ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள் /3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள் / 3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள் /3-6- ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள் / 3-7- பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்

வேத்யோ வைத்யஸ் சதாயோகீ வீரஹா மாதவோ மது
அதீந்த்ரியோ மஹா மாயோ மஹோத் சாஹோ மஹா பல –18

மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19

மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம்கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-

மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூபர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூதபா பத்ம நாப ப்ரஜாபதி–21

—————

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்

————-

3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170

165-வேத்ய –
அறியக் கூடியவன் -யாவராலும் அறிய எளியவன்-

ஏவம் ஆவிர்பூ₄ய ப்ரகடித அதீந்த்₃ரிய மஹிமத்வாத் ஸர்வைர் வேதி₃தும் ஸக்யோ
வேத்₃ய ॥

யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-
இடைசிகள் குரங்குகள்
நமோ நமோ வாங் மனசைக பூமயே –

இப்படி திருவவதரித்து புலன்களுக்கு எட்டாத மகிமைகளை எல்லாரும் எளிதில் அறியும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்களால் அறியத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –

அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் வேத்ய நம

——————–

166-வைத்திய –
வித்யைகளை கற்று அறிந்தவன் –
பிறவி நோய்க்கு மருந்து அறிந்தவன் -மருந்தாய் இருப்பவன்
பேஷஜம் -585-பிஷக் -586-பின்னர் வரும்

வேதி₃த்ருபவ பஞ்ஜிநீம் வித்₃யா மதீ₄தே வேத₃ வேதி வைத்₃ய ।

அஷ்டாத்யாயீ –4-2-59-தத் அதீதே தத் வேத –அதனை ஓதுகிறான் அதனை அறிகிறான் என்று
இரண்டாம் வேற்றுமையில் உள்ள வேத என்ற பதத்தின் பின் அண் என்பது உண்டாகும் -என்றது

ஔ ஷதம் ஜாஹ்நவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி

மேரு மந்த்ர மாத்ரோபி பாபச்ய கர்மண கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ …–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -68-110–
மேரு மலை போன்ற பாபங்கள் இருந்தாலும் கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன –

மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-
கெடுமிடராய வெல்லாம் கேசவா -என்ன -10-2-1-
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்

தம்மைச் சிந்திப்பவர்க்கு பிறப்பு இறப்பு முதலியவற்றைப் போக்கும் வகை யறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வித்யைகளையும் அறிந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலக வாழ்வு என்னும் நோயைத் தவிர்ப்பவர் –அனைத்து வித்யைகளாலும் அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————-

167-ஸதா யோகி-
எப்பொழுதும் விழித்து இருப்பவன் –

ஏவ மத்ர சதத ஜாக₃ரூக꞉ ஸதா₃யோகீ–

ய ஏஷ ஸூப்தேஷு ஜாகர்த்தி காமம் காமம் புருஷ நிர்மிணாத –கட -5-8-அனைவரும் தூங்கும் போதும் விழித்து இருப்பவன்

முனியே உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -5-4-10

கண்ணில் இரப்பையே இல்லாத புரி ஜெகந்நாத பெருமாள் –

இப்படி பக்தர்களுடைய பிறப்பு இறப்பு அறுப்பதில் எப்போதும் ஊக்கம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

கபிலர் முதலிய ரூபங்களினால் எப்போதும் யோகத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

168-வீரஹா –
வீரர்களை கொல்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் –மீண்டும் 747-927 வரும்

அஸத்யம்–16-18-இந்த உலகமே பொய்யானது -இந்த உலகத்துக்கு ஆதாரம் இல்லை -ஈஸ்வரன் இல்லை -என்று உரைத்தான்

ஸ்வ வேத₃ந விஹந்த்ருன் ஹைதுக வீரான் ஹதவாந் இதி வீரஹா । கிப் ।
* ப்₃ரஹ்ம ப்₄ரூண வ்ருத்ரேஷு இதி நியம꞉ ப்ராயிக꞉ ।
ஏவம் காமஹா க்ரோத₄ஹா
ப₄க₃ஹ இத்யேவ மாத₃யோ(அ)பி । யதா₂,
* அஸத்யம் அப்ரதிஷ்ட₂ம் தே ஜக₃தா₃ஹுர் அநீஶ்வரம், இதி ப்ரஸஜ்ய ₃16-18—யதா

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம் யஜஸ்ர மஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
இப்படியாக உரைக்கும் கூடியவர்களாயும் நன்மை என்பது சிறிதும் இல்லாதவர்களாயும்
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களாயும் இருப்பவர்களை
மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

தாடீ பஞ்சகம் –
அறு சமயச் செடி யதனை அறுத்தார் அன்றோ
அவ் விருளைத் துரந்திலனேல்-

அசுரர்களுக்கு தீமைகள் செய்குந்தா –

குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

169-மாதவ –
ஞான ப்ரதன்-வித்யைக்கு ஈசன்-

அத₂ ஸ்வ விஷய பரவித்₃யா ப்ரவர்தநாத் மாத₄வ (மற்றவை எல்லாம் அவர தாழ்ந்த வித்யை தானே) । யதா₂,

மா வித்யா சா ஹரே ப்ரோக்தா -தஸ்யா ஈசோ யதோ பவாந்- தஸ்மாத் மாதவ நாமா அஸீ- தவ ஸ்வாமீ இதி சப்தித–
ஸ்ரீ ஹரியின் வித்யை மா எனப்படுகிறது
தவ என்றால் ஸ்வாமி
வித்யைக்கு ஈஸ்வரன் என்பதால் மாதவ எனப்படுகிறாய்

மவ்நாத் த்யாநாத் ச யோகாச் ச வித்தி பாரத மாதவம் –உத்யோக பர்வம்-69-4-
பரத வம்சத்தில் உதித்தவனே –மவ்நம் த்யானம் யோகம் போன்றவற்றால் எம்பெருமானை மாதவன் என்கின்றனர் –

கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
மா -மௌநம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்
மீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்

மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் –த-த்யானம் -வ -யோகம் –
இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

170-மது –
தேனிலும் இனியவன்

உணாதி பாதம் –1-18-பலி -பாடி -நமி –உ என்பதும் -கு என்பதும் -பல் -பாட் -நம் போன்றவற்றின் பின்னே வந்து
பல்கு -படு -நாகு -என்று மாறுகிறது
மத் -அறிதல் பொருளிலும் -உ -விரும்பத்தக்கது பொருளிலும் இணைந்து மது ஆகிறது

லப்₃த₄வித்₃யேப்₄ய ஸ்வத₃மாநத்வாத் மது₄꞉ ।
மந ஜ்ஞாநே (அறிவும் -மந அவ போதந -அறிவுடையவன் என்றும் உண்டே  )।
அஸ்மாத் ஸ்வாத்₃வர்தா₂த்
*ப₂லி பாடிநமி, இத்யாதி₃நோ ப்ரத்யயோ த₄காரோ (அ)ந்தாதே ₃ஸஶ்ச । யதா₂

மத்வ உத்ஸா -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்–மஹா விஷ்ணு தேன் ஊற்றாக உள்ளான்

ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் –ஸ்ரீ கீதை -7-17-அவர்களில் ஞானியானவன் எனக்கு மிகவும் பிரியமானவன் –

தேனில் இனிய பிரானே -பெரிய திருமொழி -2-7-1-
தேனே மலரும் திருப் பாதன்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
அமுதூரும் என் நாவுக்கே -மதுரகவி ஆழ்வார்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -அமுதனார்

பக்தர்களுக்குத் தேன் போல் இனியவர்-ஞானிகளான பக்தர்களுக்கு அம்ருதம் போல் இன் சுவையாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தேன் போல் ப்ரீதியை உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுக வடிவாய் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————

அவதாரிகை
இனி மேற் சொன்ன பரம் வ்யூஹம் விபவம் என்னும் மூன்று வகை அவதாரங்களுக்கும்
முக்கியமான ஆறு குணங்களை சொல்லுவதன் பொருட்டு பரமாத்ம ஸ்வரூபம் தெரிவிக்கப் படுகிறது

ஞானம் ஐஸ்வர்யம் சக்தி -பிரதானம்
இவற்றுக்கு உதவ -பலம் -வீர்யம் -தேஜஸ் -தேசிகன் காட்டி அருளுகிறார்

3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்

171-அதீந்த்ரிய
புலன்களுக்கு எட்டாதவன்-(662 நாமமும் இதுவே )

அத₂ மது₄ர மதூ₄த₃தி₄(மதுக்கடல் )ஸ்வரூபே (அ)ஸ்மின் கு₃ணிந் யுக்த பர வ்யூஹ விபவ₄ ஹ்ருத₃ய
ஷாட்  கு₃ண்யம் விவக்ஷன் ஸ்வரூபம் யஸோத₄யதி
அதீந்த்₃ரிய ꞉,
ஜ்ஞாந உப கரணாந்யதி -க்ராந்த꞉ ॥

காணலுமாகான் உளன் அல்லன் இல்லை யல்லன் -2-5-10-
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் -சிந்தைக்கும் கோசரம் அல்லன்

புலன்களுக்கு எட்டாதவர் -இனி பரம் வ்யூஹம் விபவம் மூன்று வகை நிலைகளுக்கும் முக்யமான
ஆறு குணங்களைக் கூறுவதற்காக தேன் கடல் போன்ற பரமாத்ம ஸ்வரூபம் தெளிவிக்கப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஞான இந்திரியங்களுக்கு அப்பால் பட்டவன்

சப்தம் முதலிய குணங்கள் இல்லாமையால் புலன்களுக்கு எட்டாதவர் -ஸ்ரீ சங்கரர் –

இந்திரியங்களுக்கு எட்டாதவர் -பல இந்திரியங்களின் சக்தியுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

172-மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்

கத₂ம்(எப்படி -கீழ் நாம விளக்கம் இது )
‘ மஹாமாயா꞉ ।
மஹதீ – அப்ரபந்ந நிகி₂ல ஜந மோஹிநீ திரஸ்கரிணீ வந் மாயா
(அ)ஸ்யேதி । யாதா₂,

குண மாயா சமாவ்ருத -ஜிதந்தா–குணங்கள் என்ற மாயை மூலம் மறைத்த படி
மாயை என்பது பொய் என்ற பொருளில் இல்லை என்ற படி

மம மாயா துரத்யயா-பகவத் ஸ்வரூபம் திரோதானகரி தானே பிரகிருதி -நாம் மருள் உற்றவர் -தெருள் உற்ற ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்

நேயம் ம்ருஷா மாயேதி வக்ஷ்யதே (கானல் நீர் போல் பொய் அல்லவே –ஸ்வயம் பிரகாசமான அவனை மறைக்கும் ஆச்சார்யம் அன்றோ )॥

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மா மாயனே மாதவா -1-5-6-
எல்லையில் மாயன் -3-10-8-

தன்னைச் சரணம் அடையாதவர்களுக்கு-(அப்ரபந்ந-) திரை போல் ஸ்வரூபத்தை மறைக்கும் மாயையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மாயை செய்பவர்களுக்கும் மாயையை உண்டாக்குவதால் யாராலும் கடக்க முடியாத மாயை உடையவர் -மாயை -மயக்கும் சக்தி –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவளான லஷ்மியின் மணவாளன் -உயர்ந்த ஞானிகளால் பிரார்த்திக்கப் படுபவர் –
கபடம் இல்லாதவர் -உயர்ந்த இச்சை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

173-மஹோத்ஸாஹ-
மிக்க ஊக்கம் உடையவன் -சங்கல்ப மாதரம் -எல்லாம் அவன் அதீனம்

முதலில் ஐஸ்வர்யம் இங்கு -அடுத்து  174-பலம் -அடுத்து -175-புத்தி-176- வீர்யம் -177-சக்தி 178-தேஜஸ்-மஹத் ஆறிலும் உண்டே

ஜ்ஞாந மயா த₃ப் யகர்து ரலஸோதா₃ஸீநாத் ஸாங்க்₂யேஶ்வராத் (செயல்படாத சோம்பேறி ஈஸ்வரர் சாங்க்யர் )வ்யாவர்தகம் ஐஶ்வர்யம்
கு₃ணமாஹ
மஹோத்ஸாஹ꞉ ।
மஹான் உத்ஸாஹ꞉ உத்ஹைநம் கர்த்ருத்வ லக்ஷணம் ஐஸ்வர்யம் (தூது போயும் புருவம் நெறித்த இடத்தில் தேரை நிறுத்தி -ஒன்றி ஒன்றி உலகம் படைத்து )-அஸ்யேதி ।
அநேந க₂ல்வயம், (அதனால் அன்றோ )அகி₂ ல கார்யேஷ் -வநந்ய நியோஜ்ய (யாராலும் தூண்டப்படாமல் )நிரங்குஸ ஸூவ ஸங்கல்ப கணிகா மாத்ரேண
ஸர்வ போ₄க்த்ருணாம் பு₄க்த அபு₄க்த விசித்ர கர்ம தாரதம்ய அநுகு₃ண போ₄க₃தது₃பகரண
ப்ரகார பரிணாம பே₄த₃பி₄ந்ந ஜக₃த்₃அபரிமித அபூர்வ ரசநா சதுர ஸர்வ ஸக்திர் அபி –
ஸ்வா தந்த்ர்யேண யதா₂புரத꞉ ஸ்வ பாவ நியமமநுருந்தா₄ஸர்வம் ஆவிஷ்கரோதி (
அடங்குவார் அல்லா ஸ்வ தந்தர்யம் இருந்தாலும் மாற்றாமல் உலகம் நடத்தி )।
ஏதச் சீ₂கர பரமாணுரணி மார்தி₃ர் த்₃ருஹிணாயதௌ₃ விஜ்ரும்பதே ॥

செய்வார்களைச் செய்வேனும் யானே -என்னும் -5-6-4-
மன் பல் உயிர் களுமாகிப் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ் விளையாட்டு உடையான் -3-10-8

எல்லாவற்றையும் படைப்பதாகிய ஈஸ்வர சக்தி மிகப் பெரிதாக இருப்பவர் -ஞான மயமாக இருந்த போதிலும் செயல் படாதவராய்-
சோம்பலினால் உதாசீனராய் இருப்பவர் என்று சாங்க்ய மதத்தில் கூறப்பட்ட ஈஸ்வரனை நிரசித்து ஐஸ்வர்யம் குணம் கூறப்படுகிறது –
ஸ்வா தந்த்ர்ய ரூபமான இந்த செயலால் -ஒருவரால் ஏவுதல் இல்லாமல் -தடையில்லாத சங்கல்ப்பத்தால் –
அதில் ஏக தேசத்தில் போகமாகவும் சாதனமாகவும் பலவித உலகங்களை செய்ய வல்ல சக்தனாக இருந்தாலும்
முன் போலவே ஸ்வ பாவ நியமத்தையே மேற் கொள்கிறான் -அவனது இந்த சக்தியின் சிறிது அளவு மாத்ரமான அணிமா முதலிய
ஐஸ்வர்யமே பிரம்மா முதலியவர்களுக்கு அளவற்ற பெருமையை உண்டாக்கிக் கொண்டு விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

சாங்க்ய மதம் -ப்ரஹ்மம் ஞானமயன் என்றாலும் செயல்களை செய்வது இல்லை -என்பர் –
அத்தை நிரசனம் செய்யும் இந்த திரு நாமம்

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலியவற்றில் ஊக்கத்தோடு இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞம் முதலியவைகளில் உத்சாஹம் உள்ளவர்
உலகைப் படைத்தல் முதலிய வற்றில் அதிக மகிழ்ச்சி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –

ஸஹாய அபேஷ கர்த்ரந்தர வ்யாவர்தகம் மஹத்₃ப₃ல மஸ்யேதி –
மஹா ப₃ல ।
அநேந ஹ்யய மபரிமித க்ரியோ(அ)ப்ய அநாகலித ஶ்ரம꞉ ஸ்வே மஹிம்நி திஷ்ட₂ன் அவதீ₄ரிதாத் –
ஆ₄ராந்தரோ து₃ர்வார வ்யாபார ஸந்தத ஸக்தி ஸமுல்லாஸ꞉
ஸரீரமிவ ஸகலம் பி₃ப₄ர்தி ।
*ப₃ஹுல யன் ப₃ஹு ம், இதி ச மௌல ꞉ ।
ஏதல் லேஸோ ஜீவந ஸமீரண- கி₃ரித₄ராதௌ₃ ॥(தண்ணீர் காற்று மண் மலை இவனது பலத்தில் ஏக தேசத்தால் தாங்கும் வலிமை கொண்டதாகும் )

பஹு ளயன் பஹுளம் –மவ்ல ஸம்ஹிதை –பல பொருள்களையும் உண்டாக்கி என்றபடி

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திறம்பாமல் மலை எடுத்தேன் என்னும் -திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் என்னும் -5-6-5-

வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———–

மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19

—————-

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –

அஸவர்ஜ்ஞ காரணமத வ்யவச்சே₂த₃மாஹ – மஹத் ஜ்ஞாநமஸ்யேதி
மஹா பு₃த்₃தி₄꞉ ।
இத₃ம் சாஸ்ய அசேஷ தேஸ கால ஸ்வ பாவ –விப்ரக்ருஷ்ட அவிப்ரக்ருஷ்ட விஷயம் ஸார்வஜ்ஞாத்-(மிச்சம் இல்லாமல் தேச கால வஸ்து இவற்றால் கட்டுப்படாத ஞானம் )
அவிஸய விபர்யா ஸதயா யதா₂ர்த₂ம்,-(உள்ளவற்றை உள்ளபடி அறிந்த ஞானம்)
க்லேஸ கர்ம விபாகா ஸயாத்₃ யபராமர்ஸாத் –ஸ்வ பா₄விகத் வாந்-(இயற்கையாகவே) -நித்யம் ச சக்ஷுராதி₃கரண நிரபேக்ஷம்
ச தத₃பேக்ஷம் ச ஸ்வாதந்த்ர்யேண, (ஸ்வ தந்த்ர ஸங்கல்ப சக்தியால் )புண்ட₃ரீகாக்ஷத்வ(ஆனாலும் தாமரைக் கண்ணன் -நாம் அனுபவிக்க-ஸாஸ்த்ரத்தால் திருத்த ஒண்ணாத நம்மை வைமுக்யம் மாற்றி -ஈடுபாடு உண்டாக்கி -உபாயமாகக் கொடுத்து -உபாயமாகப் பற்றினார்க்கு போக்யமாய் இருக்குமே  )ஸூசி ஶ்ரவஸ்த்வாதே ₃꞉ ।
ந ச ரூப ரஸாதி₃க்₃ரஹணே கரண நியம:, ஸர்வேண ஸர்வ கார்ய ஸக்தே (எல்லாப் புலன்களாலும் எல்லாம் அனுபவிப்பான் )꞉ ;
ஸர்போ (அ)பி ஹி திர்யக்ஷு சக்ஷுஷைவ பஶ்யதி ஶ்ருணோதி ச
கத₂மித₃ம் ஸர்வ ஸக்தே ꞉ து₃ஶ்ஸகம் ?

யதோ₂க்தம் ஜயாயாம்,
* ஸர்வத꞉ ஶ்ருதி மாம்-ஶ்சாஸௌ யதா₂ த்₃ருக்  ச்₂ராவ கோரக₃꞉ இதி ।
கர தல ஆமலக விலோகதவத் அபரோக்ஷம் ச வைஸைத்₃யாத், அமோக₄ம் ச ஸர்வ நிர்வஹணாத்(வீணாகாத ஞானம்-அனைத்தையும் நிர்வஹி க்கிறானே  )।

யதா–விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் நாராயண வல்லி -1-12-
அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்

பஸ்யதி அசஷு ச ஸ்ருணோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்

ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும் உள்ளது

ஆஹுஶ்ச நாத₂முநிமிஶ்ரா꞉, –யோ வேத்தி 1-யுகபத் 2-சர்வம் 3-ப்ரத்யஷேண 4-சதா 5-ஸ்வத இதி (பல விசேஷணங்கள்)।
யத் கேசித் ஸர்வஜ்ஞமவஜஜ்ஞிரே ,–நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

எந்த ஹரி அனைத்தையும் ப்ரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறானோ

பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

ஸர்வஞ்ஞனான இவனை ஏளனம் பண்ணும் தொனியில்
ஏகே து ப்ரமாணேந சர்வஜ்ஜோ யேந கல்ப்யதே நூநம் ஸ சஷுஷா சர்வன் ரஸாதீன் ப்ரதிபத்யதே
ஒரு பிரமாணத்தின் மூலம் மட்டுமே அனைத்தும் அறிந்த ஸர்வேஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்று
அறிய முடிகிறது என்றால் அப்படிப்பட்டவன் தனது கண்கள் மூலமாகவே ருசி பார்ப்பது மற்றும்
இதர இந்திரியங்களை செய்யும் செயல்களை செய்பவன் என்று கொள்ளலாம் என்றும்
மேலும்

இதி, தத்₃
பவ் ₃த்₃தா₄த்₃ யநுமித ஸர்வஜ்ஞ விஷயம் (அனுமானத்தால் புத்த மத சர்வஞ்ஞத்வம் ); தத் ப்ரகரணாத், அந்யதா₂ ஸாஸ்த்ர விரோதா₄ச்ச ।
நித்யஸ் சேத அர்த்த வாதத்வம் தத் பரே ஸ்யாத் அநித்யதா 
ஸர்வேஸ்வரன் நித்தியமாக உள்ளவன் என்பது புகழ்ச்சிக்காகவே
அர்த்தவாதம் என்றால் அவன் நித்யன் அல்லன் ஸர்வஞ்ஞன் என்பவை இல்ல என்றதாகும் –

இதி ஸாஸ்த்ரீய
ஸர்வஜ்ஞத்வ வ்யுதா₃ஸநம் அத ஏவ அந்ய பரோக்தம் து₃ருக்தம் வா ;
சக்ஷு꞉ஶ்ரவ ꞉- ப்ரப்₄ருதிஷு காக உலூக க்₃ருதா₄தி₃ஷு(கழுகு கூர்மை கண் -காகம் ஏக கண் போல் )மந்த்ர ஸித்₃தௌ₄ஷத₄தப ꞉ ப்ரபா₄வாதி₃ஸம்ஸ்க்ருதேஷு ச கரணாநாம்
ஜ்ஞாந கார்ய வ்யதிஹார தந்த்ர தாப்ர கர்ஷ தாரதம்ய த₃ர்ஸ நாத் ;
ஸார்வஜ்ஞய ஸாஸ்த்ரஸ்ய அயோக்₃யார்த₂தா(அ)பி து₃ர்வதா₃ ।(இது தவறே ஆகும் -)

கு₃ணாந்தர வைசித்ரயே(அ)ப்யேஷைவ தி₃க் ।
அஸ்ய லவோ (சிறிய பகுதியாலேயே-சுடர் ஞான இன்பம் அன்றோ இவன்  )ப₃த்₃த₄முக்த நித்யேஷு சைதந்யம் ॥

எக் காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————

176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

த₃தி₄பா₄வம் ஆபத்₃ய மாந து₃க்₃தா₄தி₃காரணேப்₄யோ (பால் தயிர் ஆவது போல் )பே₄த₃கம் ஸத்யபி ஹேது அவிகார லக்ஷணம் மஹத்₃ வீர்ய மஸ்யேதி
மஹாவீர்ய ꞉ ।
அக₃ரு ம்ருக₃மத₃ கஸ்தூரிகா- குஸும் ஆமோத₃வத் ஸம்நிதி₄மாத்ரேண நிர் மர்யாத₃கார்ய காரீ ஹ்யயம் । யதா₂

தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே -மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
நறு மணம் என்பது மனிதனின் அருகில் உள்ள போது அவனை இழுக்கிறது
இதே போல் எம்பெருமான் கஷ்டப்படாமல் சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்-

இந்தத் திறனில் ஓர் அனுவின் அளவு அவர்களிடம் உள்ளதால் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் உள்ளனர் –

இதி-ஏதத₃ணுர் யோகீ₃ஶ்வர ப்ரம்ருதிஷ்வஷு அப்₄யத்வம் (இவனது வீர்ய லேசத்தால் யோகிகள் )॥

பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

பஸூ பதிமதாவக₃தாே ந ஸக்தி விகல நிமித்த மாத்ர வ்யாவர்திகா மஹதீ।
ஸக்திரஸ்யேதி
மஹா ஸக்தி꞉ ।(பாசுபத நிரசனம் -நிமித்த மாத்திரம் என்பர் -தான் உலகம் ஆகாது என்பர்-உபாதான காரணமாகவும் உள்ள மஹா சக்தி -செய்தேனும் ஆவேனும் யானே என்னும்  )
ஸா ஹி ஸாத₄ந க்₃ராம விநியோக₃ லக்ஷணா ஸ்வ ஸரீர ஏகதேஸ –
ஶீக்ருத ப்ரக்ருதி பரிணாம யோக்₃யதா லக்ஷணா ஸத்யா (அ)ஸத்யா வா ஸாமக்₃ரயா
ஸர்வதா₃ ஸர்வ ஸம்பாதி₃நீ ।
ஊர்ணநாபி₄ப்ரப்₄ருதே ꞉ கீடஸ்யாபி நிமித்தஸ் யைவ உபாதா₃நா –
ஸக்திர் அதர்க்யா , கத₂மியம் ஸர்வஜ்ஞ ஸக்திஸ் தர்க்யா ? அஸ்யா விப்ருட் ப்ரதா₄ந த₃தி₄- து₃க்₃தா₄தௌ₃ ப்ரதி க்ஷண பரிணாமித்வம் ॥

தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————-

178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்—பர நல் மலர் ஜோதி -ஜோதியாய் ஜோதி கீழ் உபாதான காரணத்வம் -இதில் சஹகாரி காரணத்வம்

ஸஹ கார்யபேஷா காரண வை லக்ஷண்ய கரம் தத₃ந பேக்ஷா லக்ஷணம் தேஜோ மஹத₃ஸ்யேதி
மஹாத்₃யுதி꞉ ।
யத் பா₃ஹ்யாந்தர தமோ விரோதி₄ ஸ்வ பர வர்க₃யோ꞉ க்ரமேண ரமணீயம் பீ₄ஷணம் ச ப₄வதி (அழகாகவும் பயங்கரமாயும் )।
அஸ்ய பி₃ந்து₃ர்  த்₄யு மணி மாணிக்யாதௌ₃ ப்ரகாஸ ꞉ ।

ஷட்ஸு சாமீஷு மஹத்த்வ விஸேஷேண (ஆறிலும் மஹத் அடைமொழி )நைதேஶே யத கு₃ணா꞉ கல யைவ பராவரம் கார்ய கலாபம் ப்ரவர்த்ய 
அஸேஷேண லப்₃தா₄மிஷா மஹோத₃தா₄விவ மஹௌகா₄ ப ₄க₃வத் யநந்தே மாந்தீதி நிவேத்₃யதே ।
அதி ப்ரதி₂தேயம் ப்ரகியா(மிகவும் பிரசித்தம் அன்றோ )

பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர–6-8-
இவனுடைய சக்தி என்பது உயர்ந்ததும் பல விதமாகவும் காணப்படுகிறது
இவை இவனுக்கு இயற்கையாகவே உள்ளது
இப்படியாகவே இவனுக்கு ஞானம் பலம் ஸ்ருஷ்டிக்கும் திறன் போன்ற பலவும் உள்ளன

தேஜோ பல ஐஸ்வர்ய மஹா வபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் ஞானம் வீர்யம் மற்றும் சக்தி – ஆகிய பலவற்றுக்கும் இவனே இருப்பிடம் ஆவான்

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-
தாழ்வான குணங்கள் என்பதற்கு எதிர்த்தட்டாகவும்
பூர்ணமாகவும் உள்ள ஞானம் பலம் சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்பதாகவும் உள்ள குணங்களே பகவான் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுகின்றது

இத்யாதௌ₃ ।
ப ₄க₃வச் சா₂ஸ்த்ராணி
காத்ஸ்ந்யேந இத₃மர்தா₂நி ।
ஏஷு ஷட்ஸ்வேவ ஸௌஶீல்ய வாத்ஸல்யாத₃யோ (அ)க₃ணித கு₃ணா꞉ கேநாபி ப்ரயோஜ(கே )ந அநந்தர் –
பா₄வ்யந்தே ॥

பகவத் ஸாஸ்த்ரம் இந்த பூரணமான ஆறு குணங்களும் இயற்கையாகவே இருப்பதையே காட்டும்
ஸுசீல்யாதி குணங்கள் இவற்றுக்குள்ளேயே அமைந்தவை –

173-தொடங்கி -178- வரை உள்ள ஆறு திரு நாமங்களிலும்
மஹா அடைமொழி –
எம்பெருமான் குணங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியே எத்தனை பெரிய செயல்களாக
இருந்தாலும் அல்பமாகவே முடிக்கும் படி ஆகும் என்பதைக் காட்டும்
பெரிய கடலில் நதி போலவே ஆகும் என்று காட்டும்

சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34-
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
ஸூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது

இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————

179-அநிர்தேச்ய வபு –
ஒப்பிட்டுச் சொல்ல முடியாத திரு மேனி –படி என்று உரைக்கலாம் படி அல்லவே அவன் படி -பொன்னப்பன் –தன் ஒப்பார் இல்லா அப்பன்

ஏதத் ஷாட் கு₃ண்ய விக்₃ரஹத்வாத்
அநிர்தே₃ஶ்ய வபு꞉ । யதா₂

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலந தேஜஸம்–மவ்ல ஸம்ஹிதை
இவனது திவ்ய மங்கள விக்ரஹம் பஞ்ச உபநிஷத் மயம் –
கொழுந்து விட்டு எறியும் அக்னி போன்ற தேஜஸ்

புத்தி மனஸ் அங்க பர்யங்க வத்தாம் பகவதி லக்ஷயா மஹே சாஸ்த்ர சப்தேப்யோ புத்திமாந் அங்க ப்ரத்யங்கவாந்-மவுல சம்ஹிதை 
எம்பெருமானிடம் சிறந்த புத்தி உயர்ந்த மனம் உன்னதமான சரீரம் நேர்த்தியான அங்கங்கள்
ஆகியவை உள்ளன என்று ஸாஸ்த்ரங்கள் கோஷிக்கும்

இதி நிருக்தம் சைதத்
யே புத்தி மநோ அங்க ப்ரத்யங்க வந்தோ பவந்தி- சாப்த (மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் ஆகியவை ஏழும் )மஹாபவ்தி காஸ்தே பவந்தி
கிமாத்மிகா நு க₂ல்வியம் ப₄க₃வதோ வ்யக்தி꞉, இதி பவ்₄திகத்வ மாஸங்கயே , உத்தரயதி
*ப₄க₃வ₃தாத்மிகை வைஷா ப₄க₃வதோ வ்யக்தி꞉, (அவராலே ஆக்கப்பட்ட திவ்ய மங்கள விக்ரஹம் )யதா₃த்மகோ ஹி ப₄க₃வான், ததா₃த்மி-கைவைஷா; கிமாத்மகஶ்ச ப₄க₃வான் ?
ஜ்ஞாநாத்மக꞉ ஐஶ்வர்யாத்மக꞉, ஸக்த்யாத்மக꞉ ।(ஞான ஐஸ்வர்ய சக்தி மயம் )

யதா₂, அங்கா₃ர꞉ கா₂தி₃ர꞉ ஸால்மலோ வா (இலவம் பஞ்சு )ஸுப்ரதீ₃ப்த꞉ ஸர்வதோ (அ)க்₃நிரேவ ஸ்யாத், யதா₂,
வா மது₄பாத்ரம் ப்ரபீய மாநம் ஸர்வதோ மது₄ரமேவ ஸ்யாத்,

யதா₂
வா ஸுவர்ண பிண்டோ ₃ நிக்₄ருஷ்யமாண꞉ ஸர்வத꞉ ஸுவர்ணமேவ ஸ்யாத்,

யதா₂
வா ப்ராஸாத₃ ஆலோக்ய மாந ꞉
ஸர்வதோ த₃ர்ஸ நீய ஏவ ஸ்யாத் ஏவம் ப₄க₃வான் ஸர்வதோ ஜ்ஞாந மேவ , ஸர்வத ஐஶ்வர்யமேவ , ஸர்வதஶ் ஸக்திரேவ ,
யதி₃ச்சே₂த் தத்₃ப₄வேத் * இத்யாதி₃நா ।
ஏஷ ஏவ பஞ்ச உபநிஷத்₃விஷயோ வக்ஷ்யதே ।

சுத்த சத்வ மயேன ஹி அநேந கநக தலேந இவ ரத்னம்
உந்மீல்யதே ஷட் குணீ ச து த்ரி குண மயேந இவ நிமீல்யதே–பஞ்ச உபநிஷத்
ஒளி வீசும் ரத்னத்தை தங்கத்தில் வைத்து இழைக்கும் போது அது மேலும் ஒளி வீசுகிறது
அதே போல் ஆறு குணங்கள் பரிபூர்ணமாகக் கொண்ட எம்பெருமான் தனது ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹம் மூலம் மேலும் பிரகாஸம் கொண்டவனாக உள்ளான்

ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-
தனது ரூபம் மற்றும் வர்ணம் ஆகியவற்றால் எம்பெருமான் ஒப்பில்லாதவனாக உள்ளான்
நிர்த்தேச விசேஷணம் -உபமானமாகக் கூறும் பொருள்
தத் வர்ஜித -அப்பிடி ஏதும் இல்லா ஒப்பில்லா அப்பன்

யே புத்தி மநோ அங்க ப்ரத்யங்க வந்தோ பவந்தி சாப்த மஹா பவ்திக ஆஸ்தே பவணந்தி -நிருக்தம்
யார் ஒருவன் புத்தி மனம் அங்கங்களுடன் கூடியவனாக உள்ளானோ அவர்கள் ஏழு மஹா பூதங்களால் ஆனவர்கள்

பகவத்பாத் மிகைவ ஏஷா பகவதோ வ்யக்தி யதாத்மகோ ஹி பகவான் தத்தாத்மிகை வைஷா
கிமாத்ம கச்ச பகவான் –என்ற கேள்வியை எழுப்பி மேல் பதிலும்
ஞானாத்மக ஐஸ்வர்யாத்மக சக்த்யாத்மக யதா அங்கார காதிர சால்பலோ வா ஸூ ப்ரதீப்த ஸர்வதோ அக்னி ரேவ ஸ்யாத்
யதா வா மது மாத்ரம் ப்ரபீயமாநம் ஸர்வதோ மதுரவமேவ ஸ்யாத்
யதா வா ஸ்வர்ணா பிண்டோ நித்ருஷ்ய மாணா ஸர்வதா ஸ்வர்ண மேவ ஸ்யாத்
ஏவம் பகவான் ஸர்வதோ ஞானமேவ ஸர்வதஸ் ஐஸ்வர்ய மேவ ஸர்வதஸ் சக்தி ரேவ யதிச்சேத் தத் பவேத்
கட்டடங்க ஞான ஐஸ்வர்ய சக்தி மயமாகவே உள்ளவன் –

ஞான பல சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் பூரணன்
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -1-6-3-
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம் பரன் –8-8-2-
ஒருவரையும் நின் ஒப்பார் இலா என்னப்பா -பெரிய திரு மொழி -8-1-2-

மேற் சொன்ன ஆறு குணங்களை உடையவர் ஆதலால் தமது திருமேனிக்கு உவமை இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மீண்டும் -662-வரும்
தனக்குத் தானே பிரகாசிப்பதால் இது இப்படி என்று சுட்டிக் காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாத திருமேனி உடையவர் -பூத சம்பந்தம் இல்லாத திரு மேனி -உபமானம் இல்லாதவர் –
மன்மதனை உண்டாக்கியவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————

180- ஸ்ரீ மான் –
திவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் –ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –

தத₃நுரூபயா (திருமேனிக்குத் தக்க )தி₃வ்ய பூ₄ஷண ஸம்பதா₃ நித்ய யுக்த꞉
ஶ்ரீமான் ॥

உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

22- -222-நாமாவளி மீண்டும் உண்டே

பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

—————-

181-அமேயாத்மா –
அளவிட்டு அறிய முடியாதவன் –முன் 103-அப்ரமேய -46

இத்த₂ம் விவித₄கு₃ண ரூப அநுரூப  அம்போ₄தி₄(கடல் போல்)க₃ம்பீ₄ர₄பாவ ꞉
அமே யாத்மா

அளத்தற்கு அரியாய் ஆதிப் பெரு மூர்த்தி எம்பெருமானை ஆரே அறிவார்
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56

இவ்வாறு பல்வகைக் குணங்கள் நிரம்பிக் கடல் போல் இருப்பதால் அளவிட முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எவராலும் அறிய முடியாத ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -லஷ்மியால் அளவிடப்படும் ஆத்மாவை உடையவர் -என்பதனால் –
ஸ்ரீ மாநமேயாத்மா -என்று ஒரு திரு நாமமாகவும் கூறுவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————–

அவதாரிகை
இனி –தத₃நுகு₃ண ய தே ₂ஷ்ட விஹார ஸேஷ்டித-குணங்களுக்குத் தக்க செயல்கள் கூறப்படுகின்றன

3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-

182-மஹாத்ரி த்ருத் –
பெரு மலையைத் தாங்குமவன்-மஹாத்ரி த்ருக்--பாட பேதம்

அத₂ தத₃நுகு₃ண ய தே ₂ஷ்ட விஹார ஸேஷ்டித꞉
மஹா த்₃ரித்₄ருத்,
மஹாந்தம் மந்த₃ரம் மத₂நே த்₄ருதவான்

மஹா கூர்மமாய் -மந்தர மலை –ஒரு சுண்டு விரலால் கோவர்த்தன மலை
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த எம் கூத்தாவோ -7-6-3
குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளன் -முதல் திரு -86–

பாற் கடல் கடைந்த போது மந்தர மலையைத் தாங்கியவர் –
அதற்குத் தகுதியாகத் தம் விருப்பப்படி செயல்படுபவர் -மஹாத்ரி த்ருக்–பாட பேதம் –ஸ்ரீ பராசர பட்டர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம் கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-

——-

183-மஹேஷ் வாஸ –
சர மழை பொழிபவன் -வில்லாளி-

ததா₂ மஹாந் – மயநோ ஹாரீ, இஷூணாமாஸ꞉ ஷேப : ஸிந்து₄ப₃ந்த₄-த₃ஸ கந்த₄வதா₄தௌ₃
யஸ்ய ஸ꞉,
மஹேஷ்வாஸ꞉

தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா -6-10-4
சார்ங்கம் உதைத்த சர மழை -திருப்பாவை -4-

அணை கட்டும் ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து — வில் எடுக்கவே சமுத்திர ராஜன் -சாகரம் சோக்ஷயிஷ்யாமி

அம்பாய் இருந்து அக்னி கங்காய் வருமே-வில்லைப் பிடித்தவர் என்றாலே அம்பை விட்டவர்

சேது பந்தனம் ராவண வதம் போன்றவைகளில் மனம் கவரும் வகையில் பாணங்களை எய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -உயர்ந்த இச்சையை உடையவர் –
எங்கும் நிறைந்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

184-மஹீ பர்த்தா-
பூமியைத் தரிப்பவன் -ஆதி கூர்மமாக -வராஹ பிரானாய்-

லலித₄தரணீே ப₄ரணஶீல ꞉
மஹீ ப₄ர்தா–

எயிற்றிடை மண் கொண்ட வெந்தை -பெரியாழ்வார்
நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6-

பூமியைக் காப்பவர் -ஆதி கூர்ம ரூபியாய் எப்போதும் மிகவும் எளிதாக பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வராஹ அவதாரம் செய்து கடலில் முழுகிய பூமி தேவியைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமி தேவிக்குக் கணவர் -விழாக்களுக்குத் தலைவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் மன்மதனுக்கும் பிரபு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————–

185-ஸ்ரீ நிவாஸ-(மீண்டும்-614)

இதி ச மத₂ந ஸமாநீத லக்ஷ்மீ சாடுகார வஷோ (அ)தி₄ராேபணாதி₃
தி₃வ்ய ஸேஷ்டா பரம்

பஸ்யதாம் சர்வ தேவாநாம் யாயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம்

அலர் மேல் மங்கை உறை மார்பன் -6-10-10
என் திரு வாழ் மார்வர் -8-3-7-
மலிந்து திருவிருந்த மார்பன் -மூன்றாம் திரு -57

அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்தான் அன்றோ-

பாற் கடல் கடைந்து பெற்ற ஸ்ரீ லஷ்மியை மார்பில் வைத்துச் சிறப்பித்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

திரு மார்பில்,லஷ்மி எப்போதும் பிரியாமல் வசிக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடத்தில் ஸ்ரீ லஷ்மி வசிக்கப் பெற்றவர் -லஷ்மியை நடத்துபவர் -எல்லா இடத்திலும் வசிப்பவர் –
அனைத்தையும் மறைப்பவர் -தம் உடையாகக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

186 ஸதாங்கதி –
பக்தர்களுக்கு புகலாய் உள்ளவன் –

ஸ்வச்ச₂ந்த₃சேஷ்டி தைரபி ப்ரணத ப்ரிய கர꞉ ||

புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
மீண்டும் -451- பற்றிலார் பற்ற நின்றவன்

அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே

சாதுக்களுக்கு கதியானவர் -தமது விளையாட்டுச் செயல்களாலும் பக்தர்க்கு நன்மையே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைதிகர்களான சாதுக்களுக்குப் புருஷார்த்த கிடைக்க சாதனம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தோடு கூடிய முக்தர்களுக்கு புகலிடமாக இருப்பவர் –
துயரப்படுபவர்களும் ஞானிகளுக்கும் புகலிடம்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————-

அவதாரிகை
இனி அநேக அவதாரங்களும் வேராக உள்ள இந்த அநிருத்த அவதாரத்தில் இருந்து
வரும் ஹம்ஸாவதாரம் கூறப்படுகிறது

3-6- ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்

187- அநிருத்த-
ஒருவராலும் தடை செய்ய முடியாதவன் –

ஏவம் நிர்த்₄ருத நிரோத₄ நிரவதி₄க ஜீவ லோக ஜீவா து தி₃வ்ய சேஷ்டித: அநிருத்₃த₄꞉ ।
*அபரிமித சேஷ்டோ ப₄க₃வாந நிருத்₃த₄꞉, இதி மௌலா ꞉ ॥

விபவ அவதார கிழங்கு – பாற்கடலில் துயிலும் -அநிருத்த பகவான்–நினைவூட்டும்
அநிருத்தன் நின்றும் அவதரிக்கும் ஹம்ச ரூபியைச் சொல்லும்
ஏழு உலகும் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-
மீண்டும் -644-

அளவற்ற ஜீவ ராசிகளைக் காப்பாற்றுவதில் தடையற்ற திவ்ய சேஷ்டிதமுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் தடுக்கப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தடுக்கப்பட முடியாதவர் -ஞானிகளுக்குத் தடையில்லாதவர் -முக்ய பிராணனின் பக்தர்களால் தத்தம் இதயத்தில்
கட்டுப்படுபவர் -வேதத்துக்கு விரோதமான ஆசாரம் உடையவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————

188-ஸூராநந்த –
அமரர்களை களிப்பூட்டும் பெருமான் -ரஷிப்பவன்-

அஸ்யா நிருத்₃த₄ஸ்ய அவதார கந்த₃ஸ்ய ஹம்ஸ அவதார꞉ ।
ஆபத் ஸக₂ த்வேந ஸுரா ஆநந்த₃ந்த் யஸ்மாதி₃தி
ஸுராநந்த₃꞉

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் வணங்கி -1-5-2-

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று-பற்றத் தக்கதையும் விடத் தக்கதையும் காட்டுமா போல் பாலையையும் நீரையும் பிரித்துத் தருமே

ஆபத்தில் உதவி செய்து தேவர்களை மகிழ்விப்பவர் -திருவவதாரங்களுக்கு மூலமான அநிருத்தருடைய
ஹம்சாவதாரம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்ல ஞானத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————

189-கோவிந்த –
தேவர்களால் துதிக்கப் படுபவன்
கோ -சொல் -ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
மீண்டும் 543-பூமியை மீட்பவன் ரஷிப்பவன்

தத்₃க₃வாம் ஸ்துதி கி₃ராம் விந்த₃꞉
கோ₃விந்த₃꞉ ।
* க₃வாதி₃ஷு விந்தே₃ஸ் ஸம்ஜ்ஞாயாம் இதி ஸ ꞉।
தை ꞉ ஸுஶர꞉ ஸ்தூய மாந உபகார꞉ ॥

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் விரும்பித் தொழும் மாலார் -5-1-8-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -திருப்பாவை -27-

அஷ்டாத்யாயீ –கவாதிஷு விந்த ஸம்ஜ் ஞாயாம் –
வாக்கு என்பதைக் குறிக்கும் கோ சொல் -அடைதல் என்பதைக் குறிக்கும் விந்த-இணைந்து கோவிந்த ஆனது

க₃வாம் ஸ்துதி கி₃ராம் விந்த–அத் தேவர்களின் துதி ஆகிய வாக்குகளைப் பெறுபவர் -கோ வாக்கு–ஸ்ரீ பராசர பட்டர் –

மறைந்து போன பூமியை எடுத்தவர் -இதனால் தேவர்களால் கோவிந்தா என்று ஸ்துதிக்கப் பட்டவர்
பசுக்களுக்கு இந்திரன் என்று ஸ்துதி
அடியார்களை பூமியையும் வாக்கையும் அடையும்படி செய்பவர் என்று முனிவர்களால் ஸ்துதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமி வில் பசு ஸ்வர்க்கம் வேதம் ஆகியவற்றை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————–

190-கோவிதாம் பதி
சொல் அறிபவர்களுக்கு ஸ்வாமி –வேத வாக்குகள் அறிந்தவர் கோ விதா
யஞ்ஞத்தால் ஆராதிக்கப் படுமவன்

கா₃வ – வேத₃கி₃ர꞉, தத்₃விதா₃ம்- ஞானிநாம் ஜ்ஞாந -யஜ்ஞ -ஆராத்₄யத்வேந பாதா
கோ₃விதா₃ம்பதி꞉ । யதா₂

ஹம்ஸ மூர்த்திம் அத ஆத்மாநம் ஞான யஜ்ஜ புஜம் ஸ்மரேத்
தான் செய்கிற ஞானம் என்கிற வேள்வியை ஏற்றுக் கொண்டு அதனை அனுபவிப்பவனும்
அன்னம் போன்று உருவம் எடுத்தவனும் ஆகிய எம்பெருமானை ஒருவன் த்யானிப்பானாக –

காவ -என்று வேதங்களின் சொற்கள் — த்விதாம் என்று அவற்றை நன்கு அறிந்தவர்களின் ஞானம் என்கிற
யஜ்ஜம் மூலம் ஆராதிக்கப்படுபவன்

வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரத்தாதியான் -9-10-9-
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர் கை தொழ விருந்தாய் -5-7-5-

வேதங்களை அறிந்த ஞானிகளால் ஞானம் என்னும் யஜ்ஞத்தினால் ஆராதிக்கப் பெற்று அவர்களைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வாக்குகளை அறிந்தவர்களுக்கு விசேஷமாகத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை அறிந்தவர்களுக்கு பத்தி -நீர் வாழ்வானவற்றுக்குத் தலைவன் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———

மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூ பர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூ தபா பத்ம நாப ப்ரஜாபதி–21-

——–

191-மரீசி-
கிரணமானவன் -ஒளியைச் சொல்கிறது-

ஏவம் ஜநுஷா அந்தே₄ப்₄யோ(அ)பி ஜந்துப்₄ய ப்ரகாஶித நிர்மல ரூப ꞉
மரீசி꞉ ।(பிறவியிலே கண் தெரியாமல் இருந்தாலும் காடசி கொடுக்கும் படி -குற்றம் அற்ற தூய்மையான ஒளி படைத்தவர்-காட்டவே காண கண் வேண்டாமே
இதே பெயரிலேயே ஒரு ரிஷியும் உண்டே )
* ம்ருகணிப்₄யாமீசி꞉। ம்ருங் அத்ர தீ₃ப்திகர்மா । யதா₂

குந்த இந்து ஸ்நிக்த காந்திச்ச–குருக்கத்தி மலர்– சந்த்ரன் போன்று கதிர் பொருக்கி உபமானம் சொல்லத் தேடலாம்-ஹம்ஸ த்யான ஸ்லோகம்

உணாதி ஸூத்ரம் –ம்ரு கணிப்யாம் ஈசி —ஒளிறுதல் என்ற பொருள் கொண்ட ம்ரு –
மலர்தல் என்ற பொருள் கொண்ட க என்னும் பதங்களுடன் ஈசி என்ற எச்சம் சேரும்
ம்ருங்–பிரகாசத்துடன் இருத்தல் என்றவாறு –

குந்த மலர் குருக்கத்தி போலவும் நிறை மா மதி போலவும்
ஆதி அம் சோதி என்கோ வானவர் போகம் என்கோ ஒளி மணி வண்ணனையே -3-4-4-

பரம் ஜோதி அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் நமக்கும் -ஒண் சுடர் கற்றை உயர் வினையே தரும்-

மூடர்களுக்கும் தமது மாசற்ற ரூபத்தைக் காட்டுபவர் -குருக்கத்தி மலர் போலவும் பூர்ண சந்திரன் போலவும் அழகிய ஒளி யுள்ளவர் -ஹம்ஸ த்யான ஸ்லோகம் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஒளி உள்ளவர்களுக்கும் ஒளியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இருளை அழியச் செய்பவர் -நீருள்ள மேகங்களை அசையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

192-தமந-
அடங்கச் செய்பவன் –தமயதி இதி தமந -சம்சார தாபத்தை அடங்கச் செய்பவன் போக்குமவன்

காந்தி மந்தா₃கிநீபி₄꞉ ப₄வ தாபம் த₃மயதீதி
த₃மந ꞉ ॥(மந்தாகினி -கங்கைக்கும் சித்ர கூட ஆற்றுக்கும் பெயர் )

சார்ந்த இரு வல் வினைகளையும் தவிர்த்து மாயப் பற்று அறுத்து-சமம் தமம்-உள்ளும் புறமும் இந்திரிய அடக்கம் -நீராடப் போதுவீர் ப்ரஹ்ம ஸம்ஸ்லேஷம்

உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றை -1-3-4-
திகழும் பவளத் தொளி யப்பன்–பெரிய திரு மொழி -7-10-6-

கங்கை போன்ற திவ்ய மங்கள விக்ரஹ  ஒளியினால் சம்சார தாபத்தை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் கடைமைகளில் தவறுபவர்களை தண்டிக்கும் மனுவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்திரியக் கட்டுப்பாடு உள்ளவர்களை நடத்துபவர் -தமனாசுரனை அழித்தவர்-புலன்களை
அடக்கியவர்களுக்கு இனியவர் -விருப்பத்தை நிறைவேற்றும் மனமுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————–

193-ஹம்ஸ-
ஹம்சாவதாரம் பண்ணுமவன்
ஹம்ஸ -அழகிய நடை -மோஹனமான புன் முறுவல்

 ஏவம் ? ஹம்ஸ꞉ ஹந்தா சங்காநாம் –பந்தங்களை அழிப்பவன்

ஹம்ஸ –மநோ ஹரம்–அழகு –ஹந்தி -கச்சதி -நடப்பவன் –ஸ்ம்யதே -புன்னகை–அழகாக நடப்பவன்–புன்னகை செய்பவன் – என்றவாறு

கீழே தன்மைகளைச் சொல்லி யார் என்ன ஹம்ஸம் இங்கு–சரித்திரமும் சாரித்ரமும் -நடை அழகும் ஆச்சார நடைமுறையும் –
ஸ்வரூப ரூபங்களை சொல்லி திரு நாமம் ஆழ்வார் -வண் புகழ் நாரணன் சேர் -என்று அருளிச் செய்தது போல்

ஹம்ஸ –ஸிம்ஹ–எது முன் பின் என்றாலும் அவன் அத்விதீயம்

சத் சத்த்வ ஸூப ஆஸ்ரய பரம ஹம்ஸாய -த்யான ஸ்லோகம் -ஸூத்த ஸத்வ மயம் -பரம ஹம்ஸ பரி வ்ராஜாய -எங்கும் சுற்றித் தைரியம் பரம யோகிகள்
அன்னம் -நாத யாமுனாதிகளை –
அள்ளலில் ரதி இன்றி –மானஸரோவர் ஸஹஸ்ர தள தாமரையில் அமர்ந்து
விவேக ஞானம் அறிந்து –
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அங்கு அரு மறையை வெளிப்படுத்திய அம்மான் தன்னை
திரு நறையூர் பெண்கள் -வெட்க்கி -அன்னம் -ஹம்ஸ வாஹனம் -ஆழ்வார் எம்பெருமான் கருட சேவை பிரசித்தம்

ப்ருஷத் மற்றும் உதர சேர்ந்து புருஷோதர ஆமாம் போல் ஹந் என்பதும் ஸ என்பதும் சேர்ந்து ஹம்ஸ

இதிமௌலா ꞉ ।
மநோஹர ஹந்தி – க₃ச்ச₂தி, ஸ்மயத இதி வா ஹம்ஸ꞉ । ப்ருஷோ த₃ராதி₃த்வாத் ஸாது₄꞉ ।

சத் சத்த்வ ஸூப ஆஸ்ரய பரம ஹம்ஸாய -ஸூத்த ஸத்வ மயமான மங்களகரமான திவ்ய மங்கள விக்ரஹம் –
அன்னமான பரம் பொருள் என்றவாறு –

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப் படுத்த வம்மான் -திரு நெடு -30
சுத்த சத்வ -ஸூபாஸ்ரய –பரம ஹம்ஸாய த்யான ஸ்லோகம்
அச்சுதன் அமலன் என்கோ கனி என்கோ பால் என்கோ -3-4-5-
பால் -சுத்த சத்வம் -அமலன் -சுத்தன் –

பற்றுக்களை அறுப்பவர் -அழகாக நடப்பவர் – அழகிய புன்சிரிப்புள்ளவர்—ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன் கூடிய ஸ்ரேஷ்டமான ஹம்ஸ அவதாரம் செய்த பகவான் -த்யான ஸ்லோகம் ஸ்ரீ பராசர பட்டர் –

நானே அவன் என்று பாவிப்பவர்களுக்கு சம்சார பயத்தை அழிப்பவர் -எல்லா உடல்களிலும் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தோஷங்கள் அற்றவன் -சாரமானவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

194- ஸூபர்ண-
அழகிய சிறகுகளை யுடையவன்-பர்ணம் சிறகுகள் -ஸம்ஸார பாரம் கடத்தி

ஸோபந பர்ணத்வாத் ஸம்ஸார பார நயநாத் வா
ஸுபர்ண꞉ இதி நைருக்தா꞉ ॥

ஸூபர்ணோ ஹி கருத்மான்
சம்சார கடலை கடக்க-உனது பேர் அருளால் இக்கரை அடைந்து இளைத்து இருந்தேன்
அணை -சேது -அக்கரை ஸம்ஸாரம் -இக்கரை ஸ்ரீ வைகுந்தம் -ஆழ்வார் திரு உள்ளம்
தவா ஸூபர்ணா-இரண்டு பறவைகள் மரத்தில் ஸ்ருதி
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வருவான் -நாச் -14-3
மீண்டும் -859-தாண்ட உதவுமவன் -தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

ஹம்சாவதாரத்தில் அழகிய சிறகுகளை உடையவர் -சம்சாரக் கடலினின்றும் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
859-மீண்டும் வரும்

அழகிய சிறகுகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஆனந்தத்தை ஸ்வரூபமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————

ஏழு திரு நாமங்கள் ஹம்ஸாவதாரம்
மேல் பத்ம நாப அவதார திரு நாமங்கள்

*பத்₃மநாபோ₄(அ)மர ப்ரபு₄ரித்யத்ர வ்யூஹ பஶ்சிமோ (அ)நிருத்₃த₄꞉ பத்₃ம நாப₄ உக்த꞉ ।₄
இஹ ப்ராதுர் பாவ ப்ரதம பத்ம நாபோ விவக்ஷ்யதே

பத்மநாப–48- அமரப்ரபு–49–என்று வ்யூஹத்தில் -பஶ்சிம-கடைசியில்  அனிருத்தனான பத்ம நாபன் கூறப்பட்டார் –இஹ ப்ராதுர் பாவ ப்ரதம-அவதாரத்தில் முதலில்

முன் பத்ம நாபோ அமரப்பிரபு -என்னும் இடத்தில்
வாஸூ தேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ரர்கள் என்னும்
வ்யூஹ அவதாரங்களில் கடைசியான அநிருத்தர் என்னும் பத்ம நாப அவதாரம் கூறப்பட்டது
இங்கு விபவ அவதாரங்களில் முதன்மையான விஷ்ணு எனப்படும்
பத்ம நாப அவதாரம் சொல்லப்படுகிறது

3-7- பத்ம நாபாவதாரம்-195-199-

195-புஜகோத்தம –
திரு அநந்த ஆழ்வானுக்கு ஸ்வாமி -புஜகம் -ஆதி சேஷன் -தஸ்ய உத்தம -சேஷி

புஜகஸ்ய  சேஷஸ்ய உத்தம –புஜகஸ்ய–என்றால் ஆதி சேஷன் — உத்தம -மேம்பட்டவன் –ஸேஷீ – அநந்த போக₃பர்யங்க ஸயந-ஆக ஆதி சேஷனுக்கு சேஷி என்றவாறு

மாநசே அநந்த சயநே திவ்ய போத தநு விபூ
மநோ மயமான அநந்தன் என்னும் சயனத்தில் திவ்யமான ஞானத்துடன் கூடி உள்ளவன்

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம்–பலம் அதுலம் -ஐஸ்வர்யம் அகிலம் – -ஸ்தோத்ர ரத்னம்

ஸூஷ்வாப பகவான் விஷ்ணு அப் ஸய்யாம் ஏக ஏவ ஹி நகஸ்ய போகே மஹதி சேஷஸ்ய அபித தேஜச–மஹா பாரதம்-ஆரண்ய பர்வணி –என்றும்
அளவற்றதும் தேஜஸ் கொண்டதும் ஆகிய ஆதி சேஷன் மேல் ஈடில்லாத பகவான் விஷ்ணு –அப் ஸய்யாம்-திருப்பாற் கடலில் சயனித்துள்ளான் –

போகி சய்யா கத சேத த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹித–ஸ்ரீ விஷ்ணு புராணம்
மூன்று உலகங்களையும் உண்ட திருப்தியுடன் ஆதிசேஷன் என்னும் படுக்கையில் சயனித்து உள்ளான் –

அனந்தன் மேல் கிடந்த புண்ணியன் -திருச்சந்த -45
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் -திரு விருத்தம் -62-

வான் இளவரசு வைகுண்ட குட்டன்
ஆதிசேஷன் மடியிலும்
கருடாழ்வார் சிறகின் கீழும்
விஷ்வக் சேனரின் பிரம்பின் கீழும் வார்த்தைக்கும் தத்வம்

ஆதிசேஷனுக்கும் மேற்பட்ட தலைவராய் அவன் மீது சயனித்து இருப்பவர் -சர்ப்பங்களுள் சிறந்தவரான ஆதி சேஷனுக்கும் மேம்பட்ட சேஷியாகிய ஸ்வாமி
மநோ மயமான ஆதி சேஷன் என்னும் சயனத்தில் திவ்ய ஞான வடிவமாக விளங்கும் பிரபு -த்யான ஸ்லோகம் –
பத்மநாப–48- அமரப்ரபு–49–என்று வ்யூஹத்தில் கடைசி அனிருத்தனான பத்ம நாபன் கூறப்பட்டார் –
இங்கு அவதாரத்தில் முதல்வரான பத்ம நாபர் கூறப்படுகிறார் புஜகோத்தமர் என்று -ஸ்ரீ பராசர பட்டர் –

பாம்புகளில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த பாம்பாகிய ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

196-ஹிரண்ய நாப –
எழில் உந்தியான் –இவ்வாறு விவரித்து மேல் பத்ம நாபன்
கொப்பூழில் எழு கமலப் பூவழகன் -நாச்-11-2
தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1-

ஸுந்தர்ய நீர் வீழ்ச்சி –கிரீடத்தில் இருந்து -கொட்ட –
கண்கள் அவயவங்கள் அழகு சேர்ந்து -அகன்ற திருமார்பில் வெள்ளம் –
சிறிய இடத்தில் சூழல் -உந்தி

அவரே அழகான நாபியை யுடையவர்-சர்ப்பங்களுள் சிறந்தவரான ஆதி சேஷனுக்கும் மேம்பட்ட சேஷியாகிய ஸ்வாமி-மநோ மயமான ஆதி சேஷன் என்னும் சயனத்தில் திவ்ய ஞான வடிவமாக விளங்கும் பிரபு -த்யான ஸ்லோகம்  -ஸ்ரீ பராசர பட்டர் –

தங்கம் போலே அழகிய நாபியை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹிரண்யாஸூரனை அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

197-ஸூதபாஸ் ச
சிறந்த ஞானம் உள்ளவன்-ஞானக் கண்ணால் சாக்ஷியாக வைத்து மீண்டும் படைக்க –

ஸூதபாஸ் ச
தபோ – ஜ்ஞாநம், ஸம்ஹ்ருத ஸாக்ஷி। தத்₃த்₄யாநே ,
* தி₃வ்யா போத தநுர் விபு₄꞉இதி

நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி -4-8-6-

ஞான மூர்த்தி ஞானப்பிரான் -அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

திவ்ய ஞானம் உள்ளவர் -திவ்ய ஞான வடிவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நர நாராயண ரூபத்துடன் பத்ரிகாஸ்ரமத்தில் சிறந்த தவம் புரிபவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகனாகிய பிள்ளையைக் காப்பவர் -மங்களகரமான ஞானம் உடையவர் –
விருப்பமான சோம ரசத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————-

198-பத்ம நாபன் –
கீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது –இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347-

ஹிரண்ய நாபத்வ பத்₃ம நாபத்வே ப்₃ராஹ்மோக்தே

கதாசித் தஸ்ய ஸூப்தஸ்ய நாப்யாம் காமாத் அஜாயத திவ்யம் அஷ்ட தளம் பூரி பங்கஜம் பார்த்திவம் மஹத்
யஸ்ய ஹேம மயீ திவ்யா கர்ணிகா மேரு உத்யதே –ப்ரஹ்ம புராணம் —
யோக நித்திரையில் உள்ள எம்பெருமானின் ஸங்கல்பம் மூலம் அவனுடைய திரு நாபியில் இருந்து
இந்த பூமியின் ரூபமாக அழகான எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை வெளிப்பட்டது
அதன் தங்க மயமான காயானது மேரு என்பதாகும் –

பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -தேவும் எப்பொருளும் படைப்பதற்காகவே
கீழ் அமரப் பிரபு வ்யூஹத்தில் இறுதி அநிருத்தன்
இங்கு அவதார முதல்-தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன்
மேல் 348 பத்ம நாபா அரவிந்தாக்ஷன் -திவ்ய மங்கள விக்ரஹத்துடன்

நாபியில் பத்மத்தை யுடையவர் -மேல் சொல்லிய பொன் மயமான கமலத்தை நாபியில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர்-ஹ்ருதயக் கமல மத்யத்தில் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————-

199-பிரஜாபதி –
பிரஜைகளுக்கு ஸ்வாமி
தேவர்களுக்கு எல்லாம் தேவன்

தத் பத்₃மோத்பவ ப்ரப்₄ருதீநாம் –
ப்ரஜா நாம் பதி –நாயக
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரலய விஷயம் ஸ ஏதத்₃ த்₃ரஷ்டவ்யம் ॥

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள்
கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம்
உலகும் உயிரும் ஒன்றும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-

நித்ய பிராகிருத நைமித்திக ஆதியந்திக ப்ரளயங்கள் உண்டே

நாபிக் கமலத்தில் பிறந்த பிரமன் முதலியவர்களுக்குத் தலைவர் –
இதை நைமித்திக சிருஷ்டி நைமித்திக பிரளயம் இவற்றைக் குறித்ததாகக் கொள்க -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் துதிப்பவர்களை மகிழ்விப்பவர் -பிரஜைகளுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

———————-

அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

165-வேத்ய -எளியவனாக பிறக்கிறபடியால் அனைவரின் புலன்களாலும் அறியக் கூடியவர் –
166-வைத்ய-அடியார்களுக்கு பிறவியை போக்கும் வித்தையை அறிந்தவர் –
167-சதாயோகீ–அடியார்களைக் காக்க எப்போதும் விழித்து இருப்பவர் –
168-வீரஹா -தீய வாதங்களால் மக்களை பகவான் இடத்தில் இருந்து பிரிக்கும் வலிமையை உடையவர்களை ஒழிப்பவர்
169-மாதவ -பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் –
170-மது -மெய்யடியார்களுக்கு தேன் போன்று இனிமையானவர்

———————————————————————-

பொதுவான கல்யாண குணங்கள் –

171-அதீந்த்ரிய -அறிவை அளிக்கும் புலன்களுக்கு எட்டாதவர் –
172-மஹா மாய -தன்னை சரணம் அடையாதவர்களுக்கு அறிய ஒண்ணாத மாயையை உடையவர் –
173-மஹோத்சாஹ-மிக்க ஊக்கம் உடையவர் –
174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –
179-அநிர்தேஸ்ய வபு -நிகரற்ற விளக்க ஒண்ணாத திருமேனியை உடையவர் –
180-ஸ்ரீ மான் -தன் திருமேனிக்குத் தகுந்த ஆபரணச் செல்வத்தை உடையவர் –
181-அமேயாத்மா -கடலைப் போலே ஆழமாய் அளவிட முடியாதவர் –

——————————————————————————————

குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

182-மஹாத்ரி த்ருத் -பாற் கடலைக் கடையும் போது மந்த்ரம் என்னும் பெரிய மலையைத் தாங்கினவர் –
183-மகேஷ்வாச -சார்ங்கத்தைத் தாங்கி சிறந்த பாணங்களை எய்பவர் –
184-மஹீபர்த்தா -பூமியை எளிதில் தாங்குபவர் –
185-ஸ்ரீ நிவாச -பாற் கடலில் இருந்து வெளிப்பட்ட திருவைத் தன் திருமார்பில் ஏந்துபவர் –
186-சதாம் கதி -பக்தர்களான சாதுக்களுக்கு கதியானவர் –
187-அநிருத்த-அடியார்களைக் காக்கும் போது இடையூறுகளால் தடுக்க முடியாதவர் –

—————————————————

ஹம்சாவதாரம் –

188-சூரா நந்தா -தேவர்களின் ஆபத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுப்பவர் –
189-கோவிந்த -தேவர்கள் செய்யும் ஸ்துதிகளை பெறுபவர் –
190-கோவிதாம் பதி – வேத வாக்குகளை அறிந்தவர்களுக்கு தலைவர் –
191-மரீசி -கண் இழந்தோர்க்கும் தன்னை வெளிப்படுத்தும் ஓளிக்கீற்று ஆனவர் –
192-தமன -தன் ஒளியினால் சம்சார வெப்பத்தை அடக்குபவர் –
193-ஹம்ஸ-தூய அன்னமாக அவதரித்தவர் –
194-சூபர்ண–சம்சாரக் கடலில் இருந்து கரை சேர்க்கும் அழகிய சிறகுகளை உடையவர் –

————————————————-

பந்த நாப அவதாரம் -உந்தித் தாமரை யான் –

195-புஜ கோத்தம-பாம்புகளுக்குள் சிறந்தவர் -ஆதி சேஷனுக்குத் தலைவர் –
196-ஹிரண்ய நாப -பொன் போன்ற உந்தியை உடையவர் –
197-சூதபா–தன்னிடத்தில் க்ரஹிக்கப்பட்ட அனைத்தையும் அறிபவர்
198-பத்ம நாப -உந்தியில் எட்டு இதழ்களோடு கூடிய தாமரையை உடையவர் –
199-பிரஜாபதி -பிரமன் முதலிய அனைவர்க்கும் தலைவர் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading