ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவம் -ஸ்லோகங்கள்-1-11- –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –1-(சார்தூல விக்ரீத மீட்டர் )

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

இவர் அபேக்ஷிக்கும் நன்மையாவது பிராட்டியை நன்றாக ஸ்துதிக்க அனுகூலமான
வாக் ஸம்ருத்தி -பக்தி ஸம்ருத்தி இத்யாதிகள் என்பது மேல் ஸ்லோகத்திலே விசதமாம் —

god-generation operation destruction

க்ருத -செய்து முடித்தவனாக என்று சொல்லாமல்
குர்வன் -பண்ணிக் கொண்டே இருக்கிறான் –
அங்கு ஒரு கண்ணும் இங்கு ஒரு கண்ணும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டே இருக்கிறான்

இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -லோகவஸ்து லீலா கைவல்யம்
இவள் புருவ நெருப்புக்கு இல்லாமல் இருந்தால் இன்பம் இல்லாமலே போகும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் ஒருமித்து ஒரு நீராக ஒரே ஆனந்தம் -ஐக ரஸ்யம்

ஏக ரஸம் இல்லாமல் ஸ்வ ரஸ மாத்ரதுக்காக மட்டுமே செய்தால் அரஸமாக போகுமே
ஒத்த ஆனந்தத்துக்காக இல்லாமல் ஒருவருக்கு மட்டும் ஆனந்தம் அடைய செய்தால் மொத்தமாக ரஸம் இல்லாமல் போகுமே

அர்த்தோ விஷ்ணு இயம் வாணி -சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாதே
ஸ்ரஷ்டா ஸ்ருஷ்ட்டி- படைப்பாளியும் படைப்பையும் பிரிக்க முடியாதே
ஸூர்யன் ஒளி பிரபா
மாணிக்கம் பிரகாசம்
கடலும் கரையும் போல்
ஒத்த ரஸம்

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–ஸ்ரீ குணரத்ன கோஸம்–ஸ்லோகம் – 1

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

—————

ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

ஹே ஸ்ரீர் தேவி –பெரிய பிராட்டியாரே
ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் –எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை
வயம் ஸ்தோதும் ஈஹா மஹா –அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம்
யுக்தாம் பாரதீம் பாவய –உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்
ப்ரேம ப்ரதாநாம் தியம் ப்ரகுணய–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும்
பக்திம் பந்தய –பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை
ஆஸ்ரிதம் இமம் ஜனம்-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை –
தாவகம் தாஸம் –உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு –
நந்தய –நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்
ஹே லஷ்மீ
அமீ வயம் ச தே -இந்த அடியோங்களும் உம்முடைய –
அமீ -என்று
கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி –
கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு
லஷ்யம் ஸ்யாம –இலக்காகக் கடவோம்

ஷூத்ர புருஷார்த்தங்களை விரும்பி வந்தேன் அல்லேன் –
உம்மை ஸ்துதிக்கவே -பக்தி ரூபா பன்ன ஞானத்தையும் -பரமபக்தி பர்யந்தம் கடாக்ஷ வீக்ஷணங்களாலே
இப்பொழுதே அருள வேணும்
கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ்-
கிருபா சாகரத்தில் இருந்து அலை வரிசைகள் பரவி அத் திவலைகள் விழும் இடம் அடியேனாக வேணும்
இமம் ஜநம்–என்றது –
நைச்ய அனுசந்தானத்தால் நான் -என்னாமல் -அடியேன் என்னாமல் –
பிரதம புருஷனாகச் சொல்வது ஒரு வகை கவி மரியாதை

விஷ்ணு பத்னீ ஸ்ரீ யபதி -ஒவ்வொருவை வைத்தே மற்றவருக்கு நிரூபனம்
தேவீ தேவன் -திவி கிரீடா
யுக்தாம் பாரதீம் பாவய-உனக்குப் பொருத்தமான வாக்கு வன்மை பக்தி நீ அருள வேண்டும்

கீழ் உள்ள நான்கு ஸ்தவங்களை விட பெருமை மிக்க
ஞானமும் வளர்த்து கனிந்து பக்தி வடிவாக பண்ணி அருள வேணும்

—————–

ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–3-

ஹே ஸ்ரீர் தேவி –சம்போதானம் கீழ் ஸ்லோகத்தில் இருந்து வருவித்துக் கொண்டு
கவயோ–பண்டிதர்கள்
யத் கிம் ஸ்தோத்ரம் ஆம நந்தி –எதை ஸ்தோத்ரமாகச் சொல்லுகிறார்களோ
ஸ்தோத்ர சப்த அர்த்தத்தை என்ன வென்று நிஷ் கர்ஷிக்கிறார்கள்
அசதஸ்-ஸ்துதிக்கத் தக்கவன் இடத்தில் இல்லாதவைகளாயும்
அந்ய தீயாந் -வேறு ஒருவர் இடத்தில் -ஸ்துதிக்கத் தக்கவன் இடத்தில்
அதி ரோப்ய–ஏறிட்டு
பணிதஸ்–சொல்வதானது
ஸ்தோத்ரம் யதிது–ஸ்தோத்ர சப்தார்த்தம் ஆனால் –மொட்டைத் தலையனை குழல் அழகர் -என்று ஏறிட்டுச் சொல்வது போலே
தர்ஹி–அந்த பக்ஷத்தில் –இல்லாத குணங்களை இருப்பதாக ஏறிட்டுப் புகழ்வது ஸ்தோத்ரம் -என்னும் பக்ஷத்தில்
ச பணிதிஸ் –அச் சொல்லானது
த்வயி வந்த்யா –உம் விஷயத்தில் வியர்த்தமாம்
அப்படிப்பட்ட ஸ்தோத்ரம் உம் அளவில் பண்ண முடியாது
அதோ –அதவா -அல்லது
சம்யக் சத்ய குணாபி வர்ண நம-ஸ்தோத்ரம் ப்ரூயுஸ் யதி –உள்ள குணங்களை உள்ளபடி வர்ணிப்பதை
ஸ்தோத்ர சப்தார்த்தமாக சொல்லுவார்கள் ஆகில்
த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்-உம்முடைய கல்யாண குணங்களாகிற கடலிலே
தாத்ருசீ வாக் –அப்படிப்பட்ட சொல்லானது -உள்ளது உள்ளபடி சொல்வதானது
வாசஸ்பதிநா அபி –வாக்குக்கு வல்லவனான ப்ருஹஸ்பதியாலும்
குணாந்
சக்ய ரஸநா கதம் –சாத்தியமான சேர்க்கையை யுடையதாக்க எப்படி யாகும் –

இத்தால் அசாத்தியமான ஸ்ரீ ஸ்தவத்திலே இறங்குவது அதி சாஹசம் -அதி சாபல க்ருத்யம் -என்று
நைச்ய அனுசந்தானம் செய்து கொண்டார் ஆய்த்து

ஈட்டில் 3-3- மொட்டைத் தலையனை குழல் அழகர் பாடிய விருத்தாந்தம்

முக ஸ்துதிக்கு மயங்குவார்கள் உண்டே
முக ஸ்துதிக்கு மயங்காதவனே என்று ஸ்துதிக்க அதுக்கு மயங்குவான் ஸீஸர் பற்றி ஷேக்ஸ்பியர்

அக ஸ்துதி -உண்மையான இருக்கும் குண ஸ்துதி -கடல் போல் ஆழ்ந்த குணம் –
வாக்குப்பதியாலும் -ஞான ஆனந்த ஹயக்ரீவராலும் முடியாதே
முழு ஸ்துதியாகாதே

—————-

யே வாஸாம் மனஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா குணாஸ் தாவகாஸ்
தாநேவ ப்ரதி சாம்பு ஜிஹ்வ முதிதா ஹை மாமிகா பாரதீ
ஹாஸ்யம் தத்து ந மந்மஹே ந ஹி சகோர்யே காகிலாம் சந்திரிகாம்
நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரஸ நாமா ஸீத சத்யாம் த்ருஷி–4-

ஹே ஸ்ரீர் தேவி
தாவகாஸ் –உம்முடவையான
யே குணாஸ்–எந்த குணங்கள்
வாஸாம் மனஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா–வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் எட்டாதவைகளாய்
பிரசித்தி பெற்று இருக்கின்றனவோ
தாந் ப்ரத்யேவ –அந்தக் குணங்களையே குறித்தே
மாமிகா பாரதீ –எனது வாக்கானது
சாம்பு ஜிஹ்வ யதா ததா உதிதா –ரஸ மூறின நாக்கோடு கூடிக் கிளர்ந்து -ப்ரவர்த்தித்து விட்டது-அண்ணிக்கும் அமுதூறும்
ஹை–என்ன ஆச்சர்யம்
தத்து -அப்படி வாக்கு பிரவர்த்தித்தை
ஹாஸ்யம் ந மந்மஹே–பரிஹஸிக்கக் கூடியதாக அடியோம் நினைக்கின்றிலோம்
ஏன் என்றால்
சகோரீ–சகோர பஷியின் பேடையானது
அகிலாம் சந்திரிகாம் ஏகா அஹம் பாதும் அலம் நாஸ்தி இதி –நிலா முழுவதையும் நான் ஒருத்தியே
உட் கொள்ள வல்லேன் என்று நினைத்து
த்ருஷி–சத்யாம்-ரஸ நாம் –தாஹம் உள்ள அளவில் தன்னுடைய விடாய் பொருந்திய நாக்கை
ப்ரக்ருஹ்ய–மடக்கிக் கொண்டு –உள்ளே அடக்கிக் கொண்டு
நாஸித ஹி –வெறுமனே இருக்க மாட்டாது அன்றோ
அதே போலே அடியேனும் வெறுமனே இருக்க மாட்டேன் -என்கை –
உள்ள அம்சங்கங்கள் யாவச் சக்யம் -என்னால் கூடிய அளவும் வர்ணிக்க முயல்வதே உசிதம் ஒழிய
பரிஹாஸ ஆஸ்பதமாக மாட்டாதே –

————————————-

ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப் யநீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹந் நஹம் ந ச பிபேம் யஜ்ஜோ ந ஜிஹ்ரேமி ச
துஷ்யேத் ச து தாவதா ந ஹி சுநா லீடாபி பாகீரதீ
துஷ்யேத் ஸ்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்த்திஸ் து சாம்யேச் சுந –5-

ஹே தேவீ
அஞ்ஞ அஹம் -ஒன்றும் அறியாத அடியேன்
ஷோதீயா நபி –மிகவும் நீசனாயினும்
துஷ்ட புத்திரபி –கெட்ட புத்தியை உடையவன் ஆயினும்
நிஸ் ஸ்நேஹோபி–அன்பு இல்லாதனாயினும்
யநீஹோபி –ஒரு விதமான நல்ல முயற்சி இல்லாதவனாயினும்
தே கீர்த்திம் –உம்முடைய கீர்த்தியை
லிஹந் –ஸ்தோத்ர முகத்தால் வாய் கொண்டு அனுபவியா நின்றவனாய்
ஸ்ரீ தேவியை கங்கை யாகவும் தம்மை சுநகமாகவும் அனுசந்தித்தமைக்குச் சேர -லிஹந்-என்கிறார்
நக்குதல் பொருளாயினும் வாய் கொண்டு வர்ணிப்பதில் நோக்கு –
ந ச பிபேமி –அஞ்சுவதும் இல்லை
ந ஜிஹ்ரேமி ச –வெட்கப்படுவதும் இல்லை
ச கீர்த்திஸ் து –என்னால் வர்ணிக்கப்பட்ட அந்த கீர்த்தியோ என்றால்
தாவதா–அவ்வளவால் -அல்பனான என் வாக்கில் நுழைந்து புறப்பட்ட மாத்ரத்தால்
ந துஷ்யேத் –கெட்டுப் போய் விடாது –
எப்படிப் போலே என்றால் –
பாகீரதீ–ஸ்வதஸ் பரிசுத்தமான கங்கா தீர்த்தமானது
சுநா–நாயினால்
லீடாபி–நக்கப் பட்டாலும்
ந ஹி துஷ்யேத் –கெட்டுப் போய் விடாது அன்றோ
ஸ்வாபி –கங்கா தீர்த்தத்தை நக்கின அந்த நாயும்
ந லஜ்ஜதே –வெட்கப் படுகிறது இல்லை
ந பிபேதி ச –பயப்படுவதும் இல்லை
சுந–அந்த நாயினுடைய
யார்த்திஸ் து சாம்யேத் -தாஹமோ என்றால் கங்கா தீர்த்த பானத்தினால் தணிந்து விடுமே

ஆகவே லஜ்ஜா பயங்களை மேற் கொண்டு ஸ்தோத்ரங்களில் இருந்தும் பிற்காலித்தீர் ஆகில்
இரண்டு தலையும் நிரவத்யமாகும்-என்று ஆழ்வானைச் சிலர் சொல்வதாகக் கொண்டு
இந்த ஸ்லோகம் ப்ரவ்ருத்தம் ஆகிறது
நான் லஜ்ஜையும் பட வேண்டாம் -ஸ்ரீ தேவிக்கும் அவத்யம் இல்லை என்று த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார்
ஆழ்வானுடைய எல்லை கடந்த நைச்ய அனுசந்தானம் தெளிவாகுகிறதே இத்தால் –

——————

கீழே ஐந்து ஸ்லோகங்களும் ஸ்தோத்ர உத்போதகாதம் -மேலே ஸ்தோத்ர ஆரம்பம் –

ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா –6-

ஹே தேவி
பும்ஸாம்-மநுஷ்யர்களுக்கு
சார்வத்ரிகம்–இவ்வுலகம் மேல் உலகம் முதலிய எல்லா இடங்களிலும் உண்டாகக் கடவதான
யத் ஐஸ்வர்யம் –யாதொரு விபவமானது
மஹ தேவ வா –பெரியதாகவோ
அல்பம் அதவா –அல்லது ஸ்வல்பமாகவோ
த்ருச்யதே –காணப் படுமோ
தத் -அந்த விபவமானது
ஐஹிக –ஆ முஷ்மிக –சென்றால் குடையாம்–இத்யாதிப்படி குருவான ஐஸ்வர்யம் -இப்படி சகலமும்
லஷ்ம்யாஸ் தவ –ஸ்ரீ தேவியாகிய உம்முடைய
யதா சமுதீக்ஷணாத்–யாதொரு கடாக்ஷ விசேஷத்தாலே
வர்த்ததே –விளைகின்றதோ
தேநை தேந –அந்த இந்த கடாக்ஷத்தினால் -கடாக்ஷ விஷயத்திலே –என்றபடி –
ந விஸ்மயே மஹி–ஆச்சர்யப்பட மாட்டோம்
யத–ஏன் என்றால்
ஜகந்நாதோ –உலகங்கட்க்கு எல்லாம் தலைவனாயும்
ஆத் மேஸ்வர–தனக்குத் தானே ஈசனாயும் உள்ள
நாராயண அபி –ஸ்ரீ மந் நாராயணனும் கூட
தவ ஈஷணாத் –உம்முடைய கடாக்ஷம் பெறுவதனால்
ஸ்வாத்மாநம் தந்யம் மந்யதே –தன்னை க்ருதார்த்தனாக நினைக்கிறான் அன்றோ –
ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷம் அவனுக்கும் ப்ரார்த்த நீயம் அன்றோ
ஆகையால் ஆச்சர்யப்படக் காரணம் இல்லை -என்கை

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–ஸ்ரீ குணரத்ன கோஸம்-30–

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————-

கீழ் கடாக்ஷ மஹிமை -இங்கு ஸம்பந்த மஹிமை-

ஆளுமை -ஸுவ்ந்தர்ய லாவண்ய-அவயவ ஸமுதாய சோபை -மங்களப் பொருள்கள் -உத்க்ருஷ்டம் அனைத்துமே உமது சம்பந்தத்தாலேயே
ஸ்ரீ -ஸ்ரீ மத் -அடை மொழி அதனாலேயே
ஸ்ரீ ரெங்க விமானம்
ஸ்ரீ ரெங்க நாதன்
ஸ்ரீ பாஷ்யம் -அகில தொடங்கி

ஐஸ்வர்யம் யத் அசேஷ பும்ஸி யதிதம் ஸுவ்ந்தர்ய லாவண்யயோ
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே சதித் யுச்யதே
தத் சர்வம் த்வத் அதீநமேவ யததஸ் ஸ்ரீர்த்ய பேதேந வா
யத்வா ஸ்ரீ மதி தீத்ருஸேந வசசா தேவி ப்ரதாம் அஸ்நுதே –7–

ஹே தேவி
அசேஷ பும்ஸி–ஸமஸ்த சேதனர்கள் இடத்திலும்
யத் ஐஸ்வர்யம் அஸ்தி –யாதொரு ஐஸ்வர்யம் -ஆளுமை -உள்ளதோ
ஐஸ்வர்யம் -ஈஸ்வரஸ்ய பாவ -என்றால் போலே ஒன்றுக்குக் கடவனாய் இருக்கையை
ஒவ் ஒரு ஆத்மாவுக்கும் ஒவ் ஒரு வகையான ஐஸ்வர்யம் உண்டு அன்றோ
ஸுவ்ந்தர்ய லாவண்யயோ யதிதம் ரூபம்–அவயவ சோபை யாகிற ஸுவ்ந்தர்யம் என்ன –
சமுதாய சோபை யாகிற லாவண்யம் என்ன -இவற்றின் உருவம் யாது ஓன்று உள்ளதோ
லோகே யச்ச ஹி மங்களம் –லோகத்தில் –மஞ்சள் புஷ்பம் -தீபம் -இத்யாதி
மங்கள கரம் என்று பேர் பெற்றது யாது ஓன்று உண்டோ
யத் கிமபி சத் இதி யுச்யதே –யாது ஓன்று நல்லது என்று சொல்லப்படுகிறதோ-திருமண் கதிர் போன்றவை –
தத் சர்வம் –அந்த ஐஸ்வர்யம் முதலியவை எல்லாம்
யத் த்வத் அதீநமேவ –யாது ஒரு காரணத்தால் உம் ஆணைக்கு அடங்கியதாக இருக்கிறதோ
அத தத் சர்வம் –இக்காரணத்தால் அது எல்லாம்
ஸ்ரீர் இதி அபே தேந வா –ஸ்ரீ என்று அபேதமாகவோ —
அதாவது ஸ்ரீ என்னும் சொல்லாலேயோ
யத்வா –அத்வா
ஸ்ரீ மத் இதி தீத்ருஸேந வசசா –ஸ்ரீயை உடையது என்கிற சொல்லாலேயோ
ப்ரதாம் அஸ்நுதே –ப்ரஸித்தியை அடைகின்றது —
சாஷாத் லஷ்மீ வாசகம் -லஷ்மீ விஸிஷ்ட வாசக சப்தங்கள் –

திரு விளக்கு -திரு மாளிகை -திருமலை -திருமேனி -ஸ்ரீ மத் அநந்த சரஸ் -ஸ்ரீ மத் வநாத்ரி –
போன்றவை உண்டே என்றவாறு

————–

ஸ்துதி பாகம் இத்துடன் முடிகிறது

தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே –8-

ஹே தேவி
த்வந் மஹிம அவதிர் -உமது பெருமையின் எல்லையானது
ஹரிணா அபி –எம்பெருமானாலும்
யத்யபி ந ஜ்ஞாயதே-அறியப்படுகிறது இல்லை
த்வயா அபி ந ஜ்ஞாயதே–உம்மாலும் அறியப்படுகிறது இல்லை
யேவ மதாபி–இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும்
யுவயோஸ்–உங்கள் இருவர்களுடைய
சர்வஜ்ஞதா-ஸர்வஞ்ஞத்வ பிருதானது
நைவ ஹீயதே –குறையப்படுகிறதே இல்லையே —
ஏன் என்றால்
யந் நாஸ்த்யேவ –யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ
ததஜ்ஞாதம் –அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை
சர்வஞ்ஞாதாயா–சர்வஞ்ஞத்திற்கு
அநு குணாம் விது –ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள்
வ்யோமாம் போஜம் –ஆகாசத் தாமரை
இதந்தயா விதந் –உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ -என்று அறிகிறவன்
அயம் ப்ராந்தா இதி யுச்யதே கில –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

மகிமைக்கு எல்லை இல்லையே -இல்லாத ஓன்று -ஆகாசத் தாமரை -முயல் கொம்பு –
போன்ற அஸத் வஸ்துக்கள் போலவே அன்றோ
இந்த அஞ்ஞானம் அடிக்கழஞ்சு பெறுமே

இல்லாத ஒன்றை தெரியாது என்று சொன்னால் தானே சர்வஞ்ஞத்வம் ஸித்திக்கும்

——————

இதிலும் அடுத்ததிலும் ஸரணாகதி செய்கிறார்

லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் யஸ்யா பிரசாத பரிணாமம் உதர ஹரந்தி
சா பாரதீ பகவதி து யதீய தாஸீ தாம் தேவ தேவ மஹீஷீம் ஸ்ரீரியம் ஆஸ்ரயாம –9-

லோகே –உலகத்திலே
வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் –ஒருவன் மரம் போலே ஜடனாய் பிறப்பதும்
ஒருவன் ப்ருஹஸ்பதி போலே மஹா வித்வானாய்ப் பிறப்பதும் -போன்ற ஏற்றத் தாழ்வுகள்
யஸ்யா பிரசாத பரிணாமம் -யாவள் ஒரு சரஸ்வதியினுடைய அனுக்ரஹத்தை பரிபாக பலமாக
உதர ஹரந்தி –ஞானிகள் சொல்லுகிறார்களோ
பகவதி சா பாரதீ -து -பூஜ்யையான அந்த சரஸ்வதி யானவள்
யதீய தாஸீ -யாவள் ஒரு பிராட்டியின் அடியவர்களுக்கு அடியவளோ
தேவ தேவ மஹீஷீம் தாம் ஸ்ரீரியம் ஆஸ்ரயாம –தேவ தேவ பிரானுடைய தேவியான அந்தப் பிராட்டியை ஆஸ்ரயிக்கிறோம்
யதீய தாஸீ –யஸ்யா இமே யதீயா -யதியா நாம் தாஸீ -இந்த வ்யுத்பத்தியால்
சரஸ்வதி பிராட்டியின் அடியவர்களுக்கு அடியவள் என்றதாகுமே –

கர்ப்பூரம் கரித்துண்டு வாழை மட்டை -தாரதம்யம் –நெருப்பு பற்றிக் கொள்ள மூன்றும் சொல்வர் அன்றோ

————————-

யஸ்யா கடாக்ஷம் ருது வீக்ஷண தீஷனேந சத்யஸ் சமுல்லசித பல்லவ முல்ல லாச
விஸ்வம் விபர்யய சமுத்த விபர்யம் ப்ராக் தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரீரியாம் ஆஸ்ரயமா–10-

ப்ராக்-முன்னே பிரளய காலத்திலே – துர்வாச சாபத்தால் ஜகத்து அடைய நிஸ் ஸ்ரீ கமான அன்று என்றுமாம்
கடாக்ஷம் விபர்யய சமுத்த விபர்யம்–ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷம் பெறாமையாலே வாட்டம் அடைந்த
விஸ்வம் யஸ்யா –ஜகத்தானது யாவள் ஒரு பிராட்டியினுடைய
கடாக்ஷம் ம்ருது வீக்ஷண தீஷனேந –கடைக் கண்ணால் மெல்ல நோக்க வேணும் என்னும் சங்கல்பித்தனாலேயே
சத்யஸ் –அந்த சங்கல்பம் உண்டான ஷணத்திலேயே
சமுல்லசித பல்லவ முல்ல லாச –கொழுந்து வீட்டுக் கிளர்ந்திற்றோ
தேவ தேவ மஹிஷீம் தாம் ஸ்ரீரியாம் ஆஸ்ரயமா–தேவபிரானுடைய திவ்ய மஹிஷியான அந்தப் பிராட்டியை அடி பணிகின்றோம்
அதே போலே அசத் கல்பனாய் கிடக்கிற அடியேனையும்–காருண்ய சீதள கடாக்ஷ ஸூதா வர்ஷத்தாலே –
குளிர நோக்கி சத் கோஷ்டியிலே அந்வயிப்பிக்க வேணும்

கடாக்ஷம் ருது வீக்ஷண தீஷனேந-கடாக்ஷம் வேண்டாம் -கடாக்ஷிக்க வேண்டும் என்று நினைத்தாலே போதுமே

——————–

யஸ்ய கடாக்ஷ வீஷா க்ஷண லஷ்ம் லஷிதா மஹேசாஸ் ஸ்யு
ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீ சா மாமபி விஷிதாம் லஷ்மீ -11-

யஸ்ய கடாக்ஷ வீஷா க்ஷண லஷ்ம் லஷிதா –யாவள் ஒரு பிராட்டியினுடைய கடைக்கண் நோக்கத்திற்கு
ஒரு நொடிப் பொழுதாகிலும் இலக்காகப் பெற்றவர்கள்

மஹேசாஸ் ஸ்யு –பெறும் செல்வம் விஞ்சியவர்களாக ஆவார்களோ -ஸ்வரூப அனுரூப ஸம்ருத்தியைச் சொல்கிறது
கைங்கர்ய சம்பத்து -ச து நாகவர ஸ்ரீ மான் -அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –
பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே

ஸ்ரீ ரெங்க ராஜ மஹீஷீ சா மாமபி விஷிதாம் லஷ்மீ -ஸ்ரீ ரெங்க நாச்சியாராகிய அந்த பிராட்டி
அடியேனையும் கடாக்ஷித்து அருளுக
அடியேனையும் அருளி கைங்கர்ய சம்பத்தை நிரந்தமாக அருள வேணும் என்று
அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

பல ஸ்ருதி தனியாக சொல்ல வேண்டாமே
இந்த நீசனான அடியேனுக்கும் அந்த உயர்ந்த கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும்

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–ஸ்ரீ குணரத்ன கோஸம்–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading