ஸ்ரீ பெரிய ஜீயர்
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே
என்னை சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே உன்னை வணங்கினேன் என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
கீழ்ப்பாட்டில் தம்முடைய நெஞ்சானது எம்பெருமானார் உடைய சீல குணத்தில் ஈடுபட்ட மாத்ரமன்றிக்கே -இப்படி அனுபவிக்க அனுபவிக்க
அபிநிவேசம் கரை புரண்டு –என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய திருவடிக் கீழ் சேர்த்தது –இந்த மகா உபகாரத்துக்கு தக்க
சமர்ப்பணம் தம் பக்கல் ஒன்றும் இல்லை என்று நெஞ்சினாருடைய காலில் விழுகிறார் .
இந்தப் பாட்டில் என் நெஞ்சு எனக்கு உரிய-கருவி இல்லாமல் என்னைத் தனக்கு உரியவனாக -ஆக்கிக் கொண்டு விட்டது –
விடவே என்னிடம் பேர் இயல்வு ஒன்றும் இல்லாமல்–சீல குணத்தில் ஆழ்ந்து –அவன் அடியாரார் அளவும் தான்
ஈடுபட்டதோடு அமையாமல் -தீய பிறப்பாளரோடு எனக்கு உள்ள உறவை அறுத்து –
எம்பெருமானாருக்கு அன்பர்கள் உடைய அடிகளில் என்னை சேர்த்தும் விட்ட உபகாரத்துக்காக –
அந் நெஞ்சினைப் பணிந்தேன் -என்றார்-
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொரு வரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-
பேரியல் நெஞ்சே -பெரிய ஸ்வபாவத்தை உடைய – மனசே –
முதலில் எம்பெருமானார் உடைய சீல-குணத்திலே இழிந்து அதிலே அத்ய அபிநிவிஷ்டமாய்-
உன்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -என்னையும்-ததீய பர்யந்தமாக அத்யவிசிப்பித்த ஸ்வபாவத்தை உடைய -மனசே என்றபடி –
வள்ளலே -என்று வாரி வழங்குவாரை விளிப்பது போலப் -பேரியல் நெஞ்சே -என்று நன்றி அறிவுடன் விளிக்கிறார்
மால் இடம் ஈடுபடுதல் நெஞ்சுக்கு இயல்பு –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -இது இயல்வு -பேர் இயல்வு என்பது
இங்கு திருமாலடியார்கள் இடம் ஈடுபாடு கொண்டமையின் நெஞ்சின் இயல்பு பெரிதாயிற்று –
இனி என் சிற்று இயல்புக்கு எம்பெருமானார் அன்பர்கள் திருவடிக் கீழ் சேர்த்தல் இயையாதாயினும் –
நெஞ்சு தன பெரும் தன்மைக்கு ஏற்ப அந்நிலையை தந்தது -என்னும் கருத்துடன் -பேரியல் நெஞ்சே -என்று -விளித்தார் ஆகவுமாம்–
ஓன்று நீ கை கரவேல் -என்று அன்றோ நாச்சியார் திவ்யாஜ்ஜை பர்ஜன்ய தேவனுக்கு –
இங்கு பெறுபவர் என் பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாம் அறிவார் தம் கொடையின் சீர் -என்னும் -ஔவையார் பாடலை நினைவு கூறுக –
இங்கனம் பெரும் தன்மையினால் வேறுபட்டு வணங்க தக்க முறையில் இருப்பதனால் தனிப்படுத்தி -நெஞ்சே -என்று விளிக்கிறார்
முன் பாசுரத்தில் போல் என் நெஞ்சே என்று விளிக்கிலர்
இங்கு என் நெஞ்சே -சொல்லாமல் -சம்பந்தம் -கீழே சொல்ல வில்லை ஒதுக்கி வைத்து உபதேசம்
இரண்டாவதில் சம்பந்தம் கொண்டாடி –
மூன்றாவதில் அதன் நிலை உத்க்ருஷ்டம் -கண்ணபுரம் தொழும் பிள்ளை அன்றோ –
பிரதம பர்வ நிஷ்ட்டை ஆழ்வார்களுக்கு
இங்கு ராமனுஷ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னை சேர்த்த தற்கே-என்று சரம பர்வ நிஷ்டை
பாகவத சமாசம் அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-என்று விண்ணப்பம் செய்தார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன் .-திரு பாண் ஆழ்வார் முதலிலே க்ருதக்ஜை அருளி –
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே சேர்த்த
உபகாரத்துக்கு நெஞ்சே !உன்னை வணங்கினேன் என்கிறார் .
ஆழ்வான் சம்பந்தம் பெற்ற பேற்றால் அருளுகிறார் .
பேய்ப் பிறவிப் பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி-
ஹேய ஜன்மாக்களாய் அஹங்காராதி தோஷ தூஷிதரானவர்களோடு உண்டான -சம்பத்தை நீக்கி –
அசூர வர்க்கத்திலே ஜனித்து -நிஹீநரான மூடரோடே உண்டான சம்பந்தத்தை சவாசநமாகப் போக்கி –
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -என்னும்படியே பண்ணுவித்து -என்கிறபடி-
வாழ ஆட் பட்டு உள்ளீரேல்- தேட வேண்டுமே-
பேய்ப்பிறவி -தீதான பிறவி –
பூரியர் -பொல்லாதவர்கள் –
புலத்தல் -நீக்குதல் –
பேய்ப் பிறவிப் பூரியர் –
பகவானுக்கு கூட ஆளாகாத பிறவி பேய்ப் பிறவி என்க –
நிலை நின்ற மகத்தான புருஷார்தமாகிய பகவானை விட்டு -நிலை இல்லாததும் அல்பமுமான உலகு -இன்பத்தை
பற்றி நிற்பது பேய்ப் பிறவியின் இலக்கணம் –அப்பிறவியினர் விடத் தக்கவர் ஆவர் –
பூரியர்-
பேய்ப் பிறவி யாரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க –
பூரியர் என்று மேலும் கூறியதற்கு கருத்து என் –என்னில் –
உலகத்தவர் கண்ணால் காணும் இன்பத்தை ஒழிய வேறே ஓன்று உண்டு என்று பகவத் விஷயத்தை பற்றி
விடாப் பிடியாய் -நிற்றலைப் பேய்ப் பிறவி என்பர்-ஞானிகட்கு உலகத்தவர் பேய்ப் பிறவியர் –
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–-பெருமாள் திருமொழி -2-9-
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே -பெருமாள் திருமொழி—3-8-
உலகத்தவர் சொல்லும் பேய்ப் பிறவியை நீக்கல் பொருட்டு மேலும் பூரியர் என்று கூறினார் என்க –
இனி விட்டு ஒழிக்க வேண்டியவரை பற்றிப் பேசுதலானும் ஞானியாகிய அமுதனார் பேச்சாதலானும்-தானே விளங்காதோ -எனின்
அப் பிறப்பின் கண் உள்ள நோவு மிகுதியை நன்கு புலப் படுத்ததற்கு மேலும் பூரியர் என்றார் என்க –
ஊறி -தோஷம் -அதாவது அஹங்காரம் மமகாரம் முதலிய பொல்லாங்கு –
பேய்ப் பிறவிப் பூரியர்-
இனி பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க பேய்ப் பிறவிப் பூரியர் என்று -விசேடித்தது ஏன்-என்னில் –
தோஷம் சேர்க்கையால் வந்த தன்று பிறவிக் குணம் –
உபதேசாதிகளால் நீங்காது என்று தோஷத்தின் கொடுமை காட்டுவதற்காக அங்கன் விசேடித்தார் என்க –
இங்கே -ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹா கிம் கரிஷ்யதி -உயிர் இனங்கள் தம் ஸ்வபாவத்துக்கு ஏற்ப -நடப்பன –
சாஸ்த்ரத்தால் தடுப்பது என்கண் பயன் பெறும் – என்னும் கீதா வசனம் நினைக தகும் –
நல்லார் தொடர்பினும் பொல்லார் தொடர்பு அறுதல் சிறப்பு உறுதலின் அது முன்னர்க் கூறப் பட்டது –
பூரியரை திருத்த ஒண்ணாத நிலையில் அவர்கள் தொடர்பினை நீக்கி விலக்குவதே நல்லது அன்றோ –
நெருப்பு பற்றிய இடத்தில் அவிக்க ஒண்ணாத போது அதனில் அகப்பட்டோரை அதனின் நின்றும் விலக்கித் தப்புவிப்பதன்றோ முதல் கடமை –
அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் .விலக்கியே நல்லத்தில் சேர வேண்டும் –
புலத்தல்-நீக்குதல் புலர்த்தி-என்றும் சொல்வார்..
பொருவரும் சீர் ஆரியன் செம்மை –
உபமான ரஹீதமான குணங்களை உடையராய் –சமாதிகத சமஸ்த சாஸ்த்ரராய்-ஆஸ்ரிதருடைய கௌடில்யம் பார்த்துக் கை விடாதே –
அவர்களுக்கு ஈடாகத் தம்மை யமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான
பொருவரும் சீர் ஆரியன் இராமானுசன் – மூன்று விசேஷணங்கள் –
திருக் கல்யாண குணங்கள் – அனுஷ்டானம் – ஆர்ஜவம் -மூன்றும்-அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்பதே
பொரு வரும் சீர் -ஆரியர் -ஆசார்ய சீலர்
பொருவரும் சீர் -உபமான ரஹிதம் ஆகையாலே -ஏவம் பூதம் -என்று நிரூபித்து சொல்ல அரிதாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையராய் –
ஆரியன் -சகல சாஸ்திர பாரீணராய்-இவ் விபூதியில் இருந்துள்ள சகல சேதனருக்கும்-
திருவேங்கடமுடையானுக்கும் ஆசார்யனாய்
தன்னாரியனுக்கு -என்று ஆரிய பதத்தை -ஆசார்ய பத சமானார்த்தமாக ஜீயர் பிரயோகித்து அருளினார் இறே
செம்மை -தாம் சங்கல்ப்பித்த படியே அனுஷ்டித்தும் -உபதேசித்தும் -இப்படி கரண த்ரய சாரூப்யத்தை உடையரான
ஞானம் அனுஷ்டானம் நன்கு உடைய -ஆசார்ய லஷணம் மிக்கு இருக்கும் படி –
இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே-
எம்பெருமானார் விஷயத்திலே-ப்ரேமத்தை பண்ணுகை யாகிற பரம புருஷார்த்தத்தை உடையவர்களுடைய திருவடிகளின்-கீழே
என்னை சேர்த்த இந்த மகோ உபகாரத்துக்கு உன்னை வணங்கினேன்
இராமானுச முனிக்கு –
தம் அவதார பிரயோஜனத்தில் எப்போதும் மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற-எம்பெருமானார் விஷயத்தில் –
ஆரியன்-சகல சாஸ்த்ர உணர்ந்தவர்..பொரு அரும் சீர் ஆரியன்.
ஜகத்குரு இவர் இடம் தான் இராமனுசன் சப்தம் சேரும்.
பகவான் சப்தம் அவன் இடம் மட்டும் லஷ்மணன் பரதன் சத்ருக்னன்
பெரிய பிராட்டியாரையும் பெரிய பெருமாளையும் விலக்குகிறார்
அவனை போல் ஸ்வா தந்த்ர்யம் இல்லை அவள் அவனை எதிர் பார்க்கணும்..
இவருக்கு இந்த குற்றம் இல்லையே
சகல சேதனருக்கும் ஸ்வாமி இவர் தானே
திரு வேங்கடத்தானுக்கும் -ஜகதாச்சர்யன் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த்தான்
ஆரியன்-ஆசார்யன் ஆரியன்-வித்வான் செம்மை கரண த்ரயம் ஒன்றி-
வேற மருந்து வேண்டாம்- நேர்மை-பொரு அரும் சீர்-தனியாக செம்மை ஆரியன் சொல்ல காரணம் தனி சிறப்பு தோற்ற
சாஸ்த்ர அர்த்தம் தெரிந்தும் ,அனுஷ்டித்தும் உபதேசித்தும் நீர் புரை வண்ணன்
எங்கும் புகும் நீர் போலே -அனைவர் உடன் கூடும் சீலம்.
முனிக்கு- மனனம் பண்ணி கொண்டு இருக்கிறார்
அக்லிஷ்ட ஞான வைக்ராய ராசேயே –
செம்மை ஆர்ஜவம்
ராமாநுஜாய திவ்ய சரிதை ஆச்சார்யார்
புண்யாம்சா போக விகாசாயாம் –சாது பரித்ராணாம் –
பாபத்வந்த ஷயாயச -துஷ்ட
ஸ்ரீ மான் -தர்ம சமஸ்தானம் அர்த்தம் கைங்கர்ய ஸ்ரீ மத்வம்
மனனம் பண்ணும் முனி -பாப கூட்டங்கள் விலக ராமானுஜ திவாகரன்.
அன்பு செய்யும் சீரிய பேறுடையார் –
அத்ய அபிநிவிஷ்ட சித்தராய் – அது தானே விலஷணம் என்று அத்யவசித்து இருக்கும் -ஆழ்வான் முதலிய ததீயர் உடைய-
அடிக் கீழ் –
திருவடிகளின் கீழே
என்னைச் தேர்த்ததற்கே –
என்னுடைய சிரச்சிலே அத் திருவடிகள் பூஷணமாகும் படி –
பூர்வ காலத்தில்-சரம பர்வத்தினுடைய பிரபாவத்தை அறியாதே -இருக்கிற என்னை அமைத்து வைத்தர்க்கே –
தனக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க-தானே எனக்கு புருஷகாரமாய்-
என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய ஸ்ரீ பாதத்திலே சேர்த்ததற்கு –
இந்த மகா உபகாரத்துக்கு நான் எத்தை பிரத்யுபகாரமாக பண்ணுவது என்று ஆராய்ந்து பார்த்தால் –
அவதார பிரயோஜனமே அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர்பதற்கே
சீரிய பேறு உடையார் ராமானுஜர் திருவடி சேர்ந்த சீர்மை.
ஆழ்வான் முதலானவர்கள் அடி கீழ் என்னை சேர்த்தற்கே
மனசுக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க தானே புருஷ காரம் பண்ணி சேர்ததற்கு-எத்தை என்று -தேடி பார்த்தால் -ஒன்றும் இல்லை
கண்டேன் சீதை- என்ற திருவடிக்கு பெருமாள் ஆலிங்கனம் பண்ணி-இரண்டு உயிரை ரஷித்ததர்க்கு ஒரு உயிர் தானே கொடுக்க முடிந்தது
அடி பணிந்தேன் உன்னை தலை அல்லால் கைம்மாறு இல்லை-–வருக என்று மட கிளியை கை கூப்பி போல.–
வாக்கும் மனசும் காயமும் ஓன்று சேர்ந்து ராமானுஜர் அடி கீழ் இருத்தும் நன்றிக்கு வணங்குகிறார்
ஆசார்யன் செய்த நன்றிக்கு பிரத் உபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே —முடியாமல் வணங்குகிறார் இதில்-
அடி பணிந்தேன் உன்னை –
உன்னுடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தேன் –
உனக்கு நமஸ்காரம் பண்ணினேன் -என்றபடி
பெறப் பேறாக-ஜீயர் பிரார்த்தித்து அருளின ததீய ப்ராவண்யத்தைக் காணும் -இவருக்கு
இவருடைய மனச்சு-முதலில் உண்டாக்கிற்று –
அடி பணிந்தேன் உன்னை
தன் நெஞ்சுக்கு உருவம் கொடுத்து அதன் அடிகளில் விழுகிறார் அமுதனார் –
வேறு எவரும் இங்கன் அடி பணிந்ததாக தெரிய வில்லை –
நெஞ்சை பலர் கொண்டாடி உள்ளனர் -அடி பணிந்திலர் –அமுதனார் நெஞ்சு தனிப்பட்டது
ஆழ்வார்களுடைய நெஞ்சிலும் அது தனி சிறப்புற்றது –
ஆழ்வார்களுடைய நெஞ்சு அவர்கள் உடைய உபதேசத்துக்கு செவி தாழ்த்தி –
வைராக்ய காலத்திலும் -சுடர் அடி தொழும் காலத்திலும் -அனுபவ காலத்திலும் –
அன்னாருக்கு பாங்காய் வாய்ந்து உதவும் -இந்நிலையிலே மகிழ்ச்சி கொண்டு –
வாழலாம் மட நெஞ்சமே -என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் நெஞ்சை கொண்டாடுகின்றனர் –
மீமிசை -நெஞ்சகத்துக்கு தூது விட வேண்டிய நிலை –
இனி சில வேளைகளில் அந் நெஞ்சு –
நின்னடையேன் அல்லேன் -என்று நீங்கி
இவர்களை விட்டு தான் மட்டும் எம்பெருமான் நாண் மலர்ப்பாதம் அடைவதும் உண்டு –
அடைந்தது மீளாது -இவர்களையே மறந்து விடுவதும் உண்டு –
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான் -என்னும் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ சூக்தி காண்க
இனி கண்ணனோடு கலந்த நெஞ்சத்துக்கு அன்னம் முதலியவற்றைத் தூது விட வேண்டிய-நிலைமை ஏற்படுவதும் உண்டு –
தம் நெஞ்சோடு தம்மை சேர்பதற்கு வேறு பொருள்கள் தேவைப் படுகின்றன -அவர்கட்கு –
அத்தகைய குறை ஒன்றும் இன்றி எம்பெருமானார் அன்பர் அடிக் கீழ் தாள் சேர்த்ததோடு
அமுதனாரையும் அவ்விடத்திலே சேர்த்து வைக்கிறது நெஞ்சு –
அப் பேருதவிக்காக நெஞ்சின் அடிகளிலே விழுகிறார் அமுதனார்
ஆழ்வார்கள் தம் நெஞ்சை மார்பில் அணைத்து கொண்டாடுகிறார்கள் –
இவர் அடிமைப் பட்டு தலை அல்லால் கைம்மாறு இலேன் -என்று அடி பணிகிறார்
சேர்த்து வைப்பவர் காலிலே விழுவது முறை அன்றோ –
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று சேர்த்து வைக்க புறப்படுவதற்கு முன்பே –
வண்டைத் தொழுதார் -திரு மங்கை ஆழ்வார் -இங்கனமே
செங்கால மட நாராய் -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -என்று நாரையை-
அதனை சேர்ந்தவைகளோடு கால்களை தன தலை மேலே வைக்குமாறு கோருகிறார் நம் ஆழ்வார் – இவ்வாறே
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -என்று குயிலுக்கு-தன்னையே
கைம்மாறாக அர்ப்பணம் செய்கிறாள் ஆண்டாள் –
முதல்நிலை -பிரதம பர்வம் நிலையில் சேர்த்து-வைக்கப் போகும் பறவைகள் திறத்து அவர்கள் அங்கனம்
நடந்து கொண்டால் இறுதி நிலை -சரம பர்வம் நிலையில்
சேர்த்து வைத்த நெஞ்சின் திருவடிகளில் அமுதனார் பணிவதற்கு கேட்க வேணுமோ –
இமயத்துள் –பிருதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-
அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –-பெரிய திருமொழி 1-5-
பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -திரு நெடும் தாண்டகம் ––6
பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே -இரண்டாம் திருவந்தாதி–94-
கழல் தொழுதும் வா நெஞ்சே–மூன்றாம் திருவந்தாதி – 7-
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்-நான்முகன் திருவந்தாதி –-86-
என்னெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -பெரிய திருவந்தாதி – –87-
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய் மொழி ––1-1-1-
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே -திருவாய் மொழி–10-6-1-
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் ––3-
பூசும் சாந்து என்னஞ்சமே–திருவாய் மொழி -4-3-1-
என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––பெருமாள் திருமொழி -2-4-
அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-
அரும் பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-
அரங்கன் எம்மானுக்கேமாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் -1-
எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே -திரு மாலை-42-
கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—-பெரிய திருமொழி -2-6-1-
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-
கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே—2-6-5-
கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனததாரவரை வல்ங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழு வாரைத் தொழு வாய் என் தூய் நெஞ்சே—2-6-7-
மல்லைக் கடல் தல சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே–2-6-9-
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-
தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப் போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-
தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-
தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7-
தண் சேறை யம்மான் தன்னைக்கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு
எம்மை ஆளும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி -3-7-1-
எம்மான் தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-
எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-
திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-
அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே–3-7-5-
எம்மான் தன்னை ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே–3-7-6-
உணர்வு அரியான் தன்னைச் கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்களே–3-7-8-
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-
எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-
திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-
என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-
தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-
பொன்னாழிக் கை என்னம்மான் நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply