பிரியம் இதரத் ததா அபி வா யத் யதா விதரசி வரத ப்ரபோ த்வம் ஹி மே
தத் அநுபவ நமேவ யுக்தம் ஹி மே த்வயி நிஹித பரோஸ்மி ஸோஹம் யத–91-
வரத ப்ரபோ
அதாபி வா –இப்படி அடியேன் பிரார்த்தித்த போதிலும்
த்வம் -ஸ்வ தந்த்ரனான நீ
பிரியம் -இஷ்டமானதோ
இதரத் வா –அநிஷ்டமானதோ–ஹிதமானதையோ
யத் யதா மே –யாது ஒன்றை எப்படி எனக்கு
விதரசி–கொடுத்து அருள்கிறாயோ
ததா -அப்படியே
தத் அநுபவ நமேவ வஹி -அதை அனுபவிப்பதே அன்றோ
மே –பரதந்த்ரனான எனக்கு
யுக்தம் –தகுந்தது
யத -ஏன் என்றால்
ஸோஹம் –அடியேன்
த்வயி –உன் பக்கலிலே
நிஹித பரோஸ்மி யத–பர சமர்ப்பணம் பண்ணிக் கிடக்கிறேன் இறே —
பகவத் ந்யஸ்த பரரான தம்முடைய ஸ்வரூபத்துக்கும் குலைதல் வாராதபடி பேச வேணும் அன்றோ –
அப்படி பேசுகிறார் இதில்
தேவரீருடைய திரு உள்ளத்தால் பிரியம் என்றோ ஹிதம் என்றோ நினைத்துத் தந்து அருளுமதை
அனுபவிக்கும் அத்தனை இறே எனக்குற்றது என்கிறார் ஆயிற்று –
——————
யதாஸி யாவன் அஸி யோஸி யத் குண கரீச யாத்ருக் விபவோ யதிங்கித
ததாவிதம் த்வாம் அஹம் அபக்த துர்க்ரஹம் பிரபத்தி வாசைவ நிரீஷிதம் வ்ருணே –92-
கரீச
த்வம் யோஸி–நீ எவனாய் இருக்கிறாயோ
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
ஹ்ரீச் ச தே லஷ்மீச் ச பத்ந்யவ்–ஸ்வரூப நிரூபக குணங்களால் நிரூபித்தனாய் இரா நின்றாயோ
யத் குண–எந்த குணங்கள் உடையவனோ
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச –என்கிறபடியே
கல்யாண குணங்களோடு கூடி இரா நின்றாயோ
யதாஸி –யாது ஒரு பிரகாரத்தை யுடையவனோ
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரத்யந்திபி சம்விசந்தி –இத்யாதி
யுக்தமாய் ஜகஜ்ஜன்மாதி காரணத்வாதி ரூபங்களான பிரகாரங்களை யுடையாய் நின்றாயோ
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
யா ஏஷ அந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே –இத்யாதி யுக்த
யாத்ருச விக்ரஹ விசிஷ்டனாய் இரா நின்றாயோ –என்றுமாம்
யாவன் அஸி –எவ்வளவனாய் இருக்கிறாயோ
அனோர் அணீயாந் மஹதோ மஹீயாந் —
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸித்தித –இத்யாதி யுக்த
யாவத் பரிமாண விசிஷ்டனாய் இரா நின்றாயோ
யாத்ருக் விபவோஸி –எப்படிப்பட்ட விபவத்தை யுடையாய் இருக்கிறாயோ
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் –இத்யாதி யுக்த
யாத்திருக்க ஐஸ்வர்யத்தோடே கூடி இரா நின்றாயோ
யதிங்கித அஸி –எந்த வியாபாரத்தை யுடையவனாய் இருக்கிறாயோ
அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா –இத்யாதி யுக்த
சேதன அசேதன நியமனாதி ரூபமான யாதிருச வியாபாரத்தை யுடையையாய் இரா நின்றாயோ
இங்கித சப்தார்த்தம் மத்ஸ்ய கூர்மாதி அவதார சேஷ்டிதங்களாகவுமாம்
ததாவிதம் -அப்படிப்பட்டவனாய் –
அந்த ஸ்வரூப குண பிரகார பரிமாண விபவ சேஷ்டித விசிஷ்டனான -என்றபடி
அபக்த துர்க்ரஹம்–பக்தர்களுக்கு அன்றி மற்றையோர்க்கு அரியனான
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்னும் இடத்தை வ்யதிரேக உக்தியால் அருளிச் செய்கிற படி
எத்தனை ஞானாவானாய் இருந்தாலும் பக்தி இல்லாத அன்று
துர் க்ரஹனாய் அன்றோ எம்பெருமான் இருப்பது –
பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்த்தனம் –சஞ்சயன்
த்வா பிரபத்தி வாசைவ –உன்னை சரணம் என்கிற வார்த்தையால்
நிரீஷிதம் அஹம் வ்ருணே –சாஷாத் கரிக்க அடியேன் விரும்புகின்றேன் —
த்வய உத்தர கண்ட நமஸ் சப்தார்த்த அனுசந்தானமாக –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப ஸ்வரூபத்தை கீழ் சதகத்தில்
ப்ரதிபாதித்து அருளினார்
அநந்தரம் -நாராயணாய –சதுர்த்தியின் அர்த்தமான
கைங்கர்ய பிரார்த்தனையை இந்த சதகத்தில் செய்து அருளி நிகமிக்கிறார்
அதில் இந்த ஸ்லோகத்தால்
உன்னைக் குறைய சாஷாத் கரிக்க வல்லேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –
அடியேனுடைய ஆகிஞ்சன்யத்தையும் த்வத் ஏக உபாயத்வத்தையும் அறுதி இட்டுச் சொன்ன எனக்கு
உன்னுடைய ஸ்வரூப குணாதிகளை நீயே கேவல கிருபா மாத்திரத்தாலே
சாஷாத் கரிப்பித்து அருள வேணும் என்கிறார்
இந்த ஸ்லோகம் முதல் உள்ள தசகம் வம்சஸ்த்த வ்ருத்தம்
————–
அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ரசக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –93-
தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு
விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்
விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ
ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப் பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்
சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது
சமக்ரசக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –
மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்
நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –
——————-
ஸ்வகைர் குணைஸ் ஸ்வைச் சரிதைஸ் ஸ்வ வேதநாத் பஜந்தி யே த்வாம் த்வயி பக்தி தோத வா
கரீச தேஷாமபி தாவகீ தயா ததாத் வக்ருத் சைவ து மே பலம் மதம் –94-
கரீச
யே ஸ்வகைர் குணைஸ் –எந்த சேதனர்கள் தம் குணங்களாலோ
ஆனுகூலஸ்ய சங்கல்பாதி ஆத்ம நிஷேபா பர்யந்த குணங்களால் -பிரபத்தி யோகத்தால் -என்றபடி
மத்பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாம் ச அநு மோதனம்-மத் கதா ஸ்ரவனே சக்தி ஸ்வா நேத்ராங்க விக்ரியா
ஸ்வயம் அப்யர்ச்சநம் சைவ மதர்த்த டம்ப வர்ஜனம் -மாம் அநு ஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி —
என்று சொல்லப்பட்ட குணங்களால் என்னவுமாம்
ஸ்வைச் சரிதைஸ் –தம் கர்மயோகங்களாலோ
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தான யஜ்ஜாதி ஸேவனம்–கீதார்த்த ஸங்க்ரஹம் –கர்மயோகத்தில்
அவாந்தர பிதைகள் பல யுண்டாகையாலே அத்தைப் பற்ற -சரிதை பஹு வசன பிரயோகம்
ஸ்வ வேதநாத் –தம் ஞான யோகத்தாலோ
ஞான யோகோ ஜிதக்ரோதை பரிசுத்தாத்மநி ஸ்திதி –என்கிறபடியே ஜித மனஸ்கர்கள்-நிரந்தர
சிந்தனா ரூபமான ஞான யோகத்தில்
தேவர் அளவிலே ஐகாந்திகமான ப்ரீதியோடே த்யான அர்ச்சனை ப்ரணமாதிகளிலே நிலைத்து
இருக்கும் பக்தி யோகத்தில் என்றுமாம்
அதவ த்வயி பக்தித–அல்லது உன் திறத்தில் பக்தியாலோ
த்வாம் பஜந்தி –உன்னை பஜிக்கிறார்களோ
தேஷாமபி தாவகீ தயா-அவர்களுக்கும் உன்னுடைய தயை
ததாத் வக்ருத்–அந்த நித்ய கைங்கர்ய நிலைமையை உண்டாக்க வற்று
சைவ து தயா –அந்த தாயையே அன்றோ
மே பலம் மதம் –அடியேனுக்கும் முக்கிய சாதனமாக நிச்சிதம்
ஆகிஞ்சன்யமே பற்றாசாகப் பணைக்கிற திருவருளே சாதனம் என்னும் திண்ணிய அத்யாவசாயத்தை
பல காலும் விண்ணப்பம் செய்து இங்கும் கைங்கர்ய சித்திக்கும் அதுவே என்கிறார் –
அசேதன கிரியா கலேபங்கள் ஸ்வ தந்திரமாக பல பிரதான சக்தி உடையவனே அல்லவே
ஐயன் பள்ளியிலே நிற்கும் யானை குதிரைகளும் போருக்கு உரித்தாகுமோ
அநந்யா ஸித்தமான உபாயம்-தேவரீருடைய திருவருள் – ஸித்தமாய் இருக்க –
அந்யதா ஸித்தமான ஸாத்ய உபாயங்களிலே புரண்டு புழுதி படுகை மிகை அன்றோ
————–
யதி த்வ அபக்தோப்ய அகுணோபி நிஷ்க்ரியோபி நிருத்யமோபி நிஷ்க்ருத துஷ்க்ருதோபி ந ச
லபேய பாதவ் வரத ஸ்புடாஸ் தத ஷமாதயாத்யாஸ் தவ மங்களா குணா -95-
வரத
அபக்தோபி –பக்தி சூன்யனாயினும்
அகுணோபி –குணம் அற்றவனாயினும் -தத் அங்கமான ஞான குண யோகம் அற்றவனாயினும்
நிஷ்க்ரியோபி –கர்மயோகி சூன்யனாயினும்
நிருத்யமோபி –ஆனுகூல்ய சங்கல்ப ரஹிதனாயினும்
நிஷ்க்ருத துஷ்க்ருதோபி ந ச –ப்ராயச்சித்தத்தாலே ஒழிக்கப் படாத பாபங்களை யுடையவனாயினும்
அஹம் –அடியேன்
அடியேனைப் பார்க்கும் அன்று ஷிபாமிக்கும் ந ஷாமாமிக்குமே விஷயமாக்க அமையும்
தவ பாதவ் –தேவரீருடைய திருவடிகளை
லபேய யதி து –அடைவேனேயாகில்
தத –அதனால்
ஷமாதயாத்யாஸ் –பொறுமை தயை முதலிய
தவ மங்களா குணா –தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள்
ஸ்புடா –பவேயு -பிரகாசமாகும்
தேவரீரைப் பார்த்தால் விடும்படியாய் இருந்ததோ–
க்ஷமை தயாதி குணங்களுக்கு விஷயம் தான் எங்கே –
தேவரீருடைய சத்தையே அழியும் கிடீர் –
கடுக அடியேனுக்கு புருஷார்த்தம் பெறுவிப்பதே பாங்கு என்கிறார் –
————————-
விலோகநைர் விப்ரமணைர் ப்ருவோ ஸ்மிதாம் ருதைர் இங்கித மங்களைர் அபி
ப்ரசோதிதஸ் தே வரத ப்ரஹ்ருஷ்டதீ கதா விதாஸ்யே வரிவஸ்யநம் தவ –96-
வரத
தே விலோகநைர் –உனது கடாக்ஷ வீக்ஷணங்களாலும்
ப்ருவோ–திருப் புருவங்களினுடைய
விப்ரமணைர் –விலாசங்களாலும்
ஸ்மிதாம் ருதைர் –பரம போக்யமான புன் முறுவலாலும்
இங்கித மங்களைர் அபி –அழகான இங்கிதங்களாலும்
அஹம் ப்ரசோதிதஸ் –அடியேன் பிரேரிதனாய்
அத ஏவ
ப்ரஹ்ருஷ்டதீ –உவந்த உள்ளத்தனாய்
தவ வரிவஸ்யநம் கதா விதாஸ்யே -தேவரீருக்கு பரிசர்யை எப்போது செய்யப் போகிறேன்
கைங்கர்யத்தில் த்வரா அதிசயத்தை ஆவிஷ்கரித்து அருளிச் செய்கிறார்
கதா மாம் பகவான் ஸ்வ கீயயா அதி சீதலயா த்ருசா வலோக்ய ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா
பரிசர்யாயாம் ஆஜ்ஞா பவிஷ்ய தீதி பகவத் பரிசர்யாயாமாஸாம் வர்த்தயித்வா –ஸ்ரீ வைகுண்ட கத்யம்
வரிவஸ்யா -வரிவஸ்யநம் என்று பணிவிடையைச் சொன்ன படி
க்ரியதாம் இதி மாம் வத
ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்
சோதி வாய் திறப்பது -நியமிப்பது -திருக் கண்களால் கடாக்ஷிப்பது எல்லாமே உத்தேச்யம்
என்றே என்னை யுன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட் செய்ய
நீ கொண்டு அருள நினைப்பது தான் எண்ண -என்று அபேக்ஷிக்கிறார்
———————–
விவிஸ்ய விச்வேந்த்ரிய தர்ஷ கர்ஷநீ மனஸ் ஸ்தலே நித்ய நிகாத நிச்சலா
ஸூதா சகீ ஹஸ்தி பதே ஸூஸீ தலாஸ் கிரச் ச்ரவஸ்யா ஸ்ருணு யாம தாவகீ –97-
ஹே ஹஸ்தி பதே
விவிஸ்ய –உட் புகுந்து –தர்ம பூத ஞானம் புகும் இடங்கள் அடங்க புகுந்து –
விச்வேந்த்ரிய தர்ஷ கர்ஷநீ –சர்வ இந்த்ரியங்களுடையவும் -விடாயைத் தீர்ப்பவையாய்
மனஸ் ஸ்தலே –மனதில்
நித்ய நிகாத நிச்சலா–எப்போதும் நாட்டப்பட்டு ஸ்திரமானவையாய் –
எத்தனை பொழுது ஆகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் அன்றோ –
ஸூதா சகீ –அம்ருதம் போன்றவையாய் -போக்யதையில் அம்ருத தாரை ஒத்து இருக்க வேணும்
ஸூஸீ தலாஸ் –மிகக் குளிர்ந்தவையாய்–தாபத்ரயங்களை ஆற்ற வல்லவையாய்
ச்ரவஸ்யா–செவிக்கு இனியவையான
தாவகீ –கிரச் ச்ருணு யாம –உன்னுடையவைகளான திரு வாய் மொழிகளை செவி ஏற்கக் கடவோம்
இங்கிதம் நிமிஷதம் ச தாவகம் ரம்யம் அத்புதம் அதி பிரியங்கரம் –ததீயம் என்னும் ஆகாரத்தாலேயே
எல்லாமே உத்தேச்யம்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
திருக் கச்சி நம்பிகளோட்டை பரிமாற்றம் அறிந்து -அஸங்கேதனம்-அலாபம் -என்கிற
அர்ச்சாவதார மரியாதை குலைந்து இருக்கும் படி அறிந்து சம்பாஷணம் தன்னையே பிரார்த்திக்கிறார்
ஆசயா யதி வா ராம புநஸ் சப்தாபயேதிதி–என்று சுமந்த்ரரும்
ஊமக்ருரேதி வஷ்யதி -என்று அக்ரூரரும்
விபவ அவதாரத்தில் பாரித்த பாரிப்பை அர்ச்சாவதாரத்திலே பாரிக்கிறார்
—————–
அசேஷ தேச அகில கால யோகி நீஷு அஹம் த்வ அவஸ்தாஸ் அகிலாஸ் அநந்ய தீ
அசேஷ தாஸ்ய ஏக ரதிஸ் ததா சரன் கரீச வரத்தேய சதா த்வதந்திகே–98-
ஹே கரீச
அசேஷ தேச அகில கால யோகி நீஷு –சர்வ தேச சர்வ காலங்களோடு சேர்ந்த
அகிலாஸூ அவஸ்தாஸூ –சர்வ அவஸ்தைகளிலும்
அசேஷ தாஸ்ய ஏக ரதிஸ் அஹம் –சர்வ வித கைங்கர்யங்களிலும் ஆராத காதலை யுடைய அடியேன்
தத் -அந்த அசேஷ தாஸ்யத்தை
அநந்ய தீ ஆசரன் சந் -வேறு ஒன்றில் புத்தி செலுத்தாதவனாய் அனுஷ்டிக்கிறவனாய்
செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது அன்றோ
சதா த்வதந்திகே– வரத்தேய–எப்போதும் உனது சமீபத்திலே இருக்கக் கடவேன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும்
ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ
——————
இமம் ஜனம் ஹந்த கதா அபி ஷேஷ்யதி த்வத் அஷி நத்யோர் வரத ஸ்ரமாபஹா
அக்ருத்ரிம ப்ரேம ரஸ ப்ரவாஹ ஜா விஸ்ருத்வரீ வீக்ஷண வீசி சந்ததி –99-
வரத
த்வத் அஷி நத்யோர்–உனது திருக் கண்கள் ஆகிற நதிகளினுடைய
அக்ருத்ரிம ப்ரேம ரஸ ப்ரவாஹ ஜா –ஸ்வா பாவிகமான ப்ரீதியாகிற ரஸா ப்ரவாஹத்தில் நின்றும் உண்டாகக் கடவதாய்
அத ஏவ
ஸ்ரமாபஹா –விடாய் தீர்க்க வல்ல
விஸ்ருத்வரீ–எங்கும் பரவக் கூடிய
வீக்ஷண வீசி சந்ததி –கடாக்ஷம் ஆகிற அலைகளின் வரிசையானது
இமம் ஜனம் –இந்த அடியேனை
கதா அபி ஷேஷ்யதி ஹந்த–எப்போத்து மஞ்சனமாட்டப் போகின்றது –
யச்ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பச்யதி -நிந்திதஸ் ச வஸேல் லோகே ஸ்வாத்மாப்யே
நம் விகர்ஹதே –என்கிறபடி அவன் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார் –
கடாக்ஷ தாரை -தாபத்ரய நிவர்த்தந ஷமமாய் -அவ்யாஜ ப்ரீதி ரஸ ப்ரவாஹம் அடியாகப் பெருகுவதாய் –
ஆஸ்ரித ஜனங்கள் உள்ள இடம் எங்கும் வியாபிக்கும்
அந்த கடாக்ஷ அம்ருத ரஸாவ ஸேகத்தாலே அடியேனைக் கைங்கர்ய சாம்ராஜ்ய அதிபதியாக
ஆக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்த படி
—————-
சதாதநத்வேபி ததா தநத்வவத் நவீ பவத் ப்ரேம ரஸ ப்ரவாஹயா
நிஷேவிதம் த்வாம் சாததோத்கயா ஸ்ரியா கரீச பஸ்யேம பரச்சதம் சமா –100-
கரீச
சதாதநத்வேபி –நித்ய பரிசிதமாய் இருக்கச் செய்தேயும்
ததா தநத்வவத் –அபூர்வமானால் போலே
நவீ பவத் ப்ரேம ரஸ ப்ரவாஹயா –புதிது புதிதாக விளையா நிற்கிற ப்ரணய ரஸ பரம்பரையை யுடையவளாய்
அத ஏவ
சாததோத்கயா –சதத உத்கயா –நித்யம் ஆசை கொண்டு இருக்கிற —
நித்யம் உத்சகை -பிரியேன் பிரியில் தரியேன் -என்று அல்லும் பகலும் வாய் வெருவுமவள் அன்றோ
ஸ்ரியா–பிராட்டியாலே
நிஷேவிதம் –நித்யம் அநு பூதனாய் இரா நின்ற
த்வாம் –உன்னை
பரச்சதம் சமா –பல்லாண்டு பல்லாண்டாக
பஸ்யேம–சேவிக்கக் கடவோம் –அபி நிவேசத்தில் தமக்குத் தோள் தீண்டிகளான தம் அடியார்களையும்
கூட்டிக் கொண்டு பஹு வசன பிரயோகம்
அகல ப்ரஸக்தி இல்லாமலேயே அகலகில்லேன் இறையும் என்று இருக்கும்
பிராட்டியும் தேவரீருமான சேர்த்தியைக் காணப் பெறுவேனாகில்–ததா ததா நவம் நவம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் – -சதாயுர்வை புருஷ -வேத நூல் பிராயம் நூறு –
மரியாதையைக் குலைத்து மேற்பட்ட இருந்தாலும் கண்டு களிப்பேன் என்கிறார்
————–
ஸமாஹிதைஸ் சாது சநந்த நாதிபி ஸூ துர்லபம் பக்த ஜநைர் அதுர்லபம்
அசிந்த்யம் அத்யத்புதம் அப்ரதர்க்கணம் வரப்ரத த்வத் பதம் ஆப்நுயாம் கதம் –-101-
சாது ஸமாஹிதைஸ் —நன்றாக சமாதி நிஷ்டர்களான
சநந்த நாதிபி –சநந்த சநக சநத் ஸூ ஜாதாதி முனிவர்களாலும்
ஸூ துர்லபம் –அடைய முடியாததாய்
பக்த ஜநைர் அதுர்லபம் –பத்துடை அடியவர்களாலே எளிதில் அடைய முடிந்ததாய்
அசிந்த்யம் –சிந்தைக்கு விஷயம் ஆகாததாய்
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே —தேஷாமபி இயத் பரிமாணம்
இயத் ஐஸ்வர்யம் ஈத்ருஸ ஸ்வ பாவம் இதி பரிச்சேத்தும் அயோக்ய —
அப்ரதர்க்கணம்–ஊகத்திற்கும் அவிஷயமாய்
ஏவம் பூதத்வாத் ஏவம் ஸ்யாதேதத் -என்றால் போலே தர்க்கத்துக்கு அபூமி யாய்த்து
அத்யத்புதம் த்வத் பதம்–மிகவும் ஆச்சர்யமான உனது இருப்பிடமாகிய
கதம் ஆப்நுயாம் –எப்படி ஸ்வ ப்ரயத்னத்தினால் அடைவேன்
தம்முடைய மநோ ரத பரம்பரைகளை விண்ணப்பம் செய்த அளவிலும் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் – உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் -என்று
கூவிக் களிக்கும் படி பேர் அருளாளன் அருள் செய்யக் காணாமையாலே
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம் பால் உன்னைக் கண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்கனே கொல்
வந்து எய்துவரே–என்று திரு முன்பே விண்ணப்பம் செய்கிறார்
தத் விஷ்ணோ பரமம் பதத்தை
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை -என்றாலும்
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தததிராணி த்ருணாய மேநே -என்று இருப்பார்க்கு
பை அரவில் மாயன் பரமபதம் உங்களுக்கும் கை இலங்கு நெல்லிக் கனி -என்னும்படி எளிதாமே
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை
ஆட் கொள்ள வல்ல தேவரீர் அடியேனுடைய ஆகிஞ்சய அநந்ய கதித்வங்களைத் திரு உள்ளம் பற்றி
நயமாம் பரமம் கதி என்றபடி கொடு போகில் போகலாம் அத்தனை போக்கி
எலி எலும்பனாலே எப்படி பிறப்பிக்க வல்லேன் என்கிறார் –
——————–
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-
வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்
ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –
ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே
ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ
நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்
சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்
இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம் –
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply