ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள் – ஸ்ரீ பிரதான சதகம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ பிரதான சதகம்

ய பிரதான பிரபன்னாம் பிரதான சதகம் வியதாத்
தம் நவ்மி வேங்கடாச்சார்யன் துர்யாம் மார்க்கே யாதிசிது

பரவித் உபாசதிதாம் ந பிரதான சதகம் பிராமண சித்தம்
பஜதி சத கோடி பாவம் பர் பக்ஷே ச பிரயோஜனே ச சதாம்

பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் பொன் கழலால் அளந்தான் தன் தாளால் வந்த
கங்கை என்னும் நதி போலே கடல்கள் ஏழில் கமலை பிறந்து அவன் உகந்த கடலே போலே
சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலே தாரில் அவன் தன் துளவத் தாரே போலே
எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்று எண்ணிய நல் வார்த்தைகள் நாம் இசைகின்றோமே

1–பிரதான நான்கு பிரமாணங்கள் -பிரத்யக்ஷம் -அனுமானம் -சாஸ்திரம் -வேதம் –
சத்யம் சத்யம் புந சத்யம் சத்யம் உத்ருத்த புஜம் உச்ச்யதே வேதாத் சாஸ்திரம்
பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம் -நாரதீய புராணம்
2—பர அவர தத்வ -ஹித -புருஷார்த்தங்களில் அந்யதா சித்த பிரமாணாந்தரங்களால் வரும்
கலக்கங்களை எல்லாம் தீர்க்க வல்ல வேதாந்தம் பிரதானம்
3—புருஷ ஸூக்தம் வேதாந்தங்களில் பிரதானம்
4—மந்திரங்களில் வியாபக மந்த்ரங்கள் மூன்றும் பிரதானம்
5—அவற்றுள் அஷ்டாக்ஷரம் பிரதானம்
யதா சர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷு மந்த்ரேஷு ந மந்த்ரோ அஷ்டாஷராத் பர
6—ஆச்சார்யராகிய பிதாவால் அஷ்டாக்ஷர மந்திரத்தில் பிறந்த ஞான பிறவி பிரதானம்
7—கிராம் அஸ்மி ஏகாம் அக்ஷரம் –ஸ்ரீ கீதா -10–25-/ அக்ஷராநாம் அகாரோ அஸ்மி-10 -33- -அகாரம் பிரதானம்
8—ப்ரத்யக் ஆனந்தம் ப்ரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம் அகார உகார மகார இதி தா அநேகதா சம்பவாத் ததே ததோ மிதி -நாரதீய உபநிஷத்
பூ புவ ஸ்வ -மூன்றும் ரிக் யஜுஸ் சாமத்தில் இருந்து -அகார உகார மகார மாய் திரண்டு பிரணவம் ஆயிற்று -சாந்தோக்யம்
சர்வ வாசக ப்ரக்ருதி-
9–அகாரமும் லுப்த சதுர்த்தியும் -சர்வ ரக்ஷகத்வத்தை ஸ்பஷ்டமாக்கும்
10—உபாய யுக்த ரக்ஷகத்வம் பிரதானம்
11—ஸ்ரீ யபதித்வம்/ தயா குணம் / ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -இவையும் பிரதானங்கள்
12—நாராயண அநுவாக மந்த்ரம் பிரதானம்
13—உபய விபூதியையும் ஆளும் மிதுனமே பிரதானம்
14–சர்வ பிரதானம் சர்வேஸ்வரன்
15—ப்ருஹத்வம்-ப்ரஹ்மணத்வம் / வியாபகத்வம் / ஆதாரத்வம் /பர ப்ரஹ்மம் -பிரதானம் —
அவனே பர தத்வம் —அவனே பர தேவதை -அவனே பர கதி—அவனே பர காஷ்டை —அவனே பராயணம் —
அவனே பர தபஸ் /-அவனே பவித்ராணாம் பவித்ரம் –அவனே மங்களாணாம் ச மங்களம் -பரம பிரதானம்
16–நிருபாதிக சேஷியும் அவனே
17—அர்ஜுனன் தேர் தட்டில் போலே ஜீவன் முன் நின்றாலும் அகாரம் முன் நின்றால் போலே அவனே பிரதானம் -சேஷி சேஷ பூத சம்பந்தம்
18—அர்த்த ஸ்வ பாவத்தாலும் அவனே பிரதானம்
19–அத்யந்த பரதந்தர்யம் ஜீவனுக்கு பிரதானம் -அப்ருதக் சித்த விசேஷண வாசி சப்தங்கள் -நிஸ்கர்ஷ பர்யவசாயம் -சரீர சரீரீ சம்பந்தம்
20—அகார வாஸ்ய எம்பெருமான் சேஷிக்கு -நான்காம் வேற்றுமை -மகார வாஸ்ய ஜீவன் -முதல் வேற்றுமை –
ரக்ஷகத்வ ரஷ்யத்வ பாவம் -விபுத்வ அணுத்வ-சேஷி சேஷ பாவ ஞானம் பிரதானம்
21–தத்வ ஞானம்- பக்தி பிரபத்தி உபாய ஞானம்- சேஷத்வ ஞானமே பிரதானம்

22–நமஸ் -சங்க பிரபதனம் -பிரபத்தியே பிரதானம்
23—ஆத்ம சமர்ப்பணம் -அங்கி-ஆனுகூல்ய சங்கல்பாதி -அங்கங்களை விட பிரதானம்
24—ஸ்வரூப சமர்ப்பணம் -பல சமர்ப்பணம் -இவை இரண்டையும் விட பர சமர்ப்பணம் பிரதானம்
25—பர ந்யாஸம் -பர சமர்ப்பணத்தை மாம் சரணம் வ்ரஜ -என்கிறான்
26—வசீகரணம் -சேதன கிருத்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரனே சர்வ காரணன் -அவனே பிரதானம்
27— அஹிர்புத்ன்ய சம்ஹிதை ஸ்தூல -ஸூஷ்ம -பர -வழியிலும் வியாகரண சாஸ்திரம் ஸ்தூல வழியிலும் நமஸ் சப்தார்த்தம் சொல்லும்
நாமயதி-வசீகரணம் -பிரபத்தி -ஸாத்ய உபாயத்வம் சொல்லும் இந்த ஸ்தூல வழியில்
28—ந்ருக்த சாஸ்திரம் படி ந ம -எனக்கு அல்லேன்-ஸூஷ்ம யோஜனையால் ஸ்வ ஸ்வா தந்த்ர புத்தி தவிர்க்கப்படும்
29—பர யோஜனையில்-சரணாகதி யுடைய பிரதான்யம் தெரியும்
30–பர யோஜனையில் பரத்வம் சரணாகதியை விட சர்வேஸ்வரனின் சித்த உபாயத்தின் பிரதான்யம் தெரியும்

31–பஹு வ்ரீஹி சமாசம் -நாரா அயனம் யஸ்ய-அந்தர் வியாப்தி / தத்புருஷ சமாசம் நாராயணம் அயனம்-பஹு வியாப்தி -உபாயம் –
32—ஸ்வரூபம் உபாயம் பலம்-ஒவ் ஒன்றையும் -இரண்டையும் -மூன்றையும் காட்டும் பத்து அர்த்தங்களும்
திரு மந்திரத்தில் இருந்தாலும் மூன்றையும் காட்டும் அர்த்தமே பிரதானம்
33– த்வயம் பிரபத்தி மந்த்ரங்களுக்குள் பிரதானம்
34—ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபத்தை விட பிரதானம் -அவற்றுள்ளும் திருவடி இணைகள் பிரதானம்
காலைப்பிடித்து கார்யம் கொண்டால் விட ஒண்ணாமல் தயா பிரவாஹம் வழியும் –
அநதிக்ரமணீயம் ஹி சரண கிரஹணம் -ஸ்ரீ ராமானுஜருடைய ஸ்ரீ ஸூக்தி
35– இருந்தாலும் திருவடிகளுடைய அவனே பிரதான சித்த உபாயம்
36–ப்ராப்ய ப்ராபக ஐக்கியமும் அவன் இடமே
37–பாஞ்ச ராத்ர சாஸ்திரம் அவனாலே வெளிப்பட்டதால் பிரபத்தி சாஸ்த்ரங்களுக்குள் பிரதானம்
38–அருளிச் செயல்கள் சித்த ரஞ்சிதமாய் ஆராவமுதமாய் பிரபத்தியை கையிலங்கு நெல்லிக் கனியாக விளக்கும்
39 –ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் புராணங்கள் பிரபத்தி விவரிக்கும் -அவற்றுள் ஸ்ரீ ராமாயணம் பிரதானம் —-
ஸக்ருத்யேவ பிரபன்னாயா–யுத்த -6–18–33- -ஸ்ரீ ராம சரம ஸ்லோகமும்
பாபா நாம் வா சுபா நாம் வா வாதார்ஹாணாம் பிலவங்கம கார்யம் கருணாம் ஆர்யேன
ந கச்சித ந அபராத்ராதி–யுத்த -6–116- -ஸ்ரீ சீதா சரம ஸ்லோகம் -44-
40—மஹத்வே ச குருத்வே ச ப்ரியமாணாம் ததோதிகம் மஹத்வாத் பரத்வாச்சா
மஹா பாரதம் உச்ச்யதே –ஆதிபர்வம் -1–293–296-பஞ்சம வேதமும் பிரபத்தி பெருமை பேசும்
41– மஹா பாரதம் பேசும் -தர்ம அர்த்த காம மோக்ஷம் புருஷார்த்தங்களை விட அத்யாத்ம வித்யை பிரதானம்

42—அத்யாத்ம வித்யைகளில் ஸ்ரீ கீதா உபநிஷத் ஸ்ரீ கீதா சாஸ்திரம் பிரதானம்
43—மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாம் ஏவ இஷ்யசி சதயம் தே ப்ரஹித்ஜேன ப்ரியோசி மே –18–65-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச -18–66-
இரண்டும் பரம ரஹஸ்யங்கள் -பிரதானங்கள்
44–இரண்டிலும் வைத்துக் கொண்டு சரம ஸ்லோகம் பரம பிரதானம் — -த்வயார்தம் -அதிகாரி ஸ்வரூபம் பிரபத்தி ஸ்வரூபம் —
அதிகாரி நைரபேஷ்ய -விஷய ஸ்வரூப பல விசேஷங்களை தெளிவாக அருளிச் செய்வதால்
45–சரம ஸ்லோகத்தில் பூர்வ அர்த்த-பூர்வ வாக்கியம்-அதிகாரி ஸ்வரூபம் சொல்வதால் -உத்தர அர்த்தம் -உத்தர வாக்கியத்தை விட – பிரதானம்
46–பூர்வ அர்த்தத்திலும்-பிரதிபந்தக நிவ்ருத்தி கிட்டியதும் ஸ்வத பிராப்தம் -ஸ்வாமி லாபம் -என்பதால் பிரதிபந்தக நிவ்ருத்தி பிரதானம்
47—அர்ஜுனனுக்கு மூன்று சோகங்கள் -2–16–18-நிவர்த்தக பெருமாள் ஸ்ரீ ஸூக்திகள் மூன்றிலும் உண்டே –
இரண்டாம் அத்தியாயத்தில் -அஸ்தானே ஸ்நேஹாதி நிபந்தமான சோகத்தை –நானு சோஷந்தி பண்டித
ஸூர அஸூர சம்பத் -கேட்டு அநாதிகாரத்வ சங்கா -பரிகரித்து 16-அத்தியாயத்தில் –
இறுதியில் பண்ணி அருளிய சோக நிவர்த்தனம் சம்சாரிகளுக்கு அதி பிரயோஜனம் என்பதால் இதுவே -பிரதானம்

48–பிரபன்னர்களுள் ஆர்த்த பிரபன்னர் திருப்த பிரன்னர்களை விட பிரதானம்
49–ஆர்த்த பிரன்னர்களில் உடனே திருவடி சேர்ந்து கைங்கர்யங்களில் நியத்தமாவதில் துடித்து
சம்சாரத்தில் க்ஷணம் பொழுதும் இருக்க மாட்டாதவர்கள் பிரதானம்
50–வைகுண்டம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –என்றபடி அர்ச்சிராதி கதி சிந்தனையே
ஆர்த்த பிரபன்ன்னர்களுக்கு பிரதானம்
51–சரீர அபதான ஸமயே கேவல மத் ஏவைய தயையா அதிர் பிரபுத்த மாம் ஏவ அவலோகயன் -அந்திம ஸ்மர்த்த வர்ஜனமானாலும் –
பகவத் ஸ்ம்ருதி மாறாமல் தேக அவசான காலத்திலும் இருப்பதே பிரதானம்
52–அஞ்ஞான கைங்கர்யம் -அதாவது நித்ய நைமித்திக கர்மாக்கள் –ஸந்த்யாவந்தனாதிகள் — அநுஜய கைங்கர்யங்கள்
புஷ்பம் பரிமாறுதல் இத்யாதிகளை விட பிரதானம் –
53–அக்ருத்ய கரண நிவ்ருத்தியே க்ருத்ய கர்ண பிரவ்ருத்தியை விட பிரதானம்
54–அநுஞ்ஞ கைங்கர்யங்களில் -ஜான அம்சமே கர்ம அம்சத்தை விட பிரதானம்
55–சாஸ்திர விசுவாசம் இல்லாத சிஷ்யர் / சாஸ்திர விப்ரபத்தி பண்ணும் சிஷ்யர் /ஆச்சார்யர் இல்லாமல் ஸ்வயமாக கற்க முயலும் சிஷ்யர் /
ஸூய ஆச்சார்யரை விட்டு விலகிய சிஷ்யர் / உபதேசம் வழி நடவாமல் உள்ள சிஷ்யர் / பகவத் ஆச்சார்ய அபசாரம் செய்யும் சிஷ்யர் /
இவர்களை விட தேவதாந்த்ர பஜனம் பண்ணும் சிஷ்யர்களை நிரசிப்பதே பிரதானம்
56–ப்ரஹ்ம வித்தாய் சாஸ்திரம் அறிந்து அனுஷ்ட்டித்து மற்றவர்களுக்கும் போதிக்கும் சிஷ்யன் பிரதானம்
57—ஆத்ம குண பூர்த்தி உள்ள சிஷ்யனே-சம்ஸ்காரங்கள் அனைத்தும் செய்தும் ஆத்ம குணங்கள் இல்லாத சிஷ்யனை விட பிரதானம்
58–பாகவத கைங்கர்யமே பகவத் கைங்கர்யத்தை விட பிரதானம் –

ஸத்கார சல்லாப ஸஹவாச பீதி ப்ரீதி யோக்ய பாகவதர்கள் என்று ஐந்து வகைகள்
59—ஸத்கார யோக்ய-சம்யக் பகவத் ஞான அதிகாரிகள் – -இவ்வகை பாகவதர்கள் பிரதானம்
60—சல்லாப யோக்ய பாகவதர்களுக்குள் சம்சார நிர்வேதம் அடைந்த பாகவதர்கள் பிரதானம்
61— ஸஹ வாச யோக்ய பாகவதர்களுக்குள் வைராக்யம் முற்றிய பாகவதர்களே பிரதானம்
62—பீதி யோக்ய பாகவதர்கள் மகான்களை அணுக மரியாதை மிக்கு பீதி கொண்டு நீச பாவத்துடன் உள்ள பாகவதர்களே பிரதானம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் குருக்களை அணுகி வீநீத வேஷத்தோடே கற்றது உண்டே
63—ப்ரீதி யோக்ய பாகவதர் -ஆஹ்லாத சீத்ர நேத்ராம்பு புலகாக்ருத காத்ரவான் -பாஷ்ப ரோமாஞ்சலி உடன்
பகவத் குண அனுபவம் செய்யும் பாகவதர்களே பிரதானர்

64–ஸ்வ ஆச்சார்யர் கைங்கர்யமே பாகவத கைங்கர்யங்களை விட பிரதானம்
65—பகவத் கைங்கர்யத்திலும் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்கள் பிரதானம்
66—பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் மொட்டு பல்லவம் பழம் போன்று ஒன்றுக்கு ஓன்று மேம்பட்ட நிஷ்டை
67—இவர்களுக்கு செய்யும் கைங்கர்யங்களை விட இவர்கள் உகந்த கைங்கர்யமே பிரதானம்
68—சிரத்தையுடனும் உகந்து பாவ வ்ருத்தியுடன் செய்யும் கைங்கர்யமே பிரதானம்
69—ஸ்வ ப்ரயோஜனார்த்த கைங்கர்யத்தை விட பர சேஷத்வ அத்யந்த பரதந்தர்ய ஞானம் கொண்டு பர ப்ரீதிக்காக செய்யும் கைங்கர்யமே பிரதானம்
70—பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா அவஸ்தைகளுக்குள் கைங்கர்யம் ஓன்று ஓன்று மேலே பிரதானம்
71—பர ப்ரஹ்மம் ஐந்து நிலையிலும் அந்தர்பவித்துள்ளான் என்று உணர்ந்து ஏதாவது ஒன்றில் கைங்கர்யம் செய்வதே பிரதானம்
72—சத்வ குணம் மிக்கு உள்ள க்ருத யுக கைங்கர்யம் மற்ற யுக கைங்கர்யங்களை விட பிரதானம்
73–க்ருத யுக -த்யானம் / த்ரேதா யுக யாக யஞ்ஞங்கள் /–த்வாபர யுக அர்ச்சனாதிகள் /-இவற்றை விட -கலியுக திரு நாம சங்கீர்த்தனம் -பிரதானம்
74–மனஸ் வாக் காயம் ஓன்று சேர்ந்த ஆர்ஜவ சுத்த ஹ்ருதயத்துடன் செய்யும் கைங்கர்யமே பிரதானம்
75—ஆர்ஜவத்துடன் கிடைத்த ஸாமக்ரியை ஏதாவது கொண்டு ஆராதனையை பிரதானம்
76—பாகவத கைங்கர்யம் செய்ய உசிதமான க்ஷேத்ர வாசமே பிரதானம்
77—ஸ்வயம் வியக்த -சைத்தார்கள் பிரதிஷடை சைத்தம்–ரிஷிகளால் -ஆர்ஷம் –
பரம ஏகாந்தி பாகவதர்களால் -வைஷ்ணவம் -நான்கு வித திவ்ய தேசங்கள்
78–மேல் நான்கிலும் நித்ய வாசம் கிட்டா விடிலும் பாகவதருக்கு கைங்கர்யம் செய்ய உசித தேசம் பிரதானம்
79— பாகவத கைங்கர்யத்துக்கு முன் ஸ்நானம்-வருண -மந்த்ர -மானஸ -மூன்று வகை / குள்ளக் குளிர நீரில் ஆழ்ந்து –
மந்த்ரம் கொண்டு ப்ரோக்ஷித்தும் -அர்ச்சா திருமேனியில் மஹா விசுவாசம் கொண்டு மானஸ -ஸ்நானம் -இதில் மந்த்ர ஸ்நானம் பிரதானம்
80—ஆர்ஜவத்துடன் மனஸ் வாக் காயம் ஒன்றுபட்டு செய்யும் பாகவத கைங்கர்யமே பிரதானம்

81—பேராசை பிரதான விரோதி
82—தோஷ நிவ்ருத்திக்கு ஹேது பாகவத ஸஹ வாசமும் சத் உபதேசங்களும் தாயாதி குணங்களும்
83—ஆச்சார்ய அபராதம் பாகவத பகவத் அபசாரங்களை விட பிரதானம்
84–ஆச்சார்யர அபசாரங்களில் பிரதானம் அவர் செய்த மஹா உபகாரங்களை மறப்பதே
85—அஞ்சலி முத்திரை ஷமைக்கு பிரதான உபாயம்
86—பாகவத அபசாரங்களை பாகவதர்களைக் கொண்டே தீர்த்துக் கொள்ள முடியும்
87—பிராயாச்சித்தம் செய்து போக்க அசக்தனுக்கு ஆச்சார்யர் தயா கடாக்ஷம் கொண்டே போக்கிக் கொள்ள முடியும்
88—ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த கடற்கரை வார்த்தையே சம்சார சாகரம் கடக்க நமக்கு பிரதான தஞ்சம்

89—வேதாந்த சாஸ்திர பிரவர்த்தக ஸ்ய ஆச்சார்யனே பிரதானம்
90–ரகஸ்த்ய த்ரயார்த்தம் அறிவித்த ஆச்சார்யனே பிரதானம்
91–பிராச்சார்யர் கைங்கர்யமே ஸ்யாச்சார்யார் உகந்த கைங்கர்யமாகும்
92—ஸ்வாச்சார்யர் ஏவின பணிகளை செய்வதே உசிதம்
93—தேவதா பரதேவ புத்தி பண்ணும் ஹீனர்கள் ஸஹ வாசம் நிஷித்தம்
94—ப்ரயோஜனாந்த பரர்கள் ஸஹ வாசமும் நிஷிதம்
95—அநந்யார்ஹ சேஷத்வ புத்தியுடன் கைங்கர்யம் செய்வதே உசிதம்
96—காம்ய கர்மாக்கள் நிஷித்தம் -கண்ணனுக்கு காதல் வளர்க்க சர்வேஸ்வரனையும் நித்ய ஸூரிகளையும் பிரார்த்திப்பதே பிரதானம்
97—ஞானாதிகர்களுக்கு கைங்கர்யம் செய்வதே பிரதான கர்தவ்யம்
98—பரி பூர்ண பகவத் அனுபவத்துக்கு பிரதிபந்தகங்களை போக்க சத்வ குண அபிவிருத்தி பிரதானம்
99–சம தமாதி ஆத்ம குணங்களை வளர்ப்பதே கர்தவ்யம்
100—நிரவத்ய நித்ய கைங்கர்ய அபிலாஷை வளர்த்து அர்ச்சிராதி கதி சிந்தனையுடன் வாழ்வதே கர்தவ்யம்
101—நமக்கே தன்னைத் தந்து சாம்யா பத்தி அருளும் சர்வேஸ்வரன் பிரதானங்களுக்குள் பிரதானம்-

———————————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading