ப குமாோய தகா3விந்தா3ய நதமா நம: || 21
கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகீனந்தனாய ச
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம:
கிருஷ்ணனுக்கு வாசுதேவனுக்கு தேவகி நந்தனனுக்கு நந்தகோபனின் குமாரனுக்கு கோவிந்தனுக்கு நமஸ்காரம்.
நம: பங்கஜ நாபா4ய நம: பங்கஜ மாலிதந |
நம: பங்கதஜ நத்ோய நமஸ் தத பங்கஜாக்4ேதய || 22
நம: பங்கஜநாபாய நம: பங்கஜ மாலினே
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே
தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு ,
தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம்
யதா2 ஹ்ருஷீதகஶ கதலந தத3வகீ
கம்தஸந ருத்3தா3திசிேம் ஶுசார்பிதா |
விதமாசிதாஹம் ச ஸஹாத்மஜா விதபா4
த்வவயவ நாததந முஹுர் விபத்3க3ணாத் || 23
யதா ஹ்ருஷீகேச கலேன தேவகீ
கம்ஸேன ருத்தா அதிசிரம் சுசார்பிதா
விமோசிதா அஹம் ச ஸஹாத்மஜா விபோ
த்வயைவ நாதேன முஹு: விபத்கணாத்
ஹ்ருஷீகேச – ரிஷிகேசா
விபோ- பிரபோ
யதா- எவ்வாறு
தேவகீ- தேவகி
கலேன கம்சேன – துஷ்டனான கம்சனால்
ருத்தா – சிறைப்படுத்தப்பட்டு
சுசார்பிதா – துக்கமுற்று விமோசிதா- விடுவிக்கப்பட்டாளோ அதேபோல
அஹம் ச – நானும்
ஸஹாத்மஜா- என் பிள்ளைகளுடன்
த்வயாஏவ நாதேன- எங்கள் ரக்ஷகனான உன்னால்
முஹு_ அடிக்கடி
விபத்கணாத் – ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டோம்.
விஷாந் மஹாக்3தந: புருஷாத3த3ர்ஶநாத்3
அஸத்ஸபா4யா வந வாஸ க்ருச்ச்ேத: |
ம்ருதத4 ம்ருதத4’தநக மஹாேதாஸ்த்ேததா
த்ரேௌண்ய்அஸ்த்ேதஶ் சாஸ்ம ஹதே ’பி4ேக்ஷிதா: || 24
விஷாத் மஹாக்னே: புருஷாத தர்சனாத்
அஸத் ஸபாயா; வனவாஸக்ருச்ரத:
ம்ருதே ம்ருதே அநேக மஹாரதாஸ்த்ரத:
த்ரௌண்யஸ்த்ராத் ச அஸ்மா ஹரே அபிரக்ஷிதா:
விஷாத் – விஷத்தில் இருந்தும் ( பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்தது)
மஹாக்னே: பெரிய நெருப்பில் இருந்தும் ( அரக்கு மாளிகை)
புருஷாததர்சநாத் – ராக்ஷசர்களிடம் இருந்து ( ஹிடும்பன் பகாசுரன் முதலியவர்கள்)
அஸத்சபாயா: – தீயவர்களின் கூட்டத்தில் இருந்து ( சூதாட்டம் வசஸ்த்ராபஹரணம் முதலியவை )
வனவாஸ க்ருச்ரத: – வனவாசத்தின் கஷ்டங்களில் இருந்து ( அக்ஷயபாத்ரம் , துர்வாசர் முதலியவை)
ம்ருதே ம்ருதே – யுத்தங்களில்
அநேக மகாரதாஸ்தரத: – பெரும் யுத்தவீரர்களின் அஸ்திரங்களில் இருந்து
த்ரௌண்யஸ்த்ராத்-இப்போது அச்வத்தாமாவின் ப்ரம்மாஸ்திரத்தில் இருந்து
அஸ்மா- நாங்கள்
ஹரே – ஹரியே உன்னால் அபிரக்ஷிதா: – காப்பாற்றப்பட்டோம்.
விபத3
: ஸந்து3 ந: ஶஶ்வத் தத்ே தத்ே ஜக3த்கு3தோ |
ப4வததா த3ர்ஶநம் யத் ஸ்யாத்3 அபுநர் ப4வ த3ர்ஶநம் || 25
விபத: ஸந்து ந: சச்வத் தத்ர தத்ர ஜகத்குரோ
பவத:தர்சனம் யத் ஸ்யாத் அபுனர்பவதர்சனம்
விபத: – ஆபத்துகள்
சாஸ்வத: – எப்போதும்
ந: எங்களுக்கு
ஸந்து – ஏற்படட்டும்
ஜகத்குரோ- ஜகத்குருவே
தத்ர தத்ர – அப்போதெல்லாம்
தவ தர்சனம் – உன்னைக் காண்பது என்பது
யத் ஸ்யாத் – இருக்குமேயானால்.
ஜந்வமஶ்வர்ய ஶ்ருத ீபி4ர் ஏத4மாந மத4 : புமாந் |
வநவார்ஹத்ய் அபி4தா4தும் வவ த்வாம் அகிஞ்சந தகா3சேம் || 26
ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: ஏதமான: மத; புமான்
நைவ அர்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சனகோசரம்
ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: -பிறப்பு செல்வம் பதவி புகழ் இவைகளால்
ஏதமான: மதம் புமான் – மதம் கொண்ட மனம் படைத்த மனிதன்
அகிஞ்சனகோசரம் – பக்தியத் தவிர வேறு ஒன்றும் இல்லதவரால் அறியப்படும்
த்வாம் – உன்னை
அபிதாதும் – உன் பெயர் சொல்லக்கூட
ந அர்ஹதி – அருகதை அற்றவன்
நதமா ’கிஞ்சந வித்தாய நிவ்ருத்த கு3ண வ்ருத்ததய |
ஆத்மாோமாய ஶாந்தாய வகவல்பய பததய நம: || 27
நமோ அகிஞ்சனவித்தாய நிவ்ருத்த குணவ்ருத்தயே
ஆத்மாராமாய சாந்தாய கைவல்யபதயே நம:
அகிஞ்சனவித்தாய – பக்தியைத்தவிர ஒன்றுமே இல்லாதவர்களின் செல்வமாக உள்ளவனும்
நிவ்ருத்த குணவ்ருத்தயே –மூன்று குணங்களின் செய்கைக்கு அப்பாற்பட்டவனும் ஆன உனக்கு
நம: நமஸ்காரம்
ஆத்மாராமாய –ஆத்மானந்தனும்
சாந்தாய – சாந்தமானவனும்
கைவல்யபதயே – மோக்ஷகாரகனும் ஆன உனக்கு
நம: – நமஸ்காரம்.
மந்தய த்வாம் காலம் ஈஶாநம் அநாதி3நித4நம் விபும் |
ஸமம் சேந்தம் ஸர்வத்ே பூ4தாநாம் யந் மித: கலி: || 28
மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதிநிதனம் விபும்
ஸமம் சரந்தம் சர்வத்ர பூதானாம் யன்மித: கலி:
த்வாம்- உன்னை
ஈசானம்- ஈசனாகவும்
அனாதிநிதனம் – ஆதி அந்தம் இல்லாதவனாகவும்
சர்வத்ர – எங்கும்
ஸமம்-ஒரேமாதிரி
சரந்தம்- சஞ்சரிப்பவனாகவும்
பூதானாம்- உயிர்களுடைய
யன்மித: கலி- இடையில் பேதத்தை உண்டுபண்ணும்
காலம்- காலமாகவும்
மன்யே –எண்ணுகிறேன்.
காலமானது பேதத்தை உண்டுபண்ணி முடிவில் அழிக்கிறது.
( மகாபாரத யுத்தமே உதாரணம்) அதுவும் உன் செயலே என்கிறாள்.
ந தவத3 கஶ்சித் ப4க3வம்ஶ் சிகீர்ஷிதம்
ததவஹமாநஸ்ய ந்ருணாம் விட3ம்ப3நம் |
ந யஸ்ய கஶ்சித்3 த3யிததா ’ஸ்தி கர்ஹிசித்
த்3தவஷ்யஶ் ச யஸ்மிந் விஷமா மதிர் ந்ருணாம் || 29
ந வேத கஸ்சித் பகவன் சிகீர்ஷிதம்
தவ ஈஹமானஸ்ய ந்ருணான் விடம்பனம்
ந யஸ்ய கஸ்சித் தயிதோSஸ்தி கர்ஹிசித்
த்வேஷ்யஸ்ச யஸ்மின் விஷமா மதி: ந்ருணாம்
பகவன்- பகவானே
கஸ்சித்- எவருமே
தவ- உன்னுடைய
ஈஹமானஸ்ய- ஆசைகளுடன் கூடிய
ந்ருணாம்- மனிதர்களை
விடம்பனம் – போலவே நடிக்கும்
சிகீர்ஷிதம் – செயல்களை
ந வேத-அறியவில்லை அதாவது
யஸ்ய – எவருக்கு
கஸ்சித்- யாருமே
தயித: – வேண்டப்பட்டவரோ
கர்ஹிசித்- வேறு எவரும்
த்வேஷ்ய: ச – எதிரிகளோ
ந அஸ்தி – இல்லையோ.
யஸ்மின்- எவரிடத்தில்
ந்ருணாம்- மனிதர்களிடம்
விஷமாமதி: பாரபட்சம் (இல்லையோ ) என்பதை அறிந்துகொண்டவர் யாரும் இல்லை.
ஜந்ம கர்ம ச விஶ்வாத்மந்ந் அஜஸ்யாகர்துர் ஆத்மந: |
திர்யńந்ர்ஷிஷு யாத3 :ஸு தத்3 அத்யந்த விடம்பநம் || 30
ஜன்ம கர்ம ச விச்வாத்மன் அஜஸ்ய அகர்து: ஆத்மன:
திர்யக் ந்ரு ரிஷிஷு யாதஸ்ஸு தத் அத்யந்த விடம்பனம்
விச்வாத்மன் – பிரபஞ்சத்தின் ஆத்மாவானவரே
அஜஸ்ய-பிறப்பு இல்லாத
அகர்த்து: – செயல் என்பதே இல்லாத
ஆத்மன: ஆத்மாவான உனக்கு
திர்யக், ந்ரு , ரிஷிஷு , யாதஸ்ஸு- மிருகம் மனிதன் ரிஷி நீர் வாழ் இனம் இப்படி ( பல அவதாரங்கள்)
ஜனம் கர்ம – பிறப்பும் செயலும் சொல்லப்படுகிறதோ
தத்- அது
அத்யந்த விடம்பனம் – மிகவும் முரண்பட்டு இருக்கிறது.
தகா3ப்ய் ஆத3தத3 த்வயி க்ருதாக3ஸி தா3ம தாவத்
யா தத தஶாஶ்ருகலிலாஞ்ஜந ஸம்ப்4ேமாஷம் |
வக்த்ேம் நிநீய ப4ய பா4வநயா ஸ்திதஸ்ய
ஸா மாம் விதமாஹயதி பீ4ர் அபி யத்3 பி3தப4தி || 31
கோப்யாததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
யா தே தசாஸ்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்
வக்த்ரம் நிநீய பயபாவனயா ஸ்திதஸ்ய
ஸா மாம் விமோஹயதி பீரபி யத்பிபேதி
த்வயி- நீ
க்ருதாகஸி- தயிர்பானையை உடைத்து விஷமம் செய்த போது
கோபீ- யசோதை
தாம் – உன்னைக் கட்டுவதற்காக கயிறை
ஆததே – எடுத்து வந்த போது
அச்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்-கண்களில் இட்ட மை கரைந்திட கண்ணீருடன்
வக்த்ரம் நிநீய- முகம் குனிந்துகொண்டு
பயபாவனயா ஸ்திதஸ்ய- பயமுற்றவன் போல் நின்று
யா தே தசா ஸா- எந்த நிலையில் நின்றாயோ அது
மாம் –என்னை
விமோஹயதி- ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏன் என்றால்
பீ:அபி யத் பிபேதி- உன்னிடம் பயம் அல்லவா பயப்படும்?
தகசித்3 ஆஹுர் அஜம் ஜாதம் புண்ய ஶ்தலாகஸ்ய கீர்ததய | யததா3
: ப்ரியஸ்யாந்வவாதய மலயஸ்தயவ சந்த3நம் || 32
கேசித் ஆஹு: அஜம் ஜாதம் புண்யச்லோகஸ்ய கீர்த்தயே
யதோ: ப்ரியஸ்ய அன்வவாயே மலயஸ்ய இவ சந்தனம்
புண்யச்லோகஸ்ய – புண்ணியம் செய்தவனும்
ப்ரியஸ்ய – ப்ரியமானவனும் ஆனா
யதோ: யதுவின்
கீர்த்தயே – புகழ் ஒங்க
அன்வவாயே – அவனுடைய குலத்தில்
சந்தனம்- சந்தனம்
மலயஸ்ய இவ – மலைய பர்வதத்தில் தோன்றினது போல
அஜ: – பிறவி இல்லாத நீ
ஜாதம் – தோன்றினாய் என்று
கேசித் – சிலர்
ஆஹு:- கூறுகின்றனர்.
அபதே வஸுதத3வஸ்ய ததவக்யாம் யாசிததா ’ப்4யகா3த் |
அஜஸ் த்வம் அஸ்ய தஷமாயவதா3ய ச ஸுே த்3விஷாம் || 33
அபரே வசுதேவஸ்ய தேவக்யாம் யாசித: அப்யகாத்
அஜ: த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுரத்விஷாம்
அபரே- இன்னும் சிலர் கூறுகின்றனர்
வசுதேவஸ்ய – வசுதேவருடையவும்
‘தேவக்யாம் – தேவகியுடையவும்
யாசித: – வேண்டப்பட்டு’
அஜ: த்வம் – பிறவி இல்லாத நீ’
அஸ்ய க்ஷேமாய – அவர் க்ஷேமத்திற்காக
ஸுரத்விஷாம் – அசுரர்களுடைய
வதாய ச – வதத்திற்காகவும் அவதரித்தாய் என்று.
பா4ோவதாேணாயாந்தய பு4தவா நாவ இதவாத3ரதௌ 4 |
ஸீத3ந்த்யா பூ4ரிபா4தேண ஜாததா ஹ்ய் ஆத்ம பு4வார்தித: || 34
பாராவதாரணாய அன்யே புவ: நாவ இவோததௌ
ஸீதன்த்யா பூரிபாரேண ஜாதோ ஹ்யாத்மபுவார்தித:
அன்யே- வேறு சிலர்
உததௌ- சமுத்திரத்தில்
நாவ இவ – படகு போல
பூரிபாரேண- மிகுந்த பாரத்தால்
ஸீதந்த்யா: – சிரமப்படுகிற
புவ: -பூமியின்
பாராவதரணாய- பாரத்தைக் குறைப்பதற்காக
ஆத்மபுவா – பிரம்மாவால்
அர்தித: -ப்ரார்த்திக்கப்பட்டு
ஜாத: – அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.
ப4தவ ’ஸ்மிந் க்லிஶ்யமாநாநாம் அவித்3யாகாம கர்மபி4 : |
ஶ்ேவண ஸ்மேணார்ஹாிகரிஷ்யந்ந் இதி தகசந || 35
பவே அஸ்மின் க்லிச்யமானானாம் அவித்யாகாமகர்மபி:
ச்ரவண ஸ்மாரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன
கேசன – இன்னும் சிலர்
அஸ்மின் பவே – இந்த சம்சாரத்தில்
அவித்யாகாம கர்மபி: – அறியாமையினால் ஆசைவசப்பட்டு செய்யும் செயல்களால்
க்லிச்யமாநானாம் – கஷ்டப்படுகிறவர்களுக்கு
ச்ரவண ஸ்மாரணார்ஹாணி-ஸ்ரவணம் நாமஸ்மரணம் இவைகளை
கரிஷ்யன் இதி – காட்டிக்கொடுக்கவே அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.
ஶ்ருண்வந்தி கா3யந்தி க்3ருணந்த்ய் அபீ4க்ஷ்ணஶ:
ஸ்மேந்தி நந்த3ந்தி ததவஹிதம் ஜநா:
த ஏவ பஶ்யந்த்ய் அசிதேண தாவகம
ப4வ ப்ேவாதஹாபேமம் பதா3ம்புஜம் || 36
ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபீக்ஷ்ணச;
ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:
த ஏவ பச்யந்தி அசிரேண தாவகம்
பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்
ஜனா: – மக்களில் யார் யார்
ஸ்ருண்வந்தி – உன்னைப்பற்றி கேட்கிறார்களோ
காயந்தி- உன்னைப் பாடுகிறார்களோ
க்ருணந்தி அபீக்ஷ்ணச;-எப்போதும் உன் புகழ் பரப்புகிறார்களோ
தவேஹிதம் ஸ்மரந்தி – உன் செயல்களை நினினைத்து
நந்தந்தி – மகிழ்வடைகிறார்களோ
தே ஏவ – அவர்கள் தான்
அசிரேண- விரைவில்
பவப்ரவாஹோபரமம் – சம்சாரமாகிற பிரவாகத்தை தடுக்கும்
தாவகம் பதாம்புஜம் – உன்னுடைய பத கமலத்தை
பச்யந்தி- பார்க்கிறார்கள்.
அப்ய் அத்3ய நஸ் த்வம் ஸ்வ க்ருததஹித ப்ேதபா4
ஜிஹாஸஸி ஸ்வித் ஸுஹ்ருததா3 ’நுஜீவிந: |
தயஷாம் ந சாந்யத்3 ப4வத: பதா3ம்புஜாத்
போயணம் ோஜஸு தயாஜிதாம்ஹஸாம் || 37
அப்யத்ய ந:த்வம் ஸ்வக்ருதேஹித ப்ரபோ
ஜிஹாஸஸி ஸ்வித் ஸுஹ்ருதோ அனுஜீவின:
ஏஷாம் ந சான்யத் பவத: பதாம்புஜாத்
பராயணம் ராஜஸு யோஜிதாம்ஹஸாம்
பிரபோ- பிரபுவே
த்வம் – நீ
அத்ய – இப்போது
ந:: எங்களுக்காக
ஸ்வக்ருத ஈஹித – நீ தானகவே முன்வந்து செய்ததை எல்லாம்
ஜிஹாஸஸி ஸ்வித் – விட்டு விட்டு செல்லப் போகிறாயா?
ஸுஹ்ருத: – நண்பர்களான
அனுஜீவின: உன்னையே நம்பியுள்ள
ஏஷாம் – இவர்களுக்கு
யோஜிதாம்ஹசாம் – விரோத மனப்பான்மையில் உள்ள
ராஜஸு- அரசர்கள் மத்தியில்
பவத: பதாம்புஜாத் – உன் சரண கமலங்களைத்தவிர
ந ச அன்யத் பராயணம் – வேறு கதி இல்லை
தக வயம் நாம ூபாப்4யாம் யது3பி4 : ஸஹ பாண்டவா: |
ப4வததா ’த3ர்ஶநம் யர்ஹிஹ்ருஷீகாணாம் இதவிது: || 38
கே வயம் நாமரூபாப்யாம் யதுபி: ஸஹ பாண்டவா:
பவதோ அதர்சனம் யர்ஹி ஹ்ருஷீகாணாம் இவ ஈசிது:
பவத: அதர்சனம் யர்ஹி-உன்னுடைய தரிசனம் இல்லையேல்
யதுபி: ஸஹ பாண்டவா: -யாதவர்களும் பாண்டவர்களாகிய
வயம் – நாங்களும்
கே? – யார்?
ஹ்ருஷீகாணாம்- இந்த்ரியங்களுடைய நிலைமை
ஈசிது: இவ- செயல்படவைக்கும் ஆத்மாவின் இன்மை போல செயலற்று விடுவோம்.
தநயம் தஶாபி4ஷ்யதத தத்ே யதத2தா3நீம் க3தா3த4ே |
த்வத்பவத3ர் அகிதா பா4தி ஸ்வ லஷண விலக்ஷிவத: || 39
நேயம் சோபிஷ்யதே தத்ர யதா இதாநீம் கதாதர
த்வத்பதை: அங்கிதா பாதி ஸ்வலக்ஷணவிலக்ஷிதை:
கதாதர- கிருஷ்ணா
இயம் – இந்த பிரதேசம்
இதாநீம் – இப்போது
த்வத் பதை: உன் பாதங்களால்
அங்கிதா பாதி – அடையாளம் செய்யப்பட்டு பிரகாசிக்கிறது
யதா- எப்போது
தத்ர – அங்கு
ஸ்வலக்ஷண விலக்ஷிதை: பாதி- உன் அடையாளம் இல்லாமல் போகிறதோ
ந சோபிஷ்யதே – அப்போது அது அழகை இழந்து விடும்.
இதம ஜந பதா3 : ஸ்வ்ருத்3தா3 : ஸுபக்ரவௌஷதி4வீருத4 : |
வநாத்3ரிநத்3ய்உத3ந்வந்ததா ஹ்ய் ஏத4ந்தத தவ வீக்ஷிவத: || 40
இமே ஜனபதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதிவீருத:
வனாத்ரிநத்யுதன்வந்த: ஹ்யேதந்தே தவ வீக்ஷிதை:
இமே ஜனபதா: – இந்த பிரதேசங்கள்
ஸ்வ்ருத்தா: – செழிப்புடன்
ஸுபக்வௌஷதிவீருத: – நன்கு வளர்ந்த மூலிகைகள் தான்யங்கள் இவையுடனும்
வன அத்ரி நதி உதன்வந்த: ஹி- வனங்கள் மலைகள் நதிகள் கடல்கள் இவையுடனும்
ஏதந்தே –வளர்ந்துள்ளன.
அத விஶ்தவஶ விஶ்வாத்மந் விஶ்வ மூர்தத ஸ்வதகஷு தம |
ஸ்தநஹ பாஶம் இமம் சிந்தி4 த்3ருட3ம் பாண்டு3ஷு வ்ருஷ்ிஷு || 41
அத விச்வேச விச்வாத்மன் விச்வமூர்த்தே ஸ்வகேஷு மே
ஸ்நேஹபாசம் இமம் ச்சிந்தி த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு
அத – இப்போது
விச்வேச –உலகநாயகனாயும்
விச்வாத்மன்- உலகத்தின் ஆத்மாவாகவும்
விச்வமூர்த்தே – உலக வடிவாகவும் உள்ளவனே
பாந்துஷு – பாண்டுகுலத்திலும்
வ்ருஷ்ணிஷு – வ்ருஷ்ணிகுலத்திலும்
ஸ்வகேஷு – உறவினர்களிடம் உள்ள
த்ருடம்- த்ருடமான
இமம் ஸ்நேஹபாசம் மே- இந்த என் பந்த பாசத்தை
ச்சிந்தி-அறுப்பாயாக.
த்வயி தம ’நந்ய விஷயா மதிர் மது4பதத ’ஸக்ருத் |
ேதிம் உத்3வஹதாத்3 அத்3தா3 க3ங்தக3ரவௌக3ம் உத3ந்வதி || 42
த்வயி மே அனன்யவிஷயா மதி: மதுபதே அஸக்ருத்
ரதிம் உத்வஹதாதத்தா கங்கைவ ஓகம் உதன்வதி
உதன்வதி- கடலை நோக்கி
கங்கா ஓகம் இவ – கங்கையின் பிரவாகம் போல்
மே மதி: – என் புத்தியானது
அனந்யவிஷயா- வேறு எதிலும் நாட்டமில்லாமல்
அஸக்ருத்- – எப்போதும்
ரதிம் – அன்புப்பெருக்கை
த்வயி- உன்னிடத்தில்
உத்வஹதாதத்தா- கொண்டு சேர்க்கட்டும்
ீக்ருஷ்ண க்ருஷ்ண ஸக வ்ருஷ்ண்ய்ருஷபா4வநித்4ருக்3-
ோஜந்ய வம்ஶ த3ஹநாநபவர்க3வீர்ய |
தகா3விந்த3 தகா3த்3விஜ ஸுோர்திஹோவதாே
தயாதக3ஶ்வோகில கு3தோ ப4க3வந் நமஸ் தத || 43
ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ணஸக வ்ருஷ்ணிரிஷப
அவனித்ருக்ராஜன்யவம்ச தஹன அனபவர்க்கவீர்ய
கோவிந்த கோத்விஜசஸுரார்த்திஹராவதார
யோகீஸ்வர அகிலகுரோ பகவன் நமஸ்தே
ஸ்ரீக்ருஷ்ண – ஸ்ரீ கிருஷ்ணா
க்ருஷ்ணஸக- அர்ஜுனனின் நண்பனே
வ்ருஷ்ணிரிஷப –யாதவகுல ஸ்ரேஷ்ட
அவனித்ருக்ராஜன்யவம்சதஹன- உலகை வஞ்சிக்கும் அரசர் கூட்டமாகிய மூங்கில் புதருக்கு காட்டுதீ போன்றவனே
அனபவர்க்கவீர்ய – அளவில்லாத வீர்யம் உடையவனே
கோவிந்த- கோவிந்த
கோத்விஜசஸுரார்த்திஹராவதார – பசுக்கள் அந்தணர்கள் தேவர்கள் இவர்களின் துன்பத்தை துடைக்க அவதாரம் செய்தவனே
யோகீஸ்வர- யோகீச்வரா
அகிலகுரோ – ஜகத்குருவே
பகவன்- பகவானே
நமஸ்தே – உமக்கு நமஸ்காரம்
குந்தி மேலும் கூறலுற்றாள்.
“எப்போதெல்லாம் எங்களுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் நீ வந்து காப்பாற்றுகிறாய்.
உன் தரிசனம் கிடைக்கும் என்றாகள் எங்களுக்கு ஆபத்து வந்து கொண்டே இருக்கட்டும். “
“ நீ உன்னிடம் பக்தியைத் தவிர வேறு ஒன்றும் இல்லாதவர்க்கு நீ எளியன். செல்வம் , பதவி, பிறவி, கல்வி
இவைகளால் பெருமிதம் கொண்டவர்க்கு நீ அரியன். “
குந்தி பிறகு கிருஷ்ணனுடைய பால லீலைகளை நினைத்து ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.
“நீ பிறப்பற்றவன் செயலற்றவன். அப்படி இருக்கையில் உரலில் கட்டுவதற்கு யசோதை கயிற்றைக் கையில் எடுத்த போது
பயத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் நின்றாயே ! உனக்கேது பயம்? பயம் அல்லவா உன்னைக் கண்டு பயப்படும்? “
“ நீர்ப்பெருக்கை கடலில் சேர்க்கும் கங்கை போல் எனது புத்தியானது வேறு விஷயத்தில் நாட்டம் இல்லாமல்
இடையறாத அன்புப் பெருக்கை உன்னிடம் கொண்டு சேர்க்கட்டும். என் பந்த பாசத்தை அறுத்து விடுவாயாக.”
——————
ஸூத உவாச
ப்ருததயத்தம் கல பவத3 : பரிணூதாகிதலாத3ய: |
மந்த3ம் ஜஹாஸ வவகுண்தடா தமாஹயந்ந் இவ மாயயா || 44
தாம் பா3ட3ம் இத்ய் உபாமந்த்ர்ய ப்ேவிஶ்ய க3ஜஸாஹ்வயம் |
ஸ்த்ரியஶ் ச ஸ்வ புேம் யாஸ்யந் ப்தேம்ணா ோ்ஞா நிவாரித: || 45
வ்யாஸாத்3வயர் ஈஶ்வதேஹா்வஞ: க்ருஷ்தணநாத்4புத கர்மணா |
ப்ேதபா3தி4ததா ’பீதிஹாவஸர் நாபுத்4யத ஶுசார்பித: || 46
ஆஹ ோஜா த4ர்ம ஸுதஶ் சிந்தயந் ஸுஹ்ருதா3ம் வத4ம் |
ப்ோக்ருததநாத்மநா விப்ோ: ஸ்தநதஹ மாஹ வஶம் க3த: || 47
அதஹா தம பஶ்யதா்ஞாநம் ஹ்ருதி3 ூட4ம் து3ோத்மந: |
பாேக்யஸ்வயவ தத3ஹஸ்ய ப3ஹ்வ்தயா தம ’ரஷௌஹிணீர் ஹதா: || 48
பா3ல த்3விஜ ஸுஹ்ருந்மித்ே பித்ருப்4ோத்ருகு3ருத்3ருஹ: |
ந தம ஸ்யாந் நிேயாந் தமாதஷா ஹ்ய் அபி வர்ஷாயுதாயுவத: || 49
வநதநா ோ்ஞ: ப்ேஜாப4ர்துர் த4ர்ம யுத்3தத வததா4 த்3விஷாம் |
இதி தம ந து தபா3தா4ய கல்பபதத ஶாஸநம் வச: || 50
ஸ்த்ரீணாம் மத்3த3த ப3ந்தூ4நாம் த்3தோதஹா தயா ’ஸாவ் இதஹாத்தி2த: |
கர்மபி4ர் க்3ருஹதமதீ4வயர் நாஹம் கல்பதபா வ்யதபாஹிதும் || 51
யதா2 பங்தகந பங்காம்ப4 : ஸுேயா வா ஸுோக்ருதம் |
பூ4த ஹத்யாம் தவத2வவகாம் ந ய்வஞர் மார்ஷ்டும் அர்ஹதி || 52
சூதர் கூறினார், மந்தம் ஜஹாஸ வைகுண்ட: மோஹயன் இவ மாயயா.
இதைக்கேட்டு கிருஷ்ணர் எல்லோரயும் மயக்குபவர் போல மாயப்புன்னகை புரிந்தார்.
பிறகு த்வாரகை செல்ல சித்தமானார். அப்போது யுதிஷ்டிரர் அங்கு வந்து உயிர்வதைக்குக் காரணமாய் இருந்த
பாவத்தை எண்ணி வருந்த கிருஷ்ணர் அவரை பீஷ்மரிடம் போகும்படிக் கூறினார்.
இதுவும் பீஷ்மரின் கடைசி காலத்தில் அவரை உய்விக்கவும் தர்ம உபதேசத்தையும் விஷ்ணுஸஹஸ்ர நாமத்தையும்
அவர் வாயிலாக வரவழைப்பதற்காக கிருஷ்ணன் நடத்திய நாடகம்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply