ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-

பட்டம் ஆட்ச்சி அதிகாரம் ஏற்றுக் கொள்ளும் வர்ணனை

அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேத வாஸிபி:
அந்வய வ்யதிரேகாப்யாம் அந்வயமீயத வைபவம்—-141-

அபீஷ்டே பாதுகா ஸா மே -அடியேனுக்கும் நீயே ஸ்வாமினீ-யஜமாநீ –
எது போல் என்றால்
யஸ்யாஸ் ஸாகேத வாஸிபி:-அயோத்யா வாசிகள் அனைவருக்கும்
அந்வய வ்யதிரேகாப்யாம் -கூடி இருக்கும் போதும் பிரிந்து இருக்கும் போதும்
பெருமாள் இருந்த பொழுது பாதுகா தேவியும் கூட இருக்க மகிழ்ந்து
காட்டுக்குப் போனதும் வருந்த
பாதுகா பட்டாபிஷேகத்தால் இழந்த மகிழ்ச்சி திரும்பினதே
அந்வயமீயத வைபவம்—வைபவத்தை ஊகித்து அறியலாமே –
இவளே ஸ்வாமினீ -யஜமாநீ

பாதுகை இல்லாத போதும், அவள் உள்ள போதும் எப்படிப்பட்ட தாழ்வுகளும், பெருமைகளும் ஏற்படுகிறது
என்பதை அயோத்தி மக்கள் அறிந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட பாதுகை எனக்கு எஜமானியாக உள்ளாள்.

அந்வயம் என்பது மழைக்குப் பின்னர் பயிர் விளையும் என்பது போன்றதாகும்.
வ்யதிரேகம் என்பது மழை இல்லையானால் பயிர் இல்லை என்பதாகும்.
இது போன்று பாதுகை இருந்ததால் பரதன் ராஜ்ஜியம் ஆண்டான்;
பாதுகை இல்லாத காரணத்தினால் இராமனுக்கு ராஜ்யம் கிட்டவில்லை, கானகத்தில் இருந்தான்.

ஸ்ரீ பாதுகை திரு அயோத்தியில் இருந்த போது மகோத்சவமாக இருந்தது –
பெருமாள் உடன் ஸ்ரீ தண்டகாரண்யம் எழுந்து அருளின போது துன்பம் சூழ்ந்தது –
மறுபடி மீண்டும் எழுந்து அருளியதும் மகோத்சவமாக இருந்தது கண்டு
ஸ்ரீ பாதுகையின் பிரபாவம் உணர்ந்தார்கள் –
அந்த ஸ்ரீ பாதுகையே எனக்கு அதீஸ்வரீ-

நம் ஆண்டவன் ஸ்வாமி விளக்கம்
நம் பெருமாள் தோப்புக்கு எழுந்து அருளும் பொழுது திருவிழா
ராஜா -வந்தால் விழாக்கோலம் –
அதே போல் பாதுகா தேவி இருந்தால் விழாக்கோலம் -இல்லை என்றால் வெறுமைக்கோலம்

ஆழ்வார் பரம்
கலியுகம் தொடங்க வாடி இருக்க
நம்மாழ்வார் அவதரிக்க -வாக்குல பூஷண பாஸ்கரர் ஞானம் பக்தி -மதி நலம் நமக்கு அருளி
ஊரும் நாடும் உலகும் தம்மைப் போல் ஆக்கி -மரங்களும் இரங்குமாறு பண்ணி அருளி
உலகமே விழாக் கோலம் -பொலிக பொலிக பொலிக –போயிற்று பல்லுயிர் சாபம் —
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை –கலியும் கெடும் கண்டு கொண்மின் —
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலிய இசை பாடி ஆடி உழி தரக்கண்டோம்
பரகால யதிவராதிகள் ஸூ சகம் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் நாதமுனிக்கு அருளினாரே –

————————————————————————

மோசித ஸ்திர சராந் அயத்நத:
கோஸலாந் ஜந பதாந் உபாஸ்மஹே
யேஷு காம்ச்சந பபூவ வத்ஸராந்
தைவதம் தநுஜ வைரிபாதுகா—-142-

யேஷு காம்ச்சந பபூவ வத்ஸராந்-எந்த நாட்டில் -கோசல நாற்றுத் தலை நகரம் அயோத்தியை
தைவதம் தநுஜ வைரிபாதுகா-நாட்டிலே தெய்வமாக ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ பாதுகா தேவியே
மோசித ஸ்திர சராந் அயத்நத:-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றியது பாதுகா தேவியின் அருளாலே –
இவை யத்னம் ஒன்றுமே செய்யாமல் –
கோஸலாந் ஜந பதாந் உபாஸ்மஹே-இப்படிப்பட்ட கோசல தேசத்தை வணங்குவோம் –
அடியார் அடியார் -ததீய -சராசரங்கள் பாதம் பெற்ற தேசம் -இதுவே உத்தேச்யம்
அதிமானுஷ ஸ்தவம் -30 -கேள்விக்கு பதிலே இந்த ஸ்லோகம் என்பர்
ஞானம் கனிந்த நலம் கொண்ட மக்களுக்கு மோக்ஷம் அவன் தருவான்
ராமனின் கவலையும் தீர்த்து அருளி -இவள் ஆட்சியில் செய்த சராசரங்களும்
ஸாந்தானிக லோகம் அருள தீர்மானம் நிறைவேற்றினான் -என்பர்

இந்தக் கோசல நாட்டில், அசுரர்களின் சத்ருவான இராமனின் பாதுகைகள் ஆராதிக்கப்பட்டு ஆட்சி செய்து வந்தன.
அப்போது அந்த நாட்டில் உள்ள பலரும் மிகவும் எளிதாக, எந்த விதமான யோகங்களும் பெறாமல்,
ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷம் பெற்றனர்.
அப்படிப்பட்ட கோசல நாட்டைத் த்யானிப்போமாக.

பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்த போது, அந்த நாட்டில் வாழ்ந்தவர்கள்
எவ்வித மோக்ஷ உபாயங்களும் இன்றி, மோக்ஷம் கைகூடப் பெற்றனர்.
இப்படிப்பட்ட அந்தப் புண்ணிய பூமியான கோசல நாட்டை வணங்குவோம் என்றார்.

கோசல தேசத்தில் சில வருஷங்கள் ஆட்சி செய்த ஸ்ரீ பாதுகை தான் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு
திரு அயோத்யையில் இருந்த புல் பூண்டுக்கும் கூட கர்ம யோகாதி பிரயாசை இன்றியே மோஷம் தந்து விட்டது
அப்படிப்பட்ட கோசல தேசத்தை கொண்டாடி அடைவோம் –

ஆழ்வார் பரம்
பயன் அன்றாகுலும் நிஷ் பல ஐந்து
பாங்கல்லர் ஆகிலும் -அருளை பெறத் தகுதி இல்லா விட்டாலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
கொள்ளவே -வான் இறுதி -இதற்காகவே என்றவாறு
குருகூர் நம்பியாக அவதரித்ததே இதற்காகவே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும்
சீதாப்பிராட்டிக்கும் -பிரகலாதாழ்வானுக்கும் -விபீஷண ஆழ்வானுக்கும் -ஆழ்வாருக்கும் -ராமானுஜருக்குமே இந்த குணம் –

வம்சம் ரகோர் அநு ஜிக்ருஷுர் இஹ அவதீர்ண
திவ்யைர் வவர்ஷித ததா அத்ர பவத் குணவ்கை
த்வத் சந்நிதி பிரபவ சைத்ய ஜூஷோ யதாஹி
வ்ருஷாச் ச தாந்தி மல பந்த பவத் வியோக–-ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்–30-

ஹே ராம
வம்சம் ரகோர் –ரகு வம்சத்தை
அநு ஜிக்ருஷுர் –அனுக்ரஹிக்க விரும்பி
இஹ அவதீர்ண தவம் –இந்நிலத்தில் அவதரித்த நீ
அத்ர–இவ்விடத்தில்
திவ்யைர் பவத் குண ஓகை–திவ்யமான உனது குண ப்ரவாஹங்களைக் கொண்டு
வவர்ஷித ததா –அப்படி வர்ஷித்தாய் –
எப்படி என்னில்
த்வத் சந்நிதி பிரபவ சைத்ய ஜூஷோ –உன்னுடைய சந்நிதானத்தாலே உண்டான குளிர்ச்சியை அடைந்த
வ்ருஷாச் ச–பவத் வியோக—மரங்களும் உன்னை விட்டுப் பிரிந்த காலத்திலேயே
யதாஹி தாந்திம் அல பந்த –எப்படிப்பட்ட வாட்டம் அடைந்தனவோ

பெருமாளுடைய சன்னிதானம் தாரகமாக செழித்துக் கிடந்தவை
வியோகத்தில் உலர்ந்து வாடிப் போயினவே
விஸ்லேஷத்தில் வருந்தியும் -புண்யா புஷ்பித கான -சைத்ர மாஸம் –
வ்ருஷா பரிம் லாநா –ஸம்ஸ்லேஷத்தில் பூரித்தும் இருந்தனவே –
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன்
பரம பக்தியை த்ருணாதிகளுக்கு உண்டாக்கி தேவரீர் முக்தி அளித்தீர் என்கிறார் யாயிற்று

உனது கடாக்ஷம் பெறாத நான் இங்கே உலர்ந்து வாடி அன்றோ இருக்கிறேன்
உனது கடாக்ஷம் என்று பெறப் போகிறேன் -என்று கீழ் ஸ்லோகத்துடன் அந்வயம்

—————————————————————————————-

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸ ஜநோசிதா த்வம்
ராமேண ஸத்ய வசஸா பரதாய தத்தா
ஸ த்வாம் நிவேச்ய சரணாவநி பத்ர பீடே
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யச: விபூதிம்—-143-

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸ ஜநோசிதா த்வம்- தொண்டனுக்கு ஏற்ற அடி சூடும் அரசு சூடவே –
பூமி சாம்ராஜ்யம் -கீர்த்தி சாம்ராஜ்யமும் தன்னடையே வருமே
ராமேண ஸத்ய வசஸா பரதாய தத்தா–பெருமாளால் கொடுக்கப் பெற்றதால்
ஸ த்வாம் நிவேச்ய சரணாவநி பத்ர பீடே-உன்னை ஸிம்ஹாஸனத்திலே அமர்த்தி
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யச: விபூதிம்-பூமி சாம்ராஜ்யமும் கீர்த்தி-புகழ் சாம்ராஜ்யமும் பெற்றானே –

எம்பெருமானின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே!
ஸத்ய வாக்கு கொண்டவனாகிய இராமனால், அடியார்களுக்கு அளிக்கப்படத் தகுந்தவளாகிய நீ,
ராஜ்ய லக்ஷ்மியாகப் பரதனிடம் அளிக்கப்பட்டாய்.
இப்படியாக வந்த உன்னைப் பரதன் உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்தான்.
இதன் மூலம் இந்த உலகைக் காத்தான். இதனால் ஒப்பற்ற புகழ் பெற்றான்.

இங்கு பரதன் புகழ் பெற்றான் என்று கூறுவதன் கருத்து என்ன?
பாதுகையை இராமனிடம் பெற்று, அவளை அரியணையில் பரதன் அமர்த்தவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் – இராமனின் அரியணையைப் பரதன் அபகரித்தான் என்னும் பழி அல்லவா வந்திருக்கும்?
ஆனால் பாதுகையை அரியணையில் எழுந்தருளச் செய்ததால், இங்கு புகழ் அல்லவா கிட்டியது!

ஸ்ரீ பாதுகையே உன்னை சிம்ஹாசனத்தில் ஏற்று ஸ்ரீ பரதாழ்வான் தான் உனது ஏவுதலில் ஆஜ்ஞை செய்து
அளவற்ற கீர்த்தியையும் ஆளும் அதிகாரத்துடன் பெற்றான் –

ஆழ்வார் பரம்
ப்ரபந்ந சாம்ராஜ்யம்
ஆழ்வார் திருவடி பெற்றாலே வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
மதுரகவி சொல் நம்புவார் பதி வைகுந்தம் ஆகுமே
ஆசார்ய பக்தி உள்ளவன் அரசனைப் போன்ற செல்வமும் கீர்த்தியும் பெறுகிறான் என்றவாறு –

—————————————————————————–

சித்ர கூடத்தில் கொடுத்த பின்பு தான் பரதாழ்வான் பாதுகா தேவி ஆஸ்ரயித்தான் என்று இல்லையே
முன்பே வழி பட்டானே
நீயே ஆறும் பேறும் என்று முன்பே ஆஸ்ரயித்தான்
ஆகவே வலிய ஸாம்ராஜ்யங்களை அளித்தாயே

போகாந் அநந்ய மநஸாம் மணி பாதுகே த்வம்
புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்க ஸித்தாந்
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜ்ஜநீயம்—-144-

போகாந் அநந்ய மநஸாம் மணி பாதுகே த்வம்–ஆறும் பேறும் நீயே என்று இருந்த
புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்க ஸித்தாந்-இலவசமாக ஐஹிக பலன்களையும் கேட்க்காமல் அருளி
நின்னையே தான் வேண்டி –நீள் செல்வம் வேண்டா -என்றால் -தான் வேண்டும் செல்வம் போல் –
தானே இவனைத் தேடி வருமே -ஆகவே நின்னையே தாள் வேண்டி நிற்பன் அடியேனே
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ–நிச்சயமாக உன்னை முன்பே வழி பட்டான் என்பேன் -அதனாலேயே
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜ்ஜநீயம்–பிரார்த்திக்காமலே -இவனால் தவிர்க்க முடியாதபடி
முடி சூடப் பெற்றானே -வர்ஜனம் பண்ண முடியாதே –

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது –
அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது!
இதனால் தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே,
உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை,
அவர்கள் கேட்காமலேயே அடைந்து விடுகின்றனர்.
இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை ஆராதித்து அநந்ய பிரயோஜனராய் உள்ளவர்களுக்கு
தானாகவே அனைத்து போகங்களும் வந்து சேர்கின்றன –
இவ்வாறு ஸ்ரீ பரதாழ்வானுக்கு ராஜ்ய அதிகாரம் அவன் கேட்காமலேயே விட முடியாததாக வந்து சேர்ந்தது –

ஆழ்வார் பரம்
இஹ பர -செல்வம் மற்றும் அல்ல -அவரே எல்லா செல்வம்
மாதா பிதா யுவ -தனயா –சர்வம் -வகுளாபிராமம் -ஆளவந்தார்
சடகோபன் அந்தாதி நிகமன பாசுரம்
உரு பெரும் செல்வமும் பூ மகள் நாதனும் -செந்தமிழ் ஆரணமே -ராமானுஜர்

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்.–சடகோபன் அந்தாதி- 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

——————————————————————–

ராம ப்ரயாண ஜநிதம் வ்யபநீய சோகம்
ரத்நாஸநே ஸ்திதவதீ மணி பாத ரக்ஷே
ப்ருத்வீம் நிஜேந யசஸா விஹித உத்தரீயாம்
ஏகாத பத்ர திலகாம் பவதீ விதேநே—-145-

ராம ப்ரயாண ஜநிதம் வ்யபநீய சோகம்–சோகத்தை அடக்கிக் கொண்டு
ரத்நாஸநே ஸ்திதவதீ மணி பாத ரக்ஷே-ரத்நாசனம்
ப்ருத்வீம் நிஜேந யசஸா விஹித உத்தரீயாம்-வஸ்திரமாக
ஏகாத பத்ர திலகாம் பவதீ விதேநே-திலகமாக

பெருமாளைப் பிரிந்து வருந்தி இருந்தாலும் சிம்ஹாசனத்தில் வீற்று இருந்து
கஷ்டமான நிலையில் நீ பட்டாபிஷேகத்துக்கு ஒத்துக் கொண்டதே பூமா தேவியின் வருத்தம் தீர்க்கவே
புகழ் தானே பூமிக்கு மேல் வஸ்திரம்
வெண் கொற்றக்கொடை திலகம் போல் ஆனதே –
க்ஷேமம் அருளினாய்

ஸ்ரீ பாதுகையே ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருந்து நீ பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் சென்றமையால்
உண்டான பூமியின் வருத்தத்தை போக்கி உன் கீர்த்தியான வஸ்த்ரத்தினால் அவருக்கு மேலாடை அணிவித்து
வெண் கொற்றக் குடையினால் திலகமும் அணிவித்தாய் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நீ இராமனை விட்டுப் பிரிந்து வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டாய்.
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இராமனைப் பிரிந்த உலகின் துக்கத்தை நீக்கினாய் .
உனது கீர்த்தி என்பதையே பூமிக்கு உடையாக உடுத்தி விட்டாய்.
உனது ஆட்சி என்ற வெண் கொற்றக் குடையை, நெற்றியில் பொட்டு போன்று பூமியை இட்டுக் கொள்ளச் செய்தாய்.

இங்கு இராமனைப் பிரிந்த துன்பம் தாங்காமல் அயோத்தி மண்ணானது வருந்துவதைக் கூறுகிறார்.
பூமியாகிய இவள் அந்தத் துன்பம் தாளாமல் சரியாக ஆடை உடுத்துவதில்லை,
நெற்றியில் பொட்டும் வைத்துக் கொள்வதில்லை.
பாதுகையும் இராமனைப் பிரிய நேரிட்டபோது, இதே துன்பங்களை அடைந்தாள்.
ஆயினும் தனது துயரத்தை மறைத்துக் கொண்டு அயோத்திக்கு உதவினாள்.

ஆழ்வார் பரம்
நித்ய ஸூரிகள் ஓலக்கத்தில் பக்த பாகவத அடியார் உடன் இருந்த இருப்பைப் பிரிந்து
இனி இனி என்று இருப்பதின் கால் கதறி
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல் -கண்ணநீர் கைகளால் இறைத்து –
காவேரியில் சேர்த்து -தாமிடப்பரணி கண்ணநீறாகப் பெருகி வழிந்து இங்கு
தாமரைக்கண் என்றே-என்று இல்லை -சொல்ல முடியாமல் தளர்ந்து –
அந்த துக்கம் பொறுத்து
ஞானம் வஸ்திரம்
பக்தி குடையே திலகம்

——————————————————————————–

ராம ஆஜ்ஞயா பரவதீ பரிக்ருஹ்ய ராஜ்யம்
ரத்நாஸநம் ரகு குல உசிதம் ஆஸ்ரயந்தீ
சுத்தாம் பதாவநி புந: பவதீ விதேநே
ஸ்வாதந்த்ர்ய லேச கலுஷாம் பரதஸ்ய கீர்த்திம்—-146-

ராம ஆஜ்ஞயா -பெருமாளுடைய கட்டளைக்கு
பரவதீ பரிக்ருஹ்ய ராஜ்யம்-கட்டுப்பட்டு ராஜ்ஜியம் ஏற்றுக்கொண்டு
ரத்நாஸநம் ரகு குல உசிதம் ஆஸ்ரயந்தீ-ரத்ன மயமான சிம்ஹாசனமத்தை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்தாயே
பரதந்த்ரம் காட்டி அருளினாய் அன்றோ இத்தால்
சுத்தாம் பதாவநி புந: பவதீ விதேநே-பரதன் புகழை மீண்டும் நிலை நிறுத்தினாய் அன்றோ –
ஸ்வாதந்த்ர்ய லேச கலுஷாம் பரதஸ்ய கீர்த்திம்-ஆணை மீறினால் என்ற சிறு களங்கமும் வாராமல் நீ அன்றோ -ரக்ஷித்து அருளினாய்
லேசம் -கிஞ்சித் -இருந்ததே -ஸிம்ஹம் இருக்க வேண்டிய இடத்தில் சொத்தான அடி நாய் அமர்வதா –

நம்மாண்டவன் -நிர்வாகம்
பரதாழ்வான்-பெருமாள் சம்வாதம் -அஸ்வபதி தாத்தா இடம் வாக்கு -கைகேயி மணம் செய்யும் பொழுது
அந்த விஷயம் இப்பொழுது தான் சுமந்திரன் சொல்ல நான் அறிந்தேன்
நல்ல வேளை கைகேயி காத்து –
பரதன் -இது என் ராஜ்ஜியம் தர வாங்கு என்ன
வாங்கும் நிலையில் நான் இல்லை -தந்தை வாக்கு
உனது வன வாசம் நான் கொள்கிறேன் என்ன
ஆரம்பித்த நானே விரதம் முடிக்க வேண்டும் என்ன
இங்கேயே உயிர் விடுவேன்
தவறு -மந்தாகினி குளித்து பிராயச்சித்தம் செய் என்ன
வந்த அயோத்யா மக்கள் பரதனை வாக்குவாதம் பண்ணுவதாக எண்ணி குறை சொல்ல
பாதுகா தேவி கிடைத்ததும் அதே மக்கள் இவனால் தானே நாம் இந்த செல்வம்-பாதுகா தேவி ராஜ்ஜியம் – பெற்றோம்
இவன் வாதம் நல்லது தானே என்று குறை சொன்னவர்கள் கொண்டாடினார்கள் –

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பவளே! பாதுகையே!
இராமனின் ஆணையை ஏற்றுக் கொண்ட நீ, ரகு வம்சத்திற்கு மட்டுமே உரித்தான ஸிம்ஹாஸனத்தை அடைந்து,
பட்டத்தை ஏற்றுக் கொண்டாய்.
இராமனின் சொல்லையும் சமாதானங்களையும் கேட்காமல் இருந்த பரதன் சற்று கலக்கம் அடைந்திருந்தான்.
அந்தக் கலக்கம் நீங்கும்படியாகவும், கீர்த்தி பெறும்படியாகவும் நீ செய்தாய்.

இராமனின் ஆணையை பரதன் மீறினான், பரதன் தன் விருப்பப்படி ஸ்வதந்திரமானவனாக செயல்பட்டான்
என்ற பழிச்சொல் பரதனுக்கு வராமல், புகழை வந்து சேரும்படியாகப் பாதுகை செய்தாள்.

ஸ்ரீ பாதுகையே -நீ பெருமாள் உடைய ஆஜ்ஞையைப் படிந்து ரகு வம்சத்தவர்களுக்கு உரிய ரத்னாசனத்தில் அமர்ந்தாய் –
ஸ்ரீ பரதாழ்வனோ பெருமாள் நியமித்தும் அரசேற்க மறுத்தான் –
அதனால் உண்டான ஸ்வாதந்த்ர்யத்தினால் கலங்கி இருந்த கீர்த்தி இப்பொழுது உன்னால் பரிசித்தம் ஆயிற்று –
ஸ்ரீ பரதாழ்வான் உடைய பிடிவாதம் கண்டு முதலில் ஜனங்கள் வருந்தினாலும்
பிறகு உண்டான அதன் பலனைக் கண்டு ஸ்ரீ பரதாழ்வானை புகழ்ந்தனர் –

ஆழ்வார் பரம்
பண் தூய்மை பெற்றது -தமிழுக்கு -வேதங்களுக்கு மண் விசும்பும் உலகம் தூய்மை பெற்றனவே

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே.–ஸ்ரீ சடகோபர் அந்தாதி–39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

செவிக்கு இனிய செஞ்சொல் -கேட்டார் ஆரார் வானவர்கள் – –
தெளியாத மறை நிலைகள் தெளிந்தோமே -கலியுக இருள் போனதால்
பொலிக பொலிக பொலிக –இசை பாடி ஆடி –
யோகிகள் -இனிய எளிய அமுத மொழிகளால் தங்கள் கண்டதை விளக்கி மக்களைத் திருத்தலாமே
இவர்கள் தவத்தின் மொத்த வடிவமே ஆழ்வார்

———————————————————————————-

பூங்கொத்து போல் ராவணன் தலைகள் -கிள்ளிக் களைந்தானை –
பூ கொய்வது போல் பெருமாள் பறிக்க -பயிற்சி -தண்ட காரண்யத்தில் பூ பறித்தான்

பௌலஸ்த்ய வீர வதநஸ்த பகா வஸாநாத்
புஷ்பாணி தண்ட கவ நேஷு அபசேதும் இச்சோ:
ரக்ஷா துரம் த்ருதவதீ மணி பாதுகே த்வம்
ராமஸ்ய மைதில ஸுதா ஸஹிதே ப்ரசாரே—-147-

பௌலஸ்த்ய வீர வதநஸ்த பகா வஸாநாத்-புலஸ்திய வம்சம் -தபகம் பூங்கொத்து
புஷ்பாணி தண்ட கவ நேஷு அபசேதும் இச்சோ:-அதுக்காகவே தண்டகாரண்ய வாஸத்தில் பூ பறித்து அவளுக்கு சூடினான்
ரக்ஷா துரம் த்ருதவதீ மணி பாதுகே த்வம்-உன்னை ரக்ஷிக்கும் பாரம் தாங்க வைத்து –
முதலில் பாதுகா பட்டாபிஷேகம் செய்து வைத்தான்
ராமஸ்ய மைதில ஸுதா ஸஹிதே ப்ரசாரே–மிதிலை மன்னன் திருமகள் உடன் சஞ்சாரம்

பூ கொய்ய பயிற்சி வேண்டுமா என்னில் -வியாஜ்யம் மாத்ரமே –
நாம் பகவானை நாடும் பொழுது -நல்ல ஆச்சார்யர்களைக் காட்டிக் கொடுத்து
உபதேசம் கடாக்ஷம் – ஸத் பாத்திரமாகி நல்ல பக்குவம்
பூ பறிப்பது போல் -மறைந்து தான் கவனித்து இருப்பான்
பாதுகா தேவி தானே ஆச்சார்யர் ஸ்தானம்

இரத்தினக் கற்கள் கொண்ட பாதுகையே! இராவணனின் தலைகள் என்ற மலர்களைப் பறிக்க இராமன் எண்ணினான்.
இதனால் அல்லவா அவன் சீதையுடன் தண்டகாரண்யம் புகுந்து, அங்கிருந்த மலர்களைக் கொய்தபடி இருந்தான்?
அந்த நேரத்தில் நீ பூமியின் பாரத்தைச் சுமக்கும் வகையில் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய்.
இதனால் தான் இராமன் கவலை இன்றி கானகத்தில் ஸஞ்சாரம் செய்தான்.

மலரைக் கொய்வதற்கு எந்தவிதமான பெரும் முயற்சியும் அவசியம் இல்லை, மிகவும் எளிதாகவே கொய்யலாம்.
இங்கு இராமன் இராவணனின் தலைகளை அது போன்று எளிதாகக் கொய்ய எண்ணினான் என்று கூறுவதன் மூலம் –
இராமனின் வலிமையை உணர்த்தினார். இராமன் தனது நாட்டுப் பொறுப்புகளை பாதுகையிடம் ஒப்படைத்ததால்,
எந்த விதமான கவலையும் இன்றி இருந்தான்.
இராமனுக்கு இப்படி என்றால், நாமும் நமது சுமைகள் பாதுகையிடம் ஒப்படைக்கலாம் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ராவணனுடைய தலைகளைக் கொத்தாக கொய்வதற்காக முன்னோடியாக
ஸ்ரீ தண்டகா வனத்தில் கர தூஷணாதிகளின் உதிரித் தலைகளைக் கொய்ய விரும்பி
ஸ்ரீ சீதா பிராட்டி யுடன் சென்ற போது அவன் ஏற்க வேண்டிய ராஜ்ய பாரத்தை நீ ஏற்றாய் அன்றோ –

ஆழ்வார் பரம்
அடியார்க்கு அடியார் ஆனபின்பே அங்கீகாரம்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றியே
சடாரி சாதித்து –

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே.–ஸ்ரீ சடகோபர் அந்தாதி- 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்-பக்திக்கடல் இங்கே
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

—————————————————————-

மேரு மலை தங்க ஸிம்ஹாஸனம்
மானஸ சரோவரம்-நீலப்பட்டாடை
தாமரை பாதுகை
சாமரம் ஹம்ஸம் விளையாட்டு

பாதாவநி ப்ரசல சாமர ப்ருந்த மத்யே
பத்ராஸந ஆஸ்தர கதா பவதீ விரேஜே
ஆகீர்ண திவ்ய ஸலிலே கடகே ஸுமேரோ:
அம்போஜி நீவ கலஹாயித ஹம்ஸ யூதா—-148-

பாதாவநி ப்ரசல சாமர ப்ருந்த மத்யே–வீசப்படும் சரக் கூட்டங்களுக்கு நடுவில்
பத்ராஸந ஆஸ்தர கதா பவதீ விரேஜே-பொன்மயமான சிம்ஹாசனத்தில் மெத்தை மேல்
ஆகீர்ண திவ்ய ஸலிலே கடகே ஸுமேரோ:- மேரு மலை தாழ் வரையில்
அம்போஜி நீவ கலஹாயித ஹம்ஸ யூதா–தாமரை போல் செந் -ஹம்ஸ விளையாட்டு போல்

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
அசைந்து கொண்டுள்ள சாமரங்களின் நடுவில் ஸிம்ஹாஸனம் உள்ளது.
அதன் மீது இருந்த மெத்தையில் நீ அமர்ந்துள்ளாய்.
இதனைக் காணும்போது எவ்விதம் இருந்தது என்றால் –
தங்க மயமாக உள்ள மேரு மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில்,
தாமரை மலர்கள் அசைந்தபடி உள்ளன;
அவற்றின் மீது உள்ள அன்னங்கள் சண்டை யிடுவதைப் போன்று இருந்தது.

இங்கு மேரு மலையை ஸிம்ஹாஸனம் என்றும்,
குளத்தின் நீர்ப்பரப்பு என்பதை மெத்தை என்றும்,
தாமரை என்பதைப் பாதுகை என்றும்,
அன்னம் என்பதை பாதுகைக்கு வீசப்படும் சாமரங்கள் என்றும் கொண்டார்.

ஸ்ரீ பாதுகையே தங்க சிம்ஹாசனத்தில் அசையும் இரு சாமரங்களின் நடுவில்
வீற்று இருக்கும் நீ மேரு மலையின் தாழ் வரையில் உள்ள சண்டையிடும் ஹம்சங்களை
இரு பக்கமும் கொண்ட தாமரை ஓடை போல் விளங்குகிறாய் –

ஆழ்வார் பரம்
பொன் மயமான -திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
தெளிந்த நீரோடை –மயர்வற மதி நலம் அருளி -தெளிவான ஞானம் -ஹ்ருதய கிரந்தி அவிழ –
ஐயப்பாடு அறுத்து -தன் பால் ஆதாரம் பெருக வைப்பான் – அரங்கன் அழகன் தானே –
பக்தி செந்தாமரை -சேமுஷீ பக்தி ரூபா -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பக்தியின் வடிவமே ஆழ்வார்
பரம ஹம்ஸம் -நாதமுனிகள் போல்வார் பருகி விளையாடுவார்கள்
அருளிச் செயல்களில் பொழுது போக்காகக் கொண்டு போத யந்த பரஸ்பரம் –

————————————————————————-

மாந்யே ரகூத்வஹ பதே மணி த்வாம்
விந்யஸ்ய விக்ரஹ வதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்
ஆலோலம் அக்ஷவலயீ பரதோ ஜடாவாந்
ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா: ஸிஷேவே—-149-

மாந்யே ரகூத்வஹ பதே மணி த்வாம்–மிகவும் மதிக்கத்தக்க ரகுகுல ராமன் ஸ்தானத்தில்
விந்யஸ்ய விக்ரஹ வதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்–ராஜ்ய லஷ்மீ வடிவமே ஸ்ரீ பாதுகா தேவி
ஆலோலம் அக்ஷவலயீ பரதோ ஜடாவாந்-ஜபமாலை கையிலே -தலையிலே ஜடாமுடி
ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா: ஸிஷேவே- அநந்ய -உன்னையே -ராமனையும் விட்டு -சாமரம் வீசிக்கொண்டே இருந்தானே –

மாணிக்கக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இராமானின் இடத்தில் உன்னைப் பரதன் அமர வைத்தான்.
இதனைக் காணும் போது, ராஜ்ய லக்ஷ்மியே உருவம் எடுத்து
ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்தது போன்று நீ காணப்பட்டாய்.
அந்த நேரத்தில் தலையில் ஜடாமுடியும், கையில் ஜப மாலையும் உள்ள பரதன்,
தனது மனதை வேறு எங்கும் செலுத்தாதபடி, உன்னைத் த்யானித்தபடி சாமரம் வீசினான்.

இராமன் பூண்ட தவக் கோலத்தைப் பரதனும் உடனேயே கொண்டான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே ராஜ்ய லஷ்மியின் உருக் கொண்டவள் போன்ற உன்னை
ரகு வம்ச சிம்ஹாசனத்தில் எழுந்து அருளச் செய்து
ஜடை தரித்து ஸ்ரீ பரதாழ்வான் உன்னையே த்யானித்து உனக்குச் சாமரம் போட்டார் –

ஆழ்வார் பரம்
பெருமாள் ஸ்தானத்தில் ஆழ்வார்
கார்த்திகைத் தீபம் -திருமங்கை ஆழ்வார் -வாழ்ந்த காலம் -சக்கரத்து ஆழ்வார் சந்நிதி அருகில் நம்பெருமாள்
திரு நெடும் தாண்டகம் அருளி -மயக்கி -வரம் கேட்டு -அத்யயனம் உத்சவம் பண்ணி வைக்க பிரார்த்தித்து –
வழக்கு ஒழிந்து போகாமல் வேதங்கள் போல் இவற்றையும் செவி சாய்த்து அருள –
அவனது தோளுக்கு இனியானைக் கொடுத்து ஆழ்வாரை எழுந்து அருளப் பண்ணி
பாதுகை பெருமாள் ஸ்தானம் போல் ஆழ்வார் பெருமாள் ஸ்தானம் இங்கு
முத்தங்கி -நம் பெருமாள்
ரத்னாங்கி -பெரிய பெருமாள்
திருவடி தொழுதல்
பின்பு தை ஹஸ்தம் திரும்பி –
பின்பு நாதமுனிகள்-அருளிச் செயலை மீட்டு அரையர் சேவையுடன் -தாளம் வழங்கி தமிழ் மறை – –
பெரிய திருமொழி முதலாக அனைத்தும் –பகல் பத்து இராப்பத்து –
பின்பு ராமானுஜர் ஆழ்வார் ப்ரதிஷ்டை திருவரங்கத்தில் –

——————————————————————————————-

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே
பர்யாகுலேஷு ப்ருசம் உத்தர கோஸலேஷு
த்வம் சேத் உபேக்ஷி தவதீ க இவ அபவிஷ்யத்
கோபாயிதும் குஹ சகஸ்ய விபோ: பதம் தத்—-150-

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே-தசரதர் வணக்கம் போக -பரதன் ராஜ்ஜியம் ஏற்றுக்கொள்ளாமல்
பர்யாகுலேஷு ப்ருசம் உத்தர கோஸலேஷு-மக்கள் வருந்தி இருக்க
த்வம் சேத் உபேக்ஷி தவதீ க இவ அபவிஷ்யத்-நீயும் மறுத்து இருந்தால் வேறே யார் தான்
கோபாயிதும் குஹ சகஸ்ய விபோ: பதம் தத்-ராமன் பதம் என்னாமல் குஹ சஹன் —
நாட்டார் நன்மையைப் பாராமல் அவன் நன்மையையே பார்த்து கானகம் போனார்
உன்னைத் தவிர வேறு யார் தான் ரக்ஷகர் ஆவார்

தசரதன் ஸ்வர்க்க லோகம் அடைந்தார். அவர் உயிர் நீங்க, தானே காரணம் என்று வெட்கப்பட்ட பரதன்,
ஸிம்ஹாஸனம் ஏற்காமல் இருந்தான்.
இதனைக் கண்ட அயோத்தி மக்கள் அனைவரும் கலங்கி நின்றனர்.
அப்போது நீயும் ஸிம்ஹாஸனத்தில் அமராமல் இருந்திருந்தால்,
குகனின் நண்பனான இராமனின் ஸிம்ஹாஸனத்தை அலங்கரித்து, அயோத்தியை யார் தான் காப்பாற்ற இயலும்?

இங்கு பாதுகையின் பெருந்தன்மை வெளிப்படுகிறது.
பரதன் தனது வெட்கம் என்னும் சுயநலம் கருதி நாட்டைக் கை விட்டான்.
ஆனால் பாதுகையோ, இராமனைப் பிரிவது மிகவும் கடினமான செயலாக இருந்த போதிலும்,
நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு, தனது சுய நலத்தை எண்ணாமல், அயோத்திக்கு வந்தாள்.

ஸ்ரீ பாதுகையே தசரதரும் ஸ்வர்க்கம் சென்று ஸ்ரீ பாரதாழ்வானும் புறக்கணித்த உடன்
கோசல ராஜ்யத்தை நீ மட்டும் ஏற்காது போனால் யார் காப்பாற்றுவார் –

ஆழ்வார் பரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அவதரிக்கா விடில் யார் தான் ரக்ஷகர் ஆவார்

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே.–ஸ்ரீ சடகோபர் அந்தாதி– 78–

பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி
வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்
தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –
நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி
கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு

—————————————————————————————–

ப்ராது: யதம்ப வரஹாத் பரதே விஷண்ணே
தாக்ஷிண்யம் ஆஸ்ரிதவதீ மணி பாதுகே த்வம்
ஆஸீத் அசேஷ ஜகதாம் ஸ்ரவண அம்ருதம் தத்
வாசால காஹளஸஹம் பிருதம் ததா தே—-151-

ப்ராது: யதம்ப வரஹாத் பரதே விஷண்ணே-அம்பா தாயே -அண்ணனுடைய பிரிவாற்றாமை –
விரஹ தானத்தால் வருந்திய பரதாழ்வான் இடம்
தாக்ஷிண்யம் ஆஸ்ரிதவதீ மணி பாதுகே த்வம்-நீயே தான் கருணை காட்டி அருளினாய் –
பெருமாளை விட பரம காருண்யம் உனக்கே –
ஆஸீத் அசேஷ ஜகதாம் ஸ்ரவண அம்ருதம் தத்-முழுவதுமான உலோகர் காதுக்கு அம்ருதம் போல்
வாசால காஹளஸஹம் பிருதம் ததா தே–அப்பொழுது -பட்டம் ஏற்கும் பொழுது -வாத்ய ஒலி-எக்காளம் -வாத்யம் -போல்வன –
விட புலவர் புகழ் பாடல் ஒலி விஞ்சி -மேலோங்கி இருந்ததே -உச்சஸ்தாயி –
உன் விஷயம் விருதூதி பாட -பாதுகா தேவி வந்தாள் போல்வன -திகழ்ந்ததே –
அமுதம் காதில் பாய்ந்தது போல் அன்றோ இருந்தது –

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தாயே! தனது தமையனான் இராமனின் பிரிவு காரணமாகப் பரதன்
மிகவும் துயரம் கொண்டான். அவனுக்காக நீ மீண்டும் அயோத்தி வந்தாய். இவ்விதம் வந்த நீ ஸிம்ஹாஸனம் ஏற்றாய்.
அப்போது எக்காளம் போன்ற வாத்தியங்கள் முழங்கின. இவை உலகினர் அனைவருக்கும்,
அவர்கள் காதுகளுக்கு இன்பம் அளிப்பதாகவும், உனது புகழைப் பறை சாற்றுவதாகவும் அமைந்தன.

பரதனுக்காகவே பாதுகைகள் அயோத்திக்கு வந்ததாகக் கூறுகிறார். இந்த வரவைக் கொண்டாடும் பொருட்டு,
சக்ரவர்த்திகளுக்கு அளிக்கும் மரியாதைகளான எக்காளம் முழங்குதல் முதலானவை காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் பிரிவால் வாடிய ஸ்ரீ பாரதாழ்வானுக்காக நீ பரிவுடன் பட்டத்தை ஏற்ற போது
மங்கள வாத்தியங்களின் முழக்கம் -திருச் சின்ன ஒலி -பிருதங்களைக் கூறுவது போலே
இருந்து மக்களின் காதுகளுக்கு இனியதாக இருந்தது –

ஆழ்வார் பரம்
மதுர கவி ஆழ்வார் விருதூதி -காரி மாறன் வந்தார் -திருவாய் மொழி பெருமாள் வந்தார் -போல்வன
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
சங்கப்பலகை -மற்றவற்றைத் தள்ளி –

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ தாமம் துளவோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கும் உளவோ பெருமான் உனக்கு

ஈ ஆடுவதோ கருதற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ உறுமிப் புலி முன்
நரி கேசரி முன் நடை ஆடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமாள் வகுளா பரணன் அருள் கூர்ந்து ஓவாதுரை
ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே –

சங்கத்தமிழ் புலவர் விருதூத

அத்திகிரி அருளாளப்பெருமாள் வந்தார்
ஆனை, பரி, தேரின்மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம்என ஓலம்இடவல்லார் வந்தார்
உத்தரவேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர்தொழும் கழல்உடையார் வந்தார்தாமே.–திருச்சின்ன மாலை –
அத்திகிரி பெருமாள் வந்தார் -பெருமாளுக்கு தேசிகன் விருதூதினார் அன்றோ

——————————————————————————

ராஜ்யம் ததா தசரதாத் அநு ராமத: ப்ராக்
பிப்ராணயா சரண ரக்ஷிணி வீத கேதம்
துல்யாதிகார பஜநேந பபூவ தந்யோ
வம்சஸ் த்வயா அம்ப மநு வம்ஸ மஹீ பதி நாம்—-152-

ராஜ்யம் ததா -அப்போது -பட்டம் சூடும் வேளையிலே
தசரதாத் அநு ராமத: ப்ராக்-தசரதனுக்குப் பின்னும் -தொடர்ந்து -பெருமாளுக்கு முன்னும்
பிப்ராணயா -ராஜ்ய லஷ்மி வகித்துக் கொண்டு
சரண ரக்ஷிணி -திருவடி ரக்ஷணம் -உலகையே ரக்ஷணம்
வீத கேதம்-வருத்தம் போக்கி அருளி
துல்யாதிகார பஜநேந பபூவ தந்யோ-சமமான ஆட்சி அதிகாரம் ஏற்று
வம்சஸ் த்வயா அம்ப மநு வம்ஸ மஹீ பதி நாம்-இஷ்வாகு குலமே பாக்யம் பெற்றதானதே

ரத்ன ஹாரம் -நடுநாயகம் ராமானுஜர் -திருமுடி திருவடி சம்பந்தத்தால் பெருமை ஆனது போல் –

சரணம் என்று புகுந்தவர்கள் அடையும் இடமான திருவடிகளைக் காப்பவளே! தாயே! பாதுகையே!
தசரதனுக்கு பின்னால் இராமன் ஸிம்ஹாஸனம் அமர வில்லையே என்ற வருத்தத்தை நீ போக்கினாய்.
அந்த ஸிம்ஹாஸனத்தை இராமனுக்கு முன்பாக நீ அலங்கரித்தாய்.
இராமனுக்குப் பின் வந்த மனுகுலத்து அரசர்கள் அனைவரும்,
நீ அமர்ந்து ஆண்ட ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்ததால் மிகவும் பெருமை பெற்றனர்.

இங்கு பாதுகையால் இக்ஷ்வாகு குலத்தின் ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை உண்டானது என்றார்.
இக்ஷ்வாகு குலத்தில் உதித்த இராமனால் அந்த குலத்திற்குப் பெருமை,
இராமனின் பாதுகைகளால் அந்த ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை,
இக்ஷ்வாகு குலதனமான ஸ்ரீரங்கநாதனுக்கு இராமனால் ஆராதிக்கப்பட்டவன் என்பதால் பெருமை –
ஆக, இப்படியாக இராமனாலேயே இக்ஷ்வாகு குலத்திற்குப் பல பெருமைகள் உண்டாயின.
அந்த இராமனின் ஸிம்ஹாஸனத்தின் மூலம், பின்னே வந்த அரசர்களுக்குப் பெருமை ஏற்பட்டது.

ஸ்ரீ பாதுகையே தசரதற்குப் பிறகும் ஸ்ரீ ராமனுக்கும் முன்னும் நீ அரசாட்சியை ஏற்றது அந்த மனு வம்சத்திற்கு
ஓர் விசேஷ பாக்கியம் ஆயிற்று –

ஸ்ரீ நம்மாழ்வார் பிரதம ஆச்சார்யராக பெற்றது நமது குரு பரம்பரைக்கு ஏற்றம் அன்றோ –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆழ்வார் கோஷ்ட்டியில் -ஆச்சார்யர் கோஷ்ட்டியில் –
திவ்ய தம்பதிகளுக்கு பின்னும் ஆச்சார்யர் கோசடிக்கு முன்பும் -நடுவில் இருந்து
நாதனுக்கு நாலாயிரம் அருளி –
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் முதலில் நாதமுனிகள் -யோக நிலையிலே தானே அருளிச் செய்து –

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் நாயக்க ரத்னம்
லஷ்மீ நாத சிந்தவ் இத்யாதி – –கருணைக்கடல் -நம்மாழ்வார் மேகம் -நாதமுனி மலையில் பொழிந்து
இரண்டு அருவிகள் -உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி -காட்டாறு ஆளவந்தார் -ஐந்து ஆச்சார்யர் முகமாக
ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனபதிகள் -மூலம் நம்மை அடையும்படி அருளி –

லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

———————————————————————–

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யு வசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே-சம்பூகன் தவம் செய்த தவறுகள் இல்லையே –
வர்ணாஸ்ரமம் நழுவாமல் இருந்தனர்
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யு வசம் ஜகாம-எந்த சிறுவனையும் -யமனின் வசத்தில் விட வில்லையே –
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே-தாயே -ரகுகுல திலக பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்-இது போல் சரி செய்ய வேண்டிய ஒன்றுமே நிச்சயமாக இல்லையே
ராமா ராஜ்ஜியம் விட ஸ்ரேஷ்டம் என்றவாறு –
குறை சொல்ல இடமே இல்லையே –

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே!
நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர);
எந்தக் குழந்தையும் இறந்து போக வில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.
லவணாசுரன் வ்ருத்தாந்தமும் உண்டே ராம ராஜ்யத்தில்
இது போன்ற குறைகள் இல்லையே

பாதுகையின் ஆட்சியில் எந்தவிதமான குற்றங்களோ அல்லது தோஷங்களோ அயோத்தியைத் தீண்டவில்லை என்றார்.
மக்கள் நிறைவாக இருந்தால், நாட்டில் குற்றங்கள் குறைவது இயல்பே ஆகும்.
இந்த நிலை பாதுகைகள் நாட்டை ஆண்டபோது காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆட்சி காலத்தில் தன் வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி
ஒருவன் தவம் செய்த காரணத்தால் ஒரு குழந்தை இறக்க நேரிட்டது –
உன் ஆட்சி காலத்தில் இது போன்ற தோஷம் எதுவும் நேர வில்லையே –

ஆழ்வார் பரம்
ஆழ்வாரை ஆஸ்ரயித்ததால் பேறு நிச்சயம்
என்றுமே ஆனந்தமே -இங்கு உள்ள பொழுதே –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்கள் பத்து பேரும்
அவர்களை சிரித்து இருப்பார் மதுர கவி ஆழ்வார் மட்டுமே தானே
ஆண்டாள் பிராட்டி அம்சம் –
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையுமே இரு கரையர் என்பாரே
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி -அக்கரையுடன் காக்கும் இக்கரை இவர் ஒருவரே –

—————————————————————–

விஸ்வம் த்வத் ஆஸ்ரித பதாம்புஜ ஸம்பவாயாம்
யஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம் இதம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் அநந்ய சரணா ஸமயே யதாவத்
ஸ அபி த்வயா வஸுமதீ விஹித ப்ரதிஷ்ட்டா—-154-

விஸ்வம் த்வத் ஆஸ்ரித பதாம்புஜ ஸம்பவாயாம்-திருவடியும் பாதுகையை ஆஸ்ரயித்து -ரக்ஷகம் –
உன்னிடம் தோன்றிய பூமா தேவி வருத்தம் பொறுக்காமல் ஆட்சி பொறுப்பு ஏற்றுக்கொண்டு
யஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம் இதம் மணி பாத ரக்ஷே-விஸ்வம் சராசரங்கள் நிலை நிற்கும் படி பண்ணி அருளி
ஆஸீத் அநந்ய சரணா ஸமயே யதாவத்-அக்காலத்தில் வேறு புகலிடம் இல்லாமல் தவித்து இருந்த பூமா தேவியை
ஸ அபி த்வயா வஸுமதீ விஹித ப்ரதிஷ்ட்டா—-நிலை நாட்டப்பட்டாளே –
கைவிடாமல் காத்து அருளினாயே

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்தப் ப்ரபஞ்சம் மிகவும் பெரியது.
ஆயினும் இது, இப்போது உன்னால் காக்கப்படும் திருவடிகளில் இருந்து தோன்றிய பூமியில்,
பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டது. ஏன் ?
இராமன் கானகம் சென்ற போது உன்னைத் தவிர காக்க ஆளில்லாமல் நின்ற பூமியை நீ காப்பாற்றி வந்தாய்.
அதனால் அல்லவோ ப்ரபஞ்சமானது இந்தப் பூமியில் அடைக்கலமாக வைக்கப்பட்டது?

ப்ரபஞ்சத்தில் ஒரு பகுதியாக உள்ள பூமியை நாடி, ப்ரபஞ்சமே வந்தது என்றார்.
இதன் காரணம் பாதுகையின் பாதுகாப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் திருவடியினின்றும் உண்டான ஸ்ரீ பூமி தேவி
பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளியதால் ஆதரவற்று இருந்த போது
அவன் திருவடி சம்பந்தம் பெற்ற உன்னால் அன்றோ காப்பாற்றப் பட்டது –

ஆழ்வார் பரம்
கலியுகம் -கோலாகலம் காக்கவே அவதாரம் –
அடியார் அடியார் அடியோங்களை ரக்ஷணம் நிச்சயம்

—————————————————————-

ப்ராயேண ராம விரஹ வ்யதிதா ததாநீம்
உத்ஸங்கம் ஆஸ்ரிதவதீ தவ ராஜ்ய லக்ஷ்மீ:
தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம்
அங்கீசகார பவதீ பரதோப நீதாம்—-155-

ப்ராயேண -perhaps
ராம விரஹ வ்யதிதா ததாநீம்-ராம விரஹத்தால்
உத்ஸங்கம் ஆஸ்ரிதவதீ தவ ராஜ்ய லக்ஷ்மீ:-ராஜ்ய லஷ்மி உனது மடியில் ஆஸ்ரயிக்க
தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம்-அவளை உயிர் கொடுத்து விளித்து எழவே -பன்னீர் -குளிர்ந்த விசிறி உபசாரம்
அங்கீசகார பவதீ பரதோப நீதாம்- பரதாழ்வான் செய்ய ஏற்றுக் கொண்டாய்

தாயே! பாதுகாதேவீ ! இராமன் கானகம் புறப்பட்டவுடன் அயோத்தி என்ற ராஜ்யலக்ஷ்மி மயக்கம் அடைந்து சாய்ந்தாள்.
அவள் உன் மடி மீது வந்து சேர்ந்தாள். அப்போது பரதன் உனக்கு வீசிய விசிறியின் ஈரம் மூலமாகவே
ராஜ்ய லக்ஷ்மியின் மயக்கம் தெளிய வைத்தாய் அன்றோ?

உன்னைச் சரணம் புகுந்த ராஜ்ய லக்ஷ்மியை நீ காக்க எண்ணினாய்.
இதனால் தான் நீ, பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய் அல்லவா?
“பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய்” – என்பதன் கருத்து என்ன?
பொதுவாக மன்னர்களுக்கு விசிறி வீசுவது வழக்கமாகும்.
இங்கு பாதுகை அரியணையில் அரசியாக அமர முன் வந்தாள் என்பதை இவ்விதம் ஸூசகமாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பிரிவால் வருந்திய ராஜ லஷ்மீ உன் மடியில் விழுந்தாள்-
அவளைப் பிழைப்பூட்ட நீ ஸ்ரீ பரதாழ்வான் உடைய குளிர்ந்த சாமர கைங்கர்யத்தை ஏற்றாய் –
ஆச்சாயர் சிஷ்யனுடைய ஷேமதிற்காகவே அவன் உபசாரத்தை ஏற்கிறார் என்றவாறு –

ஆழ்வார் பரம்
நாம் ஆழ்வாரைக் கொண்டாடுவது பகவத் உகப்புக்காகவே –
அதன் மூலம் நாம் பெரும் நன்மைக்காகவே ஆழ்வார் ஏற்கிறார் –

—————————————————————–

மூன்று விரதங்கள் இதில்
ராமர் விரதம் -வீர விரதம் சரணாகத ரக்ஷணம் தீஷிதம்
பரத விரதம்-வ்ரதம் ஆஸிதாரம் -விஷயாந்த சுகங்கள் த்யாஜ்யம்
பாதுகா தேவி விரதம்-ஒரே இடத்தில் இருப்பது -ஸஞ்சாரம் தவிர்ந்து -ஏகாஸிகா வ்ரதம்-

வீர வ்ரத ப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்
ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம்
த்யக்த்வா பதாவநி ததா விவிதாந் விஹாராந்
ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம்—-156-

வீர வ்ரத ப்ரணயிநி -அசுரர் ராக்ஷசர் தீய சக்திகளை அழிக்கும் விரதத்தில் ஆசை கொண்டு
ப்ரதமே ரகூணாம்-ரகுகுல திலகம்-ராகவன்
ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம்–உலகியல் இன்பம் அனுபவிக்காமல் -உலகிலே இருந்தும் -கண் வைக்காமல்
ராமனை அல்லது மாற்று ஒன்றும் அறியாத –
சிரஞ்சீவி நீண்ட காலங்களிலும் இப்படியே இருந்தான் அன்றோ
த்யக்த்வா பதாவநி -ராகவன் திருவடிகளை ரக்ஷிக்க இருக்க வேண்டி இருக்க – அத்தை விட்டு
ததா விவிதாந் விஹாராந்-பலவகை சஞ்சாரங்களைத் துரந்து
ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம்-புதிதாக இயற்கை இல்லாமல் ஒரே இடத்தில்
சஞ்சாரம் தவிர்ந்து மேற்கொண்டாயே
அயோத்யா மக்களை -பெருமாள் அடியார்களை
திண் கழலாய் இருந்து ரக்ஷித்தாயே –
லோக ஷேமத்துக்காக இந்த விரதம் –

பாதுகையே! இராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும்,
உலகைக் காப்பதற்காக அசுரர்களை அழிக்கவும் சபதம் மேற்கொண்டான்.
இவற்றை முடிக்கும் வரை அயோத்தி திரும்புவதில்லை என்ற விரதம் பூண்டான்.
அனைத்து விஷயங்களும் அருகில் உள்ள போதும்,
அவற்றை அனுபவிக்கப் போவதில்லை என்று பரதன் விரதம் பூண்டான்.
நீ செய்தது என்ன –
இராமனின் திருவடிகள் மீது மிகவும் ப்ரியம் உள்ள நீ, அவற்றைத் துறந்து,
ஒரே இடத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற விரதம் பூண்டாய்.

இங்கு இராமன் பூண்ட விரதமும், பரதன் பூண்ட விரதமும் எப்படிப்பட்டது என்றால் –
தங்களுக்குப் ப்ரியமான எதனையும் இழக்காமலேயே பூண்ட விரதமாகும்.
ஆனால் பாதுகையின் விரதம் அப்படிப்பட்டது அல்ல.
தனக்கு மிகவும் விருப்பமான திருவடிகளை விட்டுப் பிரிந்த பின்னரே, பாதுகை அயோத்திக்கு வந்தாள்.
ஆக இவளது விரதம் அல்லவோ மேலானது?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் துஷ்டர்களை சம்ஹரிப்பதே த்ருட வ்ரதமாகக் கொண்டு ஸ்ரீ தண்ட காரண்யத்தில் சஞ்சரித்தார் –
ஸ்ரீ பரதாழ்வான் பிடிவாதமாக பட்டத்தை மறுத்து கடின வ்ரதத்தை மேற் கொண்டார்
நீயோ எப்பொழுதும் சஞ்சரிப்பது என்ற உன் ஸ்வ பாவத்தை விட்டுப்
பதினான்கு வருடங்கள் ஒரே இடம் இருந்து ரஷிக்கும் வ்ரதத்தை மேற்கொண்டாய் –

ஆழ்வார் பரம்
35 திரு நக்ஷத்ரம் வரை திருப்புளிய மரத்தின் அடியிலே -ஆதி சேஷனே திருப்புளி
நான்காம் யுகம் -நான்காம் வர்ணம் -திருக்குறுங்குடி நம்பியே
ப்ரபந்ந அம்ருதம் -சொல்லுமே -32 வருஷம் தப்பாக சொல்வார்
பத்மாசனம் உப விஷ்டம் யோக நிலை
பர பத யுகளம் -ஒன்றிலே ஈடுபட்டு
தைல தாராவத்
பரதத்வ போத ஞான முத்திரை சின் முத்திரை பரமாச்சாரியார் –
நமக்காக -வேட்க்கை எழுவித்து -த்யாஜ்ய புத்தி வளர்த்து -விரதம் -நாம் உஜ்ஜீவிக்கவே –

————————————————————————————

காகுத்ஸ்த்த பாத விரஹ ப்ரதிபந்ந மௌநாம்
நிஷ்ப்பந்ததாம் உப கதாம் மணி பாத ரக்ஷே
ஆஸ்வாஸயந் இவ முஹு: பரதஸ் ததாநீம்
சீதைர் அவீஜயத் சாமர மாருதைஸ் த்வாம்—157-

காகுத்ஸ்த்த பாத விரஹ -ககுஸ்த வம்ஸ பெருமாளை பிரிந்த விரக தாபம்
ப்ரதிபந்ந மௌநாம்-மௌன நிலையில் ஆழ்ந்த ஸ்ரீ வாத்துக்கா தேவி
நிஷ்ப்பந்ததாம் உப கதாம் மணி பாத ரக்ஷே-அசையாமல் -கீழே விரதம் மேற் கொண்டு
சஞ்சரிக்காமல் -இருந்த நிலையை அடைந்து இருந்த உன்னை
அடியார்கள் மேல் அன்பால் சிற்றாதே பேசாதே இருந்த உன்னை -அந்த சமயத்தில்
ஆஸ்வாஸயந் இவ முஹு: -ஆச்வாஸம் செய்து தாபம் தணிக்க
பரதஸ் ததாநீம்-பரதாழ்வான் அப்பொழுது
சீதைர் அவீஜயத் சாமர மாருதைஸ் த்வாம் -குளிர்ந்த சாமரக் காற்றாலே வீசிக்கொண்டே இருந்தான் –

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
இராமனின் பிரிவைத் தாங்க இயலாமல் நீ மிகவும் சோகம் அடைந்தாய் போலும்.
அதனால் தான் அசையாமல், மௌனமாக நீ அமர்ந்தாய் போலும்.
இப்படியாக உள்ள உன்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
பரதன் சாமரம் கொண்டு அடிக்கடி குளிர்ந்த காற்றை வீசியபடி இருந்தான்.

இராமனை விட்டுப் பிரிந்த சோகத்தைப் பாதுகையால் தாங்க இயலவில்லை.
எனவே அடிக்கடி மூர்ச்சையாகி நின்றாள்.
அப்போது பரதன் சாமரம் கொண்டு குளிர்ந்த காற்று வீசி, மூர்ச்சையைத் தெளிய வைத்தபடி இருந்தான்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் திருவடியைப் பிரிந்து நீ பேச்சு மூச்சற்றவள் போல் இருந்தாய் –
அப்பொழுது ஸ்ரீ பரதாழ்வான் குளிர்ந்த சாமரம் வீசி உன்னை ஆஸ்வாசப் படுத்தினார் அன்றோ –

ஆழ்வார் பரம்
சிற்றாமல் பேசாமல்
கு பரம்பர பிரபாவம் -16 -அவன் முகத்து அன்று விழியேன் என்று முகுளித நயனராய் கண்ணை மூடியே
யாருக்கு என் சொல்கேன் என்று -பேசாமல் இருக்க
மதுரகவிக்காகவே கண் திறந்தார் -பேசினார்
திருத்துழாய் மாலை சேர்த்தால் விரகம் போகுமே

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

——————————————————————————-

அனைத்து உலகங்களுக்கும் மங்களம் அளிப்பவள் பாதுகா தேவி

யத்ர க்வசித் விஹரதோ அபி பதார விந்தம்
ரக்ஷ்யம் மயா ரகுபதே: இதி பாவயந்த்யா
நிஸ் ஷேமேவ ஸஹஸா மணி பாத ரக்ஷே
நிஷ் கண்டகம் ஜகதிதம் விததே பவத்யா—-158-

யத்ர க்வசித் விஹரதோ அபி பதார விந்தம்-திருவடித்தாமரை
ரக்ஷ்யம் மயா ரகுபதே: -என்னாலேயே ரக்ஷிக்கப்பட பேண்டும்
இதி பாவயந்த்யா-என்று எண்ணி
நிஸ் ஷேமேவ ஸஹஸா -மொத்தமாக இந்த லோகம் முழுவதும்
மணி பாத ரக்ஷே–எங்கு இருந்தாலும் பாதுகையே பாத ரக்ஷை –
நிஷ் கண்டகம் ஜகதிதம் விததே பவத்யா-உலகம் எங்குமே முள் இல்லாமல் -அமங்களங்கள் இல்லாமல் செய்தாள் –
பாதுகை ஆட்சியில் இடையூறுகளே இல்லாமல் சுபிட்ச்சுமாக இருந்ததை கவி நயத்துடன் அருள்கிறார் –
நடந்த கால்கள் நினைத்து போகாத படி செய்து -ஆக்கி அருளினாள் –

இரத்தின கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! “இராமன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவனது
திருவடிகளைக் காக்கும் பொறுப்பு என்னுடையது”, என்று நீ எண்ணுகிறாய் போலும்.
அதனால் தான் இந்த உலகம் முழுவதும் விரோதிகள் இல்லாமல் உள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எங்கு எழுந்து அருளினாலும் அவர் திருவடிகளைக் காப்பது உன் கடமை என்று நினைத்து
லோகத்தில் ஓர் இடத்திலும் சத்ருக்கள் -முள் -இல்லாமல் பண்ணி விட்டாய் –

ஆழ்வார் பரம்
பக்தி ஞானம் வளர்ச்சி செய்து அஹங்காரம் மமகாரங்களான முட்களை அகற்றி
ஊரும் நாடும் உலகும் தம்மைப்போலவே ஆக்கி அருளினார் ஆழ்வார் என்றவாறு –
ஆசார்யர் எல்லாருக்கும் நல்வழி காட்டி பெருமாள் இடத்தில் ப்ரீதி உண்டு பண்ணுகிறார் -என்றபடி –

யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய ||ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4-

ஸூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
ஸூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.–ஸ்ரீ சடகோபர் அந்தாதி 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

—————————————————————-

இருவரின் பிரிவும் இருவரின் விழிப்பும் –
உறங்கா வில்லி அன்றோ இளைய பெருமாள்
ராமனை அன்றி மற்று அறியாத பரதனை ரக்ஷிக்கவே நீ தூங்காமல் இருந்தாய்
பகவத் ரக்ஷணமும் பாகவத ரக்ஷணமும்

ராமம் த்வயா விரஹிதம் பரதம் ச தேந
த்ராதும் பதாவநி ததா யத் அபூத் ப்ரதீதம்
ராமாநுஜஸ்ய தவ ச அம்ப ஜகத் ஸமஸ்தம்
ஜாகர்த்தி தேந கலு ஜாகரண வ்ரதேந—-159-

ராமம் த்வயா விரஹிதம் பரதம் ச தேந–அந்த ராமனைப் பிரிந்த பரதனை
த்ராதும் -காக்கும் பொருட்டே
பதாவநி ததா யத் அபூத் ப்ரதீதம்-அந்த சமயத்திலே பிரசித்தமான தூங்காத விரதம் ஏற்பட்டதே
ராமாநுஜஸ்ய தவ ச அம்ப ஜகத் ஸமஸ்தம்-இளைய பெருமாளுக்கும் தாயே உனக்கும் உண்டானதே
ஜாகர்த்தி தேந கலு ஜாகரண வ்ரதேந-அந்த விரதத்தால் நிச்சயமாக அனைத்து உலகும் ரக்ஷிக்கப் பட்டதே

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
உன்னைப் பிரிந்த இராமனை, இலட்சுமணன் எப்போதும் விழித்துக் கொண்டு காப்பது என்ற விரதம் பூண்டான்.
இராமனைப் பிரிந்த உள்ள பரதனையும், நாட்டையும் காப்பது என்று நீ உறுதி பூண்டாய்.
இதனால் அன்றோ இந்த உலகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன?

இராமனைக் கானகத்தில் கண் உறங்காமல் இலட்சுமணன் காத்தான். இது அவனுடைய தாயின் ஆணையாகும்.
அவள் இலட்சுமணனிடம், “இராமனின் நடை அழகில் மயங்கி நின்றுகூட நீ அவனைக் காக்காமல் இருந்துவிடாதே”, என்றாள்.
இராமனை இலட்சுமணன் எப்படிக் காத்தானோ, அதைவிட அதிகமாகப் பாதுகை பரதனைக் காக்க முடிவு செய்தாள்.
பரதனை மட்டும் அல்லாமல், அவனது நாட்டையும் காப்பாற்றினால் அல்லவோ, முழுமையான காப்பாற்றுதல் ஆகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னை விட்டுப் பிரிந்து அவதி உற்ற போது இளைய பெருமாள்
அவரைக் கண்ணும் கருத்துமாக விழித்து இருந்து காப்பாற்றினார்
பெருமாளைப் பிரிந்த ஸ்ரீ பாரதாழ்வானையும் நீயும் அது போலவே விழித்து இருந்து ரஷித்தாய்-
உங்கள் இருவரின் விழிப்பினால் உலகம் முழுவதும் விழிப்பு அடைந்து இருக்கிறது

ஆழ்வார் பரம்
நம்மாழ்வார்
ராமானுஜர்
இருவர் விரதங்களால் உலகுக்கு க்ஷேமம் –
பாகவதர்களாலேயே பெருமானுக்கும் உலகோர்களுக்கும் ஷேமம் என்றவாறு –

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |ஸ்ரீ பராங்குச அஷ்டகம்–8-

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

காளிய நர்த்தனம் போல் பலராமாநுஜர் அவன்
ஐந்து புற மதஸ்தர் நிரசனம் ராமானுஜர் –
அறு சமயச் செடி அறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன –
உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லையே -இவர் அவதரிக்கா விட்டால் –
அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாரணர்க்கு ஆளாயினரே –

———————————————————————————————

சிலருக்கா பலருக்கா –

அந்த:புரே பரிஜநை: ஸமய உபயாதை:
அபி அர்ச்சிதா பவஸி யா விநயோபபந்நை:
ஸா கோஸலேஸ்வர பாதாவநி பூபதீநாம்
ஸங்கட்டநம் மகுட பங்க்திபி: அந்வபூஸ் த்வம்—160-

அந்த:புரே பரிஜநை: ஸமய உபயாதை:–அந்த அந்த சமயத்தில் அந்தப்புரத்தில்
அபி அர்ச்சிதா பவஸி யா விநயோபபந்நை:—ஒரு சிலராலேயே பூஜிக்கப் பட்டாயே
ஸா கோஸலேஸ்வர பாதாவநி பூபதீநாம்–அவளே பட்டாபிஷேகம் செய்யப்பட பின்பு -பல ராஜாக்களும்
ஸங்கட்டநம் மகுட பங்க்திபி: அந்வபூஸ் த்வம்-கிரீடங்கள் வரிசையாக -உராயும் படி ஆனதே
அனைவருக்கும் உன்னை வணங்கி கைங்கர்யம் செய்யும் படி ஆனதே

கோஸல தேசத்தின் ராஜாவாகிய இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
நீ அந்தப்புரத்தில் உள்ள நேரங்களில், அங்கு உள்ள வேலையாட்களால் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறாய்.
ஸிம்ஹாஸனத்தில் வந்து அமர்ந்தவுடன், பல அரசர்களின் க்ரீடங்கள் உன் மீது இடித்தபடி (தலை சாய்த்தபடி) நிற்க,
நீ கம்பீரமாக வீற்றுள்ளாய்.

பாதுகையிடம் உள்ள மரியாதை மற்றும் பயம் காரணமாகப் பல அரசர்களும் மிகவும் வேகமாக ஓடி வந்து,
மென்மையாகப் பாதுகையில் விழுவதற்குப் பதிலாக, வேகமாக வந்து விழுகின்றனரே!
பாதுகைக்குத் துன்பம் ஏற்படப் போகிறதே என்று வருத்தம் கொள்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ அந்தப்புரத்தில் இருந்த போது கைங்கர்ய பரர்கள் மட்டும் உன்னை ஸூகமாய் இருக்கும் படிப் பூஜித்தார்கள்
சிம்ஹாசனத்தில் எழுந்து அருளியவுடன் உன்னை அரசர்கள் எல்லாம் வணங்கும் போது அவர்கள் அணிந்துள்ள
கிரீடங்கள் உன்னை நெருங்க அதையும் ஸூகமாக அனுபவித்தாய் –

ஆழ்வார் பரம்
அந்தப்புர நாயகி –
பின்னை கொல் நில மா மகள் கொல்
ராமானுஜர் சென்னிக்கி முடியான பின்பே லோகம் முழுவதும் வாழ்ந்தது
வேதம் -வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரம் –
விளக்க திருவாய் மொழி அவனே ஆழ்வார்
இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் -காட்ட ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யம் -இது கொண்டு ஒருங்க விட்டார்

————————————————————–

ப்ராப்ய அதிகாரம் உசிதம் புவநஸ்ய குப்த்யை
பத்ராஸநம் பரத வந்திதம் ஆஸ்ரயந்த்யா
மத்யே அவதீர்ணம் இவ மாதவ பாத ரக்ஷே
மாதஸ் த்வயாபி மநு வம்ச மஹி பதீ நாம்—-161-

ப்ராப்ய அதிகாரம் உசிதம் புவநஸ்ய குப்த்யை=உலகு ரக்ஷணத்துக்காக -உசிதமான அதிகாரம் பெற்று
பத்ராஸநம் பரத வந்திதம் ஆஸ்ரயந்த்யா-மங்களகரமான ஸிம்ஹாஸனம் அடைந்ததாலே
மத்யே அவதீர்ணம் இவ மாதவ பாத ரக்ஷே-திருவடி ரஷிக்கும் தாயே -நடு நாயகமாக அவதரித்து
மாதஸ் த்வயாபி மநு வம்ச மஹி பதீ நாம்-மனுவம்ச மன்னர்களில் -ஹாரம் -திருமுடி திருவடி மூலம்
முன்புள்ளார் பின்புள்ளார் அனைவருக்கும் அலங்காரமாக
ரக்ஷணமே காரணம் -உசிதமாக இருந்தாலும்

தாய் போன்ற பாதுகையே! இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு நீ இராமனால் நியமிக்கப்பட்டாய்.
பரதனால் ஆராதிக்கப்பட்டு ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய். உன்னை இவ்விதம் காணும் போது
மநு குலத்தில் உதித்த பேரரசி போன்று, அந்தக் குலத்திற்குப் பொருத்தமாகவே உள்ளாய்.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரும் ஸிம்ஹாஸனத்தில் அமர இயலாது.
ஆனால், பாதுகைக்கு இராமனின் தொடர்பு உள்ளது, பரதனின் ஆராதனை உள்ளது.
ஆகவே இவள் அரியணையில் அமர்வது பொருத்தமே என்றார்.

ஸ்ரீ பாதுகையே -நீ சிம்ஹாசனத்தை அலங்கரித்தது மனு வம்ச ராஜாக்களுக்குள் மிகவும் பொருத்தமாகவும் இருந்தது –
பெருமாள் மனு வம்சத் தரசர்களின் நடுவே பெருமாள் திருவவதரித்து திரு அயோத்தியை அரசாண்டு
உலகத்தை ரஷித்தது போல் இப்போது அரசாள்வதால்
நீயும் மனு வம்சத்தார சர்களின் நடுவில் ஒருவராக அவதாரம் செய்துள்ளாய் போலும்

ஆழ்வார் ஆசார்ய குரு பரம்பரையில் சேர்ந்து குரு பரம்பரைக்கு அலங்காரம் செய்து அருளினது போலவே –
ஆழ்வார் பரம்
நாதமுனியால் வணங்கப்படும் ஆச்சார்ய ஸ்தானம் -குரு பரம்பரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
லோக ரக்ஷணம் -பிறவி அறுத்து -மோக்ஷம் அருளவே அவதாரம்
உசிதமான ஸ்தானம் பெற்றார்
தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்
ஆழ்வார் ஆச்சார்யர் இரண்டு கோடியிலும் அன்வயித்து –
குருபரம்பரைக்கு அணிகலன்
விஷ்வக் சேனர் வரை மேல் உள்ளார் -இங்கு உள்ளார் நாத முனிகள் தொடக்கமாக -இருவருக்கும் நடுவே

——————————————————————–

ராஜாஸநே ரகு குலோத்வஹ பாத ரக்ஷே
நீராஜநம் ஸம பவத் ஸம்யோசிதம் தே
ஸ்லாகா வசேந பஹுச: பரிகூர்ணிதாபி:
ஸாமந்த மௌளி மணி மங்கள தீபிகாபி:—162-

ராஜாஸநே ரகு குலோத்வஹ பாத ரக்ஷே-ரகு குலத்து ஸிம்ஹாஸனத்தில்
நீராஜநம் ஸம பவத் ஸம்யோசிதம் தே-காலத்து ஏற்றபடி மங்கள ஹாரத்தி உண்டானதே
ஸ்லாகா வசேந பஹுச: பரிகூர்ணிதாபி:-எங்கும் சூழ்ந்து
ஸாமந்த மௌளி மணி மங்கள தீபிகாபி:—கிரீட ரத்தினங்கள் -ஒளி கொண்டு -எல்லா பக்கங்களிலும்

ரகு குலத்தில் உதித்த இராமனின் பாதுகையே!
உன்னைக் கொண்டாடுவதற்காக உனது ஸிம்ஹாஸனத்தைச் சுற்றி பல அரசர்கள் நின்றனர்.
அப்போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களின் ஒளியானது உன் மீது அசைந்தபடி காணப்பட்டது.
இதனைக் காணும் போது உனக்கு மங்கல ஹாரத்தி எடுப்பது போன்று இருந்தது.

பாதுகை அயோத்தி நகரத்தை ஆட்சி செய்து வந்த நேர்த்தியைக் கண்டு பல அரசர்களும் மயங்கி நின்றனர்.
இதனை ஆமோதித்தபடி அவர்கள் தங்கள் தலைகளை அசைத்தனர்.
இதனால் அவர்களின் க்ரீடங்களில் பதிக்கப்பட்ட கற்களின் ஒளியானது பாதுகைக்கு
ஹாரத்தி எடுப்பது போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாளும் பாங்கைக் கண்டு அண்டை தேசத்து அரசர்கள் தங்கள் மகுடங்களை அசைத்து பாராட்டினார்கள் –
அப்பொழுது அவற்றினின்று வீசும் ரத்ன காந்தியால் உனக்கு மங்கள ஹாரத்தி எடுப்பது போல் இருந்தது –

ஆசார்யர் க்ருத்யங்கள் நம்மாழ்வார் மூலம் உலகம் அறிந்து அவரை கொண்டாடுகிறது என்றவாறு –
ஆழ்வார் பரம்
ஆச்சார்ய க்ருத்யம் செய்யும் அழகைப்பார்த்து
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளி
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போல் ஆக்கி அருளி
கொண்டாடப்பட்டாரே
ஸ்லாகித்து -எங்கு இருந்தாலும் நம்மாழ்வார் குருகூர் கேட்டதும் வணங்கி –
மாதா பிதா –ஸர்வம் –ப்ரணமாமி மூர்த்நா
பராங்குச தாசர் -பெரிய நம்பி
மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜர்
திருவாய் மொழி நூற்றந்தாதி -மாறன் வைபவம் கொண்டாடி – -உண்டோ ஒப்பு இப்பார் தமிழ் –
ஞான தீபத்தால் மங்கள ஹாரத்தி

—————————————————–

ப்ருத்வீ பதீநாம் யுகபத் க்ரீடா:
ப்ரத்யர்த்திநாம் ப்ராணிதும் அர்த்திநாம் ச
ப்ராபுஸ் ததா ராகவ பாத ரக்ஷே
த்வதீயம் ஆஸ்த்தாநிக பாத பீடம்—-163-

ப்ருத்வீ பதீநாம் யுகபத் க்ரீடா:-ஒரே நேரத்திலே அனைத்து மன்னர்களும்
ப்ரத்யர்த்திநாம் ப்ராணிதும் அர்த்திநாம் ச-எதிர்த்து நிற்பவர் -வாழ வைக்க பிரார்த்தித்து வரும் அரசர்கள்
தலையுடன் வருகிறார்களா கிரீடத்துடன் வருகிறார்களே என்பதே வாசி -பரதன் அவர்களை வென்று
ப்ராபுஸ் ததா ராகவ பாத ரக்ஷே–ஸிம்ஹாஸனம் இருந்த அப்பொழுது
த்வதீயம் ஆஸ்த்தாநிக பாத பீடம்—-பள்ளிக்கட்டின் கீழே ஆஸ்ரயித்து -அடைந்தனவே

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அயோத்தி நாட்டின் ஸிம்ஹாஸனத்தில் விற்றிருந்த போது
உன்னை எதிர்க்க முயன்ற அரசர்கள் தோற்றனர். ஒரு சில அரசர்கள் உன்னை வணங்கி நின்றனர்.
இவ்வாறு உள்ள இருவகையான அரசர்களின் க்ரீடங்களும் ஒரே போன்று உனது ஆஸ்தானத்தை அடைந்தன.

ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து, கால்கள் வைக்கும் இடம் என்பது ஆஸ்தானம் எனப்படும். எதிர்த்துத் தோற்ற அரசர்களையும்,
“அவர்கள் அரசர்கள்” என்னும் மரியாதை அளித்து, அவர்களையும் மற்றவர்களைப் போன்றே நடத்திய விதம் வெளிப்படுவது காண்க.
இந்தப் பண்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாண்ட சமயம் தாங்கள் உயிர் பிழைக்க சரண் அடைந்த அரசர்கள் அனைவரும்
பகைமை பூண்டு அழிக்கப் பட்ட அரசர்கள் இப்படி இருவகையினரது கிரீடங்களும் ஒரே சமயத்தில்
உனது சிம்ஹாசனத்தின் கீழ் வைக்கப்பட்ட திருவடி பீடத்தை அடைந்து இருந்தன —

ஆழ்வார் பரம்
சாத்விகர்களான முமுஷுக்களும் ஆஸ்ரயித்து
பாஹ்ய குத்ருஷ்டிகளும் மாய்ந்தனர்
உளன் எனில் உளன் உளன் அலன் எனில் உளன்
என்னிடம் இல்லை இங்கு இல்லை இப்பொழுது இல்லை –
உண்டு என்று ஏற்றுக்கொண்டால் தானே இவ்வாறு சொல்ல முடியும்
ஆழ்வார் திருவடி வாரத்தை அனைவரும் அடைந்தனர் –

——————————————————————-

ப்ரணம்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
தூரோபநீதை: உபதா விசேஷை:
ஸபா ஜயந்தி ஸ்ம ததா ஸபாயம்
உச்சைஸ் தராம் உத்தர கோஸலாஸ் த்வாம்—-164-

ப்ரணம்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே–வணங்கி -பக்தி மதிப்பு உடன்
தூரோபநீதை: உபதா விசேஷை:-தூரத்தில் இருந்து கொண்டு வர ப்பட்ட காணிக்கைகள் கொண்டு
ஸபா ஜயந்தி ஸ்ம ததா ஸபாயம்-மிகவும் பூஜித்தார்கள்
உச்சைஸ் தராம் உத்தர கோஸலாஸ் த்வாம்–அயோத்தியை தலை நகரகாக் கொண்ட கோசல மக்கள்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! நீ அயோத்தியில் ஸிம்ஹாஸனம் ஏறி கம்பீரமாக
ஆட்சி செய்து கொண்டிருந்தாய். அப்போது வடக்கு கோசல நாட்டில் உள்ள மக்கள் பலரும் அயோத்தி வந்தனர்.
வெகுதூரத்தில் இருந்து வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உயர்ந்த காணிக்கைகளை
உன்னிடம் சமர்ப்பித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ரங்கேஸ்வர பாதுகையே நீ ராஜ்ய பரிபாலனம் செய்த காலத்தில் வெகு தொலைவான பிரதேசங்களில் இருந்து
காணிக்கைகளைக் கொணர்ந்து உன்னைப் பூஜிக்கிறார்கள் –

ஆழ்வார் பரம்
காசி பண்டிதர் யஜ்ஜ மூர்த்தி போல்வார் 18 நாள் வாதம் -அருளாள பெருமாள் எம்பெருமானார்
ஞான சாரம் ப்ரமேய சாரம்
மேல் நாட்டிலே வேதாந்தி -நஞ்சீயர் ஆனாரே -ஒன்பதாயிரப்படி அருளினாரே
இவ்வாறு தூர தேசங்களில் உள்ளாரை ஆழ்வார் திருவடிகளில் சேர்த்தார்கள் நம் ஆச்சார்யர்கள்

——————————————————————

அபாவ்ருத த்வாரம் அயந்த்ரி தாஸ்வம்
ரங்கேஸ பாதாவநி பூர்வம் ஆஸீத்
த்வயா யத்ருச்சா ஸுக ஸுப்த பாந்த்தம்
ராமே வநஸ்த்தே அபி பதம் ரகூணாம்—-165-

அபாவ்ருத த்வாரம் அயந்த்ரி தாஸ்வம்-கோட்டை வாசல் திறந்து குதிரைகள் கட்டப்படாமல் – வேலை இல்லையே
ரங்கேஸ பாதாவநி பூர்வம் ஆஸீத்-வனவாசம் சென்ற போது
த்வயா யத்ருச்சா ஸுக ஸுப்த பாந்த்தம்-உன்னாலேயே நன்றாக தூங்கும் படி ஆனதே
ராமே வநஸ்த்தே அபி பதம் ரகூணாம்—-வார்த்தை விளையாட்டால் சாம்யம்
கம்பர் -நீர் இ டை உறங்கும் சங்கு -நிழல் இடை உறங்கும் நேமி எருமை —
தார் இடை உறங்கும் வண்டு -தாமரை உறங்கும் செய்யாள் -போல்
உறக்கம் நிம்மதியைக் குறிக்கும் -அவர் அவர் வேலைகளையே பண்ணுகிறார்கள் என்றுமாம்
ஆகவே நாடு நிம்மதியாக இருக்குமே

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாப்பவளே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ ஸிம்ஹாஸனத்தில்
அமர்ந்திருந்த போது நிகழ்ந்தது என்ன? பகைவர்கள் யாரும் வருவது இல்லாமல் உள்ளதால்
அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தன. யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகளும் குதிரைகளும்
கட்டி வைக்கப்படாமல், அயோத்தியின் வீதிகளில் சுற்றின.
அந்த நாட்டின் அரசனான இராமன் கானகத்தில் உள்ள போதிலும், பாதுகா இராஜ்ஜியம் காரணமாக,
எந்தவிதமான கவலையும் இன்றி வழிப் போக்கர்கள் வந்து உறங்கிச் சென்றபடி நாடு இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் போனதும் கோட்டை வாயில் திறந்தும்
குதிரை முதலியன கட்டுவாரின்றி திரிந்து கொண்டும் இருந்தன –
நீ பட்டம் ஏற்ற பிறகும் வழிப் போக்கர்கள் கவலையின்றி ஸூகமாக நினைத்த இடத்தில் தங்குகின்றனர் –
ஆதலால் கோட்டை வாயிலில் பூட்டவோ குதிரைகளை கட்டவோ அவசியம் இருக்கவில்லை -திருடர் பயமில்லை –

ஆழ்வார் பரம்
உம்மாலே ஸ்ரீ வைகுண்ட வாசலே திறந்ததே
புலன்களாகிய குதிரைகளை -காவலில் புலனை வைத்து -நாம் கட்டத் தேவை இல்லை
மார்பில் கை வைத்து நிரப்பரோ நிர்ப்பயஸ்மி
மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா மக்கள் உம்மாலே கண்டு உஜ்ஜீவித்தார்களே –

————————————————————————-

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோம ஸதாம் பபூவ—166-

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்-ஸ்வயம் பிரயோஜனமாக பாதுகா தேவியை ஆராதித்த
மற்று ஒன்றும் வேண்டா மனத்துடன் வணங்கி
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:இரண்டாவது திருமகன் பரதாழ்வான் -அர்ச்சனை செய்து ஆராதித்து
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா–அந்த புகழாலே முதல் திருமகனான பெருமாளைப் போன்ற கீர்த்தி பெற்று
தேவாதி தேவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -மனிதர்க்குத் தேவர் போல் தேவருக்கும் தேவனைப் போலவே –
அவனுக்கும் நிகரகா கொள்ளப்பட்டான்
வந்த்ய: ஸ்வயம் வ்யோம ஸதாம் பபூவ–விண்ணவராலும் வணங்கப்பட்டான்-நித்ய ஸூரிகளும் கூட வணங்கினார்கள் அன்றோ –
அடியாருக்கு அடியார் -பாகவத சேஷத்வ பாரதந்தர்யம் மிக்கு -கொண்டாடப்பட்டான் என்றவாறு –

நின்னை யாவருக்கும் நிகர் -மன்னவர் மன்னவா -கௌசல்யா தேவி வாழ்த்தினாள்
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -குகன்

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின்னருளுக்கு அருகாவாரோ
புண்ணியம் எனும் நின்னுயிர் போயினார்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ –
கோடி ராமர் எண்ணிலும் உனக்கு நிகர் அன்றே -கௌசல்யை -14 வருஷங்கள் பின்பு நந்தி கிராமத்தில் வாழ்த்தி

அவதரிக்கும் பொழுது பாதி அம்ருதத்தால் ராமன்
கால் பகுதியில் பாதி தான் பரதனும் சத்ருக்கனனும் -இருந்தாலும்
பாதுகா தேவி ஆராதனத்தால் கோடி அளவு கீர்த்தி பெற்றான் –

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

ஸ்ரீ பாதுகையே வேறு பலன் கருதாமல் உன்னையே பூஜித்ததனால் ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளுக்கு நிகராக
தேவர் உள்ளிட்ட யாவராலும் கொண்டாடப் படப்பட்டான் –

ஆழ்வார் பரம்
தேவு மற்று அறியாமல் மதுரகவி சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண் –நாதமுனிகள்
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது பேசாமல் அவர்களை சிரித்து இருப்பாரே
எய்தற்கு –பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன் -அமுதனார் -இவரையே பெரியவர் என்றாரே
உண்மையான ஆசார்ய பக்தி உள்ளவன் பகவானுக்கு சாம்யமாக கொண்டாடுவார்கள் என்றபடி –

————————————————————————–

அரண்ய யோக்யம் பதம் அஸ்ப்ரு சந்தீ
ராமஸ்ய ராஜார்ஹ பதே நிவிஷ்டா
ஆஸ்த்தாந நித்யா ஸிகயா நிராஸ்த்த:
ஸ்வர்கௌகஸாம் ஸ்வைர கதேர் விகாதம்—-167-

சஞ்சரிப்பதே இயல்பான நீ அதுக்கு நேர் எதிராக
சிம்ஹாசனத்தில் அமர்ந்து
தேவர்கள் நினைத்தபடி சஞ்சாரம் செய்யும் படி ஆக்கி அருளினாயே

அரண்ய யோக்யம் பதம் அஸ்ப்ரு சந்தீ ராமஸ்ய -திருவடியை உகந்தாலும் தொடாமல் இருந்து
ராஜார்ஹ பதே நிவிஷ்டா-அரசர்களுக்கே உரித்தான ஸிம்ஹாஸனம் அமர்ந்து
ஆஸ்த்தாந நித்யா ஸிகயா -சஞ்சாரம் இல்லாமல் ஆஸ்தானத்தில் அமர்ந்து
நிராஸ்த்த:ஸ்வர்கௌகஸாம் ஸ்வைர கதேர் விகாதம்—-தேவர்களுடைய ஸஞ்சாரத் தடைகளை போக்கி அருளினாயே

பாதுகையே! இராமனின் திருவடிகளை நீ தொடாதவளாக, ஸிம்ஹாசனத்தில் அமர்ந்து விட்டாய்.
இவ்வாறு நீ எங்கும் நகராமல் இருந்த காரணத்தினால், தேவர்களுக்கு அசுரர்களிடம் இருந்த பயம்
நீங்கப் பெற்று எங்கும் சஞ்சரிக்க இயன்றது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளைப் பிரிந்து நீ எங்கும் சஞ்சரியாமல்
நிலையாக சிம்ஹாசனத்தில் இருந்து கொண்டே
ராஷசர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட சஞ்சாரத் தடையையும் உபத்ரவத்தையும் போக்கினாய் –

ஆழ்வார் பரம்
நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்தை விட்டு -ஆரண்யம் -வேதாந்தம் ஆரண்ய பகுதி உண்டே –
அவற்றாலே மட்டும் அறியப்படும் ஸ்ரீ மன் திருவடிகளை விட்டுப் பிரிந்து
இங்கு ஆச்சார்ய ஸ்தானம் அமர்ந்து பிரபன்ன ஜன கூடஸ்த ஸ்தானம்
ஆழ்வார் ஆச்சார்யர் கோஷ்ட்டிகள் இரண்டிலும் உண்டே
திருப்புளி ஆழ்வார் அடியிலே அமர்ந்து இருந்து -இதுவே ஆஸ்தானம் இவருக்கு -35 வருஷம் பிரபன்ன அம்ருதம் சொல்லும் –
பக்தி ஞானம் வைராக்யக்யம் அனுஷ்டானம் ஸ்ரத்தை -தெய்வத் தன்மைகள் -அனைத்தையும் வளர்த்து
ஊரும் நாடும் உலகும் தம்மைப் போல் ஆக்கி அருளி
பரர்களுக்கு அங்குசம் இட்டு -வளர்த்து அருளி

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே.-ஸ்ரீ சடகோபர் அந்தாதி- 4-

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத்
தரும நிறை கனமாம் சிலர்க்கு –தர்மம் நிறைந்த சிறந்த காம புருஷார்த்தமாம் –
சீரிய நல் காமம் –கண்ணனுக்கே ஆமது காமம் என்பதால் கனக்க இருக்குமே
அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு -அந்த காம புருஷார்த்தத்துக்கு உரிய வேதமுமாம்
காம -சாஸ்திரம் நாயகி பாவத்தில் தூது விடுதல் மடலூர்தல்
ஆரணத்தின் இனமாம் சிலர்க்கு -வேத வர்க்கமுமாம் -நான்கு பிரபந்தங்களும் நான்கு வேத சாரம் அன்றோ
அதற்கு எல்லையுமாம் -அதற்கு எல்லையான வேதாந்தமுமாம்

அந்த அந்த அதிகாரிகளுக்கு ஏற்ப -அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே போல்
திருவாய் மொழி அத்யாபகர்களுக்கு எங்கும் சிறப்பே
தீதில் அந்தாதி –இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலாராகி இங்கும் எங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே

——————————————————————-

ராஜாஸநே சேத் பவதீ நிஷண்ணா
ரங்கேஸ பாதாவநி தந்ந சித்ரம்
யத்ர அதிரூடா: க்ரமஸ: புரா த்வாம்
உத்தம் ஸயந்தே ரகு ஸார்வ பௌமா:—-168-

ராஜாஸநே சேத் பவதீ நிஷண்ணா-நீ அமர்ந்தது வியப்பு இல்லையே
ரங்கேஸ பாதாவநி -ரெங்கநாதன் பாதுகை ரக்ஷை -பாதுகா தேவியே -ராமன் பாதுகையை நேராகச் சொல்லாமல்
இஷ்வாகு மன்னர்களால் ஆராதிக்கப்பட்ட ஜகந்நாதன் நாராயணனே இவன்
ஸஹ பத்யா விசாலாட்ஷயா நாராயண உபாஸீத் -அப்படிப்பட்ட மஹிமை கொண்ட நீ
தந்ந சித்ரம்-வியப்பு இல்லையே
யத்ர அதிரூடா: க்ரமஸ: புரா த்வாம்-முன்பு இருந்தே வரிசையாக
உத்தம் ஸயந்தே ரகு ஸார்வ பௌமா-உன்னைத் தலைக்கு ஆபரணமாக சுமந்தார்களே :–
நீ இப்பொழுது ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தது உனது எளிமையைக் காட்டவே
தலைக்கு மேல் சுமந்து இருக்கவே உனக்குத் தக்கது –
கருணையால் அன்றோ நீ சிம்ஹாசனத்தில் அமர்ந்து அவர்களுக்கு சமமாக ஆக்கிக் கொண்டாயே

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே!
இக்ஷ்வாகு போன்ற அரசர்கள் அமர்ந்த ஸிம்ஹாசனத்தில்
நீ அமர்ந்த காரணத்தில் எந்த ஒரு வியப்பும் இல்லை – காரணம்,
அவர்கள் உன்னைத் தங்கள் தலையில் தாங்கியபடி ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தனர்.
உன்னையே தங்கள் தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டனர்.
அப்படி அவர்கள் தலையில் அமராமல் நேரடியாக ஸிம்ஹாசனத்தில் நீ அமர்வதில் என்ன வியப்பு உள்ளது?

ஸ்ரீ பாதுகையே இஷ்வாகு போன்றோர் அலங்கரித்த சிம்ஹாசனத்தில் பெருமாள் ஸ்ரீ பாதுகையான உன்னை
எழுந்து அருளப் பண்ணலாமோ என்று கேட்பது நியாயம் இல்லை -ஏன் எனில்
உனக்கு முன் இந்த ஆசனத்தில் இருந்த ரகு வம்சத்தரசர்கள் உன்னை சிரசில் அணிந்து கொண்டாடுகிறார்களே
அவர்கள் உட்கார்ந்து அனுபவித்த சிம்ஹாசனத்திலேயோ உன்னை வைப்பது என்று வேண்டுமானால் கேட்கலாம் –
அதுதான் நியாயம் ஆகும் –

ஆழ்வார் பரம்
ராஜாஸனம் ஆச்சார்ய ஸ்தானம் இங்கு அமர்ந்தது வியப்பு இல்லையே
நாதமுனி போன்ற பூர்வாச்சார்யர்கள் தலைக்கு மேல் வணங்கப்பட்ட நீரே
மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
மாதா பிதா –இத்யாதி கொண்டாடப்பட்டவர்
தங்களுக்குப் பாக்யமாகக் கொண்டாடுவார்கள்
ஆம் முதல்வன் இவன் என்று -பகவத் பூர்ண கடாக்ஷம் பெற்றவர்
நான்காம் வர்ணம் -தமிழ்- ஒக்குமா போன்ற விசாரங்கள் – -பகவத் வசனம் -மாத்ரு யோனி ஒக்கும்

——————————————————-

பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்
தேவி ஷணம் தக்ஷிண தோமுகம் தே
கதம் பவேத் காஞ்சந பாத ரக்ஷே
ராமஸ்ய ரக்ஷ: ம்ருகயா விஹார;—-169-

பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்-மங்களகரமான ஸிம்ஹாஸனம் -திரும்பி
தேவி ஷணம் தக்ஷிண தோமுகம் தே-நொடிப்பொழுது தெற்குப் பக்கம் பார்த்தால்
கதம் பவேத் காஞ்சந பாத ரக்ஷே-பொன்மயமான பாதுகையே -எவ்வாறு
ராமஸ்ய ரக்ஷ: ம்ருகயா விஹார;—-ராமனுடைய அரக்கர் வேட்டை விளையாட்டு எவ்வாறு நடந்து இருக்கும்
பக்த பரிபாலனம் மட்டும் இல்லாமல் துஷ்ட நிக்ரஹமும் உனக்கு உண்டே

பொன் மயமான பாதுகா தேவியே! நீ உனது ஸிம்ஹாசனத்தை ஒரு நொடிப்பொழுது
தெற்குத் திசை பார்த்தபடி இட்டிருந்தால் போதுமானது.
இவ்வாறு நீ செய்திருந்தால் இராமன் இலங்கை சென்று அரக்கர்களை அழிப்பது என்ற
லீலையே இல்லாமல் போய் இருக்கும் அல்லவா?
(இராமனின் செயலை பாதுகையே செய்திருப்பாள் என்றார்).

ஸ்ரீ பாதுகையே நீ மட்டும் உன் சிம்ஹாசனத்தைத் தெற்கு முகமாகச் சிறிது திருப்பி இருந்தால் கூட பெருமாள்
ராவணாதி நிரசனமாக சென்ற இலங்கையில் ஒரு அரக்கனும் அகப்பட்டு இருக்க மாட்டான் –

ஆழ்வார் பரம்
உமது கடாக்ஷம் தென் திசை எம பட்டணம் போகும் பாபிக்கு கிட்டினால்
தண்டனை எவ்வாறு கிடைக்கும்
இதுவே அவனுக்கு லீலை
டோலோஸ்தவம் –
கருணை -ஸாஸ்த்ர வஸ்யம்-இரண்டிலும் மாறி மாறி -ஷமா தேவி -வசுமதி சதகம் -பொறுத்தே அருள –
ஆழ்வார் அருளுக்குப் பாத்திரம் ஆனவர்கள் பின் கரிய கோலத் திரு உருவைக்காட்டப் போவான்

———————————————————————-

யாவத் த்வயா ராகவ பாத ரக்ஷே
ஜிகீஷிதா ராக்ஷஸ ராஜ தாநீ
மாலேவ தாவத் லுளிதா மதாந்தை:
உத்யாந சாகாம்ருக யூதபைஸ்தே—-170-

யாவத் த்வயா ராகவ பாத ரக்ஷே-எப்போது உன்னாலே
ஜிகீஷிதா ராக்ஷஸ ராஜ தாநீ-இலங்கையை வெல்லபட வேண்டும் என்று நினைக்கப்பட்டதோ
மாலேவ தாவத் லுளிதா மதாந்தை:-மாலையைப் போலவே அழிக்கப்பட்டதே -கசக்கி எறியப்பட்டதே
உத்யாந சாகாம்ருக யூதபைஸ்தே—-உன்னுடைய இளைப்பாறும் தோட்டம் தானே கிஷ்கிந்தா -வானர முதலிகள்

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
இரு கால கட்டங்களில் இலங்கை நகரத்தை வெல்ல வேண்டும் என்று நீ விரும்பினாய்.
அப்போது கொழுத்த வானர வீரர்கள் மூலமாக இலங்கை நகரமானது, மலர்கள் போன்று கசக்கி வெல்லப்பட்டது
(இராவணன் சீதையை அபகரித்தான் என்று அறிந்தவுடன் நீ பரதனின் சேனையை அனுப்ப எண்ணினாய்.
ஆனால் உனது எண்ணம் காரணமாகவே வானர வீரர்கள் அச்செயலை முடித்துவிட்டனர் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே இலங்கையை ஜெயிக்க வேண்டும் என்று சங்கல்பித்தாய் –
உடனே உன் தோட்டத்து கிஷ்கிந்தையைச் சார்ந்த வானரர்களால்
ஒரு மாலையைப் போலே இலங்கை பிய்த்து அழிக்கப் பட்டது அன்றோ –

ஆழ்வார் பரம்
திரு உள்ளம் சங்கல்பித்த உடனே நமது பாப கூட்டங்கள்
திருவடி ஸ்தானத்தில் உள்ள ஆச்சார்யர்கள் மூலம்
பாற்றி அருளப்படுமே
பத்து இந்திரியங்கள் தலைகள்
சத்வ குணம் விபீஷணன்
ரஜஸ் கும்பகர்ணன்
தமஸ் சூர்ப்பணகை
சங்கு சக்ர முத்திரை திருவாழி
ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்குவதே உஜ்ஜீவனம்

——————————————————————————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ரு சந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

ராகவ பாத ரக்ஷே பத்ராஸ நஸ்த்தாம் -ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து அருளிய
பவதீம் ஸ்ப்ரு சந்த:- மஹீஷிதாம் கிரீடா–உன்னைத் தொட்ட -வணங்கிய அரசர்களின் கிரீடங்கள்
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:கல்யாணதாம் ஆநசிரே :—-இப்போது தான் உண்மையாக –
கல்யாணம் -மங்களம் -தங்கம் உள் பொருள் -முன்பு தங்கமாகவே இருந்தது -தீண்டிய பின்பே மங்கள கரம் க்ஷேமம் தரவல்லவை
அடியார் அடியார் ஆவார்களே

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ள போதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தொடாமல் நின்ற அரசர்கள் உடைய மகுடங்கள் கல்யாணமாகவே தங்கமாகவே இருந்தன –
உன்னைத் தொட்டு வணங்கியதால் அவை மேலும் கல்யாணம் அடைந்து ஷேமத்தை தருவனவாகவும் பரிணமித்தன

நல்ல புண்யசாலியானாலும் ஆசார்ய சம்பந்தம் ஏற்பட்ட பிறகே ஷேமம் உண்டாகிறது –

ஆழ்வார் பரம்
உபாஸகர்களும் புண்யசாலிகள் கூட உம்மைத் தலை வணங்கிய பின்பே -திருச் சடாரி வாங்கிய பின்பே
தீர்த்தமும் சடாரியுமே அனுக்ரஹம் அருளுக்கும்
மங்களம் அருளும் –
கிரீடம் -லக்ஷணையால் தலையைக் காட்டும் –
ஆழ்வார் சம்பந்தம் -பிரபன்ன ஜன கூடஸ்தர் –

யாவஜ் ஜீவம் ஜகதி நியதம் தேஹ யாத்ரா பவித்ரீ
த்யக்தா சர்வே த்ரி சதுர திந க்லாந போகா நபோகா
தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷீ
கிம் தே சிந்தே பரமபிமதம் கித்யஸே யத் புனஸ்த்வம் —-ந்யாஸ திலகம் 24-

ஆச்சார்யர் மூலம் பெற்ற சரணாகதனை நழுவ விட மாட்டான் அன்றோ –
இருக்கும் நாள்களில் அனுபவிக்கும் கர்ம அனுகுணமான ஸூக துக்கங்களால்
கவலை கொள்ளாமல் பகவத் கைங்கரிய ரூபமாகவே இவற்றை அனுபவித்து
மோக்ஷ அனுபவம் வரும் நாள் என்றோ என்று இருக்கக் கடவன் –

————————————————————————

அநிச்சத: பாண்டரம் ஆத பத்ரம்
பித்ரா விதீர்ணம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் த்வத் அர்த்தம் வித்ருதேந தேந
சாயா ஸமக்ரா பரதஸ்ய மௌளௌ—173–

அநிச்சத: பாண்டரம் ஆத பத்ரம் பித்ரா விதீர்ணம் பரதஸ்ய-தந்தையால் வழங்கப்பட்ட
வெண்ணிற கொற்றக் குடையை விரும்பாத பரதாழ்வானுக்கு
மணி பாத ரக்ஷே
ஆஸீத் த்வத் அர்த்தம் வித்ருதேந தேந
சாயா ஸமக்ரா மௌளௌ—அதே குடையால் -உனக்காகப் பிடிக்கப் பட்டாலும் –
முழுமையாக நிழல் கொடுத்து அருளியதே –

நின்னையே தான் வேண்டி –நீள் செல்வம் வேண்டாதான் தன்னை -தன்னையே
தான் வேண்டும் செல்வம் போல் -பெருமாள் திருமொழி –

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது தந்தையான தசரதன் தனக்கு அளித்த
வெண்மையான குடையை பரதன் மறுத்தான்.
ஆயினும் உனக்காக அவன் அந்த வெண் கொற்றக் குடையைப் பிடித்தபடி உள்ளான்.
அந்தக் குடையின் நிழல் அவன் தலை மீது அழகாக விழுந்தபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே தகப்பனால் கொடுக்கப்பட்ட வெண் குடையை வேண்டாம் என்று வெறுத்து ஸ்ரீ பரதாழ்வான்
உனக்காக அதைப் பிடித்ததனால் அதன் முழு நிழலும் அவன் சிரசில் இருந்தது –

ஆழ்வார் பரம்
மதுரகவி ஆழ்வார் -நிஷ்டை
தேவு மற்று அறியாமல் -குருகூர் நம்பியையே பாடித் திரிந்தாரே
அவர் மூலமாகவே
கரிய கோலத் திரு உரு கண்டாரே
வாஸூ தேவ பிதா -திருவடி நிழல் கிட்டியதே -நாடாமல் இருந்தாலும் –
அவருக்கு மட்டும் அல்ல –மதுரகவி சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
வெண்மை -ஸத்வ குணம் இங்கு

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–—அதிகார ஸங்க்ரஹம் –2-

பத்து விஷயங்கள் இதில்
இன்பம் -அமுதூறும் என் நாவுக்கே
இறைஞ்சுதல் -வழி படுத்தல் -நாவினால் நவிற்று –
இசையும் பேறு -திரி தந்தாகிலும் -அடியேன் பெற்ற நன்மையே -ஆழ்வார் உகப்புக்காக சேவிக்க –
இகழாத பல் உறவு -அன்னையாய் அத்தனாய் –
ராகம் மாற்றில் -நம்பினேன் முன்பு எல்லாம் –
தன் பற்று -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
வினை போக்கி -பண்டை வல்வினை பாற்றி அருளினான்
தகவோக்கத்தில் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
தத்வம் உணர்த்தி -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தன்மை யாக்கி -ஜீவாத்ம ஸ்வரூபம் -செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டாரே

—————————————————————

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா
ப்ரஸ்திதே வன விஹார கௌதுகாத்
ஆதி ராஜ்யம் அதி கம்ய தே யுவாம்
அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்—173-

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா ப்ரஸ்திதே வன விஹார கௌதுகாத்-காட்டில் ஸஞ்சாரம் -உத்ஸாஹம் கொண்டு பெருமாள் ப்ரயாணிக்க
ஆதி ராஜ்யம் அதி கம்ய தே யுவாம்-இரட்டை -இணை அடிகள் -நீங்கள் இருவரும் தான் -பட்டத்தை ஏற்றுக்கொண்டு
அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்—பூமா தேவியை குறை இல்லாமல் ரக்ஷித்து அருளினீர்

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா ப்ரஸ்திதே வன விஹார கௌதுகாத்-காட்டில் ஸஞ்சாரம்
உத்ஸாஹம் கொண்டு பெருமாள் ப்ரயாணிக்க
ஆதி ராஜ்யம் அதி கம்ய தே யுவாம்-இரட்டை -இணை அடிகள் -நீங்கள் இருவரும் தான்
பட்டத்தை ஏற்றுக்கொண்டு
அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்—பூமா தேவியை குறை இல்லாமல் ரக்ஷித்து அருளினீர்

ஏ பாதுகே! இராமன் எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல்,
காட்டில் வாசம் செய்யும் மகிழ்வு கொண்டு புறப்பட்டான்.
அந்த நேரத்தில் நீயும் பரதனும் அயோத்தியை அடைந்து,
இந்தப் பூமிக்கு எந்த விதமான குறையும் இன்றி பார்த்துக் கொண்டீர்கள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள
அப்போது பட்டத்தை ஏற்றுக் குறைவின்றி நீ ஆட்சி செய்தாய் –

சதாசார்யன் சேதனனை கைவிடமாட்டார் என்பதை காட்டி அருளினாய் –
ஆழ்வார் பரம்
பெருமாளே கை விட்டாலும் ஆழ்வார் கை விட மாட்டாரே
தீர்ந்த அடியவர் தம்மை திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழ் அச்சுதன்
ததாமி புத்தி யோகம் -அவனையே அடையவேண்டும் என்று விரும்பிய உள்ளாருக்கு
ப்ரீதி பூர்வகம் -ஆசையுடன் அனுக்ரஹம் -எங்கே சேர்க்க வேண்டும்
பக்தருக்கு இவனே -சததா யுக்தா நாம் -என்று இருக்கும் -அவர்களுக்கு மட்டுமே
ஆழ்வாரோ
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வாரே
ஆகவே ஆழ்வார் அருள் கண்டீர் உலகினில் மிக்கதே –
பஜதாம் -வார்த்தையிலே நம் ஆசை உண்டே

———————————————————–

ரகுவீர பதாநுஷங்க மாத்ராத்
பரி பர்ஹேஷு நிவேசிதா யதி த்வம்
அதிகார திநே கதம் புநஸ் தே
பரிவாராஸ் தவ பாதுகே பபூவு:—174-

ரகுவீர பதாநுஷங்க மாத்ராத்- பெருமாள் திருவடிகள் தொடர்பு மட்டுமே கொண்டு
பரி பர்ஹேஷு நிவேசிதா யதி த்வம்-உடைமைகள் உடன் சேர்க்கப்பட்டால் –
வெண் கொற்றக் குடை போல்வனவுடன் சேர்த்தால்
அதிகார திநே -அதிகாரம் ஏற்றுக் கொண்ட அந்த நாளிலே
கதம் புநஸ் தேபரிவாராஸ் தவ பாதுகே பபூவு:—உமது உடைமைகளாக இவை ஆகவே
ஆகவே ஸ்ரேஷ்டம் அன்றோ

பாதுகையே! இராமனுடைய திருவடித் தொடர்பு உனக்குக் கிட்டியது.
இதனால் உன்னை அவனுடைய குடை, சாமரம் போன்று பொருள்களுடன் ஒப்பிட இயலாது.
இவ்விதம் ஒப்பிடலாம் என்றால், நீ சிம்மாசனம் அமர்ந்த போது
அந்தக் குடை, சாமரம் போன்றவை உனக்கு ஏவல் செய்யும் பொருள்களாக எவ்விதம் வந்தன?

ஸ்ரீ பாதுகையே பெருமாளுக்கு உபயோகிக்கப் படும் சத்ர சாமரங்கள் போலே
ஒன்றாக உன்னையும் சேர்ப்பது தகாது –
நீ பட்டம் ஏற்ற போது அவை உனக்கும் பகவானுக்கு போலே
உபசார உபகரணங்களாக உபயோகப் பட்டன அல்லவா –

பகவானைப் போலவே ஆசார்யரும் சமமாக உபாசிக்கப் பெற்றவர் –
ஆழ்வார் பரம்
அவயவி நீர்
அவயவங்கள் மற்ற ஆழ்வார்கள்
உயிர் ஆழ்வார்
பக்தி பூண்ட ஒன்றையே கொண்டு சமமாக எண்ணக் கூடாதே

பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-

ஸ்ரீ மத் பராங்குச முநிம் –
யதீந்திர மிஸ்ரான் -என்று கீழ் உக்தமானவர்கள் எல்லாம் ஒரு தட்டும்
ஸ்ரீ மத் பராங்குச முனி -என்கையாலே ஆழ்வார் ஒருவரும் ஒரு தட்டு என்னுமது தோற்றுகிறது
எல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் இ றே ஆழ்வார் தாம் இருப்பது

தலை- பூதம்
கண்கள் -பொய்கையார் பேயாழ்வார்
பட்டநாதர் வாய்
திருமழிசை -கழுத்து
குலசேகர யோகி வாஹான்-கரங்கள்
பக்தாங்க்ரி ரேணு -திருமார்பு
பரகால-திருவயிறு
எதிராஜர் திருவடிகள்

———————————————————————–

புருஷார்த்த சதுஷ்ட யார்த்தீநாம்
பரிஷத் தே மஹிநா வஸிஷ்ட முக்யை:
க்ரய விக்ரய பட்டணம் ப்ரஜாநாம்
அபவத் காஞ்சந பாதுகே ததாநீம்—-175-

புருஷார்த்த சதுஷ்ட யார்த்தீநாம்-நான்கு புருஷார்த்தங்கள் விரும்பும் அறம் பொருள் இன்பம் வீடு
பரிஷத் தே மஹிநா வஸிஷ்ட முக்யை:-வசிஷ்டாதிகள் கொண்டாடும் உனது ராஜ்ய சபை
க்ரய விக்ரய பட்டணம் ப்ரஜாநாம்-மக்கள் வாங்கவும் கொடுக்கவும் பட்டணமாகவே ஆனதே
அபவத் காஞ்சந பாதுகே ததாநீம்—-பொன்மயமான உமது
ராஜ்ய சபை- ஓலக்கம் இல்லாமல் super market போல் மக்கள் வரும்படி அன்றோ எளிமையாக சபை இருந்தது

பொன் மயமான பாதுகையே! நீ சிம்மாசனத்தில் அமர்ந்த போது உனது அரச சபையானது
வசிஷ்டர் முதலான பல மஹரிஷிகளால் பெரிதும் போற்றப்பட்டது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு பலன்களையும் விரும்பும் மக்கள்,
அவை மிகவும் எளிதாக உனது சபையில் கிட்டியது என்று வந்தனர்.
இதனால் உனது சபை வியாபார ஸ்தலம் போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பொன் மயமான பாதுகையே வசிஷ்டாதி மகாநீயர்களாலே கொண்டாடப்பட்ட உன் சபை
சதுர்வித புருஷார்த்தங்களையும் வாங்கவும் விற்கவுமான பட்டணம் ஆயிற்று –

ஆழ்வார் பரம்
திருவாய் மொழி அனைத்தும் தர வல்லது
பக்குவப் படுத்தி மேலே மேலே கூட்டிச் செல்லுமே
பெருமாளிடம் பெற்ற அருளை நமக்கு வாரி வழங்குவாரே ஆழ்வார்
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்குமே இவை உள்ளது

——————————————————–

மநுஜத்வ திரோஹி தேந சக்யே
வபுஷா ஏகேந விரோதி நாம் நிராஸே
அபஜத் பரதாதி பேதம் ஈச:
ஸ்வயம் ஆராதயிதும் பதாவநி த்வாம்—176-

மநுஜத்வ திரோஹி தேந -மனிதத்தன்மையால் மறைக்கப்பட்ட
வபுஷா ஏகேந -ஒரே திரு மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் -பெருமாள்
விரோதி நாம் நிராஸே- சக்யே–அரக்கர்களை வதம் செய்ய முடிந்தாலும்
அபஜத் பரதாதி பேதம் ஈச:-பிரிவுகளை அடைந்து -நால்வராகப் பிரித்து
ஸ்வயம் ஆராதயிதும் பதாவநி த்வாம்—தனது கையால் ஆராதனை செய்ய விரும்பியே கூட மூன்று தம்பிகளாக தானே அவதாரம்
தனது பக்தர்களைத் தானே ஆராதனை செய்ய விரும்புபவன்
அடியார்களைத் தலை மேல் வைத்து மகிழ்பபவன் -கௌரவிப்பவன் – -முனி வாஹனர் -லோக சாரங்க முனிவரை நியமித்து அருளினாரே
அடியார்களை பூஜிக்கும் அடியாரை நாம் பெருமாள் போலவே எண்ண வேண்டுமே -நம் ஆண்டவன் வியாக்யானத்தில் இது காட்டி
பரதன் கருடன் அம்சம் கோவிந்த ராஜர் -பாஞ்ச ஜன்ய அம்சம் -வால்மீகி-பால காண்டம் -14-30/31-பாயாசம் திருமேனி அம்சமே

infinity எத்தால் வகுத்தாலும் infinity தானே பூர்ணம் தானே -தனக்குத் தானே ஆராதனை -அவனது குணங்களின் ஏற்றம் –

நாராயணன் -ஜெகன் நாதப்பெருமாளை பெருமாள் ஆராதனம் -பெரிய பெருமாள் ஆனார் அன்றோ

நம்பெருமாள் -அழகைத் தானே அனுபவிக்கவே பின்பு சயனத் திருக்கோலம்
முன் அழகை கருடனாக அனுபவிக்கிறார்
பக்க அழகை உபய நாச்சியாராக அனுபவிக்கிறார்-அதே போல் பாதுகையின் ஏற்றம் சொன்னவாறு

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதனாகப் பிறந்து, ஒரே உடல் எடுத்து மட்டுமே இராவணன் போன்றோரை
இராமன் வதம் செய்வது இயலும். ஆயினும் ஏன் பரதன் போன்று பல உடல்கள் எடுத்துத் தோன்றினான்?
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை ஆராதிக்க அல்லவா இவ்விதம் பகவான் தோன்றினான்
(பகவானே பாதுகையை ஆராதித்தான் என்று கருத்து. எப்படி? தனது பக்தையான பாதுகையை, தானே ஆராதித்துக் கொண்டாடினான்)?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் தான் ஒருவனாகவே திருவவதரித்து ராஷசர்களைக் நிரசிக்க வல்லவனாய் இருந்தும்
உனக்கும் தானே கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையினாலேயே ஸ்ரீ பரதாழ்வான் போன்றோரை பிரிந்தார் –

ஆழ்வார் பரம்
தானே கௌரவிக்க ஆசைப்பட்டு -நேராக வந்தால் ஆழ்வார் ஒத்துக்கொள்ள மாட்டாரே
37 திவ்ய தேச பெருமாள்கள் ஆழ்வாரைத் தேடி-பாட்டு வாங்கிப் போனார்கள் -பார்யை திட்டுவதே பார்த்தாவுக்கு பாட்டு
கள் அழகர் -திருமாலிருஞ்சோலை -மூன்று தொடர்ச்சியான பதிகங்கள்
முடிச்சோதி -முதலில் -அடிச்சோதி அப்புறம் -தலை குனிந்து நிற்க -முதலில் இது சேவை
பாட்டு கேட்டு மகிழ நிமிர அடிச்சோதி
ஆட் கொள்வான் -ஒத்து வந்து ஆழ்வாரில் முன்னம் பாரித்து முற்றும் பருகினான் அன்றோ
ராமானுஜராக தானே அவதரித்து
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி அம்சம்
அவர்கள் மூலம் திரு ஆராதனம்

————————————————————–

மகத அங்க கலிங்க வங்க முக்யாந்
விமதாந் ரந்த்ரக வேஷிண: ஸஸைந்யாந்
ரகு புங்கவ பாதுகே விஜிக்யே
பரதஸ் சாஸநம் உத்வஹந் பவத்யா:—-177-

மகத அங்க கலிங்க வங்க முக்யாந்–இது போன்றபலர்
விமதாந் ரந்த்ரக வேஷிண: ஸஸைந்யாந்-நுழைய துவாரம் எதிர்பார்த்து இருக்கும் சேனைகள் -எதிரிகள்
ரகு புங்கவ பாதுகே
விஜிக்யேபரதஸ் சாஸநம் உத்வஹந் பவத்யா:—-உன்னுடைய அணையைத் தலை மேல் கொண்டு பரதன் வென்றான்
ஸாஸனம் -ஸ்ருதி ஸ்ம்ருதி மமை ஆஜ்ஜை
வால்மீகி ராமாயணத்தில் இல்லா விருத்தாந்தம் அவன் காட்டக்கண்டு தேசிகன் இங்கே அருளிச் செய்கிறார்
கோசல தேச விரோதிகளை வென்ற வ்ருத்தாந்தம்

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் அயோத்தியைக் கைப்பற்ற
மகதம், அங்கம், போன்ற நாட்டின் அரசர்கள் முனைந்தனர். அப்போது சிம்மாசனம் அமர்ந்த
உனது ஆணை மூலமாக அவர்களைப் பரதன் தனது படைகளுடன் சென்று வென்றான்.

ஸ்ரீ பாதுகையே உன் நியமனத்தாலே ஸ்ரீ பரதாழ்வான் மகத அங்க கலிங்க முதலான தேசத்து
சகல சத்ருக்களையும் ஜெயித்தார் –

ஆழ்வார் பரம்
நமக்கு உள்ள உள் எதிரிகள் காமம் க்ரோதம் லோபம் பேராசை மோகம் மதம் மாச்சார்யம் பொறாமை போன்றவை உண்டே
உபத்திரவம் பண்ணும் காலத்தை எதிர்பார்த்து இருக்குமே
ஆழ்வார் பாசுரங்களை மனசில் கொண்டு இவற்றை வெல்லலாம் அன்றோ –
ஆழி எழ -7-4-பலம் -வென்றி தரும் -வெற்றி தருமே

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

கம்பர் நைச்யம் பாவித்து ஞானம் குன்றி இருந்த தம்மை -முக்குறும்பை அறுத்து -நித்ய ஸூரிகள் உடன் கோவை ஆக்கி அருளிய ஆழ்வார் – – சடகோபர் அந்தாதி -51-

——————————————————————

அநிதர வஹநீயம் மந்த்ரி முக்யைர் யதா தத்
த்வயி விநிஹிதம் ஆஸீத் ஸூர்ய வம்சாதி ராஜ்யம்
ரகு பதி பத ரக்ஷே ரத்ந பீடே ததாநீம்
ஸ்ரியம் இவ தத்ருஸூஸ் த்வாம் ஸாதரம் லோக பாலா:—-178-

அநிதர வஹநீயம் மந்த்ரி முக்யைர் யதா தத்-மற்றவர்களால் வஹிக்க முடியாத அந்த -தத் -அந்த -உயர்ந்த -பெருமை பெற்ற –
த்வயி விநிஹிதம் ஆஸீத் ஸூர்ய வம்சாதி ராஜ்யம்-உன்னிடம் வைக்கப்பட்டதோ
ரகு பதி பத ரக்ஷே ரத்ந பீடே ததாநீம்-அப்போது ஸிம்ஹாஸனத்திலே
ஸ்ரியம் இவ தத்ருஸூஸ் த்வாம் ஸாதரம் லோக பாலா:—சுமந்திரன் போன்ற மந்திரிகள் ஆதரத்துடன் பார்த்தார்கள் அன்றோ உம்மை
மாலினி சந்தஸ் ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகம் போல்
இதுவும்
ஸ்ரீ தேவி-ராஜ்ய லஷ்மீ – உடன் ஒப்புமை இதில்
அடுத்து ஸூர்யன் உடன் ஒப்புமை அருளிச் செய்து நிகமிக்கிறார்
சீதையே பாதுகை மஞ்சு ராமாயணம் ஸ்லோகம் -89-
அக்ர -முன்னே செல்வேன் -கல்லும் முள்ளும் அகற்றி –
பூமியின் மகள் கொஞ்சுவாள் -பாதுகையும் கொஞ்சுவாள்
தனு மத்யா -இடை சிறுத்து இருக்குமே இருவருக்கும் –
92- ஸ்லோகம் அதுக்கு காரணமும் –
கைகேயி சீதா பிராட்டிக்குக் கொடுக்க -மர உரி கொடுக்க – வசிஷ்டர் பிராட்டியை சிம்ஹாசனத்தில் சகல புவன மாதா
ப்ரஹ்ம ரிஷி வாக்கை மெய்ப்பிக்கவே பாதுகா தேவி ஆனாள் –

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்த பின்னர் அயோத்தியை
அந்நாட்டு உயர்ந்த மந்திரிகளால் கூட ஆள முடியவில்லை. யாராலும் சுமக்க இயலாத ராஜ்ய பாரத்தை உன்னிடம் வைத்தனர்.
ஸூரிய வம்சத்தின் அரச சிம்மாசனத்தில் நீ அமர்ந்த போது தேவர்களும் அரசர்களும், இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட
சிம்மாசனத்தில் நீ அமர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தனர்.
மஹாலக்ஷ்மி திருப்பாற்கடலில் உதித்தபோது அவளைப் போற்றியது போன்று, உன்னைப் போற்றி நின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -ஸூமந்திரர் முதலிய மந்திரிகள் மற்ற ஒருவராலும் தாங்க முடியாத ஸூர்ய வம்சப் பட்டத்தை உனக்குத் தர
அதை அலங்கரித்த போது சாஷாத் மஹா லஷ்மியாகவே உன்னை தேவர்களும் திக் பாலர்களும் சேவித்தார்கள் –

ஆழ்வார் பரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -உபய வேதாந்த ஸிம்ஹாஸனம்
ஆழ்வார் ஆச்சார்யர் இரண்டு கோஷ்ட்டி
பிராட்டி -பின்னை கொல் பிறந்திட்டாள் -லோக பாலனம்
நாயகி பாவம்
அநந்யார்ஹம்-என் நாவின் இந்த கவி -யான் ஒருவருக்கும் கொதிக்கிலேன்
முப்பொழுதும் வருட அடியில் அமர்ந்து -அடிக்கீழ் அமர்ந்து -ஒருங்கப்பிடித்து –
புருஷகாரம் –
அப்ருதக் ஸித்த விசேஷணம் -அக்குளத்தில் மீன்
திரு உள்ளத்திலே வீற்று -பக்தியால் வசப்படுத்தி
விஞ்சிய கருணை -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

————————————————————————————

பரிஹ்ருத தண்டகாத்வ கமநம் பத ரக்ஷிணி தத்
பரிணத விஸ்வ ஸம்பத் உதயம் யுவயோர் த்விதயம்
ரகுபதி ரத்ன பீடம் அதிருஹ்ய ததா விததே
வ்யபகத வைரிபூப நிலயம் வஸுதா வலயம்—-179-

பரிஹ்ருத தண்டகாத்வ கமநம் -காட்டுப்பயணம் துறந்து
பத ரக்ஷிணி தத்-திருவடிகளை ரக்ஷிக்கவே
பரிணத விஸ்வ ஸம்பத் உதயம் -உலக செல்வத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற
யுவயோர் த்விதயம்-இரட்டை ஜோடி இணை அடிகள் -நாட்டில் உள்ள தீய சக்திகளை அழிக்க –
ரகுபதி ரத்ன பீடம் அதிருஹ்ய ததா விததே-காட்டில் உள்ள தீய சக்திகளை அழிக்க பெருமாள் -இப்படி பிரித்து செயல்கள் இருவருக்கும்
அப்போது ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருந்து
வ்யபகத வைரிபூப நிலயம் வஸுதா வலயம்—பூ மண்டலத்தில் உள்ள எதிரிகளை அழிக்கவே இவ்வாறு செய்தீர்கள் –

பெரியபெருமாளின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்திற்கு வந்த போது,
நீங்கள் இருவரும் (இரு பாதுகைகள் – ஒரு ஜோடி) அவனுடன் சஞ்சாரம் செய்யாமல் அயோத்திக்குத் திரும்பினீர்கள்.
இராமனின் கற்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்த நீங்கள் இருவரும்,
அனைத்து உலகங்களையும் விருத்தி அடையும்படிச் செய்தீர்கள்.

ஸ்ரீ பாதுகையே நீ திரும்பி வந்து பட்டத்தை ஏற்று சகல லோகங்களையும் ஷேமத்தையும் தந்து
சத்ருக்களை அடியோடு இல்லாமலும் செய்து விட்டாய் –

ஆழ்வார் பரம்
ஸம்ஸார -காட்டில் நாம் பயணிக்க வேண்டாத படி
மயர்வற மதி நலம் நமக்கு அருளி
துர்குணங்கள் கர்மங்கள் போக்கி
ஞானம் பக்தி செல்வங்களைப் பெருக்கி-ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு இரண்டு தன்மை உண்டே ஆழ்வாருக்கும்

சடகோபர் அந்தாதி -48-நாயகி பாவத்தில் கம்பர் –

————————————————————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவதீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பட்டத்தை ஏற்று ஜனங்களுக்கு இருந்த மகத்தான துக்கத்தை
ஸூர்யன் இருளைப் போக்குவது போலப் போக்கி அருளினாய் –

ப்ராப்த உதயா ததாநீம்-ஐஸ்வர்யம் ஆகிய உதயகிரியில் உதயம் -மலை போன்ற செல்வம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவதீ–அஞ்ஞானம் அறியாமை இருளைப் போக்கி
மனுகுல ஜநுஷாம்-ஸூர்ய குலத்தால் -பிரஜைகள்
தநுரிவ ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—உதிக்கும் ஸூர்யன் வடிவு போல்
ஸவிதா -ஸூர்யன்
சாவித்ரி ஸூர்ய வம்சம்
காயத்ரி போல் அறியாமை போக்கி
சாவித்திரியும் நீயே காயத்ரியும் நீயே

ஆழ்வார் பரம்
யத் கோ ஸஹஸ்ரம் –ஆயிரம் பாசுரங்கள் ஆகிய கிரணங்கள்
நாராயண வசதி -அந்தராதித்யன் போல் ஆழ்வார் திரு உள்ளத்திலும்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
குருகூர் சடகோபன் சொல் -கேட்டதும் கை கூப்புகிறோம் –
இத்தாலும் வகுள பூஷண பாஸ்கரர் இவர்

தொடக்கம் அனுஷ்டுப் சந்தஸ்
நிகம ஸ்லோகம் ஆர்யா சந்தஸ்

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading