திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–1-/வியாக்கியான சார அமுதம் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

அவதாரிகை தொகுப்புக்கள் —

ஆறாயிரப்படி–
அப்ராக்ருத ஸுவ அசாதாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மகிஷிகள் பரிஜனம் ஸ்தான விசிஷ்டன் –
நிகில ஜகத் உதயம் விபவம் லயம் லீலனாய் -பரம் புருஷனை -உள்ளபடியே ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்து –
அவ்வனுபவ ஜனிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்தபடியே பேசுகிறார்-

ஒன்பதினாயிரப்படி–
முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக்குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆனபின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

பன்னீராயிரப்படி –
இத் திருவாய் மொழிக்கு சங்கக்ரஹமான முதல் பாசுரத்தில்
பரத்வ-பிரதான உபபாதகமான நிரவதிக கல்யாண குண யோகத்தையும் -நிர்ஹேதுக உபகாரத்வத்தையும் -நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
நித்ய மங்கள விக்ரஹ -யோகத்தையும் உடைய சர்வேஸ்வரன் திருவடிகளில் நிரந்தர சேஷ விருத்தியைப் பண்ணு என்று தன் நெஞ்சை நியோகிக்கிறார் –

இருபத்து நாலாயிரப்படி-
ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -அக்குணங்களுக்கு பிரகாசகமான திவ்ய விக்ரஹத்தை யுடையனாய் –
அவற்றை அனுபவிக்கும் நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைத் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால்
அனுபவ யோக்யமாம் படி நமக்கு பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளினான்
அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அனுசாசிக்கிறார்

ஈடு —
1-ஸ்ரீ யபதி தான் சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
2-அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாய் இருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் –
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இருக்க –நிர்ஹேதுகமாக தானே உபகாரகன் ஆனான் –
3-ஸ்வ ஸ்வரூபாபன்னராய் -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம் கொண்டு –இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
4-தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் -என்று –
அவன் பண்ணி அருளிய உபகாரங்களை அடையச் சொல்லி-அருளினான் என்பதை கூட்டிப் பொருள் சொல்லி அருளி-
ப்ரீதிக்கு ஹேதுவான – உபகார -பரம்பரைகளை அருளிச் செய்கிறார் -அனுபவ பரிவாஹமே பிரபந்தம் –
இப்படி உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கப் பாராய் -என்று தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே இளைய பெருமாளை -நீர் இவர்க்கு என்னாவீர் என்ன
பெருமாளும் ஒரு படி நினைத்து இருப்பர் -நானும் ஒரு படி நினைத்து இருப்பேன் -என்றார் –
அவர் நினைத்து இருக்கும் படி என் -நீர் நினைத்து இருக்கும் படி என் -என்ன
அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனே இருப்பன் -என்றார் இறே
அப்படியே இவரும்-உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடர் அடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார்

இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே
இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –

உபகார பரம்பரைகளை அனுசந்தித்தும் -அருளினன் -எல்லா வற்றிலும் சேர்த்து -குணங்களுக்குத் தோற்றும் -நெஞ்சே தொழுது எழு-
வாக் ஏக யோஜனை -வாக்ய பேத யோஜனை -இரண்டும் கொள்ளலாம் –
உஜ்ஜீவனம் -நான் அடைய நெஞ்சே நீ துணை வேண்டுமே -முன்புற்ற நெஞ்சே -நல்லை நல்லை நெஞ்சே –
தொழுது எழு -கைங்கர்யம் ப்ரீதி உந்த -குணானுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ப்ரீதிக்கு ஹேதுவான -உபகார பரம்பரைகள் அனுசந்திக்க வேண்டுமே –
பிரபந்தமே அனுபவ பரிவாஹம் -அந்த அனுபவமே ப்ரீதி -அதற்கு அருளினான் –
கருணை -குணம் -இவற்றால் நமக்கு ஏற்றம் -பகவத் விஷயத்தில் அவனால் குணங்களுக்கு வைபவம் -விபர்யச்தம்-மாறி இருக்குமே
-ஸூபீ பூதம் ஸூ பத்வம்-உன்னுடன் சேர்ந்து குணங்கள் சுபம் அடையுமே –
ஹேமாரவிந்த பரிமளம் -பொற்றாமரை மணம்-மணம் பொற்றாமாரையால் சிறப்பு பெறுமே-உபகாரத்துக்கு தோற்றால் –
பூயோ நம-ஆளவந்தார் – -தாம் தொழாமல் நெஞ்சை கூப்பிடுவது பரீத் யதிசயத்தால் -உசாவ ஆள் தேட
–இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே யாரும் கிடைக்காமல் திரு உள்ளத்தை கூப்பிடுகிறார்-
நிற்க முடியாது -விழுந்திடு என்கிறார் -ஸூ ஷ்மம்-அலை வரும் பொழுது குனிந்து நீர் வஞ்சிக் கொடி-குனிந்து பிழைத்ததை கண்டார் –

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய் கடலிலே புகும் -நீர் வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும் –
அது போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை –
அவன் திருவடிகளிலே தலை சாய்த்து பிழைக்க வாராய் -நெஞ்சே -என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –

தொழுதால் எல்லாம் – தொழா விடில் விழுவோம் -குண வெள்ளம் -ஸ்வா தந்திர வெள்ளம் –
வாக்ய பேத நிர்வாஹம் -உயர்வற உயர்நலம் உடையவன் யாரோ அவன் -துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –
வாக்மே ஸ்ரீ மன் -சொல்லின் செல்வன் -திருவடி பேச்சைக் கேட்டதும் இளைய பெருமாளை பேசச் சொல்லி -தன்னை திருவடியிடம் சொன்ன வார்த்தை
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-அஹம் -அஸ்ய அவரோ ப்ராதா –குணைர் தாஸ்யம் உபாகத
-லோக பார்வை -தம் பார்வை –
ராஜ்யாது ப்ரஷ்டா மா சார்த்தம் -பார்யை உடன் -வந்தார் -தந்தை சொல்லால் அவர் –
பார்யையால் அவள் -நீர் எதற்கு வந்தீர் -தம்பி -என்றால் பரத சத்ருக்னன் வந்து இருக்க வேண்டுமே –
குணத்துக்கு தோற்ற அடிமை வந்தேன் என்கிறார்
குணங்கள் ஸ்வரூபம் சார்ந்து இருக்கும் குணவான் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -ஸ்வரூபம் -யவன் சொல்லி ஆரம்பிக்க வேண்டாமோ –
இவர் அகப்பட்ட துறை குணங்கள் -இது வன்றோ-

—————————————————————-

வியாக்கியான சார அமுதம் –

இருபத்து நாலாயிரப்படி–
உயர்வற
அதாவது தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் எல்லாப் படியாலும் உண்டான எல்லா உயர்த்தியையும் சொல்லுகிறது –
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை
அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை-
-ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்
குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

மயர்வற- மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது
அற -சவாசனமாகப் போகும்படி

அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –
எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே

அமரர்கள்
மரணம் இன்றிக்கே இருப்பவர்கள- அவர்களுக்கு மரணம் ஆவது பகவத் அனுபவ விச்சேதம் -அது இன்றிக்கே இருக்கை
-துயரறு- துயர் அற்ற என்றபடி–இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-

—————————————–

ஈடு –
உயர் நலம் -கண்ட இடம் எங்கும் –நலம் -ஜாத் ஏக வசனம் -குண சமூஹங்கள்-முன்பு ஆனந்தம் -ஆனந்தவல்லி பிரக்ரியை –
நல்ல குணங்களே என்பதால் ஜாத் ஏக வசனம் -ஸ்வரூப ரூபா ஆஸ்ரித சௌகர்ய -ஆஸ்ரித கார்ய உபாதேய -பரதவ சௌலப்ய
அர்ச்சா -சௌந்தர்ய போன்ற -ஏறிட்டுக் கொண்ட பாரதந்த்ர்யம் -போல்வன –
கார்யம் -சப்தத்தால் காரணம் -சொல்லலாமே –ஆனந்தத்துக்கு காரணம் விபூதி என்று கொண்டு
யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன்) பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால் 1–குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் -எவன் உயர்வற உயர் நலம் உடையவன் –
2–குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் -குண சாபேஷ பஷத்தில்-உயர் நலம் உடையவன் உடையவன் எவன் -அடைவே அந்வயம் –
பரம சேதனனுக்கு உப்புக்கட்டி எடுத்துக்காட்டா -வேத வாக்கியம் -மைத்ரேய பிரச்னம் யாஜ்ஞர்வர்க்கர் சந்நியாசி -உபதேசம் –
அனந்தர-தர்மம் -அந்தரம் அல்ல வெளி -அபாஹ்யா -வெளிக்கு எதிரான உள் -உள்ளும் புறமும் ஆனந்தமயம் –
ஏக ரூபமான ஆத்மவஸ்துக்கு உள்ளும்புறமும் -உள் என்று ஸ்வரூபம் –தர்மிக் ஞானம் -நான் நான் என்று ஒளிவிடும் -ஸ்வயம் பிரகாசம்
புறம் என்று ஸ்வ பாவம் -தர்ம பூத ஞானம் -ஏக ரசம் ஞானமாகவே இருக்கும் -பிற வஸ்துக்களை அறிதல் -ஸ்வச்மை பிரகாசம்
ஏக ரூபத்வம் சொல்ல வந்ததே திருஷ்டாந்தம் –
மயர்வற ––
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை ச வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி கானும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி -அர்த்தாத் சித்தம்

மதி நலம் –
ஜ்ஞான பக்திகள் இரண்டையும் தந்தான் -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே —நலமான மதியைத் தந்தான் -என்றாய் -முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம் போலே -( கருங்காலி மரம் போலே )
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத் தந்தான் என்கிறார் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி -கர்ம ஜ்ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்திலே பகவத் பிரசாதமாய்
அநந்தரம்-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பக்தியாயிற்று இவரது —
ஆழ்வார் பிரபன்னரோ -பக்தி நிஷ்டரோ -என்று எம்பாரை சிலர் கேட்க –
ஆழ்வார் பிரபன்னர் -பக்தி இவருக்கு தேக யாத்ரா சேஷம் –என்று அருளிச் செய்தார் -என் போலே என்னில்
நாமும் எல்லாம் பிரபன்னராய் இருக்கச் செய்தே ஆண்டாறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் -6-7-1-இ றே இவர்க்கு –
மதியையும் நலத்தையும் -சகாரம் -தருவித்து கொள்ள வேண்டுமே -நலம் -ஏக வசனம் –
அருளினன் –
1–நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
2–எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே –
அருளினன் –
3–இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
4–இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –

அதிபதி –
அவர்களுக்கும் தொட்டுக் கொள் தொட்டுக் கொள் என்ன வேண்டும்படி ஆனைக்கு குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்-
ஸ்வாமி வாசகம் -என்னுதல்
இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலஷண்யம் சொல்ல ஒருப்பட்டு கீழே நின்ற நிலையைக் குலுக்கி -அவன் என்று அவ்வருகே போகிறார்
திவ்ய மங்கள விக்ரஹமே உயர்ந்தது என்றவாறு –

துயர் அறு-
துயர் அறுக்கும் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
சமஸ்த துக்காப நோதன ஸ்வ பாவமான திருவடிகள் சகல ஆத்மாக்களுடையவும் துக்கத்தைப் போக்குகையே ஸ்வ பாவமான திருவடிகள்
துயர் அறு சுடர் அடி -என்று எம்பெருமானார் அருளிச் செய்யும் படி வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றால்
துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இ றே –-நம் காவல் சோர்வால் வந்தது அன்றோ இவனில் அவன் துக்கம் மிக்கு இருக்கும் –
இவர் துயர் அற-தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை-பர துக்க அசஹிஷ்ணுத்வம் திருக் கல்யாண குணமே
இத்தால் இவன் மயர்வற -அவன் துயர் அற்றபடி – க்ருத்க்ருத்ரராய் -விஜூர பிரமோதாக

தொழுது –
நித்ய சம்சாரியாய்ப் போந்த இழவு எல்லாம் தீரும்படி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயித்து
எழு-
அசநேவ ச பவதீ -என்னும் நிலை கழிந்து -சந்தமேனம் ததோ விது-என்கிறவர்கள் கோடியிலே என்னலாம் படி உஜ்ஜீவிக்கப் பார் –
அடியிலே தொழாமையாலே வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவிக்கப் பார் –

என் மனனே –
இப்போது ஆயிற்று தம்மைக் கண்டது

உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்-என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் -அமரர்கள் அதிபதி -என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும் இங்கனே வாக்யைக வாக்ய பாவத்தாலே யோஜிக்கவுமாம் –
அன்றிக்கே
உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன்-அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்–வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம் –

குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை -என்று சொல்லுகின்றவர்கள் எல்லாரும் நிரஸ்தர் இப்பாட்டாலே —
அவர்களை எதிரிகள் ஆக்கிச் சொல்ல வேண்டா விறே- ஸ்வ பஷத்தை ஸ்தாபிக்கவே பர பாஷம் நிரஸ்தமாம் இறே –
நெல் செய்யப் புல் தேயுமா போலே தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இ றே அவர்கள் –

உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே -விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே -அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூ த்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது -திருமந்த்ரார்த்த விவரணம் என்றதும் ஆயிற்று –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading