ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் –1986-உபன்யாசம்–

ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் –https://www.youtube.com/playlist?list=PLTnvVpUib4T-7pM_KpqZ5jsXHpUPyNbRa–
ஸ்ரீ வராஹ அவதாரம் -ஸ்ரீ நம்மாழ்வார் உகந்த அவதாரம்
ஸ்ரீ கைசிக மஹாத்ம்யம் -அவதாரிகை இதன் தனிப்பட்ட ஏற்றம் விளக்கும்
கோலா வராஹம் ஒன்றாய்
ஞானப்பிரானை அல்லால் மாற்று ஓன்று இல்லை நான் கண்ட நல்லதுவே
பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார் –
கோல வராஹம் -மானமிலா பன்றியாய் -ப்ரஹ்மாண்ட ரூபம் -உவமானம் இல்லா -அபிமானம் இல்லா –
ஆண்டாள் அவதார கந்தம் -ஸூ கரம் அருளிச் செய்த ஸூ கர உபாயம்

கோதா -காம் ததாதி கோதா -நல்ல வாக்கு கொடுப்பவள் -த்யானம் பண்ணினாலே-
ஒரு படி ஜலத்திலே ஆயிரம் படி பால் சேர்த்தால் போலே அர்ச்சாவதாரம் –
நம்மால் பிரதிஷ்டை -ஒரு படி நீர் –மந்த்ராதிகளால் அவள் வந்து கலந்து -ஆயிரம் படி பால் –
காம் தததே கோதா -நல்ல வாக்கை நமக்காக அருளினவள் –

திருமாலைக் கட்ட இருமாலை கட்டி -பா மாலை பாடிச் சமர்ப்பித்தார் -பூ மாலை -சூடிக் கொடுத்த நாச்சியார் –
இரண்டு மாலைகளையும் தூது -பா மாலையையும் – -புஷ்பங்களையும் தூது
மேக சந்தேசம் -காளிதாசர் -ஹம்ச சந்தேசம் -தேசிகன்
மேக விடு தூது –

ஸ்ரீ வராஹ அவதாரத்தில் கேட்டதை வெளியிட்டு அருளுகிறார் பேர் பாடி –முதல் பத்து –
திருவடியில் புஷ்பங்களை சமர்ப்பித்து அர்ச்சனை -இரண்டாம் பத்து
திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் மூன்றாவது பத்து –
மஹா யஜ்ஞம் இத் திருப்பாவை -வேத விஹித தர்மம் –
ஆச்சார்ய அனுக்ரஹம் -நெய்-கொண்டு ஆஹுதி -ஸ்ரீ ரெங்கனுக்கு -வைஷ்ணவம் யஜ்ஞம் –
மூன்று -திரு விக்ரமனை தியானித்து ஹோமம் -இங்கும் அதே போலே -உண்டே
ஒவ் ஒரு சொல்லும் மந்திரமாக அமைந்து உள்ளது –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -முதல் பத்தில் -முதல் கபாலம் -அக்னி -அக்ர நயதீதி அக்னி
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே அடுத்த பத்து
அன்று உலகம் அளந்த அடி போற்றி
சரணாகதி ஆகிற மஹா யஜ்ஞம் -நாம் மீண்டும் -பிறவாமைக்காக

வேதங்களைக் கடைந்து கடைந்து -ருக் வேதம் -8- யஜுர் வேதம் -8-சாம வேதம் -8-
அஷ்டாக்ஷர காயத்ரி -மஹா மந்த்ரம் -மூன்று பாதங்கள் -சந்தஸ் மாதா –
பூர் புவ சுவ–மீண்டும் சுருங்கி -வ்யாஹ்ருதி
ஓம் -மீண்டும் சுருங்கி -பிரணவம் -மூலமாகிய ஒற்றை எழுத்து -ஸமஸ்த வேதங்களையும் தன்னுள்ளே அடக்கி –
இப்படி பிரணவம் -வ்யாஹ்ருதி -காயத்ரி –
இத்தை விளங்குகிறாள் திருப்பாவையில் –
முதல் பத்தால் அகாரார்த்தம்
அடுத்த பத்தால் உகாரார்த்தம்-மஹா லஷ்மீ -கடகர் -உத் கீதம் உபாசனம் –
அடுத்த பத்தால் மகாரார்த்தம்
கையில் நெல்லிக்கனி போலே நம்மை அழகாக காட்டிக் கொடுக்கிறாள்-மகாரம் -25-தத்வம் —
திரு வெள்ளறை -செந்தாமரைக் கண்ணன் -எங்கள் ஆழ்வான்-உய்யக் கொண்டார் அவதார ஸ்தலம் –
படிக்கட்டுகள் -24-அங்கும் –

ஓலை படாப் பிரமாணம் -வேத -சத-சிரஸ் ஸித்தம்-வேதம் -தத்வ ஹித புருஷார்த்தம் உணர்த்தும் -மறை -மறைக்கும் –
பகவத் பாகவத ஆச்சார்யர் கடாக்ஷம் அற்றவர்களுக்கு மறைக்கும் என்றவாறு –
லஷிதா லக்ஷண நியாயம் -சிவ பார்வதி -தங்கை –பஜனி-மங்கள தேவதை அர்த்தம் -அம்பிகை –
அசங்கதிரேவ சங்கதி எம்பார் -வீற்று இருந்த -தீர்ப்பாரை -சங்கதி இல்லாமையே சங்கதி என்றும்
சேராமையாலே -சங்கதி என்பது சேருவதைக் குறிப்பதால் -என்னுமா போலே –
ஆச்சார்யர்கள் மூலமே அறியவேண்டிய தாத்பர்யம் உண்டே
ஸ்வரம் முக்கியம் -உதரம் -நாபி -நுனி நாக்கு-உதடு -கழுத்து இவற்றில் இருந்து சொல்லும் சப்தங்கள் –

கிருஷ்ணஸ்ய தாஸ்யோஹம் அஹம்-
கிருஷ்ணஸ்ய அநு ஸ்மரணம் சர்வம் ஸமர்ப்பயாமி -பிராயாச்சித்தம் -தாஸ்யம் அறிவோடு -பாரார்த்யம் ஸ்வம் —
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -மூன்று தடவை -திருடிகரித்து-
அஹம் -ஆத்மா –நீ ஸ்வீ கரித்துக் கொள் -ஆத்ம நிவேதனம் –ந்யாஸம் -வைத்தல் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -23 -சித்த உபாய சோதன அதிகாரம்
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வா ர்த்தம் ஸ்வ ஸ்மின் ந்யஸ் யதி மாம் ஸ்வயம் -என்ற இது
ஆத்ம சமர்ப்பண தசையில் க்யாதி லாப பூஜா பல சங்க கர்த்ருத்வ உபாயத்வங்கள் ஆகிற தூறல் அற்ற
பகவத் அனுசந்தானக் கட்டளை –
ஆகையால் தாய் முலைப்பால் போல் வருகிற ஈஸ்வர பிரசாதத்துக்கும்
ஸ்த நந்த்யனுடைய முலை யுண்கிற வியாபாரம் போலே இவனுடைய அபேஷாதிகள்-

சோழ மண்டலம் சோறு உடைத்து -பூர்ணமாக தன்னைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ரெங்கம் தொடங்கிய சோழ தேசம் –
வெண்ணெய் உண்ட வாயன் -பரம போக்யம்
பச்சை கற்பூர வாசனை திருவேங்கடம்
ஹோம வாசனை ஸ்ரீ காஞ்சீ புரத்தில்
தேசிகன் -கோயில் –வெற்பு –பெருமாள் என்று மூன்றையும் அருளிச் செய்த பாசுரங்கள் அனுசந்தேயம்

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்கு துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே —

கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்புக்
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்புத்
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறித்த வெற்புப்
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்புப்
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே –
இவனோ பெரிய பெருமாள் -ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன்-பெரிய பெரிய பெருமாள் –
ஸ்ரீ ராமனாலும் ஸ்ரீ திருவேங்கடத்தானாலும் சேவிக்கப் பெற்ற பெருமை
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -திருவடியை பெருமாள் புகழ்ந்தார் –இன்னிசையால் நாதன் அருளிச் செயலை வழங்கி –

திருப்பாவை ஸ்ரவண யஜ்ஞம் கீர்த்தனை யஜ்ஞம் -வக்த்ரு வை லக்ஷண்யம் –
ஸ்ரீ ஆண்டாள் பிரபாவம் -பர்வத பரமாண வோட்டை வாசி –
க்ஷணம் தோறும் மாறுபாடு சரீரம் -சீரியதே -அழியக்கூடியது –
ஆச்சார்ய உபதேசம் செய்ய புரிஞ்சு போச்சு சொல்லாமல் புரிந்து இருந்தோம் என்று இருக்க வேண்டும்

வியாசர் -கிரீடம் சம்வாதம் -மாட்டு வண்டி -உயிர் போனால் என்ன -என்னைகே கண்டு பொறாமையா –
கார்யம் இல்லாமல் -இருக்கிறேன் -சந்த்யா வந்தனம் பண்ணா விட்டால் புழுவே பரிகாசம் பண்ணும்படி –
சூர்யன் தோன்றாத தினம் துர்தினம்-
நன்னாள் –கர்ம அனுஷ்டானத்துக்கு பங்கம் இல்லாத நாள் –
தனுர் மாசம் -வில்லைப் போலே-அதிக சீதளமோ உஷ்ணமோ இல்லாமல் –
குண்டலம் போலே அடுத்த மாதம் உறங்குகிறோம் –
அதிஷ்டான மூர்த்தி -கேசவன் -தன்னுள்ளே வைத்து -மாசானாம் மார்கழி -அவன் ஸ்வரூபம் –
ஒளஷதி -வநஸ்பதி அதிஷ்டானம் சந்திரன் -மதி நிறைந்த -பசுக்கள் ஸம்ருத்தி –
வேத மந்த்ரம் -நித்ய கர்மாநுஷ்டானம் செய்யும் வம்ச வ்ருத்தி வழங்கும் சந்திரன் –
திங்கள் -சந்திரன் -மதி நிறைந்த -சந்திரனைப் போன்ற குளிர்ந்த மதி -சாந்தம் –

நன்னாள் –
கால ராத்திரிக்கு இன்று தான் ஸூப்ரபாதம் -அக்ரூரர் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
அன்று அவை பட்டினி நாள் –
வஸிஷ்டர் -பராசரர் பேரன் ஏழு வயசில் இருக்க -மார்க்கண்டேயர் வர -தண்டவாத் பிரணாமம் பண்ண –
வாழ்ந்த நாள் கணக்கு இல்லை -எவ்வளவு நாள் நினைத்தமோ –
ஏழு கல்பங்கள் ஆனாலும் ஐந்து நாள்கள் அளவே நினைத்த நானே சிறியவன் -என்றாராம் –
ஐந்து இடங்களில் நீராட்டம் -திருப்பாவையில் –
பேச்சு அரவம் -தொனி பிரதானம் வேதத்திலும் –
நம்பெருமாள் அபயஹஸ்தம் கொஞ்சம் சாய்ந்து போதும் போதும் சொல்வது போலே -நியாஸ திலகம் -தேசிகன் –
கண்களை அகல விரித்து சேவிக்க வேண்டும் –

அதர்வண வேதம் -practical-மற்ற மூன்றும் -thiyari-கும்பம் -நீரில் ஆவாஹனம் –
சர்வா தேவதா ஆபு-நேராக காலை அலம்பக் கூடாது -கையில் வாங்கி சேர்த்து கொள்ள வேண்டும் –
இரண்டு வாயுக்களின் சேர்க்கை -பிராணன் ஒரு பங்கு மற்றவை இரண்டு பங்கு சொல்லும் இத்தையே -H-2-o-
ப்ரஹ்ம வித்து -பசு -கர்ப்பவதி -யானை -சுமை தூக்கி வருவான் -முன்னே விட்டு பின்னால் போக வேதம் சொல்லும் –
கரைவைகள் பின் சென்று மேலே சொல்லுவார்
ஆய்ப்பாடி -ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ அயோத்யை -ஸ்ரீ நித்ய ஸூரீகளை விட ஸ்ரேஷ்டம்

தீம்பு கண்டு உகக்கும் ஆய்ப்பாடியின் சீர்
திரு அபிஷேகம் -ருக் வேதம் -திருவடி சாம வேதம் உத்கீதம்-
சப்திக்காமல் இருக்க குழந்தை கண்ணன் இவற்றைச் சொல்வது வேதம் ஒலித்தால் அவனைக் காட்டிக் கொடுக்கும்
ஆயர் தேவு-அன்றோ இவன்
நிகம பரிமளம் திருப்பாவையில் ஒவ் ஒரு சொல்லிலும் -ஆய்ப்பாடியில் நித்ய யஜ்ஞம் -நேராக அவனுக்கு சமர்ப்பித்து

கொசு -ஸ்ரீ பாகவத ஸ்பர்சம் -திருவடி தீண்டி -ஆபாத சூட –ஆழ்வார் பாசுர அனுஷ்டானம் –
பிராண தியாகத்துக்கு ஆத்ம சமர்ப்பணம் -செய்யவும் தயாராக –
பலாச மரம் -ஸ்ரோத்ர சக்தி -அதனால் உபநயனம் பிள்ளை கையில் இதைக் கொடுக்கிறார்கள் –
சாமான்ய தர்மம் விசேஷ தர்மம் -பசுவை கண் பார்த்தது கண் பேசாது -வாய் பேசும் வாய் காணாது -கதை
ததி பாண்டன் -கண்ணன் இங்கு இல்லை என்றானே –
வந்தாய் போலே வாராதான் வராதவன் போலே வருவான் -உன்னைச் சிக்கென பிடித்துக் கொண்டேன் –
மோக்ஷம் இவனுக்கு -தசரதன் சத்யவான் -சுவர்க்கம் தான் அவனுக்கு –
சரீரம் கடம் -தீர்த்தம் உஷ்ணம் மண் இதுவும் -இந்தப் பானையில் இருந்து வெளிவர -பானைக்கும் கொடுத்தானே

மடல் சாதிக்கும் பொழுது கேட்க்கும் அனுபவம் இங்கே இருக்க ஸ்ரீ வைகுண்டம் போக ஆசை வருமோ
மத்து -கனபாடி போலே ஓசை -கேட்டு வந்தான் -அம்ப ததி மத்திய தும் தும் -பூதம் -ஏகோ விஷ்ணு மஹா பூதம் –
வெளியில் போக சொன்னாள் -அவன் -தாயாரை ரஷிக்காத வாழ்வு வாழ்வா -உலகோர் ஏசுவார்களே-
கண்ணா நான் என்ன பண்ணுவேன் —
இப்பொழுதாவது கேட்டாயே
தாரார் கை அளவும் உள்ளே விட்டு விழுங்கி –
அன்னவான்-அந்நாதோ பவ -வேதம் சொல்லும் -அன்னம் உடைய செல்வனாகவும் -உண்பவனாகவும் இரு –
மருத்துவன் -உண்ணக் கூடாது சொன்னால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது
உண்ணவும் வேண்டும் உண்டது ஜெரிக்கவும் வேண்டும் –
தேவகி வஸூ தேவன் -வெறும் அன்னவான் -அந்நாத-நந்தகோபனும் யசோதையும் தானே
ப்ரஹ்மமும் அன்னமும் -பழையது -பழையவன் -ஜல சயனம் -இரண்டும் – ப்ராத காலம் இரண்டையும்

ஐஸ்வர்ய ப்ரதன் சூர்யன்–அக்னிக்கும் சந்திரனுக்கும் மூலம் — –
அன்னம் போஷிப்பதும் இவனால் -ஐஸ்வர்யம் அளிப்பவன் –சமந்தக மணி விருத்தாந்தம் –
அக்ஷய பாத்ரம் சூரியனை பிரார்த்தித்து பாண்டவர்கள்
வைசம்பாயனர் யாஜ்ஜ வல்க்யர் -வேத வித்து பையனை மிதித்து ப்ரஹ்மஹத்தி தோஷம்
விரதம் யஜ்ஞம் பண்ண சிஷ்யர் -நான் ஒருவனே பண்ணுவேன் அஹங்காரம் –
கற்றதை கக்கி போக சொல்லி –
புறாக்களாக -மாற்றி ரஷிக்க-தைத்ரிய சம்ஹிதை கிருஷ்ண யஜுர் வேதம்
யாஜ்ஜா வல்க்யர் சூர்யா த்யானம் -குதிரை வடிவில் -வந்து -ஆச்சார்யருக்கு தெரியாத சுக்ல யஜுர் வேதம் சூர்யன் இடம் கற்றார் –
ஆகவே ஞான ப்ரதன்-அவன் அந்தர்யாமியாக இருந்தே இந்த சக்திகள்

நாராயணா பர வேதா பர ஞானம் பர தத்வம் பாராயணம் –
ஸோஹம்-
தாஸோஹம் –
சதா ஸோஹம் –
தாச தாஸோஹம் –
அடியார் அடியார் –இப்படியே -சரம பர்வ நிஷ்டை –
அஜாமிளன் -கெட்ட ஸ்த்ரீ சேர்த்தி –கடைசி பிள்ளை நாராயண நாமம் –
எம பட்டர் -பாபிகளுக்கு -புண்யாத்மாக்களுக்கு யமன் -பிரபன்னனுக்கும் அமானவன்-

ஜீயர் புரம்–நந்தா -பிள்ளையைக் கூப்பிட்டு கீரை அமுது -செய்த -அரங்கன் -பெயர் வைத்த மஹாத்ம்யம் –
பங்குனி உத்தர உத்சவத்தில் இன்றும் நடக்கிறது
அர்த்த பஞ்சகமும் -மிக்க இறை நிலையும்-இத்யாதி -ஸ்வரூபம்- ரூபம்- குணம் -ஐஸ்வர்யம் – ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –
சத்யத்வம் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –அவிகாராய –
ஞானந்த்வம் – மாசூணா ஞானமாய் –
அநந்தத்வம் -த்ரிவித -தேச கால வஸ்து-பரிச்சேத ராஹித்யம் -முடிவில்லா அழகு குணம் -நீல மேனி ஐயோ –
ஆனந்தத்வம் -ஆனந்த வல்லி-பரிபூர்ண ப்ரஹ்மானந்தம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம்
அமலத்வம் -அகில ஹேயபிரத்ய நீகத்வம்

சாகசம் மா குரு–சாஹசம் செய்யாதே சொல்லும் பறவை புலியின் வாயில் இருந்து உபதேசம் -அனுஷ்டானம் உபதேசத்துக்கு எதிராக –
ஆச்சார்ய லக்ஷணம் -சாஸ்த்ரா ஞானமும் அதுக்குத் தக்க ஸ்வயம் ஆச்ரயதே அனுஷ்டானமும் இருக்க வேண்டுமே
அனுஷ்டானம் முன்பு உபதேசம் பின்பு -பூர்வ அவதாரம் ராமர் அனுஷ்டானம் -பின்பு கீதாச்சார்யர் உபதேசம் –

கண்ணனை கனி என்ன கையில் காட்டித் தரும் ஆச்சார்யர் -மந்த்ர சித்தி அடைந்து –16-குணங்கள் தேசிகர் காட்டி அருளுகிறார்
உள்ளீடான பர ப்ரஹ்மத்தை சாஷாத்கரித்து -வேதஸ்ய அக்ஷர ராசி கிரஹணம் தானே வேத அத்யயனம்

தாரம் பூர்வம் -பிரணவத்துக்கு வேதம் -மந்த்ர சாஸ்திரத்தில் -தாரம் சப்தம் -நம்மை உத்தரிப்பதால் -ஞானம் ஏற்பட்டு
வியாதி -சம்சாரம் போக்கி -துர்பிஷை-பஞ்சம் இல்லாமல் -ஞான சங்கோசம் இல்லாமல் –
ஸத்கர-திருட பயம் இல்லாமல் -ஆத்ம அபஹாரமே பெரிய திருடு –
தண்டம் பானை குடம் -சாஸ்திரம் திரும்பி திரும்பி சொல்லும் –
ப்ராத அபாவம் -முன் இல்லா நிலைமை
ப்ரத்வம்ச அபாவம் உடைக்கப் பட்டு இல்லாமை
அயனம் ஈயதே அயன் வழி மார்க்கம் -அவனே -ஈயதே அசவ் -பலமும் அவனே -ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் -முதல் பாசுரம் –
சமதமாதி குணங்கள் கை புகுந்து -ஆச்சார்ய நிஷ்டை -பிறந்து -திரு மந்த்ரம் கை புகுந்து -அவனும் கை புகுவான்

சத்யம் வத முதல் பாசுரம்
தர்மம் சர -இரண்டாவது பாசுரம்
சாஸனாத் சாஸ்திரம் –ஸாஸ்த்ர யோநித்வாத்–
உய்யுமாறு எண்ணி -ஆறு வழி -ஆறு வார்த்தை த்வயம் எண்ணி -கீழே மூல மந்த்ரம் -இதில் த்வயம் –
ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தியையும் எண்ணி

பத்னி சேவிக்கும் பொழுது கணவன் தீர்க்க சுமங்கலி ஆசீர்வாதம் செய்யக் கூடாது
பிருந்தாவனம் பண்டிதம் -திருவடி -நவநீத நாட்டியம் நந்தகோபன் பவனத்தில்
சரணாகத ரக்ஷணம் என்னும் யஜ்ஞம்
ஹோதா -ரிக் வேதம் –வாத்சல்யம்
உத்காதா சாமம்–ஸுசீல்யம் -ப்ரஹ்மா அதர்வண வேதம்–ஸுலப்யம் -நான்கு உத்தம குணங்களே அவனுக்கு
தயா -காருண்யம்-ருத்துக்கள்-யஜுர் வேதம் -கமலா தர்ம பத்தினி
தயா இல்லாவிடில் மீது குணங்கள் விலை செல்லாதே –

தாயாரை சேவிக்கும் பொழுது அவன் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் -இத்தையே கேட்க விரும்புவாள் அவள்
அவனைச் சேவிக்கும் பொழுது அவளை ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்
திருவடி அனுஷ்ட்டித்துக் காட்டினார் –
தெய்வம்-தெய்வங்களால் ப்ரதிஷ்டை – ஆர்ஷம் -ரிஷிகளால் ப்ரதிஷ்டை -மானவம் -மநுஷ்யர்களால் ப்ரதிஷ்டை –
சைத்யம் சித்தர்களால் ப்ரதிஷ்டை -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் -தானே சங்கல்பித்து வந்து சேவை சாதிக்கிறான் –

காமம் உள்ளே புகுவதற்கு முன் காயத்ரி புகை வேண்டுமே -இள வயசில் உபநயனம் –
வாமனனுக்கு ஐந்து வயசில் சூர்யன் செய்து சத்தை பெற்றான் –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -கிருஷ்ணன் குறை -திரௌபதி கூக்குரலுக்கு போகாமல் போனானேன் —
ருணம் ப்ரவர்த்தத்தி இத்யாதி -என்ற குறையை தீர்த்ததும் கோவிந்தா நாமமே
ஸ்ரீ ராம -ரா -2-ம 5- ராம -10-ஸ்ரீ ராம ராம ராமேதி -1000-வருமே -நன்மையே நமக்கே நல்கும் –
இம்மைக்கும் எழுமைக்கும் மருந்து
ஹிருதயத்தில் வாமனன் அந்தர்யாமி -பஹிர் வியாப்தி -திரு விக்ரமன் –

வித்யுத் போலே ஸ்ரீ நரஸிம்ஹர்-electricity-ந இதி அஸ்தி இதி– நேதி -இரண்டும் மோத
ஒளி பிழம்பு கர்ஜனை -மின்னல் -தேஜஸ் -த்ரி நேத்ரம் –
வேதம் ப்ராத காலத்தில் கேட்க வேண்டிய த்வனி -64000-கேட்க்க கூடாத த்வனி -64000-சொல்லும்
ப்ரஹ்ம த்வனி -தயிர் கடையும் த்வனி சங்க நாதம் இவற்றில் பிரதானம்
இந்திர பிரஜாபதி சப்தங்கள் வேதங்களில் பல இடங்களில் பர ப்ரஹ்மத்தையே சொல்லும்
மாணம் பிரமாணம் பரம பிரமாணம்
மேயம் ப்ரமேயம் பரம ப்ரமேயம்
பரம பிரமாணம் கொண்டு பரம ப்ரமேயமான பர ப்ரஹ்மத்தை உணர வேணும்
வேதம் இல்லை என்றால் -பரமாத்மாவை உணர முடியாதே -அவன் மூச்சுக்காற்றே வேதம் -அவனுக்கே ஜீவாதாரம் வேதம்
வித்யாரண்யர் -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி -ரக்ஷணம் செய்யுமவனை -கண் கூடாகப் பார்க்க முடியாத
அவனைக் காட்டுவதே வேதம் -நித்யத்வம் அப்ருஷேயத்வம் அனந்தத்வம் –
அவிச்சின்ன பரம்பரையா வேதம் ஓதப்பட்டு வரும் –
சஷ்டியப்த பூர்த்தி –மேலே -60-வயசு பூர்ணமாக வேதம் சொல்லி வாழவே –
அனந்தாவை வேதா -முடிவு இல்லையே

3330-வேதத்தில் நாஸ்திக வாதங்கள் உண்டு -அதில் -320-தான் இப்பொழுது நாஸ்திக வாதிகள் அறிவார்கள்
அனைத்துக்கும் பதில் வேதத்திலும் உண்டே
ஹோம குண்டம் -அக்னி பிரதிஷ்டை செய்து – ஸ்வாஹா நெய் விட்டால் அவனுக்கு போகுமா -இது போதுமா
ஒன்றையும் -அறியாவிட்டால் எதற்க்காகப் பண்ணுகிறாய் -கேட்க்கும் வேதமே –
சாமான்யம் அல்ல இது -நாம் சமர்ப்பிக்கும் அளவு தான் போகாது -அந்த தேவதைக்கு பூர்ண திருப்தி வரும் படி
விருத்தி அடைந்து போகும் -வேதமே சொல்லும் –
நெல்லை விதைத்து விவசாயி பலன் பெறுகிறான் -பண் மடங்கி பெருகுவது போலே –
பூமிக்கு மூலம் நீர் அதுக்கு மூலம் அக்னி -கார்ய குணம் -காரணத்தில் இருக்கும் –

வித்யை முகத்ஸ்தமாக இருக்க வேண்டும்
செல்வம் த்ரவ்யம் -கையில் இருக்க வேண்டும் –
வித்யை சம்பாதிக்க துக்கம் -செலவழித்தால் சுகம் –
பொருள் சம்பாதிக்கவும் செலவழிக்கவும் துக்கம் –
கிருஷ்ணஸ் சமர்ப்பணம் -பிராயச்சித்த மந்த்ரம் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே யஜஞம் –
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பாவம் அச்யுத பானு லோகமாகிய தாமரை மலர
கிழக்குத் திக்குக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் தானே அவனுக்கும் தேவகி கர்ப்பத்துக்கும் –

சதஸ்த லக்ஷணம் -சந்த்ர சஹஸ்ர தர்சனம் பண்ணுபவரையும் -நித்ய அன்னதானம் செய்பவரையும் –
அக்னிஹோத்ரம் செய்பவரையும் வேத வித்துக்களையும் வணங்குகிறேன் என்கிறான் அவனே–
83-வருஷங்கள் -6-மாதங்கள் 21–நாள் ஆனால் சஹஸ்ர தர்சனம் -ஆயிரம் மூன்றாம் பிறை சேவிப்பது
இரண்டு பறவை கிளையில் -ஒன்றுக்கு ஒட்டிக்கும் ஒன்றுக்கு ஒட்டாது –
சக்கரைப் பொங்கல் -உங்களால் கையை அலம்புகிறோம் நாக்கை அலம்ப வேண்டாமே -கதை சொல்லி புரிய வைத்தாராம்
அவன் அவதார ரஹஸ்யம் அறிந்து பிறவி நோயை போக்கிக் கொள்கிறோம் –

எப்படியோ அப்படி எவனோ ஒருவன் -யாதிருச்சா-ஏதோ ஒரு வழியில் அஞ்சலி செய்பவனை
சிந்திப்பதாக பாவனை இருந்தாலே பலம் அளிக்கும் பித்தன்
தொழும் கையன் துவண்ட மேனியன் பரத்தாழ்வான் போலே ஸ்வீ கரிக்கிறான் -அஞ்சலி பரமா முத்ரா –
தொழுதால் எழலாம் —
சர்வாயுத -தொழுத விபீஷணன் –
வாயினால் பாடி -வாய் படைத்த பயன் பாடுவதே என்றுஉணர்ந்து பாடி என்றபடி –

அச்யுதன் -தன் ஸ்தானத்தில் இருந்து நழுவாதவன் -தன்னைப் பற்றினவரை நழுவ விடாதவன் –
ஒரு மலையில் இருந்து ஒரு மலைக்குத் தாங்கும் ஜந்துக்கள் போலே மாறி மாறி பல பிறப்பும் பிறந்த நாம்
நர ஸிம்ஹம் திருவடி -சதாச்சார்யர் திருவடி -பற்றி தாண்டுகிறோம் -மாயனை -பாசுர அர்த்தம் –

கேசவா – நடக்கும் பொழுது
ஹரி -எழும் பொழுது
கோவிந்தா -உண்ணும் பொழுது
மாதவா -தூங்கும் பொழுது –வேதம் சொல்லுமே-
இதே போலே திருப் பாவையிலும் ஆண்டாள் அமைத்து அருளுகிறாள்

பாலன் -தர்க்க சாஸ்திரம் -கிரஹணம் –தாரண -போஷணை வைத்து மூன்றும் இருக்க வேண்டும் -பிள்ளாய்
பூதனை -அவித்யா -மாயா -இரண்டும் —
நவமி -மாறாதவன் -ஒன்பதை வைத்து எத்தைப் பெருகினாலும் ஒன்பது
அஷ்டமி -விஷமம் -பெருக்கி -கூட்டி பார்த்தால் இறங்கு வரிசை வரும்
தபஸ் பண்ண தனிமை வேண்டும் -அத்யயயனம் இருவராக செல்ல வேண்டும் –

கூவி -சப்தம் -நம்மாழ்வார் -கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குருகாதோ போல பல இடங்களில்
எழுந்திராய் -இருந்த திருக்கோலம் -இவரை உணர்த்துகிறாள் கீழ் வானம் பாசுரத்தால்
வியாசம் -முன்னும் பின்னும் வைதிக குடும்பம் -பராசரர் திருக்குமாரார்-ஸூகரை திருக்குமாரராகக் கொண்டவர்
பட்டர் பிரான் கோதை – சக்ரவர்த்தி திருமகன் உகக்கும் திரு நாமம் –
குசேலர் -சஹா-பல இடங்களில் -அவர் தர்மபத்தினி -பெயர் -எங்கும் இல்லை -வாஸூ தேவன் இடம் செல்வம் கேட்டாளே
அவள் பெயரைச் சொல்லவே பயப்படுவார்கள் ரிஷிகள்
கோபிக்காமல் பவ்யமாகவே சொல்லுவாளாம் -இதற்கும் அவன் இதன் கை நீட்டச் சொன்னதால் -குசேலர் மகிழ்ந்தாராம்
அடியேன் அடியேன் -மணி கண்ணன் அமுது செய்த பொழுது -ஜகந்நாதா-பிறந்த பயன் பெற வேண்டாமோ -அதனாலே அடித்தேன் –
மணி ஓசையை வைத்தே ஸ்ரீ ரெங்கம் கோயிலில் நடக்கும் செயல்களை உணரலாம் –
சுற்றும் விளக்கு எரிய- தயா சதகம் -வேதார்த்தம் -விளக்க -ஸ்ரீ கீதை ஆகிய விளக்கு -வேதமாகிய பவனத்தில் ஏற்றி வைக்கப்பட்டது –
மானம் ப்ரதீபம் ஞான தீபம் -தூ மணி -நவரத்தினம் -பிரகாசிக்கும் -நவ வித சம்பந்தம் அறிவோம் –

பால் வெள்ளம் -நீர் வெள்ளம் -மால் வெள்ளம் -பனி வெள்ளம் – அடியார் வெள்ளம் –
திருப்பாவை நோன்பு வெள்ளிக் கிழமை -ஆரம்பம் என்பர் -வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்பதால்
குயில் கருடன் ஹம்சம் -புள்ளும் சிலம்பின் -விசேஷ பறவைகள் –
நரி பார்க்கலாம் குரலைக் கேட்க கூடாது என்பர்
கழுதையைப் பார்க்கக் கூடாது -சப்தம் நல்ல சகுனம்
குயில் கருடன் ஹம்சம் -பார்க்கவும் கேட்கவும் ஸ்ரேஷ்டம்
பாவைக்களம்-கால ஷேபம்–போது அரி -கால ஷேபம் –
வியாழன் -பிரஹஸ்பதி மதம் சாருவாக மதம் -வெள்ளி -சத் சம்ப்ரதாயம் –
நாவுடையாய் -பிரணவம்- பாதுகை -ப்ரபாவங்களை -வேதார்த்தம் அனைத்தையும் அமலனாதி பிரான் முகேன
அருளிச் செய்த நா உடைமை –

நம்முடை நம் பெருமாள் -திரு அஹோபிலம் -நம் பெருமாளை விட காருண்யம் மிக்கவன்
நின்றான் இருந்தன் கிடந்தான் நடந்தான் -நான்கையும் அனுபவித்து திரு நீர் மலை –
இவற்றோடு கூட பறந்தானையும் சேர்த்து சேவை திருவல்லிக் கேணி –
மூன்றாம் அடி -நம் போல்வாரை நோக்கி தலையைத் தாழ்த்தி கதா புன -சொல்லச் சொல்கிறான் –
இளம் கிளி -நம்மாழ்வார் -வேதங்களுக்கு அங்கங்கள் போலே ஆறையும் அருளியவர்
ராஜ தானி பிதுர் மம -தந்தை யுடைய அயோத்தியை கடாஷி என்றே பெருமாள் அருளினார் –
ஆகவே நந்தகோபனை கிட்டே கண்ணனையும் போற்றுகிறார்கள் –
தம்பி என்றால் பரதன் என்றும் -அப்பாவுக்கு பிள்ளை என்றால் தானே திருஷ்டாந்தம் –
தற் புயற்சி இல்லை -எனக்குக் கிடைத்த தந்தை யாருக்கு கிடைப்பார் என்றபடி —

அம்பரம் -வஸ்திரம் -ஆகாசம் -பரமாகாசம் -சித் அம்பரம் -சிதம்பரம் –
வனஸ்பதி ப்ருஹஸ்பதி -மரமும் நான்முகனும் -கடாக்ஷ வீக்ஷண ஏற்றத்தாழ்வாலே —
பாதுகா தேவி இருந்தால் ராக்ஷஸர்கள் வதம் செய்து இருக்க முடியாதே முன்னமே கொடுத்து -சீதா தேவியும் வலிய சிறை புகுந்தாள்
பூர்ணமாக மஹா லஷ்மிக்கான பாசுரம் -உந்து மத களிற்றன் -உகாரத்தால் -ஆரம்பித்து –
உத்கீத சாமத்தால் -உபாசனம் -ஸ்ரீ லஷ்மீ நாராயணன் -உத்தம புருஷ -உத்துடன் கூடியதால் தானே புருஷோத்தமன் –
ஸச் சிஷ்யரை மருமகளே-கந்தம் -ஞானம் -சம்சய விபர்யயம் இல்லாமல் கிரஹித்து தரித்து த்யானம் –
துருவனுக்கு நாரதர் -துவாதச மந்த்ரம் -ஆறு மாதங்களில் பகவத் சாஷாத்காரம் –
ப்ரஹ்லாத-கர்ப்ப ஸ்ரீ மான் நாரதர் உபதேசம் -நா தழும்ப நாரணன் நாமம் ஏத்தும் ஆச்சார்யர்
தக்ஷ பிரஜாபதி சாபத்தால் நின்ற வா நில்லா நெஞ்சு போலே திரியும் -சாபத்தையே வரமாக திரிந்து உபதேசம் செய்தார் நாரதர் -30-20-

ஐந்து முகம் குத்து விளக்கு-கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் -தோரண விளக்கு -அபிவிருத்தி ப்ரசன்னாச்சார்யார் –
கோட்டுக்கால் –ஆச்சார்யர் -திருவடியில் ரேகைகள் -பலவும் உண்டே –
ஏற்ற கலங்கள்–நடாதூர் அம்மாள் பிரபாவம் சொல்லி மகனே தேவாதி ராஜன் –
நடாதூர் அம்மாள் கால ஷேப கூடம் -அங்குண்டு
ஏற்ற வாங்கிக் கொள்ளும் -தகுந்த சிஷ்யர் ஸத்பாத்ரம்
வள்ளல் பெரும் பசுக்கள் -நான்கு காம்புகள் -முதல் நான்கு ஸூத்ரங்கள் -நான்கு அத்யாயமாக விரிந்த ஸ்ரீ பாஷ்யம் –
ஒரு காம்பு -அருளிச் செயல் ஒரு காம்பு -ஸ்ரீ கீதார்த்தம் -ஒரு காம்பு -ஸ்ரீ ரஹஸ்ய த்ரயம் ஒரு காம்பு
வேதமாகிய திட பிரமாணத்தால் அறியப் படுபவன் ஊற்றம் உடையாய் -பெருமானுக்கும் ஆச்சார்யருக்கும் –
பரமாத்மா -மண்டோதரி மட்டுமே கொண்டாடும் ஸ்ரீ ராமன் -தமஸோ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர
அன்று இவ்வுலகம் -அன்றி இவ்வுலகம் -அவன் அப்ராக்ருதம் -பிராகிருதம் போலே அன்று என்றவாறு

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading