அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –
பாரப்ருத் கதிதோ யோகீ யோகீசஸ் சர்வ காமத
ஆஸ்ரமஸ் ஸ்ரமண ஷாமஸ் ஸூபர்ணோ வாயு வாகன –91-
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதா தம
அபராஜிதஸ் சர்வ சஹோ நியந்தா நியமோ யம –92
சத்வவான் சாத்விகஸ் சத்யஸ் சத்ய தர்ம பராயண
அபிப்ராய ப்ரியார்ஹோ அர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன –93
விஹாயசகதிர் ஜ்யோதிஸ் ஸூ ருசிர் ஹூ தபுக்விபு
ரவிர் விரோச ஸூர்யஸ் சவிதா ரவிலோசன –94
அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95
———————————————————————————
5-1-நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் -849/850-
5-2-யோகியர் தலைவன் -பரமான திரு நாமங்கள் -851-854-
5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமங்கள் -855-861-
5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமங்கள் -862-870-
5.5-சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திரு நாமங்கள் -871-880-
5-6-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமங்கள் -881-891-
அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்
—————–
5-1-நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் -849/850-
—
அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –
—
849-ப்ராக் வம்ஸ-
அநாதி₃முக்தா꞉ ப்ராஞ்ச-நித்யர்களுக்கு வம்ச மூலமாய் உள்ளவன்
அத₂ நித்யாநாம் ஐஶ்வர்யாத் –
ப்ராக்₃வம்ஸ ꞉ ।
* யத்ர பூர்வே , இதி ஶ்ருதி꞉।
அநாதி₃முக்தா꞉ ப்ராஞ்ச꞉, தேஷாம் வம்ஸ ꞉ ஸமுத்₃ப₄வ பூ₄மிர் நித்ய ஸ்வரூப ஆவிர்பா₄வ நிப₃ந்த₄ந பூ₄த இதி ।
ஸர்வம் ஹி ஸர்வதா₂ ததி₃ச்சோ₂பாதி₄க மித் யவிவாத₃꞉ ।
ஸர்வஸ்யாஸ்ய ஸங்க்₃ரஹே(கீழ் சொன்ன நாமங்களை எல்லாம் )
ததா அஷ்ட குண ஐஸ்வர்யம் நாத ஸ்வா பாவிகம் பரம் நிரஸ்தாதிசயம் யஸ்ய ததஸ் தோப்யாமி கிம் த்வஹம் –விஷ்ணு புராணம்
நாதனே எனது ஐஸ்வர்யம் போன்று எட்டு மடங்கு கூடுதலாக உள்ள அதிசயத்தக்கது
தனக்கு மேல் ஏதும் இல்லாததும் ஆகிய பரவஸ்துவை நான் என்ன வென்று ஸ்துதிக்கப் போகிறேன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி-அதி விலக்ஷணன்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -இவன் சங்கல்பத்தால் நித்யர் நித்ய ஐஸ்வர்யம்
அநாதி முக்தர்களான நித்யர்களின் ஆவிர்பாவத்தைத் தம் இச்சையினால் உடையவர் —
பிறகு நித்யர்களுடைய ஐஸ்வர்யம் -எல்லாம் எல்லா விதத்தாலும்
அவனுடைய விருப்பத்தைப் பின் செல்வதாக இருப்பது என்பதில் எந்த விவாதமும் இல்லையே -ஸ்ரீ பராசர பட்டர் –
தம் வம்சமான உலகம் பிற்பட்டதாகாமல் முற்பட்டதாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
அநாதி காலமாக முதுகு எலும்பு போலே ஆதாரமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
850-வம்ஸ வர்த₄ந-
நித்யர்களை வ்ருத்தி பண்ணுமவன்
அத₂ தத்₃விலக்ஷணஸ்ய தத் தத் தாத்₃ரூப்ய ஹேதுத்வாத் தத்ர
வம்ஸ வர்த₄ந꞉ ;
வம்ஸம் அநந்தரோக்தம் ஸ்வ ஸந்தாந பூ₄தம் நித்ய வர்க ₃ஸித்₃த₄வர்க₃ம் வர்த₄யதீதி । யதா₂
ப்ரணத அஸ்மி அநந்த சந்தானம் —
தனது அடியார்கள் சூழ உள்ள அவனை வணங்குகிறேன்–கைங்கர்யம் மேன் மேலும் தந்து போக மகிழ்ச்சியைப் பெருக்கி –
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -9-3-4-
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
ஆனைக்கு குதிரை வைப்பாரைப் போல் -பண்ணி வளர்த்து அருளுபவர்
வம்சம் எனப்படும் நித்ய ஸூரி வர்க்கத்தை -கைங்கர்ய ரசத்தைப் பெருகச் செய்து -வளர்ப்பவர் –
நித்ய ஸூரிகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தின் காரணம் சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
வம்சம் என்னும் பிரபஞ்சத்தை பெருகச் செய்பவர் -அல்லது அழியச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பரீஷித்தைப் பிழைப்பித்ததனால் பாண்டவர்களின் வம்சத்தை வளர்த்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————
5-2-யோகியர் தலைவன் -பரமான திரு நாமங்கள் -851-854-
———
பார ப்ருத் கதிதோ யோகீ யோகீசஸ் சர்வ காமத
ஆஸ்ரமஸ் ஸ்ரமண ஷாமஸ் ஸூபர்ணோ வாயு வாகன –91-
கீதையில் -ஆறாம் அத்யாயம் -யோகம் பற்றி பலவும் அருளிச் செய்கிறான்
—–
851-பார ப்ருத்-
சுமை தாங்குபவன் –அஞ்சதி பரம் வஹதே சுமை யாவது –யோக ஷேமம் வஹாம் யஹம் –
முக்தாநாம் ச ப₃ந்த₄ஸ்த்ரஸந ஸ்வரூப ஆவிர்பா₄வ ஸ்வ ப்ராப்தி பா₄ரம் பி₃ப₄ர்தீதி
பா₄ர ப்₄ருத் ॥(பந்தம் அறுத்து ஸ்வரூப ஆவிர்பாவம் வரவழைத்து அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் அருளி பொறுப்பு எடுத்துக் கொள்வதால் நாம் நிர்ப்பரோ நிர்பயஸ்மி என்று இருக்கலாமே )
வேங்கடத்து உறைவார்க்கு நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -3-3-6-
அஞ்சலி பரம் வஹதே-பூரி ஜகன்னாதன் -இட்ட பூவை சுமக்க முடியாமல்
ஆத்மாக்களுக்கு சம்சார விலங்கை அறுத்து அவர்கள் அவர்கள் தம் ஸ்வரூபம் விளங்கித்
தம்மைச் சேரும் பொறுப்பைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆதி சேஷன் முதலிய உருவங்களினால் உலக பாரத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
பாரமானதான பிரம்மாண்டத்தை ஸ்ரீ கூர்ம ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
852-கதித –
சொல்லப்பட்டவன் -வேதங்களினால்
தத்ர ப்ரமாண யதி
கதி₂த꞉,
உக்த வக்ஷ்ய மாண கு₃ண வத்தயா ஸர்வ ஸாஸ்த்ரேஷு । யதா₂
வேதேஷு ச புராணே ஷு ஸ அங்க உபாங்கே ஷு கீயஸே
அனைத்து வேதங்களும் புராணங்களும் வேதாந்தங்களும் உப அங்கங்களும் போற்றுகின்றன
வேதி ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப ஆதவ் மத்யே ததாந்தே ச விஷ்ணு ஸர்வத்ர கீயதே -ஜிதந்தே
பரத குலத்தில் உத்தமனே -வேதங்கள் இராமாயணம் போன்ற பலவற்றிலும்
தொடக்கம் மத்தி இறுதி என்று பல பகுதிகளிலும் மஹா விஷ்ணு போற்றப்பட்டுள்ளான் –
வசஸாம் வாச்ய முத்தமம் -ஜிதந்தா -1-7-
சொல்லினால் தொடர்ச்சி நீ -சொல்லப்படும் பொருளும் நீ -சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் -சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே -திருச்சந்த -11-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடர் -3-1-10-
சொல்லப்பட்ட சொல்லப் படுகின்ற குணங்கள் நிரம்பியவராக எல்லாச் சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதம் முதலியவற்றில் தாம் ஒருவரே பரம் பொருளாகக் கூறப் பெற்றவர் —
வேதங்கள் அனைத்தாலும் கூறப் படுபவர்-ஸ்ரீ சங்கரர் –
நல்ல ஆகமங்களால் -வேதங்களால் -நிலை நாட்டப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
853-யோகீ-
அகடிதகட நா சாமர்த்தியம் –வெல்லும் விருத்த விபூதியின் -நல் குரவும் செல்வமும்
ஸர்வம் ஏதத் ஸம்பா₄வய தீதி
யோகீ₃;
யுஜ்யதே (அ)நேநேதி யோகோ (அ)க₄டிநதார்த₂-
க₄டநம் மஹா ப்ரபா₄வ꞉, ஸோ (அ)ஸ்யாதி ஸயநே நித்ய யோகேந சேதி । யதா₂
திவ்யம் ததாமிதே சஷூ பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம்-11-8-
எனது உயர்ந்த தெய்வீகமான யோகத்தைக் காண்பாயாக
யோகேஸ்வர கிருஷ்ண 18-78-யோகேஸ்வரனான கிருஷ்ணன்
யோகம் யோகேஸ்வராத் கிருஷ்ணாத் 18-78
யோகேஸ்வரனான கிருஷ்ணனிடம் இருந்து வெளிப்பட்ட யோகத்தை
மஹா யோகேஸ்வரோ ஹரி –11-9– யோகேஸ்வரனாகிய ஸ்ரீ ஹரி
ஆலினிலையாய் அருள் –
மாயா வாமனனே மது சூதா மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே -7-8-1/5-
கூடாதவற்றையும் கூட்டுவதாகிய சிறந்த பெருமை எப்போதும் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யோகம் எனப்படும் தத்வ ஜ்ஞானத்தினாலேயே அடையப் பெறுபவர் –
தம் ஆத்ம ஸ்வரூபத்தை எப்போதும் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
உபாயம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
854-யோகீஸ –
யோகியர் தலைவன் -சனகாதி முனிவர்கள் தலைவன்
ப₃த்₃தே₄ஷ் வபி ஸஹஜ ஸமாதி₄காநாம் ஸநகாதி₃ஷயோகி₃நாமபி து₄ர்ய
யோகீ₃ஸ ꞉ ।
சனந்த நாதீந் அபகல்மஷாந் முனீந் சகார பூயஸ் அதி பவித்ரிதம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பாபங்கள் ஏதும் இல்லாத வர்களாகிய சநந்தாதிகளுக்கு மேலும் தூய்மை அளித்து
அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்தான் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் -8-3-10-
சம்சாரிகளுள் யோகிகளுக்கும் சனகர் முதலிய யோகிகளுக்கும் யோகத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மற்ற யோகிகளைப் போல் இடையூறுகளால் தடைப் படாமையால் யோகிகளுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்-
யோகிகளுக்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் சுகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமங்கள் -855-861-
855-ஸர்வ காமத –
எல்லா விருப்பங்களையும் தருபவன் -ஐஸ்வர்ய காமர்களுக்கும் இவனே பலன் அளிப்பவன்-
ஆயுர் ஆஸ்தாதே –மோக்ஷ விரோதிகளாய் இருந்தாலும் அவாந்தர பலன்களையும் அளிப்பவன்
நாட்டாருக்கு -நீங்காத செல்வம் நிறைந்து -ஓங்கி உலகத்த -தங்களுக்கு பகவத் கைங்கர்யம்
யோக₃ஸ்₂கலி தேப்₄யோ (அ)ப் யணிமாதி₃காம அநந்தராய தயா த₃தா₃தீதி
ஸர்வ காமத₃꞉ । யதா₂
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந் உஷித்வா ஸாஸ்வதீ சமா –ஸ்ரீ கீதை -6-41-
யோகத்தில் இருந்து நழுவியவன் புண்யம் செய்தவர்கள் அடையும் ஸ்வர்க்கத்தில் நீண்ட காலம் வசித்து
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீஸ் ஸமா—
ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே–৷৷6.41৷৷–
யோகத்தைத் தொடங்கியவுடன் அதில் இருந்து நழுவியவன் -யோகத்தின் பெருமையால் –
மிக்க புண்ணியம் செய்தவர் அடையும் நல்ல உலகங்களை அடைந்து -அங்குள்ள போகங்களில்
திருப்தி ஏற்படும் வரையில் நீண்ட காலம் அவ்வுலகங்களில் வாழ்ந்து பரி சுத்தி யுடையவர்களாய்
குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும் சிறந்த வீட்டில் பிறக்கிறான் –
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-
யோகத்தில் தவறியவர்களுக்கும் அணிமா முதலிய பலன்களை மேன்மேல் யோகத்திற்கு இடையூறான
பலன்களாகக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாப் பலன்களையும் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் -மன்மதனை அழிக்க சிவனுக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————
856-ஆஸ்ரம —
ததோ நிவ்ருத்த்ய ஸுபி₄க் ஷ பர வித்₃யேஷு வைஷ்ணவ கேகேஷு தேஷாம் விஶ்ராந்தி ஹேது꞉
ஆஶ்ரம꞉ ।
ஸூஸீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக பிரஷ்ட அபி ஜாயதே –ஸ்ரீ கீதை –6-41-
யோகத்தில் இருந்து நழுவியவன் நீண்ட காலம் ஸ்வர்க்கங்களில் இருந்த பின்னர்
நல்ல ஒழுக்கம் உள்ளவர் வீடுகளில் பிறக்கிறான்
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீஸ் ஸமா—
ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே–৷৷6.41৷৷–
யோகத்தைத் தொடங்கியவுடன் அதில் இருந்து நழுவியவன் -யோகத்தின் பெருமையால் –
மிக்க புண்ணியம் செய்தவர் அடையும் நல்ல உலகங்களை அடைந்து -அங்குள்ள போகங்களில்
திருப்தி ஏற்படும் வரையில் நீண்ட காலம் அவ்வுலகங்களில் வாழ்ந்து பரி சுத்தி யுடையவர்களாய்
குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும் சிறந்த வீட்டில் பிறக்கிறான் –
ஸர்வ காம கீழ் பார்த்தோம் -உலக இன்ப சுக அனுபவத்தில் இருந்து ஒய்வு
அல்பம் அப்ராப்தம் -ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தில் பிறப்பு கொடுத்து அருளுகிறார்
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||–எம்பாரின் தனியன்:-
நமக்கு எல்லாம் நமது ஆச்சார்யர் திருவடிகள் நிழலே ஆஸ்ரயம்–ஆஶ்ரம
இலம் நலன் கழல் அவனடி நிழல் தடம் அன்றியாமே -10-1-3-
யோகப்ரஷ்டன் மறு பிறவி எடுக்கும் போது தூயவர்களும் பகவத் பக்தி உள்ளவருமான ஸ்ரீ வைஷ்ணவ
குடும்பத்தில் வந்து பிறக்கிறான் -ஸ்ரீ கீதை -6-1-
அப்படி திரும்பி வந்தவர்களை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் பிறப்பித்து அவர்கள் சிரமத்தை ஆற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சாரம் என்னும் காட்டில் திரிபவர்களுக்கு ஆஸ்ரமம் போலே இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
துன்பம் அற்றவர்களான முக்தர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
857-ஸ்ரமண-
தொடர்ந்து செய்ய உதவுமவன் –மேலும் கீழ் வாசனையால் விட்ட யோகத்தைத் தொடர வைத்து அருளுகிறார்
ஸமாதி₄ஸேஷோ–யம நியம –பிரத்தியாகாரம் இத்யாதி ஸமாதி வரை அப்யாஸம் தொடங்க அருளுகிறார்
போக ₄ஜந்மப்₄யாம் அநு பக்ஷீண பூர்வ ஸம்ஸ்காரைஸ் தத்ர ஸமாதி₄ஸேஷோ (அ)நாயாஸேந
ஶ்ரம்யதே (அ)ப்₄ யஸ் பதம் இதி
ஶ்ரமண ꞉ ।
* யுவரோ நாகவ் , இத்யந꞉ ।
* தத்ர தம் பு₃த்₃தி₄ ஸம் யோக₃ம் லப₄தே பௌர்வதை ₃ஹிகம், இதி ॥
தத்ர தம் புத்தி ஸம் யோகம் லபதே பௌர்வ தேஹிகம்.–
யததே ச ததோ பூய ஸம் ஸித்தௌ குரு நந்தந—৷৷6.43৷৷
தத்ர -அப் பிறப்பில்
பௌர்வ தேஹிகம்.–முற் பிறப்பில் ஏற்பட்டு இருந்த
தம் புத்தி ஸம் யோகம் -யோக விஷயமான -அந்தப் புத்திச் சேர்க்கையை
லபதே -அடைகிறான்
குரு நந்தன -குரு குலத் தோன்றலே
தத பூய -அதற்குப் பின் மறுபடியும்
ஸம் ஸித்தௌ -யோகம் நன்கு நிறைவேறுவதற்கு
யததே -முயல்கிறான் –
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-
முற் பிறவியில் தொட்ட யோகத்தை மறு பிறவியில் எளிதாக அப்யசிக்கும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
விவேகம் இல்லாதவர்களை வருத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
சன்யாசிகளை தமக்கு தாசர்களாக உடையவர் -விரதங்களால் சுகம் கிட்டும்படி செய்பவர் —
விரோதிகளுக்கு சிரமத்தை உண்டாக்கி அடியவர்களுக்கு சிரமத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
858-ஷாம
திறமை உள்ளவனாக செய்பவன்-து₃ர்க₃ம் தரிதும்–தடங்கல்களைத் தாண்ட அபிமுக்யம் ஒன்றே கொண்டு அருளுகிறான்
ஏவம் ஸ்வ யோக ₃அபி₄முக்₂ ய மாத்ரேண தே யோக ₃ப்₄ரஷ்ட அபி து₃ர்க₃ம் தரிதும்
க்ஷமந்தே (அ)ஸ்மாதி₃தி
க்ஷாம꞉ ।
க ₄ஞ் ।
ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி
நன்மையைச் செய்தவன் எப்போதும் துக்கத்தை அடைவது இல்லை
ஸ்ரீ பகவாநுவாச-
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ் தஸ்ய வித்யதே.–
நஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷
ஸ்ரீ பகவான் சொன்னார் -குந்தீ புத்திரனே -யோகத்தைத் தொடங்கி அதில் நின்றும் நழுவிய மனிதனுக்கு
பிராகிருத போகங்களிலோ -மோக்ஷ அனுபவத்திலோ -விரும்பியது கிடைக்காமல் இருத்தல் –
விரும்பாததை அடைதல் ஆகிய -விநாசம் ஒரு போதும் ஏற்படாது -அப்படி நல்ல கார்யமான
ஆத்ம சாஷாத்காரத்தைச் செய்யும் ஒருவன் விரும்பாத கதியை அடைய மாட்டான் அன்றோ –
புணைவனாம் பிறவிக்கடலை நீந்துவார்க்கே-2-8-1-
யோகத்தில் தவறியவர்களும் தம்மை தியானம் செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் முக்தராகும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா பிரஜைகளையும் சம்ஹார காலத்தில் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
எதையும் தாங்கும் சக்திக்கு ஆதாரமாக இருப்பவர் -பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
859-ஸூ பர்ண-
யோக பலனாக சம்சாரத்தைத் தாண்ட-தமஸ꞉ பாரம் நயதீதி- உதவுமவன் –ஸூ பர்ண -கருடன் -அழகிய சிறகுகளை உடையவன் -சம்சாரம் கரை தாண்ட-நாவாய் முகுந்தன்
ஏவம் ப்ரத் யாபந்ந ஸமாதீ₄ன் ஸமாதி₄விபாக த்₃வாரா தமஸ꞉ பாரம் நயதீதி
ஸுபர்ண ꞉
ஸ்வ பாரம் பகவான் நயதி–மௌல ஸம்ஹிதை
அவர்களை பகவான் கரை சேர்க்கிறான்
அநேக ஜென்ம சம்சித்த ததோ யாதி பராம் கதிம் –ஸ்ரீ கீதை -6-45-
பல ஜென்மங்களில் உண்டான மநோ வலிமை காரணமாக யோகி ஒருவன் இந்தப் பிறவியில் உயர்ந்த கதியை அடைகிறான்
ப்ரயத்நாத் யதமாநஸ் து யோகீ ஸம் ஸூத்த கில்பிஷ–
அநேக ஜந்ம ஸம் ஸித்தஸ் ததோ யாதி பராம் கதிம்—৷৷6.45৷৷
ஆகையால் பாபம் நீங்கப் பெற்றவனாய் -பல ஜென்மங்களில் சம்பாதிக்கப்பட்ட புண்ய மிகுதியால்
யோகத்தை நன்கு தலைக்கட்டத் தகுதி பெற்றவனாய் -இந்திரிய நியமனம் முதலியவற்றில் மிக முயன்று
யோகத்தில் முயற்சி செய்கிறவனான யோக அப்யாச நிஷ்டன் முன் பிறவியில் நழுவிய போதிலும்
பிறிது ஒரு பிறப்பில் மேலான கதியை -ஆத்ம ப்ராப்தியை அடையவே செய்கிறான்
தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6-
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-
சமாதியை அனுஷ்டிப்பவர்களை சம்சாரக் கடலின் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சார -மறை ரூபமான தாம் வேதங்களாகிய அழகிய இலைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
அழகிய ஆலிலையைப் படுக்கையாக உடையவர் -பறவை உருவத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
860-வாயு வாகன –
கருட வாகன ரூடனாக அருளி –பதக ₃பதிநா வாஹயதி-மேல் எழச் செய்பவன்-புள்ளரையன் அன்றோ
தாம்ஶ் ச ப்ரப₃ல ஹேதுபி₄꞉ பதிதாநபி வாயுநா — அநுபம க₃த்வரேண பதக ₃பதிநா வாஹயதி
உத்தாரயதீதி
வாயு வாஹந꞉ । யதா₂ பரமர்ஷி ஸாபாத்₃அத₄ஶ்சரம் பரம பா₄க₃வதம் வஸும்
க₃ருத்மதா புநர் உபரிசரீ சகார ।
அதவா பக்ஷி ராட் தூர்ணம் ஆகத்ய சுவாமிநஸ் பதம் நேஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
பறவைகள் அரசனாகிய கருடன் வேகமாக வந்து தன்னுடைய ஸ்வாமியின் இருப்பிடத்துக்குச் செல்கிறான்
வாயு -கருடனை சொல்கிறது -கருட வாகனன் புள்ளை ஊர்வான் -முன்பே 332 பார்த்தோம்
பொரு சிறைப்புள் உகந்து ஏறும்
அவர்கள் கீழே விழுந்தாலும் வாயு வேகம் உள்ள கருடனைக் கொண்டு அவர்களைத் தூக்கி விடுபவர் –
பரம பாகவதரான வஸூ என்பவர் (உபரி சரவசருடைய இயல் பெயர் )-பரம ரிஷி சாபத்தால் தாழ்ந்து போக நேரிட கருடனைக் கொண்டு மீண்டும்
அவர் உயர்ந்த நிலையை அடையும்படி செய்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –
காற்றும் தம்மிடம் அச்சத்தினால் அனைத்து உயிர்களையும் தாங்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயுவைத் தூண்டுபவர் -மேலானவர் -ஜீவனின் உடலை விட்டுப் போகும் போது வாயுவை வாகனமாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———-
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதா தம
அபராஜிதஸ் சர்வ சஹோ நியந்தா நியமோ யம –92
————-
861-தநுர் தர –
சாரங்கபாணி-திவ்ய தனுஸ்
ஈத்₃ருக்₃ உபாஸகா நாம் கண்டக உத்₃த₄ரணாய ஸ்வயமேவ
த₄நுர் தர ।
ஏதத் தர்த்தம் ஹி லோகே அஸ்மின் க்ஷத்ரியைர் தார்யதே தநு
இந்தக் காரணத்தினால் தான் இந்த உலகில் உள்ள ஷத்ரியர்கள் தங்களுடைய கையில் வில்லை வைத்துள்ளார்கள்
தார்யதே க்ஷத்ரியைர் சாபோ நார்த்த சப் தோ பவேதிதி
உலகில் துன்பம் உண்டாகாமல் இருக்கவே ஷத்ரியர்கள் தங்கள் கையில் வில்லை வைத்துள்ளனர்
காய்ச்சின வில் தண்டேந்தி-தநுர் தர- எம்மிடர் கடிவான்-உபாஸகா நாம் கண்டக உத்₃த₄ரணாய -9-2-6-
நான்கு தோளன் குனி சாரங்கன் -8-8-1-
தம்மை உபாசிப்பவர்களுக்கு இடையூறுகளை ஒழிப்பதற்காக எப்போதும் வில்லைத் தாமே உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் வில்லை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
வில்லைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————
5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமங்கள் -862-870-
862-தநுர் வேத –
வில் வித்தையை கற்பிப்பவன்
அந்யே (அ)பி ஸுர நரேந்த்₃ராத₃யோ த₄நுராதி₃கம் தத் தச் சா₂ஸ்த்ர ப்ரவர்தகே (அ)ஸ்மின் விந்த₃ந்தீதி
த₄நுர் வேத₃꞉ ॥
இந்திரன் அரசர் முதலியவர்களும் வில் வித்தை முதலியவற்றைத் தம்மிடம் உபதேசம் பெறும்படி
எல்லாச் சாஸ்திரங்களையும் வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அந்த ஸ்ரீ ராமபிரானாகவே தனுர் வேதத்தை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அகஸ்த்யர் முனிவர் மூலம் இந்திரனுடைய வில்லை ஸ்ரீ ராமாவதாரத்தில் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————
863-தண்ட-
துஷ்டர்களைத் தண்டிப்பவன்
வேத₃த₄ர்ம ஷேமங்கர ந்ருபதி முகே₂ந த₃ண்ட₃நீத்யா து₃ஷ்டான் தா₃ம்யதீதி
த₃ண்ட₃꞉ ।
ஞமந்தாட்₃டு₃꞉ ||
அசுரர் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா -6-10-4-
வாலி வதம் -பெருமாள் -தண்டனை ஸாஸ்த்ரம் படி -தண்டிக்காமல் இருந்தால் உனது பாபம் போகாது எனக்கும் பாபம் வரும்
திருவுடை மன்னரைக் காணில் திருமால் –
அரசர்களைக் கொண்டு தண்டனையைச் செய்து துஷ்டர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
துஷ்டர்களை அடக்கும் தண்டமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
தண்ட -அசுரர்களை தண்டிப்பவர் -அதண்ட -பிறரால் சிஷிக்கப் பெறாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
864-தமயிதா-
அடக்குபவன் -தானே நேராக அவதரித்து –
கீழ் அரசர் மூலம் தண்ட –தானே நேராக-தமயிதா-ஸாஸ்த்ர ப்ரதமமும் முனிவர்களை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் போல் இங்கும்
ஸ்ருஷ்டியிலும் சமஷ்டி வியஷ்ட்டி ஸ்ருஷ்டிகள் உண்டே
ஸ்வ யஞ்ச ராவணாதீ₃ம் ஸ்தாச்சீ₂ல்யேந
த₃மயிதா ॥
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டவன் -7-5-2-
சசால ஸாபஞ்ச முமோஷ வீர -வெறும் கையாக இருந்தால் ராவணன் -வீரன் வால்மீகி கொண்டாடுகிறான் –
அஞ்சலி அவனை உருக்குமே -வெறும்கை வீரனாகலாம்
தாமே நேராகவும் ராவணன் போன்றவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வைவஸ்வத மனு முதலிய அரசர்களாக இருந்து பிரஜைகளை அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அசுரர்களை அடக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
865-அதம –
யாராலும் அடக்கப்படாதவன் –
ந ச அஸ்ய அந்ய ꞉ கஶ்சி தே₃வமிதி
அத₃ம꞉ ।ய தா₂
பஸ்ம குர்யாத் ஜகத் சர்வம் மனசைவ ஜனார்த்தன ந து க்ருத்ஸ்னம் ஜகத் சக்ரம் கிஞ்சித் கர்த்தும் ஜனார்த்தனே–உத்யோக பர்வம்
தன்னுடைய ஸங்கல்பத்தினால் மட்டுமே ஜனார்த்தனாகிய ஸர்வேஸ்வரன் இந்த உலகை சாம்பலாக்க இயலும்
ஆனால் அனைத்து பிரபஞ்சங்களும் ஓன்று திரண்டாலும் அவனுக்கு எந்தவித தீங்கையும் உண்டாக்க இயலாது –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் யக்ரென தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோட
அப்ரமேய துரா சரஸ்த -தாரை
விஷ்வக் சேனர் பிரம்பின் -திருவடி சிறகின் கீழ் அனந்தன் மடியில் -தானே அடங்கி இருப்பான்
தாம் யாராலும் அடக்கப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தண்டத்தினால் உண்டாகும் அடக்கமாகவும் இருப்பவர் -தம என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –
தானம் செய்பவருக்கு செல்வத்தை அளிப்பவர் -ஆத்ம -என்ற பாடம் —
அதம என்ற பாடத்தில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் புலன் அடக்காதவர் போலே தோற்றம் அளித்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————
866-அபராஜித –
வெல்ல முடியாதவன் -முன்பே 721-பார்த்தோம்
ஏவம் ஸர்வதோ முகே ₂ ப்ரஸா ஸநே க்வசித் கதா₃சித் குதஶ்சித₃ப்ரதிஹத꞉
அபராஜித꞉(யாராலும் எப்படியானாலும் எங்குமே எப்போதும் வெல்ல முடியாதவன்-ஆற்றல் மிக்கான் அரியே )
தாஸார்ஹம் அபராஜிதம்–நம் அனைவராலும் சரணம் அடையத் தக்கவனும் வெல்ல முடியாதவனும்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்த்தன ஹரி த்ரிலோக்ய நாதாசந் கிம் நு யஸ்ய ந நிர்ஜிதம்-மஹா பாரதம்
தன்னுடைய மந்திரியாகவும் பாதுகாவலனாகவும் நண்பனாகவும் ஸ்ரீ ஹரியைக்
கொண்டுள்ள ஒருவனுக்கு இந்த உலகில் எதனைத் தான் வெல்ல இயலாது
எங்கும் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் தம் கட்டளை எக் காலத்திலும் எங்கும் எதனாலும் தடை படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பகைவர்களால் வெல்லப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்மைக் காட்டிலும் மேம்பட்டவர் இல்லாதவர் -எவராலும் தோற்கடிக்கப் படாதவர் –
மற்றவர்களால் காக்கப் படாதவர் -ஒளியுடன் திகழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
867-ஸர்வ ஸஹ
யாரையும் தாங்குபவன்
ஸ்வ ஸாஸநேந ஸர்வம் தே₃வதாந்தரமபி மந்த அதி₄காரி ணாம் ஆராத்₄ யதயா ஸஹதே – விப₄ர்தீதி
ஸர்வ ஸஹ꞉ ॥
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகும் தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-
ஏறாளும் இறையோனும் -திருமேனியிலும் தாங்கி அருளுகிறார்
பேச நின்ற சிவனுக்கும் -முட்டுக்கொடுத்து தாங்கி -தேவதைகளையும் ஆராதிக்க மந்த மதி கொண்ட மக்களையும் ஏற்படுத்தி தாங்கி அருளுகிறார்
குறைந்த அறிவு உள்ளவர்கள் ஆராதிக்கும் மற்ற தேவதைகளையும் தாமே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாக் காரியங்களிலும் சமர்த்தர் -எல்லாப் பகைவர்களையும் தாங்கும் திறமை உள்ளவர் –
பூமி முதலிய உருவங்களினால் எல்லாவற்றையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
868-நியந்தா –
நியமித்து நடத்துமவன்
தத்ர தத் தத்₃ருசீன் ப்ரரோசயந் நியச்ச₂தீதி
நியந்தா ।
யோ யோ யாம் யாம் தநும் பக்தா ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி –ஸ்ரீ கீதை -7-21-
எந்த எந்த தேவதைகளை யார் யார் ஆராதிக்கிறார்களோ அந்த அந்த தேவதைகள் விஷயத்தில் அவரவர்களுக்கு நான் ஈடுபாட்டை அளிக்கிறேன்
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யா அர்ச்சிதும் இச்ச₂தி ।–
தஸ்ய தஸ்ய அசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம் யஹம் ॥—21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்
அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவர் இறையவர் என அடியடைவர்கள்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே -1-1-5-
பரன் திறன் அன்று பல் உலகீர் தெய்வம் இல்லையே
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி–திருவாசிராயம் -3–நியந்த்ருத்வம் -ஆணை
பல தேவதைகளுடம் பக்தி வைத்து இருக்கும் பலரை அவரவர் விருப்பப்படி தாமே நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோரையும் தத்தம் கார்யங்களில் நிலை நிறுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
கட்டளையிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் —
—————-
869-நியம –
நிச்சயிப்பவன் -தேவர்கள் மூலம் பலன்களை அளிப்பவன்
தத் ப₂லம் ச ஜாத் யாயுர் போகாதி கம் நியம்யதே (அ)ஸ்மிந்நிதி
நியம꞉ ।
* யம꞉ ஸமுபநிவிஷு ச, இத்யப் । யதா₂
லபதே ச ததஸ் காமான் மயைவ விஹிதான் ஹி தான் ஸ்ரீ கீதை -7-22-
அந்த அந்த தேவதைகள் இடம் இருந்து என்னால் அவர்களுக்கு அளிக்கப் பட்டவற்றைப் பெறுகிறார்கள்
ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்ய ஆராதந மீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மாயக் கடவுள் -திருவாசிரியம் -4-
அவர்களுக்குப் பலனாக உயர் குலம் ஆயுள் போகம் முதலியவற்றை அத் தேவதைகள் மூலமாகவே வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அநியம-என்ற பாடம் -தம்மை அடக்குபவர் -யாரும் இல்லாதவர் –
யம நியம -என்று கொண்டு யோகத்திற்கு அங்கங்களான யம நியமங்களால் அடையப்படுபவர் -ஸ்ரீ சங்கரர் –
நன்றாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
870-யம –
நியமித்து நடத்துமவன்
தத் தத் ப₂ல நியாமகான் யமாதீ₃நபி யச்ச₂தீதி
யம꞉ । யதா
பிரபவதி சம்ய மநே மாம் அபி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-
என்னை அடக்கும் திறன் மஹா விஷ்ணுவுக்கு உண்டு -யமனின் கூற்று
அஜாமளன் உபாக்யானம் –வைஷ்ணவர் அல்லாதாருக்கு நான் பிரபு மது ஸூதனனே எனக்கும் பிரபு -யமன்
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன்
மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -4-10-8-
விரும்பிய வரங்களைக் கொடுக்கும் தேவதைகளையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மரணம் இல்லாதவர் -அயம-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –
இதுவரை ரஜோ தமஸ் குண தேவதைகள் நியமனம்
மேல் ஸத்வ குண வஸ்யருக்கும் இவனே நியமனம்
———————————————————————–
5.5-ஸத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திரு நாமங்கள் -871-880-
———
ஸத்வவான் சாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண
அபிப்ராய ப்ரியார்ஹோ அர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன –93
——–
871-ஸத்வவான் –
ஸூத்த ஸத்வ மயமாய் இருப்பவன் –ஸாத்விகர் தலைவன்
ஜாயமான புருஷ –கருவிலே திருவுடையார் -மது ஸூ தனன் கடாக்ஷத்தால் ஸாத்விகனாகி முமுஷுவாயும் ஆவான்
அத₂ ஸத்த்வஸ்ய । பரம ப்ரகாஸ லாக ₄வ ஸுவ ஸம்பதா₃ மோஷ மூலம் ஸத்த்வம்
ஸாக்ஷாத் அதி₄ஷ்டே ₂ யமஸ்யேதி
ஸத்த்வவான் । யதா₂
மஹாந் ப்ரபூர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-7-13-
மூன்று குணங்களில் உயர்ந்த சத்வத்தை வழி நடத்துகிறான்
சத்வேந முச்யதே ஐந்து சத்வம் நாராயணாத் மகம் ரஜஸா சத்வ யுக்தேந பவேத் ஸ்ரீ மான் யசோதிக–ஸ்ரீ வராஹ புராணம்
ஒரு ஜீவன் பந்தங்களில் இருந்து ஸத்வம் காரணமாகவே விடுதலை பெறுகிறது
அந்த ஸத்வம் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஆவான்
ஒருவனுக்கு ஸத்வத்துடன் ரஜஸ்ஸும் சேரும் போது அவன் புகழ் மற்றும் செல்வம் உள்ளவன் ஆகிறான்
தஜ்வ பைதாமஹம் வ்ருத்தம் சர்வ சாஸ்த்ரேஷு பட்யதே யத் ரஜஸ் தமஸோ பேத ஸோஹம் நாஸ்த் யத்ர சம்சய
அனைத்து ஸாஸ்த்ரங்களிலும் நான்முகன் ஸ்வ பாவம் என்பது ரஜஸ் மற்றும் தமஸ் கலந்ததுவாகவே உள்ளது எனப்படுகிறதுன்
அந்த நான்முகன் என்னாலேயே நியமிக்கப் படுகிறான் -இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் –வைகுந்தம் கொடுக்கும் பிரான் -9-10-5-
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
மோஷத்திற்கு காரணமான சுத்த சத்வத்தை அடைந்து இருப்பவர் -இவ்வாறு ரஜஸ் தமஸ்ஸூக்கள்
அடைக்கியதை கூறப் பட்டது -இனி சத்வத்தை வளர்க்கும் அடி கூறுகிறது – -ஸ்ரீ பராசர பட்டர் –
சௌர்யம் வீர்யம் முதலிய பராக்கிரமம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –
ஜீவன் பலம் நல்ல தன்மை இவற்றை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
872-ஸாத்விக
சத்வ குணம் உடையவன் -ருத்ரன் பிரமன் ரஜோ தமஸ் குணம் –
த₄ர்மஜ் ஞாந வைராக்₃யைஶ்வர்ய ரூப ப₂ல நியமநேந ச ஸத்த்வ மர்ஹதீதி
ஸாத்விக ꞉। *
தத₃ர்ஹதி, இதி ட₂க் ॥
சாகா வரம் கொடுக்கும் அவர்கள் போல் இல்லாமல் தர்மம் ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் போன்ற பலன்களை அருளுபவர்
தர்ம ஞான வைராக்யத்தாலும் ஐஸ்வர்யம் ஆகிய பல நியமனத்தாலும் ஸத்வ குணமே குடி கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்வ குணத்தை பிரதானமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
தூய நற் குணத்தை உடைய நான்முகனை அடியவனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —
—————
873-ஸத்ய –
உண்மை -மெய்யன்-இவருடைய வைபவம் எல்லாம் உண்மை
ஸாத்த்விக ஸாஸ்த்ர ப்ரதிபாத்₃ய தயா யாதா₂ர்த₂வைப₄வ꞉
ஸத்ய ꞉ ।
ஸத்யே ப்ரதிஷ்டித க்ருஷ்ண ஸத்ய மஸ்மின் ப்ரதிஷ்டிதம் ஸத்தா ஸத்தே ச கோவிந்த தஸ்மாத்
ஸத்யதா ஸதாம் மத –உத்யோக பர்வம் 69-12-13-
கிருஷ்ணன் ஸத்யத்திலும் -ஸத்யம் கிருஷ்ணனிடமும் நிலையாக உள்ளதைக் காணலாம்
கோவிந்தனிடம் இருப்பும் இல்லாமையும் ஒடுங்கி உள்ளது
ஆகவே அவன் ஸத்யம் எனப்படுகிறான்
ஸத்யத்தில் இருப்பவன் என்றும் ஸத்யத்துக்கு இருப்பிடமாகவும் உள்ளவன் என்றபடி
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
மெய்யானை மெய் மலையானை –தொழாக் கை அல்லவே
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே -9-10-7/6-
திரு மெய் மலையாளா -பெரிய திரு மொழி -3-6-9-
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகன-பெரிய திரு மொழி -5-6-9-
சாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
சுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
874-ஸத்ய தர்ம பராயண –
உண்மையான தர்ம அனுஷ்டானத்தாலே மகிழ்பவன்
நிருபாதி₄ஸ் ஸாத்த்விக சோத₃நாதி₄காரி ப₂லக உத்தம த₄ர்மோ (அ)ஸ்ய பராயணம் –
பரம ப்ரீணநமிதி
ஸத்ய த₄ர்ம பராயண ॥
ஸ்ரீ பகவத் ஆஞ்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞா
தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-தரும் அவ்வரும் பயனாய் –தரும வரும் பயனாய்
வேறு காரணம் இல்லாமல் சாஸ்திர விதி ஒன்றாலேயே சாத்விகர்கள் செய்யும் உத்தமமான நிவ்ருத்தி தர்மத்தை
மிகப் பிரியமாக அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்ய வாக்யத்தையும் சாஸ்த்ரங்களால் விதிக்கப் பட்ட தர்மத்தையும் முக்கியமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
சத்யமாகிய தர்மத்தில் நிலை
—————-
875-அபிப்ராய –
பரம உத்தேச்யம் ஆனவன்-ஞானிகளை உத்தேச்யமாகக் கொள்ளுமவன் என்பதை பிரிய அர்ஹ அடுத்த திரு நாமம் சொல்லும்
ஸத்ய த₄ர்ம நிஷ்டே₂ந ஸ்வச்சே₂ந நிருபாதிக உத்₃தே ₃ஶ்ய தயா (அ)பி₄ப்ரேத இதி
அபி₄ப்ராய ꞉ ॥
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே–திருவாய் மொழி -3-6-7- –
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே– -பெரிய திரு மொழி -2-3-2-
நிவ்ருத்தி தர்ம -சாத்விக ப்ரபன்னர்-ப்ரயோஜனாந்தர பரர்களாயும் இல்லாதவருக்கு இவனே அபிப்ராயம் –
எழுவார் விடை கொள்வார் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-பல அபீஸந்தி ரஹிதனாய் இருக்க வேண்டும்
சாத்விக தர்மத்தை அனுஷ்டிக்கும் அடியார்களால் வேறு பலன்களை விரும்பாமல்
தாமே பலனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –
சம்ஹார காலத்தில் உலகம் அனைத்தும் தம்மிடம் வந்தடையும் படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
விருப்பங்களை நிறைவேற்றும் திருமகளை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
876-ப்ரியார்ஹ –
பிரியத்துக்கு உரியவன்
ஏவ மைத₃மர்த்₂ய ஜ்ஞாநிநம் ப்ரியமேவ அர்ஹதீதி
ப்ரியார்ஹ꞉ ।
ஏக ப₄க்தி ஷு ஹி ப₄க₃வத꞉ ஸ்வத ஏவ ப்ராவண்யம், ஆர்தார்தா₂ர்தி₂ஜிஜ்ஞாஸுப்₃மவௌதா₃ர்யம்
ப₃லாத்கரணேந
தேஷாம் ஞானீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே -7-17-
அவர்களில் என்னிடம் மட்டுமே ஆழ்ந்த பக்தியுடன் உள்ள ஞானி மிகவும் சிறந்தவன்
உதாரா சர்வை ஏவைத -7-18-அவர்கள் அனைவரும் சிறந்தவர்களே –
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கவி செய்யும் கண்ணன் -7-5-1-
ஆர்த்தன் ஜிஜ்ஜாஸூ -மற்ற மூவருக்கும் அவர்கள் கேட்டதையும் அருள்பவன் -உதார குணம் தூண்ட அது செய்வான்–அவர்களையும் உதாரர்கள் என்று கொண்டாடுவானே கீதையில் -ஆனால் வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்கள் இடம் இவன் ப்ராவண்யம் பள்ள மடையாய் இருக்குமே
இப்படி அநந்ய பக்தியுடன் வந்தடையும் ஞானியை அனுக்ரஹிப்பதற்கு உரியவர் —
அநந்ய பக்தர்கள் இடம் ஸ்வாபாவிக பிரியம் கொள்கிறான்
ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி போன்றார்களுக்கும் அவற்றைத் தந்து வலிந்து அன்பைக் கொள்கிறான் – ஸ்ரீ பராசர பட்டர் –
மனிதர்கள் தமக்கு விருப்பமான பொருள்களை சமர்ப்பிபதற்கு உரியவர் -ஸ்ரீ சங்கரர் –
விசேஷமான சுகத்திற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
877-அர்ஹ
ப்ரீதி செய்யத் தக்கவன் -அநந்ய பிரயோஜனருக்கு-உன்னை அர்த்தித்து வந்தோம்
ஞானிகளுக்கு அபிப்ராயம் இவனே என்று கீழ் சொல்லி இங்கு தகுதி உள்ளவன் என்கிறார்
அநந்யஸ் ப்ருஹாணாம் தேஷாம் அப் அயமேவ யோக்ய இதி
அர்ஹ꞉;
ஆஸ்திதஸ் ச ஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் 7-18-
என்னிடம் ஒன்றிய மனமும் பக்தியும் கொண்ட ஞானி மிகவும் உயர்ந்த என்னையே அடைகிறான்
முனிவர்க்கு உரிய அப்பன் –அமரரப்பன் –உலகுக்கோர் தனி அப்பன் –8-1-11-
ஆஸ்திதஸ் சஹி யுக்தாத்மா மாமேவ நுத்தமாம் கதிம் -ஸ்ரீ கீதை -7-18-
உன்னை அருத்தித்து வந்தோம்
கை வளையும் மேகலையும் காணேன் -கண்டேன் கன மகரக் குழையும் -ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு பகவத் லாபார்த்தி
ஒண் டொடியாள் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் -இங்கும் அவனைப் பற்றி இவற்றை ஒழித்தமை
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மையான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லி
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே –6-8-6-
என் என் என்று அநந்யார்ஹமாய் இருப்பவர்க்கே நல்கி அருளுவான்
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாத பக்தர்களுக்குத் தாமே விரும்பத் தகுதி உள்ளவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நல் வரவு ஆசனம் புகழ்தல் அர்க்யம் பாத்யம் துதி நமஸ்காரம் முதலியவற்றால் பூஜிக்கத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர் –
பூஜைக்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
878-ப்ரிய க்ருத் –
பிரியத்தைச் செய்பவன்
அந்நிய அதிகாரிகளுக்கும் தச் ச₂ந்தா₃நுவர்தநேந-அவர்கள் விருப்பப்படி செய்து அருளுவான்-கோதில் வாய்மையினான் சாந்தீபிநி
ஆழ்வாருக்கும் தேஹ வ்யாமோஹம் விட்டு அது நமது விதி வகையே–தச் ச₂ந்தா₃நுவர்தநேந
அந்ய பராநபி ப₄ஜதஸ் தச் ச₂ந்தா₃நுவர்தநேந ப்ரியான் கரோதீதி
ப்ரிய க்ருத்
நிராஸீ கர்ம சம்யுக்தானாம் ஸாத்வதாம்ச் சாபி அகல்பயம்
ஒரு சிலர் உலக விஷயங்களுக்காக என்னிடம் வருவது உண்டு
அவர்கள் என்னை அதற்காகவே வணங்கிய போதிலும் பலனை எதிர்பாராமல்
செயல்களைச் செய்யும் பக்குவத்தை நான் அவர்களுக்கு அளிக்கிறேன் –
பிரயோஜனாந்த பரருக்கும் பக்தி ஒன்றையே கணிசித்து வேண்டியதை அருளி அநந்ய பிரயோஜனராக ஆக்கி அருளுபவன்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -53-
வேறு பயன்களைக் கருதும் அன்பர்களுக்கும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றித்
தம்மையே விரும்பும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூஜிப்பதற்கு உரியவராக இருப்பது மட்டும் அல்லாமல் தம்மை பஜிப்பவர்களுக்கு விருப்பத்தைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
விசேஷமான சுகத்தை தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
879-ப்ரீதி வர்த்தந-
பக்தியை வளர்ப்பவன் -பக்தி உழவன் -நான்காம் திரு -23-
அதோ ₂த்தரோத்தர கு₃ணா விஷ்காரேண தாம் ப்ரீதிம் வர்த₄ யதீதி
ப்ரீதி வர்த₄ந꞉ ।
பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்திதே-ஸ்ரீ கீதை -10-10-
சௌந்தர்ய சௌசீல்ய ஆவிஷ்காரேண அக்ரூர மாலாகார தீன் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10-
நின் புகழில் வைகும் சிந்தையினும் கு₃ணா விஷ்காரேண-மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று அருள் கொடுக்கும் வான்
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-
பக்தர்களுக்குத் தம் குணங்களை மேன்மேலும் வெளியிடுவதால் அவர்களுடைய பக்தியை
மேலும் மேலும் அதிகப் படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பக்தர்களுக்குத் தம்மிடத்தில் அன்பை வளரச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் இடத்தில் அன்பை வளர்ப்பவர் -பக்தர்களை அன்புடன் வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———
விஹாயசகதிர் ஜ்யோதிஸ் ஸூ ருசிர் ஹூ தபுக்விபு
ரவிர் விரோச ஸூர்யஸ் சவிதா ரவிலோசன –94-
————
880-விஹாயஸகதி
பரம பதத்தை அடைவிப்பவன் –விஹாயசம் -பரம பதம்-உபாயம் விட மார்க்கம் வழி என்று சொல்வதே இங்கு தாத்பர்யம் –
அடுத்த ஒன்பது திருநாமங்களால் 12லோகங்கள் -888-மூன்று லோகங்கள் 889-இரண்டு லோகங்கள்-அர்ச்சிராதிகதி விளக்கம்
ஒவ்வொரு அண்டத்துக்கும் அர்ச்சிராதி கதி வேறே வேறே உண்டு -அனைத்தும் சென்று சேரும் இடம் ஒன்றே
அர்ச்சிராதி கதி சிந்தனம் -திரு வேங்கட யாத்திரை -அக்ரூரர் அனுக்ரஹம் -மூன்றையும் ஸதா சிந்திக்க வேண்டும்
ததா₂ நிரூட₄ப₄க்தி பரகோடி பி₄ர்விஹாயஸம் பரம வ்யோம பதமேவ க₃ம்யதே (அ) ஸ்மாதி₃தி
விஹாய ஸக₃தி꞉ ।
ஸ க₂ல்வாஹ
முக்த்வா ச விபுலாந் போகாந் த்வம் அந்தே மத் ப்ரசாததஸ் மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய
மம லோகே நிவத்ஸ்யஸி –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-19 -26—
என்னுடைய எல்லையற்ற கருணை காரணமாக இந்த உலக இன்பங்களை எல்லையற்று அனுபவித்து
உனதுன் இறுதி சமயத்தில் என்னுடைய சிந்தனை யுண்டாகும்
அதன் பின்னர் என்னை அடைந்து எனது லோகத்தில் இருப்பாய்
தத் ஏக அதிகரணம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-2-16-
தத ஒக அக்ர உஜ்வலனம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத் சேஷ கத் யனுஸ்ம்ருதி யோகாச்சஹார்த்த அநு க்ருஹீத சத்தாதி கயா -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-2-16-
ப்ரஹ்ம ஞானி பரவித்யை காரணமாகவும்
அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி கதி சிந்தநா ரூபமான யோகத்தாலும்
தன்னுடைய இதயத் தாமரையில் உள்ள ஸர்வேஸ்வரனுடைய கருணையைப் பெறுகிறான்
அந்த கிருபை காரணமாக அவனுடைய அந்தர்யாமியின் இருப்பிடமான அந்த இதயம் பிரகாசிக்கிறது
அந்த ஒளி மூலம் அவன் வெளியேற வேண்டிய நூற்று ஓறாவது ஸூஷும்நா நாடியை அறிந்து கொண்டு அதன் மூலம் வெளியேறுகிறான் –
வித்யையின் சாமர்த்தியத்தால்-பக்தியின் சிறப்பால்
தத்தேஷ தத் அ நு ஸ்ம்ருதி யோகாச்ச –அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி கதி சிந்தனையால் ப்ரீதி அடைந்த பரமாத்மா
ஹார்த்தா நுக்ருஹீத-ஹ்ருதய கமல அந்தரவர்த்தியாலே அனுக்ரஹிக்கப் பட்டவனாய்
ததோக-அந்த ஜீவனின் ஸ்தானமாகிய ஹ்ருதயம்
அக்ர ஜ்வலநம் -முன்புறம் பிரகாசம் உள்ளதாகிறது
தத் பிரகாசி தத்வாரோ -அவ்வாறு ப்ரகாசப்படுத்தப்பட்ட நாடி துவாரம் உடையவனாய்
வித்யா சாமர்த்யாத் க்சதாதிகயா-மூர்த்தம் நாடியாலே செல்கிறான் -என்றவாறு –
ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச –
அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான
ஸூஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ்
ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –
சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-
இங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -பெரிய திரு மொழி -5-8-5-
வானேற வழி தந்த வாட்டாற்றான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -3-6-3-
மன்னவராய் உலகாண்டு வானவராய் மீண்டு மகிழ்வு எய்துவரே
இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–ஆர்த்தி பிரபந்தம் –24–
இப்படி பக்தியினுடைய முடிவான நிலையில் ஏறப் பெற்றவர்கள் பரமபதம் செல்வதற்கும் தாமே உபாயமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆகாயத்தில் அதாவது ஸ்ரீ விஷ்ணு பதத்தில் இருப்பவர் -அல்லது ஆகாயத்தில் இருக்கும் சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடன் மீது அமர்ந்து செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
5-6-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமங்கள் -881-891-
881-ஜ்யோதி –
ஒளியாய் இருப்பவன் –அர்ச்சி ஜ்யோதி –
ததா₃ரோஹண நிஶ்ரேண்யா அர்சிராதி₃கதே ꞉ ப்ரத₂மம் பத₃ம் அர்சிராஹ–
ஜ்யோதி꞉,
த்₃யோத்தே (அ)ஸ்மாதி₃தி ; த்₃யுதேரிஸன் ஜாதே ₃ ஸஶ்ச ।யதா₂
தே அ)ர்சிஷாம் அபி₄ஸம் ப₄வந்தி,
இதி। உபாஸந ப்ரஸந்நேந ப₄க₃வதா உபாஸக அதி வஹநே நியுக்தத்வேந தி ஆவாஹிகஹ் யர்சிராத₃ய ꞉
அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம சூத்ரம் -4-3-1–அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே
அதிவாஹிகாதி கரணம் -ப்ரஹ்ம சூத்ரம் -4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –சாந்தோக்யம்–அவர்கள் அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறார்கள்
அக்நிர் ஜ்யோதி ரஹச்சுக்ல ஷண்மாச உத்தராயணம் தாத்ரா பிராதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோஜநா-ஸ்ரீ கீதை -8-24
அர்ச்சிராதி நா தத் பிரதிதே –அவர்கள் ஒளியுடன் கூடிய அர்ச்சிராதி மார்க்கமாகச் செல்கிறார்கள்
என்று உபநிஷத்துக்கள் முழங்குகின்றன
ஆதி வாஹிஹாஸ் தல்லிங்காத் –அவர்கள் ஆதி வாஹ்யகர்கள் ஆகிறார்கள்
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிரே -10-9-3-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் கைந்நிரை காட்டினர் -10-9-4-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றனர் -10-9-5-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே -10-9-6-
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-வண் புகழ் நாரணனைப் பற்றி வாழ் புகழ் நாரணனை அடைந்து அவனை மகிழ்விப்போம்
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
பன்னிருவர் அபிமானி தேவதைகள்
அர்ச்சி ,அஹஸ் -பகல் ,சுக்ல பஷம் ,உத்தராயாணம்,சம்வத்சரம் ,வாயு ,சூர்யன் , சந்தரன்
வித்யுத்,வருணன்,இந்த்ரன்,பிரமன் –
இவர்களை சொல்லும் திரு நாமங்கள் -பட்டர் நிர்வாஹம்
பக்தர்கள் பரமபதத்தில் ஏறுவதற்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் முதற்படியான ஒளியாக இருப்பவர் -உபாசகனை
ஆதி வாஹிகர்களை நியமித்து அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துக் கொண்டு செல்ல நியமிக்கிறான்-ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்வயமாகவே பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஒளியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
882-ஸூருசி –
அழகாக பிரகாசிப்பவன் -இரண்டாம் படி பகல் -தேவதையை சொல்லும் –
ஸூர்யோத₃ யாத்₃ரோசத இதி ருசிர் அஹ꞉, ஸா(அ)ஸ்ய ஸோப₄நேதி
ஸுருசி: ।
* இகு₃பதா₄த்கித் * இதி கர்தரி இன் கித் ।
* அர்சிஷோ (அ)ஹ꞉, இதி ॥
அர்ச்சி ஷோ அஹ -சாந்தோக்யம்
ஒண் சுடரே -5-10-6-
அக்நிர் ஜ்யோதிர் அஹஸ் ஷுக்ல ஷண்மாஸா உத்தராயணம்.–
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா—৷৷8.24৷৷
அக்நிர் ஜ்யோதிர் –அர்ச்சிஸ் -ஒளி
அஹஸ் –அஹஸ்ஸூ – பகல்
ஷுக்ல –ஸூக்ல பக்ஷம் -வளர் பிறை
ஷண்மாஸா உத்தராயணம்.–உத்தரயாணமான ஆறு மாஸங்கள்
தத்ர ப்ரயாதா –என்னும் இவ்வழியிலே செல்லுகின்ற
ப்ரஹ்ம விதோ ஜநா—ப்ரஹ்மத்தை ப்ராப்யமாக உபாசிக்கும் உபாஸகர்கள்
கச்சந்தி ப்ரஹ்ம -ப்ரஹ்மத்தை அடைகிறார்கள் –
அர்ச்சிஸ்ஸூ -அஹஸ் ஸூ -சுக்ல பக்ஷம் -உத்தராயணமான ஆறு மாசங்கள்-என்னும் இவ்வழியில் செல்லுகின்றார்கள்
தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண ஷண்மாஸா தக்ஷிணாயநம்.–
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்ததே—৷৷8.25৷৷
தூமோ –தூமம் -புகை
ராத்ரிஸ் -இரவு
ததா க்ருஷ்ண –அவ் வண்ணமே கிருஷ்ண பக்ஷம்
ஷண்மாஸா தக்ஷிணாயநம்.–தஷிணாயணமான ஆறு மாஸங்கள்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் -அதற்குப் பின் சந்த்ரனாகிய ஜோதி ஆகியவர்களை
யோகீ –புண்ய கர்மம் செய்தவன்
ப்ராப்ய -அடைந்து
நிவர்ததே–கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்
தூமம் -புகை -இரவு -அவ் வண்ணமே கிருஷ்ண பக்ஷம் -தஷிணாயணமான ஆறு மாசங்கள் –
அதற்குப் பின் சந்த்ரனாகிற சோதி ஆகியவர்களை புண்ய கர்மம் செய்தவன் அடைந்து கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்
ஸூர்யோதத்தினால் பிரகாசிப்பதாகிய இரண்டாம் படியான சிறந்த பகலை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்த ஒளி உள்ளவர் -சிறந்த சங்கல்பம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
மங்களகரமான விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
883-ஹூத புக் விபு –
சுக்ல பஷமாய் இருப்பவன் –ஹூத புக் அக்னியில் அவியாக சேர்க்கப் பட்டதை உண்பவன் சந்தரன்
அது இவனிடம் அமிர்த மயமாகி இவனை விபு வளரச் செய்கிறது
அம்ருத பரிணாமம் ஹுதம் பு₄ஞ்ஜாந꞉ ஸோமோ யஸ்மின் ஸூக்ல பக்ஷ த்₃வாரா விபு₄꞉ பூர்ணோ ப₄வதி ஸ꞉
ஹுத பு₄க்₃ விபு₄꞉ ।
* அஹ்ந ஆபூர்ய மாண பக்ஷம், இதி ॥ -சாந்தோக்யம்
முன்பே 241 -விச்வபுக் விபு பார்த்தோம்
அமுதமாகப் பரிணமிக்கும் சந்தரன் வளர்வதான வளர் பிறையாக -மூன்றாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஹூத புக் -எல்லாத் தேவதைகளைக் குறித்தும் செய்யப்படும் ஹோமங்களைப் புசிப்பவர் –
விபு -எங்கும் நிரம்பி இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
ஹோமம் செய்பவைகளை உண்பவர் -பக்தர்களை மேன்மை கொண்டவர்களாக ஆக்குபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
884-ரவி
உத்தராயணமாக கொண்டாடப்படும் ஸூர்யன்
உத்தா₂ந காலதய உத₃₃கயந த்₃வாரா ரூயதே – ப்ரஸஸ்யத இதி
ரவி꞉ ।
ஆ பூர்யமான பஷாத் யாந் ஷட் உத்தங்கேதி மாஸாத் -சாந்தோக்யம்
சுக்ல பக்ஷ தேவதையிடம் இருந்து ஆறு மாதத்தின் தேவதையை அடைகிறான்
கடக ரேகை உஜ்ஜயின் வழி உண்டு
மேல் ஏறிப் பிரகாசிப்பதனால் உயர்ந்த உத்தராயணமாக நான்காம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூர்யனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தன்னைத் தானே அறிந்து கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
885-விரோசன –
ஒளி தருபவன் -ஒளி மணி வண்ணன் -4-4-4-
த்₃வாப்₄ யாம் அயந க₃திப்₄ யாம் ஸம் வத்ஸரோ ரதே ₂ந ஆதி₃த்யம் விரோசய தீதி
விரோசந꞉।
மா சேப்யஸ் சம்வத்சரம் –சாந்தோக்யம் 5-10-2-
மாதங்களில் இருந்து வருடத்தை அடைகிறான்
ஸம்வத்ஸர அஸாவாதித்ய –தைத்ரியம் -ஆதித்யன் ஸம்வத்ஸரம் என்னும் வருடன் ஆகிறான்
இரண்டு அயனங்களில் ரதம் செல்லும் சம்வத்சரமாக ஐந்தாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பல விதமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
விலோசன -அர்ஜூனனுக்கு திவ்ய சஷூஸ் ஸைத் தந்தவர் -விரோசன -சூரியனுக்கு ஒளியைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
886-ஸூர்ய-
வாயு லோகமாக -வாயு இவன் இடம் இருந்து எப்போதும் வீசுவதால் இவன் ஸூர்யன் எனப்படுகிறான்
வாயு꞉ ஸதா₃ ஸரத் யஸ்மாதி₃தி
ஸூர்ய ,
* ராஜ ஸூர்ய ஸூர்ய , இத்யாதி₃நா நிபாதித꞉ ।
ப₃ஹுல வசநா த₃ந்யே (அ)பி க்ருத꞉ ப்ராப்தமர்த₂ம் வ்யபி₄சரந்தீதி க்ருத் ப்ரத்யயா நாம்
ஸர்வத்ர இஷ்டார்த₂த்வம் த்₃ரஷ்டவ்யம் ।
ஸ வாயு லோகம் இதி ॥கௌஷிகி உபநிஷத்
எப்போதும் சஞ்சரிக்கும் வாயுவாக ஆறாம்படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -செல்வத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அசைபவர் -உலகங்களைச் செயல்களில் தூண்டுபவர் -ஸூரிகளால் அடையப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
887-ஸவிதா
உண்டாக்குபவன் -மழை பொழிவித்து பயிர் பச்சைகள் உண்டாக்கி வளரச் செய்கிறான் -ஏழாம் படி
மீண்டும் 969-வரும்
ஸூர்ய த்₃வாரா வ்ருஷ்டி ஸஸ்யாதி₃(மழை பயிர் )கம் ஸூத இதி
ஸவிதா ;
ஸம்வத்சராத் ஆதித்யம் –சாந்தோக்யம் 5-10-2-
ஸம்வத்ஸரம் என்னும் ஆண்டில் இருந்து ஆதித்யனை அடைகிறான்
வாயுமப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம் -॥4-3-2-
வருஷத்துக்குப் பின்னர் அர்ச்சிராதி கதியில் வாயு வருகிறது
இதி ந்யாய்யம் வ்யவதா₄நம்
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்
சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும்
ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர
விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி –என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் –
தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும்
யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ –
வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-
வாயும் அப்தாத் -சம்வத்சரத்துக்கு மேலேயும் ஆதித்யனுக்குக் கீழும் வாயுவை மட்டும் வைக்க வேண்டும்
ஏன் எனில்
அவிசேஷ விசேஷாப்யாம்-பொதுவாயும் சிறப்பாயும் உள்ள சொற்களால் என்றபடி
இங்கு தேவலோக ஸப்தம் ஸாமான்யம்
வாயு ஸப்தம் விசேஷம்
தேவ லோக ஸப்தத்தால் தேவர்களின் வாசஸ் ஸ்தானம் என்ற காரணத்தால் வாயுவே கூறப்படுகிறது –
அதுவே விசேஷமாகும்
இரண்டும் ஒரே பொருளைக் கூறுவதால் ஸம்வத்சரத்துக்கு மேல் வாயுவை மட்டிலும்
அதற்கு மேல் ஆதித்யனையும் குறிப்பதே சரியான க்ரமம் என்றதாயிற்று
யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் ப்ரிய -என்பதே இதற்குப் பிரமாணம் –
ஏழாம் படியான சூரியனால் மழை பயிர் முதலியவற்றை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
888-ரவி லோசந-
ஸூர்ய கிரணங்கள் மூலம் சந்தரன் -மின்னல் போன்ற தேஜஸ் பதார்த்தங்களை பிரகாசிக்கச் செய்பவன்
ஸூர்ய கிரணங்களால் ஸங்க்ராந்த்யாதி₃முகே₂ந-ஒளி பெரும் -பிரதிபலித்து -உண்டாகும் 8-9-10- சந்திரன் மின்னல் வர்ணன் லோகங்கள் சேர்த்து இதில்
ரவி ரஶ்மி ஸங்க்ராந்த்யாதி₃முகே₂ந சந்த்₃ர வித்₃யுத்₃ வருணான் லோசய தீதி
ரவி லோசந꞉;
ஆதித்யாத் சந்த்ரமசம் சந்த்ரமசவ் வித்யுதம் –சாந்தோக்யம் 5-10-2-
ஜீவாத்மா ஆதித்யன் இடம் இருந்து சந்திரன் இடமும்
சந்திரனிடம் இருந்து மின்னலிடமும் செல்கிறான்
ச வருண லோகான் -கௌஷீதகீ –அதன் பின்னர் வருண லோகம் செல்கிறான் –
சீரார் சுடர்கள் இரண்டானாய் -6-9-1-
சந்தரன் மின்னல் வருணன் -8/9/10 படிகள்
ஆதித்யாத் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் ச வருண லோகம் -உபநிஷத்
ஸூர்ய கிரணங்களால் -எட்டு ஒன்பது பத்தாம் படிகளான சந்திரன் மின்னல் வருணன் ஆகியோரைப்
பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூரியனைக் கண்ணாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸூரியனைக் கண்ணாக உடையவர் -அரவிந்த லோசன என்று கொண்டு நரசிம்ஹ அவதாரத்தில்
குகையுடன் சம்பந்தம் உள்ளவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
அநந்த ஹூத புக் போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95-
————-
889-அநந்த ஹூத புக் போக்தா –
மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்–இறுதி இரண்டு லோகங்கள் -11-12- இந்திர லோகம் -ஸத்ய லோகம்
ஸப்த தந்துஷு ஹுதம் பு₄ங்க்த இதீந்த்₃ரோ ஹுதபு₄க், ப்ரஜா꞉ பு₄நக்தி பாலய தீதி ப்ரஜா பத்திர்
போ₄க்தா, தௌ மஹாந்தாவஸ்யேதி
அநந்த ஹுத பு₄க்₃ போ₄க்தா,
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்
ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம்
அதன் பின்னர் ஜீவாத்மா இந்திர லோகமும் பிரஜாபதி லோகமும் செல்கிறான்
யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———
890-ஸூகத
ஸூகம் அளிப்பவன்-
அமாநவ முகே₂ந ஸ்ப்ருஷ்ட்வா ஸவாஸநம் ஸம்ஸார முத்ஸார்ய ஸ்வ ஆப்தி புக₂ம் த₃தாதீதி
ஸுக₂த₃:
தத் புருஷ மாணவ ச யேநாந் ப்ரஹ்ம கமயதி–சாந்தோக்யம் -5-10-3-
அதன் பின்னர் அந்த உயர்ந்த புருஷனாகிய அமானவன் ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்கிறான் –
அமானவன் திவ்ய புருஷன் கை கொடுத்து
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டின்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -உபதேச ரத்னமாலை –
முன்பே 461 பார்த்தோம்-
மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் –
பதிமூன்றாம் படியான அமானவ திவ்ய புருஷனாக ஸ்பர்சித்து சம்சார வாசனைகளை ஒழித்துத் தம்மை
அடைவதாகிய சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூ கத -பக்தர்களுக்கு மோஷ ஸூ கத்தைக் கொடுப்பவர் -அல்லது –அஸூ கத -துக்கங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸூகத்தைத் தருபவர் -மங்களகரமான இந்த்ரியங்களைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
891-நை கத-ந ஏகத
ஒன்றை மட்டும் கொடாதவன் -பலவற்றை தருமவன்-அஸங்க்₂யேய மால அஞ்ஜந வாஸ꞉-
ஏகம் த₃தா₃தீத் யேகதா₃꞉, தத்₃விருத்₃தா₄ நைகதா₃꞉-அஸங்க்₂யேய மால அஞ்ஜந வாஸ꞉-
ப்ரப்₄ருதி ப்₃ரஹ்ம அலங்காரதா₃யிந்யோ முக்த அப்₄யுத்தா₂நவிதோ ₃ தி₃வ்ய அப்ஸரஸோ
(அ)ஸ்யேதி
நைகத₃꞉ ।
ச பஞ்ச சதாந் யப்சரச உபதா வந்தி சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சன ஹஸ்தா -கௌஷீதகீ -1-4-
முகத்தனை எதிர்கொண்டு அழைக்க ஐந்நூறு அப்சரஸ்ஸுக்கள் ஓடி வருகிறார்கள்
அவர்களில் நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் மாலையையும்
நூறு பெண்கள் கண்ணில் இடும் மையையும் அலங்கரிப்பதற்காக எடுத்து வருகிறார்கள்
தம் ப்ரஹ்ம அலங்காரேன அலங்குர்வந்தி
முகத்தனை ப்ரஹ்ம அலங்காரம் செய்கிறார்கள் –
சூடகமே –பரவாரர்கள் பூண்டும் ஆத்ம பூஷணன்கள்
புஷ்ப மாலைகள் வஸ்தரங்கள் -அப்சரஸ்கள் அலங்காரம் சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
வள்ளல் மணி வண்ணன் –
எண்ணற்ற பூ மாலை மை ஆடை முதலிய பிரஹ்ம அலங்காரங்களைக் கொடுத்து இந்த முக்தனை தம்மிடம்
சேர்ப்பிக்கும் அப்சரஸ் ஸூ க்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மத்தைக் காப்பதற்காகப் பல அவதாரங்களை எடுப்பவர் –நை கஜ -என்பது பாடம் -ஸ்ரீ சங்கரர் –
தாமரையில் உதித்த ஸ்ரீ லஷ்மிக்கு மணவாளர் -தாமரை அடர்ந்து இருக்கும் வனத்தில் தோன்றியவர் –
எவரிடமிருந்தும் பிறவாதவர் –நைகஜ என்பது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————–
ஜீவர்களை ஆளுபவன் –
849-ப்ராக்வம்ஸ- என்றுமே முக்தியிலே இருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரம் ஆனவர் —
இவர் நினைவாலேயே அவர்கள் நித்யர்களாக உள்ளார்கள் –
850-வம்ச வர்த்தன -நித்ய ஸூரிகள் என்னும் வம்சத்தை வளர்ப்பவர் –
851-பாரப்ருத்-ஜீவர்கள் தன்னைச் சேரும் வரை அவர்களின் பொறுப்பை தாங்குபவர் –
852-கதித-முன்னால் சொல்லப்பட்டவை -இனி சொல்லப் படுபவை ஆகிய அனைத்து மங்களமான குணங்களும்
பொருந்தியவராய் சாஸ்த்ரங்களில் போற்றப்படுபவர்
853-யோகீ–சேராதவையையும் சேர்க்கும் -நடக்காதவையையும் நடத்தும் பெருமை கொண்டவர் –
854-யோகீஸ-யோகிகளுக்குத் தலைவர் -யோகத்தை நிறைவேற்றுபவர் –
855-சர்வகாமத -யோகத்தில் நடுவே தவறினவர்களுக்கும் தகுந்த பலனைக் கொடுக்கும் –
856-ஆஸ்ரம -யோகத்தில் தவறியவர்களுக்கு திரும்பவும் அதைத் தொடரத் தகுதியான ஒய்விடத்தைக் கொடுப்பவர்
857-ஸ்ரமண-யோகத்தை தொடர உதவி செய்து சம்சாரத்தில் இருந்து கரை சேர்ப்பவர் –
858-ஷாம -யோகத்தை தொடர விருப்பம் உற்றவர்களுக்கும் சம்சாரக் கடலைத் தாண்டும் வலிமை கொடுப்பவர் –
859-ஸூ பர்ண-யோகத்தை தொடர உதவி செய்து சம்சாரத்தில் இருந்து கரை சேர்ப்பவர்
860–வாயு வாஹன -பலமான காரணங்களால் யோகத்தில் இருந்து நழுவினாலும் அவர்களை
வேகமுள்ள கருடனைக் கொண்டு தூக்கிச் செல்பவர் –
861-தநுர்தர-பக்தர்களின் எதிரிகளை ஒழிக்க வில் எடுத்து இருப்பவர் –
862-தநுர்வேத-பக்தர்களின் எதிரிகளை ஒழிக்க வில் எடுத்து இருப்பவர் –
———————————————————-
தீயவர்களுக்கு யமன்
863-தண்ட -தகுதியான அரசர்களைக் கண்டு தீயவர்களைத் தண்டித்து தர்மத்தை நிலை நிறுத்துபவர் –
864-தமயிதா-தானே நேராகவும் இராவணன் முதலானோரை அடக்குமவர் –
865-அதம -தான் யாராலும் அடக்கப் படாதவர் –
866-அபராஜித -யாராலும் எப்போதும் எங்கும் எதனாலும் வெல்லப் படாதவர் –
867-சர்வசஹ-சிறு பலன்களுக்காக வேறு தேவதைகளைத் தொழுபவர்களையும் பொறுப்பவர் –
868-நியந்தா -மற்ற தேவர்களைத் தொழு பவர்களையும் ஊக்குவித்து இறுதியில் அவர்கள் தம்மை அடையக் காத்து இருப்பவர் –
869-நியம -வேறு தேவதைகள் இடம் நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டினாலும் அந்த தேவதைகளுக்கு
அந்தராத்மாவாக இருந்து பலனைத் தானே கொடுப்பவர் –
870-யம -தேவர்களுக்கு வரம் அளிக்கும் வலிமையைத் தந்து நடத்துபவர்
———————————————-
சத்வ குணத்தை வளர்ப்பவன் –
871-சத்வவான் -கலப்பில்லாத ஸூத்த சத்வ குணத்தை உடையவர் –
872-சாத்விக -சத்வ குணத்தின் பலமான ஆறாம் அறிவு பற்றின்மை செல்வம் ஆகியவற்றின் உருவகமாகவே இருப்பவர் –
873-சத்ய – சாத்விகமான சாஸ்த்ரங்களால் போற்றப்படும் உண்மையான புகழாளர் –
874-சத்ய தர்ம பராயண -சாத்விகமான தர்மத்தை நாம் அனுஷ்டிப்பதனால் மகிழ்பவர் –
875-அபிப்ராய -சாத்விக தர்மங்களை கடைப் பிடிப்பவர்களால் விரும்பப் படுபவர்
876-ப்ரியார்ஹ -தன்னையே விரும்புவர்கள் இடம் பேரன்பு கொண்டவர் –
877-அர்ஹ-தன்னையே அடைய விரும்பும் பக்தர்களுக்கு தகுந்தவர் –
878-ப்ரியக்ருத் -வேறு பயன்களை விரும்புவோருக்கு அவற்றைக் கொடுத்து இறுதியில் தம்மிடத்தில் விருப்பத்தை வளர்ப்பவர் –
879-ப்ரீதி வர்தன -தன்னுடைய இனிமையான குணங்களால் பக்தியை வளர்த்து தம்மிடம் ஈடுபடுத்துபவர் –
880-விஹாயசகதி -பக்தர்கள் பரமபதத்தை அடைவதற்கு தாமே வழியாக இருப்பவர் –
—————————————————————————–
நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –
881-ஜ்யோதி -மீளுதல் இல்லாத வைகுந்ததுக்குச் செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தில் முதல் படியான ஒளியாய் இருப்பவர் –
882-ஸூ ருசி -ஸூ ர்ய ஒளியால் பிரகாசிக்கும் பகலாக இருப்பவர் -இரண்டாம் படி –
883- ஹூத புக் விபு -ஹோமப் பொருட்கள் உண்ணும் சந்த்ரனனின் வளர் பிறையாய் இருப்பவர் -மூன்றாம் படி –
884-ரவி -ஸூ ர்யன் பிரகாசிப்பதால் சிறந்ததான உத்தராயணமாக இருப்பவர் -நான்காம் படி –
885-விரோசன -கதிரவன் உத்தராயணம் தஷிணாயாணம் ஆகிய வற்றால் பிரகாசிக்கும் சம்வத்சரமாக -ஆண்டாக இருப்பவர் -ஐந்தாம் படி –
886-ஸூ ர்ய -மழையையும் பயிரையும் வளர்க்கும் ஸூ ர்யனாகவும் இருப்பவர் –ஆறாம் படி
887-சவிதா -எங்கும் வீசும் காற்றாக இருப்பவர் -ஏழாம் படி
888-ரவி லோசன -சந்தரன் மின்னல் வருணன் ஆகியவர்களுக்கு ஒளி யூட்டுபவர் –8-9-10-படிகள் –
889-அநந்த ஹூத புக் போக்தா -யாகத்தில் சமர்ப்பிக்கப் படுவதை ஏற்கும் இந்த்ரனாகவும்
ஜீவர்களைக் காக்கும் நான்முகனாகவும் இருப்பவர் -11-12-படிகள் –
890-ஸூ கத -அமானவனால் தீண்டப்பட்டு சம்சாரம் ஒழிந்து தம்மை அடையும் ஜீவனுக்கு இன்பத்தை அளிப்பவர் –
891- நைகத–பல அப்சரஸ் ஸூ க்கள் இந்த முகத்தனை அலங்கரித்து தம்மிடம் சேர்க்கும் படி செய்பவர்
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply