ஸ்ரீ பார்த்த சாரதியின் பிரபாவம்-
ஸ்ரீ கிருஷ்ணன் எது செய்தாலும் பெருமை மிக்கதே -ஸ்வா பாவிகமான பெருமை பெற்றவன் அன்றோ
ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதா தர -திவ்யாயுதங்கள் உடனே திருவவதரித்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருட்கண் வந்த எம்பெருமானார் அன்றோ
யமு நாஞ்ச அதி கம்பீராம் நாநா வர்த்த ஜஷாகுலம் வ ஸூ தேவோ வஹன் க்ருஷ்ணம் ஜாநு மாத்ரோ தகோ யயௌ-
இவன் எவ்வளவு தாழ நின்றாலும் அத தாழ்ச்சி எல்லாம் புகழ்ச்சிக்கே உறுப்பாம் –
நமந்தி சந்தஸ் த்ரைலோக்யாதபி லப்தும் சமுன் நதிம் -மேம்பட்டவர்கள் தாழ்ச்சியையே காட்டிக் கொண்டு இருப்பார்கள் –
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் –
பாவ பந்தம் உடன் ஆண்டாள்
-கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –
கற்றினம் இத்யாதி –
கெடுவாய்-நீ இங்கனே கிடந்து படா நிற்கிறது என் —கன்றுகளின் பின்னே அவற்றின் ரஷணதுக்காக திரிவான் ஒரு பாலனுமாய் –
ஒரூரிலே தங்குகையும் அன்றிக்கே பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள இடத்தே தங்குவான் ஒருத்தனாய்
எளியராய் இருப்பார் செய்யுமவற்றை செய்து -எளிய த்ரவ்யங்களைப் புஜித்து -குற்றவாளனாய்க் கட்டுண்டு திரிவான் ஒருவன் காண்
அவனைப் பெறுகைக்கோ நீ இப்படி படுகிறது என்ன
கற்றினம் இத்யாதி –
வான் இளவரசாய் இருக்குமவன் -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்கிறபடியே பசுக்களை மேய்க்கையை உகந்தான் –
அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத கன்றுகளை மேய்க்கையே மிகவும் பெறாப் பேறு பெற்றதாக நினைத்து இருந்தான் –
இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டித் தேடி
அங்கேயே தங்கும் படியான ஜன்மமும் ஆகப் பெற்றான்
வெண்ணெயைத் தனக்கு தாரகமாகக் கொண்டு அது தானும் நேர் கொண்டு நேர் கிடைக்கப் பெறாமல் களவு கண்டு புஜிக்கப் புக்கு
அதுவும் தலைக் கட்ட மாட்டாமே ஒரு அபலை கையிலே அகப்பட்டு அவர் வர வீரத்து ஒன்றோடு ஓன்று கட்டக் கண்டு
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான தான் பிரதிக்ரியை பண்ண மாட்டாதே நின்றான் —
பாவிகாள் –
மகா பாபத்தை பண்ணினி கோளோ
உங்களுக்கு ஏச்சுக் கொலோ –
குணமே குற்றம் ஆகைக்கு நீங்கள் சிசுபாலன் பிறந்த முகூர்த்தத்திலேயோ பிறந்தது
எங்கள் வர்க்கத்தில் உள்ளார் எத்திறம் என்னுமது உங்களுக்கு ஏச்சுக்கு உடலாவதே –
விஷயத்தில் வாசி இல்லை -மனப் பான்மையில் மட்டுமே வாசி –
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -நம்மாழ்வார் -ஆழ்வார்கள் வாய் வெருவுவது -ஜார சோர சிரோமணே சோர ஜார சிரோமணே-
நாமும் அவனுக்கு பூ சூட்டும் போதும் நித்யமும் -மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் -என்கிறோம்
இத்தை செவி மடுத்து அவன் திரு உள்ளம் மலர்ந்ததை பார்க்கிறோம்
அது இது உது என்னலாவன வல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் –
சாந்தீபினி புத்ரா நயனம் -வைதிக புத்ரா நயனம் -இத்தகைய அதி மானுஷ சேஷ்டிதங்களை ஆழ்வார்கள் கனக்க நினைத்திலர்-
இமையோர் தமக்கும் தஞ்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே நெஞ்சே நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே –
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டிச் சென்றதையும் பற்றாளர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றதையும்
அனுசந்தித்து நீர் பண்டமாக உருகிப் போகிறார்கள் -இரும்பு போல் வழிய நெஞ்சம் கொண்ட நாமும் உருகுகிறோம்
பெருமாளும் வேள்விகளை ரஷித்த பரத்வம் அல்லாமல்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கிங்கரௌ சமுபச்திதௌ ஆஜ்ஞாபாய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -என்று
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்யா பராக்கிரமம் -எண்ணப் பெற்ற பெருமாள் அன்றோ இந்த பேச்சு சொல்லி அருளினான்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் -தூது சென்றதையும் தேர் பாகனாயும் நின்ற நிலையை அன்றோ அருளினான் –
விஜிதாத்மா விதே யாத்மா -சத்கீர்த்தீ -பாஷ்யம் இந்த சௌலப்ய குணம் -ஔஜ்வல்ய ஹேது என்று அன்றோ அருளிற்று –
கலபம் க ஏவ ஸ்நாத்வா தூளீ ரசிகம் நிஷேத்தா -பட்டர் –
தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பால மதயானாய்-சோலை மலை களிறு அன்றோ –
கோதிலின் கனி நந்தனார் களிறு –
தசரதாத்மாஜன் -வா ஸூ தேவாத் மஜன் -நந்தகோபன் குமரன் -என்பதிலேயே பெருமை கொள்பவன் –
காபபாரும் இல்லை கடல் வண்ணா விண்ணைத் தனியே போய் எங்கும் திரிதி -என்று வயிறு பிடிக்கும் படி நிற்கிறவன் –
ஸூ ர நரதிர் இச்சாம் அவதரன் சஜாதீயஸ் தேஷாமிதது விபவாக்யாம் அபி பஜன் -தன்னுடைய வைபவங்கள் குறையாமல்
தேவாதி சஜாதீயனாய் திருவவதரிக்கையால் தானே விபவம் என்கிறோம்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ -என்று ஏசிப் பேசும்படி நிற்கச் செய்தேயும்
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு பெரிய மா மேனி அண்டமூடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தவன் அன்றோ –
பார் மன்னர் மங்க படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ -என்று சொல்லப்படுபவனே
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஓர் தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் அன்றோ –
———————————————–
ஸ்ரீ கீத உபன்யாச சாரம் –
பரம காருணிகன் -பேர் அருளாளன் –
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருளிச் செய்தான் –
ஹர்த்தும் தமஸ் சதஸ தீச விவேக்து மீசோ மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி -பட்டர்
முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட -சத்வாரக சாஸ்த்ரங்களை விட அத்வாரகமாக சாஸ்திரங்கள் பல வெளியிட்டு அருளினான் –
வேதேஷூ பௌருஷம் ஸூ க்தம் தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் பாராதே பகவத் கீதா புராணே ஷூ ச வைஷ்ணவம் -அஞ்சாமோத்தும் அறு மூன்றும் –
பரமாத்மா சாஷாத்காரத்துக்கு ஏணி போன்ற ப்ரத்யகாத்ம யாத்தாமிய ஞானத்துக்கு சஹகாரிகளான
கர்ம யோக ஞான யோகங்கள் பரிகாரங்கள் உடன் முதல் ஷட்கம் அருளினான் –
பகவத் தத்வ ஞான சம்பத்தி ஹேதுவாய் ஜ்ஞான கர்ம பரிகர்மிதமான பக்தி யோகம் த்விதீய ஷட்கத்தில் அருளிச் செய்தான் –
மூல பிரகிருதி மஹதாதிகள் தத் கார்யங்கள் போக்தாவான புருஷன் கர்ம ஞான பக்தி யோகங்கள் -இவற்றின்
விவேசனம் மூன்றாவது ஷட்கத்தில் அருளிச் செய்தான் –
கிருஷ்ணாஸ்ரையா கிருஷ்ண பல கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -என்பதால் அருளிச் செய்தான்
கேட்டதும் ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று தெளிவு பெற்று போர் புரிய இசைந்தான்
அர்ஜுனனுக்கு நிர்வேதத்தை யுண்டு பண்ணி அவனை சிஷ்யனாக்கிக் கொண்டு உபதேசிக்க வேண்டி இருந்ததனால் மாயத் தேர்பாகன் ஆனான் –
ப்ருச்சாமி த்வா தர்ம சம்மூட சேதா சிஷ்யச் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்று அவன் வாயால் வருவித்து
ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
அர்ஜுனனை வியாஜமாக கொண்டு பக்தி யோகத்தை -முமுஷுக்களுக்கு உப ஜீவ்யங்களான
சகலார்த்த சாரங்களும் ப்ரசக்த அனுப்ரசக்தமாக இதில் நிரூபிக்கப் பட்டன
2-12- சாஸ்திர ஆரம்பம் -ந த்வேவாஹம் ஜாது நாசம் ந த்வம் நே மே ஜநாதிப -ந சைவ ந பவிஷ்யாமஸ் சர்வே வயமத பரம் –
உபநிஷத் சாரம் -ஜீவாத்மா பரமாத்மா பேதமும் -ஜீவர்கள் பரஸ்பர பேதமும் –
அடுத்த ஸ்லோகத்தால் பிரகிருதி ஆத்மா விவேகம் காட்டி அருளினான் –
2-45-த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுநா -அனைவர்க்காகவே வேதங்கள் –
பரஹிம்சை உபாயங்களும் புபிஷுக்களுக்கும் முமுஷுக்களுக்கும் –
நிஸ்த்ரை குண்யோ -ஒன்றையும் கைக் கொள்ளாதே-என்கிறான் அல்லன்
முக்குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -மேலே- நித்ய சத்வச்த-என்று அருளிச் செய்வான்
ரஜஸ் தமஸ் உள்ளோர்க்கு காட்டிய உபாயங்களில் கண் வையாமல் சாத்விகர்களுக்கு காட்டியுள்ள
உபாயங்களில் மாத்ரம் கண் வைக்கக் கடவாய் -என்றபடி –
3-10–சஹ யஜ்ஞ்ஞை ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி அநேன ப்ரசவிஷ்யத்வம் ஏஷ வோஸ்த் விஷ்ட காமதுக்
யஜ்ஞ்ஞத்தைக் கொண்டே அபிவருத்தி -இதுவே பரம புருஷார்த்த மோஷ காமத்தையும் அதற்கு சார்பான மற்ற காமங்களையும் பூர்த்தி செய்யும்
யஜ தேவ பூஜாயாம் -பகவத் ஆராதனத்தால் அபீஷ்ட காமங்கள் நிறைவேறும் என்று அருளிச் செய்தான்
3-11-தேவான் பாவ யதா நே ந தே தேவா பாவயந்து வ பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரம் அவாப்ச்யத –
படிப்படியாக அருளிச் செய்கிறான்
மேலே -9-22- அனந்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாசதே -என்று தன்னை உபாசிக்க உபதேசித்து
9-23-யே த்வன்ய தேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்ய அந்விதா தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்ய விதி பூர்வகம் -என்றும்
9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவச-என்று தன்னையே சேரும் பலனும் தானே அருளுகிறான் என்கிறான்
3-12-இஷ்டான் போகன் ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா தைர்த்தத்தான் அப்ரதா யைப்போ யோ புங்க்தே ச்தேன ஏவ ச –
தைர்தான்-முந்தி வானம் மழை பொழிய மூவா வுருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –
பஹூ நி மே வ்யாதீதா நி ஜந்மானி-உன்னைப் போலேவே நானும் பிறந்து -என்று தொடங்கி திரு அவதார பிரகாரமும்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்று திவ்ய மங்கள விக்ரஹ உண்மைத் தன்மையும்
திருவவதார ஹேதுக்களையும் அருளிச் செய்கிறான் நான்காவது அத்யாயத்தில் –
5-18- வித்யா விநய சம்பன்னே –கவி கஸ்தினி சுனி ஸ்வபாகே — –ப்ராஹ்மணே –பண்டிதாஸ் சம தர்சினா –
கேவல பிராமணன் இடத்திலும் என்று தனித் தனியாக பாஷ்யம் –
பசுவினால் ஆகும் கார்யம் -பால் -யானையால் ஆகாதே -பிரியமானது கிடைத்தால் சந்தோஷிக்காமல் அபிரியமானம் கிடைத்தால் வெறுப்புக் கொள்ளாமல்
சர்வத்ர சமதர்சன ரூபமாக ஜ்ஞான விபாகம் இப்படிப்பட்டவனுக்கே உண்டாகும் -அப்படிப்பட்ட அதிகாரியே சர்வத்ர சமர்தசித்வம் அறிய முடியும் என்றவாறு –
6-5- உத்தரே தாத்ம நாத்மாநம் நாத்மா நம வ சாதயேத் ஆத்மைவ ஹ்யாத்ம நோ பந்து ஆத்மைவ ரிபுராத்மான-மனமே மோஷ பந்து இரண்டுக்கும் ஹேது –
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் -இனி என்ன குறைவிலம் –
ஊனில் வாழ் உயிரே நல்லை போ யுன்னைப் பெற்றே
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -இயற்றுவாய் எம்மோடு நீ கூடி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் –
ஜிதேந்த்ரியிலே தலைவன் அர்ஜுனன் -6-34-சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –
இதற்கு மறுமொழி கண்ணன் -6-35-அசம்சயம் மஹா பாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் அப்யாசேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே –
சஞ்சலம் மனதுக்கு இயற்க்கை -அத்தை போக்கி ஒன்றில் ஒன்ற வைப்பது கடினம் -மனத்தை அடக்கப் பழக்கம் செய்து நாளடைவில் சாதிக்க வேணும் –
அசம்சயம் -என்று இத்தையே அருளிச் செய்கிறான் –
7-15-ந மாம் துஷ்க்ருதி நோ மூடா ப்ரபத்யந்தே நராதமா மாயயாபஹ்ருத ஜ்ஞானா ஆ ஸூ ரம் பாவமஸ்ரிதா -நிந்தையே நிறைந்த ஸ்லோகம்
7-16-சதுர்விதா பஜந்தே மாம் ஜ நாஸ் ஸூ க்ருதி நோர்ஜுநா ஆர்த்தோ ஜிஜ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப -ஸ்துதி நிறைந்த ஸ்லோகம்
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கைப் பதிகமும் இதே ஏழாம் அத்யாயம் போலேவே ஒரே நிகர் என்னலாம் –
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் அன்பிலா மூடரை நிந்தித்ததும் மொழிந்து அருளும் மாறன் பால் -மா முனிகள்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனை ஆர்த்தன்-அபூர்வ ஐஸ்வர்ய காமனை அர்த்தார்த்தி -கைவல்ய காமனை ஜிஜ்ஞா ஸூ -ஸ்வ ஸ்வரூபம் உணர்ந்தவன் ஞானி
ஆழ்வார்கள் பாசுரம் -திருப்பல்லாண்டு -ஒரு நாயகமாய் -இந்த நான்கு வகையும் -திவ்ய பிரபந்த சாயையிலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் –
விஹித விஷய போகமும் த்யாஜ்யம் சத்சம்ப்ரதாய நிஷ்டர்களுக்கு -கிம் கர்ம -அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு
8-3-பூத பாவோத் பவகரோ விசர்க்க கர்ம சம்ஜ்ஞித -ஸ்திரீ புருஷ சம்யோகமும் த்யாஜ்யம் –
9-26- பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருத மச் நாமி ப்ரயதாத்மன-என்று ஆராதனைக்கு எளியவன் என்றார்
கடலில் மேகம் வர்ஷிப்பது கடலை நிறைக்க அன்றே -வர்ஷ பிந்தோரி வாப்தேள சம்பந்தாத் ஸ்வா த்மலாப –ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் -என்கிறபடியே
தான் சத்தை பெறுவதற்காகவே மேகம் கடலில் வர்ஷிக்கிறது –
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்-முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே
பக்திப் பெரும் காதலே வேண்டுவது -இடுகிற பொருளில் வாசி பார்ப்பது இல்லை -இடுகிறவன் நெஞ்சிலே ஈரம் உள்ளதா என்ற ஒன்றையுமே பார்க்கிறான்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி -என்று சொல்லி மீண்டும் -தத் பக்த்யுபஹ்ருதம் -அருளிச் செய்கிறான் –
10-விபூத்யத்யாயம் -11- விச்வரூபாத்யாயம் -கீழே பக்தி யோகம் சாங்கமாக விவரித்து அருளிச் செய்து -பக்தி உண்டாக்குவதற்கும் வளர்வதற்கும்
தன்னுடைய நிகரற்ற ஐஸ்வர்யம் முதலிய திருக் கல்யாண குணங்களின் திரள்கள் அளவு கடந்து இருக்கிறபடியும்
உலகம் எல்லாம் அவனது சரீரமாகவும் அவன் ஏவச் செல்லும்படியாய் இருக்கின்றமையையும் விஸ்தரித்து அருளிச் செய்கின்றான்
அர்ஜுனன் கேட்காமலே -1–1-பூய ஏவ மஹா பாஹோ ச்ருணு மே பரமம் வஸ–யத்தேஹம் ப்ரீயமாணாய வஹ்யாமி ஹித காம்யயா-என்று
ச்ரோதாவான அர்ஜுனன் முகத்தில் ப்ரீதி விசேஷத்தைக் கண்டு விரிவாக சொல்லியே யாக வேண்டும் என்று திரு உள்ளம் பற்றினான்
ப்ரியமாணா தே -என்று அர்ஜுனன் பிரியம் காட்டி-ப்ரீதனாய் இல்லா விடிலும் -வஹ்யாமி ஹித காம்யயா-ஹிதத்தை உத்தேசித்து அருளிச் செய்கிறான்
ஆக இவ்விரண்டு அத்யாயங்களால் பிரியமாயும் ஹிதமாயும் உள்ளவற்றை அருளிச் செய்கிறான் –
10-19-ஹந்த தே கதயிஷ்யாமி விபூதி ராத்ம நச் சுபா ப்ராதான்யத குருஸ்ரேஷ்ட -நாச்த்யந்தோ விச்தரச்ய மே
-முக்கியமான வற்றைச் சொல்லுகிறேன் கேளாய் என்று சொல்லி
10-21-ஆதித்யானாம் அஹம் விஷ்ணு என்று தொடங்கி-10-39-அளவும் அருளிச் செய்தான்
இவற்றைக் கேட்ட அர்ஜுனன் 11-1- யத் த்வயோக்தம் வசஸ் தேன மோஹோயம் விகதோ மம -மோஹம்தொலைந்தது என்று சொல்லி
மேலே -11-3-த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் ஐஸ்வர்யம் புருஷோத்தம -என்று கேட்க
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -என்று திவ்ய சஷூஸ் கொடுத்து அருளி
கண்ட அர்ஜுனன் -11-40-அனந்த வீர்யம் இத விக்ரமஸ் த்வம் சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -என்று –
11-38-த்வயா ததம் விச்வம் ஆனந்த ரூப – சர்வம் சமாப்நோஷி ததோசி சர்வ -உலகில் அனைத்தும் நீயே -என்றதற்கு காரணம்
அனைத்திலும் ஆத்மாவாக வியாபித்து இருப்பதால் –
12-18/19-சமச் சத்ரௌ ச மித்ரே ச ததா மாநவா மாநயோ-சீதோஷ்ண ஸூக துக்கேஷூ சமஸ் சங்க விவர்ஜித -துல்ய நிந்தாஸ்துதிர் மௌநீ
சந்துஷ்டோ யேன கேனசித் அநிகேத ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர -இப்படி பட்ட ஞானி துர்லபன் –
13-1/- இதம் சரீரம் கௌந்தேய ஷேத்ரம் அப்யதீயதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ-ஷேத்ரஜ்ஞ இதி தத்வித –
13-2-ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் வித்தி சர்வ ஷேத்ரேஷூ பாரத ஷேத்ர ஷேத்ரஜ்ஞ யோர் ஜ்ஞானம் யத் தத் ஜ்ஞானம் மதம் மம-
தேவோஹம் மனுஷ்யோஹம் -அஹம் ஆத்மாவை தான் குறிக்கும் தேகத்தை இல்லையே -ஒன்றை விட்டு தனித்து நிற்பது இல்லை
என்பதாலே நான் தேவன் நான் மனுஷ்யன் என்கிறது -இதே போலே -ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் வித்தி-சரீராத்மா பாவம் –
14-24/25-குணா தீதஸ் ச உச்யதே -குணங்களைக் கடந்தவன் – முக்குணத்து வாணியத்து இரண்டில் ஓன்று நீசர்கள் –
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று
சுத்த சத்வமே உபாதேயம் -த்யாஜ்யம் அன்று
சமதுக்க ஸூ கஸ் ஸ்வஸ்த சம லோஷ்டாச்ம காஞ்சன துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்மா சம்ஸ்துதி மா நாவ
மாநயோஸ் துல்யஸ் துல்யோ மித்ராரிபஷயோ சர்வாரம்ப பரித்யாகீ குணா தீதஸ் ச உச்யதே
ஸ்வஸ்த -தன்னிடமே இருப்பவன் என்றபடி -சம லோஷ்டாச்ம காஞ்சன-லோஷ்டத்தையும் கல்லையும் பொன்னையும் துல்யமாக நினைப்பவன் –
15-15- அஹம் சர்வச்ய ச ஹ்ருதி சந்நிவிஷ்ட -என்றும் ஸ்ம்ருதி ஜ்ஞானம் அபோஹநஞ்ச மத்த -என்று உத்தம புருஷனை இட்டு தெளிவாக
அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே -10-8 என்று அருளிச் செய்தது போலே
மேல் உத்தரார்த்தத்தில் -சர்வைர் வேதைச்ச அஹமேவ வேத்ய -என்றதும் அஹமேவ வேதாந்த க்ருத் -என்றும்
-அஹமேவ வேதவித் -என்றும் அருளிச் செய்கிறான்
தேவதைகள் தாமே பலன் தராதே –இவனுக்கு சரீர பூதர்கள் -அந்தர்யாமியாய் தானே ஆராதிக்கப் படுகிறான் -தானே பலனும் அளிப்பவன் –
16-6-த்வௌ பூத சர்கௌ லோகேச்மின் தாய்வ ஆசூர ஏவ ச -தேவாசூரா விபாகம் –
16-5- தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆ ஸூ ரீ மதா-சத்காதி அடையும் சிந்தனையே தெய்வ வகுப்பு –
மா சுசஸ் சம்பதம் தைவிம் அபிஜாதோசி பாண்டவா -சோகப்படாதே-அருளிச் செய்வதை ருசி விச்வாசங்கள் உடன் கேட்கிறானே
ந சௌசம் நாபி சாசாரோ ந சத்யம் தேஷு வித்யதே அசத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகதாஹூர நீச்வரம் -ஆசூர தன்மை –
17 மூவகை தபஸ்ஸூ க்களை -சாரீர –வாங்மய –மானச தபஸ் ஸூ க்கள்
உடல் தபஸ் -ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தான் வாட வாட தவம் செய்வது
கையோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவம் செய்தல் -என்பார்கள் ஆழ்வார்கள்
கீதாசார்யன் சற்றே மாறி -பகவத் பாகவத ஆசார்யர் வழிபாடு செய்து புண்ய தீர்த்தங்களில் குடைந்தாடி -போல்வன காயிக தபஸ்
பிறரை நோவாமல் வார்த்தை சொல்வது உண்மை பிரியம் ஹிதம் சொல்வது வேதம் ஓதுவது வாங்மய தபஸ்
கோபம் கொள்ளாமை-பகவான் இடம் நெஞ்சை செலுத்தி த்யானிப்பது-வேறு விஷய சிந்தனை இல்லாமை மானச தபஸ்
சாத்விக ராஜஸ தாமஸ என்றும் மூ வகை தபஸ் ஸூ க்கள் வகையை அருளிச் செய்கிறான் –
18- ஷத்ரிய தர்மங்களை -சௌர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யபலா யனம் தானமீச்வர பாவச்ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம்
சௌர்யம் -போர்க்களத்தில் கூசாமல் புகுவது -தேஜஸ் -பிறரால் அசைக்க முடியாத தன்மை -த்ருதி மன உறுதி –
தாஷ்யம் -எடுத்த கார்யம் நிறைவேற்ற வல்லமை –
யுத்தே சாப்யபலா யனம்-முது காட்டி உடைமை
தன்னையே தஞ்சமாக பற்ற சரம ஸ்லோகத்தில் அருளி
அர்ஜுனன் -நஷ்டோ மோஹ ச்ம்ருதிர் லப்தா த்வத் பிரசாதாத் மயா அச்யுத ஸ்திதோச்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்கிறான்
ந ச மாம் யோப்ய ஸூ யதி-அசூயை உள்ளாருக்கு சொல்லாதே -காண கண் ஆயிரம் வேண்டும் கேட்க காது ஆயிரம் வேண்டும்
பேச நா ஆயிரம் வேண்டும் என்னும் ஆசை மிக்க உள்ளாருக்கே சொல்ல வேண்டும்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
—————————————————————————————–
ஆச்சார்யர்கள்
ஆசி நோதி ஹி சாஸ்தரார்த்தான் ஆசாரே ஸ் தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே -ஆசார்ய லஷண வசனம்
ஆசி நோ தீதி ஆச்சார்யா -சாஸ்திர அர்த்தங்களை தேக்கி வைத்தும்
ஆசார்ய தீதி ஆசார்ய -பிறருக்கும் போதித்து
ஆசர தீதி ஆசார்ய -தாமும் அனுஷ்டித்து
மூன்று வகை வ்யுத்பத்திகள்
குரு–கு சப்தஸ் து அந்த காரஸ் ஸ்யாத்–ரு சப்தஸ் தந் நிரோதக–அந்தகார நிரோதித்வாத்-குரு ரித்யபி தீயதே
திசதீதி -தேசிக -உபதேசிக்க வல்லவர்
நியாச விம்சதி முதல் ஸ்லோகம் ஆச்சார லஷணம்-ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்கிறார்
சித்தம் சத்சம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாசம் சமய நியதயா சாதுவ்ருத்த்யா சமேதம்
டம்பாஸூ யா விமுக்தம் ஜிதவிஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ் காலித்யே சாசிதாரம் ஸ்வ பரஹிதபரம் தேசிகம் பூஷ்ணு ரீப்சேத்–
சித்தம் சத்சம்ப்ரதாயே –
சுத்த சம்ப்ரதாய சித்தர்கள் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசுவர்
பூர்வே பூர்வேப்யோ வச ஏது தூசு -காலஷேப கிரந்தங்களை ஓதி உணர்ந்தவர்களாக இருப்பர்
ஸ்திரதியம் –
ஸ்திற புத்திகள் உடையவர்கள் ஆக இருப்பர்
அநகம்
தேவதாந்திர பிராவண்யம் -உபாயாந்தர சங்கம் -சூத்திர பலன்களில் ஸ் ப்ருஹை போன்ற குற்றங்கள் அற்று இருப்பர்
ச்ரோத்ரியம்
வேதாத்யயன சம்பன்னர்
ப்ரஹ்ம நிஷ்டம்
எம்பெருமானே தஞ்சம் என்று இருப்பவர்
சத்வஸ்தம்
முக்குணங்களில் இரண்டை அகற்றி ஒன்றிலே ஒன்றி சுத்த சத்விகராய் இருப்பர்
சத்யவாசம்
யதா பூதார்த்த வாதி
சமய நியதயா சாதுவ்ருத்த்யா சமேதம்
தர்மஜ்ஞ சமய வ்யவச்திதமான நன்னடத்தை கொண்டு இருப்பர்
டம்பாஸூ யா விமுக்தம்
டம்பம் அசூயை இல்லாதவர்
ஜிதவிஷயி கணம்
ஜிதேந்த்ரியர்
தீர்க்க பந்தும்
தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பவர்
தயாளும்
துர்க்கதி கண்டு பொறுக்காதவர்
ஸ் காலித்யே சாசிதாரம்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொள்பவர்
ஸ்வ பரஹிதபரம்
பர ஹிதம் போலே ஸ்வ ஹிதமும் நோக்குபவர்
தேசிகம் பூஷ்ணு ரீப்சேத்
ஆப் நுயாத் என்னாதே ஈப்சேத்-என்பதால் இப்படிப்பட்ட ஆசார்யனை அடைவதில் காட்டிலும்
அடைய வேணும் என்கிற ஆசை தான் பெறாப் பேறு என்றபடி –
சமஸ்க்ருத வேதாந்தம் -பய வேதாந்தம்
அருளிச் செயல்கள் அபய வேதாந்தம் –
பிரமாதாக்கள் -திவ்ய ஸூ ரிகள் –பிரமாணம் -திவ்ய பிரபந்தம் -பிரமேயம் -திவ்ய தேசம்
மண்டினாருக்கு உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே
நாத முனிகள் -ஆனி அனுஷம் /உய்யக் கொண்டார் சித்தரை கார்த்திகை /மணக்கால் நம்பி மாசி மகம்
ஆளவந்தார் ஆடி உத்தராடம் /பெரிய நம்பி -மகா பூர்ணர் -பராங்குச தாசர் –
நஞ்சீயர் பங்குனி உத்தரம் /பிள்ளை லோகாச்சார்யர் -ஐப்பசி திருவோணம்
திருவாய்மொழிப் பிள்ளை வைகாசி விசாகம்
வரவர முனி அடி வணங்கும் வேதியர் திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே
———————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply