நான் கண்ட நல்லது -ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

ஸ்ரீ வராஹ திருவவதார வைபவம்
நம்மாழ்வார் தான் கண்ட நல்லதாக உபதேசித்து அருளுகிறார் –
இனியது தனி அருந்தேல் -ஏக ஸ்வாது ந புஞ்ஜீத-

ஈனச் சொல் ஆயினுமாக ஏறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா யாவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தம் -99-

அவதரணம் -கீழே இறங்குவது –
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூ வுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் -பெரியாழ்வார் -4-9-9-
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
ஸ்ரீ மத் பாகவதம் -25 திருவவதாரங்கள் -யக்ஞர் கபிலர் தத்தாத்ரேயர் நர நாராயணர்
த்ருவன் ப்ருது ருஷபர் ஹயக்ரீவர் ஹரி ஹம்ச மனு தன்வந்தரி வியாசர் புத்தர் –
லோகோ பின்ன ருசி -என்பதால்

அதிமாநுஷ சீல வ்ருத்த வேஷை அதி வ்ருத்தாமர விக்ரம பிரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம் வரயே வைஷ்ணவ வைபாவதாரம் -அதிமாநுஷ ஸ்தவம்
இத்ரியாணாம் அதீந்த்ரியோசீ–வாசோதி யச்ச தத ஏவ நகோ சரோ அஸி –
மனன் உணர்வு அளவிலன் பொறி யுணர்வு அவை இலன் –
சீலக ஏஷ தவ ஹந்த தயைக சிந்தோ –ஷூத்ரே ப்ருதக் ஜனே பதே ஜகத் அண்ட மத்யே –
-த்வம் அத்ர அவதீர்ய நனு லோசன கோசரோ அபூ –

ஸ்ரீ வராஹ திருவவதாரம் சீலத்தின் எல்லை நிலம்
சனகர் சனத்குமாரர் சாபத்தால் ஜய விஜயர்கள் -ஹிரண்யாஷன் ஹிரண்ய கசிபு -கருத யுகத்திலும்
ராவணன் கும்ப கர்ணன் -த்ரேதா யுகத்திலும்
சிசுபாலன் தந்த வக்த்ரர் த்வாபர யுகம் –
இதனாலே ஸ்ரீ வராஹ ஸ்ரீ நரசிம்ஹ ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரங்கள் –
யதோக சர்வ சத்வானாம் மஹீ மக்னா மஹாம்பசி
அச்யா உத்தரணே யதனோ தேவா தேவ்யா விதீயதாம் -ஸ்ரீ பாகவதம் -3-13-15-
பிரமன் மூக்கில் இருந்து சிறிய பன்று உருவம் வெளி வர
வராஹ தோக நிரகாத் அங்குஷ்ட பரிமாணக –கஜ மாத்ர ப்ரவவ்ருதே ததத்புதம் அபூன்மஹத் -3-13-18/19-
யானை அளவும் வளர்ந்தது
பெரிய உருவத்துடன் பூமா தேவியை கோரைப் பற்களால் இடந்து எடுத்து -ஸ்ரீ பூ வராஹ மூர்த்தி –

சரணமஸி மே ரங்கின் த்வம் –மூல கோல தநுர் பவன் -ஸ்ரீ ரங்க ராஜ உத்தர சதகம் -63- ஸ்ரீ ரங்க நாதனே ஆதி வராஹ ரூபி -அடியேனுக்கு புகலிடம் –
வைகுண்ட நாதன் எட்டாத உயரத்தில் இருப்பான் –
திருப் பாற் கடல் நாதன் வார்த்தை கடல் ஓசை போலே பொருள் அற்றதாக இருக்கும்
மத்ஸ்ய அவதாரம் நாம் பற்ற முடியாதே -அவனே கடலில் இருந்து கரையேற முடியாதவன் நம்மை கரை ஏற்ற மாட்டான்
கூர்ம அவதாரத்தை மந்திர மலை அழுத்தும் -சம்சார பந்தத்தால் அழுந்தி இருக்கும் நம்மை எப்படி கை தூக்குவான்
நரசிம்ஹன் கழுத்துக்கே மேலே ஒரு படி கீழே ஒருபடி சந்தேகம் வரும்
வாமன மூர்த்தி சிறிய காலை காட்டி பெரிய காலால் அளந்த வஞ்சகன்
பரசுராமர் கோபக்காரர்
இராமன் குரங்குகள் உடன் கலந்து பேசுபவன்
பலராமன் மத்திய பானம் பண்ணி தம் போக்கிலேயே போவார்
கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
கல்கி இனிமேல் தான் பார்க்கப் போகிறோம் –
பிரளய சமுத்ரத்தில் ஸ்ரீ பூமி தேவியை உத்தாரணம் பண்ணி அருளிய ஸ்ரீ வராஹ மூர்த்தியே
நம்மையும் உயர்த்துவான் அவனை பற்றுமின் என்பர் பட்டர் -வேடிக்கையாக –

கோபா யேத் அநிசம் ஜகந்தி குஹ நா போத்ரீ-பவித்ரீ க்ருத ப்ரஹ்மாண்ட பிரளயயோர்மி –
கோஷ குருபி கோணாரவை குற்குரை -தசாவதார ஸ்தோத்ரம் ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ வராஹ பெருமாள் திரு மூக்கில் இருந்து வரும் குர் குர் கடல் போன்ற சப்தம் பிரம்மாண்டத்தை புனிதப்படுத்துகிறது –
வேத முதல்வன் அன்றோ
ஆஸ்வாச நாய ஜகதாம் புருஷே பரஸ்மின் ஆபன்ன ரஷண தசாம் அபி நேது காம
-அந்தர்ஹித இதர குணாத் அபலா ஸ்வ பாவாத் ஔ தன்வதே பயஸி மஜ்ஜனம் அப்ய நைஷீ-ஸ்ரீ பூ ஸ்துதி -14-ஸ்ரீ தேசிகன்
ரஷகன் ஸ்ரீ வராஹன் ஒருவனே என்று காட்டி அருளவே அபலையைப் போல கடலுள் மூழ்கினாய்
இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ரஷணம் பண்ண நமக்கு என்ன கவலை –

ஸ்ரீ ரகஸ்ய சிகாமணி கிரந்தத்தில் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ வராஹ ஸ்லோஹம் விளக்கி அருளுகிறார்
ஸ்ரீ வைகுண்ட நாதன் கரையேறி வந்தவர்களுக்கு குணங்கள் ஆகிய அமுதூட்டுகிறான் –
ஸ்ரீ வராஹரோ நம்போல்வார் சம்சாரக் கடலில் கரைந்து போகாதபடி கரை ஏற்றி அருளுவார்
திருப்பாற் கடலில் வ்யூஹ வா ஸூ தேவன் மேல் இடத்தில் இருப்பான் -இவனோ கீழே புக்கி தனது எளிமையைக் காட்டி அருளுவான்
மீன் போலே கடாஷத்தால் மத்ஸ்ய திருவவதாரம் செய்து ரஷிப்பான்-இவனோ மரணப் படுக்கையில் உள்ளாரை தனது நினைவாலே ரஷித்து அருளுகிறான்
மந்தரமலை தாங்கி அருளுவான் ஸ்ரீ கூர்மம் -இவனோ பூமியையும் மலைகளையும் சேர்த்து தனது கோரைப் பற்களால் ரஷித்து அருளினான்
ஸ்ரீ நரசிம்ஹ பெருமாள் தூணைப் பிளந்து வர -இவனோ பூமி தட்டுத் தடுமாறி பிளந்து போகாமல் இறுகப் பண்ணினான் –
ஸ்ரீ வாமனன் வஞ்ச த்தால் தானம் பெற்று உலகை பெற இவனோ நேர்மையான வீரத்தால் ஹிரண்யாஷனை அழித்து பூமியை ரஷித்தான்
பரசுராமன் பூமியை அளிக்க மழுவை சாஷியாக்க இவனோ பூமி மண்டலத்தையே சாஷி ஆக்கினான்
ஸ்ரீ ராமர் அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -இவனோ பூமியை தன திரு தோள்களில் எற்றுவதையே திருவவதார பயனாகக் கொண்டான்
ஸ்ரீ பலராமன் பூமியை பிளந்து கேடு விளைக்கும் கலப்பை கையில் பிடிக்க இவனோ பூமி பிளந்து போகாமல் கோரைப் பற்களால் மென்மையாக தூக்கினான்
ஸ்ரீ கீதாசார்யன் 700 ஸ்லோகங்கள் அருளி இறுதியில் முத்து போல சரம ஸ்லோகம் அருள இவனோ இரண்டு ஸ்லோகங்கள் சரம உபாயமாக அருளிச் செய்தான்
ஸ்ரீ கல்கியோ வரும் காலத்தில் ரஷிக்க இவனோ முதல் யுகத்திலே ரஷித்து அருளினான் –

அமரகோசம் -வராஹ ஸூ க்ர க்ருஷ்டி கோல போத்ரீ கிரி கிடி -தம்ஷ்ட்ரா கோணீஸ் தப்த ரோமா க்ரோடா பூதார இத்யபி –
வராஹ -வரம் -விலை நிலமான பூமி -அத்தை ஆஹந்தி மீட்டுக் கொண்டு வந்தவன்
ஸூ கர -பல குட்டிகளை போடுவது -சிருஷ்டித்து உலகை ரஷிப்பவன்
க்ருஷ்டி -உயரமான இடங்களை இழுத்து கரைகளை சமமாக இடுகிறான்
கோல -உடம்பை ஒடுக்குவது -குட்டிகள் உடன் சேர்ந்து ஒடுங்குவது -உலகத்தையே தன்னுள் ஒடுக்குவது
போத்ரீ -நீண்ட வாய் படைத்தது
கிரி -வாயால் பூமியை கிளறியது
கிடி -தான் தனித்து தனி வழியே செல்வது
தம்ஷ்ட்ரா -வலிமையான கடைவாய்ப் பல் உடையது
கோணீ-மூக்கு நீண்டது பருத்தது
ஸ்தப்த-ரோமா சிலிர்த்த மயிரோடு கூடியது
க்ரோட -வளர வளர கெட்டியாகவும் வலிமையாகவும் ஆவது
பூ தார -பூமியை பிளப்பது

கேழல் -ஆண் பன்றி -ஏனம் -பன்றி -காட்டுப் பன்றி –

538-543-
538-த்ரிபத–மூன்று கொண்டைகள் யுடையவன்
539-த்ரிதசாத் யஷ-தேவர்களை பிரளயத்தில் இருந்து காத்த முதல்வன்
540-மஹாஸ்ருங்க -பெரும் கோரைப் பற்கள் உடையவர்
541-க்ருதாந்தக்ருத் -யமன் போன்ற ஹிரண்யாஷனை கொன்றவன்
542- மஹா வராஹ -பெரும் கேழலார்
கோவிந்த பூமியை மீட்டு அடைந்தவர்

ஸ்ரீ வராஹர் திவ்ய ரூபங்களும் அநேகம்
ஆதி வராஹன் -ஸ்ரீ வராஹ ஷேத்ரம் -திருமலை -பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
புரிந்து மத வேழம் மாப்பிடியோடூடி திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் வெண் கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே
மேல் ஒரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை -பேயாழ்வார் -45-
ஸ்ரீ பூமிப் பிராட்டியை ரசித்தவன் உடைய திருமலை என்று அருளிச் செய்கிறார் –

இந்த ஸ்வேத வராஹ கல்பத்தில் -வெண்மையான பன்றி யுடைய கல்பம் -ஆதி திரு வெள்ளறையில் சேவை சாதிக்கின்றான்
சிபிச் சக்கரவர்த்தி -இஷ்வாகு குல மன்னவன் -சாஷாத் கரித்தான் புண்டரீகாஷனாய் சேவை –
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி யன்று
இரு நிலம் இடந்தவனே –திரு வெள்ளறை நின்றவனே –பெரிய திருமொழி -5-3-5-
எம்பெருமான் உம்பர் ஆளும் அரனே ஆதிவராகம் முன்னானாய் -பெரிய திருமொழி -7-7-4-
உலகு ஏழு உடனே –ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி -பெரிய திருமொழி -11-4-3-
ஸ்ரீ வில்லிபுத்தூர் -தஞ்சை மா மணிக் கோயில் -திருக் குருகூர் -ஆகியவையும் ஆதி வராஹ ஷேத்ரங்கள் –
பழைமையானவன் – மூத்தோன் -காரணத்வன் -ஆதி வராஹனே தாம் கண்ட நல்ல புகலாக ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் –

ஸாம ஸ்வரத்வநி ஸ்ரீ மான் ஜகர்ஜ பரிகர்கரம்
தத சமுத் ஷிப்ய தராம் ஸ்வ தம்ஷ்ட்ர்யா மஹா வராஹா ஸ்புடத்லோசன
ரசாதலாது த்பலா பத்ர சந்நிப சமுத்திதோ நீல இவாசலோ மஹான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-25/26

சாம வேத த்வனி போன்ற கர்ஜனை -நீலோத்பல இலை போன்ற கரு நீல வர்ணர்-திருவாயில் இருந்து
எழுந்த பெரும் மூச்சினால் எழுந்த நீர்த் திவலைகள் ஐந்தாவது லோகம் -ஜனர் லோகம் -சனந்தனாதி யோகிகளை புனிதப்படுத்தின -என்கிறார்

மஹா வராஹா ஸ்புடத்லோசன -என்பதையே நம்மாழ்வார் -பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம்
நம்மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -திருவிருத்தம் -45-என்று அருளிச் செய்கிறார் –

குரமத்யகதோ யஸ்ய மேரு கண கணா யதே -என்பதையே திருமங்கை ஆழ்வார்
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பப் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர் -பெரியதிருமொழி -4-4-8-

பன்மடங்கி பெருத்து பூமியை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து அருளியதை நம்மாழ்வார்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -திருவாய்மொழி -7-4-3-
ரஷிப்பின் ஊற்றம் காட்டி அருளினான் -நாம் கண்ட நல்லது வராஹனே -என்பதற்கு இது ஒன்றே போதுமே –

அஹம் ஹி சர்வ யக்ஞா நாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ யஜ்ஞ வராஹன் ஸ்ரீ மூஷ்ணம் –
பாதேஷூ வேதாஸ் தவ யூப தம்ஷ்ட்ர தந்தே ஷூ யக்ஞாஸ் சித யஸ்ஸ வக்த்ரே
ஹூ தாச ஜிஹ்வோ அஸி தநூருஹாணி தர்பா ப்ரபு யக்ஞபுமாம் ஸ்த்வமிவ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-32–36-

நான்கு திருக்கால்களே நான்கு வேதங்கள் -திருக் கோரைப்பற்கள் யூபஸ்தம்பம்
-திருப்பற்களே யாகங்கள் ஹவிஸ்ஸை ச்வீகரிப்பதால் -சிவந்த திரு நாக்கு வேள்வித்தீ -திரு ரோமங்கள் தர்ப்பங்கள் –
யக்ஞகால பகலும் இரவும் இரண்டு திருக் கண்கள் நெய் விடும் உபகரணம் ஸ்ருக் -அவன் திரு மூக்கு -என்கிறார்

இதையே -செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம் புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்பு –முதல் திருவந்தாதி -12-
அவனே அவனை அடையும் வழி-நம் புலன்களை அவன் இடம் சமர்ப்பித்து -அவன் திருமேனியின் சக்தியால் உஜ்ஜீவனம் அடைவோம் என்றவாறு

அகில வல்லி நாச்சியார் நித்ய கல்யாண பெருமாள் -ஸ்ரீ லஷ்மி வராஹர் -திருவிட வெந்தை -திரு வல வெந்தை –
திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளயம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -பெரிய திருமொழி -2-7-1-
சரணாகதி தத்வமே பிராட்டியை முன்னிட்டு நிச்சயம் என்றதாயிற்று –

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட வெந்தாய்
நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ –திருவாய்மொழி –10-10-7-

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்துருவாய் விடந்த இம்மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் – பெரியாழ்வார் –2-10-9-

கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் -திருவாய்மொழி -1-9-2-
கள்ளார் துழாயும்-பெரிய திருமொழி -11-7-6- ஸ்ரீ வராஹ மூர்த்தி கேசவனுக்கே சூட்ட வேண்டும் என்கிறார் திருமங்கை ஆழ்வாரும் –

ஸ்ரீ வராஹ நரசிம்ஹன் -ஸ்ரீ சிம்ஹாசலம் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் எழுப்பி அருளிய திவ்ய ஷேத்ரம் –
அஷய த்ருதீயை மட்டும் சந்தன காப்பு நீக்கி சேவை சாதிக்கிறார்
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாள் எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்–மதிள் அரங்கம் என்னதுவே -பெரியாழ்வார் -4-8-8-
ஸ்வயம் வ்யக்தம் -திவ்ய ஷேத்ரங்கள் -தேவர்கள் பிரதிஷ்டை -ஆகர்ஷம் -முனிவர்கள் பிரதிஷ்டை -மானுஷம் -மனிதர்கள் ஸ்தாபித்தவை –
ஸ்ரீ பத்ரீகாச்ரமம் -ஸ்ரீ சாளக்ராமம் -ஸ்ரீ நைமி சாரண்யம் -ஸ்ரீ புஷ்கரம் -திருவேங்கடம் -திருவரங்கம்
-திரு வானமா மலை -ஸ்ரீ மூஷ்ணம் -எட்டும் ஸ்வய வ்யக்த ஷேத்ரங்கள்
ச்ரியம் முஷ்ணாதி இதி ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ பூ வராஹம் மூலவர் -மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம் -திருமுகம் தெற்கு நோக்கி திரும்பி உள்ளதே
யக்ஞ வராஹ மூர்த்தி உத்சவர் -அம்புஜ வல்லித் தாயார் தனிக் கோயில் நாச்சியார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே -திருவாய்மொழி -2-8-7-

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு –பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் -நாச்சியார் -11-8-

அரவு ஆகிச் சுமத்தியால் அயின் எயிற்றின் ஏந்துதியால் -ஒரு வாயில் விழுங்குதியால் -ஒரு அடியால் ஒளித்தியால்
திருவான நில மகளை இது அறிந்தால் சீறாளோ-மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் -கம்பர் -விராத வதைப் படலம் –

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் -திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரிய தோர் ஏனமாகி இருநிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -பெரியாழ்வார் -4-2-8-
ஸ்ரீ பூமிப் பிராட்டியை மணந்த ஸ்ரீ பூ வராஹன் –
உத்ரு தாசி வராஹேண கிருஷ்ணேன சத பாஹூ னா-தைத்ரிய உபநிஷத் -நூறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ வராஹ மூர்த்தியால்
தூக்கப்பட்ட பூமிதேவியை வணங்குகிறேன்
ஸ்ரீ தொட்டாசார்யர் திருவரசு ஸ்ரீ மூஷ்ணத்தில் உள்ளதாம் –

பத்யுர் தஷிண பாணி பங்கஜ புடே வின்யச்த பாதாம்புஜம் -வாமம் பன்னக சார்வ பௌம சத்ருசம் பர்யங்க யந்தி புஜம் -பூ ஸ்துதி ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ வராஹன் நல்லவனான என்னை காண்பதற்கு முன் பூமா தேவியின் திருவடிகளைப் பற்றச் சொல்லி காட்டி அருளுகிறார்

ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -நம்மாழ்வார்

ஈனமாய வெட்டு நீக்கி ஏதமின்றி போய் -வான மாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம் -114
அவித்யா கர்மா வாசனை ருசி உடல் பிறப்பு மூன்று தாபங்கள் -ஆகிய எட்டையும் நீக்கி
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பரம புருஷார்த்தம் வேண்டுமானால் ஸ்ரீ பூ வராஹ மூர்த்தி திருவடிகளையே வணங்கி வாழ்த்து -என்றவாறு –

ஆசார்யன் மூலமே ஸ்ரீ வராஹ மூர்த்தி திருவடிகளைப் பற்ற வேண்டும்
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேனமாம் பொழில் தண் ஸ் சிரீவர மங்கல த்தவர் கை தொழ வுறை வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளே -திருவாய்மொழி -5-7-6-
ஸ்ரீ வராஹனையே ஸ்ரீ வானமா மலைப் பெருமானாகக் கொள்கிறார் –

அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -என்பதையே
ஸ் திதே மனஸி ஸூஸ் வஸ்தே சரீரே சதியோ நர -தாது சாம்யே ஸ் திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்தம் காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பர மாங்கதிம் -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேறாவே -நாச்சியார் -11-8-

நல்லது -பிரியமாகவும் ஹிதமாகவும் இருக்க வேண்டும் -ஸ்ரீ உடலுக்கும் ஆன்மாவுக்கும் நன்மை செய்ய வேண்டுமே
ஸ்ரீ வராஹ மூர்த்தியை த்யாநித்தால் -இவை கிட்டுமே -இவனையே நான் கண்ட நல்லவன் என்று காட்டி அருளிய நம்மாழ்வாரே நாம் கண்ட நல்லவர் –

தஸ்ய யக்ஞ வராஹஸ்ய விஷ்ணோ அமித தேஜஸே -ப்ரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம-

எல்லையற்ற தேஜஸ் படைத்த ஸ்ரீ யக்ஞ வராஹமாய் திருவவதரித்த விஷ்ணுவுக்கும் அவனைத் தொழும் எவர்க்கும் வணக்கம் –

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading