அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
ஆறாயிரப்படி
கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது –எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா
சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —
ஒன்பதினாயிரப்படி–
அஞ்சாம் பாட்டில் சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதியும் எம்பெருமானாலே என்கிறது –
பன்னீராயிரப்படி-
அநந்தரம் ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –
இருபத்து நாலாயிரப்படி-
ஸ்திதியும் பகவத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே சொல்லுகிறது –
ஈடு —
ஸ்வரூபம் அவன் அதீநம் ஆனவோபாதி –ஸ்திதியும் அவன் அதீனை என்கிறார் –
ஒருவன் ஒரு கிருஹத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு க்ராமத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு ஜன பதத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் த்ரை லோக்யத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் சதுர்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும்
ஆக -சதுர தச புவனத்துக்கு கடவன் ஆனவனோடு -ஒரு கிருஹத்துக்கு கடவன் ஆனவனோடு வாசியற
அவர்கள் ரஷகர் ஆகிறதும் இவை ரஷ்யமாய் உபகாரம் கொண்டது ஆகிறதும் -சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத வன்று இவர்கள் ரஷகர் ஆகமாட்டார்கள் என்கிறார்
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் -தைத்ரிய நாராயண வல்லி-
எல்லா நன்மைகளையும் பண்ணித் தர வல்லனாய் -விரோதிகளையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய
வேறு ஒருவர் பக்கலிலே இந்த ரஷகத்வம் கிடவாது –
அவரவர் -அவருக்கும் அவருக்கும் வாசி இல்லையே சர்வேஸ்வர சர்வேஸ்வரனைப் பார்த்தால்
சமுத்ரத்துக்கு உள்ளே மலை கூழாங்கல் உள்ளது போலே –
விஷ்வக் சேனர் -பிரம்பே செய்யும் கார்யம் அன்றோ -பக்தனுக்கு தானே நேராக வந்து ஆற்றாமை தீர்த்து அருளுவான்
வேண்டிய சம்பத்துக்களை கொடுக்கவும் ஆபத்துக்களை நிரசிக்கவும் வேறு ஒருவனை -புருஷோத்தமனை தவிர -இல்லையே –
பாலான சாமர்த்தியம் -ஹரி இடம் ஒருவன் இடம் தானே உள்ளது -காக்கும் இயல்பினான் கண்ணபிரான் –
யத் வேதா தௌ-ஸ்வர ப்ரோக்தோ வேதாந்தே ஸ ப்ரதிஷ்டித –செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு
பின்னையும் அவ் வாபரணத்தை வாங்கி செப்புக்குள்ளே இட்டு வைக்குமா போலே
ஆத்யந்த பீஜமாய் இருப்பது யாதொன்று -தஸ்ய பிரகிருதி லீ நஸய -அது தன்னுடைய பிரக்ருதியிலே லீனமாய் இருக்கிறதாகிறது-அகாரம்
அது ரஷகனைக் காட்டுவது ஓன்று இ றே–அவ ரஷணே -தாது
ய பரச்ச மகேஸ்வர-அதுக்கு வாச்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன் அவன் சர்வேஸ்வரன் என்றது இறே
வையதிகரண்யத்தால் -ஏக அதிகரண த்தால்
பலம் சாதகம் ருசி குணம் அதிகாரி பேதங்கள் பலவகை –
வீப்சை -பலவற்றை குறிக்க –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply