கேந உபநிஷத்-
ஜைமினிய உபநிஷத் என்றும் இதுக்கு -கேன உபநிஷத் -சாம வேதம் ப்ராஹ்மண பகுதி -ஜைமினி சாகையில் உள்ளது –
கேன – யாரால் எதனால் -என்றபடி –
12-அத்யாயம் கர்ம காண்டம் -4-அத்யாயம் தேவ காண்டம் ஜைமினி / ப்ரஹ்ம விசாரம் மேலே -4-அத்யாயம் –
ரஹஸ்ய த்ரயம் -20-/ யதிராஜா சப்ததி-20-ஸ்லோகங்கள் /
பைய்லர் ரிக்- வைசம்பாயனர் யஜுர் – ஜைமினி சாமம்- சுமந்து அதர்வண -நான்கு வேதங்கள் பிரசாரம்
ரோமாஹர்ஷர் -இதிகாசம் புராணம் பிரசாரம் /
ப்ரஹ்மம் தேட உன் கை பிடித்து -கல்யாண மந்த்ரார்த்தம் -முதலிலே சொல்லுமே –
நான்கு காண்டங்கள்
முதல் இரண்டும் ப்ரஹ்மம் வை லக்ஷண்யம் -மேல் இரண்டும் கதை சொல்லி விளக்கும்
வாயு அக்னி இந்திரன் தேட கண்டு பிடிக்க முடியாமல் -அத்தை விளக்கும்
ஆப்யாயந்து மமாங்காநி வாக்ப்ராணஷ்சக்ஷு ஷ்ரோத்ரமதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம்
ப்ரஹ்மௌபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோதநிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து.
ததாத்மநி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ৷৷
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷
இதில் சரீர இந்திரியங்களின் சக்தியும், ஆரோக்கியமும் வேண்டப்படுகின்றது,
சிரத்தையை வேண்டப்படுகின்றது, இறைவனுடைய அருள் வேண்டப்படுகின்றது,
ஆத்ம ஞானத்திற்கு தகுதிகள் வேண்டப்படுகின்றது.
மம அங்காணி – என்னுடைய உடலுறுப்புக்கள்
ஆப்யாயந்து – ஆற்றலை அடையட்டும், சக்தியை அடையட்டும்
வாக், பிராணஹ, சக்ஷு, ஸ்ரோத்ரம் – எல்லா கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அதோ2 ப3லம் இந்திரியாணி, ஸர்வாணி – எல்லா இந்திரியங்களும் பலமாக இருக்கட்டும்.
பிரம்ம ஞானம் வளர்வதற்காக இவைகளின் சக்தி இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.
ஸர்வம் பிரம்மவோபநிஷதம் – இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் பிரம்மனாகவே இருக்கின்றது. உபநிஷத்தினால் அறியப்படுகின்ற பிரம்மன்
மா அஹம் பிரஹ்மம் நிராகுர்யாம் – நான் அந்த பிரம்மத்தை நீக்காமல் இருப்பேனாக. இது சிரத்தையை காட்டுகின்றது
மா மா பிரஹ்ம நிரகரோத் – பிரம்மன் என்னை நீக்காமல் இருக்கட்டும்.
அனிரா கரணமஸ்த் – என்னால் பிரம்மன் நிராகரிக்காமல் இருக்கட்டும்
அனிரா கரணம் மே அஸ்து – பிரம்மன் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்
இந்த பிரம்மனிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கை சிரத்தை என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும்.
என்னுடைய லட்சியம் பிரம்மத்தை அடைவது என்ற குறிக்கோள் என்னை நீங்காது இருக்கட்டும்
என்னுடைய முமுக்ஷுத்துவம் என்னை விட்டு போக வேண்டாம்
உதாசீன புத்தி என்னிடத்தில் வரக்கூடாது. மோட்ச மார்க்கத்தில் எனக்கு அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.
மா பிரஹ்ம மா நிராகரோதி: நான் எப்பொழுதும் ஈஸ்வரனுடய கருணைக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.
ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் என்றென்றும் எனக்கு கிடைக்க வேண்டும். மோட்சத்தை அடையும் லட்சியத்தில் மாறாமல் இருக்க வேண்டும்.
ததா3மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து:
அந்த பிரம்மத்தை அறிகின்ற மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள என்னிடத்தில் உபநிஷத்தில் என்னென்ன தகுதிகள் சொல்லியிருக்கின்றதோ அவைகள் இருக்கட்டும்
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள தர்மங்கள் சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற தகுதிகள் என்னிடத்தில் நிலை பெறட்டும்.
விவேகம் – உலகத்திலுள்ள அனைத்தும் நிலையற்றவை அவைகள் என்னுடைய லட்சியமல்ல என்று அறிந்து கொள்ளுதல்
வைராக்கியம் – இந்த லட்சியத்தில் நிலையாக இருக்க உதவுகிறது
முமுக்ஷுத்வம் – அந்த லட்சியத்தை நாடி செல்ல உதவுகிறது
சம – மன அமைதியாக் வைத்திருத்தல், கட்டுபாட்டுடன் வைத்திருத்தல்
தம – இந்திரியங்களை அமைதியாக வைத்திருத்தல்
உபரதி – இந்த சம, தமத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவுவது
திதிக்ஷா – இருமைகளை சகித்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல்
சமாதானம் – நாம் அடைய நினைக்கும் லட்சியத்தில் ஈடுபாட்டுடன் இருத்தல்
————————-
ப்ரதம கண்டம்
கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந கேந ப்ராண ப்ரதம ப்ரைதி யுக்த
கேநேஷிதாம் வாசமிமாம் வதந்தி சக்ஷு ஷ்ரோத்ரம் க உ தேவோ யுநக்தி ৷৷ 1.1.1 ৷৷
கேன இஷிதம் – யாரால் ஆசைப்பட்டு,
ப்ரேஷிதம் மனஹ பததி – பலவந்தபடுத்தப்பட்டதாக மனது செயல்படுகிறது
கேன யுக்த – யாரால் பொருந்தியவனாக
ப்ரதம ப்ராணஹ ப்ரைதி – நம்முடைய மூச்சுக்காற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றது
கேன இஷிதாம் – யாருடைய ஆணையால்
இமாம் வாசம் வதந்தி – இந்த வாக்கானது பேசப்படுகின்றது
சக்ஷு ஸ்ரோத்ரம் தேவோ யுனக்தி – எந்த தேவனின் ஆணையினால் கண்ணும், காதும் செயல்படுகிறது
சிஷ்யன் ஆச்சார்யர் இடம் கேள்வியுடன் தொடங்கும் -ப்ரஹ்மம் அடைய -கண் காத்து நாக்கு மூக்கு இந்திரியங்கள் -யீஷீதம் –
கர்ம ஞான இந்திரியங்கள் -பத்தும் -சப்தாதி -வாக்காதி -மனஸ் தலைவன் -ராவணன் பத்து தலைகள் போலே
யாரால் தூண்டப்படுகின்றன -கேள்வி –மனாஸ் நம்மை கட்டுப் படுத்துகிறதா நாம் கட்டுப் படுத்துகிறோமா
மனஸ் -அசேதனம் / ஆத்மா -சேதனன்/ -பரமாத்மா பரம சேதனன்/
பரிமித சக்தி கரணங்களுக்கு –ப்ரஹ்மம் இவற்றைக் கொண்டு அறிய முடியாது -ஆனால் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் –
இவற்றை வைத்தே அறிய வேண்டும் -எப்படி என்று மேலே சொல்வார் –
கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந-யாரால் தூண்டப்பட்டு
விரும்பிய விஷயங்களில் இவை ஈடுபடுகின்றன
கேந ப்ராண ப்ரதம ப்ரைதி யுக்த–பிரதம பிராணன் யாரால் தூண்டப்பட்டு -உடலை தரிக்க சஞ்சரிக்கிறது
கேநேஷிதாம் வாசமிமாம் வதந்தி -வாக் இந்திரியம் யாரால் தூண்டப்பட்டு பேசுகிறது
சக்ஷு ஷ்ரோத்ரம் க உ தேவோ யுநக்தி-கண் காது இவை எந்த தேவனால் தூண்டப்படுகின்றன –
சூர்யன் கண் -மனஸ் சந்திரன் -முக்கிய தேவதை என்பர் ஜோதிஷம் அறிந்த –
——————————————
ஷ்ரோத்ரஸ்ய ஷ்ரோத்ரம் மநஸோ மநோ யத்வாசோ ஹ வாச் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண
சக்ஷுஷஷ்சக்ஷுரதிமுச்ய தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி ৷৷ 1.1.2 ৷৷
ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் – காதுக்கு காதாக இருப்பது எதுவோ
மனஸஹ மனோ யத்3 – மனதிற்கும் மனதாக இருப்பது எதுவோ
வாசோ ஹ வாசம் – சொல்லுக்கும் சொல்லாக இருப்பது எதுவோ
ஸஹ ப்ராணஸ்ய ப்ராண – பிராணனுக்கு பிராணனாக இருப்பது எதுவோ
சக்ஷுஷ்2ச சக்ஷூஹு – கண்ணுக்கு கண்ணாக இருப்பது எதுவோ
தீரா – ஆத்மாவை இப்படி புரிந்து கொண்டிருக்கும் புருஷர்கள்
அஸ்மாத் லோகாத்3 அதிமுச்ய – இந்த உலகினின்றும் விடுபட்டு
ப்ரேத்ய – உடலை கடந்து சென்று
அம்ருதா ப4வந்தி – அழிவற்றவர்களாந் ஆகிறார்கள்.
ஷ்ரோத்ரஸ்ய ஷ்ரோத்ரம் -காதுக்கு கேட்க்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
மநஸோ மநோ -மனசுக்கு நினைக்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
யத்வாசோ ஹ வாச் ஸ உ -வாக்கு பேசும் சக்தியை கொடுத்தவன் யாரோ
ப்ராணஸ்ய ப்ராண-பிராணனுக்கு -தரிக்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
சக்ஷுஷஷ்சக்ஷுரதிமுச்ய தீரா -கண்ணுக்கு காணும் சக்தி கொடுத்தவன் யாரோ
ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி-ஹ்ருஷீ கேசன் -இந்திரியங்களுக்கு ஈசன் –சக்தி கொடுத்தவனே தூண்டுகிறார்
சோம்பல் இல்லாமல் உபநிஷத் சொல்லும் -இத்யாதி நாம் சொல்லுவோம் சோம்பி –
அந்தரோ யமயதி–நாராயண -சுருதி சொல்லுமே வேறே இடங்களில் –
பொது காரணம் -விசேஷ காரணம் -இரண்டும் உண்டே -அனைத்துக்கும் –
விதை-விசேஷம் – உழவன் மழை பூமி -சாமான்ய காரணங்கள் பல -அன்றோ
பல விதங்களில் தூண்டுவார் -ஒரே விசேஷ காரணம் எதிர்பார்த்து –அனைத்திலும் உட்க்கார்ந்து தூண்டுகிறார் –
ஆத்மாவுடைய ஸ்வா தந்தர்யம் -பக்கம் உள்ள காரணம் -அத்தை தடை பண்ண மாட்டாரே ப்ரஹ்மம் –
அடியேன் உம்மிடம் சமர்ப்பித்தேன் சொன்ன பின்பே அவன் முழு காரணம்- இதுவே சரணாகதி -பிரபத்தி
வேதம் சாஸ்திரம் ஆச்சார்ய உபதேசம் மூலம் நல்ல வழிகளை காட்டி -அறிவிக்கும் பலகை போலே இவை –
நேராக ப்ரஹ்மத்தை பார்க்க வை கேட்க்காமல் மறைத்து கேட்க்கிறான் சிஷ்யன்
உன் முயற்சியால் முடியாது -அவன் அருளால் தான் ப்ரஹ்மத்தை காண முடியும்
ஆசை நீ பட்டால் தூண்டுவான் -புராணம் உள்ளே இருந்து நியமிக்கிறார் -இப்படி இந்திரியங்கள் அனைத்திலும் –
————————————–
ந தத்ர சக்ஷுர்கச்சதி ந வாக்கச்சதி நோ மநோ ந வித்மோ ந விஜாநீமோ யதைததநுஷிஷ்யாத் ৷৷ 1.1.3 ৷৷
ந தத்ர – இந்த ஆத்மாவிடத்தில்
சக்ஷு ந கச்சதி கண்களால் இதைப் பார்க்க முடியாது. இந்த இடத்தில் அனைத்து ஞான இந்திரியங்களாலும்
ஆத்மாவை கிரகிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந வாக்3 க3ச்சதி – சொற்களாலும் கிரகிக்க முடியாது. இப்படி சொல்லும் போது அனைத்து கர்மேந்திரியங்களாலும்
கிரகிக்க முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும், வேத பிரமாணம் ஆத்மாவாக இல்லாததை யெல்லாம் நீக்கி விடுகிறது
எனவே அது தானாகவே விளங்கி விடுகின்றது, நாம் உணர்ந்து கொள்கின்றோம்.
ந மனஹ – மனதாலும் கிரகிக்க முடியாது இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மா தானாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறது.
அதை விளக்க எதுவும் தேவையில்லை
ந வித்3மஹ- நான் ஆத்மாவை அறியவில்லை
ந விஜானீமஹ எங்களுக்கு தெரியவில்லை, பார்க்கவில்லை
யதா2 தத்3 அனுஸி2ஷ்யாத் – இதை எப்படி விளக்குவது என்றும் தெரியாது.
ந தத்ர சக்ஷுர்கச்சதி ந -கண் முழுவதுமாக செயல்படாது
வாக்கச்சதி நோ மநோ -வாக்கால் மனசால் முழுவதுமாக முடியாதே
ந வித்மோ -உள் இந்திரியங்களுக்கு அப்பால்
ந விஜாநீமோ –வெளி இந்திரியங்களுக்கு அப்பால்
யதைததநுஷிஷ்யாத்
ஊற்றம் உடையாய் -பெரியாய் -வேதம் சொல்லும் –உடனே முடிக்க முடியாதே என்று சொல்லுமே
தெரிந்து கொள்ள முடியாது என்று அறியலாம் -இப்படிப்பட்டது உவமானம் சொல்ல முடியாதே -இயத்தா ராஹித்யம் -அபரிமித சக்தன்
மனம் உணர்வு அவன் இலன் பொறி உனர்வு அவை இலன் -அப்பால் பட்டவன் என்றே அறிய முடியும் –
பரத்வாஜர் இந்திரன் வேதம் மூன்று மலை கைப்பிடி -வ்ருத்தாந்தம் –
தாமரை ஒவ்வா –சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வா
யானும் ஏத்தி –நீயும் ஏத்தியும் -முடிக்க முடியாதவன் அன்றோ –
————————————-
அந்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி இதி ஷுஷ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்வ்யாசசக்ஷிரே ৷৷ 1.1.4 ৷৷
விதி3த3ம்: எவையெல்லாம் அறியக்கூடியதோ, அனுபவித்து அறியபட்டதோ, பொதுவாக மனிதர்களால் அறியமுடிவது, அறிந்து கொண்டு இருப்பது.
அவிதிதம்: யாராலும் அறிய முடியாதது, சூன்யம். எவையெல்லாம் விதித தத்துவமாக இருக்கிறதோ அவற்றிற்கு வேறானது. அறியாததைக் காட்டிலும் வேறானது.
விதிதத்திற்கும், அவிதிதத்திற்கும் வேறானது ஆத்மதத்துவம்.
அன்யதேவ தத் விதிதாத் இந்த ஆத்மா அறிந்ததைக் காட்டிலும் வேறானது.
அதோ2 அவிதிதாத் அதி4 அறியாத்தைக் காட்டிலும் வேறானது ஆத்மா.
இதி ஷுஸ்ரும பூர்வேஷாம்: இந்த தத்துவமானது இவ்விதம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது; ( எங்களுடைய குருவின் மூலமாக கூறப்பட்டது)
யே ந தத் வ்யாச சக்ஷிரே எந்த குருமார்கள் இந்த தத்துவத்தை அறிந்திருந்தார்களோ அவர்களிடமிருந்து எங்களுக்கு உபதேசிக்கபட்ட்து.
அந்யதேவ தத்விதிதாததோ -இந்த்ரியங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் -அசேதனங்கள் தானே இவை கொண்டு அறியலாம்
அவிதிதாததி -இந்த்ரியங்களால் அறிய முடியாதவை ஜீவனும் பரமாத்மாவும் -மனசாலும் அறிய முடியாதே -சேதனனை விட விலக்ஷணன்
உள்ளதும் இல்லதும் அல்லது அவன் உரு–எல்லை இல்லா அந்நலம் புல்கு பற்று அற்றே – ஸ்வரூபம் -ஸ்வ இதர விலக்ஷண-
இதி ஷுஷ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்வ்யாசசக்ஷிரே–பூர்வர்கள் -அதி ஸூஷ்மம் -அறிந்து -உபதேசித்து அருளுகிறார்கள்
—————————————
யத்வாசாநப்யுதிதம் யேந வாகப்யுத்யதே ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.5 ৷৷
யத்3 வாசா அனப்யுதிதம் – எந்தவொரு தத்துவமானது நம்முடைய சொற்களால் விளக்கபடாதது.
யேன வாக்3 அப்யூத்3யதே – எதனால் வாக்கு விளக்கப்படுகின்றதோ
ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்தி – அதுவே பிரம்ம தத்துவம் என்று அறிவாயாக.
ந இதம் யத்3 இத3ம் உபாஸதே இந்த தேவதைகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அதுவே பிரம்மனல்ல.
யத்வாசாநப்யுதிதம் -யாரால் வாக்கு உதிக்கிறதோ -பிரகாசிக்கிறது
யேந வாகப்யுத்யதே -சொல்லி முடிக்காது
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி -அத்தையே ப்ரஹ்மம் என்று அறிந்து கொள்
நேதம் யதிதமுபாஸதே-நீ நினைப்பதை விட உயர்ந்தது -அவனை உபாஸிப்பாய்
எட்டா கனி -உயர்ந்தவன் எளியவன் என்று வந்தால் நம்மைபோலே என்று விலகுகிறார்கள் -அவஜாநந்தி மாம் மூடா
இதே போலே அடுத்த ஸ்லோகங்கள் வேறே வேறே இந்திரியங்களை பற்றி -இன்புறும் இவ்விளையாட்டுடையவன்
—————————————
யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.6 ৷৷
பிரம்மத்தை ஒரு பொருளாக, விஷயமாக மனதால் கிரகிக்க முடியாது,
ஆனால் மனதை எது அறிகின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.
மனம் நினைக்க -முடியாது மனம் இவனால் உத்பத்தி ஆனாலும் -அவன் தான் ப்ரஹ்மம்
மண் பானை பார்த்து குயவன் அறியும் படி இல்லையே ப்ரஹ்மம் -அவனை உபாஸிப்பாய்
————————————
யச்சக்ஷுஷா ந பஷ்யதி யேந சக்ஷூ் ஷி பஷ்யதி ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.7 ৷৷
கண் -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே
கண்களால் பார்க்க முடியாது, ஆனால் எது கண்களை பார்க்கின்றதோ, அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.
—————————
யச்ச்ரோத்ரேண ந ஷ்ரரிணோதி யேந ஷ்ரோத்ரமித் ஷ்ருதம் ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.8 ৷৷
காது -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே
காதால் கேட்க முடியாதது, ஆனால் எது காதை வியாபித்து இருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.
—————————————-
யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண ப்ராணீயதே ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.9 ৷৷
பிராணன் -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே
எதை நுகர்ந்து பார்த்து அறிய முடியாததாக இருக்கின்றதோ ஆனால் அந்த சக்தியை விளக்கி கொண்டிருக்கின்றதோ
அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.
———————————-
৷৷ இதி ப்ரதமம் கண்டம் ৷৷
—————————————————–
த்விதீய கண்டம்
யதி மந்யஸே ஸுவேதேதி தப்ரமேவாபி நூநம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம் யதஸ்ய த்வம்
யதஸ்ய ச தேவேஷ்வத நு மீமாம் ஸ்யமேவ தே மந்யே விதிதம் ৷৷ 2.1.1 ৷৷
யதி3 மன்யஸே – ஒருவேளை இவ்விதம் நினைத்தால்
ஸுவேதே இதி – நான் பிரம்மனை நன்கு அறிகிறேன்.
நான் பிரம்மனை நன்கு அறிகிறேன் என்று ஒருவேளை இவ்விதம் நினைத்தால் இப்படி நினைப்பது பிரம்மத்தை
ஒரு பொருளாக அறிந்திருப்பது போல் இருக்கிறது. இது தவறான அறிவு. பிரம்மத்தை உன் ஸ்வரூபமாக நினைத்திருக்க வேண்டும்.
த3ப்4ரம் ஏவ நுனம் – தவறாக, முழுமையற்ற ஸ்வரூபத்தைத்தான்
த்வம் வேத்த2 – நீ அறிந்திருக்கிறாய்
ப்ரஹ்ம ரூபம் – பிரம்மத்தின் ஸ்வரூபத்தை
யத்3 அஸ்ய – எந்த பிரம்மத்தின் ரூபத்தை
த்வம் தேவேத்4வத2 – மனிதரிடத்திலும், விலங்கிலும் தேவர்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மத்தை நீ பூரணமாக அறிந்திருக்கமாட்டாய்.
அதனு தே – ஆகவே உன்னுடைய அறிவானது
மீமாம்ஸாமேவ – விசாரத்திற்குட்பட்டது.
மன்யே விதி3தம் – நான் பிரம்மனை அறிகின்றேன். பிரம்மன் என்னால் நன்கு அறியப்பட்டதாக கருதுகின்றேன்.
யதி மந்யஸே ஸுவேதேதி தா பிரமம் -அறியாமை மயக்கம் -அல்பம்-ராம கிருஷ்ணன் அறிவேன் ஸ்வரூபம் அறிவேன் என்றாலும்
தப்ரமேவாபி நூநம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம்-ப்ரஹ்மாதி ருத்ரன் தேவாதிகள் -அல்பமே
யதஸ்ய த்வம் யதஸ்ய ச தேவேஷ்வத நு மீமாம் ஸ்யமேவ தே மந்யே விதிதம்-மீமாம்சை ஆராய தக்கது
ப்ரஹ்மம் பிருஹத் -அறிய முடியாது -இதில் வைபவம் வ்யூஹம் அறிந்தாலும் ஸ்வரூபம் அறிய முடியாதவன்
நான் நினைக்கும் ஒப்பீடு இல்லை -கண்ணன் கோகுலம் ராமன் அயோத்தியை சுருக்கி தான் அறிகிறோம் –
———————————
நாஹம் மந்யே ஸுவேதேதி நோ ந வேதேதி வேத ச -யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேத ச ৷৷ 2.1.2 ৷৷
ந அஹம் ஸு வேத3 இதி. – நான் பிரம்மத்தை நன்கு அறிகின்றேன்
ந மன்யே – என்று கருதவில்லை
ந வேத3 இதி நோ வேத3 அறியவில்லை என்றும் கருதவில்லை என்று இவ்விதம் அறிகிறேன்.
யோ நஹ த்த3 வேத3 – சிஷ்யர்களான எங்களுக்குள் எவனொருவன் முதலில் கூறியவாறு அறிந்துள்ளானோ
அவனே பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றான்.
நோ ந வேதேதி வேத3 ச நான் அறிகின்றேன் என்றும் கருதவில்லை, அறியவில்லை என்றும் கருதவில்லை என்று புரிந்து கொண்டுள்ளான்.
நாஹம் மந்யே ஸுவேதேதி -நான் ப்ரஹ்மத்தை நன்கு அறிந்தேன் என்று நினைக்க வில்லை
நோ ந வேதேதி வேத ச -அடியோடு அறிய வில்லை என்பதும் இல்லை
யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேத ச-இத்தை அறிந்தவனே ப்ரஹ்மத்தை அறிந்தவன் ஆகிறான்
நான் பிரம்மத்தை அறிகின்றேன் என்று நினைக்கவில்லை,
அதேசமயம் பிரம்மத்தை அறியவில்லை என்றும் நினைக்கவில்லை.
——————————–
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ அவிஜ்ஞாதம் விஜாநாதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ৷৷ 2.1.3 ৷৷
யஸ்ய அமதம் தஸ்ய மதம் – யாருக்கு பிரம்மன் பொருளாக அறியப்படவில்லையோ அவருக்கு அறியப்பட்டது..
மதம் யஸ்ய ந வேத ஸஹ – யாருக்கு அறியப்பட்டதாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அறியப்படவில்லை.
அவஞானதாம் விஞாதம் – அக்ஞானிகளுக்கு அறியப்பட்டதாகவும்
விக்ஞாதம் அவிக்ஞாதாம் – ஞானிகளுக்கு அறியப்படாததாக இருக்கிறது
யஸ்யாமதம் தஸ்ய மதம் -அறிந்தேன் என்பவன் -அறியாதவன் ஆகிறான்
மதம் யஸ்ய ந வேத -அறிந்தவன் என்று சொல்பவன் அறியாதவன்
ஸ அவிஜ்ஞாதம் விஜாநாதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்-இவ்வளவு அளவுக்கு உட்பட்டவன் அறிந்தவன் அஞ்ஞானி –
அப்பால் பட்டவன் என்று அறிந்தவனே அறிவாளி
தொண்டர் அடி பொடி ஆழ்வார் -வித்வான் இடம் -அறிய முடியாதவன் -பாமரர்கள் இடம் அறிவேன் -இப்படி அன்றோ
ஏமாற்றினேன் -சொல்லிக் கொள்வார் –
ப்ரஹ்மம் இல்லை -ப்ரஹ்மம் வித்து ஆப் நோதி அடைகிறான் -சாம்யா பத்தி அடைகிறான் என்றும் உண்டே
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
———————————–
ப்ரதிபோதவிதிதம் மதமமரிதத்வம் ஹி விந்ததே ஆத்மநா விந்ததே வீர்யம் வித்யயா விந்ததேமரிதம் ৷৷ 2.1.4 ৷৷
பிரதி போ4தம் – ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும் வெளிப்பட்ட சைதன்யத்தை
விதிதம் – அறிவதன் மூலம் ( அது நான் என்ற அறிவதன் மூலம்)
மதம் – ஆத்மா அறியப்பட்டதாகிறது.
அம்ருதத்வம் ஹி விந்ததே – இந்த ஞானத்தினால் அடையும் பலன் மரணமற்ற நிலையை அடைதல்
ஆத்மனா – ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான மனதினால்
வீர்யம் – உண்மையை கிரகிக்கும் சக்தியை, அதை காப்பாற்றி வைத்து இருக்கும் சக்தியை, புரிந்தது நிலை பெற்றிடும் சக்தியை.
விந்ததே – அடைகின்றான்
வித்யயா – ஞான பலத்தால், அறியாமையை நீக்குகின்ற பலம்
அம்ருதம் விந்ததே – மரணமற்ற நிலையை அடைகின்றான்.
ப்ரதிபோதவிதிதம் மதமமரிதத்வம் ஹி விந்ததே ஆத்மநா விந்ததே வீர்யம் -ப்ரஹ்ம வித்யை அவன் இடம் பெற்று
வித்யயா விந்ததேமரிதம்-அவனை அடைகிறான்
அறிந்தவன் மோக்ஷம் அடைகிறான் -அமிருதம் -அவனை அறிந்து அவன் மூலம் திருவடி -ஆசை மட்டும் நாம் கொள்ள வேண்டும்
த்வமே உபாயம் ஏவ பிரார்த்தனா மதி சரணாகதி
நாக்கு புரண்டு சரணம் சொல்ல வைத்தவன் நீயே -மனசில் நினைத்து புத்தி ஒத்து கொண்டு வாயால் சொல்வது உன் அனுக்ரஹம் பிரசாதம் அடி –
—————————————
இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி பூதேஷு பூதேஷு
விசித்ய தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி ৷৷ 2.1.5 ৷৷
இஹ அவேதி3த் சேத் –இந்த பிறவியிலே இந்த பிரம்மத்தை அறிந்து கொண்டால்
அத2 ஸத்யம் அஸ்தி – பிறவியெடுத்ததற்கு அர்த்தம் உண்டாகின்றது, பிறந்ததற்கு உண்மையான பலனாக இருக்கும்.
இஹ ந சேத் அவேதி – ஒருவேளை இந்த பிரம்மத்தை அறியவில்லை என்றால்
மஹத் வினஷ்டி – அவன் மிகப்பெரிய இழப்பை அடைகிறான்.
பூதேஷு பூதேஷு – எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரே ஒரு தத்துவம்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது
என்று அறிந்துக் கொண்டு இந்த உடலிலிருந்து நீங்கிய பின் மரணமற்றவர்களாகின்றார்கள்.
ஆனந்தம் ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
ஜகாத் ஜென்மாதி -ப்ரஹம லக்ஷணம்
இஹ சேதவேதீதத -இங்கு அறிந்தானாகில்
ஸத்யமஸ்தி -அழியாத நித்ய விபூதி அடைகிறான்
ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி -அறியாமல் சம்சாரத்தில் உழன்று
பூதேஷு பூதேஷு விசித்ய -மிக விலக்ஷணன்
தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி -அறிந்தவர் நித்ய விபூதி அடைந்து ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறார்கள்
——————————-
৷৷ இதி த்விதீய கண்டம் ৷৷
——————————————————-
தரிதீய கண்டம்
ப்ரஹ்ம ஹ தேவேப்யோ விஜிக்யே தஸ்ய ஹ ப்ரஹ்மணோ விஜயே தேவா அமஹீயந்த –
த ஐக்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜயோஸ்மாகமேவாயம் மஹிமேதி ৷৷ 3.1.1 ৷৷
அக்னி வாயு இந்திரன் மூவருக்கும் ப்ரஹ்மம் தன்னை பற்றி சொல்ல -இவர்களுக்கு ஆசை இல்லாமல் –
புரிவதற்கு அப்பால் என்று அறிந்தவனே அறிவான்
தேவர்கள் -அசுரர்கள் சண்டை -தேவர்கள் வென்று கொண்டாட்டம் -ஜெயம் எங்களது -அசுரர்கள் போலே பேச –
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து வென்றாலும் -மஹிமை எங்களது என்று சொல்வார்கள்
யச்ச ப்ரஹ்ம ரூபத்தில் -புல்லை போட்டு எரிக்க சொல்ல -அக்னியால் முடியாமல் -பின் வாங்கி போக -என்னால் அறிய முடிய வில்லை
வாயு -எத்தையும் சுழற்றி போடுவேன் -புல்லை போட்டு அத்தையும் நகற்ற முடிய வில்லை
இந்திரன் வஜ்ராயுதம் -கொண்டு வர யச்ச ப்ரஹ்மம் மறைந்து -இவன் -தேவேந்திரன் அவமானம் படுத்த கூடாதே
நானே தானே இவனை வைத்தேன் -தனியாக சொல்லி கொடுக்கலாம் -நேராக அவமானம் படுத்த கூடாதே
அஹங்காரம் போக்கி அருள வந்தான்
பிரம்மனே ( ஈஸ்வரனே ) தேவர்கள் வெற்றி அடைவதற்கு சக்தியை கொடுத்திருக்கிறது.
அந்த பிரம்மத்தின் வெற்றியால் தேவர்கள் பெருமை அடைந்தனர்.
ஆனால் தேவர்கள் இந்த பெருமை எங்களைத்தான் சார்ந்த்து என்று நினைத்தார்கள்
———————-
தத்தைஷாம் விஜஜ்ஞௌ தேப்யோ ஹ ப்ராதுர்பபூவ தந்ந வ்யஜாநத கிமிதம் யக்ஷமிதி ৷৷ 3.1.2৷৷
தேவர்கள் அடைந்த கர்வத்தை பிரம்மன் தெரிந்து கொண்டார். அவர்களுடைய கர்வத்தை அடக்கி
உண்மையை உணர்த்துவதற்கு யட்சனாக (தெரிந்தும் தெரியாமலும் தோற்றமளிக்கும் யக்ஷ ரூபம் ) அவர்கள் முன் தோன்றியது.
அந்த உருவத்தை அவர்களால் அறிய முடியவில்லை. யார் இந்த யக்ஷன் என்று வியந்தனர்.
—————
தேக்நிமப்ருவஞ்ஜாதவேத ஏதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ৷৷ 3.1.3 ৷৷
தேவர்கள் அக்னிதேவரிடம் எல்லாம் அறிந்தவரே நம்முன் காட்சியளிக்கும் இந்த யக்ஷன் யாரென்று
அறிந்து வாரும் என்று கூறினார்கள். அவரும் அப்படியே ஆகட்டும் என்று புறப்பட்டார்.
———————–
ததப்யத்ரவத்தமப்யவதத்கோஸீத்யக்நிர்வா அஹமஸ்மீத்யப்ரவீஜ்ஜாதவேதா வா அஹமஸ்மீதி ৷৷ 3.1.4৷৷
அக்னிதேவர் யக்ஷன் அருகில் சென்றார். யக்ஷன் அவரை பார்த்து, நீ யார் என்று கேட்டது.
என்னை அக்னிதேவன் என்று அழைப்பார்கள்.
நான் எல்லாம் அறிந்தவன் என்ற புகழையுடையவனாக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.
—————
தஸ்ம் ஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத் ஸர்வம் தஹேயம் யதிதம் பரிதிவ்யாமிதி ৷৷ 3.1.5 ৷৷
உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கின்றது என்று யக்ஷன் கேட்டது.
அதற்கு அக்னிதேவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் என்னால் எரித்து விடும் சக்தியுடையவன் என்று கூறியது.
—————
தஸ்மை தரிணம் நிததாவேதத்தஹேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஷஷாக தக்தும் ஸ தத ஏவ
நிவவரிதே நைததஷகம் விஜ்ஞாதும் யதேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.6 ৷৷
ஜாத வேதன் என்று பெயர் -அத்தனையும் எரிக்க -என்ன வீர்யம்
அக்னிதேவன் முன்னே காய்ந்த புல்லை யக்ஷன் வைத்துவிட்டு இதை எரித்துவிடு பார்க்கலாம் என்று கூறினார்.
தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அதை எரிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அவரால் புல்லை எரிக்க முடியவில்லை. அந்த இடத்திலிருந்து உடனே திரும்பிவிட்டார்.
என்னால் அந்த யக்ஷனை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.
—————————
அத வாயுமப்ருவந்வாயவேதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ৷৷ 3.1.7 ৷৷
பிறகு வாயுதேவர் அந்த யக்ஷனை அறிந்து கொண்டு வா என்று அனுப்பினார்கள்.
அவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.
—————–
ததப்யத்ரவத்தமப்யவதத்கோஸீதி வாயுர்வா அஹமஸ்மீத்யப்ரவீந்மாதரிஷ்வா வா அஹமஸ்மீதி ৷৷ 3.1.8৷৷
மா தரிஷ்வா-எல்லா வற்றையும் சுழற்ற வல்லவன்
யக்ஷனருகில் சென்றதும் அது வாயுதேவனை நீ யார் என்று கேட்டது.
நான் வாயுதேவன், ஆகாசத்தில் தடையின்றி சஞ்சரிப்பவன் என்ற பெயர் பெற்றவனாக இருக்கின்றேன்.
——————-
தஸ்மி் ஸ்த்வாம கிம் வீர்யமித்யபீத் ஸர்வமாததீய யதிதம் பரிதிவ்யாமிதி ৷৷ 3.1.9 ৷৷
அப்படிபட்ட உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கிறது?
அதற்கு அவர் இந்த பூமியில் உள்ள எதையும் தூக்கிவிட முடியும் என்று கூறினார்.
————
தஸ்மை தரிணம் நிததாவேததாதத்ஸ்வேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஷஷாகாதாதும் ஸ தத ஏவ
நிவவரிதே நைததஷகம் விஜ்ஞாதும் யதேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.10 ৷৷
அவர் முன் புல்லை வைத்து, இதை தூக்கு பார்க்கலாம் என்று யக்ஷன் கூறினார்.
தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தியும் அவரால் தூக்க முடியவில்லை.
அவரும் அங்கிருந்து திரும்பிவிட்டார். யார் இது என்று அறிய முடியாதவனாக இருக்கிறேன்.
——————————-
அதேந்த்ரமப்ருவந்மகவந்நேதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ததப்யத்ரவத்தஸ்மாத்திரோததே ৷৷ 3.1.11 ৷৷
திரோததே -தன்னை மறைத்துக் கொண்டு
தேவர்கள் இந்திரனை பார்த்து, “சக்தி பொருந்தியவரே நீங்களே சென்று அறிந்து வர வேண்டும். என்று வேண்டினார்கள்.
அவரும் அப்படியே ஆகட்டும் என்று கர்வத்துடன் யக்ஷனை அணுகினார். அதை நெருங்கியதும் யக்ஷன் மறைந்து விட்டான்.
—————
ஸ தஸ்மிந்நேவாகாஷே ஸ்த்ரியமாஜகாம பஹுஷோபமாநாமுமா் ஹைமவதீம் தா் ஹோவாச கிமேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.12 ৷৷
ஹைமவதீம் -உமா தேவி போலே -யட்சன் எங்கே கேட்க
இந்திரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். யக்ஷன் மறைந்து விட்டான் என்று திரும்பி விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார் அந்த நேரத்தில் ஒரு பெண் வடிவத்தில் பிரகாசமான தோற்றத்துடன் உமாதேவி காட்சியளித்தாள். அவளிடம் அந்த யக்ஷன் யார் என்று கேட்டார்.
——
৷৷ இதி தரிதீய கண்டம் ৷৷
—————————————————
சதுர்த்த கண்டம்
ஸா ப்ரஹ்மேதி ஹோவாச ப்ரஹ்மணோ வா ஏதத்விஜயே மஹீயத்வமிதி ததோ ஹைவ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.1 ৷৷
உன்னுடன் பேசி கொண்டு இருந்தவன் ப்ரஹ்மம்
தர்ம புத்ரன் -சஹஸ்ர நாமம் -கேட்டதும் எங்கே தேட தேவ நந்தன் உன் உறவுப் பிள்ளை இங்கே
உன்னுடன் தொடை தட்டி இருந்தவன் தானே போலே
இந்த பெண் உருவிலும் அவனே புரியாமல்
நாக பழக்காரி ததி பாண்டன் அறிவார்கள்
அவள் அந்த யக்ஷன் பிரம்மன் என்று கூறினாள்.
நீங்களடைந்த வெற்றி பிரம்மனுடைய பெருமையினால்தான் என்று கூறினாள்.
உமாதேவியின் உபதேசத்தின் மூலம் இந்திரன் புரிந்து கொண்டான்.
———–
தஸ்மாத்வா ஏதே தேவா அதிதராமிவாந்யாந்தேவாந்யதக்நிர்வாயுரிந்த்ரஸ்தே –
ஹ்யேநந்நேதிஷ்டம் பஸ்பர்ஷுஸ்தே ஹ்யேநத்ப்ரதமோ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.2 ৷৷
அருகில் வந்தாலே இவர்களுக்கு வைபவம் -தொடும் அளவு –
யக்ஷனுடன் தொடர்பு கொண்ட காரணத்தால்தான் இந்த தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள்.
அக்னி, வாயு, இந்திரன் இவர்கள் மட்டும்தான் யக்ஷனோடு மிக அருகில் தொடர்பு கொண்டார்கள்.
இதுவே பிரம்மன் என்று அறிந்து கொண்டார்கள்.
—————————-
தஸ்மாத்வா இந்த்ரோதிதராமிவாந்யாந்தேவாந்ஸ ஹ்யேநந்நேதிஷ்டம் பஸ்பர்ஷ ஸ ஹ்யேநத்ப்ரதமோ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.3 ৷৷
இந்திரனுக்கு வாயு அக்னி விட ஏற்றம் -ஆபத்து வர கூடாது கருணை பெற்றதால்
அதனால்தான் ( தஸ்மாத் வா – யக்ஷ ஸ்வரூபத்தை அறிந்ததால்தான் ) இந்திரன் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் அவர்தான் முதலில் யக்ஷனை பிரம்மனாக அறிந்து கொண்டார்.
———————————
தஸ்யைஷ ஆதேஷோ யதேதத்வித்யுதோ வ்யத்யுததா இதீந்ந்யமீமிஷதா இத்யதிதைவதம் ৷৷ 4.1.4 ৷৷
ஆதேஶ – உபதேசம்; ஏஷ – பின்வருமாறு
உபாஸனம் – உப + ஆஸனம் = அருகில் இருத்தல்
யாரை நாம் தியானிக்கின்றோமோ அவரருகில். இருத்தல், மனதில் நினைத்து கொண்டு இருத்தல்.
ஒரே எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தல்.
உபே + ஆதானம் – எடுத்துக் கொள்ளுதல் – ஆலம்பன ஆதானம்
இஷட தேவதையை தியானிப்பதற்கு லிங்கமாக ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் தியானம் செய்தல்
எதுவுமே ஸாதனாமாக இருக்கும்போது துயரமடைவதில்லை, அதையே சாத்தியமாக கொண்டால் துயரத்தை அடைகின்றோம்.
மின்னல் -தோன்றி மறைந்தது போலே -உயர்ந்த சக்தி படைத்த த்ருஷ்டாந்தம்
கண் இமைத்தது போலே -இருந்தால் ஒளி மயம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் போலே
————————————–
அதாத்யாத்மம் யதேதத்கச்சதீவ ச மநோநேந சைததுபஸ்மரத்யபீக்ஷ்ண் ஸம் கல்ப ৷৷ 4.1.5 ৷৷
மனஸ் ஒன்றில் இருப்பது போலே வேறே த்ருஷ்டாந்தம் -அலை பாயும் வேகம் அதிகம் தானே மனசுக்கு
நின்றவா நில்லா நெஞ்சு அன்றோ –
அத்யாத்ம – ஜீவன் சம்பந்தப்பட்ட உபாஸனை.
நம்முடைய எண்ணங்களே ஆலம்பனம். நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும் பிரம்மத்தை விளக்குகின்றது என்று தியானிக்க வேண்டும்.
ஜடமான எண்ணங்களை உணர்வுடன் இருப்பதாக எண்ணுவதற்கு காரணமாக பிரம்மன் இருப்பதை உணர வேண்டும்.
இதனால் நமது மனப்பக்குவம் அடைந்து பிரம்மத்தை அறிந்து கொள்ள உதவும்.
மனமானது எண்ணங்கள் மூலமாக சைதன்ய ஸ்வரூபத்தை அறிய உதவுகிறது.
புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுப்பது போல மனதானது பிரம்ம ஞானத்தை அறிய உதவுகிறது.
—————————-
தத்த தத்வநம் நாம தத்வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததேவம் வேதாபி ஹைநம் ஸர்வாணி பூதாநி ஸம் வாஞ்சந்தி ৷৷ 4.1.6 ৷৷
வனம் என்று நினைத்து உபாஸிக்க -அனைவராலும் வணங்க படுவதால் -புஷ்கரம் -நீர் ரூபம்- நைமிசாரண்யம் வன ரூபம்
பரஹ்மனை எல்லோராலும் அறியத்தக்கவர் என்று தியானிக்க வேண்டும்.
இதனால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் உருவாகும்.
அதுவே நம்மை பிரஹ்மனை அடையும் செயலில் ஈடுபடுத்தும்.
இப்படியாக ஈஸ்வரனை பூஜிக்க.வேண்டும் என்று தியானித்தால் அவாந்திர-அமுக்ய பலனாக எல்லோராலும் வணங்கக்கூடியவராக இருப்போம்.
வனம் – போற்றதலுக்குரியவர்
நாம – பெயர் பெற்றவர்
உபாஸிதவ்யம் – தியானிக்கப்பட வேண்டும்.
யஹ ஏவம் ஏதத் வேத3– யார் இவ்வாறு இதை தியானிக்கிறானோ
ஏனம் ஹ ஸ்ர்வாணி பூதானி – அவனை எல்லா ஜீவராசிகளும்
அபிஸம்வாச்சந்தி – பூஜிக்கும்
————————————-
உபநிஷதம் போ ப்ரூஹீத்யுக்தா த உபநிஷத்ப்ராஹ்மீம் வாவ த உபநிஷதமப்ரூமேதி ৷৷ 4.1.7 ৷৷
போ4 – குருவே!
உபநிஷத3ம் ப்ரூஹி இதி – உபநிஷத்தை எனக்கு கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்டான்.
தே உபநிஷத் உக்தா – உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டது.
தே ப்ராஹ்மீம் வாவ – இதுவரை உனக்கு ப்ரஹ்மணை விளக்குகின்ற
உபநிஷதம் அப்ரூம இதி – உபநிஷத்தைத் தான் கூறினேன் என்று குரு முடித்தார்.
சாதனம் சொல்லும் -அவர் தாம் அனைத்தும் -அவர் அனுக்ரஹத்தால் தானே அவனை அடையலாம்
———————————–
தஸ்யை தபோ தம கர்மேதி ப்ரதிஷ்டா வேதா ஸர்வாங்காநி ஸத்யமாயதநம் ৷৷ 4.1.8 ৷৷
ஆசை வர -வித்யா மஹாத்ம்யம் -தபஸ் உபவாசம் -தர்மம் புலன் அடக்கி -அக்னி ஹோத்ராதி கர்மம் -ப்ரஹ்ம ஞானம் வளர
வேதங்கள் அங்கங்கள் -ஞானம் உத்பத்திக்கு
உபநிஷத்தை குருவின் மூலம் கேட்பதுதான் சரியான முறையில் அறிவை அடைய முடியும்.
தப:- தவம் – நம்முடைய மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்த எடுக்கும் முயற்சி.
இதை அடைவதால் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ளும் மனதை அடைவோம்.
இப்படிபட்ட மனதினால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். இதனால் சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைகிறோம்.
கர்ம கர்ம யோகமாக செயல்களை செய்தல்
ப்ரதிஷ்டா ஆதாரங்கள் – உபநிஷத்தை உபதேசமாக குருமுகமாக கேட்டல்
அந்த ப்ரஹ்ம ஞானத்திற்கு தவம், புலனடக்கம், கடமையை ஆற்றுதல் ஆகியவைகள் ஆதாரங்கள்.
வேதங்கள் அதனுடைய எல்லா உறுப்புக்கள். வாய்மை அதனுதைய இருப்பிடம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
———————————
யோ வா ஏதாமேவம் வேதாபஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்டதி ப்ரதிதிஷ்டதி ৷৷ 4.1.9 ৷৷
யஹ வா ஏவம் ஏதாம் வேத – யார் இவ்வாறு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ
பாப்மான அபஹத்ய – அவன் பாவங்களை நீக்கி
அனந்தே ஜ்யேயே – எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய
ஸ்வர்கே லோகே – மோக்ஷத்தில்
ப்ரதிதிஷ்டதி – நிலைபெறுகிறான்.
யார் இவ்வாரு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்று
எல்லையற்றதும், மிக உயர்ந்த்துமாகிய மோட்சத்தை அடைகிறான்.
இவ்வாறு ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவர்கள் அநிஷ்டம் தொலைந்து இஷ்ட பிராப்தி பெறுகிறார்கள்
அர்ச்சிராதி கதி மூலம் திரும்பி வராமல்
புண்ய பாப கர்மங்கள் தொலைந்து அந்தம் அற்ற சிறந்த ஒப்பற்ற ஆனந்தம் அடைகிறார்கள்
———————–
৷৷ இதி சதுர்த்த கண்டம் ৷৷
ஆப்யாயந்து மமாங்காநி வாக்ப்ராணஷ்சக்ஷு ஷ்ரோத்ரமதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி. ஸர்வம்
ப்ரஹ்மௌபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோதநிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து.
ததாத்மநி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ৷৷
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply