ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் -மம நாத -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணனாம் அமுதக்கடல் திருவாய் மொழி
பும்ஸாம் சித்த அபஹாரிணாம்-ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கண்டவர் சிந்தை வழங்கும் கண்ண பிரான் –
சாஷாத் மன்மத மன்மத -கிருஷ்ண –
ஞானாதி ஷட் குணங்கள் -ஸ்வேத தீப வாசி நரசிம்மன் நர நாராயணன் –
நிகம கற்பக தரு -வேதாந்த பழம் -ஸூக முகமத்– கீழே வந்த பழம் -அம்ருத த்ரவய தாரை -பக்தி ரசம் –
ஸ்ரீ மன் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ
வேதாந்த சார்யோ வர்யோ மே சந்தி தத்தம் சதா ஹ்ருதி
—————————-
வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் —-1–அனுஷ்டுப் விருத்தம்
ஜயந்தீ சம்பவம் –ஸ்ரீ ஜயந்தீ அன்று தோன்றியதும்
பிருந்தாவன சரம்-பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பவனும்
வல்லவீ ஜன வல்லபம்–ஆயர் குலப் பெண்களுக்குப் பிரியமான பர்த்தாவும்
வைஜயந்தீ விபூஷணம்–வைஜயந்தி மாலையை ஆபரணமாக யுடையதுமான
தாம –தேஜஸ்ஸை
வந்தே –வணங்குகிறேன்
ஸ்ரீ ஜெயந்தி அன்று திரு அவதரித்தவனும் -ஸிம்ஹ ஸ்ராவண –ஆவணி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி -ரோஹிணி நக்ஷத்ரம்
பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனும் -இடைப்பெண்களுக்கு ப்ரியதமமானவனும்
ஸ்ரீ வைஜயந்தி என்னும் வனமாலையை அலங்காரமாக தரித்தவனுமான கண்ணன் என்னும் ஜோதியை வணங்குகிறேன்
மங்கள ஸ்லோகம் -யாதவாத்யஹ்ருதயம் -இதே ஸ்லோகம் —வந்தே -மங்கள வந்தனம் -கோபாலன்
வேத வாக்குகள் -சொற்கள் -பசுக்கள் -ரக்ஷகன் –
சர்வ உபநிஷத் காவா –கீதாம்ருதம் -பார்த்தோ வத்ஸா-நாம் பருக -அன்றோ –
கர கமல-தோழியும் நாமும் தொழுதோம் -அங்கே வேண்டிப் பெறுவான் —
நாதன் -ஸ்வாமி –
வந்தே
எப்பொழுதும் -பிரபத்யே போலே வர்த்தமானம் –அஹம் வந்தே -சொன்னால் அஹங்காரம் வருமே -தன்னாலே அர்த்தாத் சித்தி –
தாஸோஹம் –தாஸ்யம் முன் வைத்து திருவடி –
பிருந்தாவன சரம்-
ஆரண்யகம் வேதமே -காடு -ப்ருஹதராண்யகம் பெரும் காடு -சாரம் -சஞ்சரிப்பவன் -கூட்டம் கூட்டமாக –
ரஷிப்பவன்–புண்யம் பவித்ரம் -திருவடி பட்டு —
வல்லவீ ஜன வல்லபம்-
ஸ்ரீ வல்லபன் -கோபீ வல்லபன் ஆனான் –ஸ்ரீ மறைத்து வாமனன் ஆனாது போலே —
காடுகளூடு –பின்னை மணாளன் –ஆயர் சிங்கம் -காயாம்பூ வண்ணன் –மழை களோ வருகிறதோ —
மங்கையர் சாலக –யூண் மறந்து –ஒழிந்தனரே-
கோவலனாய் குழலூதி கன்றுகள் மேய்த்து –கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு -இவனை ஒப்பாரை கண்டு
ஜயந்தீ சம்பவம் –
ஒருத்தி மகனாய் –இவரும் மறைத்து அருளிச் செய்கிறார் —வைகுண்ட பர லோகே –பக்தைர் பாகவத ஸஹ –
ஜெயந்தி -மட்டும் சொல்லும் -பெயரை சொல்லாமல் -ஜெயம் புண்யம் வெற்றி கொடுக்கும் நக்ஷத்ரம் –
ஜெ சப்தம் நிறைய அருளிச் செய்வார் இதில்
அஷ்டமி -ரோஹிணி -தாழ்ந்து பழகும் தன்மை -எட்டை பெருக்கி -கூட்டி பார்த்தால் -8 -7-இப்படி குறைந்தே வரும் –
ஒன்பதை பெருக்கி ஒன்பதே வரும் -ராமர் பரத்வம் நவமி –
பாஞ்ச ஜன்யமே கிண்டி –
அத்புதம் பாலகம் –அம்புஷேணம்-சங்கு சக்ர கதாதரம் ஸ்ரீ வத்சம் -கௌஸ்துபம் -பீதாம்பரம் –
பாலகம் பாலாக க யஸ்ய -பாலனாக நான்முகனும் இருந்தானாம் -அம்புஷேணம்- -ஸ்ரீ லஷ்மியைக் காட்டினானாம் -யசோதைக்கு –
தாம
தேஜஸ் -வன சஞ்சாரி தேஜஸ் -ஆயர் குலத்தில் தோன்றும் மணி விளக்கு அன்றோ —
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -சுடர் அடி-
வைஜயந்தீ விபூஷணம்
மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -வன மாலை குலுங்க நின்றவனை ப்ருந்தாவனத்தே கண்டோமே
வைஜயந்திக்கு இவன் ஆபரணம் –
சரக் வஸ்திர ஆபரணம் -ஸ்வ அனுரூபம் -சின்மயம் ஸ்வயம் பிரகாரசம் -நித்ய ஸூரிகள்-
வைஜயந்தி மட்டும் மறைக்க வில்லை -வனம் சஞ்சரிக்க –ஸுலப்யம் -தொடங்கி பரத்வம் சொல்லி -முதல் ஸ்லோகம் —
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
குழலூதிக் கொண்டே சென்று இனிது மறுத்தி நீரூட்டி
ஜயந்தீ சம்பவம் தாம–நிலை வரம்பில் -பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
தாம -எழில் கொள் சோதியாகத் திகழ்கிறான்
அனுஷ்டுப் விருத்தம்
யுக்ம விபுலா விருத்தம் என்றுமாம்
பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்–ஸுலப்யம்
ஜயந்தீ சம்பவம் -தேஹளீ தீப நியாயத்தால் ஸுலப்யத்துக்கும் பரத்வத்துக்கும் அந்வயம்
தாம வைஜயந்தீ விபூஷணம்-பரத்வம் -ஸுலப்யத்துக்கு ஆபரணம்
——————————————-
இரண்டாம் ஸ்லோகத்தாலே
திருவவதரித்த கண்ணனுக்கு
பாலூட்டித்
தொட்டிலில் இட்டுத் தாலாட்டி
யசோதாப்பிராட்டியார் தொல்லை இன்பத்து இறுதி கண்டதை அருளிச் செய்கிறார்
வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ
வக்த்த்ரார விந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –2-கோபால மந்த்ரம் -வஸந்த திலகம் விருத்தம்
நிஜங்கா ரசிகாம் –தன் பெயரை அடையாளமாகக் கொண்டு இருப்பதால் ரஸம் நிரம்பிய
வாசம் –வார்த்தையை
ப்ரஸா மீஷாமாண –மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருப்பவனும்
வக்த்த்ர அர விந்த –தாமரை போன்ற திரு வாயில்
விநிவேசித –வைக்கப்பட்ட
பாஞ்ச ஜன்ய–பாஞ்ச சைன்யம் என்னும் திருச்சங்கு ஆழ்வானை யுடையவனும்
வர்ண த்ரி கோண –பல நிறங்கள் கொண்ட முக்கோண வடிவத்தால்
ருசிரே –அழகான
வர புண்டரீகே–சிறந்த தாமரையில்
பத்தாசநோ –வீற்று இருப்பவனும்
வல்லப சக்கரவர்த்தீ–கோபர்கள் சூழ இருப்பவனுமான கிருஷ்ணன்
ஜயதி -வெற்றியுடன் விளங்குகிறான்
எழுத்துக்கள் கொண்ட -முக்கோண வடிவு இயந்திரத்தால் -எட்டுத் தளமுடைய அழகிய சிறந்த தாமரை வடிவமான
திவ்ய ஆசனத்தில் அமர்ந்து தன் மடியில் மகிழ்ந்த சரஸ்வதி தேவியை நன்கு கடாக்ஷிப்பவனும் –
தாமரை போன்ற தன் திரு வாயில் பாஞ்ச ஜன்யம் வைத்து இருப்பவனும்
இடைக் குலத்தின் சக்கரவர்த்தியாக கண்ணன் விளங்குகிறான் –
மந்த்ர ஸாஸ்த்ர அடிப்படையில் அமைந்த ஸ்லோகம் –
வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ –
வாக்கு என்னும் இடைப் பெண் மடியில் இருக்க -யசோதை -நப்பின்னை -என்றுமாம்-சரஸ்வதி வர -நாட்டுப் பெண் -படைக்கப் பட்டவள் பெண் -நெருங்க
தேவர்கள் -சிறிய உரு கொண்டு -மடியில் உட்க்கார சிறிய உரு கொண்டு
உற்று பார்த்து -ஈஷமான -பிராசாமீஷா காண -நன்றாக-அங்கம் -மடியில் -நாமம் என்றுமாம் -கோ பாலன் -பார்த்தும் மகிழ்கிறான்
தாலேலோ பாட -மாணிக் குறளனோ தாலேலோ -கேட்டு ரசிக்கிறான் என்றுமாம் –
வாசம் -சரஸ்வதி -வாக் தேவி உபாசனம் -பரம ஏக காந்தி -பிரகாரி பாவத்தில் –
கோ -வாக்குக்கும் ரக்ஷகன் –ஹயக்ரீவர் இடம் வேதம் உபதேசம் பெற்றால் போலே சரஸ்வதி கண்ணன் இடம் உபதேசம்
பத்மாங்க ஸத் மானம் அவேஷ்ய லஷ்மீம் ஏகஸ்ய விஷ்ணோ ஸ்ரயணாத் ஸ பத் நீம்
ஆஸ் யேந்தும் அஸ்யாய ஐதே ஜிதாப்ஜம் ஸரஸ்வதீ தத் விஜி கீஷயா கிம் -7-10-ஸ்ரீ ஹர்ஷன் தனது நைஷக காவ்யத்தில்
ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தனக்கு ச பத்தினியாக ஸ்ரீ ஸரஸ்வதி தேவி நினைத்து இருப்பதாக ஒரு ஸ்லோகம்
யசோதை பால் போட்டும் பொழுது பாட -தாலாட்டு அனுபவிக்கிறான் –மாணிக்கம் கட்டி –
பிரமன் விடு தந்தான் வையம் அளந்தானே தாலேலோ -என்றுமாம்
தன் சரிதை கேட்டு மகிழ்ந்த பெருமாள் போலே
வக்த்த்ராரவிந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய –
திரு முக மண்டலம் -சங்குபாலாடை வைத்து புகட்ட-செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
பரிபாகம் -தாமரை மலரில் வந்து தேனை பருகுவது போலே
பிராணவாகாரம் -சப்தம் வைத்து உபதேசம் என்கிறது-பாஞ்ச ஜன்யம் கொண்டு நமக்கு ஞானப்பால் புகட்டுகின்றான்
வாயில் அழுத்தி வைத்த சங்கு -பால் போட்ட தாய் –கற்பூரம், நாறுமோ -சொல்லாழி வெண் சங்கே –
தானே ஸ்பர்ச ஸூகத்தால் -அழுந்தி –
மது சூதன் வாய் அமுதம் ஸ்திரமாக பருகி –
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே –
தாமரை மலர் -வர -சிறந்த -அஷ்டாக்ஷர தளம் உள்ள -சங்கு ஞானம் பிரதம்-
துருவன் விருத்தாந்தம் –சங்க ஸ்பர்சம் மூலம் –
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –ஆசனமாக கொண்டு -பல வர்ணங்கள் -முக்கோணம் –
விசேஷ அர்த்தங்கள்
நிஜங்கா–தன்னுடைய க்ளீம் என்னும் பீஷ அஷரத்தாலே
ரசிகாம்-ரசமுள்ளதான
வாசம் –மந்த்ரத்தை
ப்ரஸா மீஷாமாநோ-நடுவில் இருந்து கொண்டு -நாற்புறமும் நன்றாகப் பார்த்துக் கொண்டு
வக்த்த்ரார விந்த –8 அல்லது 24 தளங்களோடு கூடிய தாமரை முகத்திலே நடுவிலே நின்றவாறு
விநிவேசித -வைக்கப்பட்ட -எழுதப்பட்ட
பாஞ்ச ஜன்ய-சங்கம் போன்ற பிரணவத்தை யுடையதும்
த்ரி கோண ருசிரே –ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் என்று மாயா லஷ்மீ மன்மத பீஜங்கள் மூன்றும் சேர்ந்து கீழ் நோக்கியதொரு த்ரி கோணத்தால்
வர புண்டரீகே–8 அல்லது 24 தளங்களையுடைய வெண் தாமரையிலே
பத்தாசநோ –ஆசனத்தில் வீற்று இருக்கும்
ஜயதி வல்லப சக்கரவர்த்தீ -வல்லப சக்கரத்தின் மதியத்தில் இருக்கும் கண்ணன் விளங்குகிறான்
வல்லப கோபால மந்த்ரம்
க்லீம் கோப வல்லபாய் ஸ்வாஹா –8-
க்லீம் கிருஷ்ணாய ஸ்வாஹா–6-
க்லீம் கோவிந்தாயா ஸ்வாஹா–7–
க்லீம் கோபீ ஜன வல்லபாய் ஸ்வாஹா–11-
நமோ பகவதே கிருஷ்ணாய கோவிந்தாயா கோபீ ஜன வல்லபாய் ஸ்வாஹா
கோபால மந்த்ரம் -ரக்ஷணம் -சர்வ ரக்ஷகனுக்கும் -த்ருஷ்டிக்கு —
பார்வை குழந்தை மேலே படாமல் இருக்க ஆசனத்தில் எழுத்து –
புண்டரீகம் -தஹராசாகம்-புரிதத் நாடி –
வல்லப சக்கரவர்த்தீ –சக்கரம் எந்திரம் -ஆகிய சக்கரத்தில் வர்த்திக்கிறவன் –
கோபால மந்த்ரம் -உபாசனம் -ஞான உபதேசம் பெறுவோம் –
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பு அரியன-தொட்டிலிலே மூன்றும் நிலைகள் -எம்பெருமானார் –
ஜயதி -இந்திரியங்களை வென்று –நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டு அனுபவிக்கிறார் இந்த நிலைகளை –
——————————————————–
குழந்தையாய் இருக்கும் போதே தாய் போல் வந்த பேய்ச்சியை முடித்த வ்ருத்தாந்தத்தை வர்ணிக்கிறார்
ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –3-(ஆம்நாய கந்தி ருசி ரஸ் புரித–பாட பேதம் )-வஸந்த திலகம் விருத்தம்
ஆம்நாய –வேதத்தின்
கந்திருதித –வாசனையை யுடையவைகளும்
ஸ்புரித–துடிக்கின்றவைகளுமான
அத ரோஷ்டம்–உதடுகளை யுடையவனும்
ஆஸ்ர –கண்ணீரால்
ஆவில–கலங்கிய
ஈஷணம் –கண்களை யுடையவனும்
அநுஷண –அடுத்த ஷணத்திலே
மந்த ஹாஸம்–புன் முறுவலோடு கூடியவனும்
கோபால டிம்ப –இடைப்பிள்ளையின்
வபுஷம் –வடிவத்தை யுடையவனும்
குஹநா ஜனன்யா–வஞ்சனையால் தாயாக வந்த பூதனையின்
ப்ராண ஸ்தநந்த்யம் –பிராணனோடு கூட பாலையும் யுண்டவனான கண்ணனை
அவைமி பரம் புமாம்சம் -பரம புருஷனாக அறிகிறேன்
ஆம்நாய கந்தி ருசி ரஸ் புரித–பாட பேதம் –வேத வாஸனையால் அழகுள்ள என்றவாறு
வேதத்தின் மணம் வீசிக் கொண்டும் – -அழுகையால் துடிக்கும் திரு உதடுகளையும் கொண்டும் –
அழுகையில் வேத மணம் வீசுகிறதாம் -அவன் மூச்சுக்கு காற்றே வேதம் என்று வேதம் சொல்லுமே –
கண்ணீரால் கலங்கிய திருக் கண்களை உடையவனும்
அடிக்கடி ஸ்மிதம் கொண்டவனும் -தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் பாலையும் உயிரையும் ஓக்க பருகியவனுமான
இடைக் குழந்தை கண்ணனை பரம புருஷனாக அறிகிறேன்
ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆம்நாய கந்தி-
வேத மணம் கமழும் –இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் –அர்ச்சையில் கலியன் -இங்கு இவர் விபவத்தில்
பிராணவாராம் ஓதினார் -சரஸ்வதி கீழே பார்த்தோம் –
பசியினால் அழுதாலும் வேதம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கண்கள் கலங்கி -கண்கள் மலர்ந்து –மந்த ஹாஸம் -பூதனை கிட்ட வரவே –
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
இடையர் -முடை நாற்றம் -மாயா -பூதனை -இவனும் மாய குழந்தை –
சத்ரு -இராவணன் இலக்குமனை தூக்க முடிய வில்லை -இங்கோ பூதனை குழந்தையை எடுத்து -அநந்ய-காரியாகி வந்ததால்
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –
யசோதை போலே வந்த மாயை –ஜகத் குரு விஷத்தை ரசமாக -உயிர் சக்கரை பாலுக்கு சேர்த்து கொண்டான் –
அவதாரத்தில் முதலில் தாடகை -பூதனை –
பால் பருகி பழகாதவன் -கிடைக்காத லாபம் அன்றோ இவனுக்கு –
இந்த அத்புதம் நினைப்பார் பால் குடிக்க வேண்டாமே -அத்புதம் பாலகம் -விசுவாமித்திரர் வந்ததே அத்புதம் என்பர் சக்ரவர்த்தி
ஸ்தம்பே –அத்யத்புதம் -அவதார கார்யம் நடப்பதே அத்புதம்
பேய் முலை –பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –
கள்ளத்தினால் வந்த பேச்சி முலை ஈர்த்து உண்ண சுவைத்தான் –
பரம் புமாம்சம் —
பரம புருஷன் என்று அறிந்தேன் –எந்தாய் என்று நினைந்து நைந்தேன்
இருவராய் வந்தார் –என் முன் நின்றார் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
பரத்வம் பார்த்து அகலுகை இல்லாமல் -இடைச்சிகளை போலே அணுகுவதே -ஆஸ்ரித லக்ஷணம்
பூதனையின் பாலையுண்ட கண்ணனின் சேஷ்டிதத்தை அனுசந்திக்கவே நாம் பாலை யுண்ணும்படி பிறக்கவே வேண்டாம் என்னுமத்தை
யாதவாப்யுதத்தில்
ஸ்தந்யேந கிருஷ்ண ஸஹ பூதனயா ப்ராணான் பபவ் லுப்த புனர் பாவாயா
யதத்புதம் பாவ யதாம் ஜநா நாம் ஸதனந்த்யத்வம் ந புநர் பபூவ-என்று அருளிச் செய்கிறார்
———————————————————-
வஞ்சனைப் பெண்ணைச் சாவப் பாலுண்ட விருத்தாந்தத்தை அனுசந்திக்கவே இவனே பரம புருஷன் என்று நிச்சயித்தார்
இனி இவனிடம் பரத்வம் என்னும் குணம் உண்டு என்கிற எண்ணமே வராமல் செய்யும் வெண்ணெய்க்கு ஆடும்
பிள்ளையின் ஸுலப்யத்தை அனுசந்திக்கிறார்
மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம்
அஜா நந்த மூடா மாம் அவஜாநந்தி
கோபால டிம்ப வபுஷம் –பரமம் புமாம்ஸம் அவைமி –அஹம் வேத்மி மஹாத்மானம் போல் கீழ் அருளிச் செய்து
அவன் கிருபை செய்து அருளால் தனது லீலைகைக் காட்டி அருள பிராதிக்கிறார்
ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம்
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம்
நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்–4-வஸந்த திலகம் விருத்தம்
அநிப்ருத்த–அசைகின்ற
ஆபரணம்–ஆபரணங்களை யுடையதும்
ஆ குஞ்சித –தூக்கி மடக்கப் பட்ட
ஏக சரணம்–ஒரு திருவடியை யுடையதும்
நிப்ருத–அசையாமல் ஊன்றப்பட்ட
அன்ய பாதம்–மற்ற ஒரு திருவடியை யுடையதும்
நிமந்த –கடைவதால் வரும்
முகரேண -ஓசையை யுடைய
தத்நா –தயிரினால்
நிபத்த –போடப்பட்ட
தாளம்–தாளத்தை யுடையதுமான
நாதஸ்ய –ரக்ஷகனான கண்ணனுடைய
நந்த பவனே –நந்தகோபன் திருமாளிகையிலே
நவநீத நாட்யம்-வெண்ணெய்க்காக ஆடிய நர்த்தனம்
ஆவிர்பவத் புரஸ்தாத்–என் கண் முன்னே தோன்ற வேண்டும்
ஒரு திருவடியை மடக்கி -மற்று ஒரு திருவடியை நிலையாக வைத்து -திவ்ய ஆபரணங்களை அசைத்து –
தயிரை நன்கு கடைவதால் ஏற்படும் ஒலியால் அமைந்த தாளத்துக்கு ஏற்ப குலுங்க
நந்தகோபரது இல்லத்தில் வெண்ணெய்க்காக தலைவன் கண்ணன் செய்த நடனம்
என் கண் முன்னால் காட்சி தந்து கொண்டே இருக்க வேண்டும் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நாட்டியம் பிரசித்தம் அன்றோ
ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
மாயை போனவாறே -நிரதிசய அனுபவம் தானே –லீலானுபவம் நேராக பார்க்க ஆசைப்படுகிறார்
காணுமாறு உண்டாகில் அருளே என்றாள் தேவகி அன்றோ –
ஆவிர்பாவம் உண்டாக வேணும் என்கிறார் -நவநீத நாட்யம் அனுபவிக்க வேணும் –
இச்சாம் மோஹம் –ராமம் -சத்ரஜித் -வெண் கொற்றக் கொடையில் மறைந்து தெரியும் திரு முக மண்டலம் சேவிக்க ஆசை
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம் –
திரு ஆபரணங்கள் குலுங்க குலுங்க ஆட -கொலுசு சலங்கை ஒலிக்க-
தலையில் செருகிய மயில் தொகை அசைந்து ஆடி பிரகாசிக்க
திருக் கழுத்தில் உள்ள கோல மா மணி ஹாரமும் முத்துத் காமமும் முடிவில்லதோர் எழிலுடன் பிரகாசிக்க
திருக் காதுகளில் தாழ்ந்து இலகு மகர குண்டலங்கள் வில் வீச
திரு வரையில் பொன்னரை ஞாண் உடன் மாணிக்க கிண்கிணிகள் கல கல என்று ஸப்திக்க
திருவடியில் அணியப்பெற்ற சிலம்புகள் மதுரமாக ஒலிக்க
வாஸ நாறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ -அவனுக்கு கேட்டு ஓடி வரும் படி பஞ்ச லக்ஷம் கோபிகளும் கடைவார்களே
குஞ்சிதக பாதம் -தூக்கி மடக்கின திருவடி -ஒன்றை ஊன்றிக் கொண்டு
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம் -நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்—-
நந்த பவனம் -ஆனந்த பவனத்தில் நவநீத நாட்யம் –
தயிர் கடைவதே தாளம் -நாட்டிய ரெங்கம்
நாதஸ்ய–ஸர்வ ஜெகந்நாதானான கண்ணனையே குறிக்கும் படி நாதன் பத பிரயோகம்
வெண்ணெய் போன்ற ஹ்ருதயம் திருடுவானே –மகா பாலி சக்கரவர்த்தி இடம் யாசகம் பண்ணினவன் இடைச்சிகள்
இடம் யாசகம் பண்ணியோ வெண்ணெய் -உணர்வது -அழகாக திருடி உண்ண வேண்டுமே –
பொத்தை உரலை கவிழ்த்து -அதன் மேல் ஏறி –
அடியேன் -மணி அடிக்க வேண்டியது கர்தவ்யம் –அமுது செய்யும் பொழுது –
மணியை அடிக்காமல் பிடித்து அன்றோ உண்ணுவான் –
கவளம் வெண்ணெய்க்கு –
ஆபீர நாட்டியம் –
தும்புரு நாரதர் ஆடாத நவமான நாட்டியம் -இத்தை சேவிக்க ஆசைப்படுகிறார்
—————————————————————————-
யசோதை முதலிய கோபிகள் கண் முன்னே வெண்ணெய்க்கு ஆடிய நர்த்தனத்தால் நந்த பவனம் ஆனந்த பவனமானது என்றார் கீழ்
அடுத்த ஸ்லோகத்தால்
தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்துத் தாழியில் வைத்து யசோதா பிராட்டி அப்பால் போந்தனையும்
ஓராதவன் போல் பொய்யுறக்கம் உறங்கி
பிறகு அறிவுற்று
தாயார் தடம் தோள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்க ஆரம்பித்த ஸர்வ சக்தனான கண்ணன்
முற்றும் விழங்கப்பெற்ற கையும் களவுமாகப் பிடிபட்டு
அன்னை கோல் கொள்ள
தாமரைக்கண் நீர் மல்க பையவே நின்ற நிலையை வர்ணிக்கிறார்–
ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயா தீஷத் ப்ரச லித பதோ நாப கச்சன் நதிஷ்டன்
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –5-மந்தாக்ராந்தா விருத்தம்
ஸ்வாது –இனிமையான
ஹை யங்க வீனம்–வெண்ணெயை–முதல் நாள் தோய்த்த தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணெய்க்கு இந்தப் பெயர்-
ஹர்த்தும் –திருடுவதற்காக
கும்பே விநிஹித –குடத்தில் வைக்கப்பட்ட
கர -கையை யுடையவனும்
ஜாத ரோஷாம்–கோபம் அடைந்தவளும்
தாம க்ரஹண –கட்டுவதற்காகக் கயிற்றை எடுப்பதில்
சடுலாம் மாதரம் –பரபரப்பை யுடையவளான தாயான யசோதையை
த்ருஷ்ட்வா –பார்த்து
ஈஷத் –கொஞ்சம்
ப்ரச லித–நகர்கின்ற
பத –திருவடிகளை யுடையவனும் –ஆனால் அந்த இடத்தை விட்டு
நாப கச்சன் -அப்பால் போகாதவனும்
நதிஷ்டன்-ஒரே நிலையில் நிற்காதவனும்
சபதி–உடனே
நயனே -இரண்டு கண்களையும்
மீலயன் –மூடிக் கொண்டவனும்
விஸ்வ கோப்தா–ஸர்வ ஜகத்தையும் காப்பாற்று கிறவனுமான
மித்யாகோப –பொய் இடையனான கண்ணன்
பாயாத் –எல்லாரையும் ரக்ஷிக்கட்டும்
இனிய வெண்ணெயை திருடுவதற்கு குடத்தில் தோள் அளவு கை இட்டவனும் -கோபம் அடைந்து கயிற்றை எடுப்பதற்கு
ஆயத்தமான தாயைக் கண்டு அஞ்சி சிறு அடி பெயர்ந்து ஓடி விட நினைத்து ஒரு திருவடியை சிறிது தூக்கி-
செல்லாமலும் நிற்காமலும் -தடுமாறி -உடனே கண்களை மூடிக் கொண்டு –
பெரிய ஆபத்து வர அத்தை பார்க்க அஞ்சி குழந்தை கண்ணை மூடிக் கொள்ளுமே -அதே போலவே இவனும் மூடிக் கொள்ள –
பொய்யான இடைக்கோலம் பூண்ட ஸமஸ்த லோக சர்வ ரக்ஷகன் கண்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும்
ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்-
நாட்டியம் ஆடியும் வெண்ணெய் கிடைக்க வில்லையே -திருடி தானே பெற வேண்டும் —
மாலாகாரர்-உபஜீவனம் -அவன் அன்றோ இவனுக்கு மாலை சாத்தி -சுகர்-இத்தில் ஆழ்ந்து –
திருவடிகளுக்கு கொடுத்த கார்யம் பலன் இல்லை -கைகளுக்கு வேளை திருட -ஸுசீல்யம் அனுபவிக்கிறார் ஸ்வாமி இங்கு –
கும்பத்தில் அன்றோ ஒளித்து வைத்து -தேடி -வேறு ஒரு கலத்திட்டு-விசஜாதீயம்–நிஹித -வி நிஹித –
தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி -அன்றோ –
மோரார் குடம் உருட்டி -அசாரம் தகாத -சாது சங்கமத்தில் கூடாதே –
ஸ்வாது ஹை யங்க வீனம்–
நேற்று கறந்த பாலை காய்ச்சி -கடைந்த புதிய வெண்ணெய் –
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்-
தான் கை விட்டு பார்க்க வெண்ணெய் காண வில்லை -பிள்ளைக்கு என்ன ஆகும் –
கயிறு தேடி -யசோதை -சலித்து-தானே சங்கோசித்து–தியானம் -எப்படியோ அப்படியே -கட்டுண்டான் என்றதை
ராஜா எதிரிகளை காட்டுவதும் மஹிஷியால் கட்டுண்ணப் பண்ணிக் கொள்வதும் பும்ஸத்வம் தானே –
நினைக்க கட்டு விடுபட -நியாய சாஸ்திரம் வெட்க்கி -மதுர கவி ஆழ்வார் இத்தை அருளிச் செய்ய
நம்மாழ்வார் ஆறு மாசம் மோஹித்தார் அன்றோ –
எழில் கொம்பு தாம்பு கொண்டு –அழுகையும் அஞ்சு நோக்கும் -அந்நோக்கும் –தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
பாயா தீஷத் ப்ரச லித பதோ –
தாவிக் குதிக்கிறான்
நாப கச்சன் நதிஷ்டன் –
ஓடவும் இல்லை போகவும் இல்லை -தயங்கி –அஞ்சன வண்ண அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்கிலேன் -பாவியேனுக்கு இங்கே போதராயே –
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –
கோபம் மித்யா -இரு கையால் முகத்தை மூடிக் கொண்டு
தான் காணா விடில் அம்மாவும் பார்க்க முடியாது என்று இருப்பவன் -யார் –
விஸ்வ கோப்தா -சர்வ லோக ரக்ஷகன் அன்றோ -அவதாரத்தில் புரை அற்று இருக்கை
இவன் நம்மைக் காப்பாற்றட்டும் என்று பிரார்திக்கிறார்
தத் க்ரது நியாயம் -மாறிப்போய் விட்டதே
எப்படி உபாஸிக்கிறோமோ அப்படியே பலன் என்றது பொய்த்ததே
கட்டுண்ட வ்ருத்தாந்தம் அனுசந்திக்க நமது பிறவிக்கட்டுகள் அவிழ்கின்றனவே-
ஆகவே இந்த நியாயம் லஜ்ஜை அடைந்து ஆரண்ய கதைகளோடையே நின்று விட்டதே என்று
யாதவாப்யுதத்தில்
பத்தம் ததா பாவயதாய முகுந்தம் அயத்ன விச்சேதிநி கர்மா பந்தே
தபஸ்வினி தத் க்ரது நீதி ராத்யா ஸவ்ரீடம் ஆரண்ய கதாஸி தஸ்தவ் –என்று அருளிச் செய்கிறார் –
——————————————————–
கட்டுண்ட கண்ணனை ரக்ஷிக்க பிரார்த்தித்தார் கீழ்
இனி அவன் விஷயத்தில் ஸ்துதிப்பதே கர்த்தவ்யம் என்று நிச்சயித்து ஸ்துதியில் இழிகிறார்
வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –கிமபி ப்ரஹ்ம கிசோர பாவ த்ருஸ்யம்–6-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
வ்ரஜ –பிருந்தாவனத்தில் உள்ள
யோஷித-பெண்களுடைய
அபாங்க –கடைக் கண் களால்
வேத நீயம் –இலக்காகக் கொண்டு அடிக்கப் பட்டதும்
மதுரா –வடமதுரைக்கு
பாக்யம் –ஸுபாக்யமாக இருப்பதும்
அநன்ய -மற்று ஓன்று அறியாத பக்தர்களுக்கு-உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களுக்கு-
போக்யம் –பரம போக்யமாக இருப்பதும்
வாஸூ தேவ வதூ –வாஸூ தேவருடைய பத்னியான தேவகியினுடைய
ஸ்தநந்த்யம் –இளம் பிள்ளையாய் இருப்பதும்-பாலுண்ணும் குழந்தை -கானுமாகில் அருள் என்ன அனைத்தையும் காட்டி அருளினான் அன்றோ
கிசோர பாவ–பிள்ளைத் தன்மையால்
த்ருஸ்யம்–கண்ணுக்கு இனியதாய் இருப்பதும்
கிமபி-ஒப்பற்றுதுமான
தத் — ப்ரஹ்ம ஈடே –அந்தப் ப்ரஹ்மத்தை ஸ்துதிக்கிறேன்
கோகுலத்தில் இடைப்பெண்களின் கடைக் கண்களால் பார்க்கப் பட்டவனும் -இப்பார்வை அம்பு போலே
பாய்ந்து இவனை அவர்களுக்கு அடங்கச் செய்கிறதே –
பெரும் தவமே வடிவு எடுத்தால் போலே உள்ள -வடமதுரை நகரின் – புண்ய வடிவானவனும்
வேறு தெய்வத்தை நாடாதவர்க்கு இனிமையானவரும் வஸூ தேவர் மனைவி தேவகியின் பாலைப் பருகியவனும்
குழவிப் பருவத்தால் காண அழகானவனும் அற்புதமான அந்த பரம் பொருளான கண்ணனை ஸ்துதிக்கிறேன் –
வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் –
வ்ரஜை ஸ்திரீகளுக்கு -அனுபாவ்யமான அவன் –கண்ணுக்கு விஷயம் ஆனான் –
ஸ்ரீ முகம் பயத்துடன் நோக்கினானாம் -கடைக்கு கண்ணால் பார்வையால் அடி பட்டானே-
ஊரார்கள் எல்லாரும் காண -அன்றோ கட்டுண்டு அடி பட்டான் -உரலோடு தீராத வெகுளியாய் -ஆய்ச்சியர் –
அபாங்க வேத நீயம் –பாடபேதம் -அவர்கள் கடைக் கண்ணால் அறிவிக்கப்படுகிறது-இவர்கள் கண்களால் அறியும்படி நிற்கிறது பரம்பொருள்
பிரணவமே வில் -ஆத்மாவே அம்பு -ப்ரஹ்மமே இலக்கு –அம்பு போல் ப்ரஹ்மத்திடம் அமிழ்ந்து விடும் என்று -உபநிஷத் கோஷிக்கும்
இங்கு கோபிகளின் கண்களுக்குத் தன்னையே இலக்காக்கிக் கொண்டு நிற்கிறதே
மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே–ஈடே
ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -ஏத்தினேன் நான் உய்ய -ஆழ்வார் போலே –
மதுரா பாக்யம் -அநந்ய போக்யம் ஈடே -வடமதுரை அன்றோ பெற்றது -இந்த பாக்யம் –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா யஸ்யாம் ஜாதோ ஜகன் நாத ஸாஷாத் விஷ்ணு ஸநாதந--என்று மஹரிஷிகள் கொண்டாடும்படியான நகரம்
மதுரா அபாக்யம் என்றுமாம் -திருவாயர்கள் அன்றோ பெற்றார்கள்
ஒருத்தி மகனாய் இத்யாதி –தாண்ட காரண்ய -ரிஷிகள் ஆயர் பெண்கள் –நிரதிசய போக்யம் அனுபவிக்க -பரமை ஏகாந்திகள் –
தன்னைத் தானே அனுபவிக்கும் கண்ணன் -ஜென்ம கர்ம மே திவ்யம் -என்றானே –
சக பதன்யா விசாலாட்சி நாராயணன் -பெருமாள் -ஆராதனம் -மூன்று இடத்தில் வால்மீகி விசாலாட்சி சப்த பிரயோகம்
சுக்ரீவன் இத்யாதி பார்க்கும் பொழுதும் -விசாலாட்சி –
புஷ்பக விமானம் -இலங்கை கடாக்ஷிக்க பெருமாள் கேட்டதும் -பக்தனை கடாக்ஷிக்க –
அநந்ய போக்யம் -தனக்கும் போக்யம்
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –
வஸூ தேவரையும் தேவகியும் சேர்த்து அருளுகிறார் –இப்படி கோபிகள் கண்ணடி பாடவோ கண்ணனை கொண்டு விட்டார்கள் -என்கிறார் –
தேவகி பால் கொடுத்ததாக சொல்லி -நந்த கோபர் அஷ்ட வசுக்களில் ஒருவன் -யசோதா பாலைப் பருகினான் என்றுமாம் –
கிமபி ப்ரஹ்ம கிசோர பாவ த்ருஸ்யம்–
பர ப்ரஹ்மம் அன்றோ -கண்ணால் சுடும்படியும் -கட்டவும் அடிக்கவும் படி -கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-
தத் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மா -என்ற பொதுச் சொற்களால் உபநிஷத்துக்கள் கோஷிக்கும் பரப்ரஹ்மம் -பரமாச்சார்யன் அன்றோ இப்படி -தன்னை ஆக்கிக் கொண்டான் -விலக்ஷணம் அன்றோ –
—————————————————–
கீழ் ஸ்துதிக்கிறேன் என்று வாய் படைத்த ப்ரயோஜனத்தை அருளிச் செய்தார்
இனி அவனுடைய நவநீத ஸுசீல்யாதிகளை அனுசந்தித்து என்னுடைய மனம் அவனையே நினைத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்
பரிவர்த்தித கந்தரம் பயேந ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-7-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
பயேந–பயத்தால்
பரிவர்த்தித கந்தரம் –திருப்பப்பட்டு கழுத்தை யுடையவனும்
ஸ்மித –புன் முறுவலினால்
புல்லாதர பல்லவம் –மலர்ந்த தளிர் போன்ற ஆதாரங்களை யுடையவனும்
விபுல உலூகல கர்ஷகம்–பெரிய உரலை இழுத்துச் செல்பவனும்
கயோஸ் சித்-ஓர் இவருடைய
விட பித்வ நிரா சகம் –மரமாக நிற்கும் தன்மையைப் போக்கி அருளியவனும்
குமாரம் -சிறுவனுமான கண்ணனை
ஸ்மராமி -நினைக்கிறேன்
பெரிய உரலை இழுத்தவனும் -பின்னே யசோதை தாய் வருகிறாளா என்று அச்சத்தால் கழுத்தை திருப்பியவனும் –
அவள் தொடரவில்லை -ஏமாற்றி மீண்டோம் என்ற திரு உள்ளத்தால் -ஸ்மிதம் பண்ணி – மலர்ந்த தளிர் போன்ற அதரம் உடையவனும்
அச்சமும் உண்மை இல்லையே -அபிநயம் தானே -இத்தை நினைத்து ஸ்மிதம் என்றுமாம் –
உரலை இழுத்து வரும் பொழுது -மருத மரங்களை முறித்து – யக்ஷர்கள்
குபோரன் புதல்வர்கள் நள கூபரன் -மணிக்ரீவன் ஆடை இல்லாமல் பொய்கையில் நீராட நாரதர் சாபத்தால் மரமானார்கள் –
அந்த சாபம் நீங்கப் பெற்று – இருவருக்கும் — மரப் பிறவியை ஒழித்தவனும்-ஆயர் சிறுவனான கண்ணனை த்யானிக்கிறேன்
பரிவர்த்தித கந்தரம் பயேந –
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனான் -மீண்டும் அடிக்க வருவார்களோ என்று பார்த்து –
திருவடி ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப் பட்டதாக நடிக்கும் போது அசுரர்கள் தீண்டியது போலே –
ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி –
புன்னகை ஸ்மிதம் உடன் -அர்ஜுன மரங்களை கண்டான் -இளம் தளிர் -பல்லவம் போலே -திரு வதரம்
ஸுசீல்யம் காட்ட வந்த அவதாரம் அன்றோ இது –
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் –
மரங்களாக நின்ற நிலைகளை மாற்றி -யவர்கள் அநாதர யுக்தி கயோஸ் சித் -பாகவத அபசாரம் பெற்றவர்கள் அன்றோ
விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-
உரலில் கட்டி வைக்க -பெரிய கனமான உரால் -ஆஸ்ரிதர் கட்டினத்தை அவிழ்க்க மாட்டானே -கர்ம பந்தம் முடிப்பவன் –
பக்த பராதீனன் அன்றோ -குமாரன் -பால்ய அவஸ்தையில் -ஸுசீல்யம் நன்றாக காட்டி அருளி -பராகாஷ்டை
ஸ்மராமி –அந்த ஸ்மரணம் மதுரமாக இருந்தது
அதிலேயே சற்று ஊன்றி நிற்கவே அது ப்ரத்யக்ஷமான நிலையை அடைந்து புறக்கண்ணாலும் கண்ணனைக் காண்கிறார்
அவனது பால லீலைகளை எப்போதும் பார்த்துக் கொண்டு தொல்லை இன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்
————————————————–
மேல் யமுனை நதிக் கரையில் செய்து அருளிய க்ரீடைகளை அனுபவிக்கிறார்
நிகடேஷூ நிசாமயாமி நித்யம் நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்
யமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –8-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
நிகமாந்தைர் –உபநிஷத்துக்களால்
அதுநாபி ம்ருக்யமாணம்-இன்னமும் தேடப்படுகிறவனும்
யாமள-இரட்டையாக முளைத்து இருந்த
அர்ஜுந–மருத மரங்களால்
த்ருஷ்ட –பார்க்கப்பட்ட
பால கேளிம் –பால லீலைகளை யுடையவனும்
யமுநா –யமுனையை
சாஷிக –ஸாக்ஷியாகக் கொண்ட
யுவனம் -யவ்வனத்தை யுடையவனுமான
யுவா நம்–யுவாவை
நிகடேஷூ –பக்கத்திலேயே–பன்மை பிரயோகம் -நாலா பக்கமும் கண்ணனைப் பார்ப்பதால் –
நிசாமயாமி நித்யம் –எப்போதும் பார்க்கிறேன்
வேதாந்தங்களால் இப்பொழுதும் தேடப் படுபவரும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று தொடக்கத்திலே
தடுமாறி பேசவும் முடியாமல் மீண்டதே -இரட்டை மருத மரங்களால் -சாபம் நீங்கிய பின்பு இருந்து சாஷாத்காரித்தார்களே
இவ்வாறு காணப்பட்ட பால லீலைகளை உடையவரும் யமுனா நதி -ப்ரவாகத்திலும் மடுக்களிலும் கரைகளிலும்
மணல் திட்டுக்களிலும் நேராகப் பார்த்த யவ்வனத் திருவிளையாடல்களையும் -இளமை லீலைகளை உடையவருமான
கண்ணன் எனும் வாலிபன் அருகில் எங்கும் எப்பொழுதும் காண்கின்றேன் –மானஸ சாஷாத்காரம் -என்றவாறு –
நிகடேஷூ நிசாமயாமி நித்யம் –
கிட்டே பார்க்கிறேன் -இங்கும் எங்கும் எங்கும் பார்க்கிறேன் -சேவை நித்தியமாக சாதிக்கிறான் –
நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்-
யதோ வாசோ நிவர்த்தந்தே-வேதம் சொல்ல முடியாமல் -வேதாஸ் சாஸ்திரம் –
ஆரண்யகம் -காட்டிலே திரிகிறான் -பிருந்தாவனம் சரம் –சேவிக்கிறார் -வேதம் பேச முடியாதவனை–
யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் –
பால சேஷ்டிதங்களை காட்டி அருளுகிறார் -சாப விமோசனம் -மரமாக இருந்து பால சேஷ்டிதங்களையும் கண்டார்கள் –
நகுல சகாதேவ அர்ஜுனன் நினைவு படுத்த -யாமளா ர்ஜுன-என்கிறார்
யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –
ராச க்ரீடை சேவை சாதிக்க -யமுனை கரையில் யமுனா தேவி கண்டு அனுபவித்தாள்
கோபிகள் இடம் செய்த க்ரீடை முழுவதும் யமுனா தேவி தானே கண்டாள்
கோபிகள் கண்ணனையே பார்க்க -அடுத்த கோபி யுடன் விளையாடுவதை கண்டார்கள் இல்லையே –
ராச க்ரீடை நிலத்திலும் ஜலத்திலும் பண்ணினான்-யோகேஸ்வரன் -எத்தனை ரூபங்களை கொள்வான் –
சாஷாத் மன்மத மன்மத -மனசை மதனம் பண்ணும் அவன் மனசை மதனம் பண்ணி -நாட்டார் காமன் இடம் படுவதை
காமன் இடம் இடம் படும்படி பண்ணிய திவ்ய மங்கள விக்ரஹன்
நாயகி பாவம் அடைய கோபிகளே காரணம் -மயில் தோகை மகர குண்டலம் அசைய -முக்த அனுபவமே ராச க்ரீடை –
ஜார சோர சிகாமணி இவன் –வேணு கானம் கேட்டு சன்யாசிகளாக வந்தார்கள் -அவ்யபிசார பக்தி யோகம் கொண்ட கோபிமார்கள்-
ராச க்ரீடை தகுமா கேட்க வேண்டாமே-கோபியை முக்தர் துல்யம் ஆக்கும் ஸ்ரீ வேணு கானம் -வேத அபிமான தேவதைகள் -ரிஷிகள் –
காமத்தை ஜெயிப்பதே ராஸ க்ரீடை -ஸ்த்ரீ பிராயர் -பக்தி பெற ராச க்ரீடை ஸ்ரவணம் –
கீழ்ஸ்லோகத்தில் –ஸ்மராமி என்று
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக்கு கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –என்கிற ஆழ்வாருடைய நினைவு போல் இருந்தது
இதில்
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு
பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றுடுமே –என்றும்
கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே —என்றும் ஆழ்வார் காண்பது போல் இங்கும்
வேதாங்கமே காண முடியாமல் மீண்டதே –
இவரோ –இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணம் நீ கற்றவை நீ கற்பவை நீ
நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் -என்கிறார்
அவனே தன்னைக் காட்டக் கண்டு -அறிந்தேன் அறிந்தேன் என்று நான்கு முறை –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -என்கிறவர்களுடைய பேச்சு அன்றோ
யமுனா தேவி கண்ட கண்ணனுடைய யவ்வனம்
பூர்ண சந்திரன் நிலவைப் பொழிய திரு ஆதாரத்தில் குழலூதி
பஞ்ச லக்ஷம் கோபிமார்கள் அனைவரும் செய்து கொண்ட கார்யங்களை அப்படியே விட்டுவிட்டு கூடி மகிழ
இவனும் இரண்டு பங்கு பஞ்ச லக்ஷம் வடிவு கொண்டு அவர்கள் கார்யங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே
இவர்களுடன் ராஸ லீலை செய்து மகிழ்ந்ததை யமுனா தேவி கண்டாள் அன்றோ
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –
மற்றவர் கண்ணனுக்கு பாலகனாகத் தோன்றினாலும்
கோபிமார்களுக்கு யவ்வனம் காட்டி அருளியதையும்
யமுனா தேவியும் கண்டு மகிழ்கிறாள் அன்றோ
காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீஷணேந
தாருண்ய ஸம் வலித சைஸவ வைபவேந
ஆ புஷ்ணதா புவனம் அத்புத விப்ரமேண
ஸ்ரீ கிருஷ்ண சந்த்ர சிசிரி குரு லோசனம் மே –ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்
ஹே கிருஷ்ண சந்த்ர -லீலைகள் செய்யும் போது எல்லாம் உனது திருக்கண்களின் கடாக்ஷங்கள் எல்லாம் கருணையே நிரம்பி இருந்தன –
யவ்வனமும் குழந்தைப் பருவமும் சேர்ந்தே பிரகாசித்திக் கொண்டு இருந்தன –
இப்படிப்பட்ட ஆச்சர்யமான லீலைகளால் எனது கண்களைக் குளிரும்படி செய்து அருள் கண்ணா -என்கிறார் இதில் –
யமுனை யவ்வனத்துக்கு ஸாக்ஷி -மருத மரங்கள் பால்யத்துக்கு ஸாக்ஷி -இரண்டையும் கண்ட கோபிகள் போல் தேசிகரும் கண்டு அனுபவிக்கிறார்
யுவா குமாரா –யுவதிச்ச குமாரிணீ அன்றோ மிதுனமும் நித்தியமாக இங்கும் அங்கும் –
————————————————
மேல் திருமேனி சவுந்தர்யத்தையும்
அதிலும் வேணுகோபாலனாக ஸேவை சாதித்து அருளுவதையும் மேல் சில ஸ்லோகங்களால் அனுபவிக்கிறார்
குழலூதும் கோபாலனாக அவன் ஸேவை சாதித்து குறுக்கு வழியில் மோக்ஷம் அளித்து அருளுவதை இந்த ஸ்லோகத்தால் அனுபவிக்கிறார் –
பதவீ மதவீ யஸீம் விமுக்தே அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
அருணா தர சாபிலாஷ வம்ஸாம் கருணாம் காரண மாநுஷீம் பஜாமி -9-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
விமுக்தே–மோக்ஷத்திற்கு
அதவீ யஸீம்–சுற்றில்லாத அதாவது நேராக இருக்கும்
பதவீம் -வழியாக இருப்பதும்
அடவீ –பிருந்தாவனத்தின்
சம்பதம் –செழிப்பான தன்மையாகிற செல்வத்தை
அம்புவாஹயந்தீம்–நீருண்ட மேகத்தோடு கூடியது போல் செய்வதும்
அருணாதர –சிவந்த உதடுகளிலே
சாபிலாஷ –ஆசையோடு கூடிய
வம்ஸாம் –புல்லாங்குழலை யுடையதும்
காரண–ஒரு காரணத்தால்
மாநுஷீம்–மனுஷ்ய ரூபம் எடுத்து வந்து இருப்பதுமான
கருணாம் பஜாமி–கருணையை ஆஸ்ரயிக்கிறேன் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று மோக்ஷத்துக்கு மிக அருகில் உள்ள எளிய வழியும் தானே ஆனவனும் –
பிருந்தாவன செல்வத்துக்கு மேகம் போன்றவனும் –
இவனது கருணா கடாக்ஷத்தால் க்ஷேமகரம் அனைத்துக்கும் அன்றோ –
செந்நிறத்த திரு அதரத்தில் ஆசை கொண்ட திருப் புல்லாங்குழலை உடையவனும்
ஸமஸ்த ஜகத்துக்கும் சகல காரணமானவனும் சகல மனுஷ நயன விஷயமாவதற்காக
சாது ரக்ஷணத்துக்கும் பூ பாரம் நீக்கவும் ஆயர் பிள்ளையாக திரு அவதரித்து அருளிய
கண்ணனின் கருணையைத் தொழுகிறேன் –
பதவீ மதவீ யஸீம் விமுக்தே
முக்தர்கள் -உபாயமே கருணையே -சித்த உபாயம் –
அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
ஆழி மழை –சர மழை போல் –எம்பெருமானே மேகம் இங்கே -நீருண்ட மேகம் போலே -உள்ளேயே புகுந்து -கிருஷ்ண மேகம்
கருணா வார்ஷூக –காலே காலே -சோபையன் தண்ட காரண்யம் -வனம் ஸ்ரீ மத் ஆனதே -சித்ர கூடம் பெற்ற ஸுபாக்யம்
திருவடிகளில் உள்ள சங்கு சக்ராதி ரேகைகளால் அலங்க்ருதமான தண்ட காரண்யம்
குணமும் அதற்கு ஆதாரமான விரக்தியும் என்று வேறே வேறே இல்லாமல்
கருணையே மநோ ஹராமான ரூபம் எடுத்து கண்ணன் ஆனதே
கருணை யம் கடலாகவே இவன் உள்ளான் –
அருணா தர சாபிலாஷ வம்ஸாம்
மூங்கில் -அதர அம்ருதம் பானம் பண்ண ஆசை கொண்டு -அசேதனங்களும் ஆசைப்படும் சிவந்த அதரம்-கீழே ராச க்ரீடை பேச
அத்தை அனுசந்தித்து சிவந்த -தாம்பூலம் பரிமாறி சிவந்த அதரம் -இத்தை ஆசைப்பட்ட தாம் புல்லாங்குழல் -பரஸ்பர பாகவத பிரபாவம்
சேஷிகளை சேஷிகள் உகக்க வேண்டுமே -தேசிகனும் ஆசை கொண்டார் இதில் –
கருணாம் காரண மாநுஷீம் பஜாமி –
பிரத்யக்ஷமாக சேவை சாதித்து -தரிசன சாமானாகாரம் -ஆன பின்பு கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கருணையும் கண்ணனும் ஒன்றே -பரம காருணிகன்-ஜகத் காரணமே மனுஷனாக வந்து -தன் கருணையால் மோக்ஷம்
ஆஸ்ரித ரக்ஷணமே அவதார பிரயோஜனமும் -சர்வ ரக்ஷகத்வம் -அகாரார்த்தம் -கருணையே மூர்த்தியாக அவதரித்து
ஸ்த்ரீ லிங்க பிரயோகம் -கருணை க்ஷமை -யுவா யுவதி -துல்யம் –
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் மட்டுமே அல்லால் ஸகல மனுஷ நயன விஷய தாங்கரனாக திருவவதரித்து
நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூரீகள் மரம் கொடி புல் பூண்டாய் இங்கு வர அவர்களை அனுபவிக்கும் படி செய்து அருள
பதினாறாமாம் ஆயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதத்தைப் பருக ஆசைப்பட்ட
புல்லாங்குழலில் மநோ ரதத்தை நிறைவேற்றி அருளி
உலகோரை எல்லாம் குணங்களாலும் அழகாலும் வசப்படுத்தி அவர்கள் துன்பத்தைப் போக்கி இன்பத்தை அளித்து அருளவே
கருணையே உருவானவன் -அன்றோ –
பஜாமி –
ராஸ க்ரீடை ஆடி களைத்த கண்ணனுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்கிறார் –தேசிகர் –
ஆளும் ஆளார்–ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -பின் செல்வார் மற்று இல்லை —
நாளும் நாளும் -கைங்கர்ய பிரார்த்தனை பராங்குச நாயகிக்கு
இங்கே தேசிகர் பெற்று மகிழ்கிறார் பஜாமி என்று
—————————————————–
கீழ் ஸ்லோகத்தில் சி கிருஷ்ணனை ஆஸ்ரயிக்கிறேன் என்றார்
ஆஸ்ரயணத்துக்குப் பிரயோஜனம் கண்ணனுடைய திருமேனி அழகை அனுபவிப்பது
அதை அவனே கொடுக்க வேண்டும் என்று அடுத்த மூன்று ஸ்லோகங்களாலே பிரார்த்திக்கிறார்
அதில் அடுத்த ஸ்லோகத்தால் அவனுடைய எழில் கொள் உருவம் எனது மனதில் திகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்
அநிமேஷ நிஷே வணீய மஷணோ அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே
கல ஹாயிதே குந்தளம் கலாபை கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே -10-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அஷணோ -இரண்டு கண்களுக்கும்
அநிமேஷ -இமை கொட்டாமல்
நிஷே வணீயம் –அனுபவிக்கத் தக்கதும்
அஜஹத் –நீங்காத
யவ்வன –யவ்வனத்தை யுடையதும்
கலாபை–மயில் தோகைகளோடு
கல ஹாயிதே –சண்டை இடுகின்ற
குந்தளம் –கேசங்களை யுடையதும்
கரண-இந்திரியங்களை
உன் மாதக-பிச்சேற்ற வல்ல
விப்ரமம்–விளையாட்டுக்களை யுடையதுமான
மஹஸ் -தேஜஸ்
மே ஸித்தே ஆவி ரஸ்து –என்னுடைய மனதில் தோன்ற வேண்டும் –
கண்களால் இமை கொட்டாமல் அனுபவிக்க ஏற்றவனும் -நித்ய யுவா குமாரன் ஆனவனும் –
இமைக்கும் பொழுது உண்டாகும் இழவு பொறுக்க ஒண்ணாதே
மயில் தோகைகளோடு போட்டியிடும் திருக் குழல் கற்றையை உடையவனும் இந்திரியங்களை
பித்துக் கொள்ளச் செய்யும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனுமான கண்ணனின் தேஜஸ்ஸூ –
பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ணன் அன்றோ
இப்படி அழகு வெள்ளமிடும் ஜோதிஸ்ஸூ – திரு வடிவம் என் உள்ளத்தில் என்றுமே அகலாமல் தோன்ற வேண்டும்
அநிமேஷ நிஷே வணீய மஷனோ-
கண்ணுக்கு சேவிக்க ஆசை மிக்கு -கண்ணாலே பருக -த்வரை மிக்கு -கண் கொட்டாமல் சேவிக்க -ஆசை கொண்டார் –
சாலோக்யம் சாரூப்பியம் சாயுஜ்யம் -நாம் ஆசைப் பட்டது போலே அவனும் நம்மைப் போலே –
அனுபவிக்க ஆசைப் பட்டு வந்தவன் அன்றோ கிருஷ்ணன் –
யாமளார் ஜூனர் யமுனை நதி அனுபவித்தார்கள் -நாம் இழப்பதோ-நித்ய ஸூரிகள் போல் ஸதா பஸ்யந்தியாய இருக்க வேண்டிய தேஜோ ரூபம்
அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே –
யுவா குமாரா அன்றோ -நித்ய யுவா -அனுபவிக்க இவரும் யுவதி யாக மாறி -மயங்கி –
கல ஹாயிதே குந்தளம் கலாபை
முன் உச்சி மயில் தோகை -நெற்றி மயிர் காந்தி -கலந்து -விஞ்சி -சேவை சாதிக்க -அழகில் ஈடுபட்டு
கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே
மயக்கும் தேஜஸ் -நீ சேவை சாதிக்க வேண்டும் -என் கரணங்கள் உன்மாதகம் அடைந்தன –
காற்றையும் கழியையும் கட்டி அழுத்த பராங்குச நாயகி போலே
விரஹத்தால் தவிக்க -உன் திரு மேனி சேவை ஒன்றாலே போக்க முடியும் –
ஆவிரஸ்து -கோபிகளுக்கு காட்டி அருளினால் போலே -என்கிறார் –
நீ என்னை அன்றி இல்லையே -சேஷ பூதன் கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
சேஷிக்கு அதிசயம் விளைக்கவே சேஷ பூதன் கைங்கர்யம் –
—————————————————-
இதில் கருணை பொழியும் திருக்கண்களால் அவன் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளப் பிரார்த்திக்கிறார்
அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை -அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம் அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை -11-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அநுயாயி –பின் தொடர்ந்து வருகிற
மநோஜ்ஞ –மனத்தைக் கவர்கிற
வம்ச நாளை -புல்லாங்குழலை யுடையவையும்
ஸ்பர்சித –கொடுக்கப்பட்ட
வல்லவீ –கோபிகளுக்கு
விமோஹை–மோஹத்தை யுடையவையும்
அநக ஸ்மித –தோஷமற்ற புன் சிரிப்பினால்
அபாங்கை–கடாக்ஷங்களால்
சீத ளை–குளிர்ச்சியாக இருப்பதையும்
அநு கம்பா சரித் -கருணையாகிய நதிக்கு
அம் புஜைர் -தாமரைகளாக இருப்பவையுமான
அசவ் -இவன்-சுட்டால் கண் முன்னே தோன்றி அருளியது தோன்றும்
மாம் அவது –என்னை ரக்ஷிக்கட்டும்–மாம் என்று எளிமையையும் விருப்பத்தையும் சொன்னபடி
இனிய திருக் குழலின் ஓசையைப் பின் தொடர்பவனும் இடைப்பெண்களுக்கு மயக்கம் தருபவனும்
கபடம் அற்ற புன்னகையால் குளிர்ந்து இருப்பவனும் கருணா நதியில் மலர்ந்த அரவிந்தம் போலே உள்ள
கடைக்கண் கடாக்ஷ வர்ஷத்தால் இந்தக் கண்ணன் அடியேனை ரக்ஷிக்கட்டும்
அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை
அழகான குழல் -மனஸ் -அறியும் -அவன் நினைவை அறிந்து -கடைக் கண் அனுசரித்து –
அந்த கோபி இடம் வேணு கானம் ஒலியும் செல்லுமாம்
ஊதும் அத் தீம் குழற்க்கே உய்யேன் -நம்மாழ்வார் —அது மொழிந்து –தூது செய் கண்கள்கொண்டு ஓன்று பேசி
பிரணய ரோஷம் போக்க –நீச பாஷாணங்கள் குழல் வழியே -பேசி —
அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
கண் பார்வை மயக்கும் -குளிர்ந்து -கவர்ந்து -கோ பறவைகள் மரங்கள் மான்களையும் மயக்கும் –
அவது-
கடாக்ஷம் என்னை காக்கட்டும் –
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம்
குற்றம் அற்ற ஸ்மிதம் -மந்தஹாசம் -வல்லப ஜன வல்லபன் -அசவ் மாம் -எதிரே நிற்கிறான் –
அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை —
தாமரை கண்கள் -கருணை யாகிய நதியில் தோன்ற அம்புஜம் அன்றோ -கம்பீர -இத்யாதி –
அபாங்கை –
கண் பார்வையை பின் செல்லுமாம் வேணு கானம்
வேணு கானம் -கேட்ப்பார்க்கு மோகம் உண்டாக்கும் –
மருண்டு மான் கண்கள் மேய்க்கை மறந்து –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே
வேணு கானம் இசைத்தோ கடாஷித்தோ அருளட்டும் நேராக சேவை சாதிக்கா விடில் -என்கிறார்
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து எங்கும் விடாரே –
இவன் என்ற நமது துன்பங்களை போக்கி அருள கருணையும்
தாபத்தைப் போக்க தண்ணளியும்
பாபங்களை அழிக்க தூய்மையும்
இதர விஷயத்தில் திரியும் நம்மை தன் பக்கம் இழுத்து வசப்படுத்த அழகும்
இவ்வாறு அனைத்திலும் தகுதி உள்ள அவன் ரஷ்ய வஸ்து வான அடியேனை ரஷித்து அருளட்டும் –
துர்வார தீவ்ர துரித ப்ரதி வாவதூகை ஒவ்தார்யவத்பி அநேக ஸ்மித தர்ச நீயை
தேஹஸ்ய தீஸ்வர தயா பரிதை அபாங்கை வாஸம் வி நாபி வதஸீவ மயி ப்ரஸாதம் –ஸ்ரீ தேவ நாயக பஞ்சகம்
ரக்ஷணத்தில் உத்ஸாஹம் உள்ளவையும் -அழகிய தாமரை போன்றவையும் -ஆனந்தத்தையும் வாசனையையும் பெருக்குமாவையும்
அன்பு ததும்பும் வார்த்தைகளை உட்க்கொண்டவையும் அமுத வர்ஷம் போன்றவையுமான உனது கடாக்ஷங்கள் என்னை நனைத்து விடுகின்றன –
விஸ்வ அபி ரக்ஷண விஹார க்ருதஷணைஸ்தே வைமா நிகாதிப விடம்பித முக்த பத்மை
ஆமோ தவாஹிபி அநாமய வாக்ய கர்பை ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை அபாங்கை –ஸ்ரீ ஸ்துதுயிலும்
பெரிய பிராட்டியாரின் கடாக்ஷங்களும் இவ்விதமே பெருமை உள்ளவையாய் இருக்கும்
அவற்றில் தயை வாத்சல்யம் ஸ்நேஹம் இனிமை தூய்மை ஆகிய குணங்கள் எல்லாம் நிரம்பி இருக்கின்றன
ஸாநுப்ராஸ பிரகடித தயை சந்த்ர வாத்சல்ய திக்தை அம்ப ஸ்நிக்தை அம்ருத லஹரீ லப்த ஸ ப்ரஹ்மசர்யை
கர்மே தாபத்ரய விரசிதே காட தப்தம் ஷணம் மாம் ஆகிஞ்சன்ய க்லபிதம் அனகை ஆர்த்ரியேதா கடாகஷை
கருணை ததும்பும் கண்களால் குளிர நோக்கி அடியேனைக் காத்து அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்
——————————————————–
கண்ணனுடைய அழகு கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு இனிமையும் தருவதனால்
அவனைப் பற்றிய எண்ணங்களே நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் –
முக்யமாகக் கடைசிக் காலத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
அத ராஹித சாரு வம்ச நாளா மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
ஹரி நீல சிலா விபங்க நீலா பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே-12-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அத ராஹித –அதரத்தில் -உதட்டினில் -வைக்கப்பட்ட
சாரு வம்ச நாளா –அழகிய வேய்ங்குழலைப் பற்றியவைகளும்
மகுட –திரு முடியில்
ஆலம்பி –தொங்கிக் கொண்டு இருக்கிற
மயூர பிஞ்ச மாலா–மயில் இறகுகளின் வரிசையைப் பற்றியவைகளும்
ஹரி நீல சிலா –இந்த்ர நீலக்கல்லின்
விபங்க –புதிய துண்டினுடையது போன்ற
நீலா –நீல நிறத்தைப் பற்றியவைகளுமான
பிரதிபா –எண்ணங்கள்
மம –என்னுடைய
அந்திம ப்ரயாணே–கடைசியாகப் புறப்படுகிற ஸமயத்தில்
சந்து-இருக்க வேண்டும் –
அழகிய திருப் புல்லாங்குழலை திரு அதரத்தில் வைத்து உள்ளவனாகவும் திரு முடியில் சரிந்து இருக்கும்
மயில் பீலியை உடையவனாகவும் இந்திர நீல மணி துண்டம் போலே -வேணு கோபாலனது
நீல நிர திவ்ய மங்கள விக்ரஹ ஸ்ம்ருதி எனது அந்திம காலத்திலும் இருக்க அருள் செய்வாய்
அத ராஹித சாரு வம்ச நாளா
நாரதர் பாடும் ஸ்லோகம் இது என்பர் -புத்திரர் லவகுசர் ஸ்ரீ ராமாயணம் அருளியது போல –
பேரன் நாரதர் பாடும் – இது
உதட்டில் பட்டு அதர அமிருதம் பெற்ற மூங்கில் போலே தனக்கும் பெற வேண்டும் –
ஸ்ரீ சங்கு ஆழ்வானும் அனுபவித்தது போலே -தம் புத்திக்கும் இது வேண்டும் என்கிறார் –
மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
கிரீடத்தில் மயில் தோகை சாத்தி கொண்டு -அழகுடன் சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்
ஹரி நீல சிலா விபங்க லீலா
இந்திரா நீல கல் வண்ணம் -இந்த சேவை நித்தியமாக இருக்க வேண்டும் -திரு முடி சேவித்து திரு மேனி அனுபவம் இதில் –
பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே
பகவத் த்யானம் மாறாமல் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாயமாக வேண்டாம் -பல ரூபம் தானே
அனவதிக அதிசய பிரியா -நித்ய கிங்கரோ பவது —
தாக சாந்திக்கு அதர ஸ்பர்சம் வேண்டும் -வேணு கானம் கரண மந்த்ரம் -கண்ட அம்சம் தானே நான் –
புல்லாங்குழல் உடன் சஜாதீயன் என்கிறார் –
எண்ணங்கள் பிரதிபா உன்னை பற்றியே இருக்க வேண்டும் –
நினைத்து அனுபவித்துக் கொண்டே இருக்க பிரார்த்திக்கார்
கண்ணனின் வாய் அமுதினை உண்ணும் புல்லாங்குழலும் சைதன்ய வஸ்துவே
ஆச்சார்யரது ஞானம் அதன் மேல் காதல் கொண்டு அதைத் தனக்கு விஷயமாகப் பெற விரும்புகிறது
அதற்கும் மேல் அவன் அணிந்து கொண்டு இருக்கும் கருங்கண் தோகை மயில் பீலி தனது ஞானத்தில் தோன்ற வேண்டும் என்கிறார்
தாமரை நாண் மலர் போன்ற திருக்கண்கள்
கற்பகக்கொடி போன்ற திருமூக்குக் கோலம்
திறள் பவளக் கொழும் துண்டம் போன்ற தொண்டை -வாய்
மதனன் கரும்புச் சிலை போன்ற திருப்புருவம்
சுடர் வெண் மீன் போன்ற தூய முறுவல்
மகரம் தழைக்கும் தளிர் போன்ற திருக்குண்டலக் காதுகள்
குளிர் வான் பிறை போன்ற திரு நெற்றி
கொழும் சோதி வட்டம் போன்ற கோளிழை வாண் முகம்
இந்த அழகுக்கு சிகரம் வைத்தது போல் மயில் தோகை செருகப்பட்ட திரு முகமே எனது ஞானத்துக்கு விஷயமாக வேண்டும் என்கிறார்
சங்கல்ப ஸூர்யோதத்தில் இந்த கோபால விம்சதியில் உள்ள ஐந்து ஸ்லோகங்களும் உண்டு
அவற்றுள் இதுவும் ஓன்று
நாரதர் வீணையை மீட்டிக்கொண்டு இந்த ஸ்லோகத்தை மதுரமாகப் பாடிக்கொண்டு பிரவேசிக்கிறார் அதில்
————————————————————–
சரீரத்தை விடும் போது கண்ணனுடைய எழில் உருவம் தோன்ற பிரார்த்தவர்
ஒரு காலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னது தப்பைச் சொன்னோம்
நான் ஆசைப்படுவதற்கு முன்பே கண்ணன் ஸூந்தரமான ரூபத்துடன் எப்போதுமே என் கண் முன்னே நின்று
தன்னைக் காணும்படி அருளுகிறார்
என்னே அவன் கருணை என்னே என் பாக்யம் என்று ஆச்சர்யப் படுகிறார் –
அகிலா நவலோக யாமி காலான் மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம் அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் -13-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
மஹிளா –உத்தம ஸ்திரீயான ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு
அதீன-அதீனமாய் இருக்கும்
புஜாந்த ரஸ்ய–திரு மார்பை யுடைய
யூன–யுவாவான கண்ணனுடைய
வ்ரஜங்கநாநாம் -பிருந்தா வனத்தில் உள்ள சிறுமியருடைய
அபிலாஷ –ஆசைக்கு
பதம் –இலக்காக இருப்பதும்
அபிலா பக்ரம–வர்ணிக்கப்படும் நிலைக்கு
தூரம் -அப்பால் பட்டதுமான
ஆபி ரூப்யம்–ஸுந்தர்யத்தை
அகிலான் காலான் –எல்லாக் காலங்களிலும்
அவ லோகயாமி –பார்க்கிறேன் –
ஸ்ரீ மஹா லஷ்மிக்கு கோயில் கட்டணமான-அவள் ஏக போகமாக அனுபவிக்கும் – திரு மார்பு –
யுவா குமாரா -கோபிமார்கள் பிராவண்யத்தை வர்த்திப்பவன் -திவ்ய சேர்த்தி ஸுந்தர்யம் வாசா மகோசரம் அன்றோ –
அழகனை சதா சாஷாத்காரித்து ஈடுபட்டு சேவித்துக் கொண்டு இருக்க அருள வேண்டும்
அகிலா நவலோக யாமி காலான்
எல்லா காலமும் -சதா தத் பாவம் –
அகிலான் காலம் அவலோகயாமி –
ஒவ் ஒரு நொடியும் உன்னையே நான் பார்க்க வேண்டும்
அகிலான் காலான் –
பன்மையில் –தைலதாரா -யோ நித்யம் அச்சுத பாதாம் புஜ யுக்ம ருக்ம -போலே –அவலோகயாமி நிகழ் காலம்
மாரீசனுக்கு ரா ஸ்ம்ருதி போலே இருக்க வேண்டும் –
அன்பினால் தரிசன சமானாகாரம் -அவனுக்கு பயத்தினால்
மஹிள அதீன புஜாந்த ரஸ்ய யூன
பிராட்டிக்கு அதீனமான திரு மார்பன் -ஸ்ரீ யபதித்தவம் சொல்லி -யுவா –யூன-ஸ்ரீ யா ஆலிங்கனம் செய்த திரு மார்பு
தத்வ சந்தனம் -ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே–ஸ்ரீ ரத்னம் -ஸ்ரீ கௌஸ்துபம் உள்ள திரு மார்பு அன்றோ –
பராதீனம் -பிரணத பரதந்த்ரன் அன்றோ நீயும் –
அரவிந்த பாவையும் தானும் உள்ளே புகுந்து -ஸ்தாவர பிரதிஷ்டையாக வந்து இருப்பானே –
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம்
கோபிகள் அனுபவிக்கும் அழகன் -கோபாலன் -பாவனையே நித்தியமாக இருக்கும் படி அருள வேணும்
அன்புக்கு பாத்திரமாக இருப்பானே -ஏகாந்த வல்லபன் -கோபிகள் அனுபவிக்கும் மிதுனம் -ஸுசீல்ய பரா காஷ்டை
பிராட்டி திரு ஆணை தன் திரு ஆணை -கொண்டு பிரார்த்திப்பார்கள் –
அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் –
அப்படிப்பட்ட அழகை நித்யமும் சேவிக்க ஆசைப்படுகிறார் -ஆபிரூப்யம் -லாவண்யம் –அச்சோ ஒருவர் அழகிய வா
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினார் -கரும்பு அன்னவனை
கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே –
நீல மேனி ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததவே
தேசிகர் உடன் சேர்ந்த பின்பு அழகு விஞ்சி -கோபிகள் ஆசைப்பட்டு விரும்பும் படி –
ஆசையினால் ஆவியை ஆகுலம் செய்யும் என்பார்கள் –
பூர்ண சம்ஸ்லேஷம் -அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
———————————————————————-
கீழ் புறக் கண்ணுக்கு நித்ய விஷயமாகக் காட்டி அருளினான் என்றார்
இதில் அவன் இவருடைய அகக் கண்ணுக்கும் விஷயமாகத் தானே தோன்றி அருளுகிறார் என்கிறார் –
ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ -லிகித கேந மமைஷ சில்பி நா
மத நாதுர வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா –14-யோகினி விருத்தம்
முக்த்த –அழகிய
சிகண்ட-மயில் தோகையை
மண்டை நோ-ஆபரணமாக உடையவனும்
மத ந–மன்மதனால்
ஆதுர–துன்புற்ற
வல்ல வாங்கநா-கோப ஸ்த்ரீகளுடைய
வதந–முகமாகிற
அம் போஜ-தாமரைக்கு
திவாகர-ஸூர்யன் போன்றவனுமான
ஏஷா –இந்த
யுவா –வாலிபனான கண்ணன்
கேந சில்பிநா –எந்த சில்பியினால்
மம ஹ்ருதி –என்னுடைய ஹ்ருதயத்தில்
லிகித -எழுதப்பட்டு இருக்கிறான்
அழகிய மயில் தோகையை சூடியவனும் -ப்ரணயத்தால் பீடிக்கப்பட்ட கோபிகளின் முகத் தாமரைக்கு ஸூர்யன் போன்றவனும்
இந்த யுவா குமாரன் அடியேன் திரு உள்ளத்தில் எந்த சிற்பியால் பிரதிஷ்ட்டிக்கப் பட்டானோ –
தானே அடியேனை இசைவித்து உள்ளம் புகுந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றால் போலே
ஹ்ருஷ்டனாக சேவை சாதிக்கின்றான்
ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ –
அழகிய -மயில் தோகை -அலங்காரம் கொண்டு–மயில் தோகை தான் படைத்த பயனைப் பெற்றது இவன் உடன் சம்பந்தித்ததும் – –
லிகித கேந மமைஷ சில்பி நா
சித்திரம் எழுதப் பட்டதே என் ஹிருதயத்தில் –என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
சஞ்சலம் ஹி மனஸ் –
அறிந்தேன் அவனை நானே –காசி தவள வாஹிந கங்கை- கா சிதள வாஹினி கங்கா -சாடு
ககா கிம் எம்பெருமானை குறிக்கும் -கேன -கண்ணனே தன்னைத் தானே எழுதினான் -பாவனா -எண்ணம் ஆகிய சுவர்
அகண்ட ப்ரஹ்மாண்ட -பிரதம தர சில்பி -மயனோ த்வஷ்டாவோ இல்லை –பத்மா சஹாயா –தத் இங்கித பராதீனன் –
மம ஏஷ சில்பினா -மனசான கண்ணால் சித்திரம் பார்த்தார் –
யோகிகளுக்கு பிரத்யக்ஷம் ஆவான் -தாம் ஆசைப்பட்ட படியே -நித்யம் சேவிக்க –
லிகித கேந மமைஷ சில்பி நா-ஓவியத்து எழுத ஒண்ணாத ரூபத்தை அன்றோ அடியேனுடைய ஹ்ருதயத்தில் சித்தரித்து இருக்கிறான்
எழுத முடியாத ஒன்றை சஞ்சலமான அடியேன் ஹ்ருதயத்தில் எழுத ஸர்வ ஸக்தனாக வேண்டுமே
கேந -பகவானால் தான் முடியும் என்றுமாம்
மத நாதுர வல்ல வாங்கநா
ஆசை கொண்ட கோபிகள் -முகம் தாமரை -மலர –
வத நாம் போஜ திவாகரோ யுவா
நித்ய யுவா -திவாகரன் -அன்றோ இவன் –
இந்த சித்திரம் தான் -வல்லபி ஜன வல்லபன் கோபீ நாதன் -கண்டார் –
மானசீக பாவம் -கோபிகள் ஆசையும் தெரியும் படி அன்றோ கண்டார்
முக விகாசகங்கள் -உதய இளம் சூரியன் -கடாக்ஷங்கள் பட்டு மலரும் முகத் தாமரைகள் –
சமுதாயம் முழுவதையும் கண்டார் –
மயஸ் த்வஷ்டா அந்யோவா விபுல மஹிமா விஸ்வஸ்ருகபி
ஸ்வ சக்த்யேதம் சித்ரம் கிமபி நவி தாதும் க்ருதமுக
அகண்ட ப்ரஹ்மாண்ட ப்ரதம தர சில்பி ஸ பகவான்
ஸ்வயம் பத்மாஜாதி வயலிகதிஹ சில்பம் ஸ்வ விஷயம் -சங்கல்ப ஸூர்யோதயம்
மயனோ விஸ்வ கர்மாவோ அல்லது ப்ரம்மாவோ தனது சக்தியால் மிகவும் விசித்திரமான
இந்தச் சித்திரத்தை எழுத சக்தி அற்றவர்கள்
ஆகவே சகல ப்ரஹ்மாண்டங்களையும் ஸ்ருஷ்ட்டித்த முதல் சில்பியும் ஸ்ரீ யப்பதியுமான
ஸாஷாத் பகவானே தன் விஷயமான இந்தச் சித்தரத்தை எழுதினான் –
அப்படி நின்ற அமலன் படி எல்லாம்
இப்படி எம் உள்ளத்து எழுதினார் எப்படியும்
ஓரார் ஸ்ருதி ஒளியால் இருள் நீக்கும்
தாராபதி அனையார் தாம் –அம்ருத ரஞ்சனி–ரஹஸ்ய மாத்ருகை – -12-ஆச்சார்யர்கள் எழுதி அருளினார்கள் பொதுவாக சொல்லி மேல்
நாத ஸ ஏஷ யமினாம் நகரஸ்மி ஜாலை அந்தர் நிலீதம பநீய தமோ மதீயம்
விஞ்ஞான சித்ரம் அநகம் லிகதீவ சித்தே வ்யாக்யான கேலி ரஸிகேந கராம்புஜே –யதிராஜ சப்ததியில் யதிராஜரே செய்து அருளினமையை அருளிச் செய்கிறார்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்பதே சித்தத்தில் எழுதப்படும் ஞானம் –
21 ஸ்லோகங்கள் கொண்ட இந்த விம்சதியில் ஐந்து ஸ்லோகங்களில் யவ்வன ரூப அனுபவம்
கோபிகள் போலவே பரமபக்தி நிஷ்டையில் அருளிச் செய்கிறார்
———————————————————
அழகே வடிவு கொண்ட கண்ணனுடைய ஸூந்தர ரூபம் கண் முன்னும் உள்ளத்துள்ளும் தோன்றவே
அதன் அழகுக்கும் நீர்மைக்கும் தோற்று அதற்குத் தலை வணங்கி அஞ்சலி செய்கிறார்
மஹஸே மஹிதாய மௌலி நா விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
கலயாமி விமுக்த்த வல்லவீ வலயா பாஷித மஞ்ஜு வேணவே -15-யோகினி
விமுக்த்த வல்லவீ வலயா–அழகிய கோபியர்களின் வளைகளால்
ஆபாஷித–பேசும்படி செய்யப்பட
மஞ்ஜு வேணவே–இனிமையான புல்லாங்குழலை யுடையதும்
அஞ்சன த்விஷே–மையின் காந்தியை யுடையதும்
மஹஸே மஹிதாய–பூஜிக்கப் படுகிறதுமான தேஜஸ்ஸுக்கு -கண்ணனுக்கு
விநதேந மௌலிநா அஞ்சலி –வணங்கிய தலையுடன் கை கூப்புதலைச்
கலயாமி -செய்கிறேன்
மிகவும் போற்றப்படுபவனும் -மை போன்ற ஒளி உடையவனும் –
மிக அழகிய கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியுடன் கூடினவனும்
அழகிய திருப் புல்லாங்குழலை உடையவனும் –
இந்த த்வனிக்குத் தக்க தாளம் கோபிகள் கை வளையல்களை ஆட்டி என்றவாறு –
தேஜோ மய ரூபமான கண்ணனை ப்ரணாமத்துடன் அஞ்சலி செய்கிறேன்
மஹஸே மஹிதாய மௌலி நா
ஒளி கொஞ்சம் -ஜோதிஸ்-இவர் ஹிருதயத்தில் -திவ்ய மங்கள விக்ரஹ சேவை –
ராச க்ரீடை நடக்கும் அரங்கமே ஸ்வாமி திரு உள்ளம்
கீழ் 10 வது ஸ்லோகத்தில் மஹஸ் ஆவி ரஸ்து சித்தே -என்று தேஜஸ்ஸு ஆவிர்பவிக்கப் பிரார்த்தித்தார்
சொன்ன வண்ணம் செய்யும் எம்பெருமானும் அவ்வாறே செய்து அருள
இவனது நீர்மையைக் கண்ட உலகமே அவனைப் பூஜித்துக் கொண்டாடுகிறது
அதையே மஹிதாய -பதத்தால் அருளிச் செய்கிறார்
விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
மைப்படி மேனி -தேஜஸ் மிக்கு
கலயாமி விமுக்த்த வல்லவீ
ராச க்ரீடை -கோபிகள் தாளம் -கை வளைகள் குலுங்க -கானத்துக்கு ஏற்ற -கால் ஆட கொலுசு சதங்கை ஒலிக்க-
இதற்கு தக்க வேணு கானம் பண்ணுகிறான் –
குசலப் பிரஸ்னம் -மூங்கில் பெற்ற பாக்யம் என்ன -தாமோதரன் அதர மிருத பானம் பண்ண –
பொறாமை உடன் பேச -தாயாதி போலே -பங்காளிகள் –
வலயா பாஷித மஞ்ஜு வேணவே
வேணு கானம் பண்ணும் சேவை சாதிக்க —
ராச க்ரீடை பங்கு கொள்ள அழைப்பு விடுவதே வேணு கானம் வழியாக தானே
வலயா பாஷிதம் –
மத்தியஸ்தர் வேலை– வளைகள் ஒலி–கோப ஸ்திரீகளுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்து அமிருத பானம் பெற –
நம் அஞ்சலி-அம் ஜலதீதீ – அவனை உருக்கி நம்மையே வணங்கச் செய்து விடுமே
நாம் வணங்கத் தாம் வணங்கா நிற்பவர் வந்தார் –திருச்சின்ன மாலை
கை வளைகள் ஒலிப்ப -கோபியர் புடை சூழ நின்று குழலூதும் மைப்படி
மேனியனான கண்ணனுடைய அழகுக்குத் தோற்றுத் தலை வணங்கி அஞ்சலி செய்கிறார்
————————————————————-
கோபிகளின் வளைகளின் ஒலிக்கும்
கண்ணனுடைய குழலுக்கும்
பல்லாண்டு பாடுகிறார்
ஜயதி லலித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம் –
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ
அதர மணி ஸூதாயா மம்சவான் வம்ச நால-16-மாலினி விருத்தம்
வல்லவீநாம் -ஆயர் சிறுமியர்களுடைய
சிதில வலய சிஞ்ஞா –நழுவுகிற வளைகளின் ஒலியால்
லலித வ்ருத்திம் –அழகிய கதியை
சிஷிதோ –கற்பிக்கப் பட்டு இருப்பதும்
அகில புவன ரஷா –எல்லா உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு
சீதளைர் ஹஸ்த தாளை-குளிர்ந்த கைத் தாளங்களினால்
கோப வேஷஸ்ய விஷ்ணோ –இடைச் சிறுவன் வேஷத்தில் வந்த விஷ்ணுவினுடைய
அதர மணி ஸூதாயாம் –அழகிய அதரத்தின் அம்ருதத்தில்
அம்சவான் வம்ச நால– பங்கு உள்ளதுமான புல்லாங்குழல்
ஜயதி-ஐயத்துடன் விளங்குகிறது –
கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியோடு-குளிர்ந்த கையால் போடும் தாளங்களால்-லளிதம்-என்ற நடனம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு கோபி ஒரு கண்ணன் -ஒரு கோபி என்று குரவைக் கூத்து ராஸக்ரீடை ஆடி –
ஸமஸ்த லோக ரக்ஷணார்த்தமாக ஆயர் குலத்தினில்-கோவலனாய் கோவலரரோடு – வந்து பிறந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவுடைய திருப் பவள அதர ரசத்தில் ஆழ்ந்து அனுபவிக்கும் திருப் புல்லாங்குழல்
மிக பெருமை பெற்று விளங்க -அதற்கு மங்களா சாசனம் -இந்த சேர்த்தி பல்லாண்டு வாழியே -என்றபடி –
ஜயதி லலித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம்
சிஷை பண்ணும் -வளை ஓசை –வேணுக்கு-லளித்த வ்ருத்தி -அபிநயம் -நாட்டியம் –
புருவ நெறிப்பு-ஸூ குமாரமாக -பரம மோஹனம்
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
சிதிலமான வளை ஓசை -குளிர்ந்த -கண்ணாடி வளைகள் -தாளம் –
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ –
கோப வேஷமே ரஷார்த்தத்துக்கு தானே -கோ பூமி -அரசன் -ஆளும் பொறுப்பும் உண்டே —
விஷ்ணு அன்றோ -அகில புவன ஜென்ம –மங்கள ஸ்லோகம் அடியாக –
அதர மணி ஸூ தாயா மம்சவான் வம்ச நால
ஹஸ்த ஸ்பர்சம் பட்டு மூங்கில் பிரகாசிக்க -ஸ்ரீ தேவிக்கு கிடைக்கும் அதர அமிருதம் -பெற்றதே –
பவளம் -சிவந்த அழகிய திரு அதர அமிர்தம் -குழலுக்கு ஜெயந்தி -பாடுகிறார் –
ஜிதந்தே -என்கிறார் -வேணுக்கு –ராச க்ரீடைக்கு இதுவே முக்கியம் –
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேருந்து வாச நரும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்க்கும்
கண்ணன் வருவதற்கு ஓசைப்படுத்த -அவனும் வந்து வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாவானே
இங்கே எதிரே உள்ள கண்ணனுக்கு தாளத்தால் லலித வ்ருத்தியைக் கற்ப்பிக்கிறார்கள்
அவன் அத்தைத் தனது குழலில் இட்டு ஊதுகிறான்
திரு அதரமாகிற மணிச் செப்பில் இருக்கும் மதத்தில் பங்கு பெற்று புல்லாங்குழல் திகழ்கிறது
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே -போல் இங்கும்
அழகிய அதரத்தில் வைத்து இசையைப் பரப்பி உலகங்களை ரஷித்துக் கொண்டு ஐயத்துடன் விளங்குகிறது-
கண்ணனும் இடைப் பெண்களும் ராசக் க்ரீடையில் ஈடுபடுகின்றனர் .
அத்தனை கோபிகளுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு திருமேனிகளை படைத்துக் கொள்கிறான் கண்ணன்.
ஒரு கோபியும் ஒரு கண்ணனுமாக நின்று ராசக்கிரீடை புரிகின்றனர் .
இடைப் பெண்கள் தங்கள் கைகளில் வளை குலுங்க தாளம் போடுகின்றனர்
அப்போது வளைகள் ஒலிக்கின்றன. இந்த ஒலி அவர்கள் போடும் தாள ஓலி யோடு கலந்து மிக இனியதாகின்றது.
இவர்கள் போடும் கைத் தாளங்கள் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்திரத்தில் உள்ள லளிதம் என்னும் முறையைக் கற்பிக்கின்றது. …)
தத3க்3ர ஹஸ்த க்3ரஹணாத்திந6நாம் ஸ ஸவ்யேதா த3க்ஷிணதஸ்ச திஷ்டந் ப3பா4ர
வித்4யுத் வ்யவதா4ந பா4ஜாம் வாத்யாஜுஷாம் வாரிமுசாம் அபி4க்2யாம் -ஸ்ரீ யாதவாப்யுதயம்–8- சர்க்கம்-83-
திருக் கரத்தின் முனை பற்றிச் சீர் நடனம் புrந்திடவே விருப்பமுடை ஆய்ச்சியரை வலம் வந்தான்
அவர்களது இரு மருங்கும் உருவம் பல எடுத்தனனே
கண்ணன் தான் கரு முகில்கள் மின்னல்களுக் கிடைப்படுதல் ஒத்ததுவே !
தன்னுைடய திருக் கை முனையைப் பிடித்து ஆட ஆசைப்பட்ட அந்த ஸ்த்ரீகளுக்கு இரு பக்கத்திலும் தான்
பல ரூபமாய் நின்று மண்டலாகாரமாக அவர் களோடு சுற்றுகின்றானாய், இடையிடை
மின்னல்கள் பொருந்தி சுழல் காற்றில் அகப்பட்ட மேகங்கள் போல் விளங்கினான்.
தாவ தேவ க்ருத மண்டநே கலித கஞ்சு லீக குச மண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அதி பரி மண்டலே
அந்தரா ஸகல ஸூ ந்தரீ யுகல மிந்திரா ரமண சஞ்சரன்
மஞ் ஜுலாம் தத நு ராஸ கேலி மயி கஞ்ஜ நாப சமு பாததா –-(நாராயணீயம் 69.2)
அப்போதே மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தங்களை அணிகலன்களால்
அலங்கரித்துக் கொண்டு கோபியர் உங்களைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள்
தாங்களும் அப் பெண்களின் இடையே -இரு கோபியர்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ணன் –
இரு கிருஷ்ணருக்கு நடுவில் ஒரு கோபிகை -என்னும் படி நின்று கொண்டு
நர்த்தனம் செய்து கொண்டு ராஸ க்ரீடை செய்ய ஆரம்பித்தீர்கள் –
——————————————————
ஆயர் சிறுவன் வேஷம் தனது கண் முன்னே நின்று அனுபவிப்பிக்க அதன் அழகை வர்ணிக்கிறார் –
சித்ரா கல்ப ஸ்ரவஸி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
குஞ்ஞா பத்தா முரசி லலிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
கோப ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ கோ அபி கௌமார ஹாரீ -17-மந்தாக்ராந்தா விருத்தம்
ஸ்ரவஸி–காதில்
லாங்கலீ -லங்காலி என்னும் வெண்மையான புஷ்பத்தை
கர்ண பூரம் -காதணியாக
கலயன் –பூண்டு கொண்டு இருப்பவனும்
பந்து ஜீவம்=பந்து ஜீவன் என்னும் புஷ்பத்தை -கையிலே
ததாந–தரித்துக் கொண்டு இருப்பவனும்
உரசி –மார்பில்
குஞ்ஞா பத்தாம் –குன்றி மணிகளைக் கொண்டு புணையப்பட்ட
லலிதாம்-அழகு மிக்க
ஹார யஷ்டிம்—சீரிய ஹாரத்தை
தாரயன்-அணிந்து கொண்டு இருப்பவனும்
பர்ஹ–மயில் தோகையாகிற
உத் தம்ச –தலை அணியுடன்
ஸ்புரித -பிரகாசிக்கிற
சிகுரோ -கேசங்களை யுடையவனும்-சிகுரே –ஏழாம் வேற்றுமையுடன் பாடபேதம்
இவ்வாறு
சித்ர ஆ கல்ப -விசித்திரமான ஆபரணங்களை யுடையவனும்
கோப ஸ்த்ரீணாம் –கோபிகைளுடைய
கௌமார ஹாரீ–இளமையைக் கொள்ளை கொள்பவனும்
கோ அபி-ஒப்பற்றவனுமான
ஜயதி கிதவ -ஒரு கள்வன் எழில் மிகுந்து விளங்குகிறான்
திருக் காதில்-லங்காலீ-என்னும் தென்னம் பாளைப் பூவை ஆபரணமாக சாத்திக் கொண்டு –
திருக் குழல் கற்றையில் மயில் பீலியையும் சூடி– பந்து ஜீவம் என்னும் செம்பருத்திப் பூவையும் அணிந்து
திரு மார்பிலே குந்துமணி கோக்கப் பெற்ற அழகிய ஹார மாலை அணிந்து
இவ்வாறு பல பல ஆபரணங்களை அழகு கொடுத்து கோபிமார்களை கவர்பவன் -விசித்ரன் –
விஷமக் காரக் குறும்பனான கண்ணன் -வாழ்க
சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
காது அலங்காரம் –தென்னம் பாளை பூ –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
மயில் பீலி தலைக்கு அலங்காரம் –
சிவந்த பூவை செம்பரத்தம் பூவை கையில் கட்டி -பூ செண்டு தங்கி
குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
குந்துமணி -சிவந்து -மாலை மார்பில் சாத்திக் கொண்டு -வனமாலை விட ப்ரீதியுடன் அணிந்து
குறும்புக்கார கண்ணன் வேஷம்
கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ
யவ்வனம் -கவரும் படி வேஷம் –பும்ஸாம் சித்த த்ருஷ்ட்டி அபஹாரினாம்–யாவர் ஆற்ற வல்லார் ஒருங்கே கண்டால்-
அழகன் -எப்படி இருந்தாலும் அழகு தானே -தீமை செய்யும் சிரீதரன்–
குறும்பு வேஷம் காட்டி என்னையும் வசீகரித்து தனக்கு ஆக்கிக் கொள்ளட்டுமே
கோப ஸ்த்ரீணாம் — கௌமார ஹாரீ–என்று கொண்டு தனது அழகால் கோப ஸ்த்ரீகள் இளமையையும் மனத்தையும் அபகரிக்கிறான் என்றுமாம்-சிதவ–உள்ளம் கவர் கள்வன் அன்றோ
யேந ஸ்யாமம் வபுரதி தராம் காந்திம் ஆபத் ஸ்யதே தே
பர்ஹேணேவ ஸ்புரித ருசிநா கோப வேஷஸ்ய விஷ்ணோ –மேக சந்தேசம் காளிதாசன் இதே போன்ற பத பிரயோகம்
ஆண்டாள் சூடிக்களைந்த மாலையைத் தலை மேல் தரித்துக் கொண்டு வைஜயந்தி வனமாலை கீழே இருப்பதை
கோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தி -என்று ஸ்ரீ கோதா ஸ்துதியில் அருளிச் செய்கிறார்
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலி னூடே
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே –கலியன்
பர்ஹா பீடம் நட வர வபு கர்ணயோ கர்ணிகாரம்
பிப்ரத் வாஸா கநக கபிசம் வைஜயந்தீம் ஸ மாலாம்
ரந்த்ரான் வேணோ அதர ஸூதயா பூரயன் கோப ப்ருந்தை
ப்ருந்தாரண்யம் ஸ்வ பத ரமணம் ப்ராவிசத் கீதகீர்த்தி –ஸ்ரீ ஸூ காரின் ஸ்ரீ வேணு கீதம்
ஸ்ரீ கிருஷ்ணன் சிறந்த நடிகன் போல் திகழ்கிறான்
தலையில் மயில் தோகை –காதுகளில் கர்ணிகார புஷ்பம் -திருவரையில் பீதாம்பரம் -திரு மார்பில் வைஜயந்தி என்னும் வனமாலை –
கோபர்கள் அவனுடைய குணங்களை கானம் செய்ய தனது அதர அம்ருதத்தினாலே புல்லாங்குழலின் துவாரங்களை நிரப்பிக் கொண்டு
தனது திருவடிகளின் ஸ்பர்சத்தால் மகிழ்ச்சி அடைகிற பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பிரவேசித்தான் –
சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சம் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலி பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் பாசுரத்தை அடி ஒற்றியே இந்த ஸ்லோகம்
——————————————————————
இதில் தேவி என்கிற கௌரவ சொல்லால் குறிப்பிடப்படும் ஒரு காபியுடன் இணைந்து நின்று ஸேவை சாதிக்க அதை போற்றுகிறார்–
லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு –
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க -18-மந்தாக்ராந்தா விருத்தம்
தன்யாம்–பாக்யம் செய்த
லீலா யஷ்டிம் –அழகிய கழியை
தஷிணே –வலது
கரகிஸலயே –தளிர் போன்ற கையில்
ந்யஸ்ய –வைத்துக் கொண்டு
தேவ்யா–ஒரு கோப ஸ்திரீ யின்
புளக ருசிரே–மெய் சிலிர்ப்பினால் அழகான
அம்சே –தோளில்
சந்நிதிஷ்ட –வைக்கப்பட்ட
அந்நிய பாஹு–மற்ற ஒரு கையை யுடையவனும்
மேகலா–ஒட்டியாணத்தில்
தத்த–செருகப்பட்ட
வேணு -புல்லாங்குழலை யுடையவனும்
குஞ்ஞா பீட–குன்றி மணி மாலையால்
ஸ்புரித –ப்ரகாசிக்கிற
கிகுரோ–கேசங்களை யுடையவனும்
மேக ஸ்யாம –நீருண்ட மேகம் போல் ஸ்யாமள வர்ணம் உள்ளவனான
கோப கன்யா புஜங்க –கோப கன்னியருடைய காதலனான கண்ணன்
லலிதம் ஜயதி -மிக அழகாக வெற்றியுடன் விளங்குகிறான்
வலது திருக் கரத்தில் பாக்யம் செய்த லீலா ஊன்று கோலைப் பிடித்தவனும்
நப்பின்னைப் பிராட்டியின் மயிர்க் கூச்சு எறிந்த திருத்த தோள்களில் இடது திருக் கையை வைத்தவனும்
அழகனும் திரு யரை நாணில் திருக் குழலைப் பொருத்தமாக செருகியவனும்
குன்றிமணி மாலையோடு விளங்கும் திருக் குழல் கற்றையை உடையவனும்
கோபிமார்களிடம் அதி வ்யாமோஹம் கொண்டவனும்
நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனுமான கண்ணனுக்கு பல்லாண்டு
லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
வலது கையில் விளையாட்டு குச்சி -நீருண்ட மேகம் நின்ற திருக் கோலம் -இளம் தளிர் போன்ற
திருக் கைகளில் கரடு முரடான குச்சி
பெரும் பாக்யம் அன்றோ இந்த குச்சிக்கு -இயம் சீதா -சீதா கையைப் பிடித்த கை யன்றோ பிடித்தது –
கோபிகளால் வேண்டப்படும் கை -அக்ரூரர் மாருதி பரதர் போன்றவரை அணைத்த கை -என்ன பாக்யம் –
அணி மிகு தாமரைக் கையை அந்தோ அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் -என்று
கோபிகள் எல்லாம் திருக்கையின் ஸ்பர்சத்துக்கு பிரார்த்தித்து இருக்க இது செய்த பாக்யம் தான் என்னே –
லீலா யஷ்டிம்–இது கொண்டு பசுக்களை அடித்து அறியாதவன் -அவை இவன் திரு உள்ளபடியே நடப்பவை அன்றோ
கர சிசலயே–திருக்கையின் மார்த்தவத்துக்கு இந்த கோலே மலை போல் இருக்குமே
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
நப்பின்னை பிராட்டி திருத் தோள்களில் -தழுவி இறுக –சந்நிவிஷ்ட –சீதா பிராட்டிக்கு அஸி தேக்ஷிணா போலே
நப்பின்னை பிராட்டிக்கு திருத் தோள்கள் அன்றோ -துஷ்கரம் ராமா -என்றாரே திருவடி –
வைதிக வேஷம் சீதா பிராட்டிக்கு வன்னிய வேஷம் நப்பின்னைக்கு –இவளுக்காக அன்றோ கோபால வேஷம் –
தேவ்யா–நப்பின்னை -சாஷாத் ராதா தேவியே இவள்
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு
நீல மேக ஸ்யாமளன் –இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்ட கரு முகிலே ஒப்பர் வண்ணம் என்கிறபடியே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
ஒட்டியாணம் -மேகலை -வேணு சொருகி
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க
திரு முடியில் குந்து மணி மாலை அலங்க்ருதம் -கறுப்பும் சிவப்பும் பரிபாகம் –
கோபி கன்யிகளுக்கு ஆசை விஞ்சி -இருக்கும் படியான கோப வேஷம் –
லலிதா ஜெயந்தி –
ஸூந்தரன் அழகன் -புஜங்க சயனம் பள்ளி கொள்பவன் புஜங்கத்துடன் இருப்பானே
ஜயதி–அந்யோன்ய ஸ்பர்சத்தால் புகர் பெற்று நிற்கும் அந்த திவ்ய மிதுனத்துக்குப் பல்லாண்டு பாடுகிறார்
———————————————————
இதில் கண்ணனுடைய ஜலக்ரீடையை தத்ரூபமாக அனுபவித்து அந்த லீலைக்குப் பல்லாண்டு பாடுகிறார்
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாளிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-19-மந்தாக்ராந்தா விருத்தம்
பிரத்யா லீட ஸ்திதிம் –இடது காலை மண்டியிட்டு வலது காலை மடித்து ஊன்றி நிற்கும் நிலையான- பிரத்யா லீட-நிலையில்
அதிகதாம் –அமர்ந்து இருப்பவளும்
பஸ்ஸாத் –பின் பக்கத்தில் இருந்து
ப்ராப்த –அடையப் பட்ட
காட–இறுக்கிய நாயகனுடைய
அங்க பாளிம்-அணைப்பை யுடையவளும்
ஈஷத் –கொஞ்சம்
மிலித –மூடப்பட்ட
நயனாம் –கண்களை யுடையவளுமான
ப்ரேயஸீம் ப்ரேஷமாணா–காதலியைப் பார்த்துக் கொண்டு இருப்பவனும்
பஸ்திரா யந்த்ர –பீச்சாங்குழலில்
ப்ரணிஹித –வைக்கப்பட்ட
கரோ -கையை யுடையவனும்
வாரி கிரீடா –ஜலக்ரீடையால் நனைந்து
நிபிட –சரீரத்தோடு ஒட்டிக் கொண்டு இருக்கிற
வசநோ –வஸ்திரத்தை யுடையவனும்
வல்லவீ வல்லபோ –கோபிகளின் ப்ராண நாதனும்
பக்த ஜீவாது –அடியார்களுக்கு உயிர் போன்றவனுமான -பத்தராவியுமான -கண்ணன்-பக்தர்களையே தனக்கு உயிராகக் கொண்டவன்
ந அவ்யாத் —-நம்மை ரக்ஷித்து அருளட்டும்
பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால்
கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பீச்சாம் குழலில் நீரை வைத்து -அடிக்க -தயாராக இருக்க -பின் சென்று இறுக தழுவ
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
திரும்பி பார்க்க -இரு கண்களும் இணைய –ஈஷமானா ப்ரேஷமானா கூரிய பார்வை –
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
அழுத்தி பிடித்து -துருத்தி வைத்து நீரை பாய்ச்ச –
கோபியை அணைத்து -தண்ணீரும் அடிக்க –மித்யா கோபன் -அகில புவன ராஷா கோப வேஷம் –
சாஷாத் பர ப்ரஹ்மம் -சதுர் புஜம்
பக்த ஜீவாது-கலந்து பழகி தரிக்க -ஆத்மாவை மே மதம் ஞானி அவன் மதம் -என்றுமாம் –
தன்னை அந்தராத்மா என்று நினைப்பார்க்கு தானும் அந்தராத்மா –
ஆத்மாத்மீயங்கள் சமர்ப்பித்தார்க்கு தானும் சமர்ப்பிப்பவன் அன்றோ இவன் –
தேவர்கள் இவன் சொல்லிற்றைச் செய்வார்கள் இவனும் அவர்கள் சொல்லிற்றைச் செய்வான் –
கிம் கார்யம் மம சீதையா என்பவன் அன்றோ –
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந
ஹிருதயத்தில் இப்படி சேவை சாதிக்க -இரண்டும் தலையும் வாழும் படி கோபிகள் உடன் கலந்து போலே கலக்க வேணும்
எங்களை காக்கட்டும் -சம்பந்திகளாக நம்மையும் சேர்த்து கொள்கிறார்
—————————————————–
வஸ்த்ர அபஹரண லீலையை அனுபவிக்கிறார்–
வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம் –
லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
சவ்ரீடா பிஸ்ததநு வசநே தாபிரப் யர்த்தமாநே –
காமீ கஸ்சித் கர கமலயோர் அஞ்சலிம் யாசமான -20-மந்தாக்ராந்தா விருத்தம்
தி நிகர ஸூ தா –ஸூரியனின் புத்ரியான யமுனையின்
சந்நிதவ்–கண் முன்பு
வல்ல வீ நாம் —ஆயர் சிறுமியர்களின்
வாசோ –ஆடையை
ஹ்ருத்வா –அபஹரித்து
லீலாஸ் மேரோ –வேடிக்கையாக மென் முறுவல் பூத்தவனாய்
லலிதா மாஸ்தித குந்த சாகாம்-அழகிய குருந்த மரத்தின் கிளையில் ஏறி வீற்று இருக்கும் கண்ணன்
ஜயதி –ஐயத்துடன் விளங்குகிறான்
ததநு–அதற்குப் பிறகு
ச வ்ரீடா பிஸ் –வெட்கமுற்று இருக்கும்
வசநே தாபிர் –அந்தப்பெண்களால் ஆடை
அப் யர்த்தமாநே -வேண்டப்பட்ட போது
கர கமலயோர்–தாமரை போன்ற இரண்டு கைகளையும் சேர்த்து
அஞ்சலிம் யாசமான–அஞ்சலி செய்யும்படி வேண்டிக் கொள்கிறான் –
ஸூர்ய புத்ரியான யமுனையின் கரையில் கோபிமார்களின் துகில்களை கவர்ந்து
அழகிய குருக்கத்தி மரக் கிளையில் அமர்ந்து -வெட்க்கிய கோபிமார் ஆடையைத் தரும்படி வேண்டிய போது
ஆடை இல்லாமல் நீராடிய பாபத்துக்கு பிராயச்சித்தமாக –
தாமரை போன்ற இரு கைகளாலும் அஞ்சலி செய்ய வேண்டியவனும்
விளையாட்டாய் ஸ்மிதம் பண்ணி அருளும் ஆஸ்ரித வ்யாமோஹன் பல்லாண்டு வாழ்க
வஸ்திரங்கள் அபகரித்ததை காண ஆசைப்படுகிறார் –
வாசோ
பன்மை -ஜலக்ரீடை -சரீரம் அபஹரித்து முக்தி –
பிராகிருதம் நீக்கி –
விரஜை-அங்கு தூய யமுனை இங்கு -ஞான யஜ்ஜம் -கோபால விம்சதி அறிதல் -அனுசந்தானம் –
அஞ்சலிம்-கெஞ்சி கேட்க்கிறான் இவன் -வஸ்திரம் அவர்கள் கேட்க -இரண்டுமே தன் மானம் காக்க –
நந்த கோபிகளை–பக்தி யோகம் வளர்க்க அவதரித்து -ரிஷிகள் கோபிகள் –
பரமாத்வா இடம் பக்தியும் இதர விஷயத்தில் விரக்தியும் வேண்டுமே
பர ப்ரஹ்மம் இவனே அறிவார்கள் -நந்த கோபன் பிள்ளை -பரத்வம் மறந்தாலும் பரத்வம் பீறிட்டு காட்டும்
சர்வ சாக்ஷி -சர்வ அந்தர்யாமி -கோபால வீக்ஷணம் சம்ச்லேஷம் ஆசைப் பட்டு இருப்பீர்கள் –
சர்வ சரீரி -ஸூ சரீர பரிஷுவங்காத்-
தோஷம் இல்லையே -ப்ரஹ்மசர்யம் போகாது –பரிஷத் -அபாண்டவ அஸ்திரம் -ப்ரதிஜ்ஜை –
நாம் -லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
லீலைகளை எல்லாம் காட்டி அருளினான் தேசிகருக்கு-நாயகி பாவம் —
அஞ்ஞானமாகிற ஆவரணத்தைக் கழற்றி இரு கைகளையும் சேர்த்து அஞ்சலி செய்து ஆகிஞ்சன்யத்தைக் காட்ட அவன் அருள் பெறுவோம் அன்றோ –
இவன் அவர்களை அஞ்சலியை யாஸிக்கிறான்
அவர்கள் இவனிடம் வஸ்திரங்களை பிரார்த்திக்கிறார்கள்
——————————————————————–
பல ஸ்ருதி-
இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்–21-உபேந்திர வஜ்ரா விருத்தம்
இத்ய நன்ய மனசா –இவ்வாறாக வேறே ஒன்றில் மனம் செல்லாத
வேங்கடேச கவிநா விநிர்மிதாம் ஸ்துதிம்–வெங்கடேசன் என்னும் கவியால் இயற்றப்பெற்ற ஸ்தோத்ரத்தை
படன்–படிக்கிறவர்கள்
திவ்ய வேணு ரசிகம் –தெய்வீகமான புல்லாங்குழல் ரஸ அனுபவம் செய்வதும்
யவ்வத ப்ரியம்-இளம் வயதுள்ள பெண்களுக்கு இனியதுமான
சமீஷதே தைவதம் கிமபி -ஒப்பற்ற தெய்வத்தைக் காண்கிறான்
வேறு ஒன்றையும் நாடாத மனத்துடன்-க்யாதி லாப பூஜை ஒன்றுக்கும் இல்லாமல் –
வேங்கடேச கவியால் அருளிச் செய்யப்பட இந்த ஸ்தோத்ர கிரந்தத்தை அப்யசிப்பார்கள்
திருப் புல்லாங்குழல் ரசம் அறிந்தவனுக்கு கோபிமார்களுக்கு பிரிய தமமுமான
அற்புத கண்ணன் நிரந்தர சாஷாத் காரம் காட்டி அருளுவான்
இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்-
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்
அதிகரண சாராவாலி நிகமாந்த்ர முனீந்திரர் -கவி முனி -ஆழ்வாரை போலவே -அநந்ய-
வேங்கடேச- பிருந்தாவன சரர்-திவ்ய வேணு -அப்ராக்ருதம் -அதிலே ராசிக்கியம் -பிரத்யக்ஷமாக பார்ப்பார்கள்-
சமீஷதே –
நிகழ் காலம் -யுவதிகள் கோப ஸ்திரீகளுக்கு பிரியன் -ஆவான் -வ்யாமோஹம் அனைவர் இடம் காட்டியவன் –
அனுபவ பரிவாஹம் -தானே இந்த பிரபந்தம் -அனைத்தையும் அவனே காட்டக் கண்டவர் அன்றோ –
வல்லவீ ஜன வல்லபம் -உபக்ரமித்து
வல்லவ சக்ரவர்த்தி -2-
வ்ரஜ யோஷித –6-
வல்லவீ –11
வ்ரஜ அங்கநா –13
வல்லவ அங்கநா –14-
வல்லவீ –15-
கோப ஸ்த்ரீ –17
கோப கன்யா –18-
வல்லவீ வல்லபு -19-
வல்லவீ –20-
இவ்வாறு பல இடங்களிலும் கோபியர்களுடன் சேர்ந்த
யுவாநாம் –8-
அஜஹத் யவ்வனம் –10-
யூந -13
யுவா -14–போன்ற பாலா இடங்களிலும் இவனது யவ்வன பருவ அனுபவம்
———————————–
முதல் ஸ்லோகம் -அனுஷ்டுப் விருத்தம்
2- கோபால மந்த்ரம் -வஸந்த திலகம்
3-சைஸவம் –பூதனா நிரஸனம் -வஸந்த திலகம்
4- நவநீத நாட்யம் –வஸந்த திலகம்
5- நவநீத ஸுர்யம் –மந்தாக்ராந்தா
6- ப்ரஹ்ம கிசோரம் –ஓவ்ப சந்தஸ்ஸு
7-உல்லூக பந்தனம் -ஓவ்ப சந்தஸ்ஸு
8-யாமளார்ஜுன பஞ்சனம் -ஓவ்ப சந்தஸ்ஸு
9- வம்சீ -ஓவ்ப சந்தஸ்ஸு
10-யுவா –ஓவ்ப சந்தஸ்ஸு
11-அபாங்கம் –ஓவ்ப சந்தஸ்ஸு
12-வேணு கோபாலன் -ஓவ்ப சந்தஸ்ஸு
13-அழகு –ஓவ்ப சந்தஸ்ஸு
14-கோபால சித்திரம் -யோகினி
15-அஞ்சனச்சுடர் -யோகினி
16-வம்ஸ நாளம் –மாலினி
17-ஜாரன் –மந்தாக்ராந்தா
18-விடன் -மந்தாக்ராந்தா
19-ஜல க்ரீடை –மந்தாக்ராந்தா
20-வஸ்த்ர அபஹரணம் –மந்தாக்ராந்தா
21–பல ஸ்ருதி –உபேந்திர வஜ்ரா
——–
2- பாலாடைப்பருவம்
3- தொட்டில் பருவம்
4- நாட்டியம்
5- ஸுர்யம்
6- ஸ்தநந்தயம்
7- அஞ்சும் பருவம்
8-பால கேளி யுவா
9- அடவீ ஸம்பத் மேய்க்கப் போனமை
10-அத்யந்த யவ்வனம் -அஜஹத் யவ்வனம் -அழகு
11- அபாங்க வல்லவீ விமோஹம்
12- அங்கநாநாம் அபிலாஷ பதம் யூன
——–
கௌமாரம் -ஐந்து வயது வரை
பவ்கண்டம் –ஐந்து முதல் பத்து வரை
கைசோரம் -பத்து முதல் பதினைந்து வரை
யவ்வனம் -அதற்கு மேல்
பாலம் -16 வயது வரை
தருண அதற்கும் மேல்
வ்ருத்தம் –70 மேல்
வர்ஷாயன் –90 மேல்
———
கிரியா பத வரிசைகள்
1- வந்தே
2- ஜயதி
3-அவைமி
4- ஆவிர்பவது
5- பாயாத்
6- ஈடே
7- ஸ்மராமி
8- நிசா மயாமி
9-பஜாமி
10- ஆவிரஸ்து
11-அவது
12- ப்ரதி பாஸ் சந்து
13-அவலோகயாமி
14-கேன லிகித
15-கவயாமி
16-ஜயதி
18- ஜயதி
19-அவ்யாத்
20-ஜயதி
————
கோப ஸம்பந்தம்
1-வல்லவீ ஜன வல்லபம்
2-வல்லப சக்கரவர்த்தீ
3-கோபால டிம்ப வபுஷம்
4-நந்த பவனே நவநீத நாட்யம்
5-மித்யாகோபஹ
6-வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம்
7-குமாரம்
8-பால கேளிம் — யுவா நம்
9-வம்ஸாம் –காரண மாநுஷீம்
10-அஜஹத் யவ்வனம்
11-ஸ்பர்சித வல்லவீ விமோஹை
12-வம்சம்
14-வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா
15-வல்லவீ வலயா பாஷித
16-வல்லவீநாம் -சிதில வலய சிஞ்ஞா–கோப வேஷஸ்ய விஷ்ணோ
17-கோப ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ கோ அபி கௌமார ஹாரீ
18-கோப கன்யா புஜங்க
19-வல்லவீ வல்லபோ
20-வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம்
—————
இதி கோபால விம்சதி சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply