ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி / ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -சார சங்க்ஷேபம் /ஸ்ரீ ரகஸ்ய பதவி —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

இது அம்ருதரஞ்ஜன் ரஹஸ்யங்களில் பதின் மூன்றாவது
ஸ்ரீரங்கத்தில் அருளிச்செய்யப்பட்டது)

[ 1-10 திருமந்திரத்தில் ப்ரணவம், த்வயத்தில் பூர்வகண்டம்,-சரம ச்லோகத்தில் பூர்வார்த்தம் இவற்றின் அர்த்தம். 11 21 ப்ரணவ த்வயங்களிலுள்ள நமஸ்ஸின் அர்த்தமும்,சரம ச்லோகத்தில் உத்தரார்த்தத்தில் ஒரு பாகத்தின்அர்த்தமும் 21-30 திருமந்திரத்தில் சதுர்த்தியிலும், த்வயத்தில் சதுர்த்யந்த பதங்களிலும் ஸ்பஷ்டமாயும் சரம ச்லோகத்தில் அர்த்தாத் ஸித்திக்கிறதுமான புருஷார்த்த நிரூணம்

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

ல யஸ்மபி – (அளவில்) சிறியதாயிருந்தபோதிலும், கரீய ம்(அர்த்தத்தினாலும் ப்ரயோஜனத்தினாலும் பொயதாயும் ) அநந்ய ரக்ஷ்யாம் – அநந்ய ப்ரயோஜநர்களினால் ரக்ஷிக்கக் கூடியதும் லக்ஷ்மீஸஹாயஹ்ருத்யாம் – ச்ரிய:பதிக்கு ஹ்ருதயங்கமமுமாயும் ரம்யாம்- அழகாயும் இருக்கிற, ரஹஸ்யரத்னாவளிம் -ரஹஸ்யரத்னாவளி என்னும் க்ரந்தத்தை, ஸந்த: -பெரியோர்கள் ரக்ஷந்து- ரக்ஷிக்கக்கடவர்கள்,

———————————————————

ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -சார சங்க்ஷேபம்-

ஓதுமறை நான்கு அதனுள் ஓங்கும் ஒரு மூன்றினுள்ளே
நீதி நெறி வழுவா நிற்கின்றோம் -போது அமரும்
பேர் ஆயிரமும் திருவும் பிரியாத
நாரணன் அருளால் நாம்

——————————————-

ஸ்ரீ ரகஸ்ய பதவி

ரகஸ்ய த்ரயங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக காட்டி அளிக்கும் –

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும் -தோன்றாத் தொலையும் துயர் –

தோன்றி தான் சூரியோதயம் இருளைத் தொலைக்கும் -இம் மூன்றும் தோன்றாமல் சம்சார துரிதங்களை போக்கி அருளும் என்றவாறு –

இதி தத்வ த்ரயஸ்ய ஏஷா ரகஸ்ய த்ரயஸ்ய ச பதவீ வேங்கடேசே
ந ப்ரத்யக் ப்ராச்சீ பிரதர்சிதா–ப்ரத்யக் ப்ராச்சீ-ஆத்ம ஸ்வரூப ஞானம்

ரகஸ்ய த்ரயர்த்தங்கள்
ஸ்ரீ யபதித்தவம் / ஜகத் காரணத்வம் / ஜகத் ரக்ஷகத்வம் / ஸ்வ பாவிக சேஷித்வம் /
ஜீவன் – அநந்யார்ஹ சேஷ பூதன் / ஜீவன் பாகவத -ததீய சேஷ பூதன்/
ஸமஸ்த ஜகத் பாலனத்வம் / ஞானாதி ஸுலப்யாதி குண விசிஷ்டன் / ஜீவன் அணு -பரமாத்மா விபு / ஜீவன் தேக இந்திரியாதி வி லக்ஷணம் /
அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்த்ர லேசம்/ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் பிரபன்னனுக்கு /
ரகஸ்ய த்ரய ஞானமே உஜ்ஜீவன ஹேது

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading