சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-
ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம –84
உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ் ஸருங்கீ ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-
ஸூ வர்ண பிந்து ரஷோப்யஸ் சர்வ வாகீஸ் வரேஸ்வர
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹா நிதி –86-
குமுத குந்தர குந்த பர்ஜன்ய பாவனோ அநல
அம்ருதாசோ அம்ருதவபுஸ் சர்வஜ்ஞஸ் சர்வதோமுக –87
ஸூ லபஸ் ஸூ வ்ரதஸ் சித்தஸ் சத்ருஜித் சத்ரூதாபன
ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன -88
சஹாரார்ச்சிஸ் சப்த ஜிஹ்வஸ் சல்தைதாஸ் சப்த வாஹன
அமூர்த்தி ர நகோ அசிந்த்யோ பயக்ருத் பய நாசன –89
அணுர் ப்ருஹத் க்ருசஸ் ஸ்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –
———————————————————————————
4-1-கிருஷ்ணாவதார திரு நாமங்கள் -697-786
4-2-புத்த அவதாரம் -பரமான திரு நாமங்கள் -787-810-
4-3-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமங்கள் -811-825-
4-4-அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திரு நாமங்கள் -826-838-
4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் பரமான திரு நாமங்கள் -839-848-
—————–
சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-
————-
787-துராரி ஹா-
தீயவரை விலக்குமவன் –
இதம் தவ்ர் லப்யம் அப் ரபித்ஸூ பாப விஷயே ப்ரயச்சன் புத்தாவதாரம் நியச்சதி
துராரி ஹா
துர் மார்க காமிநோ துராரிண தான் த்ரயீ மார்க த்யாஜ நாதி பிஸ்தைர் உபாயை ஹ்ருத வா நிதி –யதா
மாயா மோஹேந தே தைத்யா பிரகாரை பஹுபிஸ் ததா வ்யுத்தபிதா யதா நைஷாம் த்ரயீம் கச்சித் அரோசயத்
ஹதாச்ச தே அஸூரா தேவை சந் மார்க்க பரி பந்திந –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-18-34-
அந்த அசுரர்களை மாயை மூலமாக பலவிதங்களிலும் மயக்க
அதன் காரணமாக அவர்களில் ஒருவன் கூட வேதமார்க்கத்தை விரும்பாதவனாக வேதங்களுக்கு விரோதி ஆனார்கள்
அதன் பின்னர் ஸாது மார்க்கத்தை அழிக்கத் தோன்றிய அவர்கள் தேவர்களால் வெல்லப்பட்டனர் –
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த: ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி -ராமாயணம்-அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35.
தீய புத்தி உடையவரைத் தன்னை அடைய ஒட்டாதபடி விலக்க புத்தாவதாரமாக எடுத்தவன் –
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்த அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்கள் -5-10-4-
புரம் ஒரு மூன்று எரித்த -1-1-8-த்ரி புரம் எரித்த விருத்தாந்தம் -வேதோக்த கர்ம அனுஷ்டானம் செய்த அசுரர்கள் ஸ்ரத்தை குறைத்து –
அம்பின் நுனி இருந்து வென்றவன் –
புத்தாவதாரம் -கெட்ட வழியில் செல்பவர்களை வேத மார்க்கத்தில் செல்லாமல் தடுப்பது முதலிய வழிகளால் கெடுத்தவர் –
இவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பாவிகள் விஷயத்தில் என்பதை தெரிவிக்க புத்தாவதாரம் -ஸ்ரீ பராசர பட்டர் –
கெட்ட வழியில் செல்லும் அசுரர் முதலியவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
தீய பகைவர்களை நன்கு அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம –84-
————-
788-ஸூ பாங்க –
கதம் தாந் அநு ப்ரவிஷ்ட
ஸூ பாங்க
அய பரம ப்ரத்ய யித இத் யஸூர விப்ர லம்பக மாயா மோஹந விக்ரஹ
மங்களகரமான அழகிய உடலுடன் உடையவன் -கள்ள வேடம் -வஸ்தரேன வபுஷா வாசா -உடல் உடை பேச்சு அழகு
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி -4-9-8-
வடிந்த காதும் இடுக்கிய புத்தகமும்
இவர் நம்பத் தகுந்தவர் என்று அசுரர்கள் ஏமாறுவதற்காக மயக்கும் அழகிய உருவம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழகிய அங்கங்கள் உடையவராக தியானிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –
மங்களகரமான அங்கங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
789-லோக ஸாரங்க –
உலகத்தில் சாரமான பொருளைப் பேசுபவன் –
கீத்ருக் விப்ரலம்ப
லோக ஸாரங்க
லோகே யத் ஸாரம் ந்யாயா தந பேதம் போக மோஷ வர்த்ம தத் கச்ச நீதி
கமே ஸூ ப்யு ஸங்க்யாநம் கச்ச வா டித் வக்தவ்ய இதி -ஸ கல்வாஹ
குருத்வம் மம வாக்யாநி யதி முக்திம் அபீத் ஸத–ஸ்ரீ விஷ்ணு புராணம்
மோக்ஷம் அடைய வேண்டும் என்றால் எனது சொல் படி கேட்டு நடக்க வேண்டும் –
மெய் போலும் பொய் வல்லன் -இவன் பேசுவது எல்லாம் கள்ளப் பேச்சாம் –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -மதி விகற்பால் பிணங்கும் சமயம் பலபல வாக்கி வைத்தான் -திரு விருத்தம் -96-
உலகோர் கொண்டாடும் வகையில் போகம் மோஷம் ஆகிய இரண்டு வழிகளையும் அறிந்து உபதேசம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகங்களிலுள்ள சாராம்சங்களை க்ரஹிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ வைகுண்டம் முதலிய உலகங்களை அளிப்பவர் -அறிவாளிகள் விளையாடும் இடமாக இருப்பவர் –
லோக சாரமான தன்னைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————-
790-ஸூ தந்து
கெட்டியான நூல் வலையை உடையவன் –தந்து -நூல்
ஸோபநோ ந ப்ரதி லங்க யஸ் தத் க்ரஹண வாகுரா தந்து க்ருத்ரிம ஸாந்தி பாவ நாதி ரூபோ அஸ்யேதி
ஸூ தந்து
சாந்தமான வேஷத்தைக் காட்டி அசுரர் மனம் கவர்ந்தான் -கெட்டியான வலை –
கமலக்கண் என்னும் நெடும் கயிறு –
அகப்பேட்டேன் வாசுதேவன் மணி வண்ணன் வலையுள் –
மாதரார் கண் வலையுள் அகப்பட்டு உழன்று
சாந்த வேஷத்தை ஏறிட்டுக் காண்பிப்பதாகிய அசுரர்களைக் கவரும் வலையை யாரும் தாண்ட முடியாத
உறுதி யுள்ளதாக வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
விஸ்தாரமான உலகத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
நான்முகன் முதலான மங்கள கரமான சந்ததி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
791-தந்து வர்த்தன –
நூலைப் பெருகச் செய்தவன் –சம்சாரமான பந்தமே அந்த நூல்
ஏவம் பாப ருசிபிர் அம்ஸூபிரிவ ஸம்ஸார தந்தும் ஸந்தநோ நீதி
தந்து வர்த்ந –யதா
தாநஹம் த்விஷத க்ரூராந் சம்ஸாரேஷூ நராதமாந் –ஸ்ரீ கீதை -16-19-
இந்த உலகில் உள்ள க்ரூரமானவர்களையும் என்னை வெறுப்பவர்களையும்
நான் ஸம்ஸாரம் என்னும் அஸூர யோனியில் தள்ளுகிறேன்
த்ரயீ மார்க்க சமுத் சர்க்கம் மாயா மோஹேந தே அஸூரா காரிதாஸ் தந்மயா ஹ்யாசந் ததா அந்யே தத் ப்ரசோதிதா
தைரப் யந்யே அபரே தைச்ச தேரப் யந்தே பரே ச தை –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-18-32-
என்னுடைய மாயை என்னும் மந்திரக் கோல் கொண்டு அஸூர குணம் உள்ளவர்கள் மயக்கப்படுகிறார்கள்
அவர்கள் மூன்று வேதங்கள் கூறும் மார்க்கத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள்
இவர்களும் மற்றவர்களும் பாதிக்கப்பட்டு -இது தொடர்கிறது –
நான் அவர்களை கொடிய அசுரத் தன்மை உள்ள வர்களை கொடிய சம்சாரத்தில் அசுர யோனியில் தள்ளுவேன் –
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-5-3-6-
இப்படிப் பாவப் பற்றுகள் என்னும் சிறு நூல் இழைகளினால் சம்சாரம் என்னும் கயிற்றைப் பெருகச் செய்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர் -அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
த்ரௌபதிக்காக நூல் இழைகளாலான வஸ்த்ரத்தைப் பெருகச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————-
792-இந்திர கர்மா –
இந்த்ரனுக்காக செயல் பட்டவன் –
தமூசு சகலா தேவா பிரணிபாத புரஸ் சரம் ப்ரஸீத நாத தைத்யேப்ய த்ராஹீதி சரணார்த்திந –
இதி ஸரணாகத இந்த்ராத் யர்தே ஏவம் வித வ்யாபாரத்வாத்
இந்த்ர கர்மா
தமூசு சகலா தேவா பிராணிபாத புரஸ் சரம் ப்ரஸீத நாத தைத்யேப்ய த்ராஹீதி சரணார்த்திந –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-17-36-
அனைத்து தேவர்களும் அவன் முன்பாகச் சென்று -பகவானே எங்களுக்குக் கருணை காண்பிக்க வேண்டும்
எங்களை அசுரர்களிடம் இருந்து காக்க வேண்டும்
உன்னைத் சரணம் அடைகிறோம் என்றார்கள் –
தேவர்களுக்காக கள்ள வேடம் புக்கவன்-
இந்த்ரனுக்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
முப்பத்து மூவர் அமரருக்கு முன் சென்று -காலத்தாலும் இடத்தாலும் முன்
சரண் அடைந்த இந்திரன் முதலியோருக்காக இச் செயல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
இந்திரனைப் போன்ற செய்கையை உடையவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –
விருத்திரனை அழித்தது-முதலிய இந்திரனுடைய செயல்களுக்குக் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
793-மஹா கர்மா –
சிறப்பான செயல் உடையவன் -பவித்ராணாம் சாதூநாம் -இத்யாதி –
ஏவம் ப்ரபந்ந பரிபாலநார் தத்வாத் துராசார தண்ட நார்தத் வாச் ச கலு பரம
காருணிகஸ் யைஷ விப்ர லம்ப ஸம்பவ ஏவம் ந்யாய வ்ருதத்வாத்
மஹா கர்மா
கிரித்ரிமங்கள்-செய்து தன்னைச் சரணம் பற்றிய தேவர்களை ரஷிக்க-
மாயர் கொல் -மாயம் அறிய மாட்டேன் -பெரிய திருமொழி -9-2-9-
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -திரு நெடும் -4-
சரண் அடைந்தவர்களைக் காப்பதற்கும் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும் பரம காருணிகரான தாம் இப்படிச்
செய்ததனால் இம் மோஹச் செயல்களும் சிறந்தவைகளாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
ஆகாயம் முதலிய மஹா பூதங்களைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகப் படைப்பு முதலிய பெரிய செயல்களை உடையவர் -ஜீவனாக இல்லாதவர் -விதிக்கு வசம் ஆகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
794-க்ருத கர்மா –
செயல்பட்டவன் -அஹிம்சா பரமோ தர்ம -என்பதை மட்டும் வலி உறுத்தி –
தத் விப்ர லிப்சயா ஸ்வயமப் யநுஷ்டித ததாசார
க்ருத கர்மா
மயில் தோகையால் வழியைப் பெருக்குவது -வேதோகதமான யாகங்களை செய்யக் கூடாது -போல்வன-
கொடிய வினை செய்வேனும் யானே -கொடிய வினை யாவேனும் யானே -5-6-6-
அசுரர்கள் ஏமாறுவதற்காக அவர்களுடைய நாஸ்திக ஆசாரங்களைத் தாமும் அனுஷ்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவராதலின் ஆக வேண்டுவது ஒன்றும் இல்லாதவர் –
தர்மம் என்னும் கர்மத்தைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர் –
பூரணமான செயல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
795-க்ருத ஆகம –
சைவ ஆகமங்களை பொய் நூல் எனபது போலே -மனத்தை கவரும் படி மோகனமான ஆகம நூல்களை வெளியிட்டவன் –
தத் ஸ்தேநே ப்ரணீத புத்த அர்ஹிதாதி ஸாமயிக ஆகம
க்ருதா கம
பேச்சிப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல் — –இனி அறிந்தேன்
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
அந்தச் செயல்களை ஸ்திரப் படுத்துவதற்க்காக புத்தாகமம் ஜைனாகமம் முதலிய சமய நூல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதத்தை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –
வேதங்களைப் படைத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
உத்பவஸ் ஸூந்தரஸ் ஸூந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ் ஸருங்கீ ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-
—————–
796-உத்பவ –
உயர்ந்தவன் -மோஷ மார்க்கத்தை உபதேசிப்பதாக காட்டிக் கொண்டு சம்சாரிகளை விட உயர்ந்த –
முக்த் யுபதேஸ நாடி தகேந பவாத் உத்கத இவ
உத்பவ
மோஷ சாதனத்தை அடைந்து விட்டது போலே தோற்றம் கொடுக்கும் உயர்ந்தவன்-
மோஷத்தை உபதேசம் செய்பவர் போல் காட்டிக் கொண்டதால் உலகைக் கடந்தது போல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்ததான அவதாரங்களைத் தமது விருப்பத்தினால் செய்பவர் –எல்லாவற்றுக்கும் காரணம் ஆதலால் பிறப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
சம்சாரத்தை அல்லது படைப்பைத் தாண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
797-ஸூந்தர
அழகியான் –
தத் த்ருஷ்டி மநோ ஹர
ஸூந்தர
அம் பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -9-2-4-
அழகியான் தானே -நான்முகன் திருவந்தாதி -22-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தம்மான்
பும்ஸாம் திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ரஞ்சனியஸ்ய விக்ரம
தருணவ் ரூப சம்பன்னவ்
அதற்காக கண்ணைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோரைக் காட்டிலும் பேர் அழகு உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
அழகு உள்ளவர் -அழகிய சங்கு உள்ளவர்
ஸூந்தன் என்னும் அசுரனை உபஸூந்தன் என்பனைக் கொண்டு அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
798-ஸூந்த –
உருக்குபபவன்
தேந அஸூர மநாம்ஸி ஸ்ருஷ்ட்ர நத்தீதி
ஸூந்த
ப்ருஷோ தராதி
தன் வடிவு அழகு காட்டி -அன்பு உண்டாகும்படி செய்து
அணி கெழு மா முகிலே ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-
ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட ஆத்மா -வெட்டப்பட நனைக்கப்பட உலர்த்தப்பட்ட மாட்டாத
அவ்வடிவு அழகினால் அசுரர்களுடைய மனங்களை நன்கு மெதுப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஈரம் தயை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –
——————-
799-ரத்ன நாப –
ரத்னம் போலே அழகிய நாபியை உடையவன்
பாண்டித்ய விடம்பந ம்ருஷ்ட உதர வ்யக்த ரம்ய நாபீ
ரத்ந நாப
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -கொப்பூழில் எழு கமலப்பூ அழகர் -சவுந்தர்யா அருவி சுழலே திரு நாபி
புலமையை நடிப்பதற்காக திரண்ட வயிறும் ரத்தினம் போலே அழகிய நாபியும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ரத்னம் போல் அழகிய நாபி உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
ரத்ன நாப -புருஷ ரத்னமான பிரமனை நாபியிலே உடையவர் –
அரத்ன நாப -பகைவரான அசுரர்களை துன்புறுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
800-ஸூ லோசன –
அழகிய பார்வை உடையவன் -சிவந்த உடை அணிந்து கண் அழகைக் காட்டி மாயையால் மனசைக் கலங்கப் பண்ணுபவன்
ததா ஹ்ருத யாளு சோர லோசநா
ஸூ லோசநா –யதா
ததோ திகம்பரோ முண்ட –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-18-2-
புத்தன் திகம்பரனாகவும் மொட்டை அடித்தும்
புநச் ச ரக்தாம்பர த்ருக் மாயா மோஹாஸ் அஜி தேஷண –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-18-16-
புத்தன் மயக்கத்தை யுண்டாக்க வல்ல காவி யுடையிலும்
வெல்ல இயலாத மயக்கத்தை உண்டாக்கக்கூடிய கண்களும் கொண்டு
வெண்ணெய் கோபி மனங்கள் திருட வந்தாயே-இவற்றால் ப்ருந்தாவனத்துக்கும் அடியேனுக்கும் நாதன் ஆனாயே
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -கண்ணாலே பேசி மயக்கி -கண் அழகர்
குழல் அழகர் வாய் அழகர் –கண் அழகர் -நாச் திரு -11-2-
இதயத்தை மயக்கும் அழகிய திருக் கண்கள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழகிய கண் அல்லது ஞானம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –
அழகிய இரு கண்கள் உடையவர் –மேன்மையான பார்வை யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
எட்டாம் நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்
எட்டாம் சதகம் முடிந்தது-
————
801-அர்க்க –
துதிக்கப் படுமவன் –
அஹோ மஹாத்மா அதி தார்மிக இதி தைஸ் ஸ்துத
அர்க
அர்க ஸ்துதவ்
அஹோ மஹாத்மா அதிகார்மிக -மஹாத்மா பர தார்மிஷ்டன் ஆக கொண்டாடப் பட்டு பிரகாசித்தவன்
ஏத்துகின்றோம் நாத்தழும்ப -பெரிய திருமொழி -10-3-1-
நல்ல மேல் மக்கள் ஏத்த நானும் ஏத்தினேன் -4-3-9-
மஹாத்மா என்றும் மிக்க தர்மிஷ்டர் என்றும் அவ்வசுரர்களால் புத்தாவதாரத்தில் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூஜிக்கத் தக்கவர்களான பிரமன் முதலியோரால் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர்
மிகுந்த ஸூக ரூபமான ஸ்வரூபம் உடையவர் -பூஜிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
802-வாஜஸநி –
நிறைய சாப்பிட வேணும் -என்று போதித்தவன் –
நாஸ்திக்ய வாதேந ஐஹிகம் அந்நாதிகம் ஏவ ஸம்பஜ தீதி
வாஜஸநி
வந க்ஷண ஸம்பக் தவ் இன்
ஸர்வ தாதுப்ய -ஷபணக வ்ரதம் ஹீதம் யத் ப்ராத ப்ராதர் தத்யோதநக பலான் க்ருஹ்ணத இதி
கடன் வாங்கியாகிலும் நெய் உண்பாய் -சார்வாகக் கொள்கை பரப்பி
ஷபணக வ்ர்தம் -காலம் தோறும் பல கவளங்கள் தயிர் உண்ணு-உபதேசித்து
பொருள் ஈட்டி வாழ்க்கையை அனுபவிக்க –வாஜ -அன்னம் –சத்
அட்டுகுக் குவிச் சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப் பொட்டத் துற்றியவன் –
பொட்டத் துற்றியவன் விரைவாய உண்டவன்
ஒரு வேளை உண்டால் யோகி–இரு வேளை உண்டால் போகி–மூன்று வேளை உண்டால் ரோகி
அளவுடன் உண்டால் நல்லது அளவில்லாமல் உண்டால் அது நம்மைச் சாப்பிடும் -ஆகவே அன்னம்
நாத்திக வாதம் செய்து இம்மைக்கு உரிய சோறு முதலியவற்றையே பெரிதாக அடைந்து அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அவர்கள் விரதமே காலையில் தயிரும் சோறும் கலந்து உண்பதே
அன்னம் வேண்டியவர்களுக்கு அன்னத்தைக் கொடுப்பவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –
உணவைத் திரட்டுபவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———-
803-சுருங்கீ-
கொம்பை உடையவன் –
ஸ்ருங்க மிவ அஹிம்ஸா விடம்பந பிஞ்சிகா அஸ்ய கரே அஸ்தீதி
ஸ்ருங்கீ -யதா
பர்ஹீ பத்ர தரஸ்-இதி
கையால் சொரிவது அஹிம்சா தர்மத்து சேராது என்று மயில் தோகை கற்றையை கொம்பாக உடையவன்
அஹிம்சையைக் காட்டுவதற்காக மயில் இறகைக் கையில் கொம்பு போல் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பஹி பத்ர தரஸ் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
பிரளயக் கடலில் மீனாக அவதாரம் எடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –
கோவர்த்தன மலைச் சிகரங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——–
804-ஜயந்த –
ஜெயித்தவன் –
ஆஸ்திக்ய வாதிந ஸம்வித் ஆத்மத்வ ப்ரபஞ்ச மித்யாத்வ மித்யா வாதைர் ஜிதவா நிதி
ஜயந்த
ஜி ஐயே
த்ரு பூவ ஹிவஸிபா ஸிஸா தி கண்டி மண்டி ஜிதந்தி ப்யஸ் ச இதி ஐச் ப்ரத்யய
கள்ளப் பேச்சாலும் மாயா வாதத்தினாலும்
உள்ளம் பேதம் செய்திட்டவன் -8-10-4-
மற்ற எல்லாம் பொய் என்று சொல்லும் உங்கள் வாதத்தால் ஞானமும் பொய் என்று சர்வம் சூன்யம்
ஞானமே ஆத்மா என்றும் உலகம் பொய் என்றும் வீண் வாதம் செய்து ஆத்திகர்களை வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பகைவர்களை நன்கு வாழ்பவர் -அல்லது வாழ்வதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –
வெற்றி பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
805-ஸர்வ விஜ் ஜயீ
இனிய சொற்களாலும் உக்தி வாதங்களாலும் நிறைந்த அறிவாளிகளையும் மயங்கச் செய்து -தன் சொற்படி நடக்க செய்தவன் –
கதம் சைதான் ப்ரமாண விருத்தம் ப்ரத்யாய யதி
ஸர்வ விஜ் ஜயீ
ஸர்வஜ்ஞா அபி ஹி ஐய்யா அஸ்யேதி
எப்படிப் பிரமாணங்களுக்கு விரோதமான வாதங்களால் நம்ப வைக்கக் கூடும் என்னில்
எல்லாம் அறிந்தவர்களையும் வெல்லும் திறமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாம் அறிந்தவரும் காமம் முதலிய உட்பகைகளையும் ஹிரண்யாஷன் முதலிய வெளிப்பகைகளையும் வெல்பவருமானவர்-ஸ்ரீ சங்கரர் –
எல்லாம் அறிந்தவராகவும் வெற்றியை அடைபவராகவும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
ஸூவர்ண பிந்து ரஷோப்யஸ் சர்வ வாகீஸ் வரேஸ்வர
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹா நிதி –86-
————
806-ஸூ வர்ண பிந்து –
கேட்பவர் மயங்கும்படி இனிமையாகப் பேசுபவன் –பிந்து-என்னும் தாது மயக்கத்தை குறிக்கும்-அழகிய இனிய சொற்களால் உண்மையை மறைக்கும் படி
ஸர்வ ஸக்தித்வாத் படுதர பதக வர்ணைர் அஸ்தி கதா பலா பாத்
ஸூ வர்ண பிந்து பிதி அப லாபே
இப்படி இனிய பேச்சுக்களால் அசுரர் ஆஸ்திக்யத்தை அழியச் செய்தவன்
எல்லாம் வல்லவராதலின் எழுத்து சொற்சுத்தம் உள்ள பேச்சு ஆகியவற்றினால் நாஸ்திகர்களைக் கண்டிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பொன் போன்ற அவயவங்களை யுடையவர் –
நல்ல அஷரமும் பிந்து என்னும் அநு ஸ்வரமும் கூடிய பிரணவ மந்த்ரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மங்களகரமான புகழ் உள்ள வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
807- அஷோப்ய-
கலக்க முடியாதவன்
கம்பீரா ஸயத்வேந அவிகார்ய
அஷோப்ய
கலக்கமிலா நல் தவ முனிவர்-8-4-10-
வெளிப்படாமல் இருந்தால் வஸ்துவே இல்லை என்று வாதம் கொண்டு கலக்குபவன்-
தீயது -வைரல் போல் வேகமாக எங்கும் பரவும்
எங்கு இருந்து ஸ்ருஷ்டித்தார் எத்தை வைத்து ஸ்ருஷ்ட்டித்தார் -ஸ்ருஷ்டித்து என்ன பயன் அவாப்த ஸமஸ்த காமனுக்கு போன்ற வாதங்கள்
ஆழ்ந்த கருத்துள்ளவர் ஆதலால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
காமம் முதலியவற்றாலும் சப்தாதி விஷயங்களாலும் -அசுரர்களாலும் -கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –
கலக்க முடியாதவர் -பொன் புள்ளிகளை உடைய மாயமானாக வந்த மாரீசனை பயப்படும்படி செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
808-ஸர்வ வாகீஸ்வரேஸ்வர-
சிறந்த பேச்சு திறமை உள்ளவர்கள் எல்லாருக்கும் மேலானவன் –வாசஸ்பதி என்று ப்ருஹஸ்பதியை சொல்வார்கள்
அதோ வாதித்வ வாக்மித்வயோ பாரம் கதஸ்-யதா
உத்தர யுத்தர யுக்தவ் ச வக்தா வாசஸ்பதிர் யதா –அயோத்யா -1-14-
அவன் ப்ருஹஸ்பதி போன்று ஒரு வாதத்தில் இருந்து அடுத்த வாதம் என்று வாதங்களில் வல்லவன்
இவர் வாயில் நல் வேதம் –வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
வாதம் செய்யும் திறமை உள்ளவர்களுக்கு எல்லாம் மேலானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
வாகீச்வரர்களான பிரம்மா முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –
வாக்குக்களுக்கு எல்லாம் ஈச்வரனான ருத்ரனுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
809-மஹா ஹ்ருத
ஆழ்ந்த மடுவாய் இருப்பவன் -அகப்பட்டுக் கொண்டால் தப்ப முடியாதவன்
யத்ர பாப கர்மாணோ அபுநருத்தா நம் நிமஜ்ஜந்தி
ஷிபாம் யஜஸ்ரம் அஸூபாம் ஆஸூரீஷ்வேவ யோநி ஷு -இதி
யத்ர ச புண்ய க்ருதோ காஹம் காஹம் த்ருப்யந்தி ஸ
மஹா ஹ்ருத
ஹ் ராத அவ்யக்தே ஸப்தே
ஹ்ராதத இதி ஹ்ரத ப்ருஷோ தாரதித்வாத் ஹ்ரஸ்வத்வம்
ஷிபாம் யஜஸ்ரம் அசுபாம் ஆஸூரீஷ்வேவ யோநி ஷு –ஸ்ரீ கீதை-16-19-
அவர்களை நான் மிகவும் தாழ்ந்த அஸூர பிறவிகளில் தள்ளுகிறேன்
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம்
தாமரை நீள் வாசத்தடம் போல் வருவான்
நம்பெருமாள் நின்று ஸேவை சாதிக்கும் குளம் -பட்டர்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் -திரு நெடும் தாண்டகம் -19-
தாமரை நீள் வாசத் தடம் போல் ஒரு நாள் காண வாராயே
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீத மிவ ஹ்ரதம் -மஹா பாரதம்
பாவம் செய்தவர்கள் மேற் கிளம்பாமல் அமிழ்ந்து போகும்படியும் புண்யம் செய்தவர்கள் அடிக்கடி ஆழ்ந்தும்
போதும் என்று தோன்றாமல் இருக்கும்படியும் பெருமடுவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யோகிகள் முழுகி இளைப்பாறி சுகமாகத் தங்கி இருக்கும் ஆனந்த வெள்ளம் நிரம்பிய மடுவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
காளிய மர்த்தன காலத்தில் அல்லது சமுத்ரத்தில் சயனித்து இருந்த போது பெரிய நீர் நிலை ஜலம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
810-மஹா கர்த்த
படு குழியாய் இருப்பவன் –
ஏவம் பாஹ்ய குத்ருஷ்டி விநிவிஷ்ட நாஷ்டாத்மநாம் ரவ்காதி கர்தா அஸ்மா திதி
மஹா கர்த -யதா
அஸ்ரத்த தாநா புருஷா தர்மஸ் யாஸ்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு சம்சார வர்த்தமனி –ஸ்ரீ கீதை 9-3-
எதிரிகளை வாட்டும் அர்ஜுனா தர்ம மார்க்கத்தில் பிடிப்பு இல்லாத மனிதர்கள்
என்னை அடையாமல் மரணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்தில் சுழன்றபடி உள்ளனர்
கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே —
பாஹ்ய குத்ருஷ்டிகள்-நரகமான படுகுழியில் விழச் செய்பவன் -அநாஸ்ரிதர்களை நசிக்கச் செய்யவே புத்த அவதாரம்
கோலமில் நரகமும் யானே -5-6-10-
இப்படி நாத்திக வாதங்களால் கெட்டுப் போனவர்களை ரௌரவம் முதலிய நரகக் குழிகளில் தள்ளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கடக்க முடியாத மாயை என்னும் படு குழியை வைத்து இருப்பவர் -அல்லது மஹா ரதர் -ஸ்ரீ சங்கரர் –
சேஷாசலம் முதலிய பெரிய மலைகளில் இருப்பவர் -இதய குஹையில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —
———————————————————————–
4-3-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமங்கள் -811-825-
811-மஹா பூத
மகான்களைத் தன்னவராகக் கொண்டவன் -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்களை அன்பராகக் கொண்டவன்–நம்மாழ்வார் நம்முடையவர் என்று அபிமானித்து இருப்பான் அன்றோ
ஏவம் ஸ்வ ஸாஸந அதி லங்கி நாம் அஸூராணாம் நிக்ராஹ கத்வ முக்தம்
அத தைவீம் சம்பத மபி ஜாதாநாம் ஸ்வ ஸாஸ்த்ர வஸ்யா நாம் அநு க்ராஹ கத்வம்
மஹா பூத
மஹாந்தோ மஹாத் மாநோ அஸ்ய ஸ்வ பூதா இதி -யதா
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த -9-13-மகாத்மாக்கள் மயக்கம் அடையாமல் என்னை அடைகிறார்கள்
மஹாத்மானஸ் து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரித –
பஜந்தே அநந்ய மனசோ ஞாத்வ பூதாதிம் அவ்யயம் –9–13-
குந்தீ புத்திரனே தேவ ஸ்வ பாவத்தை அடைந்து இருப்பவர்களாக மஹாத்மாக்களான ஞானிகளோ என்னில் –
என்னை எல்லாப் பொருள்களுக்கும் ஆதி காரணமாய் அழிவற்றவனாக அறிந்து –
பக்தி தவிர வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்தாதவர்களாய் என்னிடம் பக்தி செலுத்துகிறார்கள்
மகாத்மாக்கள் அநந்ய பக்தியால் என்னை உள்ளபடி அறிந்து என்னையே அடைகிறார்கள் –சாத்ய பக்தர்களை புகழ்கிறான் –
தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞான ஸ்தேநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-
இரண்டாம் சோகம் -அர்ஜுனனுக்கு அசுரனாக எண்ணுகிறாயோ -தேவனாக எண்ணுகிறாயோ
ஸாஸ்த்ர வஸ்யமாக நடப்பதால் தெய்வ சம்பத்
அளியல் நம் பையல் என்ன-(அஸ்ய ஸ்வ பூதா)அம்மாவோ கொடிய வாறே —மம பூதம்
கிடாம்பி ஆச்சான் -திருமால் இரும் சோலை அழகர்-அகதிம் சரணா கதம் ஹரே -ஸ்லோகம் கேட்டு அருளி –
நம் இராமானுசனை அடைந்து வைத்து அகதி என்னப் பெறுவதோ
மன் மநாபவ-ஸ்ரீ கீதை 9-13-
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே போகல் கொடாச் சுடர் -2-3-6-
ப்ராப்யம் ப்ராபகம் -தீர்மானமாகக் கொண்ட -உயிரைச் சோர்ந்தே போகல் -ஸ்வரூப அனுரூபமாகக் கைங்கர்யம் கொண்டு அருளுவான் அன்றோ
மேலானவர்களை தம் அடியாராகக் கொண்டவர் -சாஸ்த்ரங்களை மீறும் அசுரர்களை நிக்ரஹிப்பத்து கூறப் பட்டது –
இனி சாஸ்த்ரங்களை பின்பற்றும் தைவச் செல்வம் உள்ளவர்களை அனுக்ரஹிப்பது கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
முக் காலத்திலும் அளவிட முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆகாயம் முதலிய பூதங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
812-மஹா நிதி
மகான்களை பெரு நிதியாக உடையவன் -ஆதரம் பிரீதி கொண்டவன்-சங்கரர் வைத்த மா நிதி -அவனையே என்பர்
வாஸூ தேவம் ஸர்வம் -மஹாத்மா ஸூ துர்லபம் -தனக்கு ஆத்மாவாகக் கொள்பவன் அன்றோ
தே நிதி வத் அதி ப்ரியா அஸ்யேதி
மஹா நிதி –யதா
யே து தர்ம்யாம்ருதமிதம்-12-20-
யார் ஒருவன் தர்மமே வடிவமான அம்ருதத்தைப் பின்பற்றியபடி உள்ளனரோ
அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள் –
யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தே அதீவ மே ப்ரியா—৷12.20৷৷
பக்தர்கள் மிகவும் இனியவர் -இவர்களோ என்னில் -து –வியாவ்ருத்தி -கீழ் சொன்ன கர்மயோகத்தை விட
யார் எல்லாம் மனசை என்னிடம் லயிக்கும் 2-ஸ்லோகத்தில் கொண்டாடப் பட்ட பக்தி யோக நிஷ்டர்களை —
கர்ம யோகங்களை சொல்லியது -8-பக்தி யோக நிஷ்டர் அசக்தர்களுக்கு -சொல்லி –
உயர்ந்த பக்தி யோக நிஷ்டர் -பக்தியே தர்மம் அமிர்தம் ப்ராப்பயமாகவும் ப்ராபகமாகவும் —
நன்றாக உபாசித்து -என்னிடமே நெஞ்சை செலுத்தி இருப்பவன் மிகவும் பிரியவன் -என்று நிகமிக்கிறான் இதில் –
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ்– என்னைத் தன் பொன்னடிக் கீழ் வியந்து இருத்தும் என்று
மகான்களுக்கு நிதியாய் இருப்பவன் -வைத்த மா நிதியாம் மது சூதனன் -6-8-11-
நிதியினைப் பவளத் தூணை -திருக் குருந்தாண்டகம் -1-
எனக்கு நிதியே பதியே கதியே -பெரிய திருமொழி -7-1-7-
அவ்வடியவர்களை நிதி போலே அன்புடன் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாப் பொருளும் தம்மிடம் தங்கும்படி பெரிய ஆதாரமாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர்-
தம்மை அடைவது நிதியை அடைந்தது போலே மகிழ்ச்சியை உண்டாக்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
குமுத குந்தர குந்த பர்ஜன்ய பாவனோ அநல
அம்ருதாசோ அம்ருத வபுஸ் சர்வஜ்ஞஸ் சர்வதோமுக –87
————–
813-குமுத –
கு-பூ மண்டலத்தின் முத-ஆனந்தமாய் இருப்பவன்
சீரார் வேங்கடமே இத்யாதி– ஸ்ரீ வைகுண்டம் விரக்தாய என்று-ஆராமம் சூழ்ந்த அரங்கம் -உகந்து நித்ய வாஸம் செய்து அருளுகிறார் அன்றோ
கௌ ப்ரக்ருதி மண்டல ஏவ தைஸ் ஸஹ மோதத இதி
குமுத
கும் முக்தி புவம் ததா தீதி வா குந்த குஸூமவத் வைமல் யாத்வா குந்தம்
நாட்டில் பிறந்து படாதன பட்டு -லோகத்தில் பிறந்தும் பரத்வாஜர் அத்ரி வசிஷ்டர் ஜடாயு -அகஸ்த்யர்
ஆஸ்ரமங்களில் ஆனந்தமாக பெருமாள்
வைகுந்தா மணி வண்ணனே என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாயா வானேறே -2-6-1-
ஓர் இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தான் -2-5-3-
மஹான்கள் இங்கே இருக்க -விண்ணுளாரிலும் சீரியராக இருக்க -இருள் தரும் மா ஞாலத்தில் மகிழ்ந்து இருக்கிறானே
வையத்தில் வாழ்ச்சி -இவனைக் காணவே பெரிய பிராட்டியார் வைதிகன் பிள்ளைகளை அங்கு கொண்டு சென்று இவனையும் அங்கே வரவழைத்து
கல்லும் கனை கடலும் வைகுந்தமும் புல் என்று ஒழிந்தனவே
திருவரங்கம் நம்மூர் -இது வன்றோ திருவாலி-ஸ்ரீ வைகுண்ட விரக்தாய
தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும் மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை உணர்த்தும்
வ்யூஹ விபவ பரதவ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-
இவ் வுலகிலேயே அவர்களுடன் சேர்ந்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பூமியின் பாரத்தை ஒழித்து பூமியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகில் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
814-குந்தர –
ஞான ப்ரதன்-அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2–பரதத்வ ஞானம் -மதிநலம் அருளி
பர தத்த்வ ஜ்ஞாநம், ப்ருஷோ த₃ராதி₃꞉, தத்₃ராதி த₃தா₃தீதி
குந்த₃ர꞉ । *
ஆதோ (அ)நு-பஸர்கே
ததாமி புத்தி யோகம் தம் தம் யேநமாம் உபயாந்திதே-ஸ்ரீ கீதை-10-10--அவர்களுக்கு நான் உயர்ந்த ஞானத்தை அளிக்கிறேன்
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே-—৷৷10.10৷৷
என்னிடம் எப்போதும் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறவர்களும்-என்னிடம் ஸ்வயம் ப்ரயோஜன
பக்தி செலுத்துகிறவர்களுமான அவர்களுக்கு என்னை அடைவதற்கு உறுப்பான பர ஞானம் ஆகிற
அந்த புத்தியின் யோகத்தை மிக உகப்புடன் நான் அளிக்கிறேன்
கும் முக்தி புவம் ததா தீதி வா குந்த குஸூமவத் வைமல் யாத்வா குந்தம்-குருக்கத்தி பூ குருந்த குந்தா இடைக் குறைப்பு
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
நண்ணினம் நாராயணமே விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்–10-6-
என் தன் மெய்வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தவன் கையில் கனி என்னவே -ராமுனுச -103-
பரமபதத்தை யளிப்பவர் -குந்தமலர் போல் அழகியவர் -பரதத்வ ஞானம் அளிப்பவர் –பாவங்களைப் பிளப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குருக்கத்தி மலர் போல் சுத்தமான தர்ம பலன்களைக் கொடுப்பவர் -பெறுபவர் என்றுமாம் –
ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைக் குத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –
அடியவர்களால் சமர்ப்பிக்கப்படும் குந்த புஷ்பங்களால் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
815-குந்த –
பாபங்கள் போக்கி படிப் படியாக ஞானம் அளிப்பவன் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி –கு-நிலைகள் இங்கு
தஸா விசேஷம் -உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய -தோழி தாயார் தலைமகள் —ப்ரஞ்ஞா அவஸ்தைகள்
ஸ்வவம் ச
குந்த₃꞉,
ஜித பூர்வ பூர்வ ஜ்ஞாந வைராக்₃ யாதி₃பூ₄மி கேப்₄ யம் உத்தர உத்தராம்
பர ப₄க்தி பர ஜ்ஞாநாதி₃பு₄வம் த₃தா₃தீதி ॥
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா -2-5-1-
குந்த என்று -வெண்மையான குருக்கத்தி மலரைச் சொல்லி -தூய இயல்பு உடையவன்
குந்தம் என்று ஆயுதம் சொல்லி -நின் கையில் வேல் போற்றி
கும் தாதி இதி குந்த -முக்த பூமியை தரும் மோஷ ப்ரதன்-
ஞான பக்தி வைராக்கியம் ஆகிய முதற்படி ஏறியவர்களுக்கு மேற் படிகளாகிய
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளைக் கொடுப்பவர் -சகல பாபங்களையும் பாவத்தைச் சோதிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அதவா -வேறே நிர்வாகம் கீழ் நாமத்துக்கு இதுக்கும்
கும் இதி நிபாதிதா -பாபார்த்தம் நிபாதிதா
அதி ச விதாரிதம் பாபம் சோதயதி -இதி குந்த -சோதித்தல் சுத்தப்படுத்துதல்
குந்தர –குந்-பாபங்களைப் பிளப்பவன்
குந்த -பிளந்த பாபங்களை சோதிப்பவன்
போக்கப்பட்ட பாபங்களை சோதித்து அருளுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் –
தொழுமின் -வழி நின்ற வல் வினை மாள்வித்து-குந்தர- அழிவின்றி ஆக்கம் தருமே-குந்த-
குந்த மலர் போல் அழகிய ஸ்படிகம் போல் தெளிவான அங்கம் உடையவர் -ஸ்ரீ பரசுராமாவதாரத்தில் பூமியை
கச்யபருக்குக் கொடுத்தவர் -பூமியை ஷத்ரியர்கள் இல்லாமல் போகும் படி கண்டித்தவர் – சங்கரர் –
ஒலியைச் செய்பவர் – பூமியை இந்த்ரனுக்குக் கொடுப்பவர் -கெட்டவற்றை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
816-பர்ஜன்ய —
ஆத்யாத்மக -ஆதி பௌதிக -ஆதிதைவிக -தாபத் த்ரயங்கள் போக்கும் மேகமாக இருக்கிறவன் -மனத்தை குளிர வைப்பவன் –
“ அர்ஜ அர்த₃தே ” பர்ஜந்ய ꞉ இத் யந்ய ப்ரத்யய ꞉ பர்ஜா தேஸஶ்ச நிபாத்யதே ।
ஸ்வ தத்த்வ ஜ்ஞாபநேந த்ரி தாப அபஹ꞉
பர்ஜந் ꞉ ||
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா -திரு நெடு -30-
வண்ணா வடிவையும் ஸ்வ பாவத்தையும் சொல்லும்
கரு மா முகில் உருவா புனல் உருவா -பெரிய திரு மொழி -7-9-9-
முகில் வண்ணன் அடி அடைந்து உஜ்ஜீவனம் -கல்கியாம் இன்னும் கார் வண்ணனே
தம்முடைய ஸ்வரூபததைத் தெரிவித்து மூன்று தாபங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பாராசர பட்டர் –
விரும்பியவற்றைப் பொழிபவர் –மேகம் போலே ஆத்யாத்மிக தாப த்ரயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்தவைகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
817-பாவந –
தானாக வந்து -காற்றைப் போல் வேகமாக -பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி
ததா₂ பவத இதி
பாவந꞉ ।
பர் விக₃த் யர்த₂꞉ ॥(தாபத் த்ரயம் போக்கி அருளவே காற்று போல் விரைந்து வந்து அருளுகிறார் )
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
பாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-
காற்றில் கடியனாகி அகம் புக்கு
தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
818-அநில –
தானே கார்யம் செய்பவன் -ஸ்வா பாவிகமாக -தன் பேறாக-இல -நிர்பந்தப்படுத்தலாம் தூண்டலாம் –ப்ரேரய தீதில꞉
தத₃நுக்₃ரஹே ப்ரேரக நிரபேக்ஷத்வாத்
அநில꞉ ।
“இல ப்ரேரணே ”, ப்ரேரய தீதில꞉,
* இகு₃பதா₄த் க ஸோ (அ)ஸ்ய நாஸ்தீதி ।
தத் அப்ய பிரார்த்திதம் த்யாதோ ததாதி மது ஸூதநா
மது ஸூதனனைப் பிரார்த்தித்தவனுக்கு அவன் வேண்டாத செல்வங்களையும் அளிக்கிறான்
வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு உகந்து
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்–10-8-5-
புருஷனையும் புருஷகாரத்தையும் மட்டுமே எதிர்பார்த்து தானாகேவே வேறே தூண்டுதல் இல்லாமல் அருள்பவன்
பக்தர்களை அனுக்ரஹிப்பதற்குத் தம்மைத் தூண்டுபவர் வேண்டாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தமக்குக் கட்டளை இடுபவர் யாரும் இல்லாதவர் -எப்போதும் தூங்காத ஞான ஸ்வரூபி –
பக்தர்களுக்கு அடைவதற்கு எளியவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயு பக்தர்களை ஏற்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
819-அம்ருதாஸ –
அமுதூட்டுபவன் –ஸமஸ்த கல்யாண குண அம்ருத ஆர்ணவம்
தான் ஸ்வ கு₃ணாம்ருநமா தீதி
அம்ருதாஸ ꞉ ॥
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா-
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திரு -86-
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊன் உயிரில் உணர்வினில் நின்றான் -8-8-4-
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -2-5-4-
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:-– -பெரிய நம்பி தனியன்
பக்தர்களுக்குத் தம் குணங்கள் என்னும் அமுதத்தை ஊட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆத்மானந்தம் என்னும் அமுதத்தை உண்பவர் -தேவர்களுக்கு அமுதம் அளித்து தாமும் உண்பவர் –
பலன் அழியாத ஆசை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
முக்தர்களால் விரும்பப் படுபவர் -அம்ருதன் என்ற பெயருடைய வாயு தேவனுக்கு சுகத்தை உண்டாக்கும் பாரதீ தேவியை அளித்தவர்-
அம்ருதாம்ச என்ற பாடத்தில் அழியாத மிக்க புகழ் கொண்ட மத்ஸ்யாதி அவதாரங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
820-அம்ருத வபு –
அமுதம் அன்ன திரு மேனியை யுடையவன் -ஆராவமுதன் -5-8-1-
ரூபமப் அம்ருதம் அஸ்யேதி
அம்ருத வபு꞉ ॥
அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வாவயஸ் ஸூக மாஸீத்-என்று முடித்தார்- எம்பெருமானாரும் ஸ்ரீ வைகுண்ட கத்யம் -6-
எனக்கு ஆராவமுதானாய் -10-10-5-
தமது திரு மேனியும் அமுதம் போன்று இனிமையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழியாத திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
அமுதம் தருவதற்காக நாராயணீ அஜித தன்வந்தரி ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
821- ஸர்வஜ்ஞ-
முற்றும் உணர்ந்தவன் –
தேஷாம் ஸக்ய அஸக்ய ஸாத்ய அஸாத் யாதி கம் அநு ஸந்த₄த்த இதி
ஸர்வஜ்ஞ꞉ ॥
எந்த வழியாகிலும்-அதையே வ்யாஜ்யமாகக் கொண்டு எளிதில் அடையும் படி இருப்பவன்
யேந கேநாபிப் காரேண த்வய வக்தா த்வம் கேவலம் மதீயயை வதயயா -சரணா கதி கத்யம் -17-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக இரு கரையும் அழியப் பெருக்கின அவன் கிருபை ஒன்றாலே விநஷ்டமான
பாபங்களை உடையீராய் –
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் எல்லாம் அறிவீர் –ஸர்வஜ்ஞ–ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்வோமே
பக்தர்களின் சக்தி அசக்தியையும் அவர்களால் சாதிக்கக் கூடியது கூடாததையும் முற்றும் உணர்ந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாம் அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
822-ஸர்வதோமுக-
பக்தர்களுக்கு இன்ன வழியில் தான் அடையலாம் இன்ன வழியில் அடைய முடியாது என்ற நிர்ப்பந்தத்தைப் போக்கி
தேஷாம் அநேநைவ முகேந ஸுக்₃ரஹோ ந அந்யேநேதி நியமம் நிர்தூ₄ய யேந கேநாபி வ்யாஜேந
ஸு ப்ரவேஸத்வாத்
ஸர்வதோ முகே । யதா
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த பரேஷாம் சரணம் கத
எவ்வழியாலும் எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எங்கும் கண்களும் தலைகளும் முகங்களும் உள்ள ஸ்வரூபம் என்று
ஸ்ரீ கீதையில் சொல்லிய படி எங்கும் முகங்களுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லா திசைகளிலும் முகம் உள்ளவர் -எல்லா இடத்திலும் ஜலத்தைப் புகலிடமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
ஸூ லபஸ் ஸூ வ்ரதஸ் சித்தஸ் சத்ரு ஜித் சத்ரு தாபன
ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன -88
————–
823-ஸூலப-
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-பூசும் சாந்து என் நெஞ்சமே —
தத꞉
ஸுலப₄꞉ –
அநர்கோ ₄(அ)பி மூல்யாபா₄ஸேந (மூல்யம் –விலை என்ற பெயராலே பாசாங்கு )ஸ்வீகர்தும் ஸக்ய –யதா ꞉, (அ)ங்க ராக ராே₃-தா₃யிநீ நைக வக்த்ரா
(மூன்று வளைவுகள் கொண்ட கூனி )வஸ்த்ரே ப்ரக்ருஹ்ய கோவிந்தம் மம தேகம் வ்ரஜேதி வை இதி ஸ்வாதீநம் சகார
சிறுது சந்தனம் மட்டுமே கொடுத்து அந்த கோவிந்தனைத் தனது இல்லத்துக்கு வரும்படி செய்தாள்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் -1-10-2-
அணியனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-7-
விலையில்லாத உயர்ந்த பொருளாக இருந்தும் அற்பமான பொருள்களால் எளிதில் அடையக் கூடியவர் –
கூனி சந்தனம் கொடுத்து கண்ணனால் அருளப் பட்டாள்-ஸ்ரீ பராசர பட்டர் –
இலை பூ முதலியவற்றை பக்தியுடன் சமர்ப்பித்ததனால் மட்டுமே எளிதாக அடையப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –
தேவதைகளில் பிரகாசிப்பவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
824-ஸூ வ்ரத-
சோபனமான விரதம் உடையவன் -சங்கல்பம் –
யதா₂கத₂ஞ்சித் ப்ரவிஷ்டாநாம் ஸர்வதா₂ பரிபாலந த்₃ருட₄வ்ரத꞉
ஸுவ்ரத꞉ । யதா₂
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -பெருமாள்-யுத்த
அவன் என்னை ஒரு முறை சரணம் என்று புகுந்தால் போதுமானது
அவன் நண்பனா விரோதியா என்று ஆராய்வது இல்லை
ஓன்று பத்தாக நடத்திக் கொண்டு போகும் -ஸ்ரீ வசன பூஷணம் -81-
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-5-
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-6-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் அன்றோ
தம்மை அடைந்தவர்களை எவ் வகையாலும் காப்பாற்றும் உறுதியான வ்ரதமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்த போஜனம் உள்ளவர் -போஜனத்தில் இருந்து நிவர்த்திப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்மை அடைவதற்கு மங்களமான விரதங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
825-ஸித்த –
சித்த தர்மமாய் உள்ளவன் -அவனே உபாயம் உபேயம்
ஸ்வ தத்த்வஸ் தி₂தி விதா₃ம்
ஸித்₃த₄꞉ –
அயத்ந ஸாத்₄ய ꞉ । ந ஹ்யஸ்ய கோ ப்த்ருத்வம் ஓவ்மாகி₄கம்,
ஸதா₃ ஸ்வத ஏவ ஸர்வகோப்த்ருத்வாத் । இதி ஸாக்ஷாத் ஆவிர்பா₄வா꞉ |
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-8-10-
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-
தமது உண்மைத் தன்மையை அறிந்தவர்க்கு முயற்சி இல்லாமல் கிடைப்பவர் –
ஸ்வா பாவிக சர்வ ரஷகர் அன்றோ இவன் – ஸ்ரீ பராசர பட்டர் –
தமக்குக் காரணம் ஏதுமின்றி சித்தமாகவே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மங்களத்தை அல்லது சாஸ்த்ரத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————-
4-4-அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திரு நாமங்கள் -826-838-(ப்ராதுர் பாவாந்தரம் – ஆவேச அவதாரம் )
826 -சத்ரு ஜித் சத்ரு தாபன –
தனது திவ்ய சக்தியால் பூரிக்கப்பட்டு சத்ருக்களை ஜெயித்தவர் மூலம்-அவர்களை ஆவேசித்து- பகைவர்களை வருத்துபவன் –
முனிவர்களையும் இடுக்கியும் முந்நீர் வண்ணனாகவும் ஸாஸ்த்ர பிரதானம் போல் அசுர நிசனமும் தானாகவும் ஆவேச அவதாரம் மூலமும்
அத₂ வ்யவஹிதா꞉ । தத்ர சத்ருஜித்₃பி₄꞉ ககுத்ஸ்த₂ புரு குரஸ் ஸாதி₃பி₄꞉ ஸ்வ தி₃வ்ய தேஜஸா
(ஆ)ப் யாயி தைரர்த₂பரிபந்தி₂ந ஸ்தா பயதீதி
ஸத்ரு ஜிச் ச₂ த்ருதாபந꞉ ।
சதக்ரதோ வ்ருஷ ரூப தாரிண ககுத்ஸ்த அதிரோஷ சமன்வித பகவத சராசர குரோ அச்யுதஸ்ய தேஜஸா ஆப்யாயிதோ
தேவாஸூர சங்கராமே சமஸ்தாநேவ அஸூராந் நிஜகாந –ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-2-31-
இந்திரன் காளை போன்ற ரூபம் எடுத்த போது அவன் மீது ககுஸ்தன் மிக கோபம் கொண்டவனாக
சராசர நாயகனான அச்யுதனின் தேஜஸ் மூலம் மிகுந்த பயன் அடைந்தவனாக
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் உண்டான அசுரர்களை அழித்தான்
புருகுத்ச ரஸாதல கதச்ச அசவ் பகவத் தேஜஸா ஆப்யாயித வீர்ய சகல கந்தர்வாந் ஜகாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-3-10-
புருகுஸ்தன் ஸர்வேஸ்வரனுடைய தேஜஸ் முழுவதும் நிறைந்தவனாக ரஸாதல லோகம் சென்றான்
அங்கு நாகர்களுக்கு இடையூறு செய்தபடி கந்தர்வர்களை வென்றான்
புரஞ்சயன் ஆவேசிக்கப் பட்டு இந்திரன் எருதுவாக -காகுஸ்தன் -அசுரர்களைக் கொன்றான்
புருகுஸ்தன் அரசன் தேஜஸ் மூலம் பாதாளம் துஷ்ட கந்தர்வர்களை நாசம் செய்தான்-
தம் திவ்ய சக்தியினால் பூரிக்கப்பட்டு விரோதிகளை வென்றவர்களான ககுத்ஸ்தர் புருகுத்சர் முதலியோரைக் கொண்டு
பகைவரை வருத்துபவர் –இதுவரை அவன் நேரில் காக்கும்படி கூறப் பட்டது –
இனி மறைந்து இருந்து காக்கும்படி கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்ருஜித் -தேவ சத்ருக்களான அசுரர்களை வெல்பவர் –
சத்ரு தாபன -சத்ருக்களைத் துன்புறுத்துபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
சத்ருஜித் -சத்ருக்களை வெல்பவர் –சூரியனுக்குள் இருப்பவர் –
சத்ருதாபன -சத்ருக்களை -அசுரர்களை தவிக்கும்படி அழியச் செய்பவர்-இரண்டு திரு நாமங்கள் –
—————-
827-ந்யக்ரோதோதும்பர –
அடியாருக்கு கட்டுப் படுபவன் -அஞ்சலி ஒன்றுக்கே உருகுபவன் –
ந்யக்ரோதோ-தடுத்தும் வளைத்தும் அருள் பிரார்திக்கும் அடியாரால் கட்டுப் படுபவன்-ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தவன் அன்றோ -பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்று தடுத்தும் வளைத்தும் பெற்றாள் அன்றோ
அஞ்சலி ஒன்றுக்கே உருகுபவன்-அழுகையும் அஞ்சு நோக்கும் –தொழுத கையும் -தொல்லை இன்பம் இறுதி கண்டாள் அன்றோ யசோதைப் பிராட்டி
உது₃ம்ப₃ர–மிக உயர்ந்த அம்பரம் பரமாகாசம்-உப லக்ஷணம் -பிராட்டி வர்க்கம் பரிஜன கூட்டம் -இப்படி பரத்வமாக இருந்தாலும் அடியார்கள் அஞ்சலிக்கு கட்டுப்பட்டு உருகி அருள்கிறான்
உது₃ம்ப₃ர-அந்தாமத்து அன்பு செய்து –ந்யக்ரோதோ-என் ஆவி சேர் அம்மான்
உது₃ம்ப₃ர–ஈசன் வானவர்க்கு —ந்யக்ரோதோ-என் கண் பாசம் வைத்த
ந்யக்₃ரோத₄ஶ் ச அஸவ் வுது₃ம் ப₃ரஶ் சேதி
ந்யக்₃ரோதோ து₃ம்ப₃ர꞉ ।
ந்யக்₃பூ₄தைரத₄꞉-
க்ருதாஞ்ஜலி பீ₄ ருத்₄ யதே ஸ்வ ப்ரஸாதௌ₃ந்முக்₂யேந வ்யவஸ்தா₂ப் யத இதி ந்யக்₃ரோத₄꞉–யதா
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதிநீ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -33-105-
இரண்டு கைகளையும் குவித்துச் செய்யும் அஞ்சலி முத்ரையானது பகவானை வெகு விரைவில் குளிரச் செய்யும்
க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பச்சாப் யஹம் ஷமம் அந்தரேன அஞ்சலிம் வக்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
அனுமன் சுக்ரீவனிடம் -நீ ஒரு மிகப்பெரிய அபராதம் செய்து விட்டாய்
இதனால் கோபம் கொண்டுள்ள லஷ்மணனை அஞ்சலி முத்திரையுடன் சென்று
வணங்குவது அல்லாமல் வேறு மார்க்கம் எனக்குப் புலப்பட வில்லை
இதி ச । ஸர்வ கு₃ணை ருத்₃ கதம் அம்ப₃ரம் பரம் தா₄ம தது₃பலக்ஷிதா லக்ஷ்மீ பரிஜநாத₃-
யோ அ)ஸ்யேதி உது₃ம்ப₃ர꞉ ।
ப்ருஷோ த₃ராதி₃த்வாத்₃வர்ண வ்யத் யய । அத்யு ச்ச்₂ரித ஸேவ்யோப் யத் யந்த நீசாநாம ப்நுவர்தநஸாத்₄ இத்யர்த₂꞉ ।
வைஷ்ணவே * ஏவம் மௌநேய கந்த₄ர்வாவதூ₄தை ருரகை₃ரபி । அர்தி₂தோ ப₄க₃வாநாதி₃புரு க்ஷ புருஷோத்தம꞉ ॥ இத்யாதௌ₃ வ்யக்த மேதத்
நாகர்களை பிரார்த்திக்க-கஸ்யபர் பிள்ளைகள் துஷ்ட கந்தர்வர்கள் இடம் காத்து அருளினான் -த்ருஷ்டாந்தம்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
சர்வ குண உத்கதம் அம்பரம் பரம் தாம -பட்டர் பாஷ்யம்
கார் ஏழு கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே -10-8-2-
மேலே தன் அங்கங்கள் போன்ற தேவர்கள் மூலம் பகவான் உலகு ஆள்வதை சொல்லும் திரு நாமங்கள்
கீழே நின்று வணங்குபவர்கள் -தங்களுக்கு அருளும்படி தடுத்து நிருத்தப் படுபவராகவும் மிக உயர்ந்த பரமபதத்தையும் திருமகள்
முதலிய செல்வங்களையும் அடைந்தவராகவும் இருப்பவர் —
மிக உயர்ந்தவராயினும் மிகத் தாழ்ந்தவராலும் அணுகக் கூடியவர் – ஸ்ரீ பராசர பட்டர் –
ந்யக்ரோத -கீழே முளைப்பவர் -பிரபஞ்சத்திற்கு எல்லாம் மேல் இருப்பவர் —
எல்லாப் பிராணிகளையும் கீழ்ப்படுத்து தமது மாயையால் மறைப்பவர் –
உதும்பர -ஆகாயத்திற்கு மேற்பட்டவர் -எல்லா வற்றிற்கும் காரணம் ஆனவர் –
அன்னம் முதலியவற்றால் உலகைப் போஷிப்பவர் – இரண்டு திருநாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
ந்யக்ரோத -எல்லோரையும் காட்டிலும் மேம்பட்டு வளர்பவர் -உதும்பர -ஆகாயத்தில் இருந்து மேலே எழுபவர் –
ஔ தும்பர -என்ற பாடமானால் -ஜீவர்களைத் தன பக்தர்களாக ஏற்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்குத் தலைவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————
828-அஸ்வத்த
தேவர்கள் மூலம் உலகங்களை நியமித்து ஆள்பவன்-நிலை யற்ற தேகம் கொண்ட தேவர்கள்
அஸ்வத்த மரம் -ப்ரஹ்மஸ்ய வனம் -மரப்பிரபு -நாளை இருக்காது எனப்படும் சம்சாரம் மரம் வேர் மேல் -வைராக்யம் கோடாலி மூலம் பேறு கீதை
ஸ்தி₂தமபி ந ஶ்வ-இங்கு நாளை இருப்போம் என்று அறியாத –அநித்யம் இந்த்₃ராதி-தேவர்கள் மூலம் உள்ளே இருந்து நியமனம்
அத₂ ப்ராது₃ர் பா₄வாந்தர ஸஞ்ஜ்ஞ꞉ ஸ்வாங்க ₃பூ₄த தத் தத்₃தே ₃வதா முகேந ஜக₃ந் நியமநம் ।
தத்ர அத்₃ ய ஸ்தி₂தமபி ந ஶ்வ꞉ அநித்யம் இந்த்₃ராதி₃த்யாதி₃பத₃ம் யேஷாம் தேஷு நியாம கதயா திஷ்ட₂தீதி
அஶ்வத்த₂꞉,
ப்ருஷோ த₃ராதி₃꞉ । யதா
மூர்த்திம் ரஜோ மாயம் ப்ராஹ்மிம் ஆஸ்ரித்ய ஸ்ருஜதி பிரஜா ஆஸ்ரித்ய பொவ்ருஷீம் சாத்விகீம் ய ச பாலயந்
காலாக்யாம் தாமஸீம் மூர்த்திம் ஆஸ்ரித்ய க்ரஸதே ஜகத் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்முகனின் சரீரத்தில் இருந்தபடி உழகைப் படைக்கிறான்
ஸத்வ குணம் நிறைந்த விஷ்ணுவின் சரீரத்தில் இருந்தபடி உலக்கைக்கு காக்கிறான்
தாமஸ குணம் உள்ள சிவனின் சரீரத்தில் உள்ளபடி அனைத்தையும் ஸம்ஹாரம் செய்கிறான்-ஜகதாதிஜா விஷ்ணு முன்னே பார்த்தோம்
இருக்கும் இறை இறுத்து உண்ண -நிறுத்தினான் தெய்வங்களாக அத் தைவ நாயகன் தானே -5-2-8-
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பிமீர்காள். கெருட வாகனனும் நிற்க,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே (திருமாலை 10)
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினர்
இன்றுள்ளது -நாளை இல்லை என்னும்படி அநித்யமான பதவிகள் பெற்ற இந்த்ரன் சூர்யன் முதலானவர்களுள் அனுப்ரவேசித்து
எல்லாவற்றையும் நடத்துபவர் –
பிறகு தமக்கு அங்கமாக உள்ள தேவதைகளால் உலகை நிர்வகிப்பது கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
நாளை நில்லாத அநித்ய வஸ்துவாகவும் இருப்பவர் -அரசமரம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
குதிரையைப் போல் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
829-சாணூராந்த்ர நிஷூதந꞉-
இந்த்ரன் விரோதி -சாணூரனைக் கொன்றவன்
கம்சன் மல்லர் பெயரும் சாணூரன்-அந்தர மல்லன் ஒரு வகையான மலரில் ஒருவன் சாணூரன்
மது ஸூதனன் -மதுவைக் கொன்றவன் போல் நிஷூதன் -நன்றாகக் கொன்றவன்
தத்₃விரோதி₄நம் சாணூர நாமா நம் அஸுராந்த்₄ரமலே நிஷுதி₃தவாநிதி
சாணூராந்த்₄ர நிஷுத₃ந꞉ ।
ஸு ஷாமாதி₃த்வாத் ஷத்வம் ॥
கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் -பெரிய திரு மொழி -2-3-1-
அரங்கின் மல்லரைக் கொன்று –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் -8-4-1-
அவர்கள் விரோதியான சாணூரன் என்னும் மல்லனை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சாணூரன் என்னும் அசுரனைக் கொன்றவர் -ஸ்ரீ சங்கரர் –
துர்யோதனன் முதலியவர்களையும் சாணூரனையும் அழித்தவர் -சாணூராந்த நி ஷூதன -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
ஸஹஸ்ரார்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹன
அமூர்த்திர் அநகோ அசிந்த்யோ பயக்ருத் பய நாஸன –89-
———–
830-ஸஹஸ்ரார்சிஸ் –
ஆயிரக் கணக்கான கிரணங்கள் சூர்யனுக்கு கொடுத்து
ரஸ்ய -கதிரவன் -அர்ச்சிஸ் -அர்ச்சிராதி மார்கம் -ரஸ்ய அநு சாரி -கிரணங்கள் மூலம் மேலே சொல்லுகிறான்
இங்கு பாசந ஸோஷந ப்ரதாபந ப்ரகாஸந–பழுக்க பூ காயாக காய் கனியாக-வெப்பம் கொடுக்க -உலர்த்த -எரிக்கவும் -ஒளி கொடுக்கவும்
பாசந ஸோஷந ப்ரதாபந ப்ரகாஸந த₄ர்மாண் யத்₄ யஷேஷோண (அத்யஷர் -தலைவர் )உபகாரீணி ஸஹஸ்ரமர்சிஷ் யநேந
ஸூர்யே நிஷிக்தாநீதி
ஸஹஸ்ரார்சிஸ்꞉ ।
அக்னீஷோமாத்ம சஞ்ஜஸ்ய தேவஸ்ய பரமாத்மந ஸூர்ய சந்த்ர மசவ் வித்தி சாகாரவ் லோசநேஸ்வரவ்–பவ்ஷ்கர ஸம்ஹிதை
ஸூர்யனும் சந்திரனும் அவனது இரண்டு கண்கள் என்று அறிக்கை
இப்படியாக உள்ள அவன் அக்னி ஷோமாத்மா எனப்படுகிறான்-கதிர் மதியம் போல் முகத்தான்
யத் ஆதித்ய கதம் தேஜோ ஜகத் பாசயதேகிலம் யத் சந்திரமசி யச் சாக்நவ் தத் தேஜோ வித்தி மகாமகம் —ஸ்ரீ கீதை -15-12-
ஸூர்யனில் உள்ள எந்த ஒளி அனைத்து உலகையும் பிரகாசிக்கும்படி செய்கிறதோ
எந்த சந்திரனிலும் அக்னியிலும் உள்ளதோ
அது என்னுடைய ஒளி என்று அறிவாயாக –
பாசந ஸோஷந ப்ரதாபந ப்ரகாஸந–பழுக்க உலர்த்த உஷ்ணம் தர ஒளி கொடுக்கவும்
ஒளி மணி வண்ணன் -3-4-7-
உலகில் பொருள்களைப் பரிணாமம் செய்தல் -உலர்த்தல் உஷ்ணத்தையும் ஒளியையும் உண்டு பண்ணுதல்
முதலியவற்றைச் செய்யும் அநேக கிரணங்களை சூர்யனிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அளவற்ற கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆயிரம் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———-
831-ஸப்த ஜிஹ்வா
ஏழு நாக்குகளை உடையவன்
ததா₂(அ)க்₃நி ஜிஹ்வா தே₃வ ஆப் யாயகா ஆஹுதி க்₃ரஹண வஹந அதி₄காரா காலீ கராலீ ப்ரப்₄ருத ꞉
ஸப்தாஸ்யேதி
ஸப்த ஜிஹ்வ꞉ ।
முண்டக உபநிஷத் அக்னி ஏழு நாக்குகள் –காளி -கராளி -மநோஜவை -ஸூலோஹிதை -ஸூதூம்ர வர்ண -ஸ்புலிங்கிநி -விஸ்வரூபி
தத் வக்த்ர தேவதா நாம் ச ஹுதபுக் பரமேஸ்வர மந்த்ர பூதம் யத் ஆதாய ஹுதம் அஜ்ய புரஸ் சரம்
ப்ரஹ்மாண்ட புவனம் சர்வம் சந்தர்பயதி ஸர்வதா–பவ்ஷ்கர ஸம்ஹிதை
அக்னியை முகமாகக் கொண்ட அந்த தேவருகளுக்குள் ஹோம த்ரவ்யங்களை அந்தப் பரமேஸ்வரன் ஏற்கிறான்
மந்த்ரம் மூலம் தூய்மை அடைந்த நெய் முதலான ஹோம த்ரவ்யங்கள் மூலம்
ப்ரஹ்மாண்டமான அனைத்து உலகங்களுக்கும் எப்போதும் திருப்தி உண்டாக்குகிறான் –
அக்னி பகவானின் பத்னி-ஸ்வாஹா தேவி தேவர்களுக்கு கொடுக்க-ஸூதா தேவி பித்ருக்களுக்கு கொடுக்க
தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் ஆனான் -6-9-8-
தேவர்களை மகிழ்விக்கும் ஆஹூதிகளை காளீ கராளீ முதலிய ஏழு நாக்குகளை உடைய
அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஏழு நாக்குகளை உடைய அக்னி ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஏழு நாக்குகள் உள்ள அக்னியின் உள்ளிருப்பவர் -அல்லது ஜடைகளை உடைய
ஏழு ரிஷிகளைத் தமது நாக்காகயுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
832-ஸப்தைதா
ஏழு வகை சமித்துக்களால் ஒளி விடுபவன்-இந்தநம் -எரி பொருள்
இந்த₄நாநி பாக ஹவிஸ் ஸோம ஸம்ஸ்தா₂நி ப்ரத்யேகம் ஸப்த ஸங்க்₂யாநி இஷ்டா பூர்த ரூபாணி
ஸப்த வநஸ் பத்யாஸ் ஸமிதோ ₄ (அ)ஸ்யேதி
ஸப்தைதா₄꞉
அரசு அத்தி பலாச வன்னி விகங்கதம் அசநிஹதம் புஷகரபர்ணம்-ஏழு வகை சமித்துக்கள்–இவை பூக்காது பழுக்குமாம்
பாக யஞ்ஞம்-ஔ பாசனம் -வைஸ்வதேவம் -ஸ்தாலீபாகம் -அஷ்டைக மாச ஸ்ரார்த்தம் -ஈசானபலி -சர்ப்ப பலி –ஏழு வகை பாக யஞ்ஞம்-
அக்னி ஹோத்ரம் தர்ச பூர்ண மாசம் -பிண்ட பித்ரு யஞ்ஞம் -பசு பந்தம் -ஆக்ரயணம் -சாதுர்மாஸ்யம் -சௌத்ராமனி —ஏழு வகை ஹவிர் யஞ்ஞம் என்பர்
அக்நிஷ் டோமம் -அத் யக்நிஷ் டோமம் – சக்தியம் -ஷோடசம் -வாஜபேயம் -அதிராத்ரம் -அபதொர்யாமம் –ஏழு வகை யாகம்-ஸோமம்
இஷ்டா பூர்த ரூபாணி-குளம் வெட்டுதல் மரம் நடுதல் தேவாலயம் கட்டுதல் போல்வன
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -9-4-9-
ஒவ் ஒன்றும் ஏழாக உள்ள விறகு பாகம் ஹவிஸ் சோம சம்ஸ்தை ஆகியவற்றை பிரகாசிக்கச் செய்யும் கிரியைகள்
எல்லாவற்றையும் அடைபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஏழு ஜ்வாலைகள் உடைய அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஏழு ரிஷிகளை வளரச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
833-ஸப்த வாஹந-
ஏழு வாகனங்களை உடையவன்-ஸப்த சந்தஸ் ஸூக்கள் -புரவி ஏழு ஒரு கால் உடைய தேர் -பாதத்துக்கு 6 எழுத்துக்கள் காயத்திரி -தொடங்கி மேல் மேல் 7-8-9-10-11-12-
தத் ப்ரகாஸக காயத்ரியாதி ச₂ந்த₃ஸ்க வைதிக மந்த்ர அபி₄மாநீநி ரவி ரத₂து₄ர்யாணி ஸப்த
வாஹ நாந்யஸ்யேதி
ஸப்த வாஹந꞉ । யதா₂
(ஆ)ம்நாயதே த ஸப்த ப்ராணா ꞉ ப்ரப₄வந்தி,
இத்யாதி₃
* கு₃ஹாஸயா நிஹிதாஸ் ஸப்த, இத்யுக்தம் । ஸப்த வாயுஸ் கந்தா₄ன் வஹதீதி வா।
ஸப்த பிராணா ப்ரபவந்தி –தைத்ரீயம்-
ஏழு பிராணங்களும் அவனிடமிருந்து வருகின்றன-மனஸ் புத்தி பஞ்ச ப்ராணன்கள் ஆக ஏழு
குஹசயா நிஹிதா சப்த
அனைத்து உயிர்களுக்கும் காணப்படும் ஆழமான குகையான அவனிடம் இருந்து ஏழு பிராணங்களும் வருகின்றன
விஸ்வேச பிராணா ஸக்தேர்வை வாய்வாக்யம் அதி தைவதம் ஜகத் சந்தாரகம் சைவ நாநாஸ் கந்தாத்மநா
து வை ஏதே பகவத் ஆராமா திஷ்டன் யஸ்மின் ஜெக த்ரய-ப்வஷ்கர ஸம்ஹிதை
வாயுவானவன் தனது சக்தியை ஸர்வேஸ்வரனிடம் இருந்து பெற்ற பின்னர்
இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள ஏழு பிரதேசங்களிலும் ஸஞ்சரிக்கிறான்
இவை மூன்று லோகங்களில் காணப்படும் ஸர்வேஸ்வரனின் இளைப்பாறும் இடங்களாக உள்ளன –
காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி தேரார் நிறை கதிரோன் மண்டலத்தான் -சிறிய திரு மடல்
காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி த்ருஷ்டுப் ஜகதீ -சந்தஸ் க்கள் உடைய வேத மந்த்ரங்களின்
அதிஷ்டான தேவதைகளே சூர்யனின் ஏழு குதிரைகள் -பரம புருஷனின் வாகனங்கள்
ஆவஹம் ப்ரவஹம் சம்வஹம் உத்வஹம் விவஹம் பரிவஹம் பராவஹம் ஆகிய ஏழு மண்டலங்கள் உடையவன் வாயு
இவனையும் வாகனமாக உடையவன் பகவான் வாயு வாஹன -332-திரு நாமம் முன்பே பார்த்தோம்-
காயத்ரீ முதலிய ஏழு சந்தஸ் ஸூக்களோடு கூடிய வேத மந்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகளான சூர்யனுடைய
ஏழு குதிரைகளை வாகனமாக யுடையவர் -ஏழு வாயுச் கந்தர்களைத் தாங்குபவர் என்றுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஏழு குதிரைகளை உடைய அல்லது சக்த என்னும் ஒரு தேர்க் குதிரையை உடைய சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஏழு குதிரைகளை யுடைய சூரியனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
834-அமூர்த்தி –
இஷ்டா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -ப்ராக்ருத சரீரம் இல்லாதவன்-தேவர்களுக்கு முக்குண மய சரீரம் தானே
அதை ₂வம் அதி₄ஷ்டேயேப்ய ꞉ ஸ்வ பா₄வ விப்ர கர்ஷா।
அமூர்தி:-
ஸ்தூ₂ல பௌ₄திக மூர்தி வ்யாவ்ருத்த இத்யர்த₂꞉ ॥
அமூர்த்தி–பரஞ்சுடர் உடம்பாய் –ஸப்த வாஹந–அழுக்கு படிந்த உடம்பாய்
பஞ்ச பூதமான ரூபத்தைக் காட்டிலும் வேறுபட்ட ரூபமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேஹம் இல்லாதவர் –அசைவனவும் அசையாதவையுமான பொருள்களின் வடிவம் சரீரம் அது இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
ப்ராக்ருதமான மேனி அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
835-அநக –
பாபம் அற்றவன் -பரி சுத்தன் –ஸூத்த ஶத்வ மயம்-
அகர்ம வஶ்யத்வேந தந் மக்₃ந ஜீவ விலக்ஷண ꞉
அநக ₄꞉ ||
முன்பே 148 பார்த்தோம் தோஷங்கள் தீண்டா
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் –கிளரொளி மாயன் கண்ணன் -3-10-10-
தீதில் சீர் திருவேங்கடத்தான் -3-3-5
அமலன் –நிமலன் – விமலன் — நின்மலன் –
கர்மத்திற்கு வசப் படாதவராதலின் கர்ம வசப் பட்ட ஜீவர்களைக் காட்டிலும் விலஷணமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பாவமும் துக்கமும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
பாவம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
836-அசிந்த்ய –
எண்ணத்துக்கு அப்பால் பட்டவன் –
முக்த உப மயா (அ)பி து₃ர் நிரூப꞉
அசிந்த்ய ||
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா கட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ -3-1-2-
எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -3-1-3-
செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் உண்ணும்
சேயன் அணியன் யாவர்க்கும் சிந்தைக்கும் கோசரன் அல்லன் 1-9-6–
அசித் விலக்ஷண அபுருஷ- பத்த முக்த நித்ய விலக்ஷணம் -ஐந்து விரல்கள் -இவன் ஒருவனே புருஷோத்தமன்-கீழ் தேவர்கள் விலஷணன் -இங்கு முக்த விலஷணன்
முக்தர்களை உவமையாகக் கொண்டும் நிரூபிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லா வற்றுக்கும் சாஷி -ஆதலின் எப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -விலஷணர்-
இத்தகையவர் என்று நினைக்க ஒண்ணாதவர் – ஸ்ரீ சங்கரர் –
சிந்தைக்கு எட்டாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
837-பய க்ருத்
ஸ்வ ஸாஸந அதி வர்த்நி யநுவர்திஷு யதா₂ஸங்க்₂ யம்
ப₄ய க்ருத், ப₄ ய நாஸந:
* ப₄யாப₄ய கர꞉ க்ருஷ்ண ꞉, இதி ॥
பய அபயகர கிருஷ்ண–பயத்தை உண்டாக்குபவனும் நீக்குபவனும் கிருஷ்ணனே
தம் கட்டளைகள் ஆகிற சாஸ்த்ரங்களை மீறுபவர்களுக்கு பயம் உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பக்தர்களுக்கு பயத்தைப் போக்குபவர் –தீய வழிகளில் நடப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர் -அபயக்ருத் -என்பது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
838-பய நாசன
பயத்தை உண்டு பண்ணுபவன் -போக்குமவன்
ஸ்வ ஸாஸந அதி வர்த்நி யநுவர்திஷு யதா₂ஸங்க்₂ யம்
ப₄ய க்ருத், ப₄ ய நாஸந:
* ப₄யாப₄ய கர꞉ க்ருஷ்ண ꞉, இதி ॥
பய அபயகர கிருஷ்ண–பயத்தை உண்டாக்குபவனும் நீக்குபவனும் கிருஷ்ணனே
அசுரர்க்கு வெம் கூற்ற பய க்ருத்-எல்லையில் மாயனைக் கண்ணனை தாள் பற்றி யானோர் துக்கம் இலேனே-பய நாசன -3-10-8-
தம் கட்டளைகள் ஆகிற சாஸ்திரங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வர்ணாஸ்ரம தர்மத்தை பின்பற்றுபவர்களுடைய பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அச்சத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————
அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் பரமான திரு நாமங்கள் -839-848-
———-
அணுர் ப்ருஹத் க்ருசஸ் ஸ்தூலோ குண ப்ருத் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்ச வர்த்தன –90 –
839-848-அஷ்ட மஹா ஐஸ்வர்யம் -ஸித்தமான அவன் இடம் இருக்குமே
அவன் அனுக்ரஹத்தால் நாமும் அஷ்ட மஹா ஸித்தி பெறுகிறோம்–திருவடி இடம் கண்டோமே
———
839-அணுர் –
மிகவும் நுண்ணியன் –
கரந்த சில இடம் தொறும் –கரந்து எங்கும் உள்ளான் -அடியேன் உள்ளான் -ஆத்மாவுக்குள்ளும் உள்ளான்
ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் –எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளான்
அத₂அணி மாத்₃ யதி₄ஷ்டா₂நம் அதி ப்ரக்ருஷ்ட மைஶ்வர்யம் । அதி ஸூக்ஷ்ம த₃ ஹராக ஸ அவ்யக்தவ
ஜீவ அநு ப்ரவேஸ ஸமர்த்₂யாத்₃
அணு: |
க₃த்யர்த்தா₂தணதே : அணஶ்ச இத்யுப்ரத் ய ।தத₃ணி மாப்யே தத₃ணு꞉ ।
அணீர் அணீயாந்–அணுவைக் காட்டிலும் சிறியவன்
நிபுணோ அணீயாந் பிசோர்ணாயா–தாமரைத் தண்டை விட நுட்பமாயும் வலுவாயும் உள்ளவன்
ஆவி சேர் உயிரின் உள்ளான் -3-4-10-
சிறியாய் ஒரு பிள்ளை -7-2-4-
அவையுள் தனி முதல் அம்மான்
அணிமா மஹிமா-போன்ற அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஸ்வா பாவிகமாக உள்ளவன் –
மிகவும் நுண்ணிய ஹ்ருதயாகசத்தில் அதிலும் நுண்ணிய ஜீவாத்மாவினுள் பிரவேசித்து இருக்கும் திறமையால்
அணிமா -உடையவர் -பிறகு அணிமை முதலிய வற்றின் அதிஷ்டானங்களான அஷ்டைச்வர்யம் கூறுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –
மிக ஸூஷ்மமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
அணுவான சிறிய வற்றிற்குத் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————-
840-ப்ருஹத்
பெரிதிலும் பெரியவன் –
வ்யாப்த்யா விபுல பரம வ்யோமாதி₃ சுல கீக்ருத்ய அதி மஹஸ மஹிம்நா
ப்₃ருஹத் ।
ச பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தச அங்குலம் (எண்ணிறந்த யோஜனை)-புருஷ ஸூக்தம்
லீலா விபூதி முழுவதும் வியாபித்து பத்து அங்குலமாக நிற்கிறான்
மஹதோ மஹீயாந்-தைத்ரியம் -உயர்ந்தவற்றைக் காட்டிலும் உயர்ந்தவன்
பெரிய வப்பன் –உலகுக்கோர் தனி யப்பன்-8-1-11-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திருமொழி -3-8-1-
மிகப் பெரிய பரமபதத்தையும் உள்ளங்கையில் அடக்குவது போல் தமது ஏக தேசத்தில் அடக்க
வியாபித்து இருக்கும் மஹிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பெரிதாயும் பெருமை உள்ளதையும் இருக்கும் ப்ரஹ்மமாயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
841-க்ருஸ-
மெல்லியவன் –க்ருஸ இளைத்து பிரகரணத்துச் சேர லேசானவன்-லகிமா -யத்ர காமகத வசீ –
அணு அந்தராத்மா-நியமிக்க
பிருஹத் -தாரகத்வம்
க்ருஸ -தடை இன்றி எங்கும் பரவலாமே-யத்ர காம காமோ வஶீ
தூல அநிலாத்₃யதி ஸாயிநா லகி₄ம்ந்நா ஸவத்ரா வ்யாஹத₃கத்வர꞉
க்ருஸ ꞉ । ‘
க்ருஸ தநூ கரணே “।இகு₃பத₄த்வாத் க ।
க்ரஶிமா சாயம் லகி₄மா சேதி ப்ரகரணாத்₃க₃ம்யதே । யதா₂
*அப்ரமேயோ (அ)நியோஜ் யஶ்ச யத்ர காம காமோ வஶீ, இதி ॥
எண்ணில் நுண் பொருள் -10-8-8-
பஞ்சு காற்றினும் லேசானவராக எங்கும் தடை இன்றிச் செல்பவர் ஆதலின் லகிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பார்க்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –
அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
842-ஸ்தூல –
பருத்தவன் –ப்ராப்தி ஐஸ்வர்யம்-கீழ் மஹிமையால் பெரியவன் இங்கு -பெரிய மா திரு மேனி
விபு ஆகாசம் போல் எங்கும் நிறைந்தாலும் ஸூஷ்மம் தானே
இவனோ கண்ணுக்குத் தம்மைக் காட்டி அருளுபவர்
ஸர்வம் அவ்ய வஹிதம் ஏகத்ர ஸ்தி₂த்வா ஸ்பஷ்டும் பூ₄மிஷ்ட₂ஸ்ய ச சந்த்₃ரமஸம் பரிமார்ஷ்டும்
ஸக்தி꞉ ப்ராப்தி꞉, தயா (அ)திப்ரக்ருஷ்டயா விஶிஷ்ட꞉
ஸ்தூ₂ல꞉ ।
* கர்ஜ பிஞ்ஜாதி₃ப்ய ஊரோ லசௌ, இத்யூலச் ।
* த்₄ருவ꞉ ஸமா லப்₄ய திஷ்ட₂தி, இதி ॥(அனைத்தையும் தீண்டி உறுதியாக நிற்கிறவன் )
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -1-3-10-
ஓங்கி உலகளந்த உத்தமன்-
கொள்ளும் கயல் நெடு வெள்ளம் கொண்ட காலம் மஹா வராஹ ஸ்புட பத்ர லோசன–தாள் பரப்பி மண் தாவிய ஈசன் –பிராப்தி
ஓர் இடத்தில் இருந்தே எல்லாப் பொருளையும் நேரில் தொடும் திறமையால் பூமியில் இருந்தே சந்திரனைத் தொடும்
ப்ராப்தி என்னும் சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாமாக தாம் இருப்பதால் ஸ்தூல -பெரிய உருவம் உள்ளவர் -என்று உபசாரமாகக் கூறப் பெறுவார் -ஸ்ரீ சங்கரர் –
மிகப் பெரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
843-குண ப்ருத்-
எல்லா பொருள்களையும்- நெருக்கமாக பிரிக்க ஒண்ணாமல்-தனது குணம் போலே தரிப்பவன்
திரவம் ஒன்றை மற்ற ஓன்று தங்குவது போல் இல்லாமல் மணத்தை பூ -ஒளியை மாணிக்கம் -போல்-குணத்தை குணி தங்குவது போல்
ஸ்வ ஸங்கல்பேந ஸர்வே ஸ்வ கு₃ண பூ₄த ஸர்வாவஸ்த₂ம் குர்வன் பி₃ப₄ர்தீதி
குண ப்₄ருத் ।
இத₃மஸ்ய ப்ரக்ருஷ்ட மீஶித்ருத்வம் ।
ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ் யேஸாந -அனைத்தையும் வஸீ கரித்து அனைத்தையும் ஆள்பவன் –ஈஶித்ருத்வம் ஐஸ்வர்யம்
எப்பொருளும் தானே எல்லையில் சீர் எம்பெருமான் -2-5-4/10-
தம் சங்கல்ப்பத்தினாலே எல்லாப் பொருள்களையும் தமது குணம் போலே தம்மிடம் வைத்துத் தாங்கும்
ஈசித்வம் என்னும் சக்தி உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்குக் காரணங்கள் ஆகிய சத்வ ரஜஸ் தமோ குணங்களை வகிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர் –
அப்ரதாநர்களான-முக்கியம் அல்லாதவர்களான -ஜீவர்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
844-நிர்க் குண
முக்குண கலப்பு அற்றவன்-வசித்வம் ஐஸ்வர்யம்
அதத்₃வஶ்ய தயா (யாருக்கும் வசப்பட்டு இல்லாததால் )தத் ஸம்ஸ்பர்ஸே (அ)ப்யம் ப்ருஷ்ட தத்₃கு₃ண ꞉
நிர் கு₃ண :-
பரம ஸ்வ தந்த்ர꞉।இத₃மஸ்ய பரமம் வஶித்வம்
விஸ்வஸ்ய மிஷதோ வசீ–அனைத்து உலகங்களும் அவனது கட்டுப்பாட்டில் உள்ளன
ஸத்த் வாதயோ ந சந்தீசே யத்ர ச ப்ரக்ருதா குணா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸத்வம் முதலான குணங்கள் ப்ரக்ருதியுடன் ஸம்பந்தம் யுடையவை அல்லாமல்
அவனுடன் தொடர்பு யுடையவை அல்ல –
துக்கமில் சீர் கண்ணன்-
உலகியல் குணங்கள் ஒன்றும் தம்மிடம் ஒட்டாமல் இருக்கும் வசித்வம் என்னும் சக்தியோடு மிகச் சுதந்திரர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உண்மையில் குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –
சத்வம் முதலிய முக்குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தரர்-
———-
845-மஹான் –
மிகச் சிறந்தவன் -ப்ராகம்யம் ஐஸ்வர்யம்-நினைத்த எல்லாம் அயத்னத –செய்பவன்
ப்ராகம்ய மிச்சா₂நபி₄கா₄த꞉, பூ₄மாவுந்மஜ்ஜதி நிமஜ்ஜதி ச யதோ ₂த₃கே , அஸ்ய பரம ப்ரகர்ஷாத்
மஹான் ।
மஹதே ꞉ * ப்ருஷத்₃ப்₃ருஹத்₃ இத்யாதி₃நா பூர்வ வந் நிபாதநம் | யதா₂
ஸம்ப்ரயோஜ்ய வியோஜ்யாயம் காமகாரகர பிரபு யத்யதிச்சேத அயம் ஸுவ்ரி-தத்தத் குர்யாத் அயத்னத —
ஸுரியாகிய ஸர்வேஸ்வரன் தான் விரும்பும்படி நடப்பவன்
அனைத்தையும் தனது விருப்பத்திற்கு ஏற்க இணைக்கும் படியோ பிரிக்கவோ செய்ய வல்லவன்
அவன் இதைச் செய்தாலும் கடினப்படாமல் மிக எளிதாகச் செய்து முடிக்க வல்லவன்
நினைத்தை எல்லாம் தடை இன்றி நடத்த வல்ல சாமர்த்தியம்-
நீரில் போலே நிலத்திலும் முழுகுவது வெளிவருவது முதலிய நினைத்த வெல்லாம் தடையில்லாமல் செய்யும்
ப்ராகாம்யம் என்னும் சக்தியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சப்தாதி குணங்கள் இல்லாமையாலும் மிக ஸூ ஷ்மமாக இருப்பதாலும் நித்யத்வம் -சுத்த சத்வம் -சர்வ கதத்வம் -ஆகிய
மூன்று தர்மங்களிலும் தடையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
846-அத்ருத –
அடக்க முடியாதவன் -நிரங்குச ஸ்வதந்த்ரன்
சா₂யா அநுப்ரவேஸேந பர சித்த வஶீகார꞉ அநு த்₄யாநேந தச் சித்தாதி₄ஷ்டா₂நம், ஸ ஜீவஸ் யோத்தி₂த ஜீவஸ்ய வா
ஸரீரஸ்ய அநு ப்ரவேஸநம், இஷ்டாபூர்தாதி₄ஷ்டா₂நம் சேதி சதுர் வித₄ம் யத்ர காமாவ ஸாயித்வ மாஹு꞉ ।
தாத்₃ருஸ வைஶ்வரூப்ய ப்ரகர்ஷேண க்வசித்₃ த்₄ருதோ
நியமிதோ நேதி
அத்₄ருத꞉ ।
தத் ப்ரகர்ஷஶ்ச ஸர்வதா₃ ஸ்வாச் ச₂ந்த்₃ யம் । அதோ ஹீதி ஹ ஸ்மாஹு: அஸித்₃த₄ஸமாத₄யோ (த்யானம் நிறைவேறாமலே )ஹி வைதிக புத்ராஸ் தத் ஸங்கல்பாத்₃ அபுநராவ்ருத்தி-
பரம பத₃ம் ப்ராபு꞉ ப₄வாவர்தேந புநராவர்தந்தே ச; சித₃ சித் ஸ்வரூப விபர்யாஸ ஸாமர்த்₂யே
(அ)ப்யஸௌ கஸ்யாபி ஹே தோர் (ஏதோ காரணத்தால் )ந விபர்யாஸ தீதி (சித் அசித் ஸ்வரூபங்களை-சாமர்த்தியம் இருந்தாலும் செய்ய மாட்டாதவர் )॥
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-ப்ராப்தி என்னும் ஐஸ்வர்யம்-
இப்படிப்பட்ட விஸ்வரூபமாய் இருக்கும் மேன்மையினால் ஒன்றிலும் கட்டுப் படாதவர் –
பிறருடைய நிழலில் புகுந்து அவர் உள்ளத்தை வசீகரித்தல் -தன்னை தியானிப்பவர் உள்ளத்தில் இருத்தல் –
ஜீவனுடன் கூடினதும் ஜீவன் இல்லாததுமான உடலிலே பிரவேசித்தல் -இஷ்டாபூர்த்தம் என்னும் யாகத்தில் அதிஷ்டித்து இருத்தல் ஆகிய
நான்கு விதமான அவருடைய யாதொன்றிலும் கட்டுப் படாத தன்மை கூறப்படுகிறது —
இதனால் நினைத்த படி எல்லாம் செய்ய வல்ல அவனுடைய பெருமை கூறப்பட்டது –
பரம பதத்துக்குப் போகத் தகுதி இல்லாமல் இருந்தும் வைதிகன் பிள்ளைகளை பரம பதத்துக்குப் போக விட்டது மட்டும் அல்லாமல் –
திரும்பி வருதல் அல்லாத அவ்விடத்தில் இருந்தும் மறுபடியும் அவர்களை இந்த உலகிற்கு வரச் செய்தார் –
சித்தையும் அசித்தையும் அவற்றின் ஸ்வரூபத்தையும் கூட மாறுபடும்படி செய்ய வல்லவராக இருந்தும்
ஏதோ ஒரு காரணத்தால் அப்படி மாறுபடுத்துவது இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றிற்கும் ஆதாரமான பூமி முதலிய வற்றையும் தாங்குவதால் ஒன்றாலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –
எவராலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
847-ஸ்வ த்ருத-
தன்னைத் தானே தாங்குபவன்
இது முதல் பத்த முக்த நித்ய யோகி விலக்ஷணன் என்று காட்டும் திரு நாமங்கள்-ஸ்வ பாவிகம் அந வதிக அதிசய ஈஸீத்ருதம்
மந்த்ர ஒவ்ஷதி தபஸ் ஸமாதி₄ ஸித்₃தா₄த்₃த₄த்₃தைஶ்வர்யாத்₃
ப₄க₃வதைஶ்வர்யம் । வ்யாவர்-தயதி
ஸ்வ த்₄ருத꞉ ।
ஏததை ₃ஶ்வர்ய மஸ்ய ந ஸமாத்₄யாத்₄யுபாதி₄கம், கிம் து ஸ்வ பா₄வதோ மிதி ஸ்வ த்₄ருத꞉ ।
மற்றவர்களை நிறுத்தினான் தெய்வங்களாக அத தெய்வ நாயகன் தானே -5-2-8-
பொருவில் தனி நாயகன் -5-10-8-
தம்மாலேயே தாம் தாங்கப்படும் தன்மை இயற்கையாக அமைந்தவர் –மந்த்ரம் ஓஷதி தவம் சமாதி இவைகள் சித்திக்கப் பெற்ற
பத்த சம்சாரிகளுடைய அணிமை முதலிய அஷ்ட ஐஸ்வர் யங்களைக் காட்டிலும்
இவருடைய ஐஸ்வர் யத்துக்கு உண்டான பெருமை கூறப் படுகிறது –இந்த ஐஸ்வர் யங்கள் இவருக்கு சமாதி முதலிய காரணங்களால் வந்ததல்ல –
ஸ்வா பாவிகமாகவே உள்ளவைகள் ஆகும் – ஸ்ரீ பராசர பட்டர்-
தம்மாலேயே தரிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்மாலேயே தாம் தாங்கப் பெறுபவர் -தனத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
848-ஸ்வாஸ்ய-
ஆசயம் நிலை ஆசனம்
அவனின் மேலான நிலை ஸ்வ சித்தம்
அத₂ முக்த ஐஶ்வர்யாத்–
ஸ்வாஸ்ய ꞉ ।
ஆஸ்யா ஆஸநம்।
* ஆதஶ் ஸோபஸர்கே ₃ இத் யங்।ஸா ஸோப₄நா(அ)ஸ்யேதி ।
முக்தஸ்ய ஹ்யாவிர் பூ₄த ஸ்வாபா₄விக ஐஶ்வர் ரூபமாஸநம்
து₃ஷ்டம் பூர்வம் அவித்₃யா திரோஹிதத்வாத் நைவம் ப₄க₃வத: ஸதா₃ஆவிர்பா₄வாதி₃தி
கூடிற்றதாகில் நல்லுறைப்பு -கூடாமையைக் கூடினால் –அது அதுவே
மிகச் சிறந்த இருப்பை யுடையவர் -முக்தர்களுடைய செல்வம் கூறப்படுகிறது –
அவித்யையினால் சம்சாரத்தில் ஐஸ்வர்யம் மறைக்கப் பட்டு இருக்கும் –
பகவானுடைய ஐஸ்வர்யம் எப்போதும் மறைக்கப் படாமல் உள்ளபடியால் வந்த ஏற்றம் சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
தாமரை மலர் போலே அழகிய திரு முகம் உள்ளவர் –புருஷார்த்தங்களை உபதேசிக்கும் வேதம்
வெளிப்பட்ட திரு முகத்தை யுடையவர் ஸ்ரீ சங்கரர் –
மங்கலமான வேதங்களை வாயில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————–
ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –
787-துராரிஹா -புத்தராக இருந்து தீயவர்களைக் கெடுத்தவர் –
788- சூபாங்க -அசூரர்க்கு மயங்கும் படி அழகிய உருவம் எடுத்தவர் –
789-லோக சாரங்க -அசூர உலகுக்கு தாழ்ந்த உலக இன்பங்களைப் பற்றியே உபதேசித்து பின்பற்றச் செய்பவர் –
790-சூதந்து -அசூரர்களால் தாண்ட முடியாதபடி வலிமையான பேச்சு வலையை உடையவர் –
791-தந்து வர்தன –அசூரர்களுக்கு சம்சாரம் என்னும் கயிற்றை வளர்த்தவர் –
792-இந்த்ரகர்மா -இந்திரனுக்கு தீங்கு செய்யும் அசூரர்களை அழித்தவர் –
793-மஹா கர்மா -அசூரர்களைத் தண்டித்து சாதுக்களைக் காக்கும் சிறந்த செயல்களை உடையவர் –
794- க்ருதகர்மா -அசூரர்களை ஏமாற்ற தானும் அவர்கள் உடைய பொய்யான செயல்களை உடையவர் –
795-க்ருதாகம -தான் செய்ததை மெய்யாக்க ஆகமங்களை ஏற்படுத்தியவர் –
796-உத்பவ -முக்தியைப் பற்றி உபதேசிப்பதால் சம்சாரக் கடலை தாண்டியவர் போல் தோற்றம் அளிப்பவர் –
797-ஸூந்தர-அசூரர்களைக் கவரும் அழகிய வடிவைக் கொண்டவர் –
798-ஸூந்த-தன் அழகால் அசூரர்களின் உள்ளத்தை மேன்மைப் படுத்தியவர் –
799-ரத்ன நாப -தான் மெத்தப் படித்தவன் என்பதைக் காட்டும் வயிற்றையும் ரத்னத்தைப் போன்ற உந்தியையும் உடையவர் –
800-ஸூ லோசன -மயக்கும் கண்களை உடையவர் –
801-அர்க்க -அசூரர்களால் மகாத்மா என்று துதிக்கப் பட்டவன் –
802-வாஜசநி-தன் நாஸ்திக உபதேசங்களால் அசூரர்களை உலக இன்பத்தில் ஈடுபடுத்தி அதிகமாக உண்ண வைத்தவர் –
803- ஸூருங்கி-அஹிம்சை வாதத்தை வலியுறுத்தி கையில் மயில் தோகை கட்டு வைத்து இருப்பவர் –
804-ஜயந்த -அறிவே ஆத்மா வென்னும் -உலகமே பொய் என்றும் -வீண் வாதம் செய்து ஆஸ்திகர்களை ஜெயித்தவர் –
805-சர்வ விஜ்ஜயீ – தன் இனிய வாதங்களால் வேதங்களை நன்கு கற்றவர்களையும் மயக்கி வெற்றி கொண்டவர் –
806-ஸூ வர்ணபிந்து -தன்னுடைய வாதத் திறமையினால் ஆஸ்திக வாதத்தை மறைத்தவர் –
807-அஷோப்ய-ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவரான படியால் யாராலும் கலக்க முடியாதவர் –
808-சர்வ வாகீஸ் வரேஸ்வர-வாதத் திறமை படைத்த அனைவருக்கும் தலைவர் –
809-மஹாஹ்ரத -பாவம் செய்தவர் மூழ்கும் புண்யம் செய்தவர் மறுபடியும் நீராட விரும்பும் ஏரி போன்றவர்
810-மஹாகர்த -தன் உபதேசத்தினால் கெட்டுப் போனவர்களை தள்ளிவிடும் பெறும் குழி போன்றவர் –
——————————————————————————-
சாத்விகர்களுக்கு அருளுபவன் –
811-மஹா பூத -சான்றோர்களால் பெருமை அறிந்து வணங்கப் படுபவர் –
812-மஹா நிதி -பக்தர்களால் செல்வமாகக் கொள்ளப் படுபவர்
813-குமுத -இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் பக்தர்களோடு சேர்ந்து மகிழ்பவர் –
814-குந்தர -பரத்வமான தன்னைப் பற்றிய அறிவை அளிப்பவர் -குருக்கத்தி மலர் போலே தூய்மையானவர் –
815-குந்த -அறிவு பற்றின்மை ஆகிய முன்படிகளில் ஏறியவர்களை பரபக்தி பரஜ்ஞானம் பரம பக்திகள் ஆகிற மேல் படிகளில் ஏற்று பவர் –
816-பர்ஜன்ய -ஆத்யாத்மிகம் ஆதிதைவிதம் ஆதி பௌதிகம் என்னும் மூன்று வெப்பங்களையும் தணிக்கும் மேகம் போன்றவர் –
817-பாவன-பக்தர்கள் இடம் காற்றைப் போல் செல்பவர் –
818-அ நில-பக்தர்களை தானே அருளுபவர் -யாரும் தூண்டத் தேவையில்லாதவர் –
819-அம்ருதாம் ஸூ -தன் குணம் என்னும் அமுதத்தை அடியார்களுக்கு ஊட்டுபவர்
820-அம்ருதவபு -அமுதத்தைப் போன்ற திருமேனி உடையவர் –
821-சர்வஜ்ஞ -தன் பக்தர்களின் திறமை திறமையின்மை சாதிக்க முடிந்தது முடியாதது அனைத்தையும் அறிந்தவர் –
822-சர்வதோமுக-இப்படித் தான் அடைய வேண்டும் என்று இல்லாமல் தன்னை அடைய பல வழிகள் உள்ளவர் –
823-ஸூ லப -விலை மதிப்பற்றவராக இருந்தும் அன்பு எனும் சிறு விலையால் வாங்கப் படுபவர் –
824-ஸூ வ்ரத-எவ்வழியில் தன்னை அடைந்தாலும் அவர்களைக் காக்க உறுதி கொண்டவர்
825-சித்த -வந்தேறியாக அல்லாமல் இயற்கையாகவே காக்கும் தன்மை அமைந்தவர்
826-சத்ருஜித் சத்ருதாபன -சத்ருக்களை ஜெயித்தவர்களில் தம் சக்தியைச் செலுத்தி பகைவர்களுக்கு வெப்பத்தைக் கொடுப்பவர் –
827-ந்யக்ரோதா தும்பர -வைகுந்ததுக்குத் தலைவரான பெருமை படைத்தவர் –கை கூப்புதலாயே எளியவர்க்கும் அருளுபவர்
————————————————–
எண்ணும் எழுத்தும் –
828-அஸ்வத்த -குறைவான காலத்துக்கு வாழும் இந்த்ரன் முதலான தேவர்கள் மூலம் உலகை நடத்துபவர் –
829-சாணூராந்தர நிஷூதன -பகைவரான சாணூரன் என்னும் மல்லரை முடித்தவர்
830-சஹஸ்ராச்சி-தன்னுடைய ஒளியை ஸூ ர்யனுக்குக் கொடுப்பவர் –
831-சப்தஜிஹ்வ-அக்னியாக ஏழு நாக்குகளை உடையவர் –
832-சப்தைதா -ஏழு விதமான விரகுகளால் செய்யப்படும் யாகங்களை ஏற்பவர் –
833-சப்த வாஹன – ஸூர்யனுடைய தேர்க் குதிரைகளான ஏழு சந்தஸ் ஸூக்களை தனக்கு வாகனமாக உடையவர் –
834-அமூர்த்தி -தம் பெருமைகளால் மேல் சொன்ன அனைத்தையும் விட மேம்பட்டவர் –
835-அ நக -கர்மங்கள் என்னும் குற்றம் தீண்டாதபடியால் ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் –
836-அசிந்த்ய -முக்தர்களோடும் ஒப்பிட முடியாமல் உயர்ந்தவர் –
837-பயக்ருத்-தன் ஆணையை மதிக்காதவர்களுக்கு பயமூட்டுபவர் –
838-பய நாசன -ஆணையின் படி நடப்பவர்களுக்கு பயத்தை போக்குமவர் –
———————————————————————-
ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –
839-அணு -மிக நுண்ணியவர் -அணிமா –
840-ப்ருஹத் -மிகப் பெரிதான ஸ்ரீ வைகுந்தத்தை விடப் பெரியவர் -மஹிமா-
841-க்ருஸ-எங்கும் தடையின்றி செல்லும்படி மிக லேசானவர் -லகிமா –
842-ஸ்தூல -ஓர் இடத்திலே இருந்தே எல்லாப் பொருள்களையும் தொடும் அளவிற்குப் பருத்து இருப்பவர் -கரிமா
843-குணப்ருத்-தன் நினைவாலேயே உலகையே தன் பண்பைப் போலே எளிதில் தாங்குபவர் -ஈசித்வம்
844-நிர்குண -சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்கள் அற்றவர் -வசித்வம்
845-மஹான்-நினைத்ததை இடையூடின்றி நடத்த வல்ல பெருமை உடையவர் –ப்ராகாம்யம் –
846-அத்ருத -தடங்கல் இல்லாதவர் -கட்டுப் படாதவர் -ப்ராப்தி –
847-ஸ்வ த்ருத-ஏனையோர் முயற்சி செய்து அடையும் மேல் சொன்ன எட்டு சித்திகளும் இயற்கையிலே அமையப் பெற்றவர் –
848-ஸ்வாஸ்ய-என்று என்றும் சிறந்த நிலையை உடையவர் –
இன்று சிறப்பு அடைந்த முக்தர்களை விட என்றுமே சிறப்பான நிலை உடையவர்
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply