ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஏழாம் பாகம் —ஸ்ரீ அவந்திகா -உஜ்ஜைன் /ஸ்ரீ மத் த்வாரகா /ஸ்ரீ புஷ்கரம் / ஸ்ரீ குரு க்ஷேத்ரம் / ஸ்ரீ ஹரித்வார் –மாயா /மஹாத்ம்யங்கள் —

ஸ்ரீ அவந்திகா -உஜ்ஜைன் மஹாத்ம்யம் –
மத்திய பிரதேசத்தில் உள்ள க்ஷேத்ரம் -அவந்தி அரசின் இளவரசியின் பெயரால் இது வழங்கப்படுகிறது –
பாரத தேசம் -16-ஜன பதங்களுள் ஓன்று அவந்திகா நகரம் – நீதி சதகம் இயற்றிய ராஜா மார்த்ருஹரி இங்கே அரசாண்டார்
கவி காளிதாசர் பாசர் முதலியோர் இந்நகரத்தின் வளத்தை புகழ்ந்துள்ளார்
சாந்தீபனி ஆஸ்ரமம் உள்ள க்ஷேத்ரம் -ஆஸ்ரமத்துக்கு அருகிலேயே அங்கபாதம் என்னும் ஸ்தலம் உள்ளது –
இங்கு தான் ஸ்ரீ கிருஷ்ணன் கரும் பலகையைக் கழுவி பாடம் எழுதுவாராம்
சிம்ஹஸ்த கும்ப மேளா -இங்குள்ள ஷிப்ரா நதியில் கும்ப மேளா 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது
ஸ்ரீ ராம் மந்திர் காட் -ஷிப்ரா நதிக் கரையில் உள்ள கட்டம் –

————————————

ஸ்ரீ மத் த்வாரகா மஹாத்ம்யம் –
முத்தி தரும் ஷேத்ரங்கள் அயோத்யா / மதுரா/ மாயா -ஹரித்வார் / காசீ / காஞ்சீ / அவந்திகா / துவாரகை –
த்வாரம் காயதி -ப்ரதிபாத யதி = தர்சயாதீதி த்வாரகா –மோக்ஷ வாயிலைக் காட்டிக் கொடுக்கும் க்ஷேத்ரம் த்வாராகா –

தீர்த்தங்கள் –கோமதி நதி / சக்ர தீர்த்தம் /ருக்மிணீ ஹ்ரதம் /விஷ்ணு பாதோத்பவ தீர்த்தம் /கோபி சரோவரம் /சந்த்ர சரோவரம் /ப்ரஹ்ம குண்டம் /பஞ்ச நத தீர்த்தம் /
ருஷி தீர்த்தம் /சங்கோத்தாரா தீர்த்தம் /வருண சரோவரம் / கதா தீர்த்தம் –போன்ற பல -இவற்றில் பலவும் சமுத்திரத்தில் மூழ்கி விட்டன –

1-டாகோர் த்வாரகை-
கோமதீ துவாரகையில் உள்ள ரண்சோட்ராயின் -யுத்தத்தை துறந்து ஓடின பிரபுவின் – மூல மூர்த்தியை கோடாணா என்னும் பக்தர் டாகோர் என்ற ஊருக்கு
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் அங்கேயே ப்ரதிஷ்டை செய்தார் –
ஸ்ரீ மத பாகவதம் -10-ஸ்கந்தம் -51-அத்யாயம் இதன் சரித்திரம் கூறும் -ஜராசந்தன் -18-முறை படையெடுத்து ஒவ் ஒரு முறையும் சைன்யங்களை இழந்தான் –
-17-யுத்தத்துக்கு பின்பு காலயவனன் என்னும் மிலேச்சன் மூன்று கோடி மிலேச்சர்களுடன் வந்து மதுரா புரியைத் தகைக்க
ஸ்ரீ கிருஷ்ணன் -12-யோஜனை-(1-யோஜனை =10-மைல் ) அளவுள்ள ஒரு துர்க்கத்தையும் -அரணையும்-ஸ்ரீ மத் த்வாராகா பட்டணத்தையும் ஏற்படுத்தினான் –
-12-யோஜனை நீளம் -12-யோஜனை அகலம் உள்ள பட்டணம் –
பின்பு சக்தி மஹிமையினால் மதுரா நகரத்துக்கு ஜனங்களை எல்லாம் அவ்விடம் கொண்டு போய் ஒரே இரவில் சேர்த்தான் –
மலைக்குஹை வரை காலயவனனை பின் தொடரச் செய்து -முசுகுந்தன் –இஷுவாகு வம்சத்தில் மாந்தாதாவின் புதல்வன் -என்பவனை கண்ணன் என்று நினைத்து எழுப்ப
சாம்பலானான் -இப்படி யுத்தம் செய்யாமல் ஓடியதால் ரண்சோட்ராய் என்ற பெயர் பெற்று டாகூர் துவாரகையில் விளங்குகிறான் –

2-கோமதீ த்வாரகா
கோமதீ த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகா புரியாகும் -இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது –
கோமதீ த்வாரகையில் இருந்து யோகா என்ற துறைமுகம் வரை தரையில் சென்று அங்கு இருந்து படகில் பேட் த்வாரகைக்குச் செல்ல வேண்டும் –
பண்டைய த்வாரகையின் சிஹ்னங்கள் பூமிக்கு அடியில் கிடைத்து வருகின்றன -இந்நகரம் காடியவாதி என்ற இடத்தில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது –
இங்குள்ள கோயில் முதலில் ரண சோட் ராய் மந்திர் என்று பெயர் பெற்றது -இது த்வாரகாதீ சமந்திர் -என்றும் சொல்லப் படுகிறது –
கோமதீ நதிக்கரையில் இருந்து -56-படிக்கட்டுக்கள் ஏறினதும் திருக் கோயில் உள்ளது –
நான்கு பக்கமும் வாசல்கள் உண்டு -பரிக்ரம மார்க்கம் இரண்டு சுவர்களின் நடுவில் உள்ளது -உலகிலேயே பெரிய த்வஜ கொடி மரம் இங்கே உண்டு –
ரண சோட ராய் கருப்பு வர்ணத்தில் நாலு திருக் கைகளுடன் எழுந்து அருளி உள்ளார் -இங்குள்ள மூலவரை போடாணா பக்தர் டாகோர் எழுந்து அருள பண்ண
ஆறு மாதத்துக்கு பின்பு ஸ்ரீ ருக்மிணி தேவி பூஜித்த மூர்த்தி லாட்வா என்ற கிராமத்துக்கு அருகில் ஒரு குளத்தில் கிடைக்க
அந்த மூர்த்தி தான் இங்கே ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
தெற்கு பாகத்தில் த்ரிவிக்ரமன் திருக் கோயில் உள்ளது -இங்கே சனகர் சனாதனர் சனந்தனர் சமந்தா குமாரர் மஹாபலி மூர்த்திகளும் உண்டு –
பெரிய திருவடி மூர்த்தியும் உண்டு -இதில் ப்ரத்யும்னர் கருப்பு வர்ணத்தில் உள்ளார் அவருக்கு அருகில் அநிருத்தன் எழுந்து அருளி உள்ளார் –
சபா மண்டபத்தின் ஒரு பக்கம் பலராமர் எழுந்து அருளி உள்ளார் -ஆலயத்தின் கிழக்கு பகுதியில் துர்வாசருடைய சிறிய கோயிலும் உண்டு –

மூன்று மைல் தூரத்தில் ஸ்ரீ ராம லஷ்மணர்கள் மந்திர் உள்ளது -அங்கு இருந்து -2-மைலில் ஸ்ரீ சீதாவாடீ உள்ளது -அதில் பாபா புண்யங்கள் வாசல்கள் உள்ளன

க்ருத யுகத்தில் மஹாராஜர் ரைவதர் சமுத்திரத்தின் நாடு பூமியின் மேல் குசத்தைப் பரப்பி யஜ்ஞம் செய்தார் -அதனால் இவ்விடம் குசஸ்தலீ என்ற பெயர் பெற்றது
பிற்காலத்தில் குசன் என்ற கொடிய தானவன் உபத்திரம் செய்ய அவனை நிரசிக்க ப்ரஹ்மா மகாபலியின் ராஜ்யமான
பாதாள லோகத்தில் இருந்து த்ரிவிக்ரம பகவானை அழைத்து கொல்வித்தார்
துர்வாசர் துவாரகைக்கு வர -காரணம் இல்லாமல் ருக்மிணியை நீ ஸ்ரீ கிருஷ்ணனை பிரிய வேணும் என்று சபித்தார் –
ஸ்ரீ கிருஷ்ணன் அவளை ஆச்வாஸப்படுத்தி தம்முடைய மூர்த்தியை அவள் பிரிவு காலத்தில் பூஜிக்கலாம் என்று கூறினார் –
அவள் பூஜித்த மூர்த்தியே இப்போது இருக்கும் ஸ்ரீ த்வாரகதீசரின் மூர்த்தியாகும் –
இப்போது உள்ள திருக் கோயில் ஸ்ரீ கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரா நாபனால் அமைக்கப்பட்ட்டதாகும்

ஸ்ரீ மத் பாகவதம் –தசம ஸ்கந்தம் -50–அத்யாயம் -இதன் சரித்திரம் கூறும் –
கம்சனுக்கு அஸ்தி ப்ராஸ்தி-என்ற இரண்டு பட்ட மஹிஷிகள் -ஸ்ரீ கிருஷ்ணனால் கொல்லப்பட-தந்தை ஜராசந்தன் இடம் சென்று அழ-
கோபம் கொண்டு யாதவப் பூண்டே இல்லாதபடி செய்ய முயன்றான் -23-அஷவ்ஹிணி சைன்யங்களை திரட்டி மதுரையை தகைத்தான்
-21780-தேர்கள் -21870-யானைகள் -65610-குதிரைகள் -109350-காலாட்படை கொண்டது ஒரு அஷவ்ஹிணி சேனையாகும் –
இது பூமிக்கு பாரம் -ஜராசந்தனை அளிக்காமல் விட்டால் தான் மேலும் அவன் சேனைகளை திரட்டி வருவான் என்ற திரு உள்ளம் கொண்டு சேனைகளை மட்டும் அழிக்க
சைன்யங்கள் எல்லாம் முடிந்து தேரும் இல்லாமல் ப்ராணன்கள் மட்டுமே மீதி உள்ள ஜராசந்தனை அல்ப மிருகத்தை பிடிப்பது போலே பலராமன் பிடிக்க
அவனைக் கொல்ல வேண்டாம் என்று ஸ்ரீ கிருஷ்ணன் தடுக்க -சிசுபாலன் போன்றார்களால் தூண்டப்பட்டு பதினெட்டு தடவைகள்
பல அஷவ்ஹிணி சைத்தன்யங்களுடன் வந்து யுத்தம் செய்தான்
-17-யுத்தத்துக்கு பின் காலயவனன் மிலேச்சர்கள் உடன் வர -ஜல துர்க்கத்தை ஏற்படுத்தி -பந்துகளை கொண்டு போய் வைத்தான்
விஸ்வகர்மா வாஸ்து சாஸ்த்ரா விதியின் படி ராஜவீதிகள் உப்பரிகைகள் கோபுரங்கள் அச்வசாலை அன்னசாலை இவற்றை நிர்மாணித்தான்
தேவேந்திரன் ஸூ தர்மை என்னும் சபா மண்டபம் –

3–பேட் த்வாரகா –
கோமதீ துவாரகையில் இருந்து -20-மைல் தூரத்தில் உள்ளது -பேட் =த்வீபம் — தீவு /-18-மைல் தூரத்தில் ஓகா துறை முகம் -அதுவரை தரையில் வந்து மீதி படகில் –
-7-மைல் சுற்றளவு உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ண மஹல் –விசாலமான ஆலயம் -ப்ரத்யும்ன சந்நிதி ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதி -புருஷோத்தமன் -தேவகீ-மாதவன் -ஆகியோர்களின் சந்நிதிகள் –
தீவின் தென்மேற்கில் பெரிய திருவடி சந்நிதி உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ணன் மஹாலில் சமீபத்தில் சத்யபாமை ஜாம்பவதி சந்நிதிகள் உள்ளன -கிழக்கே சாஷீ கோபாலன் சந்நிதி உள்ளது –
வடக்கில் ருக்மணி ராதா சந்நிதிகள் உள்ளன -ஜாம்பவதி மஹாலில் ஸ்ரீ லஷ்மீ நாராயணனின் சந்நிதி ஜாம்பவதி சந்நிதிக்கு முன்னாள் உள்ளது
ருக்மணி மஹாலில் அவளின் சந்நிதிக்கு முன்னாள் கோவர்த்த நாதரின் சந்நிதி உள்ளது –
பேட் துவாரகையில் ரண சோட் சாகர் –ரத்னதாலாப் – ரத்ன குளம் –கசாரி தாலாப் -சங்க தாலாப் போன்ற பல குளங்கள் உள்ளன
முரளி மனோகர் ஆலயம் ஹனுமான் ஆலயம் போன்றவை உள்ளன -சிறிது தூரத்தில் யோகாசன ஸ்தானம் உள்ளது -அருகில் பல குண்டங்கள் குளங்கள் உள்ளன –
ஸ்ரீ கிருஷ்ண மஹாலில் இருந்து 1 /2 மைல் தூரத்தில் சங்கோத்தர தீர்த்தம் உள்ளது -இங்கே சங்க சரோவரம் -சங்க நாராயண மந்த்ரம் இரண்டும் உள்ளன
இங்கே தான் ஸ்ரீ கிருஷ்ணன் சங்கா ஸூரனை -பஞ்சஜனனாய் கொன்று பாஞ்ச ஜன்யம் எடுத்துக் கொண்டார் –
சங்க நாராயண பகவானின் மூர்த்தியின் மேல் தசை அவதாரங்களின் மூர்த்திகள் உள்ளன
பரிக்ரமா -சமுத்திரத்தின் கரை -சரண் கோமதீ -பத்ம தீர்த்தம் -ஐந்து காக்கைகள் -கல்ப வருஷம் காளிய நாகம் –
சங்க நாராயண மந்த்ரம் -இவை யாவற்றையும் ப்ரதக்ஷிணம் சுற்றி வருவார் –
கோபீ தாலாப் -பேட் துவாரகையில் இருந்து படகில் சென்று ஓகா துறைமுகத்தில் இறங்காமல் மேந்த ரடாக் கிராமத்தில் இறங்கி அங்கு இருந்து இரண்டு மைல் தூரம்
கோமதீ த்வாரகையில் இருந்து -13-மைல் தூரத்தில் உள்ளது –
பிண்டாரா -பிண்ட சரோவரம் -இந்த ஷேத்ரத்தின் பழைய பெயர் பிண்டராகம் -பிண்ட தாரகம்-கோமதீ துவாரகையில் இருந்து -20-மைல் தொலைவில் உள்ளது
த்வாரகா ஜாம் நகர் ரயில் பாதையில் -ஜாம் நகரில் இருந்து -54-மைல் தூரம் -போபால் என்ற நிலையத்தில் இருந்து -12- மைல் தூரம் –இது மத்திய பிரதேச போபால் இல்லை –
இங்கு சரோவரம் குளம் -பிண்டம் கொடுக்க அவை மூழ்காமல் மிதக்கின்றன -துர்வாசர் ஆஸ்ரமம் இங்கே இருந்ததாம் –
பாண்டவர்கள் ஸ்ரார்த்தம் செய்த இடம் -லோகத்தாலான பிண்டத்தை செய்து கொடுத்தாலும் மிதந்ததாம் -துர்வாசரின் வர தான பலத்தால் –

ஸ்ரீ மத் பாகவதம் -10-ஸ்கந்தம் -59-/-69- அத்தியாயங்கள் -நரகாசூரன் சத்யா பாமையின் பிள்ளை –விருத்தாந்தம் –
இந்திரனுடைய தாயான அதிதியின் குண்டலங்களையும் மேரு மலையில் உள்ள மணிபர்வதம் என்ற இந்திரனுடைய இடத்தையும் பறித்துப் போக –
நரகனுடைய நகரமான பராக் ஜ்யோதிஷபுரத்துக்கு சென்று சக்ராயுதத்தால் தலையை அறுத்துத் தள்ளி -16000-சிறையில் இருந்த பெண்மணிகளை
-16000-உருவங்களை எடுத்துக் கொண்டு ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து ஒரு நொடியும் பிரியாமல் இருந்து
க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தான் –

4–ப்ரபாஸ தீர்த்தம்
சவ் ராஷ்ட்ரத்தில் மேற்கு ரயில்வேயின் ராஜ்கோட் வேராவால் ரயில் பாதை / கிஜடியா வேராவால் ரயில் பாதை -இரண்டாலும் வேராவால் சென்று இங்கே அடையலாம்
இந்த தீர்த்தத்தின் கரையில் தான் யாதவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மரணம் அடைந்தார்கள் –
ப்ராஸீ – திரிவேணி –இங்கே செல்லும் போது முதலில் ப்ரஹ்ம குண்டம் என்ற குளம் உள்ளது -அதற்கு அருகில் நிறம்மா கமண்டலு என்ற கிணறு உள்ளது
அதற்கு முன்னால் ஆதி ப்ரபாசம் ஜல ப்ரபாசம் என்ற இரண்டு குண்டங்கள் உள்ளன –
ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா சரஸ்வதி கபிலா என்ற நதிகள் சமுத்திரத்தில் கலக்கின்றன -இந்த சங்கம ஸ்தலமான ப்ராஸீ திரிவேணி –
கபிலா நதி சரஸ்வதியை கலந்து சரஸ்வதி ஹிரண்யாவில் கலக்கிறது -ஹிரண்யா நதி கடலில் கலக்கிறது
இந்த த்ரிவேனியில் இருந்து சிறிது தூரத்தில் ஸூர்ய மந்திரம் உள்ளது -ஐந்து அழிந்த நிலையில் உள்ளது -இதன் அருகில் ஒரு வ்ருக்ஷத்தின் அடியில் பலராமரின் மந்திரம் உள்ளது
இங்கு இருந்து பாம்பின் வடிவுடன் பாதாள லோகம் அடைந்தார் -இங்கே த்ரிவேணீ மாதா ராமன் கிருஷ்ணன் ஆலயங்கள் உள்ளன
இதை தேஹ உத்சர்க்க தீர்த்தம் -உடலை விடுவது என்கிறார்கள் -ஸ்ரீ கிருஷ்ணர் பாலாக தீர்த்தத்தில் தன்னுடைய பாணங்களை துறந்து இங்கு வந்து மறைந்தார்
யாதவஸ் தலீ-ஹிரண்யா நதியின் கரையில் உள்ளது -இங்கே யாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டார்கள் –
இங்கு இருந்து சிறிது தூரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹர் மந்த்ரம் உள்ளது
பால தீர்த்தம் வேராவால் ரயில் நிலையத்தில் இருந்து ப்ரபாஸ தீர்த்தம் வரும் வழியில் -2-1 /2-மைல் தூரத்தில் பாலுபுர் கிராமம் உள்ளது
இங்கே பால குண்டம் குளம் உள்ளது -அதன் அருகில் பத்ம குண்டம் உள்ளது -அங்கே ஒரு அரச மரம் உள்ளது -அதை மோக்ஷ பீபல் என்பர் –
இங்கு தான் ஸ்ரீ கிருஷ்ணர் சயனித்து வலது திருவடியின் மேல் இடது திருவடியை வைத்து அசைத்துக் கொண்டு இருக்க
ஜரா என்ற வேடன் இடது கால் கட்டை விரலில் பணத்தால் அடிக்க அந்த வ்யாஜத்தால் ஸ்ரீ வைகுண்டத்துக்கு எழுந்து அருளினான்
அந்த வேடன் பகவானுடைய திருவடியில் பதிந்த பணத்தை எடுத்து பால குண்டத்தில் சேர்த்தான்
ஸ்ரீ மத் பாகவதம் இதை –11-ஸ்கந்தம் -30-/-31-அத்தியாயங்களில் கூறும் அதுவே மேலே வைகுண்ட தாம கமனமாக வரும் –

5–வைகுண்ட தாம கமனம்-
யாதவர்கள் ரிஷிகளை பரிகாசம் செய்ய எண்ணி சாம்பன் என்பவனுக்கு பெண் வேடமிட்டு -உலக்கையை வைத்து கட்டி -எண்ண குழந்தை பிறக்கும் -என்று கேட்க
வயிற்றிலே உள்ளதே பிறக்கும் என்று சாபம் இட -சாம்பனுக்கு உலக்கை பிறந்தது -பயந்த யாதவர்கள் உலக்கையை அரசனிடம் காட்ட
அதை அவன் பொடி பொடியாக்கி கடலிலே கரைக்கச் சொல்ல -அம்மரத்த துகள்கள் கரையில் ஒதுங்கி கோரைப் புற்களாக முளைக்க –
உலக்கையின் இரும்புத் துண்டை ஓர் மீன் விழுங்கி அது ஒரு வேடனிடம் ஸ்ர -அந்த இரும்புத் துண்டைத் தீட்டி தன அம்பின் நுனியில் ஏற்ற
ப்ராஹ்மணர்களின் சாபத்தால் முளைத்த கோரைப் புற்களால் யாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு அழிய –
இரும்புத் துண்டு கண்ணன் வைகுண்டம் எழுந்து அருள உதவிற்று –
பூமியின் பாரம் தீர்க்கவே அன்றோ ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரம்
பலராமனும் தன்னை சங்கர்ஷணனாக தியானித்து மானிட உருவத்தை துறந்தான்
இந்த சரித்திரத்தை எவன் பரிசுத்தனாகி பக்தியுடன் சங்கீர்த்தனம் செய்து அதன் மஹிமையாலே கதிகளில் சிறந்த ஸ்ரீ வைகுண்ட லோக கதியைப் பெறுவார் –
பிரபாச -பெயர்க் காரணம் -பிரகார்ஷேன பகவத் வைபவா பா சந்தே அஸ்மின் தே சே இதி ப்ரபாஸ -பகவத் வைபவங்கள் வெளிப்படும் இடம் என்றவாறு
ரிஷிகளின் சாபங்களுக்கு கட்டுப்பட்டு ஆஸ்ரித பாரதந்தர்யம் வெளியிட்டு அருளின சரித்திரம் –

6–ஸ்ரீ நாத த்வாரகா –
ஸ்ரீ நாதன் -ஸ்ரீ நாத் ஜி -கோவர்த்தன கிரிதாரி ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு வடக்கே -50-கி மை தூரத்தில் உள்ளது
மேவார் ராணா வினுடைய கைங்கர்யத்தில் -17-நூற்றாண்டில் கட்டப் பட்ட திருக் கோயில்
நாதன் இருக்கும் இடத்துக்கு வாயில் -நாதனிடம் அழைத்துச் செல்லும் வாசல் என்ற பொருள்
முதலில் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலேயே எழுந்து அருளிய மூர்த்தி -ஓவ்ரங்க சீப்பின் படையெடுப்பில் இருந்து காக்க கோ ஸ்வாமி தாவோஜி
ராணா ராஜ்சிங்கின் உதவியோடு -1762-ஆண்டு மாட்டு வண்டில் இங்கே கொணர்ந்தார்
அந்த வண்டி மண்ணில் புதைந்து நகராமல் நிற்க இங்கேயே இருக்க திரு உள்ளம் போலும் என்று எண்ணி தாவோஜி அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் –

கிரிதாரி -கோவர்த்தன கிரியை இடது திருக் கையால் அனாயாசமாக தூக்கிக் கொண்டு வலது திருக் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நாட்டியமாடும் திருக் கோலம்
கருப்பு சலவைக்கல்லில் வடிக்கப்பட்ட இவ்விக்ரஹத்தில் இரண்டு மாடுகள் ஒரு பாம்பு இரண்டு மயில்கள் ஒரு கிளி ஆகியவையும் உள்ளன
குழந்தை கண்ணனாகவே பாவித்து -அவனை துயில் எழுப்புதல் -கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தல் திருமஞ்சனமாட்டுதல் -ஸ்ரீ வல்லபாசார்ய சம்ப்ரதாயம்
ஒரு முறைக்கு -30-நிமிடங்களுக்கு மேல் சேவை இல்லை -குழந்தை கண்ணன் அன்றோ
மங்களா – சிருங்கார –க்வால் -உத்தாபன –போக்-சந்த்யா ஆர்த்தி சயன ஆர்த்தி என்று ஒவ் ஒரு நாளும் 8-முறை தரிசனங்கள் உண்டு –
மூன்று வாசல்கள் உண்டு -தனி வாசல் பெண்களுக்கு -கண்ணன் அருகில் இவர்களுக்கே சேவை –
கோ சாலையும் உண்டு -அவற்றின் பாலை கோயிலிலே நாமே பெற்று பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஜென்மாஷ்டமி அன்னக்கூட உத்சவம் சிறப்பு இங்கே –
பக்த மீராபாய் வரும் அளவும் கதவுகள் திறக்காமல் இருந்து தனக்கு அவள் பால் இருந்த பிரளயத்தை உணர்த்திய கிரி கோபாலன்

7–மூல த்வாரகா -போர்பந்தரில் இருந்து -30-கி மீ தொலைவில் உள்ளது

8–காங்க்ரோலி த்வாராகா -ஸ்ரீ நாத த்வாராகாவில் இருந்து -12-கி மீ தொலைவில் உள்ளது –

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

—————————

ஸ்ரீ புஷ்கர க்ஷேத்ரம் மஹாத்ம்யம்
1–ஆர்ஷம் –ரிஷிகளால் ஏற்படுத்தப் பட்ட ஸ்தலங்கள்
2–பவ்ராணிகம் –புராணங்களால் விவரிக்கப்படும் ஸ்தலங்கள்
3–ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள்
4–தைவம்-பிரம்மாதி தேவர்கள் தவம் செய்து உண்டான ஸ்தலங்கள்
5–மானவம் -மன்னர்களாலும் அடியவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட ஸ்தலங்கள்
6–அபிமான ஸ்தலம் –ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்ட ஸ்தலங்கள்
இவற்றுள் ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -8-/ சாளக்கிராமம் -பத்ரி -நைமிசாரண்யம் -புஷ்காரம் -வானமா மலை -ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ முஷ்ணம் -திருமலை ஆகியவை
புஷ்கரணி- புஷ்கரம்- குளம் –தாமரையில் இருந்து உண்டான தீர்த்த ரூபம் –
நம் பாரத தேச பஞ்ச புண்ய தீர்த்தங்கள் -புஷ்கரம் -குரு க்ஷேத்ரம் -கயா -கங்கா ப்ரபாசம் ஆகியவை
பஞ்ச புண்ய சரோவர் -மான சரோவர் -புஷ்கரம் -பிந்து சரோவர் -நாராயண சரோவர் -பம்பா சரோவர்
இது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் -18-கி மீ தொலைவில் அராவல்லி மலைத்ததோடர்களால் சூழப்பட்டுள்ளது –

ஸ்ருஷ்டிக்கு முன் யாகம் செய்ய வேண்டும் என்று இந்நிலத்தை பிரேமா தேர்ந்து எடுக்க -அங்கு வஜ்ரநாடன் அரக்கன் சிறுவர்களை கொள்வதையே
தொழிலாக கொண்டு இருக்க -அவனை அழிக்க தன் கையில் இருந்த தாமரை மலரை ஏறிய அது தூள் தூளாக்கி -5-கி மீ தூரம் வரை -52-இடங்களில் விழுந்ததாம் –
அவை விழுந்த இடங்களில் எல்லாம் குளம் தோன்ற -அதுவே புஷ்கரம் -இவ்வாறாக இங்கு -52-சிறிய பெரிய வற்றாத குளங்கள் உள்ளன –
இங்கு இருந்து தான் சரஸ்வதி நதி பெருகுகிறது -அரக்கனை அளித்த பிரமன் யாகம் செய்யத் தீர்மானித்தார் -வெகு நேரம் வரை சரஸ்வதி வரவில்லை –
காயத்ரீயை மணந்து கொண்டு ஆரம்பிக்க -அங்கு சரஸ்வதி வர பிரம்மாவை சபிக்க -இந்த ஸ்தலம் தவிர வேறு எங்கும் கோயில் கட்டி வணங்க மாட்டார்கள் –
மலை உச்சியில் சரஸ்வதி த்வத் திருக் கோலம் -தீபாவளி அன்று காயத்ரீ தேவியுடன் கூடிய பிரம்மாவுக்கு தேன் பால் தயிர் பஞ்சாமிர்த திருமஞ்சனம் ஆரத்தி காட்சி சிறப்பு இங்கு
தீர்த்தங்களுக்கு அரசனாக புஷ்கரம் –உதயமாகும் முதல் ஸூர்ய கிரணம் இங்கே தீர்த்தத்தில் தான் விழுகிறது -கார்த்திகை ஏகாதசி இங்கே தீர்த்தமாடுதல் விசேஷம்
கார்த்திகை பவ்ர்ணமீ பூஜை சிறப்பு -33-கோடி தேவர்களும் கலந்து கொள்கிறார்களாம்
ஜ்யேஷ்ட புஷ்கரம் என்று அழைக்கப்படும் இடத்தில் பிரம்மாவும் -மத்திய புஷ்கரம் இடத்தில் விஷ்ணுவும் கனிஷ்ட புஷ்கரம் இடத்தில் சிவனும் வணங்கப்படுகிறார்
பிரம்மா கோயிலில் வலப்பக்கம் சாவித்ரிக்கும் இடப்பக்கம் காயத்ரிக்கும் திருக் கோயில்கள் உண்டு -சவ்நகர்த்தி முனிவர்களும் சேவை
யானை மீது அமர்ந்த குபேரனும் நாரதரும் சேவை -பத்ரி நாராயணன் கோயிலும் ஸ்ரீ வராஹர் கோயிலும் பழமை வாய்ந்தவை
தென்னிந்திய ஸ்ரீ வைகுண்ட நாதர் கோயிலும் இங்கு உண்டு
வீற்று இருந்த திருக் கோலத்தில் புண்டரீக வல்லி தாயாருடன் சேவை
கனிஷ்ட புஷ்கரத்தில் ராதா கிருஷ்ணன் கோயில் உண்டு -மலை உச்சியில் சாவித்ரி தேவிக்கும் காயத்ரி தேவிக்கும் கோயில்கள் உண்டு
யஜ்ஞ பர்வதம் இங்குண்டு அங்குள்ள அகஸ்திய குண்டத்தில் நீராடிய பின்பு தான் புஷ்கர யாத்திரை பூர்த்தியாகும்
நாக குண்டம் சக்ர குண்டம் பத்ம குண்டம் கங்கா குண்டம் போன்ற பலவும் உண்டு இங்கு சரஸ்வதி நதியில் நீராடுவது புனிதம்
இங்கு இந்நதி சுபத்ரா காஞ்சனா ப்ராஸீ நந்தா விஷாலிகா என்ற ஐந்து பெயர்களுடன் பெருகுகிறது
அருகில் நாக பர்வதத்தில் அநேக குகைகள் உண்டு -பர்த்ரு குஹை பார்க்க வேண்டியது -புரா மந்திர் நயா மந்திர்-பிரசித்தம் –

—————————-

ஸ்ரீ குரு க்ஷேத்ர மஹாத்ம்யம்
ஸ்ரீ மஹா பாரதம் வனபர்வம் ஸ்ரீ பாத்ம புராணம் விரித்து உரைக்கும் –

குரு க்ஷேத்ரம் க மிஷியாமி குரு க்ஷேத்ரே வஸாம்யஹம்
ய ஏவம் சததம் ப்ரூயாத சோ அபி பாபை ப்ரமுச்யதே –வாயார அழற்றவே பாபங்களில் இருந்து விடுதலை
பாம்சவோ அபி குரு க்ஷேத்ரே வாயு நா சாமுதீரிதா
அபி துஷ்க்ருதா கர்மாணம் நயந்தி பரமாம் கதிம் –தூசிகள் பரம கதி அளிக்கும்
மனசாப்யபி காமஸ்ய குரு க்ஷேத்ரம் யுதிஷ்ட்ர
பாபா நி விப்ரணச் யந்தி ப்ரஹ்ம லோகம் ச கச்சதி -மனசால் ஆசைப்படவே பாபங்கள் நீங்கி பரமபதம் அடையலாம் –
கத்வா ஹி ஸ்ரத்தாயா யா யுக்த குரு க்ஷேத்ரம் குரூதூஹ
பலம் ப்ராப் நோதி ச ததா ராஜ ஸூயா ஸ்வ மேதா யோ –சிரத்தையுடன் தீர்த்த யாத்ரையால் ராஜஸூய அஸ்வமேத யாகங்கள் பலன்களை பெறலாம் –

டெல்லியின் வடக்கிலும் ஹரியானா மா நிலம் அம்பாலா நகரின் தெற்கேயும் அமைந்துள்ளது –
இதனை சமந்தபஞ்சகம் என்றும் பிரமனின் உத்தர குண்டம் யாகவேதி என்றும் சொல்வர்
ஐந்து யோஜனை -50-மைல் நீள அகலங்கள் -250-சதுர மைல் விஸ்தீரணம்
சரஸ்வதி நதிக் கரையில் தவம் செய்த ரிஷிகளுக்கு வேத மந்த்ரங்கள் வெளியிட்ட போது முதன் முதலாக இந்த புண்ய பூமியிலே ஓதினார்கள்
வைதிக யஜ்ஞ கர்மங்களை இங்கேயே செய்தார்கள் -வசிஷ்டர் விசுவாமித்திரர் இங்கே தான் அருள் பெற்று ப்ரஹ்ம ரிஷிகள் ஆனார்கள்
குரு மஹா ராஜாராம் செப்பனிடப்பட்ட க்ஷேத்ரம் -ஆத்ம ஞான கேந்திரமாக உருவாக்கினான் -வாமன புராணம் இதை விவரிக்கும்
அஷ்டாங்க தர்மம் -வளர்த்தான் -தபஸ் -சத்யம் -ஷாமா -தயா -சவ்சம் -தானம் -யோகம் ப்ரஹ்மசர்யம் -ஆகியவையே இவை
-48-கோச அளவுள்ள பூமி தர்ம பூமி -அக்ஷயமான பலம் நல்கும்
இதனாலேயே தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே வாக்கியம் -இது தர்ம பூமி என்பதை உணர்த்தும்
ஸ்ரீ கீதை உபதேசிக்கப் பெட்ரா இடம் -ஜ்யோதிசர்-என்ற புண்ய தீர்த்தஸ்தலம் –

இங்கு ஏழு புண்ய நதிகள் -ஏழு திவ்ய வனங்கள் நான்கு புண்ய தடாகங்கள் -பவித்ரமான நான்கு கிணறுகள் புராதான பிரசித்தம் –
சரஸ்வதி புண்யாததா வைதர்ணீ நதீ ஆபகா சமஹா புண்யா கங்கா மந்தாகி நீ நதீ
மதுஸ்ரவா அம்லு நதீ கௌஸகீ பாபநாசி நீ த்ருஷதூதீ மஹா புண்யா ததா ஹிரண்யவதீ நதீ –ஸ்ரீ வாமன புராணம்
சரஸ்வதி -வைதர்ணீ – ஆபாகா -மது ஸ்ரவா-கௌஸகீ -த்ருஷதூதீ -ஹிரண்வதீ -ஆகிய ஏழு புண்ய நதிகள்
காம்யகம் ச வனம் புண்யம் ததா அதி தீவனம் மஹத்
வ்யாஸஸ்ய ச வனம் புண்யம் பல்கீவனமே வச
ததா ஸூர்ய வனம் ஸ்தானம் ததா மதுவனம் மஹத்
புண்ய சீத வனம் நாம சர்வ கல்மஷ நாசனம் –ஸ்ரீ வாமன புராணம்
காம்யக வனம் -அதி தீவனம் -வ்யாஸ வனம் -பலகீ வனம் -ஸூர்ய வனம் -சீதா வனம் -ஆகியவை
நான்கு பவித்ரா தடாகங்கள் –
ப்ரஹ்ம சரோவர் -ஜ்யோதிசர் -ஸ்தானேசர் -காலேஸர்-ஆகியவை பவித்ரமான தடாகங்கள் -ஜ்யோதிசர் இடத்தில் ஸ்ரீ கீதா உபதேசம்
நான்கு பவித்ர கூபங்கள் -கிணறுகள் -சாந்த்ர கூபம் -விஷ்ணு கூபம் -ருத்ர கூபம் -தேவீ கூபம்-நான்கும் பவித்ரமான கிணறுகள் –

ஆபாகா நதீ -கர்ணகேடா குடில் அருகில் உள்ள நதீ -மானஸ தீர்த்தம் கிழக்கில் ஒரு கோச தூரத்தில் பூஜிக்கப் பட்டு வந்தது
காம்யக வனம் –பாண்டவர்கள் வனவாசத்தில் சில காலங்கள் இங்கே அளித்ததாக கூறுவர்
ப்ரஹ்ம தடாகம் -முன்பு மிக பெரிய நதியாக இருந்தது -இன்று ப்ரஹ்ம சரோவர் பெயரில் -3600- அடி நீளம் /-1200-அடி அகலம் /-12-அடி ஆழம் கொண்ட தடாகம்
துரியோதனன் பாரத போரின் இறுதி நாட்களில் இங்கு தான் ஒளிந்து கொண்டு இருந்தான்
ஜ்யோதிசர் –ஸ்ரீ கீதாம்ருதம் ஊட்டிய இடம் -முன்பு பழைமையான நதி இன்று ஞான ஊற்று பெயரில் தொடக்கமாக விளங்குகிறது
கரைகளில் பல ஆலமரங்கள் -அக்ஷய வட வ்ருக்ஷம் மிக பழைமை -1960-வருடம் மஹா ராஜா தர்பங்கா அக்ஷய படத்தின் நாற்புறமும் மேடை அமைத்து உறுதியான தளமிட்டார்
சந்த்ர கூபம் -குரு க்ஷேத்ர சரோவரின் மத்தியில் உள்ள புருஷோத்தமபுரம் என்ற மிகப் புராதனமான இடத்தில் உள்ள கிணறு –
அருகில் பழைய கோயில் இருக்கிறது -பாரத போர் முடிவில் யுதிஷ்ட்ரர் இங்கு விஜய ஸ்தம்பம் நாட்டினார் என்றும் காலப்போக்கில் அது அழிந்து விட்டது என்றும் சொல்வர் –

க்ரஹணமும் குருக்ஷேத்ரமும் -தீர்த்தமாடுதல் புனிதம் -இங்குள்ள சன்னிஹித தீர்த்த தடாகம் நீராட்டம் நூறு அஸ்வமேத யாக பலனை கிட்டும்
ததீசி முனிவரது ஆஸ்ரமம் –தேவ அசுர யுத்தம் வெற்றி பெற எலும்பை தானம் செய்த ததீசி முனிவர் -ஆஸ்ரமம் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள சன்னிஹித தீர்த்தக் கரையில் உள்ளது
இந்த சன்னிஹித தீர்த்தம் பரசுராமரால் உரு ஷேத்ரத்தில் உருவாக்கப் பெற்ற ஐந்து நதிகளில் முக்கியமான ஒன்றாகும்
யுத்தத்தில் கொல்லப்பட்ட பந்து மித்ரர்களுக்காக பிண்ட தானம் தர்ப்பணம் செய்த இடம்
பண கங்கா பீஷ்ம காட் -குருஷேத்ரத்தில் இரண்டு பண கங்கைகள் இருக்கின்றன -ஓன்று தயால்பூர் கிராமத்துக்கு அருகிலும் மற்று ஓன்று நரகாதாரி கிராமத்திலும் உள்ளன –
நரகா தாரையில் அம்புப் படுக்கையில் படுத்து உத்தராயண காலம் எதிர்நோக்கி இருந்த பீஷ்ம பிதாமஹர்க்கு அர்ஜுனன்
தனது பணத்தினால் ஒரு நீரூற்றை உண்டாக்கி தாக்கம் தீர்த்தான் –அதுவே பாண கங்கை
இங்கு தான் ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ சஹஸ்ர நாம உபதேசம் –
தயால்பூர் அருகில் உள்ள பாண கங்கையில் ஸ்ரீ கிருஷ்ணன் யுத்த காலத்தில் குதிரைகளை நீர் அருந்தச் செய்ததாகச் சொல்லப்படுகிறது
வைகாசி மாதமும் கங்கா தசராவிலும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன –
பெஹலா எனப்படும் பித்ருக்கள் தீர்த்தம்
விசுவாமித்திரர் ப்ரஹ்ம ஞானம் பெட்ரா இடம் -பிருகு மஹா ராஜர் தனது தகப்பானாரின் அந்திம கிரியைகள் செய்ததால் இந்த பெயர்
சர்ப்ப தமன் -ஸூ பீதோ என்ற இடத்தில் உள்ள இந்த ஸ்தலத்தில் ஜனமேய ராஜா சர்ப்ப தமன பாகம் செய்ததாக கூறப்படுகிறது
இங்குள்ள நதி ஸூர்ய குண்டம் -இங்குள்ள நாக தீர்த்த ஸ்நானம் செய்து சர்ப்பங்களுக்கு நெய்யும் தயிரும் தானம் செய்கின்றனர்
சர்வதேவி என்ற பெயரால் மஹா பாரதத்திலும் சர்ப்பததி என்ற பெயரால் ஸ்ரீ வாமன புராணமும் இத்தைக் குறிக்கும்
கைதல்-சுக்ர தீர்த்தம் -ஸ்ரீ ஹனுமான் வாசம் செய்த இடமாதலால் கபிஸ்தலம் என்ற பெயர் -யுதிஷ்டர் வேண்டிய ஐந்து கிராமங்களில் ஓன்று
பராசரர் -த்வை பாயனர் ஹ்ருதய தீர்த்தம் -ப்ரஹ்ம சரோவரைப் போன்ற ஒரு பெரிய நதி -பாரதப்போரில் துரியோதனன் இங்கு ஒளிந்து இருக்க பாண்டவர்கள்
அவனை அறை கூவி வெளிவரச் செய்து கொன்ற இடம் -ஸ்ரீ பராசர முனிவர் ஆஸ்ரமம் இருந்த இடம் –

ஸ்ரீ கீதா விஷயமான அருளிச் செயல்கள்
நாச்சியார் -11–10 –
நான்முகன் -50–/-71
திருவாய் மொழி -4–8-6–
ராமானுஜ நூற்றந்தாதி -68-

————————————-

ஸ்ரீ ஹரித்வார் -மாயா -மஹாத்ம்யம்
ஸ்வர்க்க த்வாரேண தத் துல்யம் கங்கா த்வாரம் ந சம்சய
தத்ராபி ஷேகம் குர்வீத கோடி தீர்த்தே ஸமாஹித
லபதே புண்டரீகம் ச குலம் சைவ சமுத்தரேத்
தத்ரைக ராத்ரி வாசேந கோ சஹஸ்ர பலம் லபதே
சப்த கங்கே த்ரி கங்கே ச சக்ர வர்த்தே ச தர்ப்பயன்
தேவன் பித்ரூம்ஸ்ச விதிவத் புண்யே லோகே மஹீயதே
தத கனகலே ஸ்நாத்வா த்ரிராத்ரோ போஷிதோ நர
அஸ்வமேதம் அவாப்நோதி ஸ்வர்க்க லோகம் ச கச்சதி –
முக்தி தரும் ஏழு ஷேத்ரங்களுள் ஓன்று -அமுதம் சொட்டு விழா வியக்கத்தக்க மாயா -க்ஷேத்ரம் -நுழைவு வாயில் -ஸ்வர்க்க ஆரோஹிணி –
அஜாமிளன் இங்கு வந்து கங்கையில் நீராடி கைங்கர்யம் செய்து முக்தி அடைந்தான்
குசாவர்த்த காட் -க்ருத யுகத்தில் அத்ரி மஹரிஷியின் புதல்வரான தத்தாத்ரேயராக திருமால் திருவவதாரம்
இங்கு நான்கு சீடர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசித்து இங்கேயே தவம் புரிந்தார்
அவருடைய தர்பம் மரவுரி கமண்டலம் த்ரிதண்டம் ஆகியவை இங்கு உள்ளன
சதீ குண்ட்-தக்ஷ பிரஜாபதி யாகத்தில் அவருடைய மகள் சதீ தேவி உயிரை நீத்த இடம் -திருமால் தோன்றி அவளை மீண்டும் உயிர்ப்பித்தார் –
ப்ரஹ்ம குண்டம் -ஹரி கீ பைடி –இங்கு திருமால் ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கையை ஆராதித்து முக்தி பெறுவது உறுதி என்று நான்முகன் சுவேதன் என்னும் அரசனுக்கு உபதேசித்தான்
தினம் கங்கா ஹாரத்தி நடைபெறுகிறது -ஸ்ரீ பத்ரீகாஸ்ரமம் அடைய படிக்கட்டு -பைடீ -இது
பகீதரனின் தவப்பயனாக ஆகாயத்தில் இருந்து இறங்கிய கங்கை ஹிமாசலத்தில் ஓடி முதலில் பூமி மட்டத்தில் ஓடாத தொடங்கியது இங்கு தான்
காவுகாட்-கோ மாதாவிடம் அபசாரப்பட்டால் இங்கு நீராடி பாபம் விலகப் பெறலாம் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading