ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–20- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-
என்னுடைய பாப பலத்தால் -(ஸாபலத்தால்-)அடைவு கெட விண்ணப்பம் செய்த இந்த ஸ்தோத்ரத்தை அடியேனுடைய தோஷங்களைப் பார்த்து
உபேஷியாமல் அங்கீ கரித்து அருள வேணும் என்று ஸ்தோத்ரத்தை நிகமித்து அருளுகிறார்-

(பித்தர் பத்தர் பேசினது போல் -கடல்வண்ணா கதறுகின்றேன் போல்)

நிகமத்தில்
தாம் அன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்த்ய த்வம் -என்ற இவர்
தம்முடைய உபய வித அபேஷிதத்தை விண்ணப்பம் செய்தவாறே
இவர் அபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படியான கிருபை கரை புரண்டு இருக்கும் இருப்பைக் (சிக்கென செங்கண்மால் -தொண்டரடிப்பொடி ஆழ்வார் விண்ணப்பம் கேட்டு மலர்ந்த திருக்கண்கள் போல் )கண்டு
இப் பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை தேவரீர் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று விண்ணப்பித்தவாறே
இப் பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்–இத்யாதியாலே –

விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீநம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-

கருணை கடலான யதி ராஜரே! இன்று அடியேனுடைய இந்த உம் திருவடி தாமரையின் நித்ய சேவையான பிரார்த்தனை
யாது ஓன்று உண்டு–இவன் அறியாதவன் — ஆத்மா குண லேசமும் அடியோடு இல்லாதவன் —
ஆகையால் வேறு கதி இல்லாதவன் என்று எண்ணி திரு உள்ளம் பற்ற வேண்டும்..

பதவுரை:-

தயா அம்புராஸே – பிறர் துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல் போன்ற,

யதிராஜ – யதிராஜரே,

அத்ய – இப்போது,

மாம கீநம் – அடியேனுடையதான,

யத் விஜ்ஞாபநம் – ‘வாசா யதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ,

இதம் – இந்த விண்ணப்பத்தை,

அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன்,(அஹம் -பவாமி -அடியேன் அஞ்ஞானி என்று நினைத்து -இவன் அஞ்ஞான் -என்று அவர் நினைவாலேயே அருளிச் செய்கிறார் )(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாதவன் என்றும் தேவரீர் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவன் என்று அநந்ய கதித்வம் என்றுமாம் )

ஆத்ம குண லேஸ விவர்ஜிதஸ்  – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன்,(ஆத்ம குணம் கை புகுந்தால் -ஆச்சார்யர் -மந்த்ரம் -மந்த்ரத்தால் உள்ளிட்ட அவனும் வைகுந்தமும் கை புகும் )

தஸ்மாத் – ஆகையால்,

அநந்ய ஸரணபவதி – நம்மைத் தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான்,

இதி மத்வா – என்று நினைத்தருளி,

அங்கீ குருஷ்வ – ஏற்றுக் கொண்டருள வேணும்.(தத் -அத்தை -தருவித்துக் கொள்ள வேண்டும்-ஆத்மநி பிரயோகம் -உமது பேறாக என்றபடி )

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தை யேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

———-

விஜ்ஞாபனம்
தம்முடைய அபேக்ஷித்ங்களைத் திருவடிகளில் விண்ணப்பம் செய்ய அது ப்ரபந்தமாய்த் தலைக் கட்டிற்று-
யதிதமத் யது மாம கீ நம்
யாருக்கும் சாதரமாய் இருக்கிற படி –செவிக்கு இனிய செஞ்சொல் -என்கிறபடி
ஒன்றை நினைத்து ஒன்றைச் சொன்னது இன்றிக்கே
நினைவும் (சொலவும்) சொல்லும் சேர்ந்து இருக்கும்படியை சொன்னதாய் இருக்கை(சொல்லும் பொருளும் இசையத் தொடுத்து )

அத்யது -பூ அலரும் போது போலே பேசுகிற தசையில் பேசுகிற தசையில் செவ்வியைச் சொன்ன படி(விரிஞ்சனோ விடவனோ –சொல்லின் செல்வன் என்றால் போல் )
இச் சுவடு போவதற்கு முன்னே திருச் செவி சாற்றி –இளைய புன் கவிதை -என்கிறபடியே
ஸப்தார்த்த விஷய வைபவத்தை உள்ளபடி அறிந்து பேசுகைக்குத் தக்க ஞான சக்திகள் இன்றிக்கே இருக்க செய்தேயும் –
தன் உகப்பாகப் பண்ணும் வை லக்ஷண்யம் அற்று இருந்தாலும் நம் அடியார் சொன்னது அன்றோ என்று
திரு உள்ளம் உகந்து கேட்டு அருளத் தக்கது என்கை –

அங்கீ குருஷ்வ
யாருடைய ப்ரயோஜனத்துக்காக யார் பிரார்த்திக்கிறார் இவன் வாக்கில் இப்படி -இதுக்கு கிருஷி பண்ணிப் போந்த
நம்மதன்றோ பிரயோஜனம் என்று அங்கீ கரித்து அருள வேணும் என்கிறார் –

யதி ராஜ
இத் தலையில் தோஷத்தைப் போக்க வல்ல உடையவர் அன்றோ தேவரீர்(ப்ரயத்னம் செய்பவர்களில் தலைவர் அரசர் )

தயாம்பு ராஸே
சீறி எடுத்து எறியும் படியான தோஷம் இத் தலையிலே உண்டானாலும் திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி
இருக்கிற அருள் கடல் அன்றோ தேவரீர்

அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
1-இவன் தான் ஸ்வ ரக்ஷணத்துக்கு நம்மை ஒழிய வேறே கைம் முதல் உண்டு என்று இருக்குமவனோ
2-நம்மை ஒழிய மற்று ஒன்றை அறியுமோ –
3-ஆத்ம குணம் உண்டாக நினைத்து பேற்றுக்கு உடல் என்று இருக்குமவனோ –
4-நம் கிருபைக்குத் தண்ணீர் துரும்பாகச் சொல்லத் தக்கதொரு சத் குண லேசம் உண்டோ

தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –
ஆகையால் இவனுக்கு நம்மை ஒழிய வேறே புகல் உண்டோ
ஸ்வ ரக்ஷணத்துக்கு ஒரு உபாயாந்தரம் அறிந்து இருத்தல் செய்யத் தக்க ஞானம் இல்லாதவனுமாய்
சத்துக்கள் அங்கீ கரிக்கைக்கு உறுப்பான ஆத்ம குண சம்பத் ரஹிதனுமாய் இருக்கையாலே வேறு ஒரு புகல் இல்லாதவன் –

இதி மத்வா –
இப்படி பகவத் அனுபவாதிகளிலே அந்ய பரதையைத் தவிர்த்துத் திரு உள்ளம் பற்றி அருளி
இத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று

என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்

தாத்பர்யம்
பரம தயாநிதியான ஸ்வாமி
ஸ ஹ்ருதயமாக விண்ணப்பம் செய்த இந்த பிரபந்தத்தை
உபாயான்தர ஞானம் இல்லாவன்
சத்துக்கள் அங்கீ கரிக்க உறுப்பான ஆத்மகுண லேசமும் இல்லாமல்
ஆஸ்ரித வார்த்தை என்று
ராமானுஜரை வணங்குவோம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்சனம் நிலை நாட்டிய
சேஷ பூதர்
பிங்கள நாம ஸம்வத்சரம் சித்ர மாஸே -நிகமாந்தம் ஸம் ரக்ஷணர்த்தமாக
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
யோ நித்ய –ராமாநுஜஸ்ய சரணம்

——-

விஜ்ஞாபனம் யதிதம்
அநாதி காலமே பிடித்து விஷய சபலராய்ப் போந்த தம்மையும் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானிகள்
தங்களுக்கு வகுத்த விஷயத்தில் செய்யக் கடவதான இவ் விஜ்ஞாபநத்தையும் பார்த்து
தமக்குக் கிடையாதது கிடைத்தது என்று –யதிதம் விஜ்ஞாபனம்-என்கிறார்

அன்றிக்கே –
யச் சப்தம் பிரசித்த பராமர்சி யாகையாலே -கிரந்த ரூபேண பிரசித்தமான இவ் விஜ்ஞாபநத்தை -என்கிறார் –

இதம் விஜ்ஞாபனம்
இப் பிரபந்த ரூபமான விஜ்ஞாபநத்தை —
மற்று ஒரு விஜ்ஞாபனம் உண்டாகிலும் -அதுக்கு மேல் எழுத்து இல்லை இறே
கையோலை செய்து கொடுத்தது இவ் விஜ்ஞாபநத்தை இறே

இதம்
பாட்யே கேயே ச மதுரம் ப்ரமாணைஸ் த்ரிபிர் அந்விதம்-பால -4-8- என்று ஸ்வ கர்த்ருகமான ஸ்ரீ ராமாயணத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் கொண்டாடினால் போலே
இவரும் இப் பிரபந்தம் தமக்கு போக்யமாய் இருக்கையாலே –இதம் -என்று கொண்டாடுகிறார்
இது தான் எப்போது உண்டாய்த்து என்னில்

அத் யது-
கீழ் கழிந்த காலம் போலே விஷய (விஷயாந்தர )அனுபவத்துக்கும்
தத் அலாபத்தால் உண்டான துக்க அனுபவத்துக்கும் போந்திருக்கை யன்றிக்கே
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்தினுடைய லாப அலாபங்களிலே
மோத -கேதங்கள் உண்டாம் படியான இக் காலத்திலே என்கிறார்(பரபக்தி தசையில் சம்ஸ்லேஷ தசையில் -மோத-இன்பமும் விஸ்லேஷ தசையில் கேதங்கள்-துக்கமும் உண்டே- நிரஸ்த ஸூக அநுபவம் நித்ய விபூதியில் மட்டும் தானே )

அத் யது-
தம்மையும் பார்த்து காலத்தையும் பார்த்தவாறே -இதுவும் தமக்கு அலாப்ய லாபம் என்று தோற்றி -அத்யது -என்கிறார் –(நன்னாளால் -அத்யமே சபலம் ஜென்ம )

அன்றிக்கே –
கீழ் கழிந்த காலம் போலே பழுதே பல பகலும் போயின -முதல் திரு -16–என்று நிந்தா விஷயமாக வன்றிக்கே-
அத்யமே சபலம் ஜன்ம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3- என்று ஸ்லாக நீயமான இக் காலத்திலே என்னுமாம் –

விஜ்ஞாபனம் தான் யார் செய்கிறது என்னில்

மாம கீநம்
அநாதி காலமே பிடித்து விஷய சபலனாய்ப் போந்த அடியேன் -அதில் சாபலம் அற்று
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்திலே ப்ரேமம் தலை எடுத்துப் பண்ணுகிறது

மாம கீநம்
தாம் முன்னிருந்த இருப்பையும் இப்போது இருக்கும் இருப்பையும் பார்த்து -நாம் இப்படி யானோமே யாகாதே -என்று
தந் யோஹம் -என்னுமா போலே தம்மைத் தாமே கொண்டாடுகிறார்(மாலாகாரர் தன்னைக் கொண்டாடிக் கொண்டது போல் -மதி நிறைந்த நன்னாளால் –செல்வச் சிறுமீர்காள் )

அன்றிக்கே –து -சப்தம் ஏவ காரார்த்தமாய் –அத்யைவ -என்கிறார் ஆகவுமாம் (இன்றே என்றபடி -நிவேத்திய மாம் சிப்ரம் போல் )–
உத்தர ஷணத்திலே நிலையாய் இருக்குமோ இராதோ என்று கருத்து
இதுக்கு அடி என் என்னில்

மாம கீநம் –
அடியேன் சம்பந்தி யாகையாலே என்கிறார் -சப்தாதி போக நிரதர் இறே தாம் –

ஆகில் செய்ய வேண்டியது என் என்ன

அங்கீ குருஷ்வ –
இத்தை ஓர் அவயவி யாக்கித் தர வேணும் என்கிறார் –
அவயவி யாக்குகை யாவது சபலமாக்குகை -அதாவது அப்படி செய்கிறோம் என்று திரு உள்ளம் பற்றுகை

குருஷ்வ என்கையாலே
அங்கீ காரத்தால் வரும் பலமும் அத் தலைக்கே-என்கிறார் –
அத் தலைக்கு உகப்பாக இறே கைங்கர்யம் செய்வது

மாமகீநம் அங்கீ குருஷ்வ
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாசனான அடியேன் செய்கிற விண்ணப்பம் ஆகையாலே தேவரீரால் தவிரப் போகாது என்கிறார் –
இவர் இப்படி விண்ணப்பம் செய்த வாறே அப்படியே செய்து அருளுவதாகத் திரு உள்ளம் பற்றி

யதிராஜ –
என்று சம்போதிக்கிறார்-ஆஸ்ரித கார்யம் செய்கையில் சங்கல்பம் தேவரீருக்கு புகர் என்கிறார் ‘

அன்றிக்கே –
தாம் இப்படி விண்ணப்பம் செய்த வாறே திரு உள்ளத்தை தம்மிடத்தில் நின்றும் சலிக்க ஒண்ணாத படி பண்ணி
தமக்கு ரஜ்ஞகராய் இருக்கையாலே யதிராஜ -என்று சம்போதிக்கிறார் ஆகவுமாம்(ரஞ்ஜனாய் -ஆனந்திக்கும் ராஜா )
நீர் சொன்ன படியே செய்கிறோம் உம்மிடத்தில் குணம் ஏது என்ன

தயாம்பு ராஸே
தேவரீர் தயா சமுத்ரம் யன்றோ -அடியேன் இடத்தில் குணம் ஒன்றும் இல்லை –
கேவலம் தேவரீர் கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –
ஆகில் நீர் தய நீயரோ என்ன ஆம் என்கிறார் மேல்

அஜ்ஞோ அயம் –
அஜ்ஞ்ஞானமே நிரூபகமாய் இருப்பான் ஒருவன் இவன் -அயோக்யனாய் இருந்து வைத்து யோக்யர் பிரார்த்திக்கும்
புருஷார்த்தத்தை ப்ரார்த்திக்கை அஜ்ஞ்ஞதை இறே -என்கிறார்

அஜ்ஞ-
சாஸ்திர ஜன்ய ஞானம் இல்லாதவன் என்னுதல் –
நம்மை ஒழிய புறம்பே ஒரு விஷயம் அறியாதவன் என்னுதல்

ஆத்ம குண லேச விவர்ஜிதஸ் ச –
அறிவு இல்லா விடிலும் ஆத்ம குணங்களான சமதாதிகளில் ஏதேனும் ஓன்று உண்டாகலாமே –
அதுவும் இல்லாதவன் ஒருவன் இவன் என்கிறார் –
ச காரத்தாலே
அநாத்ம குண பரி பூரணன் -என்கிறார் –

தஸ்மாத்
ஜ்ஞானமும் -தந் மூலமான ஆத்ம குணங்களும் இல்லாதான் ஒருவன் ஆகையாலே

அநந்ய சரணோ பவதீதி –
பரம தயாளுவான தேவரீரை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லாதவன் என்று

மத்வா —
திரு உள்ளம் பற்றி –மாம கீநம் விஜ்ஞ்ஞாபனம் அங்கீ குருஷ்வ -என்று
மனனமும் அங்கீ காரமும் ஏக கர்த்ருகமாகத் தோற்றுகையாலே
இத் தலையிலே ஸ்வ அயோக்ய அனுசந்தானமும் இல்லை -என்கிறது

அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -என்கையாலே தய நீயதை சொல்லப் பட்டது –
தய நீயர் ஆகிறார் துக்கிகள் இறே –
அஜ்ஞ்ஞானத்துக்கு மேற்பட துக்கம் இல்லை

அன்றிக்கே –
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -இவர் தயாம்பு ராஸே -என்றவாறே —
ஆகில் தயை உண்டாகும் போது செய்கிறோம் என்ன-
தேவரீர் தயை பண்ணுகைக்கு இங்கு ஏதேனும் பிரதி பந்தகம் உண்டோ என்கிறார் அஜ்ஞோ இத்யாதியாலே –

அஜ்ஞ– என்கையாலே
ஜ்ஞான யோகமும் தத் விசேஷமான பக்தி யோகமும் இல்லை என்கிறார் –
ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச –
என்கையாலே கர்ம யோகமும் இல்லை என்கிறார்
அது எங்கனே என்னில்
சமதமாதிகள் இந்த்ரியங்களுடைய விஷய உபரதி ரூபங்கள் ஆகையாலே
அவ் வுபரதி ரஜஸ் தமோ நிவ்ருத்தியால் அல்லது கூடாமையாலே-

ரஜஸ் தமோ நிவர்த்தகம்
தர்மேண பாபமவ நுததி -என்றும்
கஷாய கர்மபி பக்வே ததோ ஞானம் ப்ரவர்த்ததே  -என்றும் சொல்லுகிறபடியே பாப நிவ்ருத்தி த்வாரா தர்ம விசேஷமான கர்ம யோகம் ஆகையாலே
ஆத்ம குண ஹானி கர்ம யோக அபாவத்தைக் காட்டுகிறது(பாபங்களைத் தொலைக்க விருப்பம் கொண்டு பல த்யாகத்துடன் நல்ல தர்ம கார்யங்கள் செய்வதே கர்ம யோகம் )
காரத்தாலே
பிரபத்தியும் இல்லை என்கிறது –
அகிஞ்சனனுக்கு புகலிடம் பிரபத்தி இறே –

ஆக சர்வ உபாய ஸூந்யன் என்றபடி –
இவற்றிலே ஏதேனும் உண்டாகில் இறே தேவரீர் தயை பண்ணாது இருக்கலாவது

தஸ்மாத்
தேவரீர் தயை பண்ணுகைக்கு பிரதிபந்தகங்களாய் இருப்பதின் கந்தம் இல்லாதவன் ஒருவன் ஆகையாலே தேவரீர் தயை ஒழிய
ஸ்வ யத்னமாதல் -பகவத் யத்னமாதல் -மற்றொரு புகலிடம் இல்லாதான் ஒருவன் என்று திரு உள்ளம் பற்றி
இப் பிரபந்த ரூபமான விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் -என்கிறார் –

பகவத் யத்னம் சர்வாதிகாரம் யன்றோ -அத்தையும் கழிக்கலாமோ என்னில் –
அது விஸ்ரம்ப-பாஹூள்ய-சாபேஷம் ஆகையாலே(மஹா விஸ்வாஸம் எதிர்பார்த்து இருக்கும் )-அது இல்லாதவனுக்கு அது தன்னடையே நழுவும் இறே
இதுவும் இன்றிக்கே
பகவத் யத்னம் ஸ்வா தந்த்ர்ய அனுகூலமாய் -நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கு பொதுவாய் இருக்கும்
ஆசார்ய அபிமானம் இவ் விரண்டு தோஷமும் இன்றிக்கே இருக்கும் -ஆகையால் இறே
ஸ்வ தந்த்ரனை தான் உபாயமாகப் பற்றும் போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -ஸ்ரீ வசன பூஷணம் -410- என்று
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தது

ஆக
இப் பிரபந்தத்தாலே சர்வ உபாய ஸூந்யராய்-ஸ்ரீ பகவத் விஷயத்துக்கும் அநாதிகாரிகளான சேதனர்க்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றதாய்த்து

இந்தப் பிரபந்த ரூபமான விஜ்ஞ்ஞாநபத்தை திரு உள்ளம் பற்ற வேணும் என்கையாலே
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பிரசாத ஜனகமும் இப் பிரபந்தம் என்றதாயிற்று

———————

க்ருபயா யதி ராஜஸ்ய முநேர் வர வரஸ்ய ச
பிரவ்ருத்தேயம் க்ருதிஸ் ஸத்பிஸ் சாதரம் சமுதீஷ்ய தாம்
ஸூத்த சத்த்வ மஹாசார்ய க்ருதிநா குண பூதிநா
யதீஸ விம்சதி வியாக்யா லலிதா கலிதா பலௌ

————————————-

இது வரையில் தாம் செய்த விண்ணப்பத்தை யேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது. ‘

தயைக ஸிந்தோ’ (6), ‘ராமாநுஜார்ய கருணைவ து’ (14), ‘யதீந்த்ர கருணைவ து’ (15), ‘பவத்தயயா’ (16), ‘கருணா பரிணாம’ (19), ‘தயாம்புராஸே’ (20) என்று தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால், ராமாநுஜர் ‘க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.(தயை -ஸ்வார்த்தம் இல்லாமல் பர துக்க அஸஹிஷ்ணுத்வம் )

இங்கு விண்ணப்பம் -வர்த்தமான ஸாமீப்யம் -முதல் ஸ்லோகத்தில் இருந்து விண்ணப்பம்
யத் இதம் -மாம கீநம் -தத் சொல்ல வேண்டிய இடத்தில் இதம் -ஏற்றுக் கொள்ள வேண்டும் =யத் பிரதி நிர்தேசம்
விஞ்ஞாபனம் -விஞ்ஞாபனத்தை -இதம் இரண்டாம் வேற்றுமை உருபு –
அன்றிக்கே
யாதொரு இந்த விஞ்ஞானமோ அத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் -தத் -அத்யாஹாரம் கொள்ள வேண்டும்

வரவர முனி அருளிச் செய்த என்று இல்லாமல் – -அயம் -விசேஷ நிர்தேசம் அநர்ஹம – -இல்லாமல் -விண்ணப்பத்துடன் அருளிச் செய்தார் என்றே நிர்தேசம்-அஞ்ஞன் ஆத்ம குண லேசன் என்பதையே புத்தியில் கொள்ளும் படி -நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கைவிட்டதே ஹேதுவாகக் கொண்டு நம்மாழ்வார் கைக்கொண்டால் போல் -ஸ்ரவணம் -மனனம் -சிந்தித்து உறுதி கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் –அங்கீ கார பலமும் ஸ்வாமிக்கே -பரார்த்தமாகவே -ஸ்வாமி யுடைய செயல்
அஞ்ஞன் இவன் -இவனே அஞ்ஞன் -அதிகார பூர்த்தி லப்த –
அயம் பவதி -ஸ்வாமி திரு உள்ளம் பற்றியே பத பிரயோகங்கள்

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள ‘ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜ த்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய பராங்குஸ பாத பக்தம்’ என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள ‘பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற பகுதி நினைவு படுத்தப் பெற்றதும்,

இங்கு இக் கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள ‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜ முனிவரே! தேவரீர் திருவடித் தாமரைகளில் அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருள வேணும்) என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள ‘இராமாநுச! உன் தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்து’ என்ற பகுதி நினைவு படுத்தப்பட்டதும் கவனிக்கத் தக்கது.

ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப் போலே இந்த யதிராஜ விம்ஸதியையும் நாம் சொல்லக் கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

பூர்வ தினசர்யா -இடையில் யதிராஜ விம்சதி -பின்பு உத்தர தினசர்யா -முன்பே பார்த்தோம்

——————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading