1-மார்கழி திங்கள் –ஸ்ரீ பரமபதம் அனுபவம் –
நாராயணனே -சங்கு சக்ர கதாதரன் –
தாமஸோ பரமோ தாதா சங்கு சக்ர கதாதரா –
ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதரா –
————-
2-வையத்து -திருப் பாற் கடல் அனுபவம் –
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி -ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியைப் பாட என்றவாறு –
திருவவதார கந்தம் அன்றோ
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகதோ மதுரா புரீம்
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் –ஸ்ரீ பெரியாழ்வார்
——————
3-ஓங்கி உலகு அளந்த –திருக்கோவலூர் அனுபவம்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -என்ற அநந்தரம்
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப இத்யாதி -என்ற அநந்தரம்
பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -என்று அருளிச் செய்தார் அன்றோ –
——————-
4-ஆழி மழைக் கண்ணா –ஸ்ரீ திருவனந்த புர அனுபவம்
பாழி யம் தோளுடைப் பத்ம நாபன் –வாழ உலகினில் பெய்திடாய் —
கெடும் இடராய எல்லாம் –கடுவினை களையலாம்-மாய்ந்து அறும் வினைகள் –
தீரும் நோய் வினைகள் எல்லாம் -என்று ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே –
——————————-
5-மாயனை –ஸ்ரீ வடமதுரை அனுபவம்
மன்னு வடமதுரை மைந்தன் –இத்யாதி–
வடமதுரை பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே
வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி உய்யப் போக்கால் அல்லால் மாற்று ஓன்று இல்லை சுருக்கே
வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே
வடமதுரைப்பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –அவனடி சேர்ந்து உய்ம்மினோ -இத்யாதிகளால் -9-1-
ஸ்ரீ நம்மாழ்வார் விபவத்தையும் அர்ச்சையையும் காட்டி அருளின படி
———————————-
6-புள்ளும் சிலம்பின காண் –ஸ்ரீ திரு வண் வண்டூர் அனுபவம்
இதில் வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ –
அன்னங்காள் விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூறையும் கடிய மாயன் தன்னைக் கண்ணனை
நெடுமாலைக் கண்டு —ஸ்ரீ திருவாய் மொழி -6-1-9-
சங்கு ஒலி–பிரணவம் –
அகாரம் -அரி என்ற பேர் அரவம் -ஸ்ரீ ஆண்டாள் இங்கு -ஸ்ரீ ஆழ்வார் அங்கு -அடிகள் கை தொழுது
உகாரம் -உள்ளம் புகுந்து -ஸ்ரீ ஆண்டாள் இங்கு –ஸ்ரீ ஆழ்வார் அங்கு -உணர்தல் ஊடல் உணர்ந்து -6-1-5-
மகாரம் -முனிவர்களும் -ஸ்ரீ ஆண்டாள் இங்கு –ஸ்ரீ ஆழ்வார் அங்கு –மின் கொள் சேர் புரி நூல் குறளாய்
ஆகவே பொருந்தும்
———————-
7-கீசு கீசு –ஸ்ரீ திருவாய்ப்பாடி அனுபவம்
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து -வாச நறும் குழல் ஆய்ச்சியர் – -மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம்
உத்காயதிநாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்கனாநாம் திவம் அஸ்ப்ருஷாத் த்வநி தத் நாச்ச நிர்மந்தன ஸப்தா
மிஷ்ரிதோ நிரசியதே யேந திஷாம் மங்களம் –ஸ்ரீமத் பாகவதம்
————————
8-கீழ் வானம் –ஸ்ரீ திருவத்தியூர் அனுபவம்
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்து –
இந்த பாசுரத்தால் ஸ்ரீ நம்மாழ்வாரை திருப்பள்ளி உணர்த்தி அருளுகிறார் –
இவரும் இமையோர் தலைவா என்றும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி -என்று
உபக்ரமத்திலே ஸ்ரீ தேவப்பெருமாளை அருளிச் செய்கிறார் அன்றோ
———————-
9-தூ மணி –ஸ்ரீ திருக்கடிகை அனுபவம்
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
இவன் தானே மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -குடத்தில் இட்ட விளக்கு இல்லை -குன்றில் இட்ட விளக்கு அன்றோ
——————————
10–நோற்ற ஸ்வர்க்கம் –ஸ்ரீ திருக்காட்கரை
சித்த சாதன நிஷ்டர்கள் -இரண்டு வகை -ஸ்வ கத ஸ்வீ காரம் -பர கத ஸ்வீ காரம்
யம் யே வைஷ வ்ருணுதே தேந லப்ய —
செய்த வேள்வியர் -வையத்தேவர் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்று என்னை ஒழிய என்னின் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே –9-6-10-
இந்த பர கத ஸ்வீ கார அதிகாரியையே ஸ்ரீ ஆண்டாள் நோற்று ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்று விழிக்கிறாள்
இதில் நாற்றத் துழாய் முடி -என்று அருளிச் செய்தது போலே
தெரு வெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை அன்றோ
——————————–
11-கற்றுக் கறவை–ஸ்ரீ திரு மோகூர் அனுபவம்
முகில் வண்ணன் பேர் பாட
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றும் இல்லை கதியே -ஸ்ரீ காள மேகப் பெருமாளை மங்களா ஸாஸனம்
மேகம் மின்னுவது ஓர் இடம் பொழிவது ஓர் இடம்
இவனும் ஸ்ரீ வடமதுரையில் பரஞ்சோதி ரூபமாய் ஆவிர்பவித்து ஸ்ரீ திருவாய்ப்பாடியில் அன்றோ கருணை பொழிந்தான்
நசவ் புருஷகாரேண ந சாப்ய அநேந ஹேதுந -கேவலம் ஸ்வ இச்சாயை வாஹம் ப்ரேக்க்ஷே கஞ்சித் கதாசனா
——————
12-கனைத்து இளம் –ஸ்ரீ திருச்சித்ர கூடம்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற
ஸ்ரீ குலசேகராழ்வார் அம் கண் நெடும் மதிள் சூழ் –10-பதிகம்
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -10-10-7-
இதே பாசுரத்தில் -திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை -என்றதையே
ஸ்ரீ ஆண்டாள் இங்கு மனதுக்கு இணையான -என்கிறார்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் தன்னை -10-10-6-என்று சினம் அடங்குவதை காட்டியதால்
சினம் முன்பு இருந்து இருக்க வேண்டுமே –
இத்தையே சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற என்று அருளிச் செய்கிறார் –
————————
13–புள்ளின் வாய் –ஸ்ரீ திருக்குடந்தை அனுபவம்
பள்ளிக் கிடத்தியோ -இதில்
ஏரார் கோலம் திகழக் கிடக்கிறான் அங்கு–நாகத்தணைக் குடந்தை –என்று முதலில் எடுத்து அன்றோ –
பின்பு வெக்கா திருவெவ்வுள் யரங்கம் பேர் அன்பில் பாற் கடல் கிடக்கும் ஆதிமால் என்றார் -36-
————————-
14-உங்கள் புழக்கடை –ஸ்ரீ தேர் அழுந்தூர் அனுபவம்
வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் -இங்கு
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும்
கழனி அழுந்தூர் நின்றானை –ஸ்ரீ பெரிய திருமொழி -7-5-10-
இங்கு நாவுடையாய் -என்று ஸ்ரீ ஆண்டாள்
அங்கு செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்-7-8-7-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -இங்கு
அங்கு -நெய்யார் ஆழியும் சங்கும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் -7-7-3-
—————————————
15-எல்லே இளம் கிளியே –ஸ்ரீ திரு வல்லிக்கேணி அனுபவம்
வல்லானை கொன்றானை / மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை /மாயனை
அங்கு விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ -2-3-1-என்றும்
சந்த மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப-2-3-6- என்று அருளிச் செய்கிறார் –
———————
16-நாயகனாய் –ஸ்ரீ திருக் குறுங்குடி அனுபவம்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா –
பாடுவான் –ஸ்ரீ நம் பாடுவான் -ப்ரஹ்ம ரஜஸ் -வ்ருத்தாந்தம் –
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா -என்று ப்ரஹ்ம ரஜஸ்ஸை தன்னைத் தடுக்காமல்
விரதம் முடிக்க விடச் சொல்லி நேச நிலைக்கதம் நீக்க -சென்று திருப்பள்ளி உணர்த்தி மீண்டான் அன்றோ
———————-
17-அம்பரமே –ஸ்ரீ காழி சீராம விண்ணகரம்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே
ஒரு குறளாய் இரு நில மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி –3-4-1-
————————–
18-உந்து மத களிற்று –ஸ்ரீ திரு நறையூர் அனுபவம்
பந்தார் விரலி —
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து -6-7-8-
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய
கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் பன்னு கரத்தலமும் கண்களும் —
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இன்னிள வஞ்சிக்கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
அங்கு இடையே மின்னலாய் இளவேயிரண்டாய் இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய்
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே –
நாச்சியார் பிரதானம்
———————-
19-குத்து விளக்கு எரிய –ஸ்ரீ திருவிடவெந்தை அனுபவம்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளாஸ்துங்க ஸ்தநகிரி தி ஸூப்தம்
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் ஆகத்து இருப்பது அறிந்தும்
————————
20-முப்பத்து மூவர் –ஸ்ரீ திருப்பாடகம் அனுபவம்
அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் –செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா
அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சாதே –அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
———————
21-ஏற்ற கலங்கள் –திருக்கண்ணமங்கை –திரு நாராயண புரம்
பெரியாய் –இங்கே -பெரும் புறக் கடல் அன்றோ அவன் –
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் -பல ஸ்ருதி –
இங்கு மாற்றார் உனக்கு வலி தொலைந்து -பற்றார் நடுங்க முன் பாஞ்ச ஜன்யத்தை வாய் வைத்த போர் ஏறு அன்றோ –
ச கோஷா தார்ஷ்ட்ராணாம் ஹ்ருதய நிவயதாரயாத் -வெண் சங்கம் ஓன்று ஏந்தி கண்ணா -என்கிறார்
பெரும் பசுக்கள் ஆற்றப்படைத்தான் –மகன் -உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -என்பதால் திரு நாராயண புரம் ஸூஸிதம்
—————-
22-அம் கண் மா –ஸ்ரீ திருமாலிருஞ்சோலை அனுபவம்
அபிமான பங்கமாய் வந்து
கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –ஸ்ரீ பெரியாழ்வார் -4-2-7-
இதமிமே ஸ்ருணுமோ மலையத்வஜம் நிரூபமிஹ –ஸ்ரீ ஸூந்தாரா பாஹு ஸ்தவம் -128-
—————-
23-மாரி –ஸ்ரீ திருவரங்கம் அனுபவம்
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி
கோயில் என்றாலே ஸ்ரீ திருவரங்கம் தானே –
போதருமா போலே –இங்கு நடை அழகு பிரசித்தம் அன்றோ –
ஞாலத்துள்ளே நடந்தும் நின்றும் –ஈட்டில் வடநாட்டு வித்வானுக்கு -திருக்கைத்தலம் -நடந்து அருளிக் காட்டிய ஐதிக்யம்
———————-
24-அன்று இவ்வுலகு அளந்தான் அடி போற்றி –ஸ்ரீ கோவர்த்தனம் அனுபவம்
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றிலே வடிவு ஏறு திரு துகில் நொந்துமில
மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம் –3-5-10-
யோ வை ஸ்வம் தேவதாம் தியஜதே ப்ரா ஸ்வாயை தேவதாயை ந பராம் ப்ராப்நோதி
பாப்லேயன் பவதி -ஸ்ரீ யஜுர் வேதம் -2-காண்டம் -5-ப்ரஷ்னம்
———————
25-ஒருத்தி –ஸ்ரீ திருக்கண்ணபுரம் அனுபவம்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் அன்றோ -8-5-1–
மாரி மாக்கடல் வளை வணற்கு இளையவன் -8-5-2-
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஒடித்த தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் -8-3-5-
————————
26–மாலே மணி வண்ணா –ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் அனுபவம்
ஆலின் இலையாய்-ஸ்ரீ வடபத்ர சாயி அன்றோ
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் இவன் -1-4-7-
———————–
27-கூடாரை –ஸ்ரீ திருவேங்கடம்
கூடாரை வெல்லும் சீர் –
கூடி இருந்து குளிர்ந்து –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமான் வாழியே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
குளிர் அருவி வேங்கடம்
———————–
28-கறவைகள் –ஸ்ரீ ப்ருந்தாவனம்
கானம் சேர்ந்து உண்போம்
வேணு கான கோஷ்ட்டி என்றுமாம்
—————-
29-சிற்றம் சிறு காலை –ஸ்ரீ த்வாராபதி
உனக்கே நாம் ஆட் செய்வோம்
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி
வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில் -4-9-4-
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழச்
சிங்கா சனத்தே இருந்தானைக் கண்டார் உளர் -4-1-6–
———————————–
வங்கக் கடல் –ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர்
அணி புதுவை -திவ்ய தேச அனுபவம் இதில் –
கீழே மாலே மணி வண்ணாவில் ஆலின் இலையாய் -ஸ்ரீ வட பத்ர சாயி அனுபவம்
மின்னனைய நுண் இடையர் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா முலை உணாயே -2-2-6-
தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு இவன் தானே
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலோடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வாரக் கூவாய் -5-5-
அன்னமாய் அன்று அங்கு அறு மறை பயந்தான் -பிராஹா வேதான் அசேஷான்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply