ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுகிறார்-
ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான பூர்த்தியையும் –
அதினுடைய சம்ப்ரதாய ப்ராப்தியையும் –
அத்தால் இவர் பெற்ற நன்மையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு –
ப்ராரீப்சிதக்ரத்ன பரிசமாப்த்யர்த்தம் ஸ்ரீ ஆசார்ய அபிவாத ரூப மங்களத்தை செய்து அருளுகிறார் –
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாதபக்தம்
காமாதி தோஷ ஹர ஆத்மபத ஆஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-
மிதுனத்தில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை ரசத்தில் மையல் ஏறிய
ஹ்ருதய கமலத்தை உடைய ஸ்ரீ பராங்குசன் திரு அடிகளை நிரந்தரம் பிரீதி சேவை செய்பவரும்
தம்முடைய திரு அடிகளை அடைந்தவரின் காமம் போன்ற தோஷங்களை நீக்குபவருமான
யதிகட்க்கு இறைவன் ஸ்ரீ ராமானுசனை தலையால் வணங்குகிறேன்
————
இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர் விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு ஸ்ரீ எம்பெருமானாருடைய ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதிர்
ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தமம் -என்கிறபடியே
ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் ஸ்ரீ பகவத் பிராப்தி சாதனமாக சாஸ்திர விஹிதம் ஆகையாலே
கீழ் ஸ்லோஹத்திலே இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச் சொல்லி
இஸ் ஸ்லோகத்திலே தத் அனுகுணமான
அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ரங்கேத்யாதியாலே
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-
ஸ்ரீ ரெங்கராஜனின் திருவடி தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சமும்
ஸ்ரீ பராங்குசர் திருவடி தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் வட்டம் இடும் வண்டை ஒத்தவரும்
ஸ்ரீ பட்டார் பிரான் பர காலர் இவர்களின் திருமுகங்களுக்கு மலர்ச்சி தரும் சூரியனாகவும் மித்ரராயும்
ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு அடைக்கலமாகவும் உள்ள ஸ்ரீ யதி ராஜரை துதிக்கிறேன் —
—————–
நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –
கீழ் இரண்டு ஸ்லோஹத்தாலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து –
மேல் மூன்று ஸ்லோஹத்தாலே
ப்ராப்ய பிரார்த்தனை செய்து அருளுகிறார் -உபாய வரணம் ப்ராப்ய சேஷம் இறே –
அதில் முதல் ஸ்லோஹத்திலே
கரண த்ரயத்தாலும் ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே உபாய உபேயங்களாக அத்யவசித்து இருக்கும்
ஸ்ரீ பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்க கடவேனாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று பிரஸ்துதமான உபாய க்ருத்தியம் இஷ்ட பிராப்தியும் அநிஷ்ட நிவாரணமும் ஆகையாலே
அதில் இஷ்டத்தை மூன்று ஸ்லோஹத்தால் அருளிச் செய்கிறார்
அதில் பிரதமத்தில்
ஆசார்ய அன்வயத்துக்கு அவஸ்ய அபேஷிதராய் கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வ அனுஷ்டான உபதேசங்களாலே
தத் விஷய ப்ரீதி வர்த்தகரான உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்மபாவியாக வேணும் என்கிறார் –
வாசா -இத்யாதியால் –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –3-
ஸ்ரீ யதீந்த்ர தலைவனே வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் உம் திருவடி தாமரைகளை இடைவிடாமல் உபாசிக்கும்
ஆச்சர்யர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருக் குருகை பிரான் பிள்ளான் முதலிய புருஷர்களின் திருவடிகளை
ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு சர்வ காலமும் இருப்பேனாக
—————–
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-
அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி –
அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார் –
உபகார விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்று பிரார்த்தித்து
ததுபக்ருதமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே கைங்கர்யம் தம்முடைய கரண த்ரயத்துக்கும்
அநவரத அந்வயம் உண்டாக வேணும் என்று அவர் தம்மையே பிரார்த்திக்கிறார் –
அன்றிக்கே –
பாத அநு சிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்று தாம் பிரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அது தனக்கும் அடியான தத் விஷய ப்ரேமமும் போனதாகக் கொண்டு அது தன்னை பிரார்த்திக்கிறார் ஆகவுமாம் –
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்த நே சௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –4-
ஸ்ரீ யதி தலை நாதனே ஒழிவில் காலம் எல்லாம் உம் திரு மேனியின் நினைவில் என் மனம்
ஆசை கொண்டு இருக்க வேண்டும்
இந்த என் வாக்கு உம் குண கீர்த்தனத்தில் ஆசக்தமாய் இருக்க வேண்டும்
இரு கைகளின் செய்கையும் ஊழியம் செய்வதிலே இன்புற வேண்டும்
முக் கரணங்களும் மற்ற வ்யாபரங்களில் கண் எடுத்து பாராமல் இருக்க வேண்டும்..
———————-
ஸ்ரீ எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான ஸ்ரீ திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான ஸ்ரீ தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –
கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்களுக்கு பிரமாணமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை ப்ரசக்தி பண்ணி-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்கள் ஸ்ரீ திரு அஷ்டாஷரத்தின் பத த்ரயார்த்தங்கள் யாகையாலே –
தந் நிஷ்டையை அடியேனுக்கு பிரசாதித்து அருளி
அடியேன் புத்தியானது ஸ்ரீ தேவரீர் திருவடிகளை அனுபவித்து ஹ்ருஷ்டமாம் படி செய்து அருள வேணும் என்கிறார் –
கீழ் ஸ்லோகத்தாலே
பிரதம பாதத்தாலே -ப்ரணவார்த்தமும் –
வாக் குண கீரத்தநே அசௌ -என்றத்தாலே வாத்சல்யாதி குண கீர்த்தனத்திலே என்ற போதே –
அக் குணங்கள் உபாய குணங்கள் ஆகையாலே மத்யம பதார்த்தமும்
த்ருதீய பாதத்தாலே -சரம பதார்த்தமும் –
சதுரத்த பாதத்தாலே -பிரதம சரம பத ஸ்தான அந்வித நமஸ் சப்தார்த்தமும் சொல்லப் பட்டது இறே
அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-
ஸ்ரீ யதிகளுக்குள் ஸ்ரேஷ்டரே –ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்கு ஸ்வாமியே
ஸ்ரீ திரு மந்தர பொருள்களில் வழுவாத நிஷ்டையை எனக்கு இப்பொழுதே தானம் செய்ய வேண்டும்
என்னுடைய புத்தி சிஷ்டர்களால் நெருங்கி சேவிக்க தக்க உம்முடைய திருவடி இணையை
எக்காலமும் அனுபவித்து ஓயாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..
————————
ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள போக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்
கீழ் சரணம் என்று பிரஸ்துதமான உபாய க்ருத்யம் இஷ்ட ப்ராபணமும் அநிஷ்ட நிவாரணமும் யாகையாலே
இஷ்டத்தை மூன்று ஸ்லோஹங்களாலே விண்ணப்பம் செய்து-
மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே
நிவர்த்த நீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும்
தோஷ பூயஸ்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார் –
அதில் பிரதமத்தில்
நீர் திரு மந்த்ரத்தினுடைய பத த்ரயார்த்த நிஷ்டையை பிரார்த்தியா நின்றீர் –
உமக்கு இதில் பிரேமமும்-தத் இதரங்களில் அருசியும் உண்டோ என்ன -அடியேனுக்கு இவை இரண்டும் இல்லை
தேவரீரே இவற்றையும் உண்டாக்கித் தர வேணும் என்கிறார்
அன்றிக்கே –
அஷ்டாஷாக்ரய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய -என்றவாறே
உமக்கு இது இல்லையோ என்ன
இல்லை என்கிறார் ஆகவுமாம் –
அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –6-
கருணை ஒன்றே நிரம்பிய சமுத்திரமே–உத்தம ஆச்சர்யரே–ஸ்ரீ யதி தலைநாதனே
எனக்கு தேவருடைய திருவடி தாமரைகளில் பக்தி எனபது கொஞ்சம் கூட இல்லை
புலன் விஷயங்களில் ஆசை தினம் தோறும் வளர்கிறது –என் செய்கேன் பாபியேன்
என் பாபம் தான் மூல காரணம் -மற்று வேறு காரணம் இல்லை ஸ்ரீ தேவரீர் தடுத்து தகைய வேணும்..
——————-
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும்
பத த்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் –
இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் –
இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் ஸ்ரீ தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார்
மேல் நான்கு ஸ்லோகங்களால் –
கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே-நீர் மனுஷ்யர் அல்லீரோ –
ஆஸ்திக்யாதிகளை உண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேன் சரீர மாத்ரத்தாலே மனுஷ்யன் –
வ்ருத்தியாலே பஸூ சஜாதீயனும் பஸூ வ்யாவ்ருத்தனும் -என்கிறார் –
வ்ருத்த்யா பஸூர்-இத்யாதியாலே
வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-
ஸ்ரீ யதிகட்க்கு இறைவரே நான் நடைத்தையால் சீலத்தால் மிருகம் போலும்
சரீரத்தால் மனுஷ்ய ஜந்து போலும் இருந்தும்
என்னை ஆச்ரயித்து பக்தியோடும் அன்போடும் விஸ்தாரமாய் புகழ்ந்து
இந்த பாவன புண்ய ஸ்ரீ அரங்க ஷேத்ரத்தில் உம்முடைய ஆச்சர்ய பீட ஸ்தானத்தில் இப்பொழுதும் நடந்து வருகிறேன்–
ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும்
தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே தடையற நடக்கையாலும்
நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்
————
நீர் சரணாகதர் அன்றோ -உமக்கு ஆநு கூல்யாதிகள் இல்லையோ -அவை ஜ்ஞான கார்யங்கள் அன்றோ என்ன
அவை விபரீதமாய்க் காணும் இருப்பது என்கிறார் -துக்கா வஹோ அஹம்-இத்யாதியால் –
துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணா கதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-
ஸ்ரீ யதி ராஜனே நான் அல்லும் பகலும் துஷ்ட வ்யாபாரங்களை செய்பவன்
உமக்கு துக்கத்தை தருபவன்
சரணாகதன் என்று பெயர் வைத்து கொண்டு விஷயங்களின் போகத்தில் ருசியோடு அனுபவித்துக் கொண்டு
சாதுக்களாய்-பெரியோர்கள் நடுவில் உமது திருவடிகளில் பக்தி உடையவன் போல்
பொய்யாக- வேஷம்- நடிக்கிறேன் பொல்லாதவன் ஆகிறேன்..
——————
கீழும் மேலும் ஸ்வ கதமாக அனுசந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கு எல்லாம் நிதானத்தை விண்ணப்பம் செய்கிறார் –
நித்யம் த்வஹம் இத்யாதியால்
அன்றிக்கே –
இவர் மித்யாசராமி -என்றவாறே -நீர் பிறர் விஸ்வசிக்கும் படி மித்ரா வேஷத்தை தரித்து திரியா நின்றீர் யாகில்
உமக்கு குரு மந்திர தேவதைகளில் விஸ்வாசம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஐயோ அடியேனுக்கு இவ் விஷயங்களில் விஸ்வாசம் இல்லாமை மாத்ரம் அன்றிக்கே
அவ் விஷயங்களை பரிபவியா நின்றேன் -என்கிறார் –
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத்தேவதா ம்பி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –9-
ஸ்ரீ யதி ராஜனே நான் நித்ய காலமும் ஆச்சர்யனையும் மந்தரத்தையும் மந்தர ப்ரதிபாத்யமான தேவைதயும் அவமதிக்கிறேன் .
சிறிதும் அச்சம் படுவது இல்லை..இது என்ன விந்தை –இப்படி ஏமாற்றும் குணம் உடையவன் ஆனாலும் உம் அடியவர் திரளில்
மோசக்காரர் அல்லாதவர் போல சந்தோஷமாக நடிக்கிறேன் –ஆகையால் நான் மூர்க்கன்–
———————
ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத ஸ்ரீ ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
அவ்விஷயங்களை பரிதவித்து -அதில் ஒரு பயமும் இன்றிக்கே விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே
அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாதரம் அன்றிக்கே ஸ்ரீ தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-
ஸ்ரீ யதி ராஜனே… ஆ ஆ ஐயோ ஐயோ.. நான் மனத்தாலும் செய்க்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்தி கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன் .
——————–
இப்படி அக்ருத்ய கரண பகவத் அபராதிகளிலே அந்விதனாய் இருக்கச் செய்தேயும் அவற்றிலே அந்வயிதாவனைப் போலேயும்
வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவரும் இல்லை என்று விஷண்ணரான
இவரைப் பார்த்து ஸ்ரீ எம்பெருமானார்
அனுதாபாதிகள் உண்டாகில் அவை தன்னடையே கழியும் காணும் என்று அருளிச் செய்ய
அனுதாபாதிகளிலே லேசமும் இல்லாமையால் இப்போதும் அக்ருத்ய கரணமே எனக்கு நித்ய அனுஷ்டானமாகச் செல்லா
நின்றது -என்று விண்ணப்பம் செய்கிறார்
சப்தாதி போக ருசி ரன்வஹ மேத தேஹா -எனபது –
அத்யாபி வஞ்சன பர -எனபது –
ததோ அஸ்மி மூர்க்க -எனபது
ஹா ஹந்த -என்பதாகா நின்றீர்
ஆகையால் உமக்கு பய அனுதாபாதிகள் உண்டு போல் தோற்றுகிறது –
இனி உமக்கு பிராயச்சித்தி அதிகாரம் உண்டாயிற்று -இறே–பேற்றுக்கு குறை என் என்ன –
அதுவோ அநுகாரம் இத்தனை போக்கி மெய்யே அடியேனுக்கு அவை இல்லை என்கிறார் –
பாபே க்ருதே -இத்யாதியால் –
பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –11–
ஸ்ரீ யதிராசனே பாபம் செய்த அளவில் என்ன தீங்கு விளையுமோ என்கிற பயம் ,தீமை செய்து விட்டோமோ என்கிற
பச்சாதாபம் ,வெட்கம் ஆகிய இவை இருக்கும் ஆகில் இந்த வித செய்கையை திரும்பவும் செய்வது எப்படி கூடும்..
மோகத்தால், மதி மயக்கத்தால் எனக்கு இப்படி பாபம் செய்வதில் பயம் கொஞ்சம் கூட இல்லை
அதனால் நான் திரும்பவும் திரும்பவும் தீங்கை செய்கிறேன்..
————————
ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்தால் பாப கரணத்துக்கு இடமில்லை காணும் என்ன
அதுவும் அனுசந்திக்கைக்கு யோக்யதை இல்லாதபடி காம பரவச அந்தக்கரணனாய் இருக்கிறேன் என்கிறார்-
புன புனரகம் யதிராஜ குர்வே -என்று விண்ணப்பம் செய்தவாறே
நீர் நம் மேல் பழி ஒதுக்கிறது என் -சர்வ வஸ்துக்களிலும் -அந்தர்யாமியாய்
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு கடவனாய் –
கண்டார் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ அர்ச்சா ரூபேண ஸூலபனாய் -சர்வ நியந்தாவான ஸ்ரீ எம்பெருமானைக் கண்டு
உம்முடைய இந்த்ரிய வஸ்யதையை தவிரும் என்ன
அவன் சர்வ ஸூலபனாய் சர்வ கதனாய் இருந்தானே யாகிலும் -அடியேன் அவனைக் காணாமல் காம பரவசனாகா நின்றேன்
இனி தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார் ––அந்தர்ப்ப ஹிஸ் சகல–இத்யாதியால் –
அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ஹந்த த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–12 —
எல்லா பொருள்களிலும் உள்ளேயும் வெளியிலும் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரனை, குருடன் எதிரே நிற்பவனை பார்க்காதவன் போல ,
நான் பார்க்காமல் எப்பொழுதும் மன்மதனுக்கு வசப்பட்டவன் போல் இருக்கிறேன்..
மனத்தை அடக்கிய யதிகளில் சிறந்தவரே உம் எதிரில் செல்ல யோக்க்யன் அல்லன்-
———————-
இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
இவர் -நார்ஹ -என்றவாறே என் தான் இப்படி கிலேசிப்பது -நீர் சம்சாரத்தில் வர்த்திதிலீரோ —
அதில் தாப த்ரயங்களால் வரும் துக்கங்களைக் கண்டு அருசி பிறவாதோ-
பிறந்தால் அது யோக்யதை யன்றோ என்ன -அடியேனுக்கு இதில் வரும் துக்க அனுபவம் கண்டும் அருசி பிறவாமை மாத்ரம்
இன்றிக்கே மேன்மேலும் ருசி அபிவிருத்தமாகா நின்றது -என்கிறார் –தாபத்ரயீஜநி ததுக்க–இத்யாதியால் –
தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-
ஆத்யாத்மிகம்,ஆதிதைவிகம் ,ஆதி பெளவ்திகம் மூன்றிலும் விழுந்தி வருந்தினாலும் எனக்கு சரீரம் இருப்பதிலே ஆசை
இதற்கு என் பாபமே காரணம் -என் நாதனே ஸ்ரீ யதி ராஜரே அந்த பாபத்தை விரைவில் போக்கி அருள வேணும்..
————————–
இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ –
ஆன பின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –
தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை-என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –
அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்
கீழ் அல்ப அபி என்று தொடங்கி-இவ்வளவும் வர –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -அபராத பூயஸ்தையையும் விண்ணப்பம் செய்து
மேல் இரண்டு ஸ்லோகங்களாலே-
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்கிறார் –
அதில் இஸ் ஸ்லோகத்திலே –
இவர் அல்ப அபி -முதலாக இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தை விண்ணப்பம் செய்தவாறே
நீரும் ஸ்ரீ ஆழ்வான் போல்வாரில் ஒருவர் என்ன
அங்கன் அன்று அடியேன் -மெய்யே நீசன் ஆகையாலே அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய
மற்று ஒரு கதி இல்லை என்கிறார் –வாசா மகோசர மஹா -இத்யாதியாலே
வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –14–
பரிசுத்தமான மனம் உடைய ஸ்ரீ ஆளவந்தார் ,கூரத் ஆழ்வான் , பட்டர் மூவராலும் சொல்ல பட்ட நீச தன்மைகளும்
இப் பூ மண்டலதிலே இன்றே என் இடத்தில் மிக்க விரிவாய் இருக்கிறது –
ஆகையால் யதிகட்க்கு இறைவனே உம் கிருபை தான் எனக்கு கதி.
——————-
இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கனக்க கனக்க ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழுமடை கொள்ளும் என்று இருக்கிறார்-
ஸ்ரீ கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரமே ஷோ அஹமேவ -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இவ்வளவேயோ உமக்கு உள்ள நைச்யம் -மற்றவர்கள் அனுசந்தித்தது உமக்கு இல்லையோ என்ன –
அடியேன் ஸ்ரீ ஆழ்வானை உப லஷணமாகக் கொண்டு விண்ணப்பம் செய்தேன் இத்தனை போக்கி -அவ்வளவிலே பர்யவசிதனன்று –
அனைவரும் ஸ்வ கதமாக அனுசந்தித்த நைச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது
அடியேன் இடத்தில் என்கிறார்-ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத –இத்யாதியாலே —
ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-
—————-
இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் ஸ்ரீ எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும் பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார்
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்-
அடியேனுக்கு ஸ்ரீ தேவரீர் கிருபை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை என்று இவர் தம்முடைய
அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன-
கீழ் வாசோ -இத்யாதியால் நாம் பிரார்த்தித்த ப்ராப்யத்தினுடைய சரமாவதியை
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக செய்து அருள வேணும் என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசிரஸ்–இத்யாதியாலே – –
சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-
விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! ஸ்ரீ தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
ஸ்ரீ தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடை படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு
அடிமை புரிவதில் இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்
——————-
இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாய பூதனான ஈஸ்வரன் கிருத்யம் அன்றோ –
நம்மால் அது செய்து தலைக்கட்டப் போமோ என்ன
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் –விண்ணின் தலை நின்று -மண்ணின் தலத்து உதித்து
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க சாயியாய் இருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ –
ஆகிலும் அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டு அருளினீர் ஆகிலும்
அந்த ஸ்ரீ ஈஸ்வரன் தானும் ஸ்ரீ தேவரீருக்கு வஸ்யன் அன்றோ-
ஆனபின்பு ஆஸ்ரிதர் பாப விமோசனத்தில் சக்தி ஸ்ரீ தேவரீருக்கே உள்ளது என்கிறார் –
நீர் இப்படி நம்மை நிர்பந்திக்கிறது என் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஸ்ரீ ஈஸ்வரன் அன்றோ கடவன் -அது நமக்கு பரமோ என்ன
அவனும் ஸ்ரீ தேவரீருக்கு சொல்லிற்று செய்யும்படி வச்யனாய் யன்றோ இருப்பது –
ஆகையாலே ஸ்ரீ தேவரீரே சக்தர் என்கிறார் —
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப-இத்யாதியாலே
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-
ஸ்ரீ யதிராசனே ச்ருதிகளின் சிரசாக இருக்கும் உபநிஷத்துகளால் அறிய வேண்டிய
தன் ஸ்வாபாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் உடைய கண்களால் காணும்படி அருகே வந்து இருக்கிற
ஸ்ரீ அரங்கத்தம்மான் உமக்கு எப்பொழுதும் வச்யராக இருக்கிறார் .
ஆகையால் உம்மை சேர்ந்த ஜனங்களின் பாபத்தை போக்குவதில் நீர் சக்தி உள்ளவராய் இருக்கிறீர்–
————————
உபாய பூதனான ஈஸ்வரன் நமக்கு பவ்யனாய் இருந்தாலும் அநாதி காலம் தத் ஆஜ்ஞா ரூப ஸாஸ்த்ர மரியாதையை உல்லங்கித்து-
கரண த்ரயத்தாலும் அதி குரூரமான பாபங்களைக் கூடு பூரித்து இப்போதும் அதிலே முதிர நடவா நின்ற அளவிலே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை அவன் தன்னையே இரந்து கால் கட்டி ஆற்றிக் கொள்ள வேண்டி அன்றோ இவனுக்கு இருப்பது-
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப் போலே இதத்தாயான ஸ்ரீ தேவரீரும்
ஆஸ்ரிதரான அடியோங்களுக்காக ஸ்ரீ பிராட்டிக்கு வல்லவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சர்வ அபராதங்களையும்
பொறுத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அருளுகையாலே அடியோங்களுக்கு அந்தக் குறையில்லை என்கிறார் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையாக சாபராத சேதனரக்கு ஸ்ரீ பகவத் ஷமை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை
என்று சொல்லா நிற்க நீர் நம்மை அபராதங்களைப் போக்கி தர வேணும் என்றும்
ஸ்ரீ தேவரீர்க்கு அதில் சக்தி உண்டு என்றும் நிபந்தியா நின்றீர் இது சங்கதமோ என்ன –
அந்த ஷமை தானும் தேவரீருடைய ப்ரார்த்தநா சித்தமாய் ஸ்ரீ தேவரீர் சம்பந்திகளுக்கு ரஷகமாய்
இருக்கையாலே சங்கதம் என்கிறார்–
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி –இத்யாதியாலே
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் –18-
ஸ்ரீ யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது –
அதுவே உம்மை ஆச்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்
———————-
இப்படி ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தை தம்முடைய ப்ரேம அநு குணமாக பேசுகையில் இறங்கின இவர்
முதல் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலும் அவர்களும் உகந்த விஷயமான ஸ்ரீ எம்பெருமான் அளவிலும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டான ப்ராவண்ய அதிசயத்தையும்
ஸ்வ ஆஸ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் இருக்கிற படியையும் பேசி
மேல் மூன்று ஸ்லோகங்களாலே
தமக்கு அபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளில் பிரார்த்தித்து
அநந்தர ஸ்லோகத்தாலே
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கும் அடியான
பாபத்தை போக்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து
மேல் ஆறு ஸ்லோகத்தாலே
பத த்ரய நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும் அபராதிகளையும் பரக்கப் பேசி
மேல் ஒரு ஸ்லோகத்தாலே
அநந்த கிலேச பாஜனமான தேகத்தோடே பொருந்தி இருக்கைக்கு அடியான பாபத்தைப் போக்க வேணும் என்று
அநந்தரம் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ யாமுனாச்சார்ய ப்ரப்ருதிகள் அருளிச் செய்த தோஷ சமூகங்களுக்கு எல்லாம் கொள்கலமான எனக்கு
ஸ்ரீ தேவரீருடைய கிருபை ஒழிய வேறு புகல் இல்லை என்று
மேல் மூன்று ஸ்லோகங்களாலே
அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தை தந்து அருள வேணும் என்றும்
அவர் தம்முடைய கார்யங்களைச் செய்ய சக்தர் என்றும்
அவர் ஸ்ரீ கத்ய த்ரயத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பண்ணின பிரபத்தியே தமக்குப் பேற்றுக்கு
உடல் என்று அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இனி மேல் இரண்டு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேவையாகிற பரம ப்ராப்யம் நித்ய அபி விருத்யமாய்ச் செல்ல வேணும் என்றும் –
அதுக்கு பிரதிபந்தகமான சஷுர் விஷய சங்கம் நசிக்க வேணும் என்றும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் பிரார்த்தித்து
இப்பிரபந்த முகேந அடியேன் விண்ணப்பம் செய்த இத்தை சாதரமாக அங்கீ கரித்து அருள வேணும் என்று
அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்
அதில் முதல் ஸ்லோகத்தாலே
தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற பரம ப்ராப்யமே நமக்கு நித்ய அவிவிருத்தியாம் படியாகவும்
அதுக்கு இடைச் சுவரான இதர விஷய சங்கம் அறும் படியாகவும் தேவரீர் செய்து அருள வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானாரை பிரார்த்தித்து அருளுகிறார் –
கீழ் அல்பாபி தொடங்கி இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தையும்-
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும்
பாப நிவ்ருத்தி பூர்வக பிராப்தி லாபத்தில் அபேஷையையும்-
பாபத்தைப் போக்கி அபேஷிதம் செய்கைக்கு அத்தலையில் சக்தி விசேஷத்தையும்
நிரபேஷ உபகாரகத்வத்தையும் விண்ணப்பம் செய்தவாறே திரு உள்ளம் உகந்து உமக்கு வேண்டுவது என் என்ன
நித்யம் யதீந்திர -என்கிற ஸ்லோஹத்தில் பிரார்த்தித்தபடியே நிரதிசய கைங்கர்யத்தைத் தர வேணும் -என்ன
அது முன்பே ஸ்ரீ திருமலை ஆழ்வார் உமக்கு தந்து அருளினாரே என்ன –
ஆகிலும் அத்தை ஸ்ரீ தேவரீர் அநு தினமும் அபிவிருத்தமாம் படி செய்து அருளி
அதுக்கு விரோதியான யாவத் விஷய ப்ராவண்யமும் போக்கி யருள வேணும் என்கிறார் –
தாஸ்யத்தை அபிவிருத்தம் ஆக்குகையாவது -ததீய பர்யந்தம் ஆக்குகை
இத்தை இறே –
உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே -107-என்று ஸ்ரீ அமுதனார் பிரார்த்தித்தது
ஆகில் -நித்யம் என்கிற ஸ்லோஹம் போம் வழி என் என்னில் –
வாசா -என்கிற ஸ்லோஹத்தில் தாம் பிரார்த்தித்த ததீய சேஷத்வம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அதுக்கு மூலமான தச் சேஷத்வமும் போனதாகக் கொண்டு அத்தை பிரார்த்தித்தார் இத்தனை போக்கி
அதில் பர்யாப்தராய் அன்று –
இப்படிக் கொள்ளாத போது-தத் தாஸ தைக ரசதா அவிரதாம மாஸ்து-என்றதோடு விரோதிக்கும் இறே
ஆனால் இது புநர் உக்தமன்றோ என்னில்
ததீய சேஷத்வம் தச் சேஷத்வ வருத்தி ரூபம் என்கையாலும்
இது தமக்கு கேவலராக பிராப்தம் அன்றிக்கே சம்ப்ரதாய பிராப்தம் என்கையாலும்
புநர் உக்தம் அன்று ப்ராப்யத் வித்வமும் இல்லையாம் –
ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-
ஸ்ரீ பகவத் பக்தி பரீவாஹ கைங்கர்ய ஸ்ரீயை உடைய ஸ்ரீ லக்ஷ்மண யோகியே எம் ஆசார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்ட்டையாக
தந்து அருளிய உம்முடைய திவ்யமான திருவடி தாமரைகளின் சேவையான அந்த அரும் பேற்றை தினம் தோறும் எனக்கு
விசேஷமாக பெருக செய்ய வேண்டும்–
அந்த பேற்றுக்கு இடையூறான எல்லா வற்றையும் அடியோடு தொலைக்க வேண்டும் —
எல்லா காமத்தையும் போக்க வேண்டும்–
————————–
என்னுடைய பாப பலத்தால் அடைவு கெட விண்ணப்பம் செய்த இந்த ஸ்தோத்ரத்தை அடியேனுடைய தோஷங்களைப் பார்த்து
உபேஷியாமல் அங்கீ கரித்து அருள வேணும் என்று ஸ்தோத்ரத்தை நிகமித்து அருளுகிறார்-
நிகமத்தில்
தாம் அன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்த்ய த்வம் -என்ற இவர்
தம்முடைய உபய வித அபேஷிதத்தை விண்ணப்பம் செய்தவாறே
இவர் அபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படியான கிருபை கரை புரண்டு இருக்கும் இருப்பைக் கண்டு
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை தேவரீர் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று விண்ணப்பித்தவாறே
இப்பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்–இத்யாதியாலே –
விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-
கருணை கடலான ஸ்ரீ யதி ராஜரே! இன்று அடியேனுடைய இந்த உம் திருவடி தாமரையின் நித்ய சேவையான பிரார்த்தனை
யாது ஓன்று உண்டு–இவன் அறியாதவன் — ஆத்மா குண லேசமும் அடியோடு இல்லாதவன் —
ஆகையால் வேறு கதி இல்லாதவன் என்று எண்ணி திரு உள்ளம் பற்ற வேண்டும்..
——————————————————————————————————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply